KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/உடலை விட்டிச் செல்லும் கலைSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

உடலை விட்டிச் செல்லும் கலை

இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் மரணத்தைப் பற்றிப் பேசுகிறார். மரணம், அது எப்படி நமக்கு ஒரு விடுதலையாகவும் கொண்டாட்டமாகவும் மாற முடியும் என்பது பற்றிய ஒரு உட்கெளிவைக் கருதிறார்.

மரணத்தைப் பெற்றிப் புரிந்துகொள்ளாதவரை, வாழ்க்கையின் முடிவு' என்று மட்டும்தான் நாம் புரிந்துகொண்டு இருப்போம். அதைப் பற்றிய உண்மைகளை நாம் புரிந்துகொள்ளமாட்டோம். ஆனால் நாம் அதைப் பரிந்து கொண்ட அந்தக் கணமே, நமக்கு மரணம் ஒரு விடுதலையாகவும் கொண்டாட்டமாகவும் ஆகி விடுகிறது.

நாம் நினைப்பதுபோல, மரணம் என்பது வாழ்க்கையின் முடிவல்ல; அது வாழ்க்கையின் உச்சக்கட்டம் என்பது புரியும். 'முடிவு' என்பது வேறு, 'உச்சக்கட்டம்' என்பது வேறு.

வாழ்க்கையின் முடிவுகான் மரணம் என்று நினைக்கும்வரையில், நாம் மரணத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறோம். அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது பற்றிக் கற்பனை செய்ய முயற்சி செய்கிறோம். மேலும் மேலும் துன்பத்தை நாமாகவே வரவழைத்துக்கொள்கிறோம்.

'மரணம் என்பது வாழ்க்கையின் முடிவு' என்று நாம் நினைக்கிற அந்தக் கண்மே, நாம் மரணத்தைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்து விடுகிறோம். இந்தக் கவலைகளால் நமது வாழ்க்கை மந்தமாகி விடுகிறது. நாம் வாழும் போதே நம்மீது மரணத்தின் சாயல் படிந்து விடுகிறது.

மரணத்தைப் புரிந்து கொண்ட ஒருவர் இருக்கும்போதுகூட வாழ்கிறார்.

மாணத்தைப் புரிந்துகொள்ளாகவர் வாழும்

மரணத்தைப் புரிந்துகொள்கிறவர் இறப்பில்கூட வாழ்கிறார். மரணத்தைப் புரிந்துகொள்ளாத ஒருவர் வாழும் போதேகூட இறக்கிறார். புரிந்து கொண்ட ஒருவர் இறக்கும்போதுகூட வாழ்கிறார்.

மரணமோ, வாழ்க்கையோ, அவை தற்செயலாக நடக்கும் செயல்கள் அல்ல. அவை நமது புத்திசாலித்தனத்தைச் சார்ந்ததே. நாம் தெளிவான புத்திசாலித்தனத்துடன் இருக்கும்போதுதான் வாழ்கிறோம். நமக்கு மரணத்தைப் பற்றித் தெரியாமல் இருக்கும் போதும், மரணத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கும்போதும், நாம் வாழ்ந்தாலும்கூட இறக்கிறோம்.

மரண பயம்! நாம் பிறந்ததிலிருந்தே நம் எல்லோரையும் துரத்துகிற ஒரே பயம்! நாம் ஏன் இறக்கிறோம்? இறந்ததற்குப் பிறகு என்ன நடக்கிறது? எப்படி நாம் மரணத்திலிருந்து தப்பிக்கலாம் ? இந்தக் கேள்விகளிலிருந்துதான், இந்த ஒரே ஒரு பயத்திலிருந்துதான் எல்லா மதங்களும் தோன்றின.

ஒவ்வொரு மதமும் தனக்கே உரிய தனித்துவமான முறையில், இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்கிறது. பெரும்பாலான மதங்கள் மரண பயத்தையும் அதிலிருந்து தப்பிக்க விரும்புகிற நம் பேராசையையும் வைத்து நம்மைக் கட்டுப்படுத்துகிற முறையில்தான் விடை அளிக்கின்றன.

அவை பாவ புண்ணியங்களைப் பற்றிப் பேசுகின்றன. மேலும் நரகத்தைப் பற்றிச் சொல்லி நம்மை பயமுறுத்தவும் சொர்க்கத்தைப் பற்றிய உறுதிமொழிகளைக் கொடுத்து நம்மை வசியப்படுத்தவும் செய்கின்றன. உண்மையில் இவை இரண்டுமே இல்லை.

மதம் நம்மைப் பயமுறுத்துவதுபோல் அல்லது வசியப்படுத்தவதுபோல் நரகமோ, சொர்க்கமோ அங்கு இல்லை. அப்படிப்பட்ட இடங்களோ, ஏன் உருவகங்களோகூட இல்லை. அவை வெறுமனே நமது மன நிலைகளை மட்டுமே குறிக்கின்றன.

மரணம் - ஆத்மா உடை மாற்றும் அற்புதம்!

மரணம் என்பது முடிவல்ல. அது ஒரு பாதைதான்!

தொடரும் நமது பயணத்தில், அது ஒரு பாதை மட்டுமே!

சில மதங்கள் நம்புவதுபோல, இது ஒரே ஒருமுறை மட்டுமே நடக்கிற நிகழ்வல்ல. நாம் ஒரே ஒருமுறை மட்டுமே வாழ்ந்து இறந்து விடுகிறவர்கள் இல்லை. மீண்டும் மீண்டும் வாழ்கிறோம்.

கிருஷ்ணர் சொல்வதுபோல், நாம் உடைகளை மாற்றுவதுபோலத்தான், அழிவற்ற ஆத்மாவும் தம் உடல்களை மாற்றி புதிய உடல்களை எடுக்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா அழிவற்றது. நமக்குள்ளே இருக்கும் ஆத்ம சக்தி பிரபஞ்ச சக்தியின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து வாழ்கிறது. ஆனால் அது எடுத்து வந்த உடல் அழியக்கூடியது.

வகு மரபைச் சார்ந்த ஞானிகள், வாழ்வு மற்றும் மரணம் கடந்த நிலையை அனுபவித்திருக்கிறார்கள். அனுபவித்ததோடு மட்டுமல்லாமல், அந்த நிலையை அடைவதற்கான நுட்பங்களை நமக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த நுட்பங்களை ஆழமாகப்

புரிந்துகொண்டு அவற்றைச் செயல்படுத்தும் அளவுக்கு பக்குவம் அடைந்த சீடர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிற மொழியில், அவர்கள் மட்டுமே பரிந்துகொள்ளக்கூடிய முறையில் மறையொருளாகச் சொன்னார்கள்.

இங்கே ஞானிகளுக்கெல்லாம் ஞானியான கிருஷ்ணர், தமது அளவு கடந்த கருணையால் யார் வேண்டுமானாலும் புரிந்துகொள்ள முடிகிற முறையிலே இந்த வழிமுறைகளைத் தருகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், இந்த வழிமுறைகளை, இந்த அறிவை திறந்த மனத்துடன், உள்வாங்கி, அதனை சீ ருத்தையுடன்

செயல்படுத்துவதற்கான ஆர்வத்தையும் வளர்த்துகொள்ள வேண்டியது மட்டுமே.

நாம் வாழும் கலையைத் தெரிந்து கொண்டால், உடலை விட்டுச் செல்லும் கலை கொண்டாட்டமாகிவிடும்.

இந்த வாழ்க்கையை வாழ்வது, இந்த வாழ்க்கையை இரண்டுமே, தொடர் சுழற்சியாக நிகழ்கிற பிறப்பு, இறப்பு எனும் ஒரே பயணத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகள்கான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், இதைப்

கொண்டால் வாழ்க்கையை வாழ்வதில் ஒரு அவசரமோ, வாழ்க்கையை விட்டுச் செல்வதில் பயமோ இருக்காது.

இந்த வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம் என்பதும், அதை எப்படிச் செய்கிறோம் என்பதும்தான் நம்முடைய மறுபிறப்பைத் தீர்மானிக்கிறது. இதைப் புரிந்து கொண்டோமானால், இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைப் பற்றிய மிகப்பெரிய தெளிவு நமக்கு உண்டாகும்.

அர்ஜுனன் தமது உரையாடலைக் கேள்விகளுடன் தொடங்குகிறார்

8.1 அர்ஜுனன் கேட்கிறார்,

ஒ பரம்பொருளே! மனிதர்களுக்குள் உயர்ந்தவரே, ப்ரூற்மம் என்றால் என்ன? 'நான்' என்பது என்ன? பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் என்பது என்ன ? வெளிப்படையாகத் தெரியும் இந்தப் பொருள் சார்ந்த உலகம் என்பது என்ன? அதி தேவதைகள் என்று எது அழைக்கப்படுகிறது ? தயவு செய்து விளக்குங்கள்.

  • 8.2. யாக, யக்ஞ வடிவான கடவுள் இந்த உடலில் எவ்வாறு வாழ்கிறார்? ஓ மதுஸூதனரே! உடலின் எந்தப் பகுதியில் அவர் இருக்கிறார் ?

பக்திசேவையில் ஈடுபடுபவர்கள், மரண காலத்தில் உம்மை எவ்வாறு அறிகிறார்கள் ?