வாழும் நானிகளே சாட்சி
- 'ஏன் பிறந்தோம் ?' என்ற கேள்வி உணர்வுப் பூர்வமாக உள்ளத்திலிருந்து எழுவதுதான், உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்வதற்கான அடிப்படைத் தகுதி.
- மனிதன் ஏன் பிறப்பெடுத்தான் என்பதற்கு ரிஷிகள் சொல்லும் பதில்,
'நிலையான,
நிம்மதியான,
எதனாலும்,
எப்போதும் ஆனந்தத்தை (முழு சுகத்தை) அடைய வேண்டும் என்பதுதான் மனிதப் பிறப்பின் அடிப்படை நோக்கம்'. மேலும் 'ஆனந்தத்தில் லயித்திருந்த நாம் நமக்கே ஆரம்பித்து வைத்த கண்கட்டு
விளையாட்டுதான் மனித பிறப்பு. இந்த ஒரு உண்மை மட்டும் உங்களுக்குப் புரிந்துவிட்டால், விளையாட்டு சுவராஸ்யமாகிவிடும்'என்கிறார்கள். இந்தக் கூற்றுகள் உண்மை என்பதற்கு வாழும் ஞானிகளே சாட்சி. இதுபோன்ற சத்யங்கள் மனிதனுக்குத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் சுகம், திருப்தி, சமாதானம், நிம்மதி என்று மனிதன் தேடுவது எல்லாமே இந்த நித்யமான ஆனந்தத்தைத்தான். இதுதான் மனிதனின் உச்சபட்ச குறிக்கோள். இதை அடையத்தான் மனிதன் பிறந்தான்.
மனிதன் தேடுவது மனிதனுக்கு வெளியே இல்லை. அது மனிதனுக்குள்ளேயேதான் இருக்கிறது. உங்கள் பிறப்பின் நோக்கமான ஆனந்தத்தை அடைய செயல்படுங்கள். ஒரு நிமிடம்கூட வீணாக்காதீர்கள்.