KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/ஒவ்வொரு கணமும், உங்களுக்கு ஏதோவொன்று கற்பிக்கப்படுகிறது!Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

ஒவ்வொரு கணமும், உங்களுக்கு ஏதோவொன்று கற்பிக்கப்படுகிறது!

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுகிறது. இது ஒரு சாதாரண, எளிதான காரியம் அல்ல. நீங்கள் ஒரு மருத்துவராயிருந்தால், இது எவ்வளவு பெரிய செயல்முறை என்பதை அறிவீர்கள். நாம் உண்ணும் உணவை இரத்தமாக மாற்றும் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால், உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை வளாகமாக அதுவே இருக்கும்.

இன்னமும் விஞ்ஞானிகள், உணவை இரத்தமாக மாற்றும் செயல்முறை நுட்பத்தில் வெற்றிகாண முடியவில்லை. இதை வெற்றிகாமாகச் செய்து முடிக்க வேண்டுமானால், மைல் கணக்கில் நீளும் பெரிய தொழிற்சாலையை நிறுவ வேண்டும். அவ்வளவு பெரிய மகத்தான வேலை, நம் இந்த ஆறடி உடலுக்குள், இவ்வளவு சிறிய அமைப்பினுள் நடந்துகொண்டிருக்கிறது.

காற்று உள்ளிமுக்கப்படுகிறது. அதிலிருந்து பிராண சக்தி (உயிர் சக்தி) பிரிக்கப்படுகிறது. பிறகு அந்தக் காற்றானது வெளியேறுகிறது. இந்த நிகழ்ச்சியும் நம் உடலுக்குள் நிகழ்கிறது.

தெய்வீகசக்தியால், நம் உடலுக்குள்ளும், இந்தப் பிரபஞ்சத்திலும் அதுபோன்ற மகத்தான வேலைகளைத் திறமையாக நிர்வகிக்க முடியும்போது, அச்சக்தியால் நம்முடைய வாழ்க்கையையும்கூட நன்றாகவே நிர்வகிக்க முடியும்.

புரிந்துகொள்ளுங்கள்; இந்தப் பிரபஞ்சம் மிகவும் புத்திசாலி. தெய்விகம் மிகவும் புத்திசாலி. !

''ஓ கடவுளே, எனக்கு இதைக்கொடுங்கள், ஓ கடவுளே, எனக்கு அதைக் கொடுங்கள்,'' என்று கடவுளிடம் கேட்கும் மக்களைப் பார்த்திருக்கிறேன்.

முதலாவதாக, அவர்கள் கேட்பார்கள். அடுத்து அவர்கள், 'எனக்கு நீங்கள் இதைக் கொடுத்தால், நான் உங்களுக்கு அதைத் தருகிறேன்' என்று பேரம் பேசுவார்கள் நம் பாரதத்தில் அப்படி பேரம் பேசுவதற்கான பெரியகடவுள் பாலாஜிதான்.

எதற்கெடுத்தாலும், அவரோடு பேரம் பேச ஆரம்பித்துவிடுவோம்.

மூன்றாவதாக, அவர்கள் நிந்திப்பார்கள். 'நான் கோயிலுக்குப் பத்து தடவைக்கும் மேலாகப் போயிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் நடந்தே மலை ஏறியிருக்கிறேன். ஆனால், என் வாழ்வில் எதுவுமே நான் நினைத்தபடி நிகழவில்லை !

நீங்கள் 'எனது' என்பதை சரணாகதி செய்யும்பொழுது. அங்கு முழுமையான களாவுநிலை இருக்கும்.

நீங்கள் முதலில் கேட்கிறீர்கள், பிறகு, பேரம் பேசுகிறீர்கள். அடுத்து அவரை குறைசொல்லவே ஆரம்பித்துவிடுகிறீர்கள். ஆக இந்த மூன்றுக்கும், பக்திக்கும் சம்பந்தமேயில்லை.

பலரும் என்னிடம், ''ஸ்வாமிஜி, நான் கேட்பதை கடவுள் ஏன் உடனடியாக இப்போதே கொடுக்கக்கூடாது ?' என்று கேட்பார்கள்.

நான் ஒன்று உங்களைக் கேட்கிறேன். 'நீங்கள் கடவுளிடம் ஏன் பிரார்க்கிக்கிறீர்கள் ? '

நீங்கள் கேட்பதைக் கொடுப்பதற்கான சக்தி அந்தக் கடவுளுக்கு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால் நீங்கள் பிரார்த்திக்கிறீர்கள். ஆனாலும், நீங்கள் கேட்பதைக் கொடுக்கும் சக்தி கடவுளுக்கு இருக்கிறது என்று நம்புகின்ற நீங்கள், அதை உங்களுக்கு எப்போது கொடுக்க வேண்டுமென்ற புத்திசாலித்தனமும் அவருக்கு இருக்கிறது என்பதை நம்பவில்லை என்பதையே இது குறிக்கிறது

நீங்கள் சரணடையும்பொழுதுதான், அவருக்கு சக்தி மட்டுமல்ல, புத்திசாலித்தனமும் இருக்கிறது என்பதை நீங்கள் நம்புவீர்கள். ஒவ்வொரு கணமும், உங்களுக்கு ஏதோவொன்று கற்பிக்கப்படுகிறது.

அர்ஜுனனுடைய தாயார் குந்தி தேவி, கிருஷ்ணரிடம் மிகுந்த பக்திகொண்டிருந்தார். அவருடைய பிரார்த்தனை இதுவாக இருந்தது: ''ஓ கடவுளே எல்லாப் பக்கங்களிலிலிருந்தும் எனக்குத் துக்கங்கள் வரட்டும்; நீங்கள்தான் அந்தத் துக்கங்களின் மூலம் புத்தி புகட்டுகிறீர்கள்

நீங்கள் 'நான்', 'எனது' என்பதை சரணாகதி செய்யும்பொழுது. ஒரு மிக அழகான 'நிகழ்காலம்', உயிரோட்டம் (IS ness) உங்கள் வாழ்க்கையில் நிகழும்.

என்கிற புரிதலையும், அனுபவங்களையும் அவை தரட்டும். ''

ஒவ்வொரு துன்பமுமே, உங்களுக்கு ஆழமான புரிதலையும் வாழ்க்கையின் பரிமாணத்தைத் திறந்துவைக்க வரும் ஒரு ஆசிரியரே. அதற்காகத்தான் அவை வருகின்றன.

ஆனால், நாம்தான் எதையும் திறந்த மனத்தோடும், வரவேற்கும் உணர்வோடும் ஏற்பதில்லை. நீங்கள் சரணடையும்போது, நீங்கள் அனைத்தையும் ஒரு வரவேற்புணர்வோடு ஏற்றுக்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துன்பங்களை, வலிகளை, வேதனைகளை வரவேற்கும் மனநிலையோடு ஏற்றுக் கொண்டீர்களானால், அவை உங்களுக்கு ஆசிரியர்களாகிவிடும். அவை உங்களுடைய குருமார்களாகிவிடும்.

கடோ உபரிஷத்தில், யமதர்மா ஒரு குருவாக குறிப்பிடப்படுகிறார். மிகப் பெரிய துன்பம் மரணமே. நீங்கள் மரணத்தை வரவேற்றால், அது உங்களுக்கு

நீங்கள் உங்கள் துன்பங்களை வரவேற்கும் மனநிலையோடு ஏற்றுக் கொண்டீர்களானால், அவை உங்களுடைய குருமார்களாகிவிடும்.

சிறந்ததொரு குருவாகிவிடும். சீரணாகதி மனநிலையிலிருந்து கொண்டு ஒன்றை வரவேற்றால், உங்கள் வாழ்க்கையில் நிகழும் எதுவானாலும், அது உங்கள் வாழ்க்கையின் தன்மையையே மாற்றிவிடும். நீங்கள் எதையெல்லாம் எதிர்க்கிறீர்களோ, அதுவெல்லாம் ஒரு சாத்தானாக உணரப்படும். எதையெல்லாம் நீங்கள் வரவேற்கிறீர்களோ, அதுவெல்லாம் ஒரு தெய்விகமாக உணரப்படும்.

சாத்தானா அல்லது தெய்விகமா என முடிவுசெய்வது நீங்களே. அது, நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே முடிவுசெய்யப்படுவது.

அதனால் நீங்கள் தளர்வான மனநிலையில் இருக்கும்போதெல்லாம், உங்கள் வாழ்க்கையை மிதீய எனப்படும் மாயையிலிருந்து நிதீய எனப்படும் பேரானந்தமாக மாற்றிக்கொள்கிறீர்கள். உங்களுடைய துயரங்களையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளமாக மாற்றிக்கொள்கிறீர்கள். மன அழுத்தத்திலிருந்து புத்துணர்ச்சிக்கும், கவலைகளிலிருந்து அதிசயங்களுக்கும் நகர்ந்துவிடுகிறீர்கள்.

அதனால் நீங்கள் விழிப்புணர்வுடன் முடிவெடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருமுறை அவ்வாறு முடிவெடுத்த பின்பு எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. அப்படி முடிவுசெய்த பின்பும்கூட, உங்களுக்குள், நீங்கள் சரணடைந்து விட்டீர்களா இல்லையா என்ற சந்தேகம் இருக்கவே செய்கிறது.

உங்களுக்கு நான் ஒன்றச் சொல்கிறேன். முதலில், சீரணாகதி செய்வது என்று முடிவெடுங்கள். நீங்கள் எந்தப் பெயரையோ, எந்த வடிவத்தையோகூட உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ள அவசியமில்லை. என்னுடைய பெயரையும், வடிவத்தையும்கூட வைத்துக் கொள்ள வேண்டாம்.

அடுத்த விஷயம், 'ஓ, நான் இந்தக் கடவுளிடம் சரணடைந்து விட்டேனே, அதனால் அந்தக் கடவுள் கோபித்துக்கொள்வாரோ ? என்ன நடக்குமோ? என்று கவலைகொள்ள வேண்டாம். இந்த உலகை ஆளும் பராசக்தியின் காலடியில் அனைத்தையும் சீரணாகதி செய்துவிடுங்கள்.

அப்போது, எல்லோரையும் கடவுள், தெய்விகம், பிரபஞ்ச சக்தி என்ற தலைப்புக்குள் கொண்டுவந்து விடுவீர்கள். இது, உங்கள் வாழ்க்கையை நடத்தட்டும் என்று முடிவுசெய்யுங்கள்.

அதற்குப் பின் இயல்பாகவே உங்களுக்குள், செய்துவிட்டீர்களா, இல்லையா என்ற சந்தேகம் வரும். அப்போது இப்படிச் சொல்லிக்கொள்ளுங்கள், சந்தேகமும்கூட இவ்வுலகை நடத்தும் அதே தெய்விகத்தின் பரிசே. சீரணாகதி செய்யும் புத்திசாலித்தனம், அந்த

சந்தேகிக்கும் குணம் ஆகிய இந்த இரண்டுமே அந்தக் கடவுளின் பரிசுதான். ஆகவே அந்தச் சந்தேகத்தைக்கூட அந்தக் கடவுளிடமே சமாப்பிக்கிறேன். அவரே என்னைப் பார்த்துக்கொள்ளட்டும்.''

பிறகு, சும்மா இருந்து- பாருங்கள். 'முதலில் நான் மாறிக்கொள்கின்றேன். பிறகு சரணடைகின்றேன்' என்றெல்லாம் நினைக்காதீர்கள். உங்களால் அப்படிச் செய்ய முடியாது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே விழிப்புடனும், இப்பொழுது 'எனது' என்று உங்கள் கைகளில் எதையெல்லாம் வைத்திருக்கிறீர்களோ, அனைத்தையும் சரணாகதி செய்துவிடுங்கள்.

உங்களுடைய ஆன்மாவை ஒருவித புது உணர்வு, ஒரு புது வாழ்வு, ஒரு புது சக்தி, ஒரு புது பேரானந்தம் வெள்ளமாகப் பாய்ந்து நிரப்பும்.

நீங்கள் தெய்வத்தின் காலடியில் சரணடைவீர்களாக! நீங்கள் அந்த தெய்விக சக்தியினை பிரவேசிப்பீர்களாக! நீங்கள் நித்யானந்தத்தில் நிலைத்து, நித்யானந்தமாகிவிட ஆசீர்வதிக்கின்றேன்! நன்றி.

இவ்வாறு கிருஷ்ணருடைய போதனை, இறுதி உபதேசம் முடிகிறது. இங்குதான் நம்முடைய ஜீவன்முக்த வாழ்வு ஆரம்பமாகிறது. இந்த லத்யங்களையெல்லாம் மொத்தப் பிரபஞ்சத்தின் மீதும் ஆசீர்வாதமாகப் பொழிந்த கிருஷ்ண பரமாத்வாவிற்கு, முதலில் நம்முடைய நன்றியைச் சமர்ப்போம். பிறகு, இந்த ஸ்தீயங்களையெல்லாம் பரம்பரை பரம்பரையாகக் காத்துவந்த நம் முன்னோர்களுக்கு, நம் சிறப்புவாய்ந்த ஞானகுருமார்களுக்கு நம்முடைய நன்றியைச் சமாப்போம். அவர்கள் அவ்வாறு செய்ததனால்தான் இன்று நாம் அவற்றை அனுபவித்து ஆனந்தப்பட முடிகிறது. கண்களை மூடி, சில நிமிடங்களுக்குமௌனமாக அமைதியாக அமருங்கள்.

ஒம் தத்ஸதிதி பாரிமலறாபார்தே சிதஸாவரஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம் வையாஸிக்யாம் மீஷ்மபாவணி முருமத்தகவத்திதாஸ் இருஷ்ஷ்ஸ பாலர்மலித்யாயாம் போகசா'ஸ்த்ரே முருக்கு நேணார்ஜு -ருஸம்வாக்த மோக்ஷ்ஸ்ர் மாஸல் போகோ நாம அஷ்டாத 6 கா ² 5 தீயாய: 11

ஒம் தத் ஸ்த். இது, இது, வியாஸர் இயற்றிய ஒரு லக்ஷம் ஸ்லோகங்களையுடைய ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப்புகட்டுவதும் யோகவிஞ்ஞானமுமாகிய பெயருடைய பதினெட்டாவது அத்தியாயம்.

ஸ்லோகங்கள்

அதாஷ்டாதசோ's த்யாய: பதினெட்டாவது அத்தியாயம்

மோக்ஷஸந்ந்யாஸ்யோக: மோட்சஸ்ந்நியாஸ்யோகம்

அர்ஜுந உவாச ஸ்ந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்/ த்யாகஸ்ய ச ஹ்ரு'ஷீகேச' ப்ரு'தக் கேசி'நிஷூதந // 18.1

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; ஸந்ந்யாஸஸ்ய- ஸ்ந்யாஸம் பற்றிய; மஹாபர்ஹோ - வலிமைமிகு கைகளை உடையவரே; தத்த்வம் -தத்துவத்தை; இச்சாமி - விரும்புகின்றேன்; வேதிதும் - அறிந்துகொள்ள ; த்யாகஸ்ய ச - தியாகம் பற்றிய; ஹ்ரு'ஷீகேச' - அந்தாயாமியே; ப்ரு'தக் - தனித்தனியாக; கேசி'நிஷூதந - கேசியை வதைத்தவனே

அர்ஜுணன் சொன்னது

18.1 வலிமைமிகு தோள்களை உடையவரே ! அந்தர்யாமியே ! கேசியை வதைத்தவரே ! ஸ்ந்யாஸம், தியாகம் இவற்றின் சாரம்சத்தை அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.

பரீபகவாநுவாச

காம்யாநாம் கா்மணாம் ந்யாஸம் ஸ்ந்ந்யாஸம் கவயோ விது : | ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா: //.18.2

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; காம்யாநாம் - விரும்பிய பொருளைப் பெறுவதற்காகச் செய்யப்படும்; கா்மணாம் - காம்ய கர்மங்களை; ந்யாஸம் - துறத்தலை; ஸந்ந்யாஸம்- துறவு என்று; கவய: - சில பண்டிதர்கள்; விது: - அறிகின்றார்கள்; ஸா்வகாமபலத்யாகம் -எல்லாக் கா்ம பயனையும் துறந்தலையே; ப்ராஹு: - சொல்கின்றார்கள்; த்யாகம்

ழ்

18.2 தன்னலமுள்ள செயல்களையும் விட்டுவிடுவது 'துறவு' என்றும், செயல்களினால் விளையும் பலன்களின் மீது வைக்கப்படும் பற்றுகளிலிருந்து விடுதலை அடைவது தியாகம் என்றும் அறிஞர்கள் பகர்கிண்றனர்.

த்யாஜ்யம் தேர்ஷவதித்யேகே கா்ம ப்ராஹுர்மநீஷிண: / யஜ்ஞுதரநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே //.18.3

த்யாஜ்யம் இதி - துறக்கப்பட வேண்டியவை என்று; தேர்ஷவத் -குற்றமுடையவை ஆகவே; ஏகே - சில; கா்ம - கா்மங்கள் அனைத்தும்; ப்ராஹு – சொல்கின்றார்கள் ; மநீஷிண : - அறிஞர்கள் ; யஜ்ஞ தரந தப:கர்ம - வேள்வி, தானம், தவம் என்கிற கா்மங்கள்; ந த்யாஜயம் - துறக்கக் தகுந்தன அல்ல; இதி - என்று; ச - மேலும்; அபரே - இன்னும் சிலா

  • 18.3 பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் எல்லாச் செயல்களுமே குற்றமுடையனவாதலால், அவை துறத்தலுக்குரியனவென்று சில கற்றறிந்தோர் பகர்கின்றனர். சில ஞாணிகள், தொண்டு, தர்மம், ஒழுக்கம் எனப்படும் செயல்களை விட்டுவிடக் கூடாது என்கின்றனர்.

நிச்'சயம் ச்'ரு'ணு' மே தத்ர த்யாகே பரதஸத்தம / த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித : // 18.4

நிச் சயம் -கொள்கையை; ச்ரு'ணு - கேள்; மே - என்னுடைய; தத்ர -துறவு, தியாகம் இவை இரண்டிலும் முதலில்; த்யாகே - தியாகத்தைப் பற்றி நீ; பரதஸத்தம - அர்ஜுனா; த்யாக: - தியாகம்; ஹி - ஏனெனில்; புருஷவ்யாக்ர - மனிதா்களில் சிறந்தவனே; த்ரிவித: - மூன்று விதமாக; ஸம்ப்ரகீர்தித: - சொல்லப்பட்டுள்ளது

  • 18.4 பரதகுலத்தோருள் சிறந்தவனே அர்ஜுனா, ஸ்ர்யாஸம், தியாகம் இவை இரண்டனுள் முதலில், தியாகத்தைப் பற்றிய என்னுடைய கொள்கையைக் கேள். தியாகம் மூன்று விதமாகக் கூறப்பட்டுள்ளது.

யஜ்ஞதுரநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் / யஜ்ஞோ தரநம் தபச்'சைவ பாவநாநி மநீஷிணாம் // 18.5

யஜ்ஞுதரந்தப:கர்ம - வேள்வி, தானம், தவம் என்று கா்மங்கள்; ந த்யாஜ்யம் - துறக்கத்தக்கவையல்ல; கார்யம் ஏவ - கட்டாயம் செய்யப்பட வேண்டியவையே; தத் - அவை; யஜ்ஞ - வேள்வியும்; தரைம் - தானம்; தப: ச ஏவ - தவமும்; பாவநாநி - பரிசுத்தப்படுத்தக் கூடியவை; மநீஷிணாம் - அறிவுடைய மனிதர்களை

  • 18.5 தொண்டு, தர்மம், ஒழுக்கம் இவற்றை விட்டுவிடக் கூடாது. அவற்றை செய்தே ஆக வேண்டும்; முனிவர்களும் கூட யாகம், தர்மம் மற்றும் தவத்தால் புனிதமடைகிறார்கள்.

ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச / கர்தவ்யாநீதி மே பார்த நிச்'சிதம் மதமுத்தமம் // 18.6

ஏதாநி - இந்த ; அபி - நிச்சயமாக; து - அவ்வாறே; கா்மாணி -செய்யவேண்டிய கடமைகளும்; ஸங்கம் - பற்றையும்; த்யக்த்வா - துறந்து; பலாநி ச - பயன்களையும்; காதவ்யாநி - கட்டாயமாக செய்யப்பட வேண்டும்; இதி - என்பது; மே - என்னுடைய; பார்த -பார்த்தா; நிச்'சிதம் - தீர்மானமான; மதம் - கருத்து; உத்தமம் - உயர்ந்த

  • 18.6 அர்ஜுனா, எல்லாக் கடமைகளும் பலனை எதிர்பாராது, நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

நியதஸ்ய து ஸ்ந்ந்யாஸ்: கா்மணோ நோபபத்யதே / மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித: // 18.7

நியதஸ்ய - விதிக்கப்பட்ட; து - ஆனால்; ஸந்ந்யாஸ: - செய்யாமல் விடுதல்; கா்மண: - கா்மத்தை; ந உபபத்யதே-பொருந்தாது; மோஹாத்-அறியாமையினால்; தஸ்ய பரித்யாக: - அதைத் தியாகம் செய்தால்; தாமஸ: - தாமஸமானது; பரிகீர்தித:- சொல்லப்படுகின்றது

18.7 ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து

ஒருபோதும் தவறக் கூடாது. தியாகம் என்பதின் உள்ளார்ந்த கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, தனக்குரிய கடமைகளை செய்யத் தவறுவது தாமஸம் எனப்படுகிறது.

து:கமித்யேவ யத்கா்ம காயக்லேச் மயாத்த்யஹேத் / ஸ க்ரு'த்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்/ / 18.8

து:கம் - துன்பம்; இதி ஏவ- என்றே நினைத்து; யத் காம - எது செய்ய வேண்டிய காமமோ; காயக்லேசமயாத் - உடல் நோகுமோ என்ற பயத்தினால்; த்யஜேத் - செய்யாமல் விடுவானேயானால்; ஸ -அவன்; க்ரு'த்வா - செய்து; ராஜஸம் - ராஜஸ; த்யாகம் - தியாகத்தைச் செய்து; ந ஏவ - நிச்சயமாக மாட்டான்; த்யாகபலம்- தியாகத்துக்குரிய பயனை; லபேத் - அடைய

  • தனக்குரிய 18.8 அல்லது பயமாகவோ கருதி, அவற்றைத் துறப்பது என்பது இரஜோ குணத்தின் நிலை. அவன் தியாகத்தின் பலன்களைப் பெறுவதில்லை.

கார்யமித்யேவ யத்கா்ம நியதம் க்ரியதேடர்ஜுந / ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ் த்யாகம் ஸாத்த்விகோ மத: // 18.9

கார்யம் இதி ஏவ - கட்டாயம் செய்யப்படத்தான் வேண்டும் என்றும்; யத் கா்ம - எந்த கா்மம்; நியதம் - சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட; க்ரியதே - செய்யப்படுகின்றதோ; அர்ஜுந - அர்ஜுனா; ஸங்கம் -பற்றையும்; த்யக்த்வா - விழுந்து; பலம் ச - பயனையும்; ஸ: ஏவ -அதுவே; த்யாக: - தியாகம் என்று; ஸாத்த்விக - ஸாத்வீகமான; மத: -மதிக்கப்படுகின்றது

  • 18.9 ஆனால் பலன்கள் மீதான பற்றோ அல்லது எதிர்பார்ப்போ இல்லாது, இது செய்வதற்குரியதெனகருதி, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்துவருவானோயானால், அவனுடைய தியாகம் சாத்வீகமானதென கருதப்படுகிறது, அர்ஜுனா.

ந த்வேஷ்ட்யகுச'லம் கா்ம குச'லே நாநுஷஜ்ஜதே / த்யாக ஸத்த்வஸமாவிஷ்டோ மேதரவீ சிந்நஸம்ச்'ய: //18.10

ந த்வேஷ்டி - வெறுப்பதில்லையோ; அகுச்லம் காம - நன்மைப் பயக்காத கர்மத்தை; குசு'லே - நன்மைப்பயக்கும் கா்மத்தில்; ந அநுஷஜ்ஜதே - பற்றுகொள்வதில்லையோ; த்யாக - தியாகி ஆவான்; ஸ்க்க்வஸமாவிஷ்ட: - சுத்தமான ஸ்த்வகுணம் நிறைந்தவனே; மேதாவீ - அறிஞன்; சிந்நஸம்ச'ய: - சந்தேகம் நீங்கப் பெற்றவன்

  • 18.10 சந்தேகங்களை பிடித்த வேலை என்ற விருப்பும், பிடிக்காத வேலை என்ற வெறுப்பும்கொள்ளான்.

ந ஹி தேஹப்ரு'தா ச'க்யம் த்யக்தும் கா்மாண்யசே'ஷத:/ யஸ்து கர்மபலத்யாக ஸ த்யாகித்யபிதீயதே // 18.11

ந - இல்லை; ஹி - ஏனெனில்; தேஹப்ரு'தா - உடல் பெற்ற மனிதன் யாராலும்; ச'க்யம் - சாத்தியம்; த்யக்தும் - துறந்து விடுவது; கா்மாணி - கர்மங்கள் அனைத்தையும்; அசே'ஷத: - முற்றிலும்; ய: - எவன்; கர்மபலத்யாகீ - கா்மத்தின் பயனைத் துறக்கின்றானோ; ஸ: து -அவனே; த்யாகீ - தியாகம் செய்தவன்; இதி - என்று; அமிதீயதே -சொல்லப்படுகின்றான்

  • 18.11 மனிதன், தன் கடமைகள் எதையும் தவிர்க்க முடியாது. அனால் தன் கடமைகளுக்கான பலன்களைத் துறந்தவன் தியாகி எனப்படுகிறான்.

அநிஷ்டமிஷ்டம் மிச்'ரம் ச த்ரிவிதம் கா்மண: பலம் / பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித் //18.12

அநிஷ்டம் - தீயதும்; இஷ்டம் - நல்லதும்; மிச்'ரம் ச - அவ்விரண்டும் கலந்ததுமான; த்ரிவிதம் - மூன்றுவிதமான; கா்மண: - கா்மத்தினுடைய; பலம் - பயன்; பவதி - கிடைக்கின்றது; அத்யாகிநாம் - கா்மத்தின் பயனைத் துறக்காத மனிதர்களுக்கு ; ப்ரேத்ய - இறந்த பின் ; ந - இல்லை ;

து - ஆனால்; ஸ்ந்ந்யாஸிநாம் - கா்மபயனைத் துறந்து மனிதர்களுக்கு; க்வசிக் - ஏற்படும்

18.12 அப்படி தியாகம் செய்யாத ஒருவரை, விரும்பத்தக்க, விரும்பத் தகாத, மற்றும் இரண்டும் கலந்த - என மூன்று விதமான கர்ம பலன்கள் மரணத்திற்குப் பின்னும் தொடர்கின்றன ஆனால், உண்மையான தியாகிகளை அவை மூன்றுமே பாதிப்பதில்லை.

பஞ்சைகாநி மஹாப்ரவேரா காரணாநி நிபோத மே / ஸாங்க்யே க்ரு'தாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம் // 18.13

அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ரு 'தக்விதம் / விவிதாச்'ச ப்ரு'தக்சேஷ்டா கைவம் சைவாத்ர பஞ்சமம் // 18.14

பஞ்ச - ஐந்து; ஏதாநி - இந்த; மஹாபரஹோ - அகன்ற தோள் படைத்தவனே; காரணாநி - காரணங்கள்; நிபோத - நன்கு அறிந்துகொள்; மே - என்னிடமிருந்தே; ஸாங்க்யே - ஸாங்கிய சாஸ்திரத்தில்; க்ரு'தாந்தே - கா்மங்களின் முடிவிற்கான வழியைக் கூறும்; ப்ரோக்தாநி - சொல்லப்பட்டன; ஸித்தயே - நிறைவேறுதற்பொருட்டு; ஸர்வகர்மணாம் - எல்லாக் கா்மங்களும்

அதிஷ்டாநம் - காமம்செய்கின்ற உடலும்; ததா - அவ்வாறே; கா்தா -செய்கின்றவன்; கரணம் ச - இந்த்ரியங்களும் அதன் உபகரங்களும்; ப்ரு'க்க் விதம் - கனித்தனியான: விவிதா. - பலவிதமான: ச - மேலும்; ப்ரு'தக் - தனித்தனியான; சேஷ்டா - செயல்களும்; தைவம் ச-தெய்வமும்; ஏவ அத்ர - அவ்வாறே காமங்களின் ஸித்தியைப் பெறும் விஷயத்தில்; பஞ்சமம் - ஐந்தாவதாக

  • 18.13,14 அர்ஜுனா, ஸாங்கிய தத்துவப்படி, எல்லாச் செயல்களும் நிறைவுபெறுவதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன என்று என்னிடமிருந்து செயல்களுக்கு அடித்தளமாயுள்ள இந்த ஸ்தூல உடல், செய்பவன் (குணங்கள்), புலன்கள், உயிர் சக்தியினுடைய செயல்கள் மற்றும் தெய்வீக சக்தி.

ச் ரீரவாங்மநோபிர்யத் கா்ம ப்ரார்பதே நர: / ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: // 18.15

ச'ரீர வாங் மநோபி: - மனம், மொழி, மெய்களால்; யத் கா்ம - எந்தச் செயலை; ப்ரார்கத - செய்கின்றானோ; நர: - மனிதன்; ந்யாய்யம் வா - சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடியோ அல்லது; விபரீதம் வா -அதற்கு முரணாகவோ; பஞ்ச - ஐந்தும்; ஏதே - இந்த ; தஸ்ய - அதற்கு; ஹேதவ: - காரணங்கள்

  • 18.15 ஒரு மனிதன் தன் எண்ணம், சொல், செயல்களால் செய்கின்ற சரியான அல்லது தவறான செயல்களுக்கெல்லாம் இந்த ஐந்து காரணிகளே பொறுப்பு.

தத்ரைவம் ஸ்தி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய: / பச்'யத்யக்கு'தபுத்தித்வாந்ந ஸ் பச்'யதி தூர்மதி: // 18.16

தத்ர - இது; ஏவம் ஸ்தி - இங்ஙனம் இருக்க; கா்தாரம் - செய்பவனாக; ஆத்மாநம் - ஆத்மாவையே; கேவலம் - தூயதான; து - ஆனால்; ய: -எந்த மனிதன்; பச்'யதி - காண்கின்றானோ; அக்ரு'தபுத்தித்வாத் - புத்தித் தூய்மை இல்லாமையினால்; ஸ: - அந்த; ந பச் யதி- உண்மையைப் பார்ப்பதில்லை; தூர்மதி: - தூய்மையற்ற புத்தியுடைய அஞ்ஞானி

  • அத்மாவைச் 18.16 அறியாமையிலிருக்கிறார்கள். அவர்கள் உள்ளதை உள்ளபடியே பார்ப்பதில்லை.

யஸ்ய நாஹங்க்கு'தோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே / ஹத்வாபி ஸ இமாந்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே // 18.17

யஸ்ய - எந்த மனினுடைய; ந - இல்லையோ; அஹங்க்ரு'த: -நான் செய்கின்றேன்; பாவ: - எண்ணம்; புத்தி: - புத்தி; யஸ்ய -எவனுடைய; ந லிப்யதே - உலகியல் பொருட்களிலும் செயல்களிலும் ஒட்டுவதில்லையே; ஹத்வா அபி - கொன்றாலும்; ஸ: - அவன்; இமாந் லோகாந் - இவ்வுலகங்கள் அனைத்தையும் ; ந ஹந்தி - கொல்வதில்லை ; ந: நிபத்யதே - பாவனத்தினால் தளைப்படுவதும் இல்லை

18.17 யார் அகங்காரமற்றிருக்கிறானோ, யாருடைய பத்தி பற்றற்று இருக்கிறதோ அப்படிப்பட்டவன் ஒரு கொலையே புரிந்தாலும். அவன் ஒரு கொலையாளி அல்ல. மேலும் அவனுடைய செயல்களால் அவன் பந்தப்படுவதில்லை !

ஜ்ஞாநம் ஜ்ரேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா / கரணம் கா்ம கர்தேதி த்ரிவித: கர்மஸங்க்ரஹ: // 18.18

ஜ்ஞாநம் - அறிவு; ஜ்ஞேயம் - அறியப்படுவது; பரிஜ்ஞாதா -அறிபவன்; த்ரிவிதா - மூன்று விதமான; கா்மசோதநா - கா்மத்தைத் தூண்டுபவன்; கரணம் - கரணம்; கா்ம - செயல்; கர்தா - செயல் புரிபவன்; இதி த்ரிவித: - என்ற மூன்றும்; கர்மஸங்க்ரஹ: - கா்மத்தின் தொகுப்பு

18.18 அறிவு, அறிபவர், அறியப்படும் பொருள் இம் மூன்றும்தான் செயலைத்தூண்டும் காரணிகள். புலன்கள், செயல், செய்பவர் இந்த மூன்றும் செயலின் மூன்று பகுதிகளாகும்.

ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குண பேத்த: | ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ரு'ணு தாந்யபி //

> 18.19

ஜ்ஞாநம் - ஞானமும்; கா்ம ச - செயலும்; கர்தா ச - செய்பவனும்; த்ரிதா ஏவ - மூன்றாகவே; குணபேதத: - குணங்களின் வேற்றுமையினால்; ப்ரோச்யதே - சொல்லப்படுகின்றன; குணஸங்க்யாநே - குணங்களின் படி; யதாவத் - உள்ளபடி; ச்ரு'ணு - கேட்டுக்கொள்; தாநி அபி -அவற்றையும்

18.19 ஸாங்க்ய யோகாவின் குணவிதிகளின்படி, புலன்கள், செயல் மற்றும் செய்பவர், இம்மூன்றிலும் தலா மூன்று வகைகள் உள்ளன. அவற்றையும் இப்போது விளக்குகிறேன், கேள்.

ஸர்வதுதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே / அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம் // 18.20

ஸா்வபூதேஷு - உயிரினங்கள் அனைத்திலும் ; யேந - எந்த ஞானத்தினால் ;

ஏகம் - ஒன்றேயானதும்; பாவம் - பரமாத்மாவின் இருப்பை; அவ்யயம் - அமியாகதுமான; ஈக்ஷதே - பார்க்கின்றானோ; அவிபக்கும் - எங்கும் ஒரே சீராக பிரிவற்றதாக; விபக்தேஷு - தனித்தனியான; தத் - அந்த; ஜ்ஞாநம் - ஞானத்தை; வித்தி - அறிவாயாக; ஸாத்த்விகம் - ஸாத்வீகம் என்று

18.20 எல்லா இருப்புகளுக்குள் இருக்கும் அழிவற்ற ஸத்யத்தை, பிரிவுகளுக்குள் இருக்கும் பிரிவுபடா ஒருமைத்துவத்தைக் காணும் அறிவு ஸத்வ நிலை அறிவு எனப்படுகிறது.

ப்ரு'தக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந் ப்ரு'தக்விதாந் / வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம் // 18.21

ப்ரு'தக்த்வேந - தனித்தனியாக; து - ஆனால்; யத் - எந்த; ஜ்ஞாநம் -ஞானத்தின் மூலமாகமனிதன்; நாநா பரவாந் -விதவிதமானஇருப்புகளை ; ப்ரு'தக் விதாந்- தனித்தனியான; வேத்தி - அறிகின்றானோ; ஸர்வேஷு பூதேஷு - உயிரினங்கள் அனைத்திலும்; தத் - அந்த ஜ்ஞாநம் -ஞானத்தை; வித்தி - அறிந்துகொள்; ராஜஸம் - ராஜஸம் என்று

  • 18.21 ஜீவன்களின் வெவ்வேறு இயல்புகளைக் காண்பதன்மூலம், அவற்றை ஒன்றினின்று ஒன்றை வெவ்வேறாகப் பிரித்துக் காண்கிற அறிவு இரஜஸ் நிலை அறிவு எனப்படுகிறது.

யத்து க்ரு'த்ஸ்நவதேகஸ்மிந் கார்யே ஸக்தமஹைதுகம் / அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸ்முதரண்ரு'தம் // 18.22

யத் - எந்த ஞானம்; து - ஆனால்; க்ரு'த்ஸ்நவத் - அனைத்தும் என்று; ஏகஸ்மிந் கார்யே - ப்ரகிருதி காரியத்தின் விளைவான உடல் ஒன்றையே; ஸக்தம் - பற்றுக் கொண்டுள்ளதோ; அஹைதுகம்-யுக்திக்குப்பொருந்தாது; அதத்த்வார்தவத் - உண்மைப் பொருளை உணர்த்தாது; அல்பம் ச - அற்பமானது; தத் - அது; தாமஸம் - தாமஸம் என்று; உதாஹ்ரு'தம் - சொல்லப்படுகின்றது

  • 18.22 ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு, அது மட்டுமே உண்மையென்று சொல்லிக்கொண்டிருக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அடித்தளமற்ற, அற்பமான அறிவு தமஸ் நிலை அறிவு

எனப்படுகிறது.

நியதம் ஸங்கரஹிகமராகத்வேஷ்க: க்ரு'தம் / அபலப்ரேப்ஸுரூர் கர்ம யத்தத்ஸாத்த்விதமுச்யதே // 18.23

நியதம் - சாஸ்திரங்களின் விதிக்கப்பட்டுள்ளதேர; ஸங்கரஹிதம் - நான் செய்கின்றேன் என்ற அபிமானம் இன்றி; அராகத்வேஷத: - விருப்பு வெறுப்பின்றி; க்ரு'கம் - செய்யப்படுகின்றதோ; அபலப்ரேப்ஸூரா - பயனைக் கருதாத மனிதனால்; காம - செயல்; யத் - எந்த; தத் -அச்செயல்; ஸாக்த்விகம் - ஸாத்வீகம்; உச்யதே - எனப்படுகின்றது.

18.23 ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கர்மங்களைக் கா்மபலனில் பற்றுவைக்காமலும், எந்தவித விருப்பு வெறுப்பின்றியும் செய்யும்போது, அது ஸாத்விக கர்மமாகிறது.

யத்து காமேப்ஸுநா கா்ம ஸாஹங்காரேண வா புற: / க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸ்முதனுற்கு தம் // 18.24

யத் - எந்த; து - ஆனால்; காமேப்ஸுநா - போகங்களை விரும்புகிறவனாலோ; அணங்காரமுடையவனாலோ; வா - அல்லது; புந: - அப்படியே; க்ரியதே - செய்யப்படுகின்றதோ; மஹுலாயாஸம் - கடுமையான உழைப்பினால் செய்யக் கூடியதோ; தத் - அந்த செயல்; ராஜஸம் -ராஜஸம்; உதான்ரு'தம் - எனப்படுகின்றது

18.24அஹங்காரத்துடனும், சுயநல நோக்கோடும், பெருமுயற்சியுடனும் செய்யப்படும் கர்மம் இராஜஸ கர்மம் எனப்படுகிறது.

அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம்/ மோஹாதரரப்யதே கா்ம யத்தத்தாமஸமுச்யதே // 18.25

அநு பந்தம் - விளைவையும்; க்ஷயம்- இழுப்பையும்; ஹிம்ஸாம் - துன்பத்தையும்; அநவேக்ஷ்ய - ஆராயாமல்; பௌருஷம் ச -திறமையையும்; மோஹாத் - வெறும் அஞ்ஞானத்தினால்; ஆரப்யதே - தொடங்கப்படுகின்றதோ; கா்ம - செயல்; யத் - எந்த; தத் - அந்த கர்மம்; தாமஸம்; தாமஸம்; உச்யதே - என்று கூறப்படுகின்றது

```markdown 18.25 செயலின் விளைவையும், பிறருக்கு ஏற்படும் துன்பத்தையும் நஷ்டத்தையும், தன் செயல்திறனையும் எண்ணிப்பாராது, மயக்கத்தால் தாமஸத்திலிருந்து விளைந்த கர்மம் எனப்படுகிறது.

முக்தஸங் கோட்நஹம்வாதீ த்ரு'த்யுத்ஸாஹஸ்மந்வித: / ஸிக்கு்யஸித்த்யோர்நிர்விகார்: கர்தா ஸாத்த்விக உச்யதே // 18.26

முக்தஸங்க: அஹங்காரச் சொல்லைச் சொல்லாதவனாகவும்; த்ருதி உத்ஸாஹ ஸமந்வித: அஸித்த்யோ: - செயல் கைகூடுதல், கைகூடான இவற்றில்; நிர்விகார: - மகிழ்ச்சி, துயாம் முதலிய மாறுபாடற்றவனாகவும் இருக்கின்ற : கர்தா - அந்த கர்த்தா; ஸாத்த்விக: - ஸாத்வீகம்; உச்யதே - என்று சொல்லப்படுகின்றான்

18.26 பற்றற்றவவனாகவும், அஹங்காரமற்றவவனாகவும், உறுதியும் ஊக்கமும் நிலைமாறாதவனாகவும் இருக்கின்ற எனப்படுகிறான்.

ராக கர்மபலப்ரேப்ஸுர்லும்தோ ஹிம்ஸாத்மகோSசு'சி: / ஹர்ஷசோ'காந்வித: கா்தா ராஜஸ: பரிகீர்தித: // 18.27

ராகீ - பற்றுடன் கூடியவன்; காம்பலப்ரேஸு: - செயலின் பயனை விரும்புபவன்; பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டவன்; அசு'சி: - தூய்மையற்ற நடத்தையுள்ளவன்; துயரத்தாலும் பாதிக்கப்படுவான்; கா்தா - கா்த்தா; ராஜஸ: - ராஜஸன்; பரிகீர்தித: - என்று அழைக்கப்படுகின்றான்

18.27 பற்றுடன் கூடியவனும், செயலின் பயனை விரும்புபவனும்,

பேராசையுள்ளவனும், பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டவனும், மகிழ்ச்சியாலும் துயரத்தாலும் பாதிக்கப்படுபவனுமாகிய இத்தகைய கர்த்தா ராஜஸன் என்று அழைக்கப்படுகின்றான்.

அயுக்கு: ப்ராக்கு'த: ஸ்தப்த: ச'டோடாட்டைஷ்க்ரு'திகோடலஸ்: / விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே // 18.28

அயுக்த: - கட்டுப்படுத்தப்படாத மனமும், புலன்களும் உடையவனும் ; ப்ராக்ரு'த: கர்வமுடையவனும் ; - பிறருடைய வாழ்க்கையைக் கெடுப்பவனும்; விஷாதீ - கவலை கொண்டவனும்; அலஸ: - சோம்பேறியும்; தீர்கஸூத்ரீ ச - காலம் கடத்துபவனுமான; காதா - கர்த்தா; தாமஸ: - தாமஸன்; உச்யதே -சொல்லப்படுகின்றான்

18.28 ஒழுக்கமற்றவனும், அறிவிலியும், முரட்டுத்தனமுடையோனும், கொடூரனும், வஞ்சகனும், பிறருடைய வாழ்க்கையைக் கெடுப்பவனும், கவலைகொண்டவனும், சோம்பேறியும், காலம் சொல்லப்படுகின்றான்.

புத்தேர் பேகும் த்ரு'தேச்'சைவ குணதஸ்த்ரிவிதம் ச்'ரு'ணு/ ப்ரோச்யமாநமசே'ஷேண ப்ரு'தக்த்வேந தநஞ்ஜய // 18.29

புத்தே: - புத்திக்கும்; பேகும் - பாகுபாட்டை; த்ருதே: ச ஏவ - மன உறுதிக்கும்; குணத: - குணங்களுக்கேற்ப; த்ரிவிதம் - மூன்றுவிதமான; ச்'ரு'ணு - கேள்; ப்ரோச்யமாநம் - சொல்லப்போவதை; அசே'ஷெண - முழுமையாகவும்; ப்ரு'தக்த்வேந- பகுதி பகுதியாகவும்; தநஞ்ஜய -அர்ஜுனா

18.29 தநஞ்ஜயா, இப்பொழுது முக்குணங்களுக்கேற்பவே புத்திக்கும் மன உறுதிக்கும் ஏற்படும் மூன்றுவிதமான பாகுபாட்டை முழுமையாகவும் தனித்தனியாகவும் நான் சொல்லப்போவதைக் கேள்.

ப்ரவ்ரு'த்திம் ச நிவ்ரு'த்திம் ச கார்யாகார்யே பயாபயே/ பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ // 18.30

ப்ரவரு'த்திம் ச- ப்ரவிருத்தி மார்க்கத்தையும்; நிவ்ரு'த்திம் ச - நிவிருத்தி மார்க்கத்தையும்; கார்யாகார்யே - செய்யத்தகுந்தவற்றையும், செய்யத் தகாதனவற்றையும்; மய அமயே ச - பயத்தையும் , பயமின்மையும்; பந்தம் - தளையையும்; மோக்ஷம் ச- மோஷத்தையும்; யா - எந்த; வேத்தி - உண்மையாக அறிகின்றதோ; புத்தி; - புத்தி; ஸா - அந்த; பார்த - அர்ஜுனா; ஸாத்த்விகீ - ஸாத்வீகமானது

18.30 பார்த்தா, எந்த புத்தி, கா்மத்தின் பாதையையும் துறவின் பாதையையும், செய்யத்தகுந்ததையும் செய்யத் தகாததையும், பயத்தையும் பயமின்மையையும், பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்மையாக அறிகின்றதோ அந்த புத்தி ஸாத்விகமானது.

யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச/ அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ // 18.31

யயா - எந்த புத்தியினால்; தா்மம் - தர்மத்தையும்; அதர்மம் ச - அதாமத்தையும்; கார்யம் ச அகார்யம் ஏவ - செய்யத்தகுந்த கார்யத்தையும், செய்யத்தகாத கார்த்தையும் கூட; அயதாவத் -உள்ளபடியின்றி; ப்ராஜநாதி - அறிகின்றானோ; புத்தி; லா -அந்த; பார்த - பார்த்தா; ராஜஸீ - ராஜஸம் எனப்படும்

18.31 பார்த்தா, தர்மம் மற்றும் அதர்மம், செய்யத் தகுந்தவை மற்றும் செய்யத்தகாதவை, இவற்றுக்கிடையே உள்ள வேற்றுமையை வேறுபடுத்திக் காணமுடியாத புத்தி ராஜஸம் எனப்படும்.

அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ரு தா / ஸார்வார்தாந் விபரீதாம்ச்ச புத்தி: ஸா பார்த தாமஸீ // 18.32

அதா்மம் - அதர்மத்தை; தா்மம் இதி ச - தா்மம் என்றும்; யா - எந்த; மந்யதே - நினைக்கிறதோ; தமஸா - தமோ குணத்தினால்; ஆவ்ரு,'தா - சூழப்பட்டு; ஸா்வார்தாந் - எல்லாப் பொருட்களையும்; விபரீதாந் -அவற்றின் உண்மைத் தன்மை அறியாமல் மாறுபட்டவையாக; புத்தி; ஸா - அந்த; பார்த - அர்ஜுனா; தாமஸீ - தாமஸமானது

18.32 பார்த்தா, அஜ்ஞாந இருளால் கவ்வப்பெற்று, அதர்மத்தை தர்மமாகவும், எல்லாப் பொருட்களையும் அவற்றின் உண்மைத் தன்மைக்கு மாறாகவும் நினைக்கிறதோ அந்த புத்தி தாமஸமானது.

த்ரு'த்யா யயா தரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா: / யோகேநாவ்யபசோ'ண்யா த்ரு'தி: ஸா பார்த ஸாத்த்விகீ // 18.33

த்ரு'த்யா - உறுதியினால்; யயா - எந்த; தரரயதே - நிலை நிறுத்துகிறானோ; மந: ப்ராண இந்த்ரியக்ரியா; - மனம், ப்ராணன், புலன்கள் இவற்றினுடைய செயல்களை; யோகேந - தியான யோகத்தின் மூலம்; அவ்யபிசா'ண்யா – பகவானைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் சிந்திக்காத; ஸா த்ரு'தி: - அந்த உறுதி; பார்த - அர்ஜுனா; ஸாத்த்விகீ - ஸாத்வீகமானது

18.33 பார்த்தா, தெய்விகத்துடன் இணைவதற்கென, தன் மனம், பிராணன், புலன்கள் இவற்றினுடைய செயல்களை உறுதியான தொடர் முயற்சியினால் கட்டுப்படுத்துகிறானோ, அவனுடைய அந்த உறுதி ஸாத்விகமானது.

யயா து தர்மகாமார்தாந்த்ரு'த்யா தாரயதேடர்ஜுந / ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ரு'தி: ஸா பார்த ராஜஸீ // 18.34

யயா - எந்த; து - ஆனால்; தர்மகா மார்தாந் - அறம், இன்பம், பொருள்களை; த்ரு'த்யா - உறுதியினால்; தரயதே - அடைவதிலேயே உறுதியாக இருக்கின்றானோ; அர்ஜுந அர்ஜுனா; ப்ரஸங்கேந - மிகுந்த பற்றோடு; பலாகாங்க்ஷீ - பயனில் கருத்துடைய மனிதன்; ஸா த்ரு'தி: -அந்த உறுதி; பார்த - ப்ருதையின் மைந்தனே; ராஜஸீ - ராஜஸமானது.

18.34 ஆனால், ப்ருதையின் மைந்தா, பயனில் விருப்பமுடைய மனிதன் எந்த உறுதியினால் மிகுந்த பற்றோடு அறம், பொருள், இன்பம் அடைவதிலேயே உறுதியாக இருக்கிறானோ அந்த உறுதி ராஜஸமானது.

யயா ஸ்வப்நம் மயம் சோ'கம் விஷாதம் மதமேவ ச/ ந விமுஞ்சதி தூர்மேதா த்ரு'தி: ஸா பார்த தாமஸீ // 18.35

யயா - எந்த; ஸ்வப்நம் - தூக்கத்தையும்; பயம் - அச்சம்; சோ'கம் - கவலை; விஷாதம் - துயரம்; மதம் ஏவ - செருக்கையும் கூட; ச - மேலும்; ந விமுஞ்சதி - விடாமல் உறுதியுடன் பற்றுகின்றானோ; துர்மேதர - தீய புத்தி கொண்டவன்; ஸா த்ரு'தி: - அந்த உறுதி; பார்த - பார்த்தா; தாமஸீ - தாமஸ்மானது.

18.35 பார்த்தா, தாமஸ உறுதியில் இருக்கும் ஒருவனால் கனவையும், அச்சக்கையும், மனக்கலக்கக்கையும், மயக்கத்தையும் கடக்க முடிவதில்லை.

ஸுகம் த்விதர்நீம் த்ரிவிதம் ச் ரு'ணு மே பரதர்ஷப / அம்பாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி // 18.36

யக்கதக்ரே விஷமிவ பரிணாமேSம்ரு'தோபமம் / தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபூத்திப்ரஸாதஜம் //18.37

ஸுகம் து - சுகம் பற்றியும்; இதரும் - இப்பொழுது; த்ரிவிதம்-மூன்றுவிதமான; ச்'ரு'ணு - கேள்; மே - என்னிடம்; பரதர்ஷ்ப- பரத குலச் செம்மலே; அம்யாஸாத் - பஜனை , தியானம், சேவை முதலிய பயிற்சியினால்; ரமதே - இன்புறுகின்றானோ; யத்ர - எந்த சுகத்தில்; து:காந்தம் ச - துன்பத்தின் முடிவையும்; நிகச்சதி - அடைகின்றானே; யத் - எந்தவிதமான சுகம்; தத் - அது; அக்ரே - சாதனையின் தொட க்கத்தில்; விஷம் இவ - விஷத்தைப் போலத் தோன்றினாலும்; பரிணாமே - விளைவில்; அம்ரு'தோபமம் - அமிர்தத்துக்கு ஒப்பாக ஆகும்; தத் ஸுகம் - அந்த சுகம்; ஸாத்த்விகம் - ஸாத்வீகம்; ப்ரோக்தம் - எனப்படுகின்றது; தத் - அது; ஆத்மபுத்தி ப்ரஸாதஜம் - பகவான் பற்றிய தெளிவான அறிவினால் ஏற்படக்கூடியது

18.36, 37 ஒ பரதக்குல காளையே, மூன்று விதமான இன்பங்களைப்பற்றி இப்போது என்னிடம் கேட்பாயாக, ஆன்மீகப் பயிற்சிகளிலிருந்து பெறப்படும் இன்பமானது, எல்லாத் துன்பங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து முடிவுக்குக் கொண்டுவருகிறது. முதலில் விஷமாகத் தோன்றினாலும், முடிவில் அமுதம்போன்றதாகும்

இவ்வின்பம் ஸாத்விகமாம். அன்ம அறிவின் கருணையினால் இது தோன்றுகிறது.

விஷயேந்த்ரியஸம்யோகாத்யத்ததக்ரேடம்ரு'கோபமம் / பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ரு'தம் // 18.38

விஷய இந்த்ரிய ஸம்யோகாத் - புலன்களும் அவற்றால் நுகரப்படும் பொருட்களும் சோ்வதால் ; யத் - அந்த ; தத் - அந்த ; அக்ரே - தொடக்கத்தில் ; அம்ரு'த உபமம் - அமுதத்துக்கு ஒப்பாகத் தோன்றினாலும்; பரிணாமே - முதலில்; விஷம் இவ - நஞ்சுக்கு ஒப்பாகும்; தத் ஸுகம் - எந்த சுகம்; ராஜஸம் - ராஜஸம் என்றும்; ஸம்ரு'தம் - சொல்லப்படுகின்றது

18.38 முதலில் அமுதமாகவும், முடிவில் விஷமாக மாறும் புலனின்பங்கள் இராஜஸ தன்மையில் இருக்கின்றன.

யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹாநமாத்மந: / நித்ராலஸ்யப்ரமாதேரத்தம் தத்தாமஸ்முதரஹ்ரு'தம் // 18.39

யத் - எந்த; அக்ரே ச - அனுபவிக்கும் காலத்திலும்; அநுபந்தே ச -பின் விளைவிலும்; ஸுகம் - ஸுகம்; மோஹநம் - மயக்கமடையச் செய்கின்றதோ; ஆத்மந: - ஆத்மாவை; நித்ரா ஆலஸ்ய ப்ரமாத உத்தம் - உறக்கம், சோம்பல், கவனமின்மை இவற்றிலிருந்து தோன்றும் ; தத் – அந்த சுகம்; தாமஸம் - தாமஸம் என்று; உதரஹ்ரு'தம் - சொல்லப்படுகின்றது

18.39 முதலிலிருந்து இறுதி வரை மருட்சியைத் தருவதும், தூக்கத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், மாயையிலிருந்தும் தோன்றுவதான இன்பங்கள் அறியாமையின் இயல்புகள் என்று சொல்லப்படுகின்றன.

ந ததஸ்தி ப்ரு'திவ்யாம் வா திவி தேவேஷு வா புந: / ஸ்த்த்வம் ப்ரக்ரு திஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை:

ந - இல்லை; தத் - அந்த; அஸ்தி - ; ப்ரு'திவ்யாம் வா - நில உலகிலோ;

திவி - வாணிலோ; தேவேஷு வா - தேவதைகளிலோ; புந: - மீண்டும்; ஸத்த்வம் - இருப்பு இருக்குமோ; ப்ரக்ரு'திஜை: - இயற்கையில் உண்டான; முக்தம் - விடுபட்டதாக; யத் - எந்த; ஏபி: - இந்த; ஸ்யாத் - பிராணி இருக்குமோ; த்ரிபி: - மூன்று; குணை: - குணங்களிலிருந்தும்

18.40 பூவுலகிலாகட்டும் அல்லது உயர் உலகங்களில் வாழும் தேவர்களாகட்டும், ஒருவருமே பொருள்சார்ந்த இம்மூன்று தன்மைகளிலிருந்து தப்பிக்க முடியாது.

ப்ராஹ்மணக்ஷத்ரியவிசா'ம் கூ' த்ராணாம் ச பரந்தப / கர்மாணி ப்ரவிபக்காநி ஸ்வபரவப்ரபவைர்குணை: // 18.41

ப்ராஹ்மணக்ஷத்ரியவிசா'ம் வைசியன் இவர்களுடைய; கு, தீராணாம் ச - மற்றும் நான்காம் வாணத்தவர்களுடைய ; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே; கா்மாணி -கா்மங்கள்; ப்ரவிபக்தாநி - பிரிக்கப்பட்டிருக்கின்றன; ஸ்வபாவப்ரபவை: - இயல்பிலிருந்து உண்டான; குணே: - குணங்களுக்கு ஏற்ப

18.41 எதிரிகளை வாட்டுபவனே, அவரவர்கள் இயல்புகளின் அடிப்படையில் அமைந்த அமைந்த வின்படி, மனிதர்கள் பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்ரர்கள் எனப் பிரிக்கப்பட்டனர்.

ச'மோ தமஸ்தப: சௌ'சம் க்ஷாந்திரார்ஜவமேவ ச / ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகாம ஸ்வபாவஜம் // 18.42

சம: - மனவடக்கம்; தம: - புலனடக்கம்; தப: - தவம்; சௌ'சம் தூய்மை; க்ஷாந்தி: - பிறா் குற்றம் பொறுத்தல்; ஆர்ஜவம் -நேர்மை; ஏவ - கூட; ச - மேலும்; ஜ்ஞாநம் - அறிவு; விஜ்ஞாநம் -அனுபவம் ஞானம்; ஆஸ்திக்யம் - கடவுள் நம்பிக்கை; ப்ராஹ்மணர்களுக்குரிய கர்மங்கள்; ஸ்வபரவஜம் - இயல்பான

18.42 அமைதி, ஒழுக்கம், எளிமை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, ஞானம் மற்றும் இறை நம்பிக்கை - இவை பிராஹ்மணர்களின் இயல்புகளாக இருக்கின்றன.

சௌ'ர்யம் தேஜோ த்ரு'திர்தரக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம் / தரைமீச்'வரபாவச் ச க்ஷாத்ரம் கா்ம ஸ்வபாவஜம் // 18.43

சௌ'ர்யம் - சூரவீரத்தனமும், தேஜ: தேஜஸும்; த்ரு'தி: - உறுதியும்; தாக்ஷ்யம் - திறமையும்; யுத்தே ச - யுத்தத்திலும்; அபி - மேலும்; அபலாயநம் - போரில் புறங்காட்டாமையும்; தாநம் - கொடையும்; ஈச் வரபாவு: ச - ஆளும் தன்மையும்; க்ஷாத்ரம் - க்ஷத்ரியர்களுக்குறிய ; கர்ம - கர்மங்கள்; ஸ்வபரவஜம் - இயல்பான

18.43 வீரம், வீகம், திடம், திறமை, போர்த்திறம், தலைமைப் பண்பு க் கூக்ரியன் வகைப்படுத்தப்படுகின்றான்.

க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைச்'யகர்ம ஸ்வபரவஜம் / பரிசர்யாத்மகம் கர்ம சூ'த்ரஸ்யாபி ஸ்வபாவஜம் // 18.44

க்ருஷி கௌரக்ஷய வாணிஜ்யம் - உழவு செய்தலும், பசுக்களைக் காப்பதும், பொருட்களை வாங்கி விற்பதில் சத்தியத்தைக் கடைப்பிடித்தலும்; வைச்'யகர்மஸ்வபரவஜம் - வைசியர்களக்குரிய இயல்பான கா்மங்கள் ஆகும்; பரிசாயாத்மகம் - மக்கள் அனைவருக்கும் சேவை புரிதல்; கர்ம - கர்மங்கள்; சூ, 'த்ரஸ்ய அபி - நான்காம் வா்ணத்தவர்களுக்கு ; ஸ்வபாவஜம் - இயல்பான

18.44 விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வியாபாரம் போன்றவற்றில் திறமை உடையவர்களாக இருப்பவர்கள் வைசியர்கள் எனப்படுகின்றனர். நல்லமுறையில் விலேவை புரிபவர்கள் சூத்ரர்கள் எனப்படுகின்றனர்

ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லமதே நர: / ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ரு'ணு // 18.45

ஸ்வே ஸ்வே கர்மணி - தத்தம் கா்மங்களில் ; அபிரத : - முழு முனைப்புடன் ஈடுபட்டிருக்கும்; ஸம்ஸித்திம் - பகவானை அடைதலாகிற ஸித்தியை; ல் தே - அடைகின்றான்; நர: - மனிதன்; ஸ்வகா்மநிரத: - தன்னுடைய இயல்பான கா்மங்களில் ஈடுபடுபவன்; ஸித்திம் - பரம ஸித்தியை;

யதா - எப்படி கா்மங்களைச் செய்து; விந்ததி - அடைகின்றானோ; தத் - அந்த முறையை; ச்ரூ'ணு - கேள்

18.45 ஒருவன், தனக்கு இயல்பாக அமைந்த வேலைகளை பக்தியுடன் செய்வதன் மூலம், நிறைநிலையை அடைகிறான். தனக்கு இயல்பாக அமைந்த வேலைகளைச் செய்வதன் மூலம், ஒருவர் எவ்வாறு நிறைநிலையை அடைய முடியும் என்பதைக் கூறுகிறேன் கேள்!

யத: ப்ரவ்ரு'த்திர் பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம் /

ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ: //18.46

யத: - எந்தப் பரம் பொருளிலிருந்து; ப்ரவரு'த்தி: - உண்டாயினவோ; பூதாநாம்- ஸகல பிராணிகளும் ; யேந - எந்தப் பரமாத்மாவினால் ; ஸர்வம் – உலகம் முழுமையும்; இதம் – இந்த; ததம் – வியாபிக்கப்பட்டுள்ளதோ; ஸ்வகர்மணா - தன்னுடைய இயல்பான காமங்களினால்; தம் - அந்த பரமாத்மாவை; அம்யா்ச்ய - வழிபட்டு; ஸித்திம் - பரம ஸித்தியை; விந்ததி - அடைகின்றான்; மாநவ: - மனிதன்

18.46 யாரிடமிருந்து உயிரினங்கள் தோன்றினவோ, யாரால் இந்த முழுப் பிரபஞ்சமும் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ அந்த ஒப்புயர்வற்ற ஈச்வரனை, தன்னுடைய சுய காமத்தால் தொழுவதன் மூலம் ஒருவன் உன்னத நிலையை அடைகிறான்.

ச்' ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் / ஸ்வபாவநியதம் கா்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் // 18.47

ச்'ரேயாந் - உயர்ந்தது; ஸ்வதா்ம: - தன்னுடைய தா்மம்; விகுண: -குணக் குறை உள்ளதாயினும்; பரதர்மாத்- பிறருடைய தாமத்தைக் காட்டிலும்; ஸ்வநுஷ்டிதாத் - நல்லமுறையில் கடைப்பிடிக்கப்பட்ட; ஸ்வபரவநியதம் இயல்புக்கேற்ப தன்னுடைய கா்மங்களை; குர்வந் - செய்கிற மனிதன்; ந ஆப்நோதி -அடையமாட்டான்; கில்பிஷம் - பாவத்தை

18.47 ஒருவன், மற்றொருவனின் வேலையைச் சிறப்பானது என்று ஒப்புக்கொண்டு, அதை எடுத்துச் சிறப்பாகச் செய்வதைக்

காட்டிலும், தன்னுடைய சொந்த இயல்புக்கேற்ற செயலில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது, அதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியாவிட்டாலும் கூட! அவரவருக்கு இயல்பாக விதிக்கப்பட்ட காமங்களைச் செய்வது, பாவ விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

ஸ்ஹஜம் கா்ம கௌந்தேய ஸ்தேஷமபி ந த்யஜேத் / ஸர்வாரம்பா ஹி தேரஷேண தூமேநாக்நிரிவாவ்ரு'தா: // 18.48

ஸஹஜம் கா்ம - தனக்குரிய இயல்பான காமங்களை; கௌந்தேய -குந்தியின் புகல்வனே; ஸ்கோஷம் அபி - குறை உள்ளதாயியை; ந த்யஜேத் - விட்டு விடலாகாது; ஸர்வாரம்பர்: - எல்லாச் செயல்களும்; ஹி - ஏனெனில்; தேஷ்ண - குறையினால்; தூமேந அக்நி: இவ -புகையால் சூழப்பட்ட தீ போல்; ஆவ்ரு'தா: - சூழப்பட்டுள்ளன

18.48 குந்தியின் புதல்வனே, ஒருவன் தன்னுடைய இயல்பால் விளைந்த செயல்களை, அந்தச் செயல் பல குறைகளைக் கொண்டதாயிருப்பினும் ஏனெனில் நெருப்பைப் புகை சூழ்வதுபோல, ஒவ்வொரு செயலையும் ஏதாவது ஒரு குறை சூழ்ந்துள்ளது.

அஸக்தபுத்தி: ஸா்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ரு'ஹ: / ரைஷ்கர்மயஸித்திம் பரமாம் ஸ்ர்ந்யாஸேநாதிகச்சதி // 18.49

அஸக்தபுத்தி: - பற்றற்ற புத்தியுடைய; ஸர்வத்ர - எங்கும்; ஜிதாத்மா -உள்ளத்தை அடக்கிய மனிதன்; விகதஸ்ப்ரு'ஹ: - ஆசை அற்றவனான; நைஷ்கர்ம்யஸித்திம் பெருநிலையை; பரமாம் -மேலான; ஸ்ந்ந்யாளேந - ஸ்ரங்க்ய யோகத்தினால்; அதிகச்சதி - அடைகிறான்.

18.49 துறவைப் பயிற்சிசெய்வதன் மூலம், யார் ஒருவனுடைய மனம் சுயநல நோக்கிலிருந்து விடுபட்டிருக்கிறதோ, யார் ஒருவன் மனத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறானோ, யார் ஒருவன் ஆசைகளிலிருந்து விடுபட்டிருக்கிறானோ அவன் கர்ம பலன்களின் மீதுள்ள பற்றிலிருந்து முழுமையாக விடுபடுகிறான்.

ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே / ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா // 18.50

ஸித்திம் - நைஷ்கர்ம்ய ஸித்தியை; ப்ராப்த: - அடைந்த மனிதன்; யதா - எப்படி; ப்ரஹ்ம - பிரஹ்மத்தை; ததா - அந்த முறையை; ஆப்நோதி - அடைகின்றானோ; நிபோத - அறிந்துகொள்; மே - என்னிடமிருந்து; ஸ்மாளே ஏவ - சுருக்கமாகவே: கௌந்தேய - குந்தியின் புதல்வனே: நிஷ்டா - நிலை; ஜ்ஞாநஸ்ய - ஞானயோகத்தினைடைய; யா - எதுவோ அந்த; பரா - உயர்ந்த நிலை ```

18.50 குந்தியின் புதல்வா, இனி நான் கூறப்போகும் வழியில் நடப்பதன் மூலம் ஒருவர், மேலான உண்மை நிலையை, பிரஹ்ம நிலையை எப்படி அடையமுடியும் என்பதை அறிந்துகொள்.

புத்த்யா விசு'க்தயா யுக்தோ த்ரு'த்யாக்மாநம் நியம்ய ச / ச'ப்காதீந்விஷயாம்ஸ்த்யக்க்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச // 18.51

விவிக்தலேவீ லக்வாசீ'யதவாக்காயமாநஸ: / த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாச்'ரித: //18.52

அஹங்காரம் பலம் தா்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம் / விமுச்ய நிர்மம: சா'ந்தோ ப்ரஹ்மதுயாய கல்பதே // 18.53

புத்த்யா யுக்த: - அறிவுடன் கூடியவனாகவும்; விசு த்தயா - தெளிந்த ; யுக்த: - அறிவுடன் கூடியவனாகவும்; த்ருத்யா - ஸ்ரத்வீகமான உறுதியோடு; ஆத்மாநம் - உள்ளத்தையும், புலன்களையும்; நியம்ய-அடக்கி; ச - மேலும்; ச'ப்தாதீந் - ஒலி முதலிய; விஷயாந் - புலன் நுகர் பொருட்களை; த்யக்த்வா - துறந்து; ராகத்வேஷௌ - விருப்பு வெறுப்புகளை; வ்யுதஸ்ய - முற்றிலும் அழித்து; ச - மேலும்; விவிக்த ஸேவீ - தனிமையான இடத்தில் இருப்பவனாகவும்; லக்வாசீ' - எளிய ஸாத்வீக அளவான உணவு அருந்துபவனாகவும் ; யதவாக்காயமாநஸ:-மனம், வாக்கு, உடல், இவற்றைத் தன் வசப்படுத்தியவனாகவும்; த்யாநயோகபர: - த்யான யோகத்தின் ஈடுபட்டிருந்து; நித்யம் -எப்பொழுதும்; வைராக்யம் - திடமான வைராக்யத்தை; ஸமுபாச்'ரித: ச - அடைந்தவனாகவும்; அஹங்காரம் - அஹங்காரத்தையும்; பலம் - வலிமை; தா்பம் - கா்வம்; காமம் - காமம்; க்ரோதம் - கோபம்; பரிக்ரஹம் - சொத்து சேர்த்தல்; விமுச்ய - நீக்கி; நிர்மம: - மமகாரமற்று; சா'ந்த: - சாந்தியோடு கூடியவனாக உள்ளவன்; ப்ரஹ்மபூயாய -பரபிரம்மத்தில் இரண்டறக் கலப்பதற்கு; கல்பதே - தகுதி பெறுகின்றான்

  • 18.51,52,53 தீர்மானத்தின் மூலம் மனத்தைக் கட்டுப்படுத்துதல், புலனின்ப பொருட்களிலிருந்து விலகியிருத்தல், விருப்பு வெறுப்புகளை விட்டுவிடுதல், ஏகாந்தமாக வாழ்தல், மித உணவு, மனம், பேச்சு, கா்மேந்த்ரியங்களை தன் வசப்படுத்துதல், தியானத்திலேயே கரைந்திருத்தல், பற்றின்மை மற்றும் அஹங்காரம், வன்முறை, பெருமை, காமம், கோபம், உடைமைக் குணம் ஆகியவற்றைத் துறந்திருக்கும் ஒருவர் அமைதியை, சாந்தத்தை அடைந்து 'நான்' மற்றும் 'எனது' என்னும் கருத்துக்களிலிருந்து விடுபடுகிறார். மேலும் அந்த மேலான பர பிரம்மத்துடன் ஒன்றிணைகிறார்.

ப்ரஹமபூத: ப்ரஸந்நாத்மா ந சோ'சதி ந காங்க்ஷதி / ஸம: ஸா்வேஷு பூதேஷு மத்பக்திம் லமதே பராம் // 18.54

ப்ரஹ்மதுத: - பிரஹ்மத்தில் ஒன்றிய ; ப்ரஸந்நாத்மா - மனத்தெளிவுடைய யோகி; ந சோ'ச்தி - வருந்துவதில்லை; ந காங்ஷதி - எதிர்பார்ப்பதில்லை; ஸம: - ஸம பாவனையோடு இருந்து கொண்டு; ஸா்வேஷு பூதேஷு - அனைத்துப் பிராணிகளிடமும்; மத்பக்திம் - என்மீதான பக்தியை; லமதே - பெறுகின்றான்; பராம் - மேலான

  • 18.54 பரமாத்மாவிடத்தில் கரைந்த ஒருவன், கவலையோ அசையோ படுவதில்லை, எல்லா உயிர்களிடத்திலும் சமபாவனை கொண்டிருக்கும் அவன் என்மீதான பக்தியைப் பெறுகின்றான்.

பக்த்யா மாம பிஜாநாதி யாவாந்யச் சாஸ்மி தத்த்வத: / ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விச'தே ததநந்தரம் // 18.55

பக்தியா - அந்த பராபக்தியின் மூலம்; மாம் - பரமாத்மவான என்னை; அமிஜாநாதி - தத்வரீதியாக அறிகின்றான்; யாவாந் - அந்தளவுக்கு; ய: ச அஸ்மி- என்னை உள்ளது உள்ளபடியே; தத்த்வத: - உண்மையில் ; தத: - அந்த பராபக்தியின் மூலம்; மாம் - என்னை; தத்த்வத: ஜ்ஞாத்வா - தத்வரீதியாக அறிந்து; விச'தே - என்னிடம் ஐக்கியமாகின்றான்; ததநந்தரம் - அக்கணமே

  • 18.55 பக்தியின் மூலம் ஒருவன், நான் எத்தன்மையன், நான் யார் மற்றும் நான் என்ன என்பவற்றின் சாரத்தை உள்ளபடியே புரிந்துகொள்கிறான். என்னுடைய சாரத்தைப் புரிந்துகொண்ட உடனேயே என்னுள் கரைந்துவிடுகிறான்.

ஸர்வகர்மாண்யபி ஸ்தா குர்வாணோ மத்வ்யபாச்'ரய: / மக்ப்ரஸாதாதவாப்ரோதி சா'ச்'வகம் பகுமவ்யயம் // 18.56

ஸர்வகா்மாணி - எல்லாக் கா்மங்களையும்; ஸ்தர - எப்பொழுதும்; குர்வாண: அபி - செய்து கொண்டிருப்பினும்; மத்வயபாச்'ர்ய: -என்னையே புகலாகக் கொண்ட கா்மயோகி; மத்ப்ராஸாதர் - எனது அருளால்; அவாப்ரோதி - அடைகின்றான்; சா'ச்'வதம் - என்றுமுள்ளம் ; பதம் - பரமபகுக்கை: அவ்யயம் - அமியாததுமான

  • 18.56 என்மீது பக்தி செலுத்தும் என்னுடைய பக்தன், அன்றாட வாழ்க்கைச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்னுடைய கருணையினால், என்னுடைய பாதுகாப்புடன் அழியாத, நிலையான என்னுடைய இருப்பிடத்தையடைகிறான்.

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: / புத்தியோகமுபாச்'ரித்ய மச்சித்த: ஸ்ததம் பவ // 18.57

சேகஸா - மனப்புர்வமாக; ஸர்வகர்மாணி - எல்லாக் கா்மங்களையும்; மயி - என்னிடம் ; ஸந்ந்யஸ்ய - அர்ப்பணம் செய்து ; மத்பர: - என்னையே அடைக்கலமாகக் கொண்டு; புத்தியோகம் - - ஸ்மபுத்தியாகின்ற யோகத்தை; உபாச்'ரித்ய- கடைப்பிடித்து; மச்சித்த: - என்னிடம் உள்ளம் பதித்தவனாக; ஸததம் - எப்பொமுதும்; பவ - இருப்பாயாக

  • 18.57 செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்மீது உன் மொத்த விழிப்புணர்வையும் செயலைச்செய்து, என்னுடைய பாதுகாப்பில் இருப்பாயாக !

மச்சித்த: ஸ்ர்வதூர்காணி மத்ப்ரஸாதரத்தரிஷ்யஸி /

அத சேத்த்வமஹங்காராந்த ச் ரோஷ்யாஸி விநங்கூடியஸி // 18.58

மச்சித்த: - என்னிடமே உள்ளம் பதித்தவனாக; ஸா்வதுர்காணி - எல்லா இன்னல்களையும்; மத்ப்ரஸாதரத்- எனது அருளால்; தரிஷ்யஸி -எளிதாகக் கடந்து விடுவாய்; அத - மேலும்; சேத் - இல்லையென்றால்; த்வம் - நீ; அஹங்காராத் - அஹங்காரத்தின் காரணமாக; ந ச்'ரோஷ்யஸி - கேளாவிட்டால்; விநங்க்ஷ்யஸி - அழிந்து போவாய்

18.58 உன்னுடைய மனத்தை என்மீது நிலைத்திருக்கச் செய்யும்போது, என்னுடைய கடந்துவிடுவாய். உன்னுடைய அஹங்காரத்தின் காரணமாக என்னுடைய அழிவிற்குள்ளாவாய்.

யதஹங்காரமாச் ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யலே / மித்யைஷ் வ்யவஸாயஸ்தே ப்ரக்ரு'திஸ்த்வாம் நியோக்ஷ்யதி // 18.59

யத் அஹங்காரம் - எந்த அஹங்காரத்தின்; ஆச்'ரித்ய - வசப்பட்டு; ந யோத்ஸ்யே - நான் யுத்தம் செய்யமாட்டேன்; இதி - என்று; மந்யலே - நினைக்கின்றாயோ; மித்யா - பொய்யானது; ஏஷ: வ்யவஸாய: -இந்தத் தீர்மானம்; தே - உன்னுடைய; ப்ரக்ருதி: - இயல்பு; த்வாம் -உன்னை; நியோகண்டியதி - வலுவில் போரில் ஈடுபடுத்தும்

18.59 உன்னுடைய அஹங்காரத்தின் காரணமாக, 'நான் போர்புரியேன்' என்று நீ தீர்மானித்தால், உன்னுடைய தீர்மானம் பயனற்றது. உன்னுடைய இயல்பான குணமே உன்னைப் போரில் ஈடுபடுத்திவிடும்.

ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா / கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவசோ'sபி தத் // 18.60

ஸ்வபாவஜேந - இயல்பில் உண்டான; கௌந்தேய - குந்தியின் மைந்தனே; நிபத்த: - கட்டப்பட்டு; ஸ்வேந - உன்னுடைய; கா்மணா - கா்மவினையினால்; கா்தும் - செய்வதற்கு; ந இச்சஸி - விரும்பவில்லையோ; யத் - எந்தச் செயலை; மோஹாத் - அறிவு மயங்கியதால் காரணமாக; கரிஷ்யஸி - செய்யப்போகின்றாய்; அவச் : - உன் வசம் இழந்து; அபி - மேலும்; தத் - அதை

18.60 குந்தி புத்திரா, உன்னுடைய இயல்பான மனப்பாங்குகளினால் கட்டுப்படுத்தப்படுபவனாய் செய்ய வேண்டாமென்று தீர்மானித்த செயலை, மாயையின் காரணமாக, நீ செய்தே தீருவாய், அது உன்னுடைய விருப்பத்திற்கு மாறாக இருந்தாலுங்கூட !

ஈச் 'வர: ஸர்வதுதாநாம் ஹ்ரு'த்தேசே'sர்ஜுந திஷ்டதி / ப்ராமயந்ஸர்வதுதாநி யந்த்ராரூட்கி மாயயா // 18.61

ஈச்'வர:- அந்தர்யாமியாகி பகவான்; ஸா்வததாநாம் - அனைத்து பிராணிகளுடைய; ஹ்ருத்தேசே' - இதயத்தில்; அர்ஜுந - அர்ஜுனா; திஷ்டதி - வீற்றிருக்கின்றார்; ப்ராமயந் - சுழலச் செய்து கொண்டு; ஸா்வத்தாநி - அனைத்து ஜீவன்களையும்; யந்த்ராரூட்ரி - உடல் என்கிற யந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட; மாயயா - தன்னுடைய மாயையினால்

18.61 ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றிருக்கின்ற பரமாத்மா எல்லா ஜீவன்களின் செயல்களையும் வழிநடத்துகிறான். அவனுடைய மாயாசக்தியின் முன் அனைத்துமே இயந்திரங்களைப் போல செயல்புரிகின்றன.

தமேவ ச'ரணம் கச்ச ஸர்வபரவேந பாரத / தத்ப்ரஸாதாத்பராம் சா'ந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி சா'ச்'வதம் // 18.62

தம் ஏவ - அந்த பரமேசுவரனையே; சர்ணம் கச்ச - தஞ்சம் அடையவாயாக; ஸர்வபரவேந - எல்லாவகைகளாலும்; பாரத -பரத குலத் தோன்றலே; தத்ப்ராஸாதரத் - அந்தப் பரமாத்மாவின் அருளினால் நீ ; பராம் - உயர்ந்த ; சா'ந்திம் - அமைதியையும் ; ஸ்தாநம் -பரமபதத்தையும்; ப்ராப்ஸ்யஸி - அடைவாய்; சா'ச்'வதம் - நிலையான

18.62 சரணடைந்துவிடு. அவனுடைய கருணையால் நீ மேலான அமைதியையும் அழியா வீடுபேறும் அடைவாய்.

இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா / விம்ரு'ச்'யைதத்சே'வேஷண யதேச்சஸி ததா குரு // 18.63

இதி - இவ்வாறு; தே - உனக்கு; ஜ்ஞாநம் - ஞானம்; ஆக்யாதம் -கூறப்பட்டது; குஹ்யாத் குஹ்யதரம் - மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான; மயா - என்னால்; விம்ருச்'ய - நன்கு ஆராயந்து; ஏதக் - இந்த ஞானத்தை; அசே'வேஷண - முழுமையாக; யதா - எப்படி: இச்சஸி - விரும்புகிறாயோ; ததா - அப்படியே; குரு - செய்

  • 18.63 இவ்வாறு மறையொருளுக்கெல்லாம் மறையொருளான ஞானம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. இப்பொழுது நீ இந்த ஞானத்தை முழுமையாக நன்கு ஆராய்ந்து, நீ எப்படி விரும்புகின்றாயோ அப்படியே செய்.

ஸர்வகுஹ்யதமம் இஷ்டோட்ஸி மே த்ரு' டமிதி தகோ வக்ஷ்யாமி தே ஹிதம் //

18.64

ஸா்வகுஹ்யதமம் - மமறைபொருளுக்கெல்லாம் மறையொருளான ; டிய: - மீண்டும்; ச்ரு'ணு - கேள்; மே - என்னுடைய; பரமம் -மேலான ரஹஸ்யமான; வச: - உரையை; இஷ்ட: - உற்ற நண்பனாக; அஸி - இருக்கின்றாய்; த்ரு'டம் - மிகவும்; மே - எனக்கு; இகி -என்ற கருத்தோடு இந்த உரையை; தத: - ஆகையால்; வக்ஷ்யாமி -சொல்கின்றேன்; தே - உனக்கு; ஹிதம் - மேலான நன்மை பயக்கும்

  • 18.64 எனக்கு நீ மிகவும் உற்ற நண்பனாக இருப்பதால், உன் நன்மைக்காக மறையொருளுக்கெல்லாம் மறையபொருளான என்னுடைய மேலான ரஹஸ்யத்தைக் கூறுகிறேன், மீண்டும் கேள்.

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு / மாமேவைஷ்யஸி ஸ்த்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோടஸி மே // 18.65

மந்மநா - என்னிடமே மனத்தைச் செலுத்துபவனாக; பவ - ஆவாய்; மத்பக்த: - என்னிடமே பக்தி கொண்டிரு; மத்யாஜீ - என்னையே வழிபடு; மாம் - என்னையே; நமஸ்குரு - வணங்கு; மாம் ஏவ -என்னையே; ஏஷ்யஸி - அடைவாய்; ஸ்த்யம் - உண்மையில்; தே - உனக்கு; ப்ரதிஜாநே - பிரக்ஞ செய்கின்றேன்; மே - எனக்கு; ப்ரிய: - இனியவனாக; அஸி - இருக்கின்றாய்

  • 18.65 அர்ஜுனா நீ என்னிடமே மனத்தைச் செலுத்துவாயாக. என்னிடமே வழிபடுவாயாக; இப்படிச் இப்படிச் அடைவாய். இவ்வுறுதிமொழியை நான் உனக்கு நல்குகின்றேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ச'ரணம் வ்ரஜ / அஹம் க்வா ஸர்வபாபேச்யோ மோக்ஷயிஷ்யாமி மா சு'ச: // 18.66

ஸர்வதாமாந் - தாமங்கள் அனைத்தையும் அதாவது செய்யவேண்டிய கர்மங்கள் அனைத்தையும்; பரித்யஜ்ய - அர்ப்பணம் செய்துவிட்டு; மாம் ஏகம் ஆதாரமான, பரமேசுவரனான என் ஒருவனையே; ச'ரணம் வ்ரஜ -சரணடைவாயாக; அஹம் - நான்; த்வா - உன்னை; ஸர்வ பாபேப்பு: - பாவங்கள் அனைத்திலிருந்தும்; மோக்ஷயிஷ்யாமி - விடுவிப்பேன்; மாசு'ச - வருந்தாதே

  • 18.66 நெறிமுறைகள், கருத்துக்கள், ஒழுக்க நியதிகள் அனைத்தையும் விட்டுவிட்டு, என்னிடம் சரணடைந்துவிடு; பாவகரமான விளைவுகள் அனைத்திலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன், வருந்தாதே.

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதிசந / ந சாசு'ச் 'ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்ப்பஸ்பெதி // 18.67

இதம் - இந்த; தே - உனக்கு; ந - இல்லை; அதபஸ்காய - தவம் இல்லாதவனுக்கு; ந - இல்லை; அபக்தாய - பக்தியில்லாதவனுக்கு; கதரசந - ஒருபோதும்; ந - இல்லை; அசு'ச் ரூஷவே - கேட்க விரும்பதாவனுக்கு; வாச்யம் - சொல்தல்; ந - இல்லை; ச - மேலும்; மாம் - என்னிடம்; ய: - எவன்; அம்யஸூயதி - குறை காண்கின்றானோ 18.67 ஒழுக்கக் கட்டுப்பாடுகளற்ற, பக்தியற்ற, கேட்க விரும்பாத மற்றும் என்னைப் பற்றி இழிவாகப் பேசுகின்ற ஒருவனுக்கு இந்த ஞானத்தை போதிக்காதே !

ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வமிதாஸ்யதி / பக்திம் மயி பராம் க்ரு'த்வா மாமேவைஷ்யத்யஸம்ச'ய: // 18.68

ய: - எந்த மனிதன்; இமம் பரமம் - இந்த உயர்ந்த; குஹ்யம் -ரஹஸ்யமான ; மத் - பக்தேஷு - என்னுடைய பக்தர்களுக்கு ; அபிதாஸ்யதி - சொல்வானோ; பக்திம் - பிரேமை மிகுந்த பக்தியை; மயி - என்னிடம் ; பராம் - உயர்ந்த; க்ரு'த்வா - செய்து; மாம் ஏவ - என்னையே; ஏஷ்யதி - அடைகின்றான்; அஸம்ச'ய: - இதில் சந்தேகமில்லை

  • 18.68 இந்த உன்னதமான உயர்ந்த இரகசியங்களை யாரொருவன் பக்தர்களிடம் பகர்கிறானோ அவன் எனக்கு மிக உயர்ந்த சேவையைச் செய்தவனாகிறான். இறுதியில் அவன் என்னையே வந்தடைகிறான். இதில் சந்தேகமே இல்லை.

ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கச்'சிந்மே ப்ரியக்ரு'த்தம்: / பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி // 18.69

ந - இல்லை; ச - மேலும்; தஸ்மாத் - அந்த பக்தனைக் காட்டிலும்; மநுஷ்யேஷு - மனிதர்களில்; கச்சித் - வேறு எவரும்; மே - எனக்கு; ப்ரியக்கு'த்தம: - மிகவும் ப்ரியமான காரியத்தைச் செய்யக் கூடியவன்; பவிதா ந- இருக்கப் போவதில்லை; ச - அப்படியே; மே- எனக்கு; தஸ்மாத் - அவனைக் காட்டிலும்; அந்ய: - வேறொருவன்; ப்ரியதர: -மிகப் பிரியமான; புவி - பூமி

  • 18.69 இவனைப் போன்று மேலானதொரு இனிய சேவையை வேறொருவனும் எனக்குச் செய்யப்போவதில்லை. இவ்வுலகில் இவனைவிட வேறொருவனும் எனக்கு அன்பானவனாக இருக்கப் போவதும் இல்லை.

அத்யேஷ்யதே ச ய இமம் தா்ம்யம் ஸம்வாதமாவயோ: /

ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: // 18.70

அத்யேஷ்யதே - கற்றறிகின்றானோ; ச - மேலும்; ய: - எந்த மனிதன்; இமம் - இந்த; தா்ம்யம் - தா்மம் நிறைந்த; ஸம்வாதம் - உரையாடல் வடிவிலுள்ள இந்த சாஸ்திரத்தை; ஆவயோ; - நம் இருவருடைய; ஜ்ஞாநயஜ்ஞேந - ஞான வேள்வியினால்; தேந - அவன்; அஹம் -நான்; இஷ்ட: ஸ்யாம் - வழிபட்டவனாக ஆவேன்; இதி - என்பது; மே மதி: - என்னுடைய கருத்து

18.70 நான் விளம்புகிறேன்: இந்த மேலான உயர் உரையாடலைப் படிக்கும் ஒருவன், புத்தி யக்ஞத்தால் என்னை வழிபடுகிறான்.

ச்'ரத்தாவாநருஸூயச்'ச ச்'ரு'ணுயாதபி யோ நர: / ஸோப்பி முக்த: சு' பாந்லோகாந்ப்ராப்நுயாத்-புண்யகர்மணாம் // 18.71

ச்'ரத்தாவாந் காணாதவனாகவும்; ச்'ரு'ணுயாத் அபி - கேட்கவாது செய்கின்றானோ; ய: நர: - எந்த மனிதன்; ஸ: அபி - அவனும்; முக்த: - பாவங்களிலிருந்து விடுபட்டு; சு' பாந் லோகாந் - சிறந்த புண்ய உலகங்களை; ப்ராப்நுயாத் - அடைவான்; புண்யகர்மணாம் - புண்ய காரியங்கள் செய்யும் சிறந்த மனிதர்கள் அடையும்

  • 18.71 நம்பிக்கையோடும், பொறாமையற்றும் இவற்றைக் கேட்கும் ஒருவன், பாவத்தின் விளைவுகளிலிருந்து விடுபட்டு, புண்ணியசாலிகள் வசிக்கும் உலகங்களுக்குச் செல்கிறார்.

கச்சி தேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா / கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரஷ்டஸ்தே தநஞ்ுஜய //18.72

கச்சித் ஏதத் ச் ருதம் - இது கேட்கப்பட்டதா ?; பார்த - பார்த்தா; த்வயா - உன்னால்; ஏகாக்ரேண சேதஸா - ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்தோடு; கச்சித் அஜ்ஞாநஸம்மோஹ: - அஞ்ஞானத்தினால் உண்டான உள்மோஹம்; ப்ரநஷ்ட: - அழிந்துவிட்டதா?; தநஞ்ஜய -அர்ஜுனா

18.72 ஓ, தநஞ்ஜயா, ஒருமித்த கவனத்துடன் இவற்றைக் கேட்டுக் கொண்டாயா ? அறியாமையால் விளைந்த உன் மயக்கம், குழப்பம் முற்றிலும் அழிந்து விட்டதா?

அர்ஜுந உவாச

நஷ்டோ மோஹ: ஸ்ம்ரு'திர்லப்தா த்வத்ப்ரஸாதரந்மயாச்யுத / ஸ்திதோட்ஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ // 18.73

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; நஷ்ட: - அழிந்தது; மோஹ: -எனது மோஹம்; ஸ்ம்ரு'தி: - ஞான ஒளி; லப்தர - பெறப்பட்டது; த்வத் ப்ரஸாதர்த் - உங்கள் அருளால்; மயா - என்னால் ; அச்யுத : - அச்யுதா; ஸ்தித: அஸ்மி - உறுதியாக இருக்கிறேன்; கதஸந்தேஹ: - சந்தேகமற்றவனாக ; கரிஷ்யே - நிறைவேற்றுவேன்; வசநம் - ஆணையை; தவ - உங்கள்

அர்ஜுனன் சொன்னது

18.73 ஓ இறைவனே, என்னுடைய மாயை ஒழிந்தது. உன்னுடைய கருணையால் என்னுடைய நினைவு திரும்பியது. நான் இப்போது உறுதியாக இருக்கிறேன். சந்தேகங்களில்லாமல் இருக்கிறேன். உண்ணிடம் பணியவும் தயாராயிருக்கிறேன்.

ஸஞ்ஜய உவாச

இத்யவரம் வாஸுகேவஸ்ய பார்குஸ்ய ச மஹாத்மா; / ஸ்ம்வாதமிமமச் 'ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம்

ஸஞ்ஜய உவாச - ஸ்ஞ்ஜயன் சொன்னார்; இதி - இவ்வாறு; அஹம் - நான்; வாஸுதேவஸ்ய - பகவான் புரீவாசுதேவருக்கும்; மஹாத்மந: பார்தஸ்ய ச - மஹாத்மாவான பார்த்தனுக்குமிடையே; ஸம்வாதம் -உரையாடலை; இமம் - இந்த; அச்'ரௌஷம் - கேட்டேன்; அத்புதம் -அற்புதமான உட்பொருள் கொண்ட ; ரோமஹர்ஷணம் - புல்லரிக்கக் கூடிய

ஸஞ்ஜயன் சொன்னது

இரண்டு உயர்ந்த உ அத்மாக்களான கிருஷ்ணருக்கும் 18.74 அர்ஜுனனுக்கும் அதிஅற்புதமான உரையாடல்களைக் கேட்டேன்.

வ்யாஸப்ரஸாதரச்ச்ருதவாநேதத்துஹ்யமஹம் பரம் / யோகம் யோகேச் வராத்க்ரு 'ஷ்ணாத்ஸாக்ஷாத்கதயது: ஸ்வயம் // 18.75

வ்யாஸ்ட்ரஸாகக் - பநீவியாஸ பகவானுடைய அருளினால் : ச்' ரு' தவாந் - கேட்டேன்; ஏதத் - இந்த; குஹ்யம் - ரஹஸ்யமான; அஹம்- நான்; பரம் - உயர்ந்த; யோகம் - யோகத்தை; யோகேச்'வராத் - யோகேசுவரனான; க்ரு'ஷ்ணாத் - பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்தே; ஸாக்ஷாத் - நேராக; கதயக: - சொல்லிக் கொண்டிருக்கும் போதே; ஸ்வயம் - ஸாக்ஷாத்

18.75 வியாசரின் கருணையால், யோக புருஷரான கிருஷ்ணர் நேரடியாகச் அர்ஜுனனிடம் உன்னதமான இரகசியங்களைக் கேட்டேன்.

ராஜந்ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்வாதமிமமத்புதம் / கேச'வார்ஜுநயோ: புண்யம் ஹ்ரு'ஷ்யாமி ச

முஹுர்முஹு: // 18.76

ராஜந் - அரசே; கேச'வார்நஜுநயோ: - பகவான் ஸ்ரீக்ருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையே நடந்த; இமம் - இந்த ரஹஸ்யமான; புண்யம் - நன்மையளிக்கும்; அத்புதம் ச- அற்புதமான; ஸம்வாதம் -உரையாடலை; ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய - நினைத்து; முஹுர்முஹு: - மீண்டும் மீண்டும்; ஹ்ரு'ஷ்யாமி - மகிழ்கிறேன்.

18.76 அரசே, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த அந்த அற்புதமான, புனிதமான உரையாடல்களை திரும்பத் திரும்ப நினைவு கூறுவதில், ஒவ்வொரு கணமும் சிலிர்ப்படைந்து மிகவும் ஆனந்தப்படுகிறேன்.

தச்ச ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு'த்ய ரூபமத்யத்புதம் ஹரே: / விஸ்மயோ மே மஹாந்ராஜந்ஹ்ரு'ஷ்யாமி ச புந: புந: // 18.77

தத் - அந்த; ச - மேலும் ; ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு'த்ய - நினைத்து நினைத்து; ரூபம் - திருவுரு; அதி அத்புதம் - மிகவும் அற்புதமான; ஹரே: - பகவான் ஸ்ரீஹரியின்; விஸ்மய: - வியப்பு; மே - என்னுடைய மனதில்; மஹாந் - மிகுந்த; ராஜந் - அரசே; ஹ்ரு'ஷ்யாமி - மகிழ்ச்சி அடைகிறேன்; ச - மேலும்; புந: புந: - மேலும் மேலும்

  • 18.77 அரசே, இறைவன் கிருஷ்ணருடைய அற்புதமான ரூபத்தை நினைவுகூரும்பொழுது இன்னும் அதிகமான அதிசயத்தால் உறைந்து போயிருக்கிறேன். நான் மிகுந்த ஆனந்தத்தில் திரும்பத் திரும்ப திளைத்துக் கொண்டிருக்கிறேன்.

யத்ர யோகேச்'வர க்ரு'ஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர :/ தத்ர புரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம // 18.78

யத்ர - எங்கு; யோகேச் வர - யோகேசுவரனான; க்ரு'ஷ்ண - பகவான் ஸ்ரீ கிருஷ்ணனும்; யத்ர - எவ்விடத்தில்; பார்த - அர்ஜுனனும்; தநுர்தர - காண்டீபம் ஏந்திய; தத்ர - அவ்விடத்தில்; ஸ்ரீ: - மஹாலஷ்மியும்; விஜய: வெற்றியும்; நீதியும்; மதி - உறுதியான கருத்து; மம - என்னுடைய

  • 18.78 எங்கெல்லாம் வில் வித்தையில் மிகச் சிறந்தவரான பார்த்தன் இருக்கிறாரோ அங்கெல்லாம் நிச்சயமாக செல்வ வளமை, வெற்றி, அசாத்திய சக்தி, நியாயம், நீதிநெறி, ஒழுக்கம் ஆகிய எல்லாமே நிறைந்திருக்கும். இதுவே என் கருத்து.

ஒம் இதி பூரீமஹாபாரதே ச'தஸாஹஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம் வையாஸிக்யாம் மீஷ்மபாவணி ஸ்ரீமத்பதவத்தீதாஸூபநிஷத்ஸ ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே மோக்ஷ்ஸந்யாஸ்யோகோ நாம அஷ்டாதசோ'

ஒம்தத்ஸத். இது, வியாஸர்இயற்றிய ஒருலக்ஷம்ஸ்லோகங்களையுடைய ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப்புகட்டுவதும் யோகவிஞ்ஞானமுமாகிய மோட்ச ஸந்நியாஸயோகம் எனும் பெயருடைய பதினெட்டாவது அத்தியாயம்.

Part 7: Bhagavad Gita Explained