Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
நம் கட்டுப்பாட்டில் நாமில்லை ... ஏன்?
- கிளா்ந்தெழுவதும், பொங்கியெழுவதும் முழுக்க முழுக்க உங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லாவிட்டால்... கொந்தளிக்கும் உணர்ச்சிகள் அவை வாழ, உங்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று அர்த்தம்.
- கோபிப்பதும்,
- ஆசைப்படுவதும், துக்கப்படுவதும் பெரும்பாலும் நம் கையிலில்லை. இப்படி நிகழ்வது ஏன் ?
- ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமானவன், தனியானவன். இது நிகழ்வது எப்படி?
- தொடர்ந்து துன்புறுத்துபவர்கள், காரணமில்லாவிட்டாலும் கவலைப்படுபவர்கள், தொட்டதுக்கெல்லாம் எரிச்சலடைபவர்கள். அப்படித் தொடர்வது எதனால் ?
- ஏன் ? எப்படி ? எதனால் ? இந்த மூன்று கேள்விக்கும் ஒரே பதில் - அதுதான் மனித சுபாவம்.
குழந்தைகளை வளரவிடுங்கள்
- குழந்தைகளை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் வளர்கிறார்கள்.
- 'வளர்க்கிறேன்'என்ற பெயரில் வளர்ச்சியின் போக்கைத் தடுக்காமல், திசை திருப்பாமல் இருப்பதுதான் குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.
- 'என் பிள்ளை' என்று உரிமை கொண்டாடி, குழந்தையை ஒரு உடைமையாக்குவதைவிட - என்னைத் தாயாக்கிய / தந்தையாக்கிய ஒரு உயிர் என்று மதித்துப் பாருங்கள் - குழந்தை தெய்வமாகத் தெரியும்.
- வெறும் உணவு, உடை, பாதுகாப்பு கொடுத்துவிட்டு சில நேரங்களில்
திட்டுவதற்கும், சில நேரங்களில் கொஞ்சுவதற்கும் பெயர் 'வளர்ப்பு' அல்ல. இந்த உண்மை புரியவரும்போது குழந்தையை வளர்க்க நீங்கள் வளர்ந்திருக்க வேண்டும் என்பதும் புரிய வரும்.
- குழந்தையைத் தண்டிப்பது 100% தவறும் அல்ல. குழந்தைக்கு செல்லம் கொடுப்பது 100% சரியும் அல்ல.
- 'குழந்தையை வளர்க்கிரேன்' என்ற பெயரில் கெடுப்பது, 'இல்லை கெடுக்கக் கூடாது' என்ற பெயரில் வளர்க்கத் தவறுவது - இரண்டுமே 100% தவறு.
- முதலில், உங்கள் குணக் கோளாறுகளை கண்டுபிடித்து அதை எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய
முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சரி செய்வதற்கான வேலைகளை ஆரம்பியுங்கள்.
- இரண்டாவது, ஒரு குழந்தைக்குச் சராசரி பெற்றோர்கள் 'வளர்க்கிறேன்' என்ற பெயரில் செய்யும் கெடுதல்களை தெரிந்துகொள்ளுங்கள். குழந்தையை வளர்க்க நீங்கள் வளருங்கள். இரண்டுமே 100% சரி.