Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
அருமையான உலகத்தை உருவாக்கலாம் வாங்க!
அருமையான வாசகத்தோடு துவங்குகிறேன். 99 முறை செய்த நல்லதையெல்லாம் விட்டு விட்டு ஒரே ஒருமுறை செய்த தவறை கணக்கில் கொண்டு கோபிப்பது - மனிதன். 99 மூறை செய்த தவறுகளையெல்லாம் விட்டுவிட்டு, ஒரே ஒரு முறை செய்த நல்லதுக்காக மனதார நன்றியோடு ஆசீர்வதிப்பது - கடவுள். நீங்கள் மனிதனா ? கடவுளா ? சுற்றியிருப்பவர்களிடம் தவறு கண்டுபிடித்துக் கொண்டே இருப்பது சிலருக்கு வெல்லம் சாப்பிடுவதுபோல சுவராஸ்யமான விஷயம்.
- மற்றவர்களிடம் தவறு கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பதுதான் நாம் தவறாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி.
- சரியாக வாழும் ஒரு மனிதன் மற்றவர்களிடம் நல்லதைதான் முதலில் கண்டு கொள்வான். இவர்களுக்கு தவறுகள் இரண்டாவது பட்சமாகத்தான் தெரியும். மற்றவர்களிடம் நல்லதை இனம் கண்டுகொள்ள தெரிந்தால் உலகமே நல்லவர்களால் நிறைந்திருப்பது கண்களுக்குத் தெரியும். 'ஆஹா! என்ன அருமையான உலகம்!' என்று நினைக்கத் தோன்றும்.
மற்றவர்களிடம் தவறையே இனம் கண்டுக் கொண்டு இருந்தால் உலகமே கெட்டவர்களால் நிறைந்திருப்பதாகத் தெரியும். 'உலகத்தில் நல்லவர்கள் அரிது.
உலகமே மோசம்' என்று நினைக்கத் தோன்றும்.
நீங்கள் எதை மிகைப்படுத்துகிறீர்கள் ? அதுவே உங்களின் உலகத்தை வடிவமைக்கிறது.