KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/24. 'தெரியாது' என்பதை தெர்விப்பவரா நீங்கள்?Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

24. 'தெரியாது' என்பதை தெர்விப்பவரா நீங்கள்?

ஜெராஸ்ட்ரிய சீடன், "என் குரு பெரிய ஞானி" என்றான். பண்டிதர், "உன் குருவுக்கு என்ன தெரியும்?" என்றார். றொராஸ்ட்ரிய சீடன், "தனக்குத் தெரியாதவற்றை, தெரியாது' என்று தைரியமாய் சொல்லத் தெரியும்" என்றான்.

● "எனக்கு என்ன தெரியும்!" என்ற ஆச்சரியம் அரும்பிய பின்புதான் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும்.

25. சின்ன வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாதீர்

ஒவியக் கல்லூரியில் தான் பயின்றபோது வரைந்த ஒரு ஒவியத்தை, பல வருடம் கழித்து வீட்டிற்கு வந்திருந்த தன் நண்பரான டாக்டரிடம் காட்டினார் நிட்டி.

தன் நண்பர் ஓவியத்தின் சிறப்புப் பற்றி என்ன சொல்லப் போகிறார் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

நண்பர் பதிலேதும் சொல்லாததால், "ஒவியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று நிட்டி ஆர்வம் பொங்கக் கேட்டதற்கு, "இந்த படத்திலிருக்கும் மனிதருக்குத் தோல் வியாதி இருக்கிறது" என்றார். அந்த பதிலால் நிட்டி நொந்து போனார்.

நண்பரின் பதில் உண்மையானது என்றாலும், அது முழுமையானது அல்ல. "தெரியும்" என்ற எண்ணம் இருக்கும் வரை இதுபோன்ற சிறிய வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வோம். வளர்ச்சி தடைப்பட்டு விடும். ஆனால் நாம் வளர்ந்தவராகவும், மிகச் சரியாக எல்லாவற்றையும் செய்பவராகவும் நம்ப ஆரம்பிப்போம். "எனக்குத் தெரியாதது, என்ன இருக்கிறது" எனும் சிறுவட்டத்துக்குள் சிக்கிக் கொண்டால்! வாழ்வின் சுவையான பகுதிகளைக் கசக்கி எறியும் ஒருவராக மாறிவிடுவோம் ...