Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
தெளிவென்னும் குழந்தை
- குழப்பத்தை நீங்கள் வெறுக்கத் தேவையில்லை; நீங்கள் வளருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான் குழப்பம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
- குழம்புவதில் தவறில்லை ; குழம்பிக் கொண்டே இருப்பதுதான் தவறு.
- நீங்கள் குழம்புவது நியாயம் ; அடுத்தவர்களைக் குழப்புவது அநியாயம்.
- இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.
- எது சரி - எது தவறு என்ற தெளிவை ஏற்படுத்தும் மனதின் செயல்முறைதான் குழப்பம்.
- மேற்சொன்ன வரிகளை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து, மனதில் தக்க வைத்துக் கொண்டாலே குழப்பத்தைப் பாதி தூரம் ஓட்டிவிடலாம்.
- பிரச்சினை குழப்பத்தில் இல்லை, குழப்பத்தை நீங்கள் அணுகும் முறையில்தான் இருக்கின்றது.
- குழப்பமே குழம்புமளவுக்கு குழப்பத்தை குழப்புவது, குழப்பத்தை குழப்பம் இல்லாமல் எதிர்கொள்ளும் போதுதான் சாத்தியம்.
- குழப்பத்தை முழுமையாக வரவேற்றுக் கொள்ளுங்கள். குழப்பத்தின் உச்சிக்குச் சென்றாலும் பயப்படாதீர்கள். குழப்பத்தைத் தாண்டிய அடுத்த நிமிடம் தெளிவு கிடைத்துவிடும். இது சூட்சுமமான உண்மை.
தெளிவு பெற்ற ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை.
- தெளிவு என்ற குழந்தையை நம்முள் பிறக்க வைக்க நாம் படும்பாடுதான் குழுப்பம்.
- குழப்பத்திற்கு பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எத்துனைமுறை தெளிவைப் பிறக்கவிடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
- குழப்பத்தை வரவேறுங்கள்!