KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/69. பொய் தன்னால் வெளிவரும்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

69. பொய் தன்னால் வெளிவரும்

விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசும்போது,

மன்னர், "என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்" எனக் கேட்டதற்கு,

"மன்னரே! தப்பித்தவறி அந்தத் தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்" என மந்திரி சொன்னார்.

. ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, மந்திரி மது மயக்கத்தில் மன்னரிடம் கேட்டார். "மன்னா! அப்படி என்ன செர்க்குபொடி போட்டீர்கள். பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே".

"எதிரி நாட்டு அரசன் கொடுக்கச் சொன்னதாகச் செரல்லச் சொல்லி, நம் ஒற்றனிடமே லஞ்சம் கொடுத் தனுப்பினேன்.

அவன் நமக்கு நண்பனாகி விட்டான் எனக் கண்ணடித்து, மது மயக்கத்தில் உளறியதை, பக்கத்து நாட்டு அரசன் கேட்டு விட்டான்.

அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது".

● ஏமாற்றப்பட்டவர்களுக்கு ... அது பாடம். பண்படுவார்கள். ஏமாற்றுபவர்களுக்கு அது படமெடுக்கும் பாம்பு. ஆபத்து! கள்ளம் கொண்ட உள்ளம், அது மற்றவர்களை தீண்டுவது போல் குறைந்தது இரண்டு மடங்கு தீண்டப்படும், துன்பப்படும்.

70. காட்டிக் கொடுத்து கூழுதை

குல்ஜித் ஒரு கருமி. அவரின் கழுதையைக் கடனாய்ப் பெற அவ்வூர்காரர் வந்தார். அவரிடம், "மன்னிக்கவும். கழுதையை ஏற்கனவே ஒருவரிடம் கடன் தந்துவிட்டேன்' என குல்ஜித் சொல்லிக் கொண்டிருக்க ... குல்ஜித்தின் கழுதை கத்தியது! "ஆனால், நான் கழுதை கத்தும் சத்தத்தை கேட்கிறேனே!" என்றார் ஊர்க்காரர்.

குல்ஜித், ''அப்படியென்றால், இப்போதே சொல்லுங்கள். நீங்கள் யாரை நம்பப் போகிறீர்கள்? கழுதையையா! என்னையா!" என்றார். கள்ளம் பேசினால் தப்பிக்கலாம். ஆனால் உள்ளத்திடம் மாட்டிக் 0 கொள்வீர்கள்.

71. உரையாடல் ஒரு உண்ணதக் கலை

கிரகம் பெல்லின் தொலைபேசி முறை அப்போதுதான் புழக்கத்திற்கு வந்து குடுபிடித்துக் கொண்டிருந்தது. புதியது என்பதால் தெரலைபேசிக் கட்டணம் வெகு அதிகமாக இருந்தது.

எப்போதும் படபடப்பாக இருக்கும் அந்த ஜெர்மானிய தூதுவர் ஜப்பான் தூதரகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நான் பேசி முடிக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆகாது. நான் பேசும்போது நீங்கள் குறுக்கே எதுவும் கேட்கக் கூடாது. கவனமாகக் கேட்க வேண்டும். எனக்கு ஏதேனும் பதில் சொல்ல விரும்பினால் அதை இப்போது செரல்லக் கூடாது. தந்தி மூலமாக பதில் சொல்லலாம். புரிந்ததா" என முன்னுரை அளித்துத் தான் சொல்ல வேண்டிய அலுவலகச் செய்திகளை வேகவேகமாகச் சொல்லி முடித்தார்.

மேலும் தொடர்ந்த ஜெர்மானிய தூதுவர், "செஎல்ல வேண்டியலைக் யெல்லாம் சொல்லி விட்டேன். 3 நிமிடம் முடிய இன்னும் 3 0 6) சால்ல

ஜப்பான் தூதரகத்திலிருந்தவர் சொன்ன பதில், ''அமாம் ... எல்லாம் சொன்னிர்கள். மிக வேகத்தோடு படபடப்பாக நீங்கள் சொல்லி முடித்த செய்தியின் ஒரு வார்த்தை கூட என்னால் புரிந்து கொள்ள மடியவில்லை".

ஜெர்மானிய தூதுவர், "இதை ஏன் முன்பே சொல்ல வில்லை?" எனக் கேட்க, ஜப்பான் தூதரகத்திலிருந்தவர், "குறுக்கே பேசக் கூடாதென்று சொன்னது நீங்கள்தானே!" என்று சொன்னவுடன் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

படபடப்பும், தேவையற்ற பரபரப்பும், சுறுசுறுப்பு அல்ல. சுறுசுறுப்பு என்ற பெயரில் பதட்டத்தைத்தான் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

பதட்டத்தால் நடுங்கும் விரல்கள், சிக்கலான நூல் கண்டை விடுவிப்பதற்கு பதில் இன்னும் கொஞ்சம் சிக்கலை அதிகப்படுத்தும். அவ்வளவே, அகநடுக்கம் தான் உங்களின் சாதா பிரச்சனைகளை உடல் மன வேதனைகளாக மாற்றுகின்றன.

72. அதந்(நக்கம் ஆக்கர்த்தால் ....

குல்லித்திடம் நிட்டி கேட்டார், "திருமணத்திற்கு முன், பின் அனுபவமென்ன?''

  • "முன் : அவனைக் கண்டாலே எனக்கு நடுங்கும்" என என்னைப் பற்றி மற்றவர்கள் குறிப்பிடுவார்கள்".
    • "பின் : 'அவளைக் கண்டாலே அவன் நடுங்குதிறான்! என என்னைப் பற்றி மற்றவர்கள் குறிப்பிடுகிறார்கள்'.
    • ஆம்! நிஜவாழ்வில் மனிதனின் அகநடுக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. உணர்கிறீர்களா?