Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
Part 2: Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
'ஒரு முறையாவது உங்களோடு நீங்களே இன்பச் சுற்றுலா சென்றிருக்கிறீர்களா ?' 'என்னக் கேள்வி இது ? இக்கேள்வியே வினோதமானது' என்றெண்ணுபவர்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை ஒரே ஒருமுறை கூட அனுபவிக்காத அப்பாவிகள்.
- உள்ளே செல்லும் ஒரே ஒரு சுற்றுலா, வெளியே செல்லும் ஓராயிரம் சுற்றுலாக்கள் தரும் சந்தோஷ திருப்தியைவிட பல நூறு மடங்கு அதிகமான சந்தோஷத் திருப்தியைத் தரும்.
- கண்ணை மூடிப் பாருங்கள் ... சுற்றுலாத் தலம் தெரியும் ... தைரியமாய் செல்லுங்கள் ... பரவச களம் தொடுவீர்கள் ...
தியானம் உள்ளே ஒரு சினிமா!
- கியானம் செய்ய ...
'உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற உணர்வு நோக்கி ஊடுருவுங்கள்' இதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தால் ... ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்கள் எண்ணங்களை, மனதைப் பார்க்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
- இதை இன்னும் எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம். சினிமாவை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்… சினிமாவில் உங்களுக்கு பிடித்தக் காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு பிடிக்கிறதென்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.
- அதேபோல் உங்களுக்குப் பிடிக்காத காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவில் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது.
இந்தப் படம் சரியில்லை, சலிப்பைத் தருகிறது என்பதற்காக அந்த நிமிடமே புது சினிமாவை அங்கே திரையிட முடியுமா? முடியாது. சினிமாவில் என்ன வந்தாலும் வரட்டும் என்று ஒரு மூன்று மணி நேரம் உட்கார்ந்து வெறுமனே பார்த்து விட்டுத்தான் வருவீர்கள். அதே காரியத்தை தியானத்திலும் செய்யுங்கள். வெறுமனே பாருங்கள். சாட்சி மாத்திரமாக பாருங்கள். 30 நிமிடம் உள்ளே ஒரு சினிமா பாருங்கள்.
- ஒருவேளை வந்த எண்ணங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சிகளை நிறுத்த வேண்டாம்.
- வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணங்கள் என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சிகளைத் தொடர வேண்டாம்.
- புதிதாக எந்த ஒரு எண்ணத்தையோ, காட்சியையே உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வளவுதான்.
- இந்த மூன்று விதிகளைக் கடைப்பிடித்தால் சாட்சி மாத்திரமாகப் பார்ப்பது சுலபம். தியானத்தில் நன்றாக ஈடுபட முடியும். தியானித்துப் பாருங்கள்.