KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/சக்தி சாகர தியானம்Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

சக்தி சாகர தியானம்

(நீடிக்கும் நேரம் : 31 நிமிடங்கள்)

கண்களை மூடி மனதை விஷூத்தி சக்கரத்தில் வைத்து நிற்கவும். ஒரு நாற்காலிக்குப் பின்னால் நின்று கொண்டோ அல்லது வேறு ஏதேனும் ஆதாரத்தைப் பற்றிக் கொண்டோ, நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திலேயே, மெதுவாக, மிக மெதுவாக, நடக்கத் தொடங்கவும்.

இப்பொழுது படிப்படியாக உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள். அதே இடத்திலேயே வேகமாக, இன்னும் வேகமாக, நடந்து கொண்டிருங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு, நீங்கள் அசௌகரியமாக உணராத வரையில் உங்கள் எல்லைகளைத் தாண்டுங்கள். எப்பொழுதும் அதிகமாகச் சிரமப்படாத அளவில் செய்யுங்கள். எப்பொழுதும் மனதை விஷூத்தியிலேயே வைத்திருங்கள். அதிலிருந்து சக்தி வருவதை உங்களால் உணர முடியும். ஒருபோதும் வேகத்தைக் குறைத்து விடக் கூடாது என்பது முக்கியமான விஷயம். 21 நிமிடங்களுக்குப் பிறகு நிறுத்தவும்.

அடுத்த 10 நிமிடங்களுக்கு நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே வெறுமனே அமைதியாக அமரவும். கண்களை மூடி மனதை விஷூத்தியில் வைத்திருக்கவும். இயக்கத்தினால் உற்பத்தியான சக்தியை கிரஹித்துக் கொள்வீர்கள்.

இந்த தியானத்தில் முக்கியமான விஷயம், உடல் அசைந்து கொண்டிருக்கும் பொழுது, மனதை நிலையாக விஷூத்தியில் வைத்திருப்பதே. இதைச் செய்யும் பொழுது பிரபஞ்ச சக்தி உங்கள் விஷூத்தி சக்கரத்தின் வழியாக நுழைந்து உங்களுக்குப் பெரிய சக்தி மூலமாக அமையும்.

இந்த தியானத்தைச் செய்யும் பொழுது, உங்கள் மாலையை கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொள்ளவும். அது தியானத்தில் உருவாகும் சக்தியைச் சேமித்து வைக்கும்.