KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/17. ஒருவருக்குள் ஒராயிரம் மனிதர்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

17. ஒருவருக்குள் ஒராயிரம் மனிதர்

மெரினா கடற்கரையில் விளையாடிவிட்டு வந்த குழந்தை நிட்டியிடம், அவன் அம்மா கேட்டார், "எத்தனை பெண் குழந்தைகள் உன்னோடு இன்று இருந்தார்கள்".

"ஏன் தேடுகிறாய்?" எனக் கேட்ட நிட்டியிடம், அம்மா சொன்னார், "பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னார்.... அதனால்தான்!"

"என்னால் இன்று எத்தனை பெண்கள் வந்தார்கள் என்று சொல்ல முடியாது" என்றான் நிட்டி.

" ஏன்? "

"இன்று யாருமே கவுன் போட்டுக் கொண்டு வரவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி சுவிம்மிங் டிரஸ்தானே போட்டிருந்தோம்.

எல்லோரும் ஒரே டிரஸ்ஸில் இருந்ததால், என்னைப் பொருத்தளவிற்கு இன்று எங்களோடு ஆண்களோ, பெண்களோ விளையாட வரவில்லை. சரிதானே?" என்றான் குழந்தை நிட்டி.

குழந்தையைப் பொருத்தளவிற்கு ஆண், பெண் வேறுபாடு என்பது உடையளவிலானது. வளரவளர் வேறுபாடுகளும் வரையறைகளும் மனதில் வளரும்.

மனிதனுக்கு தான் பார்க்கும் ஒவ்வொன்றையும் பகுத்து, பிரித்து வேறுபார்க்கும் அளவுக்கு மனம் வளர்ந்து விடுகிறது.

விளைவு - ஒருவருக்குள்ளேயே பலவிதமான மனப்பான்மைகள் குடிகொள்ள ஆரம்பித்து விடுகிறது!

18. எளிமையாக இருக்க கடைபிடிக்க வேண்டும்?

கா பிடதி ஆஸ்ரமத்தில் பிரம்மச்சாரி ஒருவர் கேட்டார், "சாமி, எளிமையாய் இருப்பது எப்படி? எளிமையாய் சொல்லுங்கள்''.

" அது மிக எளிதப்பா .... இந்த இரண்டையும் கடைப்பிடித்தால் எளிமையாகி விடுவாய்.

  • 1. எதையும் மிகைப்படுத்தாதே!
  • 2. எதையும் குறைப்படுத்தாதே!

நீ கேட்டதை, பார்த்ததை அப்படியே கலப்படம் செய்யாமல் பேசு. பகிர்'' என்றேன்.

சிரத்தையோடு செய்த பிரம்மச்சாரி எளிமை நிறைந்து அருமையானவராக சில நாட்களுக்குள்ளேயே மாறிவிட்டார்.

19. ஆசை அசுரனிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள்

ஆனந்தி மதபோதகரைச் சந்தித்தார்.

தன் செல்ல நாய்குட்டி பப்பி அகால மரணமடைந்து விட்டதால் மதவிதிப்படி தன் பப்பிக்கு ஈமச்சடங்கு செய்ய வேண்டும் என உருக்கத்தோடு கேட்டுக் கொண்டார்.

''என்ன இது! ஒரு நாய்க்காக நான் இறைவனிடம் பேசுவதா? இது முழு மடத்தனம்" என வெறுப்புக் குரலில் வெடித்தார் மத போதகர்.

ஆனந்தி, "ஐநூறு டாலர் கூட கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் முடியாதென்று சொல்லி விட்டீர்கள். உங்களுக்குத் தெரிந்த வேறு யாராவது இந்தச் சடங்கு செய்வதாய் இருந்தால் சொல்லுங்கள். என் பப்பி எனக்கு முக்கியம்" என்றார்.

ஐநூறு டாலர் என ஆனந்தி சொன்னதும், "நீங்கள் ஆரம்பத்திலிருந்து தெளிவாகப் பேசவே இல்லை. உங்களுடைய நாயும் நம் மதத்தைச் சேர்ந்தது என்று சொல்லாமல் மறைத்து விட்டீர்கள். நம் மத நாய்களுக்கு நானே எல்லாம் செய்வேனென்பது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. பக்கத்து ஊரிலிருப்பவர் ஐநூறு டாலருக்கு மேல் கேட்பார். அவர் வேண்டாம்" என தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் குரலில் சொன்னாராம்!

வெற்றிக்கு ஒரு காரணம். வெறுப்புக்கு ஒரு காரணம்.

இரண்டுமே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். எதன் மீதும் ஏற்படலாம்.

காரணம், இரண்டுமே ஆசை என்னும் அசுரனுக்குப் பிறந்த குழந்தைகள்.

20. நடுநிலையில் நிலைத்திருங்கள்

அந்த அத்வைத ஞானி, 'புத்தரின் மத்தியில் வாழ்' என்பதை புரிந்துக் கொள்ளச் சொல்லும் உதாரணம்,

"வீணையின் கம்பி இழைகளை இறுக்க முடுக்கினால் அது அறுந்துவிடும். முடுக்காவிட்டால் வீணையை இசைக்க முடியாது. இசையை எழுப்ப, வீணை மத்தியில் முடுக்கப்பட வேண்டும்''.

எல்லாவற்றிலும் நடுநிலையிலிருங்கள். ஆனந்த இசை வெளிப்படும்.

21. மலர்களைப் போல் நீங்களும் ஆனந்தமானவரே

விவேகானந்தரிடம் குருபக்தி பற்றி வில்லங்கமாக ஒருவர் கேட்டார்.

"ஏன் சீடர்கள் இவ்வளவு அடங்கி இருக்கிறார்கள். இதென்ன விதமான அடிமைத்தனம்?"

கொஞ்சமும் தாமதிக்காத விவேகானந்தர், "இல்லாவிட்டால் உன் புலன்களுக்கு அடிமையாயிரு. (Otherwise be a slave for your senses)'' எனச் சொன்னார்.

புலன்களுக்குள் சிக்கிக் கொண்டான் மனிதன். தியானம், ஞானம், பக்தி போன்றவை மனிதனை சிக்கலிலிருந்து விடுவிக்கும் அருமையான வழிமுறைகள்.

22. வாழ கற்றுக் கொள்ளுங்கள்

இரு நண்பர்கள் மூன்றாம் நபரைப் பார்த்து இப்படி பேசிக் கொண்டார்களாம் ...

  • பொங்கல் பம்பர் பரிசாக பத்து இலட்சம் பரிசு நண்பர் 1 : விழுந்தது ... இவருக்குத்தானே! ?
  • நண்பர் 2 : ஆமாம் ... ஏன் கேட்கிறாய்?
  • நண்பர் 1 : ஏன் இப்படி கப்பல் கவுத்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார். குஷியாக இருக்க வேண்டாமா...
  • நண்பர் 2 : அட, உனக்கு விஷயமே தெரியாதா. அவர் வாங்கிய ஒரு கோடி ரூபாய் லாட்டரி சீட்டில் ஒத்த ரூபாய் கூட விழவில்லாயாம்.

● பெரிய பெரிய எதிர்பார்ப்புகளுக்காக, சின்னச் சின்ன சந்தோஷ மலர்களை குடி வரும் வாழ்வென்னும் அழகு குழந்தையைத் கண்டிக்காதீர்கள்.

எதிர்பார்ப்புகளைத் தாண்டி ஆழ அனுபவித்து வாழ்பவர்… சின்னச் சின்ன நிகழ்வுகளிலேயே பேரின்பத்தில் மூழிகிப் போவார். அப்படி வாழத் தெரியாதவருக்கு பெரிய பெரிய நிகழ்வுகள் கூட சிற்றின்பம் வரைதான் கூட்டிச் செல்லும்.

23. ஆனந்த தாகம் பொங்கட்டும்

சிற்றின்பங்களை விளக்க அந்த குடி குரவன் அடிக்கடி சொல்லும் கதை ...

"பாலைவனத்தில் தாகத்தால் தள்ளாடியவனின் கண்ணில் ஒரு கூஜா நிறைய நீர் தென்பட்டது. மடமடவென அதைக் குடித்தவனுக்கு, இன்னும் கொஞ்சம் தாகம் அதிகமானது. காரணம், அது உப்புக் நீர்!"

உங்களின் ஆனந்த தாகம் மிக ஆழமானது. சின்னச் சின்ன சுகங்கள் தாகத்தை இன்னுங்கொஞ்சம் தூண்டவே செய்யும்.