KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/104. இந்த வார்த்தைகளுடன் வாழுங்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

104. இந்த வார்த்தைகளுடன் வாழுங்கள்

குং ஃபி ஞானியிடம் நாத்தீகர், "கடவுள் எங்கேயிருக்கிறார், எப்படியிருக்கிறார்?''எனக் கேட்டதற்கு,

"கடவுள்… மலைக்குள் தூங்குகிறார், மலர் மற்றும் தாவரங்களுக்குள் மயங்கிக் கனவு காணுகின்றார், மிருகங்களுக்குள் அசைகிறார், மனிதனுக்குள் விழித்திருக்கிறார்' எனச் சொன்னார் குரனி.

மேலுள்ள வாக்கியங்களை ஆழமாகத் தியானியுங்கள். அது . நிஜமாகட்டும்!

  1. கிலியிருந்தால் எலியாகவே இருப்பீர்கள் .... புராதண காலத்துக் கதையொன்று...

பூனையைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்த எலியைக்

காப்பாற்ற நினைத்த மந்திரவாதி, அதை தன் மந்திர சக்தியால் பூனையாக மாற்றினார்.

பூனையாக மாற்றிய பின் அது நாயைப் பார்த்துப் பயப்பட்டது. எனவே அதை நாயாக மாற்றினார். மறுவுரு எடுத்த நாய், வேட்டைக்காரனைப் பார்த்ததும் பயந்து நடுங்கியது. எனவே அதை ஒரு வேட்டைக்காரனாக மாற்றினார்.

உருமாறிய வேட்டைக்காரன் காட்டுக்குள் வந்தான்.

மந்திரவாதியைப் பார்த்த வேட்டைக்காரனின் மனதைக் கிலிபற்றிக் கொள்ள, 'சரி ஆனது ஆகட்டும்!' என நினைத்து அவனை ஒரு மந்திரவாதியாக மாற்றினார்.

புது உருவிவடுத்திருந்த மந்திரவாதி அருகே ஒரு பெருச்சாளி வந்து நின்றது. கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் பீதியடைந்து கத்தும் சில பெண்கள் போல, எலியைப் பார்த்த புது மந்திரவாதி கத்தினான்!

"நீ எலியாக இருக்கத்தான் லாயக்கு. எலியாகவே இரு!" என திரும்பவும் எலியாகவே மந்திரவாதி சபித்து விட்டார்.

6 மனகிலிருக்கும் பயம், துக்கம், மனவேதனை போன்றவை நீங்கள் எந்த வேஷமெடுத்தாலும் உங்களை உலுக்கிக் கொண்டேயிருக்கும். நிரந்தரமான நிரந்தரமின்மைகள்.

இவை உங்களிடமிருந்து நிரந்தரமாகத் துரத்தப்படும் வரை என்ன செய்தாலும், எதைச் சாதித்தாலும் அதில் துக்கமானது இழையோடிக் கொண்டேயிருக்கிறது.

106. எதுவும் நடக்கலாம் ...

அமெரிக்காவில் பரபரப்பைத் தூண்டிவிட்ட, ஒரு கன்சியூமா கோர்ட் வழக்கு வினோதமானது.

காரணம் 'வழக்கு தொடுத்தவர்' - திருடன்! 'வமக்கு தொடுக்கப்பட்டது' - திருடப்பட்ட வீட்டின் மேல்! 'வழக்கு' -திருடச் சென்றவர் பயன்படுத்திய வீட்டின் கூரை இடிந்து விழுந்ததால், திருடனுக்கு உடலில் பெருமளவு காயம் ஏற்பட் (நிவிட்டது!

"எனக்கு திருடச் சென்றதற்கான தண்டனையளியுங்கள். அனால், திருடச் சென்ற நான் விபத்துக்குள்ளாகக் காரணமாக இருந்தது ஒழுங்காகக் கட்டப்படாத வீடு, அதனால் நஷ்ட ஈடு தரவேண்டும்'' என்ற திருடனின் வழக்குக்கு, வீட்டின் உரிமையாளர் - பெருமளவு பணத்தைத் தரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது!

டு நாம் எதிர்பார்க்காத கோணத்தில் வாழ்க்கையை எதிர்கொள்ள வைப்பது - நிரந்தரமின்மை' எனும் நிரந்தரவிதி. எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!

107. நிஜத்தில் நடையோடுங்கள்

வித்தியாசமான ஆசை கொண்டிருந்த அந்த இருபத்தேழு வயது நிறைந்தவர் சென்னையில் நடந்த தியான சத் சங்கம் ஒன்றில் சந்தித்தார். அப்போது ...

"உங்களுக்கு சித்து வேலை கூடத் தெரியுமாமே?' எனக் கேட்டதற்கு, அவர் ஏன் அதுபற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என விசாரித்தேன்.

"சித்து வேலைகள் ஒரு வகையான விளையாட்டு. அதன் குட்குமங்கள் தெரியாததால் மனிதர்களுக்கு அவை ஆச்சரியத்தைத் தருகின்றன. அது ஒன்றும் ஞானவெளிப்பாடல்ல. அது ஒரு சாதாரண வித்தை" என்ற சில அடிப்படை உண்மைகளை விளக்கிய பின்,

அவரிடம், "சரி சொல்லுங்கள். எதற்காக எந்த சித்து வேலையை பயன்படுத்த விரும்புகிறீர்கள்" எனக் கேட்டேன்.

அவரோ, "எனக்குப் பதினெட்டு கைகளையுடைய அந்த காளிமாதேவியை வசியம் செய்யும் கலை அல்லது மந்திரம் செரல்லித் தாருங்கள். காளியிடமிருந்து சில சக்திகளை நான் பெற விரும்புகிறேன்'' என்றார்.

அதற்கு, "பதினெட்டு கைகளையுடைய காளியை வசியம் செய்வது ஒருபுறமிருக்கட்டும். முதலில் உங்களுடைய இரண்டு கை காளியை ( மனைவி ) வசியம் செய்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்" என்றேன்.

● ஏதாவதொரு காரணம் சொல்லி, எதிர்காலத்திலேயே உங்களை மனமானது வாழவைக்கும். எதிரிலிருப்பவர்களையும், இருப்பவை களையும் தொடர்ந்து இழக்கச் செய்து கொண்டேயிருக்கும். இந்த செயல் முடிவுக்கு வரவேண்டிய ஒன்று.

  1. நிமிடத்தில் ஆத்ம சக்தியைத் தொட .... மலை உச்சியிலிருந்த நிட்டியின் மனைவி பயத்தில் கேட்டார், "ஏங்க! ஒருவேளை இங்கேயிருந்து கீழே விழுந்து விட்டால் …. " அதற்கு விழுந்துவிட்டால், அப்போது உங்களின் இடப்பக்கத்தில் தெரியும் அழகான காட்சிகளை ரசிக்கத் தவறாதீர்கள்'' என்றார்.

● இது வெறும் ஜோக்கல்ல. டெக்னிக். அதிர்ச்சிகளை சந்திக்கும்போது மட்டும் நிகழ்காலத்தில் இருந்துவிட்டீர்களென்றால், அந்த நிமிடத்தில் ஆத்ம சக்தியை நீங்கள் தொட்டு விடுவீர்கள்.