KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/செயல்முறை விளக்கம் :Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

செயல்முறை விளக்கம் :

காலம் : 21 நிமிடங்கள்.

காலையில் கண் விழித்தவுடன், இதைப் பயிற்சி செய்யவும். உதய வேளையில் எல்லா உயிர்களும் கதிரவன் பக்கம் திரும்புகின்றன; சக்தி பெற அந்த ஒளிப் பேரலையின் பகுதியாக மாறிவிடுங்கள்.

படுக்கையில் படுத்தபடியே, கண்களை மூடிக் கொண்டு, மூச்சை உள்ளே இழுக்கவும், அவ்வாறு உள்மூச்சு வாங்கும்போது ...

பொன்னொளி உங்கள் தலை வழியாக உங்களுக்குள் பாய்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் கால் கட்டை விரல் வரை அந்த ஒளி பாய்ந்து நிரப்புகிறது. அந்தக் கால் விரல்கள் வழியாக அது வெளியே பாய்கிறது !

இது வெறும் கற்பனை செய்து கொள்ளூர்ம் காரியமன்று. நீங்கள் செய்தால், அது நடந்தே விடுகிறது. சக்தி உங்களுக்குள் நிச்சயமாகப் பாயவே செய்கிறது.

வெளிவிடும்போது ...எதிர்மறையாக மூச்சை கற்பனை செய்யுங்கள்.

ஒரு பெரிய இருள், உங்கள் கால் விரல் வழியாக, உங்களுக்குள் புகுந்து தலைவரை பயணம் செய்வதாக, அந்த இருள் தலைவழியாக வெளியே போய் விடுகிறது.

பொன்னொளி, ஆண் சக்தி - வலிவு தந்து நிலை நிறுத்துவது.

இருள், பெண் சக்தி - அமைதிப்படுத்துவது,

இரவு படுக்கப்போகும் முன்பும் இதைச் செய்யலாம். செய்யும்போது உறக்கம் வந்துவிட்டால், அதுவும் ஒர் இனிய அனுபவம்தான்.

இரண்டு அல்லது மூன்று மாத காலம் இப்பயிற்சியைச் செய்து வருக. பெரிய மாற்றங்கள் உங்களுக்குள் நிகழ்ந்திருப்பதைக் காண்பீர்கள்.

உங்கள் மூலாதார சக்தியை மேல்நோக்கி கொண்டு செல்ல இது சிறந்த பயிற்சி.

உங்கள் முதுகின் கீழ்ப் பகுதியில் எப்போதும் இருந்து வந்த பாரத்திலிருந்து விடுபட்டு விட்டதை உணரலாம். உங்களது சக்தி மேலே உள்ள மையங்களை நோக்கி நகரும்.