Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
நீ கண்ணால் பார்ப்பதில்லை ...
- உங்களுக்கு ... யார் சொன்னது ? வாழ்வு துக்ககரமானதென்று. யார் சொல்ல முடியும் ? வாழ்வு ஆனந்தமயமானதென்று. இரண்டையுமே உங்களுக்கு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
- உங்களை அழிப்பது, உங்களைக் காப்பது இரண்டுமே உங்களுக்கு நீங்கள் செய்வதைவிட வேறு யாரும் அதிகமாகச் செய்துவிட முடியாது.
- 'நான் இப்படிப்பட்டவன்' 'எனக்குப் பிடித்தது ... பிடிக்காதது'
'என்னைப் பொறுத்தவரையில்'
- இதுபோன்ற கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் உங்களுக்கு தெளிவாய் தரும் மனத்தின் ஒரு அம்சத்திற்கு பெயர்தான் பர்ஸனாலிட்டி (Personality).
கண்கள் வழியாய் எதையும் நீங்கள் பார்ப்பதில்லை. உங்களின் பர்ஸனாலிட்டி வழியாகத்தான் எல்லாவற்றையும், பார்க்கிறீர்கள். புரிந்து கொள்கிறீர்கள். அதனால் ஒருவருடைய கருத்தைப்போல் இன்னொருவர் கருத்து இருப்பதில்லை. காரணம் பா்ஸனாலிட்டி என்பது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது.
- Personality-ல் இருந்து Individuality-க்கு உங்களை நகரச் செய்வதே ஆன்மீகம். நகருங்கள், ஆனந்தத்துக்குள் நகர ஆரம்பிப்பீர்கள்.