KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/26. உங்களை நீங்களே உழ பண்படுவீர்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

26. உங்களை நீங்களே உழ பண்படுவீர்கள்

ஜேத வனத்தில் புத்தரிடம் கேட்கப்பட்டவைகளில் சில ... "மிகவும் இருள் நிறைந்த இரவு எது?" "அறியாமை?" "மிகவும் கூர்மையான வாள் எது?" "கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள்" 'என்ன தெரியும் நமக்கு?'

என்ற கேள்வியை மந்திரம் போலப் பயன்படுத்தி உங்களை உடுமுது பாருங்கள். பண்படுவீர்கள்.

27. நீஜத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்

பார்ப்பதற்கு இரவு வானத்து நட்சத்திரங்கள் போலத் தெரியும், பல பொத்தல்கள் நிறைந்த அந்த இத்துப்போன குடை வழியே வரும் ஒளிக்கதிர்களைப் பார்த்த சிறுவன் டாம், தாத்தாவிடம் கேட்டான்,

"இந்த குடையை நான் பிடிக்கிறேன். நம் வீட்டு கூரையை சுவர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறது. சாயங்காலமானதும் எல்லா இடமும் இருட்டாகுமளவுக்கு பெரிய குடையைப் பிடிப்பது யார்?'' எனக் கேட்டதற்கு, "இறைவன்" என பதில் சொல்லித் தப்பித்த தாத்தா அடுத்த கேள்வியில் மாட்டிக் கொண்டார்.

"தாத்தா அவர் என்ன ரொம்ப கஞ்சமா?" என்றான்.

சிறுவனின் கேள்வி புரியாததால் பதில் சொல்லாமல் திகைத்த டாமின் தாத்தா, "ஏன் அப்படிக் கேட்கிறாய்?" என்று கேட்டதற்கு, "தாத்தா! உன்னைப் போலவே இத்துப்போன குடைதான் அவரும் வைத்திருக்கிறார்" என்றான்.

  • நிலம் வேறு. டாம் புரிந்து கொண்டது வேறு. அவனுக்கு அவன் பேச்சு நியாயம்.

இல்லாத இறைவனை, இருப்பதாய் நினைத்து, "அவர்" கஞ்சம் எனச் சிறுவன் தீர்ப்பிட்டது - சிறுபிள்ளைத் தனம்.

மற்றவரிடம் இல்லாத தவறுகளை, இருப்பதா குறை சொல்லி, அதை நியாயம் என வாதிடும் சிறுபிள்ளைத்தனம் எல்லா மனிதரிடமும் இருக்கிறது.

இதை ஏற்றுக்கொண்டால், திருத்திக் கொண்டால், தப்பித்தீர்கள்.

28. நீ ஓட, மனம் ஓயும்

பிரச்சனைகளோ(டு வருபவர்களுக்கு ரமணர் சொல்லும் தீர்வுகளை நியாயமானதென ஒப்புக்கொள்ள முடியாதவர் கேட்டார்,

"பலரின் பிரச்சனைகளுக்கு தீர்வாக திருவண்ணாமலையை நீங்கள் சுற்றச் சொல்வது, ஒரு தீர்வா! இதனால் என்ன பயன்?"

"நீ ஓய்வாயிருந்தால் மனம் ஓடும். ஓடினால் மனம் ஓய்வடையும். விழிப்போடு மலை சுற்றும்போது வேதனைகளின் வேரான மனம் ஒயும். மனம் சரியாக எல்லாம் சரியாகும். என்னவோய் ... புரிந்ததா?" ரமணர்.

நியாயம் கூட அநியாயமானதாக மனிதனுக்குத் தெரியும் இது புரிந்தாலே பெரும் புண்ணியம்!

29. அறிவிற்கு அளவுகோல்

நம் பெங்களூர் பிடதி ஆஸ்ரமத்திற்குக் குதூகலமான குடும்பம் ஒன்று அன்று வந்திருந்தது.

அக்குடும்பத்தின் சுட்டிச் சிறுவன் சிறுதவறொன்றைச் செய்து விட்டான். கொஞ்சம் கோபப்பட்ட பாட்டி, "அறிவிருக்கா?" என்றார். சிறுவனின் தந்தையும், "புத்தி கொஞ்சமாவது இருக்கா?'' என்றார் அச்சிறுவனிடம்.

திட்டுவாங்கிய சிறுவன் அடங்கி ஒடுங்குவதற்குப் பதில், அவர்கள் இருவரையும் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தான், ஏன் அப்படிச் சிரித்தான் எனக் கேட்டதற்கு,

"சாமி, எங்க வீட்டுல சமையலுக்கு ஏதாவது பத்தாம போகும்போதுதான், பக்கத்து வீட்டுக்காரர்களிடம், அது இருக்கா, இது கொஞ்சமாவது இருக்கா என்று என் அம்மா கேட்பதை பார்த்திருக்கிறேன்.

இன்று என்னிடம் 'அறிவு இருக்கா' என்று இவர்கள் கேட்கிறார்கள். பாவம் அவர்களிடம் அறிவு போதுமான அளவு இல்லைபோல் தெரிகிறது!" என சொல்லி மீண்டும் சிரிக்க ஆரம்பித்து விட்டான்!

குதூகலமானவனுக்கு குதூகலம் என்பது வாழ்க்கைத் திடலில் முழுவதும் கொட்டிக்கிடப்பது தெளிவாய்த் தெரியும்.

  1. அணுகும் வீதத்தை வித்தையாய் மாற்றுங்கள் முல்லா நஸ்ரூதினிடம் ஒருமுறை, "வாழ்க்கையை அணுகுவது எப்படி? எனச் சொல்லுங்கள்" என நண்பர் கேட்டார். நஸ்ரூதின் அழகாய்ச் சொன்னார், இரண்டு விதமாய் அணுகலாம். ஒன்று, வாழ்வே துன்பமயமானது".

முயற்சிப்பதேயில்லை. காரணம், அவன் சந்தோஷமாய் இருப்பதாக அவனுக்கொரு idea இருந்து கொண்டிருப்பதே! இந்த idea உடைந்தாக வேண்டும்.