Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
சுசுரனுக்கு பிறந்த குழந்தைகள்
- நன்றாக இருந்தால் வேறோடு பிடுங்குவது! இல்லை என்றால் காரித்துப்புவது! வெறுத்து ஒதுக்குவது ! இது மனதின் முக்கியமான குணங்களில் ஒன்று.
- வெறியும் வெறுப்பும் மனதின் கறுப்பு பக்கங்கள்.
- மற்றவரை ஏமாற்றி தான் ஏமாறுவது வெறி. தன்னை ஏமாற்றி மற்றவரை ஏமாற்றுவது வெறுப்பு.
- வாழத்தெரிந்தவன் எதையும் வெறுக்க மாட்டான். வாழத் தெரியாதவன் எதன் மீதும் வெறிகொள்வான் - வெகு எளிதாக!
- வெறிக்கு ஒரு காரணம். வெறுப்புக்கு ஒரு காரணம்.
இரண்டுமே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். எதன் மீதும் ஏற்படலாம். காரணம், இரண்டுமே ஆசை என்னும் அசுரனுக்குப் பிறந்த குழந்தைகள்.
- ஆசை ஓயாதவரை வெறியும், வெறுப்பும் உங்களை உலுக்கும்.