KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/சரணாகத் மாத்திரமே பல அதீசயங்களைச் செய்யும்!Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

சரணாகத் மாத்திரமே பல அதீசயங்களைச் செய்யும்!

இந்தக் கதையில் ஒரு அழகான அர்த்தம் இருக்கிறது. நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது பற்றி நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. அதற்கும் முக்திக்கும் சம்பந்தமே இல்லை. நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது ஜீவன்முக்தியை நிர்ணயிப்பதில்லை. உங்களுடைய சீரணாகதி தன்மையே அதை நிர்ணயிக்கிறது. சீரணாகதி மாத்திரமே பல அதிசயங்களைச் செய்யும். சீரணாகதிக்கு உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்வதற்குத் தேவையான சக்தியும் திறமையும் இருக்கிறது.

இராமகிருஷ்ணருடைய கதை ஒன்று.

பண்டிதர் ஒருவருக்கு, ஒரு அம்மா பால் கொண்டுவந்து ஊற்றுவது வழக்கம். ஒருநாள் அவர் வருவதற்கு மிகத் தாமதமாகிவிட்டது.

பண்டிதர் ''ஏன் நீ இவ்வளவு தாமதமாக வந்தால், நான் எப்படி என்னுடைய பூஜை வேலைகளைச் சரிவர செய்ய முடியும் ?''

அந்தப் பால்கார அம்மா அதற்கான காரணத்தை விளக்கினார்: ''இன்று ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது, படகுக்காரரும் ஓட்டத் தயாராயில்லை. இறுதியில் ஒருவர் மட்டுமே படகெடுக்க முன்வந்தார். அதுவும் மெதுவாகவே வர முடிந்தது. அதனால் தான் இந்தத் தாமதம்.''

பண்டிதர் மிகச் சாதாரணமாக, "என்ன பெரிய வெள்ளம்? மக்கள், கிருஷ்ணர் பெயரைச் சொல்லி பெரிய ஸம்ஸாரக் கடலையே கடந்து விடுகிறார்கள். நீ இந்த சின்ன ஆற்றைக் கடந்து வர முடியவில்லையா ?' என்று கேட்டார்.

அந்த அம்மாவோ ஒரு கள்ளங்கபடமற்றவர், அவருக்குத் தார்க்கரீதியாக யோசிக்கவோ, பட்டறிவுடன் தெரியாது. அதற்குப் பின் ஒவ்வொருநாளும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்.

ஒரு வாரத்துக்குப் பின்பு, பண்டிதர் அந்த அம்மாவிடம், "இப்பொழுதெல்லாம் சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறாயே, ஆற்றில் வெள்ளம் தணிந்து விட்டதா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர், ''இல்லை ஐயா, இப்போதும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. படகுகளும் வருவதில்லை. ஆனால், கிருஷ்ணர் பெயறைச் சொன்னாலே, நான் ஆற்றைக் கடக்க முடியும் என்றும், அந்த வகையில் நான் பிறவிக்கடலையே கடக்க முடியும் என்றும் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தபடி, நானும் கிருஷ்ணர் பெயரைச் சொல்லி ஆற்றைக் கடந்து வருகிறேன், ' என்று சொன்னார்.

அந்தப் பண்டிதர் திகைத்துப்போய் நின்றார். அவரால் அதைச் சிறிதும் நம்பமுடியவில்லை. அதனால் அவர், "அதெப்படி முடியும்? வா, வந்து என்முன் செய்துகாட்டு,' என்று சொல்லி, அப்பெண்மணியை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போனார்.

அப்பெண்மணியும் ஆற்றை அடைந்ததும், 'கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று சொல்லிக்கொண்டே அக்கரைபோய் விட்டார்.

உடனே அந்தப் பண்டிதரும், அவளே போகும்போது, நாம் போவதற்கென்ன? நாமும் முயற்சி பண்ணலாமே என்று, நீருக்குள் இறங்கினார். அவர் உதடுகள் மட்டுமே மெதுவாக, 'கிருஷ்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று சொல்லிக்கொண்டே இருந்தது. ஆனால், தம் வேஷ்டி நனைவதைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே நடந்தார்! கிருஷ்ணரிடம் இவருக்குள்ள சீரணாகதியின் ஆழத்தைப் பாருங்கள்.

இறுதியில், ஆற்று வெள்ளம் அவரை அடித்துச் சென்றது.

இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம் என்றால், நீங்கள் யாரிடமிருந்து கற்றுக்கொள்வது என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், யாரிடம் சீரணாகதி செய்கிறோம் என்பதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அந்தப் பால்கார அம்மா படிக்காத, ஒரு கள்ளங்கபடமற்ற பெண்தான். அந்த மெத்தப் படித்த பண்டிதர் சொன்ன கருத்திற்குச் சரணடைந்தார், உணர்வுமாற்றம் பெற்றார்.

முழுமையான உணர்வுமாற்றம் பெறச்செய்யக்கூடிய ஒரு மகத்தான சக்தி இருக்கிறது.

சரணாகதியும், மரணமும் ஒன்றே!

பெரும்பாலான நேரங்களில், சரணடைவதற்கு முன்பே நாம், 'சரணடைந்த பின் என்ன நடக்கும்? அது எப்படியிருக்குமோ என்றெல்லாம் நாம் தர்க்க ரீதியாகத்தான் கணக்குப் போட்டுக்கொண்டிருப்போம். ஒருபோதும் அப்படிச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், நாம் நம் சீரணாகதியைவிட, நம்முடைய மனத்தையே முன்னிலைப் படுத்துவோம்.

உங்களுடைய மரணத்திற்குப் பின் என்ன நிகழும் என்பதை நீங்கள் அறிந்தால் மட்டுமே, சீரணாகதிக்குப் பின் என்ன நிகழும் என்பதை அறிவீர்கள். சீரணாகதியும் மரணமும் ஒன்றே.

உங்களுடைய மரணத்திற்குப் பின் என்ன நிகழும் என்பதை நீங்கள் அறிந்தால்தான், சரணாகதிக்குப் பின் என்ன நிகழும் என்பதை அறிவீர்கள்.

நீங்கள் மனவியல் ரீதியாக நீங்கள் இறக்கிறீர்கள். நீங்கள் மறுபிறப்பு எடுக்கிறீர்கள். உங்கள் மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும் என்பதை உங்களால் சொல்லமுடியுமா ? சொல்லமுடியாது.

அதைப்போலவே, சூரணாகதிக்கும் பின் என்ன நடக்கும் என்பதை உங்களால் கற்பனையோ அல்லது பாவனையோ செய்ய முடியாது. நீங்கள் பாவனையோ செய்துகொண்டிருந்தால், தெளிவாக இருங்கள், நீங்கள் சீரணாகதி செய்யவில்லை.

ஒரு ஞானகுருவினிடம் அன்பரொருவர் கேட்டார் "குருவே, நான் சரணாகதி செய்து விட்டேனா, இல்லையா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது ?''

குரு பதில் அளித்தார்: ''இக் கேள்வியே உன்னிடமிருந்து மறைந்துவிடும். பிறகு, நீ சரணடைந்து விட்டாய் என்பதை நீயே அறிந்துகொள்வாய்!''

ஆம், நீங்கள் சரணடைந்துவிட்டீர்களா, இல்லையா என்ற இக்கேள்வியே மறைந்துவிடும். உங்களுக்குள் அதைப் பற்றிய எந்தச் சந்தேகமும் இருக்காது. உங்களுடைய மொத்த இருப்பும் பேரானந்த வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படும். அங்கு சரணாகதி, தளர்வான பேரானந்தமும் மட்டுமே இருக்கும்.

அடுத்து நிகழப்போவதைப் பற்றி கவலைப்படமாட்டீர்கள். பொறுப்புகளிலிருந்தும், மன வலிகளிருந்தும், முழுமையாக நிம்மதியாக இருப்பீர்கள். உங்களுடைய

சரண்டைந்த பின், உங்களுடைய பொறுப்புகளையும், கடமைகளையும் எவ்வித சிரமமும் படாமல், எளிதாகவே செய்து முடிப்பீர்கள்.

பொறுப்புகளை எவ்வித சிரமமும் படாமல், எளிதாகச் செய்து முடிப்பீர்கள். மனத்தின் குறிக்கீடு இல்லாமலேயே, நீங்கள் சரியான செயல்களையே செய்வீர்கள்.

நீங்கள் சரணடைந்து விட்டதால், மறுநாளிலிருந்து அலுவலகத்திற்குச் செல்ல மாட்டீர்கள் என்று பொருள்கொள்ளாதீர்கள். நீங்கள் போவீர்கள், உங்கள் உடல், தன் வழக்கமான அலுவல்களை நிறைவேற்றும். எல்லாமே நடக்கும். ஆனால், உங்கள் இருப்பில் முழுமையான தளர்வு நிலையையும், உங்கள் மனத்தில் முழுமையான பேரானந்தமும், உங்கள் வாழ்க்கையில் முழுமையான குதூகலமும் உயிர்ப்பும் (IS ness) இருக்கக் காண்பீர்கள்.

நீங்கள் செய்யும்பொழுது, அங்கு முழுமையான பேரானந்தம் இருக்கும்.

நீங்கள் செய்யும்பொழுது, அங்கு முழுமையான தளர்வுநிலை இருக்கும்.

நீங்கள் 'நான்', 'எனது'களை சிரணாகதி செய்யும்பொழுது, ஒரு மிக அழகான 'நிகழ்காலம்', உயிரோட்டம் (IS ness) உங்கள் வாழ்க்கையில் நிகழும்.

நீங்கள் 'நான்' என்பதை சரணாகதி செய்யும்பொழுது, அங்கு முழுமையான பேரானந்தம் இருக்கும்.

இதுவே உங்களின் சீரணாகதி வெறும் உதட்டளவில் செய்யப்பட்டதா அல்லது உண்மையிலேயே செய்யப்பட்டதா என்பதை அளக்கும் 'அளவுகோல்'! இந்த உண்மையிலேயே சரணடைந்து விட்டீர்களா, இல்லையா என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

உங்களுடைய புரிதல் இதுவாகவே இருக்கும்: 'என்னுடைய உடல், இந்த சூரியன், இந்த நிலவு, இந்தக் கிரகம் என எல்லாவற்றையும் இயக்கும் அந்த சக்தி, என்னுடைய வாழ்க்கையையும் ஏன் இயக்க முடியாது ?

இந்தப் புரிதல் ஏற்பட்டவுடன் சீரணாகதி நிகழும், சீரணாகதி என்பது ஒரு மிகத் தெளிவான, உணர்வுப் பூர்வமான தீர்மானமே தவிர, வேறில்லை.