Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
சந்தோஷத்தை மறைப்பது ...
- நியாயம், அநியாயம் என்பது மனிதநேயத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்பட வேண்டியது.
- ஆனால் வழக்கில் நியாயம், அநியாயம் பற்றி நிலவும் கருத்துக்கள் வேடிக்கையானது. இது பற்றுதலை அடிப்படையாகக் கொண்டது... அதாவது ... நியாயம் - தனக்கு சாதகமாக நடக்கும்
எல்லாமே நியாயமான விஷயங்கள்தான். அநியாயம் - தனக்கு சாதகமாக நடக்காத எல்லாமே அநியாயமான விஷயங்கள்தான்.
- 'மருமகள் உடைத்தால் பொன் சட்டி, மாமியார் உடைத்தால் மண் சட்டி'
- இந்தப் பழமொழி நியாயம், அநியாயம் பற்றிய கருத்து தலைகீழாக மாறிய பின்தான் சமூதாயத்தில் நுழைந்திருக்கிறது.
இப்படி தனக்கொரு சட்டம், ஊருக்கொரு சட்டம் என்று வாழ்பவர்களால் வாழ்க்கையை அனுபவித்து வாழ முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் 'பாசம் கண்ணை மறைத்து விட்டது' என்று கூறி தப்பிக்கலாம்.
- உண்மையில் பாசம் கண்ணை மறைப்பதில்லை. பற்றுதல்தான் கண்ணை மறைக்கிறது.
- அது கண்ணை மாத்திரம் மறைப்பதில்லை. சந்தோஷத்தையும் சேர்த்து மறைத்து விடுகிறது.
- பற்றைப் பற்றுவதை நிறுத்துங்கள், சந்தோஷம் சந்தடியில்லாமல் உங்களுக்குள் வந்து வெளி செல்லும்.
மீண்டும் மீண்டும் வரும் மீளாதுன்பங்கள்
- ரசகுல்லா என்ன ஒரு அருமையான சுவை. - ஒன்றைச் சுவைத்தால் எவ்வளவு சந்தோஷம்! இரண்டு ... மூன்று ! ! ... நான்கு ? ... ஏழு, எட்டு சுவைக்க எவ்வளவு மயக்கம் ? தலைச்சுற்றல் ? எவ்வளவு கஷ்டம் ?
- அனுபவி! அனுபவித்தே ஆகவேண்டும்! - என்ற 'வெறி' அனுபவிக்கும்வரை இருக்கிறது. நினைத்தது, நினைத்த அளவுக்கு நடக்கவில்லை என்றால் உடலே சிறிது நடுங்குகிறது, வியர்க்கிறது. இவ்வளவு கொள்ளை ஆசை, அனுபவித்த பின் எங்கே போனது ? அடுத்த நிமிடம் வெறி சலிப்பாகிவிட்டதே! அதுவரை ஈர்த்தது. இப்போது ஈர்க்கவில்லையே ஏன் ?
மனிதன் மீண்டும், மீண்டும் கஷ்டத்திற்குள்ளாவதும், துன்பமடைவதும் எதனால் ? இவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவது சாத்தியமா ?
பதில் : நிச்சயம் சாத்தியமே.
எப்படி? அடுத்த பக்கம் புரட்டுங்கள் பதில் காத்திருக்கிறது உங்களுக்காக.
தரங்குறைந்த மனதின் செயல்
- தரங்குறைந்த மனம்தான் -உணர்ச்சி வேகத்தில் உசுப்பப்படும். ஊர் பேச்சு கேட்டு ஆடும். தவறைக்கூட சரியென சொல்லும். சரியானதைக்கூட தவறென வாதிடும்.
- எனவே, மனிதர்களைத் தரம் பிரித்துப் பார்ப்பது தரங்குறைந்த மனதின் செயல்.
- மனிதத் தரம் உயரும்வரை தரம் பிரித்தல் ஒரு தொடர் கதை.
- தரமான மனிதனால் தரம் பிரித்து பார்க்க முடியாது. அதற்கு அவசியமும் இருக்காது.
- சரியை சரியாய் புகழ்வதும் தவறைக்கூட சரியாய் புரிய வைப்பதும் நடுநிலையாய் வாழத்தெரிந்தவனுக்கே சொந்தம்.
- எதிரியையே நண்பனாக்கும் வல்லமை சரியான அன்பிற்கு உண்டு. நண்பனையே எதிரியாக்கும் வல்லமை தவறான அன்பிற்கு உண்டு. உண்மையான அன்பு 'சரி தவறுக்கு' அப்பாற்பட்டது.
- அன்பு என்ற பெயரில் மனிதன் நிகழ்த்தும் பாச நாடகம் 'சரி தவறுக்கு' உட்பட்டது.