KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/இது முடிவுக்கு வரவேண்டியதுSign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

இது முடிவுக்கு வரவேண்டியது

  • எதிர்காலம், நிகழ்காலம், இறந்த காலம் - என மூன்று காலங்கள் இருந்தாலும் நம் கையில் எப்போதுமே இருப்பது நிகழ்காலம் மட்டுமே.
  • நம் கையை விட்டுப்போன இறந்தகாலம், இன்னும் நம் கைக்கே வராத எதிர்காலம் - இது இரண்டைப் பற்றிய கவலைதான் நம் கையில் இருக்கும் நிகழ்காலத்தை அனுபவிக்க விடாமல் தடுக்கின்றன.
  • ஏதாவதொரு காரணம் சொல்லி, எதிர்காலத்திலேயே உங்களை மனமானது வாழவைக்கும்.

எதிரிலிருப்பவர்களையும், தொடர்ந்து இழக்கச் செய்து கொண்டேயிருக்கும். இந்தச் செயல் முடிவுக்கு வரவேண்டிய ஒன்று.

  • எப்போதுமே நம்மிடமிருக்கும் நிகழ்காலத்தை, எப்போதுமே நம்மிடமில்லாத இறந்தகால மற்றும் எதிர்காலம் பற்றிய நினைவுகள், கவலைகளுக்காக பலி கொடுப்பது புத்திசாலித்தனமா ?

யோசியுங்கள்…

மனிதர்களை மனிதர்களாக மதியுங்கள்

  • பலரும் இயல்புக்கு மாறாக, தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறபடிதான் ஆட்களைத் தேடுகிறார்கள்.
    • கற்பனையில் இருக்கும் தன் எதிர்கால மனைவியின் அழகுக்கும், அன்பிற்கும், நிஜத்தில் வந்திருக்கும் மனைவியின் அழகுக்கும், அன்பிற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.

அதேபோல் தனது கற்பனையில் இருக்கும் எதிர்கால கணவனின் பண்பிற்கும், பாசத்திற்கும் நிஜத்தில் வந்திருக்கும் கணவனின் பண்பிற்கும், பாசத்திற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.

காரணம் இயல்புக்கு மீறிய அதீத கற்பனைகள்தான்.

  • தன்னைப் போன்ற எல்லாவிதமான உடல் மன தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு பெண்தான், தனக்கு வரப்போகும் மனைவியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம், அதீத கற்பனை என்ற கரிப்புகையால் மறைக்கப்பட்டு விடுகிறது.
  • கற்பனையில் தங்களுக்கு மகாராணியை எதிர்பார்ப்பவர்கள் ... இயல்பாகவே தங்களை மகாராஜாக்களாக கற்பனை செய்து கொள்வதும், அவர்களின் மனிதின் அடி ஆழத்தில் கா்வம் உருவாகுவதும் இயல்பு. இந்த கர்வம்தான் மலர் போன்ற பெண்மையை மதிக்கத் தவறி மிதிக்கத் தூண்டுகிறது.
  • இதே போன்று கற்பனையில் அருமையான ஹீரோவை எதிர்பாா்ப்பவர்கள் ...
  • இயல்பாகவே தங்களை அருமையான ஹீரோயினாக கற்பனை செய்துகொள்வதும், அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கா்வம் உருவாகுவதும் இயல்பு. இந்த கா்வம்தான் சில நேரங்களில் குடும்பத்தை குதூகலமாக வைத்திருக்கும், 'தாய்மை குணம்'முழுமையாக வெளிப்படாமல் தடுத்து விடுகிறது.
  • மற்றவர்களைப் பற்றிய கற்பனைகளை எரித்து விட்டு, நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்க ஆரம்பியுங்கள், நிம்மதி மலரும் !

ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடர ...

  • இந்த அணுகுமுறை பணத்திலிருந்து ... மதம் ... காமம் வரை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
  • ஒரு வெறியிலிருந்து தப்பிப்பதற்காக அந்த விஷயத்தை வெறுக்க ஆரம்பித்தால், வெறி மனதில் இன்னும் ஆழமாகச் சென்று மறைந்து கொள்ளும். நிலைமை முன்பைவிட மோசமாகி விடும்.
  • உங்கள் மனதை ஆராயுங்கள். உள்ளுக்குள் இருக்கும் வெறி, வெறுப்பு, இரண்டையும் பட்டியலிடுங்கள். இரண்டையுமே தூக்கி எறியுங்கள்.

விழிப்புணர்வோடு அணுகினால் 'மத்தியில் வாழ்வது' அதாவது ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்பது புரிந்துவிடும்.

  • உங்களின் ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடரும்.