KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/பூர்ணத்வம்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

பூர்ணத்வம்

ஞானத்திற்கான நுட்பமான, ஆனந்த வாழ்வின் இரகசியமான 'பூர்ணத்வம்' பகவத்தீதையின் அனைத்து அத்தியாயங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் புரியும்வகையில், 'பூர்ணத்வம்' என்பதின் தாத்பரியம் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. 'பூர்ணத்வம்' எனும் வார்த்தைக்கு இப்பகுதியில் வரும் விளக்கத்தைப் படித்துணர்ந்து கொண்டீர்களானால், புத்தகத்தின் உள்ளே நீங்கள் 'பூர்ணத்வம்' பற்றிப் படிக்கும்பொழுது, அந்த சத்தியத்தின் ஆழத்தை அருமையாக உணர்வீர்கள்.

பூர்ணத்வம் - ஓர்அறிமுகம்

ஒவ்வொரு ஜீவனும் அடைய விரும்புவது - 'பூர்ணத்வம்'

வாழ்வின் மிக உயர்ந்த சத்தியம், மிக உயர்ந்த இலட்சியம் - 'பூர்ணத்வம்'

ஒவ்வொரு ஜீவனும் பூர்ணத்தன்மையை அடைய வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் - பிரபஞ்சத்தின் நோக்கம். அதனால்தான் நம் வேதங்களும் சாஸ்திரங்களும் இறுதியில் பூர்ணத்வ நிலையையே வலியுறுத்துகின்றன. இப்புத்தகத்தின் நோக்கமும் -நீங்கள் அனைவரும் பூர்ணத்தன்மையை உணர்வதே.

இங்கு, வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ...

நம் அன்றாட வாழ்வில், நாம் மிக உயா்ந்த சத்தியமான பூர்ணத்வத்தைக் கடைபிடிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தை உணர்வது எவ்வாறு? பூர்ணத்வத்தை அனுபவிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தில் வாழ்வது எவ்வாறு? என்பதை எளிய நடையில், அனைவரும் புரிந்துகொள்(ளும் முறையில் வழங்கியுள்ளார்.

புர்ணத்வம் என்றால் என்ன ?

பூர்ணத்வம் குறைவுணர்வோடும் நீங்கள் நிறைவுசெய்தல். உங்களை நீங்களே மன்னித்து, உங்களின் நிறைவுத்தன்மையை பிரகடனப்படுத்துதல்.

உங்கள் வாழ்வில் விழிப்புணர்வில்லாமல்... நீங்கள் உங்களைப் பலப் பாகங்களாக ... துண்டுகளாகப் பிரித்து ... பல மக்களுடனும் ... பல பகிர்ந்துகொண்ட உங்களுடைய பாகங்களையும், துண்டுகளையும் திரும்பப் பெறுவதே பூர்ணத்வம்.

இழந்துவிட்ட எல்லா விஷயங்களையும் திரும்ப மீட்டெடுப்பதே பூர்ணத்வம் ! 'நீங்களும் பிரபஞ்சமும் ஒன்றே' என்று அறியும்வரையிலும், உங்களின் உயர்ந்த இறுதிநிலையை அறியும்வரையிலும், உங்களது அமைதியான விழிப்புணர்வையும், நிலையான ஆனந்தத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளும்வரையிலும், பூர்ணத்வம் செய்வது தொடர வேண்டும்.

ஒரு குழந்தை பூமிக்குக் க் இறங்கிவருவது எனும் புதையலுடன்தான். இது, சமுதாயத்தால் ஒருபோதும் ஆதரிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை, தன் உண்மையான அத்வைத நிலையிலேயே இருப்பதற்கு இந்தச் சமுதாயம் உதவுவதேயில்லை. அப்படிப்பட்ட ஒரு சமுதாயச் சூழலால் சிதறிப்போன தனது உணர்வுத் துண்டுகளை, வாழ்க்கை முழுவதும் அது தேட ஆரம்பித்துவிடுகிறது. ஆகவே, தக்கவைத்துக்கொள்வதே முழுமைசெய்தல்.

உங்கள் குறைவுணர்வுகள் என்பது உங்கள் மீது அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு 300 குழந்தைகளைப்போன்றது என்றால், ஒவ்வொரு நாளும் நீங்கள் பூர்ணத்வம் செய்யும்பொழுது அந்த 300 குறைவுணர்வுகளில். ஒரு பத்து கரையும் ... பின் இருபது கரையும் ... பின் முப்பது கரையும் ... இப்படி எல்லாக் குறைவுணர்வுகளும் கரையக் கரையக் கரைய, திடீரென ஒரு நாள், நீங்கள் மட்டும் உங்களுடன் இருப்பீர்கள்.

எந்தக் குறைவுணர்வும் இல்லாமல் உங்களுடன் அமர்ந்திருப்பீர்கள். குறைவுணர்வுகளும் கரைந்து விடும். இந்தத் தேவையற்ற புரிதல்கள் உங்களை விட்டு விலகும்பொழுது, நீங்கள் அனுபவிக்கும் அந்த நிறைவுணர்வுதான் 'லட்சுமி'!

நம் எல்லா வறுமைக்கும் மூலகாரணம், நாம் வளர்ந்த பின்பும்கூட சிறுவயது குறைவணர்வகளோடு வாழ்வதுதான்.

குறைவுணர்வு - என்றால் என்ன ?

கடந்தகாலம் சார்ந்த எண்ணங்கள் ... துக்கங்கள் ... சந்தேகங்கள் ... குற்றவுணர்ச்சிகள் ... வெறுப்புகள் ... பயங்கள் - இவை உங்கள் நிகம்காலத்தில் அமர்ந்துகொண்டு, எதிர்காலத்தையும் வாழவிடாமல் தடுப்பதுதான் 'குறைவுணர்வுகள்' என்கிறோம். இதை Incompletions என்று ஆங்கிலத்தில் சொல்வோம்.

உள் மனத்தடையாலோ அல்லது வெளியில் ஏற்படும் ஏதாவதொரு தடையாலோ, நீங்கள் நினைத்தபடி நிகழாமல் தடைபட்டு நின்றுவிடும் எந்தவொரு செயலுமே, உங்களுக்குள் ஒரு குறைவுணர்வாகத் தொக்கிநின்றுவிடுகிறது.

நிகழ்கால் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் போக்கில், அப்படியே பங்கேற்கவிடாமல் உங்களைத் தடுக்கும் கடந்தகால நிகழ்வின் தாக்கம் எதுவானாலும், அது குறைவுணர்வே. குறைவுணா்வுகள், உங்களைத் தாழ்த்தி, உங்களை உணர்ச்சிவசப்படுவராகவும் பலவீனமானவராகவும் உணரச்செய்து, உங்களுக்குள் ஒரு திருப்தியற்ற உணர்வையே விட்டுச்செல்லும்.

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், குறைவுணா்வு உடையவராக இருப்பீர்கள். மன அழுத்தம் என்பது உங்களுக்குள் நீங்களே குறைவுணர்வுகளை வைக்கோல் போர்போன்று போட்டுத் திணித்து வைத்துக்கொள்வதைத் தவிர வேறெதுவுமில்லை.

'மனிதகுலத்தின் இருக்கின்றனவே' என்பதே மனிதகுலம் சுமந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய குறைவுணர்வு !

என் குறைவணர்வுகள் உருவாகின்றன ?

ஒரு சிறிய கதை:

அன்றாடம் ஒரே விதமான வேலைகளைச் செய்து மிகவும் சலிப்படைந்திருந்தார், மசக்காளி. அவர், ஒருநாள் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் தமக்குள், 'என்ன சலிப்பான வாழ்க்கை இது! ? ... தினமும் காலையில் எழுந்து, பல்விளக்கி, பேப்பர் படித்து, சாமி கும்பிட்டு, காலை உணவு அருந்தி, என் மனைவியோடு சண்டையிட்டுவிட்டு, அலுவலகம் சென்று, ஏதோ வேலைசெய்து, அதிகாரியிடம் திட்டுவாங்கி, பின்பு வீட்டுக்குத் திரும்பி வந்து, டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, தூங்கி... என்ன வாழ்க்கை இது... நகர மாட்டேன்கின்றதே, ஒரே சலிப்பாக இருக்கிறதே, ஏதோ ஒன்று குறைகிறதே. வாழ்க்கையை விறுவிறுப்பாகவும், சுவையுள்ளதாகவும் மாற்ற நான் எதையாவதைச் சேர்த்தாக வேண்டுமே ... எது என்னை நிறைவடையச் செய்யும்..?, எது என் வாழ்க்கையை உயிர்ப்போடும்... சுவையோடும் ... விறுவிறுப்போடும் ... உத்சாகமானதாகவும் மாற்றும் ' என்று வீடு திரும்பும் வழி முழுக்க யோசித்துக்கொண்டே வந்தார்.

வீட்டை அடைந்தவுடன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். அவர் மனைவி கதவைத் திறந்தார்.. உடனே அவர்தன் மனைவியிடம் ''ஷீலா, இந்த வாரக் கடைசியில் கோவாவுக்குப் போகலாம், நாம் அங்கு கடலருகில் விடுதியெடுத்துத் தங்கி, விரும்பும்போதெல்லாம் இளைப்பாறலாம், உணவகத்திற்குச் சென்று விரும்பியதைச் உண்ணலாம், அருந்தலாம் என்ன போகலாமா?'' என்று மூச்சுவிடாமல் கேட்டார். அதைக் கேட்ட மனைவிக்கோ ஒரே சந்தோஷம். உடனே சம்மதித்தார்.

வாரயிறுதியும் வந்தது. மசக்காளியும் அவர் மனைவியும் கோவாவிற்குப் பறந்தார்கள். அங்கு சென்ற மசக்காளிக்கு ஒரே சந்தோஷம். ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழத் துடித்தார். தம் மனைவியுடன் கடற்குளியலையும், அந்தக் காலை இளம்வெயிலையும் அனுபவித்துக் கொண்டிருந்தபொழுது, நினைவு வந்துவிட்டது. உடனே அதை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்!!!

கடற்கரையில் அமர்ந்துகொண்டு கவலைப்படுவதைத்தான் நாம் 'விடுமுறை' எனச் சொல்கிறோம்.

கதை உணர்த்தும் சத்தியம் ...

உங்களைக்காட்டிலும் பெரியதாக ஏதோ ஒன்று வெளியில் உங்களுக்காகக் காத்திருப்பதாக யூகித்துக்கொண்டு, அதுதான் உங்களை நிறைவடையச் செய்யப்போகிறதென்று நீங்கள் நம்புவதினால்தான் குறைவுணர்வுகள் உருவாகின்றன.

உங்கள் குறைவுணர்வுக்குத் தாவும் ஒரு பயணம்தான். வெளியில் இருக்கும் ஏதோ ஒன்றே உங்களை முழுமைபடுத்த முடியும் என்னும் கருத்தே உங்களை உடனடியாக ஒரு சாதாரண உலகாயத நிலைக்குத் தள்ளி, உங்களை ஒரு உணர்வற்ற பொருளின் நிலைக்குக் குறைத்துவிடுகின்றது. உங்களை ஒரு குறைவுணர்வு உள்ளவராக ஆக்கிவிடுகிறது.

எந்தவொரு நிறைவடையா செயலும் 'கா்மா'வாக ஆகிவிடுகிறது. அது நிறைவடையும்வரை, அதே செயலைத் திரும்ப திரும்பச் செய்வதற்கு அது உங்களை இழுத்துக்கொண்டேயிருக்கும். இது உங்களைப் பல ஜென்மங்கள் எடுக்கவைக்கும்.

குறைவுணர்விலிருந்து குறைவுணர்வை நிலையிலிருந்து செய்யப்படும் எந்தவொரு செயலும் உங்களைப் பூர்ணத்தன்மைக்கு எடுத்துச்சென்று, மற்றவர்களையும் நிறைவடையச் செய்கிறது.

உங்களுக்குள் இருக்கும் குறைவுணவுகள்தான் உங்களின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்பதை நீங்கள் உணர்ந்தால்தான் உங்களால் அதிலிருந்து விடுபட முடியும். நீங்கள் உருவாக்கிய குறைவுணர்வுகளை நிறைவுசெய்து, உங்களின் கனவுகளை நீங்கள் நிஜமாக்க முடியும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்...

நம் வறுமைக்கு காரணம் ... செல்வத்துடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.

நம் நோய்களுக்கு காரணம் ... நம் உடலுடன் நமக்கு இருக்கும் குறைவணர்வ.

நம் துக்கத்திற்கு காரணம்... வாழ்க்கையுடன் நமக்கு இருக்கும் குறைவணர்வ.

நம் தோல்விகளுக்கு காரணம்.. நம் செயல்களின் மீது நமக்கு இருக்கும் குறைவணர்வ.

இந்த ஒவ்வொன்றோடும் பூர்ணத்வம் செய்யும்பொழுது நாம் நினைத்த அளவிற்கு... செல்வத்தையும்... ஆரோக்கியத்தையும்... அனந்தமான வாழ்வையும்... வெற்றியையும் பெறுகிறோம்.

பூர்ணத்வ நுட்பம் -கடவுள் உங்களுக்கு அருளிய பிரசாகம்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ... நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம் என்பதைவிட யாரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்பதை ஆம்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் வார்த்தையில் இருந்து நாம் கற்பதைவிட அவருடைய வாழ்வைப் பார்த்து நாம் கற்பது மிகவும் அதிகம்.

நீங்கள் கற்கும் இந்தப் பூர்ணத்வ நுட்பம், பூர்ணத்தின் வடிவமாம்... எம்பெருமான் ஈசனால் அன்னை பார்வதி தேவிக்கு அருளப்பட்ட மிக சக்திவாய்ந்த நுட்பம். ஈசன் அருளிய இந்தப் பூர்ணத்வ நுட்பத்தை தங்கள் வாழ்வில் உண்மையாகக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் அவர் வாழும் 'பூர்ண நிலையை' அடைவது சாத்தியம். இதுதான் கடவுள் உங்களுக்கு அருளிய உண்மையான பிரசாதம் !

ாசன் அருளிய ஞானசூத்திரமாம் விஞ்ஞான பைரவ தந்திரத்தில் 22வது சூத்திரம் சொல்வது :

'கடந்தகால நிகழ்வுகளைப் பார்க்கும் 'அந்த இடத்தில்' உங்கள் கவனத்தைக் குவியுங்கள். கடந்தகாலத்தோடு உங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், அதனை உற்றுக் கவனியுங்கள். அங்கு உங்கள் வடிவம், இன்றைய குணநலன்களை இழந்து, உணர்வுமாற்றம் அடைந்துவிடும். '

பூர்ணத்வ க்ரியை

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பது உங்கள் உணர்வில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு விடுகிறது.

உங்கள் வாழ்க்கையில் குறைவணர்வுகள் ஏற்படுவதற்கு - காலம், உணர்வு, உங்கள் குறைபுரிந்துணர்வுகள் இவை தேவைப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வு உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன் உங்கள் உணர்வில் பதியப்படுகிறது.

உங்கள் உணர்வில் பதியப்படும் ஒரு குறிப்பிட்ட காலமானது, ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன்கூடியதாக இருந்தால், அந்தக் குறைவுணர்வு அனுபவம் அடுத்தடுத்த கணங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள்.

உதாரணத்திற்கு, உங்களுடைய ஆறாவது வயதில், உங்கள் மூத்த சகோதரர் உங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக அடித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தச் சமயத்தில், உங்களைச் சக்தியற்றவராக உணர்ந்திருந்தீர்களானால், அது ஒரு ஒரு ஆழமான குறைவுணர்வாக உங்களுள் பதிந்துவிடும்.

இப்போதும், எப்பொழுதெல்லாம் அந்தக் குறைவுணர்வின் தாக்கம் ஏற்படுகின்றதோ, எப்பொழுதெல்லாம் அந்த பலஹீனவுணர்வால் பாதிக்கப்படுகின்றீர்களா, அந்தப் புரிந்துணர்வைக் குறைவுணர்வு உருவாக்கப்பட்ட அந்த சிறுவயது வடிவம், உங்களுடைய நினைவுக்கு ஒரு மைக்ரோ நொடிக்காவது உங்கள் மனக்காட்சியில் வந்தே தீரும். நீங்கள் மறுபடியும் அந்த வடிவை நினைவுகூர்வீர்கள்.

அந்த வடிவிலிருந்து அக்குறைவுணர்வு, தன் வலையைத் துவங்கிவிடும். ஒரு வன்குறுந்தகட்டில் (DVD) நிழற்காட்சியாகக் குறுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட ஒரு காட்சி, திரும்பவும் போட்டுக் காண்பிக்கப்படுவது போன்றதுதான் இது.

உங்கள் ஆறு வயதில் உருவாக்கப்பட்ட ஒரு குறைவுணர்வினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அந்த நேரத்தில் எப்படி இருந்தீர்களோ, அந்த வடிவைத் திரும்பவும் நினைவு கூர்வீர்கள். அது அப்படியே உங்கள் நினைவிலிருக்கும். ஒரு வினாடிக்கும் மிகமிகக் குறைந்த நேரத்திலிருந்தாலும் கூட உங்களால் அதை நினைவுகூர முடியும். அந்தப் பழைய நினைவை அடித்தளமாக அமைத்து, அதன்மேல் அந்தக் குறைவுணர்வு வளருகிறது. அதுவே இப்போதைய உங்களுடைய நிகழ்காலத்தையும் பாதிக்கிறது.

மஹாதேவர் உங்கள் உள்தளத்திலிருந்து, அந்த ஆறு வயது வடிவையும், அந்த நினைவையும், கரைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த நுட்பத்தைத் கருகின்றார்.

இதைத்தான் அவர், 'உங்கள் கடந்தகாலத்தை நினைவு கூர்ந்து. அதைக் கரைத்துவிடுங்கள்' என்று சொல்கிறார். நீங்கள் இந்த ஒரு வரியைத் தவற விட்டுவிட்டீர்களென்றால், நீங்கள் முழுவதையும் தவறவிட்டுவிடுவீர்கள்.

உங்கள் ஆறு வயதில் ஏற்பட்ட குறைவுணா்வுகளை இன்னும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள், அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடந்தகாலக் குறைவுணாவு உங்கள் நிகழ்கால் முடிவுகளை, நிகழ்கால விழிப்புணர்வை இன்னமும் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நொடிக்கும் மிகக் குறைந்த நேரத்தில் உங்களுக்குள் உருவான குறைவுணர்வை, அந்த ஆறு வயது சிறுவனின் பயந்த, குறுகிய, வெளிறிய முகத்தின் காட்சியை நினைவுகூர்வீர்கள். அந்த நினைவிலிருந்து உங்கள் குறைவுணர்வு வளர்ந்து பெருகத் துவங்கும்.

ஆகவே, ஒவ்வொரு கணமும் உங்கள் தோற்றம் எப்படியிருந்தது என்பது உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. உணர்வுதான் படச்சுருள்.

மகாதேவர் சொல்கிறார்: இப்போது, அதே காலத்திற்குச் சென்று, அதே வடிவைப்பார்த்து, அதையே திரும்ப வாழுங்கள்.

ஆனால், அதைக் கரையச்செய்துவிட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இப்போது என்ன நடக்கும் ? நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவயது வடிவம், கடந்தகாலத்திலிருந்து ஒரு பொக்கிஷம்போல் பாதுகாக்கப்பட்டு, காக்கப்பட்டு வந்த அந்த நினைவுமலர் வடிவம் 'சட்'டெனக் கரைந்துபோகும்.

கடந்தகாலத்தை நீங்கள் மீண்டும் வாழும்போது, சரியாக இதுதான் நடக்கிறது. அந்த ஆறு வயது சிறுவனிடம் நீங்களே சென்றோ அல்லது அந்த ஆறு வயது சிறுவனையே நீங்கள் இங்குக் கொண்டு வந்தோ, அந்தக் குறைவுணர்வை மீண்டும் நிகழ்காலத்துக்கு எடுத்து வந்து, அதை விழிப்புணர்வோடு வாழுத் துவங்குங்கள்.

உங்கள் சகோதரர் உங்களை விரட்டிக்கொண்டு வருகிறார். அவர் உங்களை அடிக்கிறார். நீங்கள் திகிலடைந்து, பயந்து ஓடி, ஒளிந்து கொள்கிறீர்கள்: உங்களால் கத்தக்கூட முடியவில்லை. பயத்தில் மூச்சுவிடுவதே கடினமாக இருக்கும். அந்தக் குழந்தை பருவக் காட்சியை அப்படியே வாழுங்கள் அப்படி வாழும்போது குறைவுணர்வு கொண்ட சிறுவன், பதறிப்போன சிறுவன் இப்போது அப்படியே கரைந்துபோவான்! அந்த நினைவுகள் கரைந்துபோகும். அந்தக் காட்சி கரைந்துபோகும். இவை எல்லாம் கரைந்தவுடன் உங்கள் உணர்வில் இருக்கும், அந்தக் குறைவுணா்வின் தாக்கமும் கரைந்துபோகும் !

இதுதான், மஹாதேவர் சொன்னது, 'உங்கள் கடந்தகாலத்தை, அதனோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் உற்றுக் கவனியுங்கள். உங்கள் கடந்தகாலம் நிகழும் இடத்தில் உங்கள் கவனம் இருக்கட்டும் அப்பொழுது உங்கள் வடிவம்கூட, தன்னுடைய இப்போதைய பண்புகளை இழந்து, உணர்வுமாற்றம் அடையும்! அந்த வடிவம், தனது பண்புகளை இழந்து விடுகிறது! அப்போது நீங்கள் பூர்ணமாகிவிட்டீர்கள்! இதுதான் பூர்ணத்வத்தின் விளக்கம்.

நீங்கள் இந்த விளக்கத்தைப் பின்பற்றினீர்களென்றால், நீங்கள் அப்போது வைத்திருந்த அந்தக் குறைவுணா்வினையும் அந்த வடிவத்தையும் உங்களால் மீண்டும் நினைவுபடுத்த முடியாது. நீங்கள் பூர்ணத்வம் செய்து விட்டீர்களா, இல்லையா என்னும் உங்கள் சந்தேகம் தெளிந்து விடும்.

குறைவுணர்வு என்பது மிகவும் சிக்கலான உணர்வுப்பதிவு. குழந்தைப் பருவ குறைவுணர்வை, இப்போதுள்ள உடலுக்குள்ளும் கொண்டுவந்து, அதன் அடிப்படையிலேயே இப்போதும் வாழ்வது என்பது, சிறுவயதில் குடித்த 200மில்லி பால் அளவே இப்போது வளர்ந்தபிறகும் போதும் என்று நீங்களாகவே முடிவுசெய்துகொண்டு, ஒரு லிட்டா் பாலைக் குடிக்கவேண்டிய வயதில்கூட அதே 200 மில்லி பாலைக் குடிக்க முயற்சிப்பது போன்றதுதான். நீங்கள் குழந்தையாய் இருந்தபோது குடித்த அளவே இப்போதும்கூட குடித்து வந்தீர்களென்றால், உங்களுக்கு சத்துக் குறைவுதான் ஏற்படும் !

அந்த வடிவத்தின் அதே போதாத உணர்வை இந்த வடிவத்திற்குள் கொண்டுவந்து வாழ்வதற்கு முயற்சி செய்தீர்களானால், நீங்கள் தொடர்ந்து போதாமையால் சிரமப்படுவீர்கள். வாழ்க்கையில் 'போதாமை' என்பது ஒரு சாபம்!

அதனால், 'போதாமை' என்னும் சாபத்திலிருந்து விடுபட, உங்களுடைய குறைவுணர்வுகளை நிறைவுசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். சிறிதும் தாமதம் செய்யாதீா்கள். ஏனெனில், அவை உங்களிடம் இருப்பனவற்றையெல்லாம் அழித்துவிடும். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தையே அழித்துவிடும் !

உங்கள் நிகழ்காலத்தின் மேல் பாரமாக அமா்ந்துகொண்டு, உங்களை பலமில்லாதவராக உணரச்செய்யும் இறந்துபோன கடந்தகாலத்தை எரிக்கு, நீங்கள் நிகழ்காலத்தில் வாழவும், விரிவடையவும், உயிர்ப்போடு இருப்பதற்குமான ஒரு உணர்வை உருவாக்குவதே பூர்ணத்வம்.

பூர்ணத்வத்தைத் தவிர உடனடி சக்தியுள்ள நுட்பம் கிடையாது. பூர்ணத்வத்தைப்போல வேறெந்த செயல்முறையும் நீடித்த, நிலைத்த விளைவுகளையும், விழிப்புணர்வையும் தராது.

அதனால்தான் மஹாதேவர் இதில் மிகத் தெளிவாக சொல்கின்றார் -உங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் எல்லா வடிவங்களும், கருத்துக்களின் வடிவங்களும்... அந்தக் கருத்துக்களை உருவாக்கிய நினைவுப்பதிவுகளையும் நீங்கள் கரைத்தே ஆக வேண்டும்.

அவற்றையெல்லாம் சொல்கிறேன், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்! உங்களுக்கு ஞானம் கிடைத்துவிடும்! அவற்றையெல்லாம் கரைத்தவுடனே, நீங்கள் இந்த வாழ்க்கையை வாழத்துவங்குவீர்கள். அவை கரைக்கப்பட்டவுடன், நீங்கள் உணர்வுமாற்றம் பெறுவீர்கள். நீங்கள் ஜீவன்முக்த வாழ்வை வாழ்வீர்கள் !

பூர்ணத்வம் செய்தல், நிறைவுசெய்தல் என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுவே! நிறைவுசெய்தல் என்பதற்கு மகாதேவரின் மிகச் சரியான விளக்கமும் இதுவே!

பூர்ணத்வம் - வாழ்வின் திறவுகோல்!

பூர்ணத்வமே நீங்கள் சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம் ! பூர்ணத்வம் - எங்கேயோ வெளியில் தேடியலைந்து அடைய வேண்டிய ஒரு பொருள் அல்ல. உங்களுக்குள்ளேயே புதைந்து இருக்கின்ற ஒரு பொக்கிஷம். அதனால் உடலில் இருக்கும்பொழுதே உணர்வில் பூர்ணத்வத்தைக் கண்டுவிடுங்கள் !

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு, அவர் அடையவேண்டிய இடத்தை அவர் சென்றடையும்பொழுதுதான், அவரது பயணம் நிறைவுபெறும். அதுபோல - இந்த 'வாழ்க்கை' என்னும் சாலையில் 'உடல்' என்னும் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒவ்வொரு 'ஆன்மா'வுக்கும் அது அடையவேண்டிய இறுதி நிலையான 'பூர்ணத்வத்தை' அடையும்பொழுதுதான், அதனுடைய பயணம் நிறைவுபெறும். இல்லையெனில் எத்துணைமுறையானாலும் அது இன்னொரு உடலெடுத்து தன் பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும்.

பூர்ணத்வம் - மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான திறவுகோலாக செயல்படுகின்றது. அதைக்கொண்டு... உங்கள் பிரச்சினைகள் போன்ற எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம். இந்தப் பூர்ணத்வம்தான் எங்கும், எல்லா இடங்களிலும் உங்களைப் பாதுகாக்கும் உங்களின் உண்மையான சொத்து.

பூர்ணத்வம் - உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையின் எல்லாவிதச் சிறப்பம்சங்களையும் திறந்துவிடக்கூடிய ஒரு திறவுகோலாக செயல்படுகின்றது. குறைவுணர்வுகளை மட்டும் நிறைவுசெய்வதற்காகப் பயன்படவில்லை. மற்றவர்களிடமிருந்து துன்பங்களையும் முழுமைப்படுத்தி, அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகுக்கும்.

பூர்ணத்வம் மட்டுமே நம் வாழ்வில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லாத் துன்பங்களுக்குமான ஒரே தீர்வு !

தனக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் பூர்ணத்வத்தை உணர்வதற்காக அறிவைப் பயன்படுத்துவதே -உண்மையான பகுத்தறிவு.

ஒவ்வொருவரும்- 'நான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறேன்? நான் ஏன் இவ்வாறு செய்கிறேன்?' என்று தன்னைப்பற்றி, தன்னுடைய செயல்களைப்பற்றி, நடவடிக்கைளைப்பற்றி பகுத்தாராய வேண்டும். தன்னுள் குறைவுணர்வை ஏற்படுத்தும் காரணங்களைக் கண்டுபிடித்து, அதை நிரைவசெய்ய வேண்டும்.

உங்களுடைய வாழ்வில் உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்குத் தடையாக இருக்கும் குறைவுணர்வுகளே! இந்தக் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.

ஒவ்வொருவரும் நீங்கள் குறைவுணர்விற்கான உண்மையான காரணத்தை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நிறைவுசெய்து, உங்களின் இயல்பான இறையுணா்வை, புர்ணத்வ உணர்வை உங்களால் உணரமுடியும்.

உங்களின் ஆன்ம சக்தியை உயிர்ப்பிக்கும் பூர்ணத்வம்!

நீங்கள் எவ்வளவுதான் மன அழுத்தத்திலிருந்தாலும், ஒன்றுக்கும் உதவாதவர் என்று உங்களை நீங்களே உணர்ந்தாலும், உங்கள் மீதும், உலகத்தின் மீதும் கோபமும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக உங்கள் எல்லோருக்குள்ளும் தூய்மையான விழிப்பணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தத் தூய்மையான விழிப்புணர்வை நம் தினசரி நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியும்.

பணமாக இருந்தாலும். பொருளாக இருந்தாலும் உங்களிடம் இருப்பவற்றை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தாவிடில் அது பயனற்றதே! நீங்கள் ஸ்விட்சர்லாந்து வங்கியில் பில்லியன் டாலர்கள் வைத்திருந்தாலும், அதை உங்களால் அன்றாட வாழ்க்கையில் எடுத்துப் பயன்படுத்த முடியவில்லையென்றால், அது பயனற்றதே!

நீங்கள் பெட்ரோல் கடையிலோ அல்லது உணவு விடுதியிலோ சென்று

'எனக்கு ஸ்விஸ் வங்கியில் வங்கிக்கணக்கு இருக்கிறது. பில்லியன் கணக்கில் டாலர் இருக்கிறது. இதுதான் என் வங்கி கணக்கு எண். எனக் குச் சிறிது உணவு வேண்டும், என் வண்டிக்கு 1 லிட்டர் பெட்ரோல் வேண்டும்' என்று கேட்டால், அவர்கள் தரமாட்டார்கள்.

உங்களிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலும்கூட, நீங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக வியாபார ஒப்பந்தம் செய்தபின்பே உங்களுக்குப் பணம் தருவார்கள். உங்களுக்கு வங்கியில் பணம் இருக்கிறது என்பதற்காகத் தரமாட்டார்கள்.

உங்களிடம் இருக்கும் உங்களுடைய எல்லா ஆன்மீக சக்கியும். உங்களக விழிப்புணா்வான ஆத்மாவும் ஸ்விட்சாலாந்து வங்கியில் இருக்கும் பணம் போன்றவைதான்! உங்களிடம் இருக்கின்ற ஆன்ம சக்தியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியவில்லையென்றால், அதை நீங்கள் வைத்துக்கொண்டிருந்தாலும், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

பூர்ணத்வம் - உங்களுக்குள் உறைந்திருக்கும் தூய விழிப்புணர்வான ஆன்ம சக்தியை விழிப்படையச் செய்கின்றது.

உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் உங்களைப் பூர்ணமானவராக உணர்வீர்கள். உங்கள் வாழ்வு பூர்ணத்வ நிலையில் இயங்குவதைப் பார்ப்பீர்கள். உங்கள் வாழ்வு முழுமையாக மாற்றம் அடைவதைக் காண்பீர்கள். ஒரு பூர்ணமான சக்தி உங்களுக்குள் இருந்துகொண்டு உங்களையும் உங்கள் வாழ்வையும் வழிநடத்துவதையும் உணர்வீர்கள்.

நேறுவரை நான் பூர்ணத்வம் செய்யவில்லையே, இப்போது ஏன் ?

பூர்ணத்வம், ஏன் செய்யப்பட வேண்டும் ? இக்கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பே. அதற்கான பதில் - ஏனெனில், பூர்ணத்வம், உங்கள் விழிப்புணர்வைத் திரும்பப் பெற்றுத்தருகிறது. உங்கள் விழிப்புணர்வு விடுவிக்கப்படும்பொழுது, அது உயா்-விழிப்புணா்வாகிறது.

தண்ணீரைச் சுடாக்கினால், அது குளிர்விக்கப்பட்டால் பனிக்கட்டி ஆகிவிடுகிறது. அதைப்போலவே, உங்கள் விழிப்பணர்வை சுருள அனுமதிக்கும்பொழுது, அது சுருண்டு, சுருண்டு, சுருண்டு விழிப்பற்ற நிலையாக ஆவிடுகிறது. அதை விரிக்கும் பொழுது, அதுவே 'உயர்விழிப்புணர்வாக' மாறுகின்றது.

பூர்ணத்வம் என்பது - உங்கள் உணர்வுக்குள் சிதறிக்கிடக்கும் உங்களின்பல பாகங்களை ஒருங்கிணைப்பது. பூர்ணத்வம் செய்வதால், நீங்கள் ஒரு ஒருங்கிணைந்த நபராக மாறிவிடுகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வு, உடல், மனம்- எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகின்றன. உங்களுடையதாக மாறிவிடுகின்றன. உங்கள் பாகமாக மாறி விடுகின்றன.

இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் எதிர்காலம் மட்டும் பூர்ணமாய் அமையும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கடந்தகாலமும்கூட மாற்றப்பட்டுவிடும்! உங்கள் கடந்தகாலமும் முழுமை அடைந்துவிடும்.

பூர்ணத்வம் மட்டுமே உங்கள் கடந்தகாலத்தைக்கூட மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நுட்பம்! 'கடந்தகாலத்தை மாற்ற முடியாது'-என்றே மனிதர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆழ்ந்து பரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்றால், எதிர்காலத்தையும் மாற்ற முடியாது!

காலத்தின் ஒரே டி.என்.ஏ விதைக்குள்தான் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இந்த மூன்றுமே இருக்கின்றன! காலம், ஒரு விதை என்றால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் டி.என்.ஏ வடிவமாக அந்த விதையில் உள்ளன.

கடந்தகாலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், நிகழ்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்ந்தால், கடந்தகாலத்திலும் இருந்திருப்பீர்கள்! நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்வதால், எதிர்காலத்திலும் பலஹீனமானவராகத்தான் இருப்பீர்கள். நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, உங்களையே குளிப்பாட்டிச் சுத்தப்படுத்திக் கொள்வதைப்போலவே, ஒவ்வொரு நாள் இரவிலும் நீங்கள் பூர்ணத்வம் செய்து உங்கள் அகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு இரவும் பூர்ணத்வம் செய்வது என்பது உங்கள் உயிரின் பாகமாக மாறவேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிவிட வேண்டும்.

தொடர்ந்து பூர்ணத்வம் செய்யுங்கள். ஏனெனில் பூர்ணத்வம், உங்களை ஒருமைத்துவத்துடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை சிரத்தையுடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை பொறுப்பெடுக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களையும் வளப்படுத்தி, மற்றவர்களையும் வளப்படுத்தச் செய்கிறது.

உங்களிடமிருந்தே தப்பித்து ஓடாதீர்கள்!

முழுமையாக இருப்பதே உங்களின் உயர்ந்த இயல்பாக இருப்பதால், உங்களுடைய குறைவுணர்வுகளுடன் உங்களால் சௌகரியமாக இருக்கவே முடியாது. உங்கள் குறைவுணர்வுகள் உங்களை ஒரு குறையுடைவராகக் காட்டுகின்றன என்பதற்காகவே அவற்றை நீங்கள் எதிர்கொள்வதில்லை. அதனால்கான் அவற்றை நீங்கள் எதிர்கொள்ள எப்பொழுதும் விரும்புவதில்லை.

உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்களுடைய குறைவுணர்வுகள் என்னும் பேய்களிடமிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நீங்கள் தப்பித்து ஓட ஓட, உங்கள் குறைவுணர்வுகள், உங்களை வாழ்க்கையின் மூலமாகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மூலமாகவும் மேலும் மேலும் துரத்தி வேட்டையாடுகிறது.

குறைவுணர்வுகளை அவற்றிடமிருந்து விடுதலையடைய ஒரே வழி.

நீங்கள் ஐந்து வயது குழந்தையாய் இருந்தபொழுது உங்களுக்கு ஒரு பொம்மைக் காரே போதும். ஆனால் உங்களுக்கு 25 வயதாகும்போது, உண்மையான கார் தேவை. ஆனால் இந்த இருபத்தியைந்து வயதிற்கு பிறகும் அதே பொம்மைக் காரை வைத்துக் கொண்டு, ''ஆ! நான் காரில் போகிறேன்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அதைப்போலவேதான் நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறீர்கள்! இப்போது நீங்கள் நிஜமான காரில் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. உங்கள் பொம்மைக் கார்களை விட்டுவிடுங்கள்.

சிறுவயது காகல். சிறுவயது கார்கள், சிறுவயது பரிதல்கள், உங்களது பார்பி பொம்மைகள் எல்லாவற்றையும் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். எல்லாமும் கண்டிப்பாகத் தூக்கியெறியப்பட வேண்டியவையே. துரதிருஷ்டவசமாக, சமுதாயம் உங்களுக்கு, பொம்மைகளை மட்டுமே விட்டுவிடக் கற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அந்தச் சிறுவயதில் உருவாக்கிய விளையாட்டு உணர்வுகளையும், தேவையற்ற புரிதல்களையும், குறைவுணர்வுகளையும் விட்டுவிடக் கற்றுத்தரவில்லை. அவை அனைத்தையும் தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழ அனுமதியுங்கள்.

பூர்ணத்வம், உஉங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளையும்... போராட்டங்களையும் ... பிரச்சினைகளையும் தவிர்த்துவிடுகிறது. உங்களை ஒருங்கிணைக்கிறது.

பூர்ணத்வம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்!

சில சரிசெய்யப்பட முடியாத சேதங்களை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். 'அவற்றை நான் ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது இரு வருடங்களுக்குப் பிறகு நிறைவுசெய்து கொள்வேன் 'என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், தீவிரவாதிகள் எவ்வாறு சும்மாயிருக்க மாட்டார்களோ, அவ்வாறே உங்களுடைய குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது.

'இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தத் தீவிரவாதிகளோடு நான் போரிடுவேன்', என்று நீங்கள் சொல்ல முடியாது. அதுவரையில் அவர்கள், உங்களை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். உங்களைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.

அதேபோல் குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது. அவை உங்களது வாழ்க்கை லட்சியங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தொடர்ந்து அழித்துக்கொண்டேயிருக்கும். நீங்கள் எதற்காகப் பிறப்பெடுத்தீா்கள், நீங்கள் எதை நிறைவேற்ற இந்த உடலில் இருக்கிறீர்கள், உங்கள் வாழ்வின் இலட்சியம், மற்றும் அதை நிறைவேற்ற உங்களுக்கு தேவையாக இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் குறைவுணர்வுகள் அழித்து விடும்.

குறைவுணர்வுகள், அழித்துவிடும் ! விரோதிகளைப்போல உங்களுக்குள்ளேளேயே தங்கி உங்களையே அழிக்கும் வேலையைச் செய்யவல்லது. அவை உங்களை மிகவும் கொடுமைசெய்து இன்பமடையும்.

உங்களது சிறு மலரினால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களென்றால், அந்தச் சிறு மலர்கூட உங்களுக்குக் கிடைக்க அவை அனுமதிக்காது. அவை சரியாக அந்தக் குறிப்பிட்ட மலரையே வாடிப்போகச் செய்யும்! அதற்குத் தேவையானதெல்லாம் ஒன்றே, நீங்கள் அந்த மலரைப் பெற்றுவிடக்கூடாது, அவ்வளவுதான்!

பல நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனித்திருக்கலாம், மிகச் சாதாரணமான பொருளைக்கூட... எந்தவொரு சாதாரண மனிதனாலும் எளிமையாகப் பெறக்கூடிய ஒரு பொருளைக்கூட, நீங்கள் அடைய மிகவும் கஷ்டப்படுவீர்கள். அது உங்களுக்குத் தேவைப்படும்பொழுது, அதை அடைய நீங்கள் போராடினாலும் அதன் சிறு பகுதிகூட உங்களுக்குக் கிடைக்காது. அதை அடைவதற்கு உங்களுக்குத் தடையாக இருப்பவை உங்களுடைய குறைவுணர்வுகள்தான்! ஏனெனில், நீங்கள் விரும்புவது எவ்வளவு சிறியவையாக இருந்தாலும்கூட, உங்களுடைய குறைவுணர்வுகள் அவை உங்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும். !

மேலும், குறைவுணர்வுகள் இருக்கும்பொழுது நீங்கள் சாதாரண விஷயத்தையும் தவறான முறையிலேயே அணுகுவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள், நீங்கள் அந்த நபருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களின் உணர்வைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். அதனால் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளச் சொல்லி அவருடன் சண்டையிடத் துவங்குவீர்கள். உங்களின் இந்தச் சண்டை அவரை உங்களோடு நெருங்க விடுமா ? இல்லை! குறைவுணர்வுகள் உங்களுக்குச் சண்டையிடத் கற்றுக் கொடுக்கும்.

குறைவுணர்வுகளின் குறைவுணர்வுகள் திட்டத்தையும் - - பொருளாதாரத் திட்டங்களையோ, உறவுகள் சம்பந்தப்பட்ட திட்டங்களையோ - தீட்டாதீர்கள். அதேபோல் என்ன முடிவுகளாக இருந்தாலும் - வாழ்க்கை பற்றிய முடிவுகளையோ, உடல் சார்ந்த முடிவுகளையோ, மனோரீதியான முடிவுகளையோ, ஞானமடைவது அறிவுரைப்படி எடுக்காதீர்கள்.

உங்களுடைய குறைவுணாவுகளைப் பூர்த்திசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். உங்களது குறைவுணர்வுகள் நீங்கள் நினைப்பதுபோல அவ்வளவு அப்பாவி அல்ல. அதனால் இப்போதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் உங்களது உடலும், மனமும் அழிந்துவிடும். உங்களுடைய சிந்தனைத் திறனையே முழுவதுமாக விழுங்கிவிடும்.

உங்களைத் தாக்க, உங்களின் சக்தியையே பயன்படுத்தும். இது எப்படிப்பட்டதென்றால் உங்களுடைய பாதுகாப்புப் படையையே உங்களது நாட்டைத் தாக்க உபயோகிப்பது போன்றது. இதைத்தான் குறைவுணர்வுகள் செய்கின்றன. அது மிகவும் ஆபத்தானது. திரும்பவும் சரிசெய்யப்பட முடியாதது. இப்பொழுதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் ... குறைவுணர்வுகளின் சக்தி அதிகமாக இருப்பதால், உங்களது உடலும், மனமும் அழிக்கப்பட்டுவிடும்.

நீங்கள் ஒவ்வொருவருமே பூர்ணத்தின் வெளிப்பாடே!

நம் உபநிடதத்தில் சொல்லப்படும் மிக அழகான ஒரு ஸ்லோகம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே / பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே //

இதன் பொருள்:

பூர்ணத்வம் -

தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் முழுமை. முழுமையிலிருந்து முழுழுமை எடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுழுமையாகவே இருக்கிறது.

பூர்ணத்வத்தில் இருந்து நீங்கள்தான் பூர்ணம் என்பதை உணர்வதுதான் ஞானம்.

'நீங்கள்தான் பூர்ணம்' என்பதை நீங்கள் உணரும்பொழுது, இந்தப்

பிரபஞ்சத்தின் பூர்ணத்வத்தை அனுபவமாக உணர்கின்றீர்கள், நீங்கள் இந்தப் பூர்ணத்தன்மையை அனுபவமாக உணர்ந்தீர்களானால்... நீங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்துவீர்கள்.

நாம் வெளிப்பட்டவர்கள்தான். பூர்ணம் வெளிவந்த சுடர்கள்தான். ஆனால் அஞ்ஞானம் எனும் இருளால் அதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் உண்மையைான வாழ்வை இழந்துகொண்டிருக்கிறோம். பூர்ணத்வம் செய்வது நம்முடைய வாழ்க்கையை நமக்குத் திருப்பி வழங்குகிறது!

நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, விதம் பாரம்பரியத்தில் நீங்கள் படித்த அனைத்தும் நிஜமாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் வேதப் பாரம்பரியத்தை அடைவதற்கு, அதீதமான சக்திகளைப் பெறுவதற்கு, பூர்ணத்வம் ஒரு பாலமாக இருக்கிறது.

எல்லா நிலைகளிலும் பூர்ணத்வமே வாழ்க்கை.

உங்களுக்கும், இராமானுஜா, ஆதிசங்கரா, போன்றவர்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அது பூர்ணத்வத்தின் நிலைப்பாடுதான்.

பூர்ணத்வமே ஆன்மீகத்தின் வளர்ச்சி! பூர்ணத்வத்தினால், உங்கள் முழு வாழ்க்கையும் மாறிவிடுகிறது.

பூர்ணத்வத்தால், நேரிடையாக வாழத்துவங்குகிறீர்கள்!

உங்களுக்குள் அமைதி, நிம்மதி நிலைகொள்ள வேண்டுமென்றால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

உங்கள் துறையில் நீங்கள் திறன்மிக்கவராக வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

அமகான உறவுகள் வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் வேலையில், உறவுகளில் என எல்லாவற்றிலும் மேன்மையடைவீர்கள். இந்த வெளிவிளைவை மட்டுமல்ல, உங்களுக்குள் உங்களுடைய உணர்வு திரும்பக் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் விழிப்புணர்வு, உங்களுக்குத் திரும்ப வந்துவிடும் .

எவ்வளவுக்கெவ்வளவு திரும்ப வருகின்றதோ ... அந்த அளவிற்கு உங்கள் வாழ்வில் பல அதிசயங்கள் நடப்பதைக் காண்பீர்கள். உங்கள் உணர்வைத் திரும்பப் பெறும்பொழுது, நீங்களும் பூர்ணத்தில் இருந்து வெளிப்பட்டவர்தான் என்ற சத்தியத்தை உணர்ந்துகொள்வீர்கள்.

உங்களின் உண்மையான அடையாளம்!

உங்களின் உண்மையான அடையாளம் எது என்பதை நீங்கள் மறந்திருப்பதே உங்களின் எல்லாக் குறைவுணர்வுகளுக்கும் காரணம்.

உதாரணத்திற்கு ... உண்மையில் கோடிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருக்கும் ஒரு செல்வந்தர்தான், ஆனால் தீடீரென ஏதோ சில காரணத்தால், நீங்கள் பிரக்ஞையற்ற நிலையில் விழுந்துவிட்டீர்கள். அதன்பின்பு நீங்கள் விழிக்கும்போது, இயற்கையாகவே, உங்கள் ஸ்விஸ் வங்கி கணக்கு எண், அதற்கான கடவுச்சொல், எவ்வளவு வைப்புத்தொகை ஆகிய எல்லாவற்றையுமே மறந்துவிடுவீர்கள். அதனால் உங்களை ஒரு பிச்சைக்காரராகவே நம்புவீர்கள். ஆனாலும் உலகத்திற்கு உங்களை ஒரு பணக்காரராக காட்டிக்கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காக நீங்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள். ஆனால், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நீங்கள் உணர்வீர்கள்.

ஆனால் நிஜத்தில் நீங்கள் ஒரு பெரும் பணக்காரர்! ஒரு பணக்காரரான நீங்கள், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நம்புகிறீர்கள். ஏழையாகவே வாழ்கிறீர்கள். உங்கள் கணக்கில் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் என்பதைக்கூட அறியாமலே இருக்கிறீர்கள்.

நீங்கள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டுவைத்துவிட்டு, உங்கள் கணக்கு எண்ணை மறந்துவிட்டதைப் போலத்தான், பூர்ணத்வம்தான் உங்கள் உண்மைநிலை என்பதை மறந்து, உங்களுக்குள் உங்களை ஒரு குறைவுணர்வுள்ளவராகவே நம்புகிறீர்கள். ஆனால் வெளி-உலகிற்கு உங்களை ஒரு விரும்புகிறீர்கள். அப்படியே காட்டிக்கொள்ளவும் செய்கிறீர்கள்.

பூர்ணத்வம், எல்லாத் தடைகளையும், குறைவுணர்வுகளையும் உருக்கிக் கரைத்துவிடும். உங்களுடைய உணர்வு மலர்வதற்குத் தடையாக இருக்கும் தடைகளெல்லாம் பெரிய மலைகளாக, பெரிய மலைத்தொடர்களாக இருக்கின்றன. எனினும், பூர்ணத்வத்தால்-மலையளவுள்ள குறைவுணர்களைக்கூட கரைத்துவிட முடியும். ஆகவே, நிறைவுசெய்யுங்கள்! ஞானம் அடைவதையே நினைவில் வைத்து, சரியான புரிதலைக்கொண்டு எல்லாவற்றுடனும் நிறைவுசெய்து கொள்ளுங்கள்.

பூர்ணத்வமே கடவுள். பூர்ணத்வமே வாழ்க்கை. பூர்ணத்வம், உங்களைப் பிரபஞ்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. உண்மையிலேயே, பூர்ணத்வம் உங்களுக்கு எல்லாவற்றையும் அளிக்கிறது. எல்லாக் கா்மங்களிலிருந்தும், எல்லா தோஷங்களில் இருந்தும் - அது நாகதோஷ்மோ, சனிதோஷ்மோ, ஜாதக தோஷமோ, வாஸ்து தோஷமோ - அவற்றிலிருந்து பூர்ணத்வம் உங்களை விடுவிக்கிறது. ஆகவே பூர்ணத்வக் கிரியாவை செய்ய ஆரம்பியுங்கள். அனைத்து மதங்களின் சாரமும் பூர்ணத்வமே ! ! !