KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/மனச்சோர்வின் மாபாதகங்கள் ...Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

மனச்சோர்வின் மாபாதகங்கள் ...

சொர்க்கத்தை எட்டிப் பார்க்க வேண்டுமா ? - சிரி நரகத்தை எட்டிப் பார்க்க வேண்டுமா ? - துக்கப்படு. மனம் உற்சாகமாக இருந்தால் புல்கூட ஆயுதமாகத் தோன்றும் ! தோல்விகூட குருவாகத் தோன்றும். சாத்தியம் இல்லாததில்கூட சாத்தியம் ஆவதற்கான சிறு சாத்தியக் கூறுகள் மட்டும் மனக்கண்களுக்கு தெளிவாகத் தெரியும். மனம் சோர்வுற்றிருந்தால் - படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும் !

பெரிய வெற்றி கூட 'இப்போதைக்கு இது O.K.' அடுத்த தோல்வி எப்ப வருமோ? என்று யோசிக்கத் தோன்றும்! சாத்தியமாகக் கூடியதில் இருக்கும் சிறிய சாத்தியமின்மைகள் மட்டும் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும் !

கவலை முற்றினால் துக்கம். துக்கம் முற்றினால் மனச்சோர்வு. மனச்சோர்வு முற்றினால் மனக்கோளாறு. சந்தோஷமும், துக்கமும் வாழ்க்கையை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்துதான் அமைகிறது. சரியான மனத்தெளிவு இல்லாமல் போனால்தான் துக்கம் ஏற்படும்.

இறந்த காலத்தின் கசப்பான அனுபவங்களும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மையும், பயமும்தான் துக்கமாக வெளிப்படுகிறது. பலர் துக்கப்படுவதற்கு காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து துக்கப்படுகிறார்கள்.

  • வாழ்வில் எப்போதாவது துக்கம் அனுபவிப்பது சாதாரண விஷயம். ஆனால் எப்போதுமே துக்கம் அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமை!

பலருக்கு துக்கம் என்பது ஒரு மனப்பழக்கமாகவே மாறிவிட்டது. துக்கமோ மனச்சோர்வோ உங்களை ஆட்கொள்ளாமல் இருக்க எளிய வழிகள் சில... எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருங்கள். வெறுமனே உற்சாகமாக இருப்பது என்பது இயலாத விஷயம்.

  • பல புத்தகங்களைப் படித்து, 'நான் உற்சாகமாக இருக்கிறேன். நான் உற்சாகமாக இருக்கிறேன்' என்று பலமுறை மனதில் சொல்லிக் கொள்வதால் மட்டும் உற்சாகம் வந்துவிடாது.
  • நீங்கள் மாணவனாக இருந்தாலும் சரி, குடும்பஸ்தனாக இருந்தாலும் சரி, உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து முழுமையாகச் செயல்படுங்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு பொறுப்பு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வீர்கள். மனச்சோர்வு உங்களை அணுகவே அணுகாது.