KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/இரண்டாவது வழி, முச்சைக் கவனித்தல்.Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

இரண்டாவது வழி, முச்சைக் கவனித்தல்.

உள்வாங்கி ஒவ்வொரு வெளியேற்றும்போதும், மேலெழுந்து உள்ளொடுங்குவதை உணருங்கள்.

வயிற்றுப் பகுதியில் அமைந்திருக்கும் தொப்புள் பகுதிதான் வாழ்வின் மூலதாரமாக சக்தியாக விளங்குகிறது.

அதனால் தொப்புள் பகுதி மீது கவனம் செல்லும்போது, உங்கள் உஉடலின் உயிர்ச் சக்தியை

உணர்வீர்கள். வயிற்றின் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம், இதயமும், மனமும் அடங்கி விடுவதை அறியலாம்.

இதுதான் இயல்பான, சௌகரியமான மூச்சு முறை -வயிற்றிலிருந்து செய்வது, இவ்வாறு மூச்சு விடுவதை நாம் மறந்து விட்டோம்.

குழந்தைகள் வயிற்றிலிருந்தே மூச்சு விடுகின்றன. சில சமயம், ஆழ்ந்த உறக்கத்தின்போது, நாமும் வயிற்றிலிருந்து மூச்சுவிடும் நிலைக்குத் திரும்பிவிடுவோம்.

  1. விபாசனாவின் மூன்றாவது அம்சம் மூக்கு வழியாக மூச்சு உள்ளே போவதைக் கவனிப்பது. மூக்கின் வழியாகச் செல்லும் குளிர்ந்த காற்றை விழிப்புணர்வோடு உணருங்கள். மூச்சு உள்ளே செல்வதும், வெளியேறுவதும் சிரமமில்லாமல் இயல்பாக நிகழ வேண்டும்.

நீங்கள் மேற்கண்ட இரண்டு முறைகளையோ அல்லது மூன்று முறைகளையுமோ ஒன்று சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் எதுவும் முயற்சி, சிரமம் இல்லாமல் நிகம வேண்டும்.

விபாசனாவை அமர்ந்தப்படியோ, நடந்தபடியோ செய்யலாம்.

அமர்ந்தபடி :

கால அளவு : 45 நிமிடங்கள், ஓய்வு : 15 நிமிடங்கள்.

முதுகு நிமிர்ந்திருக்க, முகம் நேராகப் பார்க்க, சௌகரியமான நிலையில் அமர்ந்து கொள்க. விழிகள் மூடியவாறு இயல்பாக மூச்சு விடுதல் வேண்டும்.

அமர்வு நிலையை மாற்ற வேண்டும்.

மூச்சு உள்வாங்குதல், வெளிவிடுதலின்போது, வயிறு மேலெழுவதையும், உள்ளொடுங்குவதையும் கவளிக்கவும். மூச்சின் மீது கடினமான கவனம் வேண்டியதில்லை, சும்மா பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.

வேறு எண்ணங்கள் கோன்றினாலும். உணர்வுகள் எழுந்தாலும், அனுமதிக்கவும், அவற்றையும் கவனித்துவிட்டு, மீண்டும் கவனம் மூச்சுவிடலுக்குத் திரும்பிவிட வேண்டும்.

கவனித்தலே முக்கியம்.

எதைக் எல்லாவற்றையும் கவனியுங்கள். (45 நிமிடங்களுக்குப் பிறகு, கவனிப்பதைக்கூட விட்டு விடவும். எல்லாவற்றையும் விட்டு விடவும். ஓய்வு எடுக்கவும்)..

நடந்தபடி :

காலம் : 20 நிமிடங்கள், ஓய்வு : 10 நிமிடங்கள்.

இதில், உங்கள் கவனம் முழுவதையும் உங்கள் கால்களின் மீதும், அவை பூமியைத் தொடுவதின் மீது, அமைய வேண்டும்.

வட்டமாகவோ, 15 காலடி வைப்பு போய் வருகிற முறையிலோ நடக்கலாம். இதை உங்கள் வீட்டில் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குப் போகும்போதோ,

வெளியே தோட்டத்தில் நடந்தபடியோ செய்யலாம்.

கண்கள் கீழே சில அடி அடி தூரம் முன்னால் பார்த்தபடி இருக்க வேண்டும். அமர்ந்தபோது வயிற்றைக் கவனித்ததுபோல, நடக்கும்போது, காலின் மேல் கவனம் இருக்க வேண்டும் !

வேறு எண்ணங்கள் வந்தால் அனுமதிக்கவும், இதில் இடையூறு என்பது எதுவும் இல்லை. உணர்வோ, வேறு எண்ணமோ கோன்றினால், அதைக் கவனித்த பிறகு, உங்கள் கவனத்தைக் காலைக் கவனிப்பதில் திசை திருப்பி விடுங்கள்.