KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/வெற்றிக்கான முதலிடுSign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

வெற்றிக்கான முதலிடு

  • விவாதம் = வீண் வாதம்.
  • விவாதம்
    • நாக்கிற்கு பிடித்த கேடு,
    • தொண்டையைப் பிடித்துக் கொண்ட தொல்லை,
  • நட்பில் கலக்கப்படும் நச்சு,
  • அன்பிற்கு வைக்கப்படும் அணுகுண்டு, இப்படியெல்லாம் சொல்வது மிகைப்படுத்துவது போலத் தோன்றலாம்.கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால்...உண்மை புரிய வரும்.
  • விவாதத்தின் மூலம் மற்றவருக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்க முயற்சிப்பது தீவிரவாதத்தால் நட்பை வளர்க்க முயற்சிப்பது போன்றது.
  • எல்லா விவாதங்களும் வருத்தத்தின் விருத்தங்கள்.

ஒரு விவாதத்தை நீடிப்பது ஒரடி வரப்பிற்காக நீதிமன்றத்தை நாடுவது போன்றது. நம்மில் பலரிடம் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லை. அதை உணராத காரணத்தால்தான் அடுத்தவர் விட்டுக் கொடுக்க வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  • விவாதத்தை களைந்தெறியுங்கள் ... விவேகம் பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும். விவாதம் குறைய குறைய ... உங்களின் சக்தியும், நேரமும் மிச்சமாக ஆரம்பிக்கும்.
  • வெற்றிக்கான முதலீடு பெருக ஆரம்பிக்கும்.