KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/முதிர்ச்சி பெறும் வழிSign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

முதிர்ச்சி பெறும் வழி

  • நமக்குத் ... தெரிந்தவைகளுக்கு அப்பால்... தெரியாதவைகளுக்கு அருகில் ... நமக்குத் தெரிந்தும் புரியாத ஆனந்தம் நிறைந்திருக்கிறது.
  • 'எனக்குத் தெரியும்' - என்ற இந்த எண்ணம் எந்தச் செயலில் என்று உதிக்கிறதோ, அன்றே அச்செயலின் வளர்ச்சி குன்ற ஆரம்பித்துவிடும்.
  • 'எனக்கு எல்லாம் தெரியும் ... ' - என்ற இந்த எண்ணம் பிறந்துவிட்ட அடுத்த நொடியே அச்செயலின் வளர்ச்சி நின்றுவிடும்.

காரணம்,

உங்களுக்குத்தான் எல்லாம் தெரிந்து விட்டதே! முதிர்ச்சிக்குப் பதிலாக மனிதன் தளர்ச்சியடைய ஆரம்பித்து விடுவான்.

'எனக்குத் தெரியாது ...' - என்ற இந்தத் தெளிவு உதித்த நொடியிலிருந்தே மனிதனின் வளர்ச்சியில் புது வேகம் பற்றிக் கொள்ளுளும். ஒரு மலர் போல் மனிதன் தானாக மலர்வான்.

வாழ்க்கையின் ஆசான்கள்

  • ஆனந்தம் நிரந்தரம், துக்கம் நிரந்தரமான நிரந்தரமின்மை.
  • வாழ்க்கையில் ஏற்படும் திடீர் அதிர்ச்சிகள்தான் நம்மை வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கு அழைத்துச் செல்லும் வானூர்திகள்.
  • மனதிலிருக்கும் பயம், துக்கம், மனவேதனை போன்றவை நீங்கள் எந்த வேஷமெடுத்தாலும் உங்களை உலுக்கிக் கொண்டேயிருக்கும் நிரந்தரமான நிரந்தரமின்மைகள். இவை உங்களிடமிருந்து நிரந்தரமாகத் துரத்தப்படும்வரை என்ன செய்தாலும், எதைச் சாதித்தாலும் அதில் துக்கமானது இழையோடிக் கொண்டேயிருக்கும்.
  • அறியாமை இருளுக்குள் தூங்கும் நம் மனத்தை உலுக்கி, விழிக்கச் செய்யும் சம்பவங்கள்தான் -வாழ்வில் நாம் சந்திக்கும் எதிர்பாராத அதிர்ச்சிகளும், திருப்பங்களும்.
  • நிரந்தரமில்லா துக்கத்தை தொலைத்து நிரந்தரமான ஆனந்தத்தை அடைய, எந்தவொரு அதிர்ச்சியையும் ஆர்வத்தோடு எதிர்கொள்ளலாம். தயங்க வேண்டியதில்லை.
  • வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் தரும் 'எதிர்பாரா அதிர்ச்சிகள்' என்னும் ஆசான்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முன்னேற்றம் காணுவீர்கள்.

லீலை

  • மொத்தப் பிரபஞ்சமும் இறைவனின் விளையாட்டுக் களம். இந்த விளையாட்டுக் களத்தில் ... இறைவனின் அசைவுகள் ... ஒருவருக்கு நடனமாகவும், ஒருவருக்கு ருத்ர தாண்டவமாகவும், ஒருவருக்கு அமைதியின் முழக்கமாகவும் தெரிவதே லீலை.
  • ஆக்கல்,

அழித்தல்,

காத்தல்

  • என்ற மூன்று செயல்களையும்

சர்வசாதாரணமாக நிகழ்த்தும் இறைசக்திதான் நம்மையும் ஆட்டிப்படைக்கிறது.

  • மொத்தப் பிரபஞ்சத்தின் மீது எந்த அளவுக்கு இறைவனுக்கு அக்கறை இருக்கிறதோ, அதே அளவுக்கு உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லின் மீதும் இறைசக்திக்கு அக்கறை இருக்கிறது.

உங்கள் உடலில் ...

எந்த செல் எவ்வளவு நாள் வாழ வேண்டும், எந்த செல் எப்போது அழிய வேண்டும் என்று திட்டமிடுவது நீங்கள் அல்ல. எந்த செல் எப்போது உருவாக வேண்டும், எந்தக் காரியம் எப்போது அழிய வேண்டும் என்று திட்டமிடுவதும் நீங்கள் அல்ல.

  • அனைத்தையும் திட்டமிட்டு திட்டமிட்டபடியே எல்லாவற்றையும் திண்ணமாய் நடத்தி முடிப்பது இறைவன்.

எது நடந்தாலும் அது இறை கணக்குப்படி நல்லதில்தான் முடியும்.

  • முடிவுவரை பொறுத்திராமல் நடுவில் பார்த்தால் சில நேரம் நம்மைச் சுற்றி கெட்டது நடப்பது போலத்தான் தோன்றும். ஏன்! 'இறைவன் என்ற ஒருவன் இருக்கிறானா' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.
  • 'எல்லாம் இறைவன் விளையாட்டு' என்னும் உண்மை புரியாதவரை விளையாட்டு வினையாகத்தான் தெரியும். புரிந்து விட்டால் - வினைகூட விளையாட்டாய் தெரியும்.