KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/5. என் நினைவாகவே இருங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

5. என் நினைவாகவே இருங்கள்

  • உள் உலக மாற்றுத்திற்காகவே உருவானவை ஸ்லோகங்கள்
  • தூய்மையடைவதே பிரஹ்மசரியம்
  • இது வெறுமனே படிப்பதற்கான நுட்பமல்ல
  • ஆசையும் பயமும் தானாகவே நம்மைவிட்டுச் செல்லும்

6. பிரம்மாவின் பகல், இரவு

  • ஞானியின் உன்னதமான நோக்கம்
  • காரணமற்ற பிரார்த்தனை நிறைந்த வெளிப்பாடு
  • உள் உலக பணக்காரர்கள்
  • என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதில்லை
  • உள் உலக விஞ்ஞானத்தின் பரிசோதனைச் சாலைகள்
  • ஏழு உடல்களையும் அழகாகக் கடந்து செல்லலாம்
  • எண்ணங்களற்ற விழிப்புணர்வே நம் தெய்வீகம்
  • விருப்பமிருந்தால் பூமிக்கு வருவீர்கள்
  • குற்றஉணர்வைவிடும்வரை ஆசைகளால் விடாது
  • அவதாரபுருஷரின் வாழ்க்கை ஏற்கனவே எழுதப்பட்ட நாடகம்
  • காலம் மனத்தைப் பொறுத்ததே
  • தேவர்களின் ஒரு நாள், நமது ஒரு வருடம்
  • என்னுடைய மஹோன்னதமான இருப்பிடம்
  • நமதென்று நினைப்பதும் நிலையானதல்ல
  • ஒளியின் வழியில் பயணம்
  • ஞானமடைவதற்குச் சரியான நேரம்
  • எதன் வழியாக உயிர் பிரியும் ?
  • விழிப்புணர்வு, எண்ணப்பதிவை அழிக்கும் ஒரு சக்தி
  • பக்தியில் உறுதியுடன் இருங்கள்
  • பக்தியுணர்வே கடைசி காலத்திற்கும் உதவும்
  • மிகப்பெரிய விந்தையுணாவை அடைவீர்கள்
  • பக்தர்கள் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைவார்கள்

10. மரணம் : இறுதி விடுதலை மற்றும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு

  • கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு
  • இதுவரை பார்த்திராத திருவிழா
  • மிக உயர்ந்த ஆத்மா ஞானப்பதவிக்கு உயர்ந்துவிட்டது
  • உயிர் பிரிந்த நேரம் கொண்டாடப்பட வேண்டும்
  • பிரபஞ்சம் அளிக்கும் வாய்ப்பை இனியும் தவறவிட வேண்டாம்
  • முழுமையாக வாழப் பழகினால் மரணமும் இனிமையாகும்
  • மனிதன் மறைந்து கடவுள் பிறந்த நாள்
  • ருத்ர தாண்டவம் நேரடி தரிசனம்
  • புதிதாக உருவாக்கப்பட்ட வரலாறு
  • சிவன் நமக்களித்த உறுதிமொழி

V. பிற்சேர்க்கை

  • பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி
  • கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள்
  • குரு வம்சம்
  • பகவத் கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
  • அருஞ்சொற்பொருள்
  • ஸ்லோகங்கள்
  • ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்
  • தனிமனிதருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.

ஆனால் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை1234
எழுத்து
ககடவுள் (ka)அக்கா (kka)கங்கை (ga)தடம் (gha)
சசரம் (cha)சச்சரவு (chcha)ஜூடி (ja)மஜ்ஜை (jha)
டபட்டம் (ta)பட்டம் (tta)படம் (da)டமாரம் (dha)
ததங்கை (tha)தாத்தா (ththa)தானம் (da)தர்மம் (dha)
பபசு (pa)அப்பா (pha)பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ரு'தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.

  1. ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ'வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ்' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச'ரணாகதி, சி'வன் மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும்

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகளுக்கு ஸம்ஸ்க்ரு'தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் S என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.

அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காக பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

மஹாபாரதத்தின் ஒரு பகுதியான பகவத் கீதை உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அபூர்வ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை 'கேட்பது' என்று பொருள்.

பகவத் கீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரு'தத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிகாசக் கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

ஹிந்து பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக் களஞ்சியங்களின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான கீதையின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. அத்யானத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்யான வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த கிரந்தமோ அல்லது இதிகாசத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று பொருள். எப்பொழுது எப்பொழுது என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பருதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த இதிகாசம், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.

திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.

பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,

குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மந்தரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் குந்தி வேண்டி, அந்த மந்தரத்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது சூரியதேவனின் அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கர்ணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.

திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.

யுதிஷ்டிரர், தூமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.

தனது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.

பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரர் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பிகளான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸஹதேவனுடன் ஆண்டு வந்தார்.

அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். (ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.

அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் சூதாட்டத்தில் இழந்தார்.

துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

பதினான்கு அண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

இப்பொழுது 'பாரத' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், '' என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.

அர்ஜுனன் மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

இரு சேனைகளும் குருகேஷத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில்கூடியது. குருகேஷத்ரம், பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த உரையாடல்

குருக்ஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடலே பகவத்கீதை.

கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பெண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். ஸம்ஸ்க்ரூதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு லட்சியத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான சத்தியமாக உள்ளது.

பகவத்கீதை, ஜீவன் முக்திக்கான வரைபடம் !

வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மறையாதரத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. ஸ்ம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்ஷேத்ரம் போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர்,

குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அகங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.'

நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க தேர்ந்தெடுப்பவர்கள் சந்நியாசிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஞானமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தன் சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.

ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞான சத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.

அதனால் சில சமயங்களில் நம் அகங்காரம், நாம் ஜ்ஞான சத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

மஹாபாரதம் ஒரு இதிகாசக் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை சம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்தரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.

மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்கீதை, ஞானமடைதலுக்கான கையேடு !

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக குருவுடன் உரையாடுகிறீர்கள்.

இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. சத்குருநாதரின் சத்திய வார்த்தைகளிலிருந்து உங்கள் தெளிவையும் பெற்று மலருங்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத்கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண ஞானக்கருத்துகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.

பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் சத்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய சூஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தியானம்.

சிறந்த சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரண பயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்." என்று சொல்கிறார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் பகவத்கீதை சத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ரூத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான சத்தியத்தை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி !

முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

உங்கள் மரண பயத்தை வெல்வதற்கான தீர்வு

அத்தியாயம் - 8

மரணபயம் -அதுவே நமது உச்சக்கட்ட பயம்! மரணபயம் பற்றிய எண்ணம் என்னைத் தொடரவே செய்யவில்லை என்று யாரேனும் சொன்னால், அவர் பொய் சொல்கிறார். பல கேள்விகளுக்கும் இந்த அனுபவமாக விடையுள்ளது!

வினாக்களின் வாசலில்...

  • ஸ்வாமிஜி, மரணம் ஒரு மனிதனின் மனத்தில் ஒழுக்கத்தைப் பற்றிய விதிமுறைகளை ஆழப்பதிய வைக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

நீங்கள் அவ்வாறு சொல்லும்போது பயத்தினால் ஏற்படும் ஒழுக்கத்தையா குறிப்பிடுகிறீர்கள் ? இந்த வகையான ஒழுக்கம்தான் உலகில் பெரும்பாலான இடங்களில் பிரச்சினையாக இருக்கிறது.

  • நல்ல செயல்களைச் செய்வதன் மூலமாகப் பெறப்படும் நன்மையான புண்ணியமும் 'கர்மா'தான். அதுவும் விலக்கப்பட்டால்தான் நாம் விடுதலை அடைவோம் என்று சொல்கிறீர்கள். இது எப்படி முடியும் ?

'நல்ல முறையில் வாழ்க்கையை நடத்தி, நல்ல காரியங்களைச் செய்தால்தான் புண்ணியங்களை அடைய முடியும். புண்ணியத்தைச் சம்பாதித்தால்தான், சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்' என்றுதான் எங்களுக்கு இதுநாள் வரையிலும் கற்றுதரப்பட்டிருக்கிறது. இப்பொழுது நீங்கள் அதில் பலன் இல்லை என்று சொல்கிறீர்களே!

  • ஸ்வாமிஜி, நித்தியானந்த ஸ்புரண தியான முகாம் உங்கள் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தது என்று சொல்கிறீர்களே ? அதைப்பற்றி மேலும் சொல்ல முடியுமா ?
  • 'குற்றம்' என்று ஒன்று உள்ளதா? பாவ புண்ணியம் என்றால் என்ன ? நல்லது கெட்டது என்றால் என்ன?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

'மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு' என்கிறீர்கள்! அப்படியன்றால், எண்ணங்களே இல்லாத விழிப்புணர்வு நிலையை அடைவதற்கு, மனம் மறைந்தாக வேண்டும் என்றுதானே அர்த்தம். பொதுவாக நாம் மனம் மறைந்து விடுகிற நிலையைத்தான் மரணம் என்கிறோம். அப்படியன்றால், நாம் சமாதி நிலையை அடையும்போது இறந்து விடுகிறோம் என்பதுதான் இதன் அர்த்தமா?

ஸ்வாமிஜி, தயவுசெய்து விளக்கவும்

நாம் எப்பொழுதுமே நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்றும், ஆனந்த ஆனால் அதே சமயத்தில் , மகிழ்ச்சியைக் கடந்து செல்ல வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். இது முரண்பாடாக இல்லையா?

  • ஒரு எண்ணப் பதிவைப் பற்றிய விழிப்புணர்வைக்கொண்டு வருவதன் மூலமாகவே அந்த எண்ணப் பதிவைக் கரைக்க முடியுமா ?

ஸ்வாமிஜி, நீங்கள் தயவுசெய்து விளக்கவும்

ரித்யானந்த புரோசிராம் பற்றிச் சொன்னீர்கள். அதைப் பற்றி மேலும் சொல்ல முடியுமா? அது எப்படி எங்களுடைய வாழ்க்கைக்கு உதவுகிறது ?