KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/109. கண்டுபிடிக்க முடியாதது ....Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

109. கண்டுபிடிக்க முடியாதது ....

மனித எலும்புகள் குவிந்திருந்த இடத்திலிருந்த ஞானி டயோஜீனஸ், அந்தக் குவியலை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மாவீரன் அலெக்சாண்டருக்கு ஆச்சரியம்.

ஆர்வம் மேலிட அலெக்சாண்டர் கேட்டார், "இந்த குவியலுக்குள், அப்படியென்ன ஆராய்ச்சி, என்ன தேடுகிறீர்கள்?''

குரனி டயோஜீனஸ், "என்னால் கண்டுபிடிக்க முடியாத ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்?" என்றார்.

"அவ்வளவு வினோதமானதா அது?"

''ஆம், இந்தக் குவியலில் உள்ள உன் தந்தையின் எலும்புகளுக்கும், அவரது அடிமையின் எலும்புகளுக்கும் வித்தியாசம் ஏதுமிருக்கிறதா எனத் தேடுகிறேன் ... இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை'' என்றார் குரணி.

110. தியானம் நீகழ

பார்வதிக்கு ரகசியங்களை சிவன் விளக்கும்போது, " ( e p ச் சை கவனிப்பது தூய்மையற்றவனுக்கே மிகக் கடினம்" என்றார். பத்து நிமிடம் கூட அமைதியாக உட்கார்ந்து, மூச்சைக் கவனிக்க முடியாத அளவுக்கு, மனித மனம் மாசடைந்திருக்கிறது.

● மாசு நீக்கப்பட வேண்டும்.

111. சொருக்கிமும் நேரம் போதும்

மேலோட்டமாய் வாழும் அந்த நபர், "என்ன இது! நாற்பது வருடமாகத் தியானம் செய்துவிட்டேன். இன்னும் முக்தி கிடைத்தபாடில்லையே" என நொந்தபடி பேசினார் ஜென் ஞானியிடம். ஞானி, மொதுவாய் சொன்னார், "நாற்பது வருடம் தானே... நாற்பது ஜென்மங்களில்லையே!"

● ஞானமடைய சொடுக்கிடும் நேரத்தை விட குறைவான நேரத்தையே இறைசக்தி எடுத்துக் கொள்ளும். 99.9°Cல் இருக்கும் நீர் 100°C ல் நீராவியாக மாற எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளுமோ, அவ்வளவு நேரம்தான் திடமான மனம் கரைய எடுத்துக் கொள்ளும்.

112. ஆனந்தமாயிருக்க ஆசையா?

தாந்த்ரீக ஞானியிடம் சீடன், "ஆனந்தமாயிருக்க நான் ஆசைப்படுகிறேன்'' என்றான். குரனி, "உண்மையாகவா?" என்று கேட்க, ்சீடன் "ஆமாம்…. ஆமாம்… " என்றான். "அது மிக எளிது. உன் கோரிக்கையின் இரு கடைசி வார்த்தைகளை நீக்கிவிடு. ஆனந்தமாயிருப்பாய்!" சீடன் "எது .... எது ... " என்று கேட்க,

குரனி, "ஆசைப்படுகிறேன், நான் என்ற இரண்டையும் அழி. எது மிஞ்சுகிறது பார்" என்றார்.

ஞானக்களுத்துக்களை உள்ளே வரவிடுங்கள். அது 9 சண்டையிட்டாவது ஜெயித்து விடும்.