KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/பித்தன் புத்தனாகும் நேரம்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

பித்தன் புத்தனாகும் நேரம்

  • ஜனனத்திற்கும், மரணத்திற்கும் இடையில்தான் எல்லா வேறுபாடுகளும் தெரிகிறது. இருக்கிறது. அப்புறம் இல்லை.

மனிதன் மரணிக்கும்போது ... உடல் இறக்கிறது. மனம் தன் கதையைத் தொடர்கிறது. மீண்டும் ஜனனம் ! மீண்டும் மரணம் ! சாம்பல்கூட மிஞ்சாத அளவுக்கு உடலை எரித்தாலும், சாகாத மனம் சாக வேண்டும். இந்த நிகழ்வுதான் நிஜமான மரணம்.

இந்த சுபநிகழ்வு நிகழும்போதுதான் மனிதன் தெய்வமாகின்றான். பித்தன் புத்தனாகின்றான்.

மனம் உயிரோடிருக்கும்வரை நீங்கள் வாழ்வதில்லை. மனமே உங்கள் மூலமாக வாழ்கிறது. மனம் மரணிக்கும் போதுதான் முதல்முறையாக நிஜமாய் நீங்கள் பிறக்கிறீர்கள்.

ஞானமடைதல்

ஞானமடைய, சொடுக்கிடும் நேரத்தைவிட குறைவான நேரத்தையே இறைசக்தி எடுத்துக் கொள்ளும். 99.0°C-ல் இருக்கும் நீர் 100°C-ல் நீராவியாக மாற எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளுமோ, அவ்வளவு நேரம்தான் திடமான மனம் கரைய எடுத்துக் கொள்ளும்.

ஆனால் சாதாரண நீர் 99.9℃ அடைய எவ்வளவு நேரமாகும். அதற்கு எவ்வளவு வெப்பமும், சக்தியும், முயற்சியும் தேவைப்படும். ஒரு வேளை நீர் பனிக்கட்டியாக உறைந்து போயிருந்தால் ...

  • பலர் மனம் பனிக்கட்டிதான்.

உங்களுக்குள் உஷ்ணம் உருவாக்கப்பட வேண்டும். உழைக்க ஆரம்பியுங்கள் ... நெருப்பு பற்றிக்கொண்டால், அடுத்த நிமிடமே காணாமல் போகும் கற்பூரக்கட்டியைபோல மனம் காணாமல் போகும் அற்புதம் நிகழும்.