KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/சிற்றின்பம் பேரின்பம்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

சிற்றின்பம் பேரின்பம்

  • இன்பம் என்பது வெளிப்பொருட்களை சார்ந்ததல்ல. அது உள்ளுணர்வு சம்பந்தப்பட்டது. ஆனால் மனிதர்கள் வெளிப் பொருட்கள் சம்பந்தப்பட்டதாகதான் இன்பத்தைப் பற்றிப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இவைதான் சிற்றின்பங்கள்.
  • திகட்டாத, குறையாத ஆனந்தத்தை தராத எல்லாமே சிற்றின்பங்கள்தான்.
  • ஆனந்தத்தை அளிப்பது பேரின்பம். ஆனந்தத்தை அழிப்பது சிற்றின்பம்.
  • மனம் சிற்றின்பங்களைத்தான் பெரிதும் விரும்பும்.

காரணம், ஒரே ஒருமுறை பேரின்பத்தை ருசித்தால் போதும், மனம் அழிந்து விடும்.

  • தன் தற்காப்புக்காக, மனமானது மனிதனை சிற்றின்பங்களைக் காட்டித்தான் அனுபவி ! அனுபவி! என்று தூண்டும்.
  • ஆகவே, அனுபவிக்க நினைப்பதையெல்லாம் அனுபவி, அப்புறமாவது அவை திருப்தியையும் ஆனந்தத்தையும் தராது எனப் புரிந்துகொள்.
  • பெரிய பெரிய எதிர்பார்ப்புகளுக்காக, சின்னச் சின்ன சந்தோஷ மலர்களை சூடி வரும் வாழ்வென்னும் அழகுக் குழந்தையைத் தண்டிக்காதீர்கள்.

எதிர்ப்புகளைத் தாண்டி ஆழ அனுபவித்து வாழ்பவர்... சின்னச் சின்ன நிகழ்வுகளிலேயே பேரின்பத்தில் மூழ்கிப் போவார்.

மனிதனை துன்பத்தில் மூழ்கடிப்பவை

  • ஆட்டிவிடப்பட்ட பெண்டுலம் தொடர்ந்து இரண்டு பக்கமும் அலைந்து கொண்டே இருக்கும். வலப்பக்கம் நகர்ந்த பெண்டுலம் வலது முனையை அடைந்த அடுத்த நொடியே இடது முனை நோக்கி நகர ஆரம்பித்துவிடும்.
  • ஆசை என்ற உந்துதலால் தள்ளப்பட்ட மனமும் 'வெறி' அல்லது 'வெறுப்பு' இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொள்ளும்.
  • சில நேரம் வெறி ... சில நேரம் வெறுப்பு ...
  • என்ற கணக்கில்தான் பலரின் மொத்த வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது.
  • கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுமே சமுதாயத்தின் சில அம்சங்களில் வெறியாக இருப்பது, வேறு சிலவற்றை வெறுப்பது என்பது பரவலாகிப்போன பரிதாபம்.
    • பாசமும், பகையும்... சில நேரங்களில் வெறியாகவும், சில நேரங்களில் வெறுப்பாகவும் வெளிப்படுகிறது. அது மதம் மீதான வெறியாகவோ வெறுப்பாகவோ வெளிப்படுகிறது. காமம் மீதான வெறியாகவோ, வெறுப்பாகவோ, பேர், புகழ் போன்றவற்றின் மீதான வெறியாகவோ, வெறுப்பாகவோ இப்படி மனித மனம் வெறி அல்லது வெறுப்பை பற்றிக் கொண்டு, மனிதனை படாதபாடு பட வைக்கிறது.
  • நீதிநெறிகளை

தங்களுக்கு சாதகமாக்கி சிலவற்றை வெறுப்பதும், நீதி நெறிகளை தங்கள் மனவெறிக்காக மீறுவதும் -இரண்டுமே மனிதனை துன்பத்தில் மூழ்க வைத்துவிடும்.

திண்டாட்டமில்லா தூய நிலை

  • நாடாளும் பலம் பெறுவதாலோ, பணம் குவிந்து விட்டதாலோ கொண்டாட்டம் பிறந்துவிடாது. தன்னை ஆளும் பலம் பெறுவதாலும், உள்ளத்தை ஆனந்தமாய் அனுபவிக்கும் குணம், பக்குவம் உருவாக்குவதாலும்தான் கொண்டாட்டம் பிறக்கும்.
  • திண்டாட்ட உணர்வுதான், உங்களுக்கும் கொண்டாட்டத்திற்கும் நடுவில் தடைச் சுவராய் இருக்கிறதென உங்களுக்குத் தெரியுமா ?
  • கிருஷ்ண, புத்த நிலையில் இருப்பவனை எந்தவொரு திண்டாட்டமும் அசைக்க முடியாது.

காரணம் திண்டாட்ட உணர்வை உதறியெறிந்துவிட்ட தூய நிலைதான்!

  • திண்டாட்ட உணர்வென்னும் நோய் ஒருவனைப் பிடித்திருக்கும்வரை அவன் கண்ணுக்குத் திண்டாட்டங்கள் மட்டுமே தெரியும்.
  • கொண்டாட்ட உணர்வு ஒருவனுள் உதயமாகி விட்டால் அவனுடைய கண்களுக்கு எல்லாமே கொண்டாட்டமாகத் தெரியும்.

ஒடு! ஆடு! அனுபவி!

  • எதுவாக இருந்தாலும் அது நிலையாக நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று நாம் ஏன் விரும்புகிறோம் ? இந்த ஒரு கேள்வி உள்ளே எழுந்தால் போதும். அதுவே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMத்திற்கு அழைத்துச் செல்லும்.
  • மனிதன் சந்தோஷத்திற்காகவும், தற்காலிகச் சுகத்திற்காகவும் அலைவது, கோடீஸ்வரன் கோடீஸ்வரனாக இருக்கும்போது கையேந்தி பிச்சையெடுப்பதற்குச் சமம்.
  • மித்யானந்தம் - சிற்றின்பம், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMம் - பேரின்பம்
  • THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆனந்தம் உள்ளே இருப்பது மறந்து போனதால்தான், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆனந்தத்தை வெளியே தேடித் தேடி மரத்துப் போகிறான் மனிதன். பின் மரித்துப் போகிறான்.
  • எந்த ஒரு சுகமாக இருந்தாலும், அந்த சுகம் அடைந்து முடிந்த பிறகு அனுபவித்த திருப்தி முழுமையாகக் கிடைப்பதில்லை.

காரணம் என்ன ?

  • அனுபவிப்பதை அடையும்வரை இருந்த ஆர்வம்! அடைந்து அனுபவித்த பிறகு மாயமாய் மறைந்து போகிறதே! ஏன் ?

மனிதன் விரும்பும்போதெல்லாம், விரும்பிய அளவு சுகத்தை அனுபவிக்க வழி ஏதும் இருக்கிறதா? இவைகள்தான் இன்றைய மருத்துவ ஆராய்ச்சியை ஆன்மீகம் நோக்கி திருப்பியிருக்கும் வெகு பொது ஜன எதிர்பாா்ப்புகள்.

  • மனிதன் இப்படி எதிர்பார்ப்பதின் மூலகாரணம்தான் என்ன ? அது எங்கேயிருக்கிறது ?

இதற்கு ஒரு அருமையான ஜென் கூற்று பதில் சொல்கிறது ; 'முடிந்தவரை ஓடு! விடியும்வரை ஆடு! ஆசை தீர அனுபவி!' -தவறே இல்லை. அப்பொழுதாவது உனக்குத் தெரியட்டும் ! நீ தேடுவது வெளியே இல்லை என்று ...