KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/73. புரியாத பாலகர்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

73. புரியாத பாலகர்கள்

கண்ணாடிக் கோப்பையில் மட்டுமே ப்ளூட் சலாட் சாப்பிட்டு பழகிய இஸ்ரேலிய சிறுமி தன் குடும்பத்தோடு பாரதத்திற்கு வந்திருந்தாள். பெட்டிக்கடையில் தொங்கிய வாழைத்தாரை முதன்முறையாகப் பார்க்க, அச்சிறுமிக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.

''கண்ணே! நீ விரும்பிச் சாப்பிடும் ப்ரூட் சலாட் போலவே இதுவும் சுவையாய் இருக்கும்' எனச் சொல்லி ஒரு வாழைப் பழத்தை அச்சிறுமிக்கு தந்தை உரித்துக் கொடுத்தார்.

அதைச் சுவைத்துச் சாப்பிட்டு முடித்த சிறுமி, கடைக்காரரிடம் வாழைப்பழத்தோலை நீட்டினாள்.

கடைக்காரர், "பாப்பா, உனக்கு என்ன வேண்டும்" எனக் கேட்க, சிறுமி, ''எனக்கு இந்த தோலை மீண்டும் நிரப்பித் தாருங்கள்'' என்றாள்!

● கடவுளை காண முடியும்

கடவுளை உணர முடியும்

கடவுளை அனுபவிக்க முடியும்! - நீங்கள் கடவுளான மறுநிமிடமே

74. உணர்ந்தால் உயரலாம்

ஒரு மாமரத்தின் இரு கிளைகள் பேசிக் கொண்டன. வேகமாய் வளரும் மாங்கிளையைப் பார்த்து, மெதுவாய் வளரும் மாங்கிளை கேட்டதாம் ...

"ஏன் நீ மட்டும் இவ்வளவு வேகமாக வளரத் துடிக்கிறாய்?''

"நான் ஒரு மாமரமாக மாற விரும்புகிறேன். அதனால் தான் ... " என்றதாம், வேகமாய் வளரும் மாங்கிளை.

● மாங்கிளை தனி மாமரமாக முடியாது. அது மாமரம் தானென உணர வேண்டும். அதே விதிதான் மனிதன் எனும் கடவுளுக்கும்