தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You
செயல்முறை குறிப்புகள் :
விபாசனா செய்ய மூன்று வழிகள் உள்ளன.
- உங்கள் உடல், உங்கள் செயல்கள், உங்கள் மனம், உங்கள் இதயம் ஆகியவற்றின் மீது ஆழ்ந்த விழிப்புணர்வு கொள்ளுதல்.
- நடந்தாலும், கையை அசைத்தாலும், சிரித்தாலும், விழிப்புணர்வுடன் செய்க.
செயல் செய்வது நீங்கள்தான் என்பதைச் சரியாக
அறிந்திருக்க வேண்டும். தயார் நிலையிலேயே இருக்க வேண்டும்.
ஒரு வினாடிப் பொழுதுகூட விழிப்புணர்வற்ற நிலையில் கடந்து போய்விடக்கூடாது. ஒரு செயல்கூட உங்கள் கவனத்திற்கு வாரமல் போய்விடக்கூடாது.
உங்கள் இதயக்கையும், மனக்கையும் கவனியுங்கள்,
உங்களது இதயத்தின் தோன்றும் ஒவ்வொரு உணர்வு பற்றியும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்கள் மனத்திற்குள் தோன்றும் மற்றும் மனத்திலிருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு எண்ணம் பற்றியும் கவனம் கொள்ள வேண்டும்.
எந்தவித அபிப்பிராயமும் கொள்ளாமல், எதையும் சீர்தூக்கிப் பார்க்காமல், வெறும் பார்வையாளராக இருங்கள்.