KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/பகவத்கீதை ஒரு பின்னணிSign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

பகவத்கீதை ஒரு பின்னணி

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

உன்னதமான இந்து பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத் கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸ்ம்ஸ்க்ரு 'தத்தில் சீருதி (Sruti) என்பார்கள். கீர்குதி என்றால் 'காதால் கேட்பது' என்று பொருள்.

பகவத்தீதையைப் கீதை என்றால் ஸ்ம்ஸ்க்ரு க்த்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வகுங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால், கீதை, இந்து மத கிரிறாஸ் கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான ச்ரூதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. லத்யத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான ஸக்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உரரிஷதங்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக விளங்குகிறது கீதை. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த க்ஷேத்திரமோ அல்லது குதிறையத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துகளின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

பருதன் வம்சாவளியினராலும் ஆளப்பட்ட ஆகுசமே பாரதம். 'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம். அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது.

இந்த கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மை, சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் இளவரசர்களான திருதராஷ்டிரர், பாண்டு இருவருள், தமையனான திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால், இளையவரான பாண்டு அரசராக முடிசூட்டப்பட்டார்.

மன்னரான பாண்டு ஒருமுறை தம்முடைய இளைய மனைவியான மாத்ரியின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு மானைக் கொல்ல நேர்ந்தது. அப்போது மான் உருவில் இருந்த முனிவர், சாகுந்தறுவாயில் பாண்டுக்கு ஒரு சாபமிட்டார். பாண்டு, தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்பதே அச்சாபம். அதனால் அவருக்குக் குழந்தைகள் இல்லை.

தம்முடைய பாவச் செயலுக்குப் பிராயச்சித்தம் தேட முடிவுசெய்த பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

கதைக்குள் ஒரு சின்ன கதை

குந்தி, தமது இளமைப் பருவத்தில் துர்வாஸ் முனிவருக்குச் சேவை புரிந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த முனிவர் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன்படி அவர், ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ, அந்தத் தெய்வ சக்கியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் பருவத்தில், திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டி, அந்த மந்த்ரத்தை உச்சரித்தார். சூரியதேவனும் தோன்றினார், அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவா்தான் கர்ணன். ஆனால், சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் அதனை ஒரு பெட்டிக்குள் வைத்து நதியில் விட்டுவிடுகிறார் குந்தி.

அவ்வாறு நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.

திருமணத்திற்குப் பிறகு, அதே வரத்தின் அருளால், குழந்தைச் செல்வம் பெற இயலா நிலையிலுள்ள பாண்டுவின் சம்மதத்துடன், யுதிஷ்டிரா, பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரைப் பெற்றெடுக்கிறார் குந்தி. அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸஹதேவனும் பிறந்தார்கள். பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

யுதிஷ்டிரர், தர்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசீர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும், தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும், அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை. தமது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து, பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால், ஒன்றும் பயனளிக்கவில்லை.

இதற்கிடையில் அர்ஜுனன், பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்றெடுத்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, ''அம்மா, நான் ஒரு தானப் பொருளை கொண்டுவந்திருக்கிறேன்,'' என்று சொன்னார். அப்பொழுது குந்தி, ' நீ கொண்டுவந்திருக்கும் தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்," என்று அந்தத் தானப் பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை நிறைவேற்ற, ஐவரும் திரௌபதியை மணம்புரிந்தார்கள்.

பாண்டு விட்டுக்கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே குரு வம்சத்தின் மூத்த வாரிசு என்பதாலும், திருதராஷ்டிரர் அவருக்குப் பாதி தேசத்தைக் கொடுத்தார்.

யுதிஷ்டிரர், இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான பீமன், அர்ஜுனன், ஸ்ஹதேவனுடன் ஆண்டுவந்தார். அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத் திற்கு இணங்க வைத்தார். அதில் துரியோதனனின் தாய்மாமனான சகுனி வஞ்சகமான முறையில் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார், தம்மையும் இழந்தார்.

துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சிசெய்தார். கிருஷ்ணரின் அருளால் திரௌபதி காக்கப்பட்டார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் (அஞ்ஞாத வாசம்) என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சிசெய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால், துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

இப்பொழுது பாரதம் என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடக் கயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவர் பக்கம் இணைய ஒப்புக்கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை ஒருபுறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை கோர்ந்தெடுத்துக்கொள்ளலாம்," என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் அர்ஜுனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், அர்ஜுனன் மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரை, தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

ஆயுதங்களுடன்கூடிய பலமிக்க கிருஷ்ணரின் யாதவ சேனை தமக்குக் கிடைத்ததில் உள்ளூர மிகவும் மகிழ்ச்சியடைந்த துரியோதனன், வெளியில் வேறுமாதிரி காட்டிக்கொண்டார். அதாவது அர்ஜுனன்

கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த பின்னர், தமக்கு யாதவ சேனையைத்தவிர வேறு வாய்ப்பில்லை என்பதுபோல் காட்டிக்கொண்டார். மேலும், ஆயுதம் ஏந்தாத கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த அர்ஜுனன் நிச்சயம் ஒரு முட்டாள்தான் என்றும் நினைத்தார்!

பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குருக்ஷேத்ர போர்க்களத்தில், இரு சேனைகளும் கூடின.

அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால், ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச்செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

குருக்ஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத் கீதை.

கிருஷ்ணர், ''நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே,'' என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தின் (ஆன்மிகத்தின்) இறுதி அனுபூதி சாரங்கள் நிறைந்த நூலாக கீதை விளங்குகிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது, உடல் - மனத்தின் நிலையற்ற தன்மையைப் பற்றியும், ஒவ்வொரு தனிமனிதனும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான சஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண் கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

சஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனதுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை சஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மா, துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.

ஸம்ஸ்க்ருதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனதிலும் உள்ளவைகள்தான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு வழுமத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான லத்யமாக உள்ளது.

பகவத் கீதை, ஜீவன்முக்திக்கான வரைபடம்!

வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்: மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல, ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்ஷேத்ர போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஜ்ஞாநகுரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய கடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர்.

பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமூதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மிக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.

கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார்.

இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அகங்காரத்தின் சின்னமாக இருக்கிறார். '

நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலமே பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் துறவறப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள், சமுதாயத்தைவிட்டு ஒதுங்கியிருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால், நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்துவிடும். அதையே பீஷ்மரின் 'அம்புப் படுக்கை' உணர்த்துகிறது.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும், நம்மை வழிநடத்திச்செல்கின்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச்செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை 'விட்டுவிடுதல்' என்பது மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஜ்ஞானகுருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழிநடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும், நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றைவிடுவதற்கு, ஜ்ஞானகுருவானவர் வழிகாட்டுகிறார். ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே, நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்தடைகிறோம். வெற்றிகொள்வதற்குக் கடினமாக இருக்கும் நம்முடைய அகங்கார மனப்பாங்கைக் கரைக்க ஜ்ஞான ஸத்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞான ஸத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் சில சமயங்களில் நம் அகங்காரம், நாம் ஜ்ஞான ஸத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றியெண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர். இதில், நூற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனை என்பது நமது எதிர்மறை ஸ்ம்ஸ்காரங்களையும், எழுபது மில்லியன் பாண்டவர் சேனை என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும், எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் முக்கியத்துவம்வாய்ந்த ஆழ்ந்த உட்பொருளைக் கொண்டது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஓட்டங்களையும் குறிக்கிறது.

அவற்றுள் ஜ்ஞானேந்த்ரியங்கள் என்பவை சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகிய 'அறியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.

ஐந்து கர்மேந்த்ரியங்கள் என்பவை பேசுதல், கரங்களால் செய்யப்படும் செயல்கள், நடத்தல், உடற்கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் ஆகிய 'செயல்புரியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.

எட்டுவித எண்ண ஓட்டங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன.

'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்தப் பதினெட்டும் விடப்பட வேண்டும்.

மஹாபாரதம் ஒரு இதிகாசக் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் - மன அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. ஜீவன்முக்திக்கு இது நடைபெற்றாக வேண்டியுள்ளது.

இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை. மஹாபாரதம், வாழும் வரலாறு. பகவத் கீதை, ஞானமடைதலுக்கான கையேடு!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல், நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக, ஜ்ஞானகுருவுடன் உரையாடுகிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஸத்குருநாதரின் ஸத்ய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.

பொழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத் கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத் கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண மஹரிஷி ஆகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துகளைப் பேசியிருக்கிறார்கள்.

பலர், இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும், நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக, முதல் நிலை விளக்கமே ஸ்த்குரு, பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச்செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தீயானம்.

சிறந்த சிறிதளவு படிப்பது, ஒருதுளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், மரணபயத்தைக் கடந்துவிடுவீர்கள்,'' என்று சொல்கிறார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் விரிவுரைகளை, வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸ்ம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிவாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து, அவர்களின் இறுதிநிலையான ஸ்த்யத்தை உணர்வதற்கான பெருமுயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!

முடிவற்ற பேரின்பநிலையாம் தித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!