KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/Possessiveness1Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

Possessiveness1

மட்டுமே வைத்திருக்க முடியும். இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டீர்களானால், நீங்கள் தன்னுடையது என்ற எண்ணத் திலிருந்தும், அதிலிருந்து எழும் பொறாமையிலிருந்தும் விடுதலை பெறலாம்.

ஒவ்வொரு மனிதரையும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆறு போலப் பாருங்கள்; அவர்களுடன் எதைக் கொண்டு வந்தாலும், அதை வெறுமனே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களால் ஒரு ஆற்றைப் பிடித்து வைத்திருக்க முடியுமா? தண்ணீரைக் கையில் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சிப்பது முட்டாள்தனமான ஒரு செயல், இல்லையா? அதே போல, மனிதர் களையும் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள்; அவர்கள் என்னவாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்; நீங்கள் பொறாமையின் பிடியிலிருந்து விடுதலை பெற்று விடுவீர்கள்.

பிறகு நீங்கள் புரிந்து கொள்வீர்கள், இந்தத் தன்னுடையது என்ற எண்ணம், நீங்கள் மிகவும் செல்வாக்குக் கொடுத்து வைத்திருக்கும், உங்கள் ஆழமான, சிக்கல் நிறைந்த மனத் திலிருந்து உருவானதுதான் என்று.

நீங்கள் யாரையாவது பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்தால், அது அந்த மனிதருக்கும் கஷ்டத்தையே தருகிறது. நீங்கள் உங்கள் எல்லாக் கருத்துக்களையும் அவர் மீதே பிரதிபலிப்பீர்கள். அவரும் நீங்கள் அவர் மீது பிரதிபலித்த கருத்துக்களுக்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். அவர் கூண்டில் அடைக்கப்பட்டது போல் உணர்வார். அவருடைய புறத்தன்மை பிளவுபடும். அவரால் உங்களுடன் இயல்பாக இருக்க முடியாது. மேலும் இதை ஒரு உறவுமுறை என்றும் அழைக்க முடியாது!

வறுமையே நம்மைத் தொந்தரவு செய்வதில்லை. நாம் ஏழையாக இருக்கிறோம் என்ற எண்ணம்தான் நம்மைத் தொந்தரவு செய்கிறது.

நீங்கள் உண்மையிலேயே ஒரு மனிதரை நேசித்தால் அவருக்கு விடுதலை கொடுங்கள்! அவரைப் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள்: அப்பொமுதுதான் உண்மையான உறவு மலரும்; அப்பொழுதுதான் ஆழமான அன்பையும் விசுவாசக்கையும் தவிரவேறெதையும் சார்ந்திராத உறவுமலரமுடியும். நீங்கள் எதையேறைம் பற்றிக் கொள்ள முயற்சி செய்யும் கண்மே, அதைக் கவற விட்டு விடுகிறீர்கள். எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி வெறுமனே அவரை நேசியுங்கள்.

எனக்கு ஒரு கதை குராபகத்திற்கு வருகிறது ...

தென்னிந்தியாவில், நாகரிகத்தைப் பற்றியே அறியாத மக்கள் வாழும் ஒரு கண்காணாத கிராமத்தில், ஒரு வயதான தம்பதியா் இருந்தனர். ஒரு நாள், முதன் முறையாக, அந்த கிராமத்தில் ஒரு சந்தை நடந்தது. அந்த வயதான மனிதர் சந்தைக்குச் சென்று காட்சி க்கு வைக்கப்பட்டிருந்த எல்லாப் பொருட்களையும் பார்த்தார். ஒரு கண்ணாடியை எடுத்துப் பார்த்து, அதில் தான் கண்டதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார்! அவர் வாழ்வில் அதற்கு முன் ஒருபோதும் கண்ணாடியைப் பார்த்ததில்லை. அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அவ்வப்பொழுது கண்ணாடியை எடுத்துப் பார்த்து விட்டு, அவர் மனைவி வருவதற்குள் மீண்டும் அதை பழையபடியே வைத்து விடுவார். இதை எப்படியோ கவனித்து விட்ட மனைவி, ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்த சமயத்தில், அதை எடுத்துப் பார்த்து விட்டாள். அவள் ஆச்சரியத்தில் கத்தினாள், ''நான் நினைத்தது போலவே இன்னொரு பெண்!''.

(சிரிப்பு!)

ஒரு புதிய கோளில் நீங்கள் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொண்டால், நீங்கள் உயரமா அல்லது குள்ளமா ? அழகா அல்லது அசிங்கமா? ஏழையா அல்லது பணக்காரரா?

நமது, தன்னுடையது என்ற எண்ணத்தினாலும், பொறாமை யினாலும், நமது கற்பனைகளுக்கு முடிவேயின்றி இருக்கிறது! அநேகமாக ஒருபோதும் நமது கற்பனைகள் நிஜத்துடன் ஒத்துப் போனதேயில்லை. நாம் சற்று நின்று நமது பொறாமையினுள் உற்று நோக்குவாமாயின், அது அடிப்படையற்றதும் தேவை யற்றதும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

''ஸ்வாமிஜி, என் கணவரோ அல்லது மனைவியோ வேறு யார் மீதாவது ஒரு கண் வைத்திருந்தால் அதைப் பார்த்துக் கொண்டு எவ்வாறு சும்மா இருப்பது?' என்று நீங்கள் சொல்லக்கூடும். உங்கள் கணவரோ அல்லது மனைவியோ உண்மையிலேயே இன்னொரு வர் மீது ஒரு கண் வைத்திருந்தால், விழிப்பற்ற செயல்களில் இறங்குவதற்குப் பதிலாக, அதை வெறுமனே விழிப்புடன் முழு விழிப்புணர்வுடன் பாருங்கள்.

நீங்கள் பொறாமையையும் பொருத்தமற்ற ஆட்கொள்ளப்பட மாட்டீர்கள். உங்களால் விஷயங்களை சரியான ஒளியில் பார்க்க முடியும்; சரியாக நடந்து கொள்ள முடியும்; சரியான தீர்மானங்களை எடுக்க முடியும்.

பொறாமைப்படாதே என்று சொல்வதன் மூலம், அதிலிருந்து ஒருபோதும் வெளியே வர முடியாது. எல்லா வற்றிலும் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வருவதன் மூலமும், ஆழமாகப் புரிந்து கொள்வதன் மூலமுமே உதவ முடியும்.

பொறாமையை வெற்றி கொள்வதற்கு, அது எவ்வாறு உங்கள் பாருங்கள்; உங்கள் அமைப்பிற்குள் வரும் எண்ணங்களையும்

உங்களுடைய பாதையில் கவனம் செலுத்துவீர்களானால், நீங்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டும், உங்கள் திறனில் விரிவடைந்து கொண்டும் இருப்பீர்கள்.

உணர்ச்சிகளையும் உங்கள் அறிவுக் கூர்மையால் இந்த மொத்த செயல்முறையின் காரணங்களையும் கண்டுபிடித்துத் திருப்பிச் செய்து விடுங்கள்.

பொறாமை என்பது பொருளற்ற நிழல் என்பதை ஒரு முறை நீங்கள் புரிந்து கொண்டு விட்டால், அது எவ்வளவு வேதனைக்குள்ளாக்கியது என்பதையும் உணர்ந்து கொள்வீர்கள். பொறாமையிலிருந்து விடுதலை பெறுவது என்பது ஒருவரது வாழ்வில் பெறும் மிகப் பெரும் விடுதலையாகும்.

மேலும் உங்கள் பொறாமைக்குக் காரணமான பொருளை நிந்தனை செய்யாதீர்கள். பொறாமைக்கு காரணமான பொருளை வெறுமனே நிந்திப்பதன் மூலம், நீங்கள் பொறாமையிலிருந்து விடுதலை பெற முடியாது. ஏனெனில் நீங்கள் நிந்தனை செய்ய ஆரம்பிக்கும் பொழுதே, உள்ளே இருக்கும் காயத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்று பொருளாகிறது.

பொறாமைக்குரிய பொருளை நிந்திப்பதன் மூலம், ஒரு வேளை அந்த குறிப்பிட்ட பொருளிலிருந்து விடுதலை கிடைக்கக் கூடும். ஆனால் நீங்கள் இன்னொரு பொறாமைக்குரிய பொருளிடம் சிக்கிக் கொண்டு விடுவீர்கள், அவ்வளவுதான்! அது ''சீச்சீ, இந்த திராட்சை புளிக்கிறது' என்று சொல்லி விட்டு இன்றொரு திராட்சைத் தோட்டத்திற்குச் செல்வது போன்றதுதான்! அதனால் பொறாமைக்குரிய பொருளை வெற்றி கொள்ள முயற்சிப்பது தீர்வாகாது. நீங்கள் உங்களிடம்தான் செயல்பட வேண்டும்.

எப்பொழுதும் நினைவில் வில் வையுங்கள் ... நீங்கள் விட்டொழிக்க விரும்பும், உங்கள் வளர்ச்சிக்குதவாத ஒரு உணர்ச்சி உங்களிடம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதைத் தடை செய்யாதீா்கள். அதைத் தடுக்கும் பொழுது, அதற்கு மேலும்

நீங்கள் உங்களை உங்களுடன் மட்டுமே ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒருபோதும் மற்றவர்களுடன் அல்ல.

அதிக சக்தியையே கொடுக்கிறீர்கள். நீங்கள், ''நான் பொறாமைப்படக் கூடாது' என்று சொல்லும் பொழுது, ''நான் கூடாது' என்பதற்கு எவ்வளவு சக்தியைக் கொடுக்கிறீர்களோ, அதே அளவு சக்தியை ''பொறாமை'' என்ற வார்த்தைக்கும் அளிக்கிறீர்கள்.

அதனால் இது போன்ற விஷயங்களைச் சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக, "நான் எப்பொழுதும் எல்லாரிடமும் பரிவுடன் இருக்கிறேன்', என்று சொல்லிக் கொள்ளுங்கள். 'பொறாமை' என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தாதீர்கள். ஒரு உணர்ச்சியை மறுப்பதன் மூலம், நீங்கள் விரும்புவதைச் சாதிக்க முடியாது. அதே சூழ்நிலைக்கேற்றவாறு முழுவதும் நேர்மறையாக ஏதேனும் சொல்லுங்கள், அவ்வளவே.

மேலும், பொறாமையைத் தவிர்ப்பதற்கோ அல்லது அதிலிருந்து தப்பி ஒடுவதற்கோ பதிலாக, அதை முழு விழிப்புணர்வுடன் கடந்து செல்லுங்கள். அதைத் தவிர்க்க முற்பட்டால், அது பிறிதொரு சமயத்தில் முன்னை விட அதிக தீவிரத்துடன் உங்களைத் தாக்கும். ஒரு விஷயத்தை ஆழமான விழிப்புணர்வுடன் மனதில் வையுங்கள்... பொறாமை உங்களுடைய உண்மையான இயல்பல்ல. பொறாமையை உங்களுக்குக் கற்றுக் கொடுத்தது சமூகமே.

பொறாமை நீங்களல்ல என்பதில் நம்பிக்கை வையுங்கள், அதுவே போதுமானது. பிறகு தானாகவே, நீங்கள் அதில் சிக்கிக் கொள்ளாமல், அதைக் கண்டு நகைப்பீர்கள். அதைக் கண்டு நகைக்க முடியுமானால், அதில் பங்கெடுத்துக் கொள்வதற்கு பதில், அதைச் சாட்சியாக இருந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று பொருள். உங்களால் சாட்சியாக இருக்க முடியுமானால், எதையும் கடந்து செல்வது சுலபமாகி விடும்.

ஒருபோதும் உங்களை உங்கள் பலவீனத்தைக் கொண்டு அளவிடாதீர்கள்.

மேலும், இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை முழுவதுமே ஒரு தெய்வீக விளையாட்டைத் தவிர வேறல்ல என்பதைப் பார்க்கீர்களானால், பெயரளவிலான இந்தப் பொறாமையுணர்வும் ஒரு தெய்வீக விளையாட்டுத்தான், அதில் சிறிதளவும் உண்மையில்லை என்பதைப் பார்க்க முடியும். பொறாமையில் சிக்கிக் கொள்ளாமல் அதை வெறுமனே வெளியில் ஒரு பொருளாகப் பாருங்கள். பிறகு தானாகவே அது உங்களிடம் தன் சக்தியை இழந்து விடும்.

நீங்கள் தனித்துவம் வாய்ந்தவா் என்பதையும், உங்களைப் போல் இவ்வுலகில் வேறு யாரும் இல்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டீர்களானால், உங்களுடைய ஒப்பிடும் இயல்பு அர்த்தமற்றதாகி, நீங்கள் தானாகவே பொறாமைப்படுவதை நிறுத்தி விடுவீர்கள். பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒவ்வொரு வரையும் ஒவ்வொன்றையும் சமமாகவே நேசிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ஸ்வாமிஜி ... குருமார்கள் மீண்டும் மீண்டும் நம்மிடம் பொறாமையற்ற அன்பு, நன்றாகப் புரிந்து கொள்ளும் தன்மை, மற்றவர்களை எடை போடாத மனப்பாங்கு போன்ற குணங்களை தூண்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் ஏன் இன்னும் நம்மிடம் புரிந்து கொள்ளுதல் நிகழவில்லை?

பாருங்கள், இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.

நாம் குருமார்களின் கொள்கைகளைப் பற்றிக் கொண்டு உருமாற்றமடைவதற்குச் சிரத்தையுடன் முயற்சி செய்வோமாயின் சரியான இழையைப் பிடித்து விட்டோம்; ஆனந்தத்தைப் பெறலாம்! ஆனால் நடப்பதென்னவெனில், நாம் அதற்கு பதிலாக, குருவின் புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம். நீங்கள்

'இதுவே நீ அடையக் கூடிய மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திர சக்தி'

முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது குருவின் கொள்கைகளுக்கும் தத்துவத்திற்கும். நீங்கள் அவரது புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது, அவரை முழுமையாகத் தவற விட்டு விடுகிறீர்கள்; அவரது செய்தியை முழுமையாக தவற விட்டு விடுகிறீர்கள்.

பாருங்கள் ... புரிந்து கொள்ளுங்கள் ... அவரது போதனை களைப் பின்பற்றினால், நீங்கள் ஆன்மீகத்தில் பழுக்க முடியும்; அவரது புறக் தோற்றத்தைப் பற்றிக் கொண்டிருந்தால் ஒரு மதவாதப் பைத்தியமாகத் தங்கி விடுவீர்கள். மகவாதப் பைத்தியங்களே குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிக் குண்டுச் சட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அது பகவத் கீதையிலுள்ள கிருஷ்ணரின் செய்தியானாலும் சரி, அல்லது புனித குரானிலுள்ள முஹம்மதுவின் செய்தி யானாலும் சரி, அல்லது புனித பைபிளில் உள்ள கிறிஸ்துவின் செய்தியானாலும் சரி, செய்தி ஒன்றே; அது வெளிப்படும் விதம்தான் வேறுபடுகிறது. நீங்கள் எந்த குருவைப் பின்பற்றும் அதிர்ஷ்டத்தைப் பெற்றாலும், பின்பற்றுங்கள். ஆனால் நீங்கள் அவர்களது போதனைக்குப் பதிலாக, அவர்களது புறத் தோற்றத் தைப் பின்பற்ற ஆரம்பிக்கும் பொழுதுதான், உங்களுக்குப் பகவத் கீதையை விடவும் கிருஷ்ணர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகிவிடும் பொழுதுதான், நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சினையை உருவாக்கத் தொடங்குகிறீர்கள்.

கிருஷ்ணரும் கிறிஸ்துவும் சந்தித்தால், கண்டிப்பாக அவர்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொள்வர். ஆனால் கிருஷ்ணரின் பசுக்களும் கிறிஸ்துவின் ஆடுகளும் சந்தித்துக் கொள்ளும் பொழுது, அங்கே ஒரு சண்டைதான் நிகழும் !

மற்றவர்களால் இடையுறு செய்யப்படாத முடியாக அமைதி. மிகப்பெரிய விடுதலையாகும்.

பல்வேறு மதத்தைப் பின்பற்றுபவர்களும் தங்களது குருமார்களின் தத்துவமே தலைசிறந்தது என்று உரிமை கோரி அமைதியைப் பரப்ப முயல்கின்றனர். பிறகு என்ன நிகழ்கிறது ? அமைதியைப் பரப்புவதற்கு பதிலாக, நாமே துண்டு துண்டாகச் சிதறி விடுகிறோம்! உங்களுடைய பெயரளவிலான அமைதியை மற்றவர்களின் மீது திணிக்க முயற்சிக்கும் பொழுதுதான், பிரச்சினை ஆரம்பமாகிறது. இவ்வாறுதான் நாம் எல்லா விஷயங் களையும் சிக்கலாக்கிச் செய்தியைப் பல பிறவிகளாகத் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.

குருமார்கள் மனித இனத்தின் மீது கொண்ட முழுமையான பரிவினால் மீண்டும் மீண்டும் இந்தப் பூமியில் அவதரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் மனிதன் எவ்வாறோ சமாளித்துத் தப்பித்து விடுகிறான்!

இரண்டாவது விஷயம்; மற்றவர்களை நோக்கி விரல் களைச் சுட்டுவதற்கு பதில் அல்லது பயிற்சியை ஆரம்பிப்பதற்கு ஒரு நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதற்கு பதில், நாம் ஒவ்வொருவரும் கேட்ட கணம் முதற்கொண்டே பயிற்சியைத் தொடங்கினோமானால், நம்மைச் சுற்றி விஷயங்கள் தானாகவே நடக்கத் தொடங்கும்.

உதாரணத்திற்கு, விலங்குகளையும், மரங்களையும், மனிதர்களையும் ஒரே மாதிரி நேசிக்கக் காத்திருந்து கடைசியில் மறந்து விடுவதை விட, அதை உடனடியாக உள் வாங்கிக் கொண்டு, பயிற்சியைத் தொடங்கிவிடலாம்.

இதை ஆரம்பிப்பதற்கு எளிமையான வழி, நீங்கள் சாலையில் நடக்கும் பொழுதோ அல்லது வீட்டிலிருக்கும்

வானமே எல்லை, வானம் என்ற ஒன்றே இல்லை.

பொழுதோ இயற்கையைக் காயப்படுத்துவதைத் தவிர்க்கலாம். நம்மில் சிலா் நடக்கும் பொழுது வழியிலுள்ள மரத்தின் கிளைகளை ஒடிப்பதையும், பூக்களைப் பெறிப்பதையும் பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இது போன்ற செயல்களை விழிப்புடன் இருந்து நிறுத்த முடியும்; மேலும் இவற்றை அதிக விழிப்புணர்வுடனும் அன்புடனும் பார்க்க முடியும். நீங்கள் இயற்கையைத் தழுவுவதிலிருந்து தொடங்கலாம். பொறாமையடைவதற்கு போற்றுவதற்கும் இது ஒரு நிச்சயமான வழி. இவை குருமார்களின் போதனைகளைத் தவற விடாமலிருக்கச் சில வழிகளாகும்.

ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இங்கு வந்து எனது பேச்சைக் கேட்டோ அல்லது என்னுடைய சில புத்தகங்களை வாங்கிப் படித்தோ, நான் ஒரு சிறந்த பேச்சாளர் என்று புகழ்ந்து விட்டு மறந்துவிடுகிறீர்கள். அல்லது உங்களுடைய சில நண்பர்களுக்கு என்னுடைய பேச்சைக் கேட்கும்படி ஆலோசனை கூறி விட்டு, நீங்கள் மீண்டும் உங்கள் பழைய வழிக்கே போய் விடுகிறீர்கள். பிறகு என்னதான் செய்வது? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் என் போதனைகளைப் பிரசங்கம் செய்து கொண்டிருக்க வேண்டாம், அவற்றைப் பயிற்சி செய்யுங்கள்.

இந்தச் சின்னக் கதையைக் கேளுங்கள் ...

ஒருவன் விடுமுறைக்கு ஆப்பிரிக்கா சென்றான். ஒரு நாள் அவன் கொல்லையில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சிங்கம் அவன் மீது பாய்ந்தது. அவன் வேகமாக குனிந்து கொண்டு விட, சிங்கம் அருகிலிருந்த புதரில் குதித்தது. அடுத்த நாள் அவன் மீண்டும் நடந்து கொண்டிருந்தபோது, சிங்கம் மீண்டும் ஒரு முறை அங்கு

விரிதலே வாழ்வு, சுருங்குதல் சாவு.

வர்கள் அவனைத் தாக்கியது: மீண்டும் அவன் குனிந்து கொள்ள அது புதரில் கொஞ்சம் தள்ளிப் போய் குதித்தது. அடுத்த நாள் அவன் வீட்டிற்குள்ளிருந்தே, சிங்கம் வெளியே எங்காவதிருக்கிறதா என்று பார்த்தான். அது புதருக்குப் பின்னால் இருந்தது. அவன் வியப்படையும் வகையில் அது தாழ்வாகக் குதித்துப் பயிற்சி செய்து கொண்டிருந்தது.

பாருங்கள், நீங்கள் சேகரித்த அறிவைச் செயல்படுத் தினால்தான் வாழ்க்கையில் வளர முடியும். வெறுமனே அறிவைச் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தால், எந்தவிதப் பயனுமில்லை. நீங்கள் வெறுமனே அறிவைச் சேகரிப்பதாயிருந்தால், உங்கள் ஞாபக சக்திதான் வளரும், இருப்புத் தன்மையல்ல.

சேகரித்த அறிவனைத்தும் உங்கள் உள் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தப்பட வேண்டும். இல்லாவிடில், நீங்கள் ஒரு நடமாடும் நூலகத்தை விட மேலானவரல்ல. நான் பலரைப் பார்த்திருக்கிறேன் - அவர்கள் பெரும் பசியுடன் படிக்கிறார்கள், தத்துவத்தைப் பற்றிப் பலரது பேச்சுக்களைக் கேட்கிறார்கள்; மேலும் அதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்கள். ஆனால் செயல்பாடு என்று வரும் பொழுது, அவர்கள் முற்றிலும் குறை பாடுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வெறுமனே மற்றவர்களின் குறிப்பிற்கான புத்தகங்களாகி விடுகிறார்கள். படித்து, முழுமையாக ஜீரணம் செய்து கொள்ளாமல், வெறுமனே மற்றவர்களின் மீது வாந்தியெடுத்து விடுகிறார்கள். அதனால் என்ன பயன் ?

விழிப்புணர்வுடன் வளர்ந்தால் மட்டுமே, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவ முடியும். ஒரு அனுபவரீதியான புரிந்து கொள்ளுதல் தேவையாக இருக்கிறது. இங்கு ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் கேட்டதைச் செயல்படுத்துதல்

ஆற்றல் உங்கள் கனவுகளை நனவாக்கும். அறிவு நிஜமே உங்கள் கனவுதான் என்பதைப் புரிய வைக்கும்.

வெளியுலக நன்மைக்காக உபயோகப்படுத்துவதற்காகக் கூட அல்ல; வெளியுலகம் மாயை என்பதையும், சாதிக்க வேண்டிய தனைத்தும் உங்களுக்குள் தான் என்பதையும் புரிந்து கொள்ளத் தேவையான விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்கே மிகவும் அவசியமானதாகும். அப்பொழுது இந்த முழுச் செயல் முறையிலும், வெளியுலகில் நீங்கள் அடையும் வெற்றி களெல்லாம் வெறும் தற்செயலானதாகவே அமைந்து விடும்.

நீங்கள் குருமார்களின் பேச்சைக் கேட்கும்பொழுது, அப்படியே உட்கிரஹித்துக் கொள்ளுங்கள். குருமார்கள் சத்தியத்தை மட்டுமே பேசுகிறார்கள்.

அது எவ்வாறு இருக்கிறதென்றால் ... ஒரு பெரிய அடர்ந்த கானகத்தை, உங்கள் மனதைப் போன்ற, ஒரு சிறிய விளக்கைக் கொண்டு ஆராய்வது போல் இருக்கிறது. சிறிய விளக்கின் ஒளியில், முன்னால் தெரியும் சில அடிகளைக் கெண்டே, நீங்கள் கண்டதே உண்மை என்று முடிவுகட்டி விடுகிறா்கள். இதைத்தான் விஞ்ஞானிகள் செய்கிறார்கள். அவர்கள் சில அடிகள் முன்னால் பார்த்து விட்டு இன்று ஒரு கோட்பாடுடன் வருகிறார்கள். சில காலத்திற்குப் பின், இன்னும் சில அடிகள் முன் சென்று அந்த ஒளியில் இன்னும் சில அடிகளை நோக்கி இன்னும் சிலவற்றைப் பார்க்கிறார்கள்.

பின்னர் அவர்கள் நேற்று அறிவித்த உண்மைகளை ஒதுக்கி விட்டு வேறு ஒரு புதிய உண்மையைக் கொண்டு வருகிறார்கள். மிகவும் தெளிவாக இருங்கள் ... நேற்று உண்மையாக இருந்த ஒன்று, இன்று உண்மையல்ல என்றாகிவிடுமாயின், நேற்றும் உண்மையாக இருந்திருக்க முடியாது. எது எப்படியோ, இவ்வாறுதான் அவர்கள் தங்கள் மனதைக் கொண்டு ஒரு அடர்ந்த கானகத்தை ஆராய முற்படுகிறார்கள்.

நீங்கள் ஏற்கனவே என்னவாக இருக்க வேண்டுமோ அதுவாகத்தான் இருக்கிறீர்கள்.

ஆனால் இப்பொழுது திடீரென்று ஒரு மின்னல் ஒளியில் முழுக் கானகமும் தெரிவதாகக் கற்பனை செய்து பாருங்கள்! இப்பொழுது உங்களுக்கு முழுக் கானகமும் தெரிவதால் உங்களால் தேவையான பொழுது அதை விவரிக்க முடியும்.

ஞானமடைதல் என்பது இதுவே! அது ஒரு மின்னல் ஒளியில் முழுக் கானகத்தையும் பார்த்தல்.

ஒரு முறை இது நிகழ்ந்துவிடின், நீங்கள் வெறுமனே அறிகிறீர்கள்².

அதனால்தான், ஒரு குருவுக்கு உண்மையாக இருப்பது இன்னொரு குருவுக்கும் உண்மையாக இருக்கிறது. அவர்கள் வெளிப்படுத்தும் விதம் வேறு படலாம்; ஆனால் அவர்களது இறுதி அனுபவம் ஒன்றே. நீங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்கிறீர்கள், அல்லது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உங்கள் புத்தியைக் கொண்டு பதிலளிக்க முற்படும் போதுதான் தத்துவங்களை உருவாக்குகிறீர்கள். அதனால் தத்துவமாக்கி விடாமல், உங்கள் புரிந்து கொள்ளுதலை அனுபவமாக்க முயற்சி செய்யுங்கள்.

பாரதத்தின் கண்காணாத கிராமங்களில் உள்ள பல தேநீர்க் கடைகளில் நீங்கள் ஒரு வழக்கமான காட்சியைக் கண்டிருக்கக் கூடும். தினமும் வழக்கமாகக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் உலகத்தின் தலைசிறந்த தத்துவங்களை அலசுவார்கள். தலைசிறந்த கடவுள்களின் தலைவர்கள், குருமார்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் இவர்கள் வாயில் அரைபட்டு ஜீரணிக்கப்படுவார்கள். பட்டணத்தில் இழைக்கப்படும் அனைத்து அநீதிகளும், எதுவும் விட்டு வைக்கப்படாமல், அலசப்படும். ஒழுக்கம் மற்றும் ஒழுக்கக் குறைவுகளுக்காக உலகம் முழுவதும் இவர்களது பார்வையில்

அலசி ஆராயப்படும். இறுதியில், இவையனைத்தையும் பேசியவன், தேநீரைக் குடித்து முடித்து விட்டு, அதற்கான காசை அடுத்த நாள் தருவதாகச் சொல்லி விட்டுச் செல்வான்!

தனது தேநீருக்கான காசைக் கூட கொடுக்க முடியாதவன், தேநீர்க் கடையின் பெஞ்சில் அமர்ந்து செய்தித்தாளின் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படித்து முடித்து விட்டு, தான் படித்த அனைத்தையும் பற்றி எடை போட்டுக் கொண்டிருப்பான். அந்தச் செய்திப் பத்திரிக்கையின் ஆசிரியர் கூட அவ்வளவு முழுமையாகப் படித்திருக்க மாட்டார்!

இவர்கள் தேநீர்க் கடை பெஞ்சுகளில் செலவழிக்கும் நேரத்தில் அந்த பெஞ்சுகளில் பள்ளம் விழுந்து விடுகிறது. அவர்களது முழு நேரத்தையும் இவ்வாறே செலவழிக் கின்றனர். அவர்கள் ஒரு கணத்தைக் கூட எதையேனும் சாதிக்கும் முயற்சியில் செலவழிப்பதில்லை.

அதனால், நீங்கள் குறைந்தபட்சம், நான் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு, அவற்றின் பின்னால் இருக்கும் உண்மையை உணர முற்படலாம். பதஞ்சலி சொல்கிறார், உங்களால் இன்று 5 அங்குலம் வளைய முடியுமானால், நாளை ஒரு அரை அங்குலமாவது அதிகமாக வளைய முற்படுங்கள். இது போன்றே நான் கொடுக்கும் உண்மையை உணர்வதற்காக ஒரு சீரான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் அந்த தேநீர்க் கடைகளில் இருப்பவர்களை விட மேலானவர்கள் அல்ல. அவர்கள் அங்கு பெஞ்சைப் பள்ளமாக்குகிறார்கள், நீங்கள் இங்கு தரை விரிப்பை ஒட்டையாக்குகிறீர்கள், அவ்வளவே!

பல சமயங்களில், பிரச்சினை என்னவென்றால், ஞான மொழிகளைக் கேட்கும்பொழுது, நாம் எப்பொழுதுமே இவை,

காலையில் பல் துலக்குவதிலிருந்து, இரவு படுக்கைக்குச் செல்லும் வரை, உங்களைப் பற்றிய விழிப்புணர்வேயில்லாமல், ஒரு இயந்திர மனிதனைப் போல வேலை செய்கிறீர்கள்.

நம்முடன் கேட்டுக் கொண்டிருக்கும் நமது நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ மிகச் சரியாகப் பொருந்துவதாக எண்ணுகிறோம் ! நாம் அதை அவர்களுக்குச் செலுத்திப் பார்த்து, அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்ற இரகசியமான நம்பிக்கையில் இருக்கிறோம். அவ்வாறு செய்வதால், செய்தியை நீங்கள் தவறவிட்டு விடுகிறீர்கள், அவ்வளவுதான்! நான் சொல்கிறேன்... நான் பேசும் பொழுது, உங்களிடம்தான் பேசுகிறேன். இந்த அறையில் ஆயிரம் பேர் இருந்தாலும், நான் உங்களிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள்.

என் ஒவ்வொரு வார்க்கையும், உங்களுக்காகவே, சக்தியைத் தாங்கி வருகிறது. அதனால் தயவு செய்து உங்கள் மனதில் இது போன்ற எண்ணங்களுடன் கேட்காதீர்கள். முக்கிய மாக கணவறும் மனைவியுமாக என் பேச்சைக் கேட்பதற்கு வரும் பொழுது, நான் அவர்களது நடைமுறை வாழ்க்கை குறித்த விஷயங்களைச் சொன்னால், கணவன், மனைவி இதைக் கேட்க வேண்டும் என்றும், மனைவி, கணவன் இதைக் கேட்க வேண்டும் என்றும், எண்ணுகின்றனர். இறுதியில் இருவருமே அதை தவற விட்டு விடுகின்றனர்.

மனிதனது உள்ளார்ந்த இயல்பு, பணத்தையும் பொருள் களையும் சேர்ப்பது. ஒரு காலத்தில் பணத்தால் வாங்க முடியாத விஷயங்களும் இருக்கின்றன என்பதை உணருகிறான். பிறகு செல்வத்தை சேர்க்கும் வேகம் தானாகவே குறைகிறது. பிறகு அவன் வார்த்தைகள் அல்லது புத்திபூர்வமான அறிவைச் சேகரிக்க ஆரம்பிக்கிறான். இது எவ்வாறோ ஒருபோதும் நிற்பதேயில்லே. அவனது வார்த்தைகளுக்கான போராசை மேலும் மேலும் அதிமாகிறது.

நீங்கள் வெளியுலக செயல்பாட்டின் உச்சத்தில் சிக்கிக் கொண்டு விட்டாலும் ஒரு இயந்திரமாகி விடாதீர்கள்.

எவனொருவன் சேகரிப்பதை நிறுத்துகிறானோ, அவன் உண்மையான அறிவைத் தேட ஆரம்பிக்கிறான். பல சமயங்களில் நாம் கேள்வி கேட்பது, உண்மையிலேயே பதிலைத் தெரிந்து கொள்வதற்காக அல்ல; வெறுமனே நமக்கு வார்த்தைகளின் மேலுள்ள பேராசையாலோ அல்லது நமக்கும் கொஞ்சம் தெரியும் என்று காண்பிப்பதற் காகவோதான்.

உள்ளே ஆழ்ந்து நோக்கினீர்களானால், ஒரே ஒரு கேள்வி மட்டுமே எழும்; அதுவே உங்களுடைய உண்மையான கேள்வியாகும். அந்தக் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டால், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்!

என்னிடம் ஒருவர் கேட்டார், ''ஸ்வாமிஜி, கடவுள் என்பது என்ன?'. நான் மெதுவாக விஷயத்தை மாற்றி அவரது குடும்பத் தைப் பற்றியும், தொழிலைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தேன். நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந் தோம். அந்த இரண்டு மணி நேரத்தில், அவர் ஒரு முறை கூட அவரது முதல் கேள்வியைப் பற்றிக் கேட்கவேயில்லை. இறுதியில் நான் அவரிடம் சொன்னேன், "ஜயா, நீங்கள் இங்கு வர்தவுடன் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொல்லாததன் காரணம், அது உங்கள் உள் ஆழத்திலிருந்து வந்த கேள்வியல்ல''.

கேள்வி நமது உள் ஆழத்திலிருந்து வருமானால், நாம் அதை ஒரு போதும் மறக்கவோ அல்லது நமக்கு ஒரு திருப்தியான பதில் கிடைக்கும் வரை ஓயவோ மாட்டோம். சிலா் கேள்வி கேட்டு விட்டுப் பதிலையும் அவர்களே சொல்லி விட்டு, பிறகு என்னிடம் ஒரு பதிலைக் கேட்கிறார்கள்! அவர்கள் வெறுமனே என்னிடமிருந்து ஆதரவான வார்த்தைகளையே எதிர்பார்க்கிறார்கள், அவ்வளவே.

கடவுள் ஒரு கலைஞர், பொறியாளர் அல்ல. ஒருவேளை அவர் ஒரு பொறியாளராக இருந்திருந்திருந்தால், அனைவரையும் ஒரே அச்சால் செய்திருப்பார்.

கேள்விகள் உண்மையிலேயே நமக்குள் வார்த்தைகளைச் சேகரிக்கும் ஒரு போராட்டமாக அமைந்து விடுகின்றன. நாம் இந்த வார்த்தைகளைச் சேகரிப்பதில் பெருமிதம் அடைகிறோம். ஆனால் அவ்வாறு செய்வதில் பெரும் உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம்! நாம் உண்மையை விட வார்த்தைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறோம். இவ்வாறுதான் நாம் குருவைத் தவற விடுகிறோம்; இவ்வாறுதான் நாம் குருவின் வார்க்கைகளுக்குப் பின்னால் உள்ள புரிந்து கொள்ளுதலைத் தவறவிட்டு விடுகிறோம்.

மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, நாங்கள் ஒப்பிடுவதையும் மற்ற எல்லாவற்றையும் நிறுத்தி விட வேண்டு மென்றால், எல்லாவற்றையும் துறந்து ஆன்மீக வாதியாகிவிட வேண்டுமா?''

ஒப்பிடுதலை நிறுத்துங்கள், ஓடிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள் என்றெல்லாம் சொன்னவுடன், நான் அவர்களை உலக விஷயங்களிலிருந்து தப்பி ஓடி ஆன்மீகவாதியாகி விடும்படி சொல்கிறேன் என்று பலரும் நினைக்கிறார்கள். முக்கியமாக இந்த விஷூத்தி சக்கரத்தைப் பற்றிப் பேசும் பொழுது அவர்கள் இவ்வாறு நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆன்மீகம் அல்லது சந்நியாசம் என்பது துறப்பதைப் பற்றியே அல்ல. அது ஆழமான விழிப்புணர்வைப் பெறுவது பற்றியது. விழிப்புணர்வு பெறும் பொழுது, முட்டாள்தனமான ஆசைகள் தானாகவே சுருங்கி அடிப்படைத் தேவைகள் மட்டுமே எஞ்சி நிற்கும். விழிப்புணர்வானது, அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஆற்றலைக் கொடுத்து, பிறகு உங்களை உள்ளே திருப்பி விடும்.

நீங்கள் போதுமான அளவு அழகாக இருக்கிறீர்கள், ஒவ்வொரு உயிருமே அழகாகத்தான் இருக்கிறது.

வெளியுலகில் செய்யப்பட வேண்டியவை யெல்லாம், சந்தேகத்திற்கிடமின்றி, வேண்டியதுதான். உங்கள் தொடர்பான விஷயங்களைப் பார்க்க வேண்டும்; உங்கள் உடலை உயிருடன் வைத்துக் கொள்ள வேண்டும். நான் சொல்வதெல்லாம் என்னவென்றால், இவை எல்லாவற்றிலும் விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள்; அதனால் வெளியுலகில் தேவையற்ற நடவடிக்கைகள் தானாகவே மறைந்து விடும்; மேலும் உங்கள் பிறப்பு மற்றும் வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதலோடு வாழ முடியும். பிறகு, எல்லாவிதமான மாயைகளும், அனைத்து கடன் வாங்கப்பட்ட ஆசைகளும், புகுத்தப்பட்ட அத்தனை பயங்களும், எல்லா விதமான பொறாமையும், ஒப்பிடுதலும், தீவிரமான உணர்ச்சிகளும், இச்சையும் ஒரு முழுமையான மாற்றத்திற்குட்பட்டு, உங்களுக்கு ஒரு ஆனந்தமயமான சக்தியாகி விடும்.

ஒரு சின்ன கதை ...

ஒரு குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்த பொழுது, ஒரு ஆற்றை அடைந்தனர். ஆச்சரியமடைந்த சிஷ்யன் கேட்டான், ''குருவே, நாம் இப்பொழுது ஆற்றைக் கடக்கப் போகிறோமா ?''. குரு அமைதியாகச் சொன்னார், "ஆம், கடக்கப் போகிறோம். பாதம் நனைந்துவிடப் போகிறது, பத்திரம்!''. குரு என்ன சொல்கிறார் என்பதைச் சீடனால் புரிந்து கொள்ள முடியவில்லை!

ஆன்மீகம் என்பது கால்கள் நனையாமல் வாழ்க்கைக் கடலைக் கடப்பது என்பதையே குரு புரிய வைக்கிறார். ஆன்மீகம் என்பது உலக விஷயங்களிலிருந்து தப்பி ஓடி விடுவதல்ல. இதில் மிகவும் தெளிவாக இருங்கள்.

ஆன்மீகம் என்பது உண்மையில் வாழ்க்கைப் பொறியியல். கல்லூரிகளில் பலவகையான பொறியியல் படிப்புகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அவையெல்லாம் உங்கள் மூளையை விற்பதற்குப் பதிலாகக் கிடைக்கும் வெற்றுச் சான்றிதழ்கள். நம் ஒவ்வொருவருக்கும் போதிக்கப்பட வேண்டியது வாழ்க்கைப் பொறியியலே. ஆன்மீகம், உங்களுக்கு இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில் ஒரு பரமஹம்ஸர் அல்லது தன்னை முற்றிலும் உணர்ந்த ஒரு ஞானியைப் போல, கழுத்தளவு நீரில் நின்றாலும், அதனால் தொடப்படாமல், வாழக் கற்றுக் கொடுக்கிறது.

அது யாருடைய அல்லது எதனுடைய வரம்பையும் மீறாமல், ஒரு தீவிரமான, மன நிறைவான வாழ்வை வாழக் கற்றுக் கொடுக்கிறது. அது உங்களுடைய புத்தியிலிருந்து துண்டித்துக் கொண்டு, பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அதிசயங்களை, ஒப்பிடுதல், பொறாமை, இச்சை போன்ற எந்த விதமான மாயத் தோற்றங்களும் இன்றி, விழிகள் விரிய, கள்ளங்கபடமற்ற தன்மையுடன் பார்க்கக் கற்றுக் கொடுக்கிறது. அது பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து இயங்கி, தற்செயலின் ஆற்றலை அனுபவிக்கக் கற்றுக் கொடுக்கிறது ; அப்பொழுது உங்களின் உள் மகிழ்ச்சியின் விளைவாக விஷயங்கள் தானாகவே நிகழ்வதைக் காண்கிறீர்கள்.

அது எப்பொழுதும் ஒரு பிரார்த்தனையான மற்றும் நன்றியுணர்வுடனான தன்மையின் வழிகளை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்துடன் இருக்கக் கற்றுக் கொடுக்கிறது. அது, வெளியுலக உணர்ச்சிகளால்

உங்கள் உடல் கடவுளிடம் இருந்து வந்த பரிசு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அலைக்கழிக்கப்படாமல், ஒவ்வொரு கணத்தையும், உங்கள் உள் மையத்தில் இருந்து அனுபவிக்கக் கற்றுக் கொடுக்கிறது. அது கொண்டாடு வதற்குக் காரணங்களைத் தேடிக் கொண்டிராமல், வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குக் கற்றுக் கொடுக்கிறது.

அது உங்கள் உள் அறிவுக் கூர்மையைத் தூண்டி, வெளியுலகச் செயல் திறனை வேகப்படுத்துகிறது. அது உங்கள் விழிப்புணர்வை எழுப்பி ஆழமான விழிப்புணர்வை நோக்கி எடுத்துச் செல்கிறது. அது உங்களை இச்சையிலிருந்து அன்புக்கும், கவலையிலிருந்து ஆச்சரியத்திற்கும், பொய்யிலிருந்து உண்மைக்கும், வேதனையிலிருந்து ஆனந்தத்திற்கும், பொறாமையில் இருந்து கொண்டாட்டத்திற்கும் எடுத்துச் செல்கிறது. இப்பொழுது சொல்லுங்கள், இவற்றிலெல்லாம் துறவு எங்கு வருகிறதென்று?

மேலும் இன்னொரு விஷயம் ... மக்கள் ஆன்மீகத்திற்கென தனியான நேரம் ஒதுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்; நிச்சயமாக அவ்வாறு இல்லை. நான் அது தேவையில்லையென்று எதைக் கொண்டு சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல; அவர்கள் மதவாதிகள்.

சடங்குகளும் மதத்திற்கு நேரம் தேவை. ஆன்மீகத்திற்கு அளவுடனோ அல்லது நேரத்துடனோ எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஆனால் ஆன்மீகத்திற்கும் உங்கள் வாழ்க்கைத்தரத்திற்கும் சம்பந்தம் உண்டு. உங்களுக்கு உண்மையைத் தேடும் சிரத்தை இருந்தால் போதுமானது. பிறகு, எப்பொழுதும், நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் தியானமாகச் செய்ய முடியும்;

உங்கள் நோக்கத்தையும் அடைந்து விடுவீர்கள். பிறகு நீங்கள் தானாகவே வேலையிலும், வீட்டிலும், மனிதர்களுக்கிடையே யான உறவிலும், பொறாமை மற்றும் ஒப்பிடுதல் போன்ற எந்தவிதமான சக்தித்தடைகளும் இல்லாமல் பிரகாசிப்பீர்கள்.

எந்தவிதமான சூழ்நிலைக்கும் ஏற்றவாறு உங்களால் சுலபமாக உங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியும். உங்களால் எந்த இடத்திலும் எவருடனும் இயல்பாக இருக்க முடியும். வீடு என்பது வெறுமனே நீங்கள் வசிக்கும் இடம் மட்டுமே என்பதல்லாமல் முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையுமே உங்கள் வீடாகி விடும். நீங்கள் மன மற்றும் உடல் ரீதியான நெறிப் படுத்தல்களை உடைத்துக் கொண்டு விடுதலை பெற்று, உயர்ந்து, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலந்து ஒன்றாகி விடுவீர்கள்.

பிரச்சினை என்னவென்றால், மக்கள் வெறுமனே சடங்கு களைச் செய்வதிலேயே திருப்தியடைந்து விடுகிறார்கள். இதைச் செய்வதில் ஏதோ ஒரு பாதுகாப்பை உணருகிறார்கள். மக்களுக்கு, சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் தெரிவதில்லை; ஆனால் சடங்குகள் அவர்களது அஹங்காரத்தைத் திருப்தி செய்கின்றன. சடங்குகள் சிக்கல் நிறைந்தவை; சிக்கல் நிறைந்த விஷயங்களில் ஈடுபடுவதை நாம் எப்பொழுதும் ஒரு சவாலாகவே கருதுகிறோம்.

மக்கள் என்னிடம் அவர்களுடைய பிரச்சினைகளுடன் வந்து, அவற்றிற்குத் தீர்வு கேட்கிறார்கள். நான் அவா்களிடம் 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்கிறேன்; மேலும் அவர்கள் ஆசிரமத்தில் இருக்கும்பொழுது சிறிது நேரம் ஆல மரத்தடியில் அமாந்து விட்டுச் செல்லுமாறு சொல்கிறேன். ஆசிரமத்தில் இருக்கும் ஆலமரம் ஒரு சக்திக்களம். ஆனால் அவர்கள் இந்த பதிலில் மகிழ்ச்சியடைவதில்லை. விஷயங்கள் இன்னும் நல்ல படியாக ஆக என்ன சடங்குகள் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

நான் அவர்களிடம் ஆசிரமத்திலுள்ள ஆலமரத்தை 108 சுற்றுக்கள் சுற்றுமாறு சொன்னால், அவர்கள் அதை மிக மகிழ்ச்சியுடன் செய்வார்கள்! பாருங்கள், நீங்கள் ஆலமரத்தை 108 சுற்றுக்கள் சுற்றினால், அது உங்கள் அஹங்காரத்தைத் திருப்திப் படுத்துகிறது. பிறகு நீங்கள் கடினமாக உழைத்ததாகவும், அதன் பலன் உங்களுக்குக் கிடைக்கும் என்றும் எண்ணுகிறீர்கள். நாம் மதத்தைப் பொறுத்தவரை நமது மனத்தை இவ்வாறுதான் பழக்கப்படுத்தியிருக்கிறோம்.

மதங்களிலும் சடங்குகளிலும் கூட, மக்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவதை நான் கண்டிருக்கிறேன்! உங்கள் அண்டை வீட்டார் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டை ஒரு குறிப்பிட்ட கோயிலில் செய்தால், அடுத்து நீங்களும் அங்கே சென்று அதே வழிபாட்டை அதே கோயிலில் செய்கிறீர்கள். எதைக் குறித்து ? கடவுளையா அல்லது அண்டை வீட்டுக்காரரையா ?! இவற்றையெல்லாம் செய்து கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் எல்லாவற்றையும் தவற விட்டு விடுகிறீர்கள்!

மக்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு முக்கியமான புனித ஸ்தலங்களுக்குச் சென்று வந்ததாகக் கூறுவதில் பெருமை யடைகிறார்கள். அவர்கள் பட்டியலிடுகிறார்கள். இந்தக் கதைகளைக் கேட்பவர்களோ, உடனடியாக, இந்த சாதனைகளை மிஞ்சுவதற்கு முயற்சி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த எல்லாப் புனித ஸ்தலங்களுக்கும் சென்று வந்த பிறகும், உங்கள் அஹங்காரம் இன்னும் உறுதியாகவே இருக்கிறது;

நீங்கள் உண்மையிலேயே ஒரு மனிதரை நேசித்தால் அவருக்கு விடுதலை கொடுங்கள்.

விஷூத்தி சக்கரம் இன்னும் அடைபட்டுதான் இருக்கிறது! இதைப் பற்றி எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா ? இவையெல்லாம், ஒப்பிடுதல், பொறாமை மற்றும் இது போன்ற விஷயங்களில் இருந்து விடுதலை பெறவும், உள் உலக முன்னேற்றத்திற்காகவுமே செய்யப்படுபவை. ஆனால் இங்கும் நீங்கள் குறிக்கோளை மீண்டும் தவறவிட்டு விட்டு, இவற்றை வெளி உலகிற்காகவே செய்கிறீர்கள்.

மக்கள் தெய்வத்திற்கு முன் ஸ்லோகங்களைச் சொல்வதைப் பார்க்கிருக்கிறேன். அவர்கள் சில வரிகளைப் படித்து விட்டு, வேலைக்காரியைக் கூப்பிட்டு அவளுக்குக் கொடுத்த வேலையை முடித்தாயிற்றா என்று கேட்பார்கள். அல்லது சில வரிகளைப் படித்து விட்டு, முடிப்பதற்கு இன்னும் எத்தனைப் பக்கங்கள் மீதியிருக்கிறது என்று பார்ப்பார்கள்! இவ்வாறுதான் அவர்கள் கடவுளுடன் தொடர்பு கொள்கிறார்கள்; மேலும் இறுதியில் அதைப் படித்து முடித்ததற்காகத் திருப்தியடைகிறார்கள்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, இதுபோன்று பாராயணம் செய்வதை, ஒரு உறுதியெடுத்துக் கொண்டு, 21 நாட்களுக்குத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்! பிறகு பெருமிதத்துடன் சென்று அண்டைவீட்டுக்காரர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ தாங்கள் மிகவும் கடினமான ஒரு சங்கல்பத்தை நிறைவேற்றி விட்டதாகச் சொல்வார்கள்.

நாம் செய்யும் எல்லா விஷயங்களுமே அநேகமாக வெறுமனே மற்றவர்களிடம் சொல்லி, அவர்களிடம் ஒரு ஒப்பிடுதல் விதையை விதைப்பதற்குத்தான். பாருங்கள், நீங்கள் சடங்குகளைச் செய்வதாகத் தீர்மானித்தால், அதை மிகுந்த சிரத்தையுடன், பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஒரு ஆழமான தொடர்பு இருக்கும் உணர்வுடன் செய்யுங்கள். இவ்வாறு செய்தீர்களானால், அதைப் பற்றிப் பேச மாட்டீர்கள்.

சடங்குகளின் வழியைப் பின்பற்றுவதாகத் தீர்மானித்தால், பொறுப்பும் சிரத்தையும் பிரதானமாக இருக்க வேண்டும். அதனால் மிகுந்த சிரத்தையுடன் செய்யுங்கள். இன்று சடங்கு முறை வழிபாட்டிற்கு நூற்றுக்கணக்கான வழிமுறைகள் இருக்கின்றன. அதில் எதைப் பின்பற்றுவது என்று குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வெறுமனே ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றுவதாகத் தீர்மானித்து, அதைப் பொறுப்புடன் செய்யவும். பொறுப்புணர்வுதான் பலனளிக்கிறதே தவிர, சடங்குகளே அல்ல.

மேலும் இன்னொரு விஷயம் ... உடனடி விளைவை எதிர்பார்க்காதீர்கள். இன்று ஒவ்வொருவரும் உடனடி தேநீர், உடனடி காபி போல உடனடி விளைவை விரும்புகிறார்கள். நம்மில் பலரும், மற்றவர்களுடைய பிரார்த்தனைகளுக்குச் சீக்கிரமாக பதில் கிடைத்து விடுவதாகவும், நாமும் நமது வழிபாட்டு முறையை அவர்களது வழிபாட்டு முறையைப் போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறோம். இவையெல்லாம் அபத்தமானது. வழிபாட்டில் கூடவா இவ்வளவு ஒப்பிடுதல் ? நீங்கள் செய்யும் எதையும் பொறுப்புடனும் விசுவாசத்துடனும் செய்து விட்டு, மற்றவற்றை அப்படியே விட்டுவிடுங்கள். தானாகவே நடக்க வேண்டியது நடக்கும்.

மேலும், சடங்குகளைப் பின்பற்றும் பொழுது அவற்றின் பின்னாலுள்ள அறிவியலைப் புரிந்து கொண்டு செய்ய முயற்சி செய்தால், உங்கள் மனமும் சடங்குகளிலேயே சிக்கிக் கொண்டு விடாமல், சரியான விதத்தில் இசைவுடன் இருக்கும். எந்த ஒரு

பொறாமையிலிருந்து விடுதலை பெறுவது என்பது ஒருவரது வாழ்வில் பெறும் மிகப்பெரும் விடுதலையாகும்.

மதத்தின் அல்லது சடங்கின் இறுதி நோக்கமும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்திருப்பதேயாகும். இது சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

சடங்குகள் கடவுளர்க்கு லஞ்சம் கொடுப்பதற்கான வர்த்தகப் பரிவர்த்தனை அல்ல. அவை நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உருவாக்கும் வங்கி இருப்புகளும் அல்ல. அவை யார் அதிகமாகச் செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கான, மற்றவருடனான ஓட்டப் பந்தயமும் அல்ல. அதனால் ஒப்பிடுதலை நிறுத்தி விட்டு, நீங்கள் செய்வதில் உள்ள தீவிரத்தை உணர்ந்து கொள்ள ஆரம்பியுங்கள்.

எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது ...

மூன்று பேர் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கினர். அவர்கள் தொழிலில் கடவுளையும் ஒரு பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வது என்று தீர்மானித்தனர். அவர்களுக்கு வரும் லாபத்தில் ஒரு சதவிகிதத்தை கடவுளுக்குக் கொடுத்து விடுவதாகவும் முடிவு செய்தனர். அவர்கள் தொழிலை ஆரம்பித்து, எதிர்பாராத விதமாக அதிக லாபமடைந்தனர். பிறகுதான் பிரச்சினை வந்தது ... கடவுளுக்கு எப்படி இவ்வளவு கொடுப்பது? ஒவ்வொருவரும் ஆலோசனை கூறினர். முதலாமவன் சொன்னான், ''சரி. நாம் ஒரு வட்டம் வரைந்து, எல்லாப் பணத்தையும் மேலே எறிவோம். வட்டத்திற்கு உள்ளே விழுவது கடவுளுக்கென்றும் வெளியே விழுவது நமக்கென்றும் வைத்துக் கொள்வோம்". இரண்டாமவன் சொன்னான், "அப்படி வேண்டாம். நான் ஒரு சிறந்த யோசனை சொல்கிறேன். நாம் ஒரு பெரிய வட்டம் வரைந்து, எல்லாப் பணத்தையும் மேலே எறிவோம். உள்ளே விழுவது நமக்கென்றும், வெளியே விழுவது கடவுளுக்கென்றும் வைத்துக் கொள்வோம்".

உங்களால் சாட்சியாக இருக்க முடியுமானால், எதையும் கடந்து செல்வது சுலபமாகி விடும்.

மூன்றாமவன் சொன்னான். ''பாருங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள். எப்படியும் கடவுள் நமக்கு மேலேதான் இருக்கிறார். நாம் எல்லாப் பணக்கையும் மேலே எறிவோம். அவருக்கு வேண்டியதை அவர் எடுத்துக் கொள்ளட்டும். கீழே விழுவதை நாம் எடுத்துக் கொள்வோம்''.

(பலத்த சிரிப்பு ! )

நமக்கு ஏதாவது வேண்டியிருக்கும் வரையில், நாம் அதற்காகக் கடவுளுக்கு லஞ்சம் கொடுப்போம். நமக்கு அது கிடைத்தவுடன், அடுத்த ஆசை எழும் வரையில், அவரைக் கைகழுவி விடுவோம். நமக்கு இவ்வாறு செயல்படத்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சொல்லுங்கள் ... ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா ?

ஸ்வாமிஜி, நாம் சடங்குகளைப் பற்றிப் பேசும் பொழுது, தயவு செய்து சடங்குகளின் மார்க்கத்தைப் பற்றியும், தியான மார்க்கத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல முடியுமா?

சொல்கிறேன் ...

பாருங்கள், சடங்குகளைப் பொறுத்தவரை, ஏதோ ஒரு நிச்சயமான தன்மை இருக்கிறது. அது ஒழுங்காக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் சரியாக எப்பொழுது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்பொழுது முடிக்கப் போகிறீர்கள், எங்கு செய்யப் போகிறீர்கள், எதற்காகச் செய்யப் போகிறீர்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். சடங்குகளைப் பொறுத்த வரை, நீங்கள் உள்ளே சென்று விட்டு மீண்டும் அதே மனிதனாக வெளியே வந்து விடுகிறீர்கள். மொத்த செயல்முறையிலுமே மிகுந்த பாதுகாப்பு இருக்கிறது.

நீங்கள் என் போதனைகளைப் பிரசங்கம் செய்து கொண்டிருக்க வேண்டாம். அவற்றைப் பயிற்சி செய்யுங்கள். அதனால்தான் அது இவ்வளவு தூரம் பரவியிருக்கிறது. நிச்சயமான தன்மை கொண்ட எதுவுமே சுலபமாகப் பரவி விடுகிறது.

ஆனால் தியானத்தில் என்ன நிகழ்கிறது ? முதலில், சடங்குகளுடன் ஒப்பிடும் பொழுது, பலனளிப்பதில் தியானம் மிகவும் எளிமையானதாகத் தோன்றுகிறது. நான் ஏன் ஆசிரமத்தில் சடங்குகளைச் செய்கிறேன் என்று மக்கள் என்னிடம் எப்பொழுதும் கேட்பதுண்டு. நான் அவர்களிடம் சொல்வேன், மக்களை வெறுமனே ஆசிரமத்திற்கு வந்து ஆலமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்யுங்கள் - உண்மையில் இதுவே போதுமானது - என்றால், அவர்கள் கேட்பார்களா ?

இப்பொழுது இங்கு தக்ஷிணாமூர்த்தி சிலையும், நடராஜா விக்கிரகமும் இல்லையென்றால், அவர்கள் இவற்றை அங்கே பார்க்கவில்லையென்றால், வெறுமனே வெறும் திறந்த வெளியையும் ஆலமரத்தையும் பார்ப்பதற்கு வருவார்களா? அநேகமாக நான் மட்டுமே ஆலமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பேன்! (சிரிப்பலைகள்).

மக்களை, அவர்களது உள்நோக்கிய பயணத்தில் முதலடியை எடுத்து வைக்க வைப்பதற்கு, அவர்கள் மனதிலிருக்கும் சில சிக்கலான விஷயங்களை நான் காண்பிக்க வேண்டியதாக இருக்கிறது. இல்லாவிடில் அவர்களைக் கவர முடியாது. நான் அவர்களது மொழியிலேயே பேச வேண்டியதிருக்கிறது.

தக்ஷிணாமூர்த்தி சிலை அங்கு இல்லாவிடினும் உண்மையிலேயே ஆலமரத்தைச் சுற்றியுள்ள சக்திக் களம் இருக்கும் என்பதை அறியாமல், அவர்கள் ஆலமரத்தினடியில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த ஆல மரமானது உயிருள்ள சக்தியாகும். அதன் அமைதி அதிர்விலேயே

நீங்கள் குருமார்களின் பேச்சைக் கேட்கும்பொழுது அப்படியே உட்கிரஹித்துக் கொள்ளுங்கள். குருமார்கள் சத்தியத்தை மட்டுமே பேசுகிறார்கள்.

இருக்கும் அமைதி. அதனடியில் நீங்கள் வெறுமனே ஒரு தியான மனோபாவத்தோடு அமர்ந்தாலே போதுமானது. நீங்கள் சிக்கலான எதையும் செய்ய வேண்டியதில்லை. அதிலிருக்கும் ஒவ்வொரு இலையும், கிளையும் என்னுடன் பேசுகிறது.

பாருங்கள், நீங்கள் விக்கிரகங்களை வழிபடும்பொழுது, அதனுடன் இணைக்க முயற்சி செய்யும், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரமிக்கத்தக்க இருப்பை மேலும் மேலும் அறிய வேண்டும். பிறகு நீங்கள் தானாகவே எல்லா இடத்திலும் கடவுளைக் காண ஆரம்பித்து விடுவீர்கள். அது வெறும் விக்கிரகம் அல்ல, கடவுளின் இருப்பைச் சுமந்து கொண்டிருக்கும் முழு படைப்புமே அது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். பிறகு உங்களால் முழு பிரபஞ்சத்துடனுமே தொடர்பு கொள்ள முடியும்.

தியானத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சிரத்தையுடன் தியானத்திற்குள் சென்றால், அதன் விளைவை நிச்சயமாகச் சொல்ல முடியாது. புறத்தன்மை மாற்றமடையலாம். நீங்கள் வேறு மனிதராக வெளிப்படலாம். இது ஒரு பெரிய அபாயமாகப் பார்க்கப்படுகிறது! அது சூதாட்டத்தைப் போன்றது. மாற்றம் நிகழக் தொடங்குகிறது. இந்த மாற்றத்தைத்தான் நீங்கள் உண்மையிலேயே தேடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது நிகழும்பொழுது அச்சப்படுகிறீர்கள்.

நீங்கள், உங்கள் சடங்குகளின் பாதுகாப்பில் சுகமாக இருக்கிறீர்கள். சடங்குகள் உங்கள் தினசரிச் செயல்பாடுகளில் ஒரு அங்கமாகி விட்டது; அது நீங்கள் பின்பற்றும் உயிரற்ற வழிமுறைகளின் ஒரு பகுதியாகி விட்டது.

ஞானம் என்பது இதுவே - அது ஒரு மின்னல் ஒளியில் முழுக் கானகத்தையும் பார்த்தல் !

எப்படியோ, அது உங்களுக்கு ஒரு திருப்தியைத் தருவதால், நீங்கள் அங்கேயே இருக்கிறீர்கள், தியானத்தில், உங்கள் கொள்கைகள் கொஞ்சம் ஆட்டம் காணத் தொடங்குவதால், நீங்கள் அச்சப்படுகிறீர்கள். வருடக் கணக்கான நெறிப் படுத்தல்களினால் கட்டப்பட்டுள்ள உங்கள் நம்பிக்கைகள் திடீரென்று ஆட்டம் காண்பது போல் தோன்றுகிறது. நீங்கள், இதுவரை அதிகம் நடந்திராத பாதையில் செல்வதாக உணர்வதால் அது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நீங்கள் தியானம் செய்யும் பொழுது, உங்கள் விழிப்புணர்வு அதிகமாகிறது. அதனால், நீங்கள் உங்களைச் சுற்றி இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கும், உண்மையில் சமூகத்தால் உங்களைச் சுற்றிப் போடப்பட்ட வேலியானது, கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, நீங்கள் புரட்சிகரமாக உணர்கிறீர்கள். இது சமூகத்திற்கு எதிரானதல்ல; ஆனால் உங்களுடைய விழிப்பற்ற, அறியாமை நிறைந்த நிலைக்கு எதிரானது. இந்தப் புரட்சி மனப்பான்மை இதன் காரணத்தை அறிய மேலும் முற்படுகிறது. அது உங்களுக்கு இன்னும் பல வழிகளைத் திறக்கிறது.

இவ்வாறு நீங்கள் இதற்குமுன் சென்றிராத, சமூகத்தால் அறியப்படாத, சமூகம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிற, இதுகாறும் உங்களுக்குள்ளேயே இருந்த ஆனால் பூட்டப்பட்ட நிலையில் இருந்த, அதைத் திறப்பதற்கான திறவு கோலைத் தேடிக் கொண்டிருந்த, இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் இதற்கு முன்னும் பல பிறவிகளிலும் அறியாமல் இருந்த, ஒரு வெற்றிடத்தில் மேலும் மேலும் ஆழமாகச் செல்வீர்கள். இந்த வெளியை நீங்கள் கண்டுபிடித்து விட்டால் வந்து சேர்ந்து விட்டீர்கள்!

என் ஒவ்வொரு வார்த்தையும், உங்களுக்காகவே, சக்தியைத் தாங்கி வருகிறது.

அது இவ்வாறு இருக்கிறது ... ஒரு பசு கயிற்றால் கட்டப்பட்டு. சில மீட்டர் ஆரமே கொடுக்கப்பட்டு, சிறிது தூரம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அது அங்குமிங்கும் அலைந்து, அதன் அறிவுக் கூர்மையினால் விழிப்பும், பக்குவமும் பெறுகிறது. பிறகு கயிறு சிறிது தளர்த்தப்பட்டு, இன்னும் சில மீட்டர் ஆரம் அதிகமாக்கப்படுகிறது. அது இன்னும் கொஞ்சம் அதிக ஆரம் சென்று மேலும் அறிவுக் கூர்மையடைகிறது. அதனால் இன்னும் சிறிது கயிறு தளர்க்கப்பட்டு இன்னும் சிறிது ஆரம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பசுவின் வளரும் அறிவுக் கூர்மையையும், விழிப்புணர்வையும் பொறுத்து ஒரு காலத்தில் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டு விடும்!

மனிதனிடமும் இதேதான் நடக்கிறது. மனிதனைச் சுற்றியிருக்கும் கயிறு அல்லது வேலியானது அவனுடைய விழிப் புணர்வைப் பொறுத்தே அமைகிறது. அவனுடைய விழிப்பு அதிகரிக்க அதிகரிக்க, அவன் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறான்; மேலும் அவனது விழிப்புணர்வு அதிகரிக்கிறது.

பாருங்கள், அது உங்களுடைய சக்தி உருமாற்றமடைய அனுமதிப்பதற்கு எவ்வளவு விருப்பமாயிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இந்த ஒரு வழியில்தான் அது நிகழ முடியும்.

ஆனால் அது நிகழும் பொழுது, சமூகம் நீங்கள் விலகிச் செல்வதாகச் சொல்லும். அது நீங்கள் சரியான பாதையிலிருந்து விலகிச் செல்வதாகச் சொல்லும். பிறகு குழப்பம் ஆரம்பமாகும். அப்பொழுது, நீங்கள் தைரியத்துடனும், உங்கள் மீதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீதும் விசுவாசத்துடனும், மேலே செல்ல வேண்டும்.

உள்ளே ஆழ்ந்து நோக்கினீர்களானால், ஒரே ஒரு கேள்வி மட்டுமே எழும்; அதுவே உங்களுடைய உண்மையான கேள்வியாகும். அதற்கு பதில் கிடைத்து விட்டால், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்.

இங்குதான், எந்த ஒரு ஒரு புத்தகத்தையும் அல்லது பிரசங்கத்தையும் விட மேலாக, ஒரு குருவால் ஒரு யோக தண்டம் (சிறு ஊன்றுகோல்) போல நீங்களாகவே எழுந்து நிற்க உதவ முடியும். ஒவ்வொரு முறையும், உங்கள் ஆன்மீகப் பாதையில், நீங்கள் சமூகத்தால் தாக்கப்படுவதாக உணரும் போதும், நீங்கள் பெரும்பாலான மக்களுக்கு எதிராக இருப்பதாக உணரும் போதும், குருநாதர் தன் சொந்த வழியில் உங்களை மேலே தூக்கி, தொடர்ந்து செல்லச் சொல்வார்.

பலவீனமான தருணங்களில் தூண்டி விடப்பட வேண்டும். நீங்கள் மீண்டும் உங்கள் தலையை உயர்த்தி நடக்கும் வரையிலும் குருநாதரே தூண்டு கோலாகவும் ஊன்றுகோலாகவும் இருக்கிறார். நீங்கள் திணறும் ஒவ்வொரு கணமும், அந்தக் கோல் உதவுவதற்காக வெளிப்படுகிறது.

குருநாதரின் துணையுடன், உங்களால் தனி மனிதனாக, சுதந்திரமான மனிதனாக, உங்களது தனித்துவத்தைக் கண்டுணர்ந்து, எழுந்து நிற்க முடியும். அதன் பொருள், நீங்கள் குருநாதரைச் சார்ந்திருக்கிறீர்கள் என்பதல்ல, கண்டிப்பாக அல்ல. இது இன்னொரு பொதுவான தவறான அபிப்பிராயம். மக்கள், நீங்கள் வாழ்க்கைக்கு இன்னொரு மனிதரைச் சார்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றனர்.

அது இவ்வாறு இருக்கிறது ... நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள். நீங்களாகவே கண்டு பிடிப்பதாயிருந்தால், நீங்கள் பல இடங்களில் வழி கேட்பீர்கள். சில சமயம் தவறாக வழி காட்டப்பட்டு, மீண்டும் சென்ற வழியே திரும்பவும் நேரலாம். இவ்வாறு, எப்படியோ உங்கள் இலக்கை அடைந்து விடுவீர்கள். நீங்கள் அடைந்து

நாம் உண்மையை விட வார்த்தைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவ்வாறுதான் நாம் குருவையும் தவற விட்டு விடுகிறோம்.

விடுவீர்கள் என்றாலும், அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடும்.

ஆனால் உங்களிடம் ஒரு வரைபடமோ அல்லது ஒரு வழிகாட்டியோ இருந்தால், எப்படி இருக்கும் ? நீங்கள் நேர விரையமில்லாமல் நேராக உங்கள் இலக்கை அடைந்து விடலாம் இல்லையா? அதன் பொருள் நீங்கள் வரைபடத்தையோ அல்லது வழிகாட்டியையோ சார்ந்து இருக்கிறீர்கள் என்பதா? இல்லை. அது காரியத்தை விரைவாகச் செய்யும் ஒரு வழி, அவ்வளவே. அதே போன்று, குருநாதரும் ஒரு வழிகாட்டிதான்; அவருக்கு வழி தெரியும்; அவர் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்கனவே சென்றிருக்கிறார்; உங்களுக்கு அங்கு செல்வதற்கு வழிகாட்டவும் தயாராக இருக்கிறார்.

உங்களிடம் அர்ப்பணிப்பு மட்டும் இருந்தால், நீங்கள் இலக்கை அடையக் கடினமாக உழைப்பீர்கள் என்பதில் சந்தேக மில்லை; ஆனால் உங்களிடம் அர்ப்பணிப்புடன் தைரியமும் இருந்தால், இலக்கை வேகமாக அடைந்து விடுவீர்கள். இந்தத் தைரியம் நீங்கள் மற்றவர்களைப் பார்ப்பதை நிறுத்தி உங்களை மட்டுமே பார்க்கும் பொழுது, உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதை நிறுத்தி உங்களையே விழிப்புணர்வுடன் கவனிக்கும் பொழுது, உங்களுடைய அமைப்பில் நிகழும் நுட்பமான மாற்றங்களை கவனிக்கும் பொழுது மட்டுமே வரும்.

நீங்கள் உங்கள் பாதையில் திட நம்பிக்கையுடன் இருக்கும் தைரியத்தில் எழுந்து நிற்க வேண்டும். நீங்கள் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் உறுதியாக மையம் கொண்டிருந்தால் மட்டுமே, உங்களுக்குள் திட நம்பிக்கையுடன் இருக்கும் தைரியம் நிகழும்.

ஆன்மீகம் அல்லது ஸர்யாசம் என்பது துறப்பதைப் பற்றியே அல்ல. அது ஆழமான விழிப்புணர்வு பெறுவதைப் பற்றியது.

சமூகம், உங்களை அதற்குத் தெரிந்த பழக்கமான வடிவ அமைப்புகளிலும், அதனால் கையாள முடிந்த பயழக்கமான துயரங்களிலும், ஏற்கனவே பலமுறை நடந்து தேய்ந்த பாதைகளிலும், இழுக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாதையில் விழுவது மிகவும் சுலபம்; அதற்குத் துணிவு தேவையில்லை. ஆனால் அதிகமாக நடக்கப்படாத ஆன்மீகப் பாதையில் நடப்பதற்குத் துணிவு தேவை. நான் துணிவு என்று சொல்லும் பொழுது, ச ாதாரணமான துணிவைச் சொல்லவில்லை. முழுமையான துணிவைச் சொல்கிறேன்.

நரிக்குறவர்களின் பாசிமணி மாலையை அணிவதற்கு தைரியம் தேவையில்லை; ஆனால் ருத்ராக்ஷ் மாலையை அணிவதற்கு தைரியம் தேவை. ருத்ராக்ஷ மாலையை அணிய விரும்பும் பக்தர்களுக்கு, நான் அதைக் கொடுப்பதுண்டு. ருத்ராக்ஷ மணிகள் சக்தியைச் சேமித்து வைத்துக் கொள்ளும். அவை உங்களுக்காக பிரபஞ்ச சக்தியை சேமித்து வைத்துக் கொள்கின்றன. அவை மின்கலம் போன்று சக்தியை சே மித்து, உங்கள் சக்தி குறையும் பொழுது, உங்களுக்கு மீண்டும் சக்தியை அளிக்கிறது. ஆனால் சமூகம் இந்த மாலையை சந்நியாச த்தின் தெளிவான அறிகுறியாகப் பார்க்கிறது! அது துறவின் அர்த்தத்தைக் கூடப் புரிந்து கொள்ளாமல், இவை துறவிகளால் மட்டுமே அணியப்படுகிறது என்ற கண்ணோட்டத்திலேயே இருக்கிறது.

அது குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு ருத்ராக்ஷம் அணிவதை கண்டனம் செய்கிறது. ஆனால் ருத்ராக்ஷ மாலையை அணிந்திருக்கும் விக்கிரகத்தையோ அல்லது சாதுவையோ கண்டால் மகிழ்ச்சியடைந்து பிரார்த்தனை செய்கிறது. என்னுடைய இளம் பக்தர்கள் பலர், ருத்ராக்ஷ மாலையை அணிவதற்கு அவர்கள்

சிஷ்யன் கேட்டான் 'குருவே, நாம் இப்பொழுது ஆற்றைக் கடக்க போகிறோமா?' குரு சொன்னார் 'ஆம் கடக்கப் போகிறோம். பாதம் நனைந்து விடப்போகிறது. பத்திரம்'

வீட்டில் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்பதை என்னிடம் வந்து சொல்கிறார்கள்.

இந்த வீண் பேச்சு பேசுபவர்கள் அனைவரும் இதைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டிருப்பர்; இவர்களைப் பற்றிக் கதைகளையும் பரப்புவர். இது அபத்தமாக இல்லை ? அவர்கள் பிரார்த்தனை செய்யும் பொழுது, பிரபஞ்ச சக்தியிடம் பிரார்த்திக் கிறார்கள்; ஆனால் அதே சக்தி எளிமையான வடிவில் கிடைக்கும் பொழுது, அதை ஏற்கத் தயாராக இல்லை! அவர்கள் அதை நோக்கிப் பிரார்த்தனை செய்கிறார்கள்; ஆனால் அதை விட்டு விலகி ஓடி விடுகிறார்கள்!

இதை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், மிகவும் அபத்தமாகவும் பொருளற்றதாகவும் தோன்றும். அவர்கள் தங்களை மிகவும் தெளிவாகக் கடவுளிலிருந்து வேறுபட்டவர் களாகக் காண்கிறார்கள்; அதுதான் பிரச்சினை. அவர்கள் தாங்கள் கடவுள் என்பதை ஏற்கத் தயாராக இல்லை. நான் இப்பொழுது சொல்கிறேன்: உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோஇல்லையோ, நீங்கள்விரும்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் கடவுள்தான். இதுதான் விஷூத்தி சக்ரத்தின் அடிப்படையும் கூட - உங்களுடைய தனித்துவத்தையும் முடிவற்ற ஆற்றலையும் கண்டுபிடிப்பது.

உங்களுடைய தைரியம் வளரும்பொழுது, சமூகம் தானாகவே தேய்ந்து முக்கியமற்றதாகி விடும். உங்களுடைய தைரியம் குறைவாக இருக்கும்பொழுது, சமூகம் உங்கள் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தும். இவை எல்லாவற்றிற்கும் உங்கள் மனம்தான் காரணம். நீங்கள் சமூகத்திற்கு எவ்வளவு

ஆன்மீகம் என்பது கால்கள் நனையாமல் வாழ்க்கைக் கடலைக் கடப்பது.

அதிகாரம் கொடுத்திருக்கிறீர்களோ, அது உங்கள் மீது அவ்வளவு அதிகாரத்தைச் செலுத்தும். அதனால் எதற்காகவும் ஒருபோதும் சமூகத்தைப் பழிக்காதீர்கள்.

தேர்வு எப்பொழுதும் உங்களுடையதாகவே இருக்கிறது. தைரியக் குறைவினால், நீங்கள் சமூகத்தின் வழியில் செல்லத் தீர்மானிக்கிறீர்கள்; ஒப்பிடுவதன் மூலமும், ஒருவரையொருவார் தோற்கடிக்க முயற்சி செய்வதன் மூலமும் இழுபறி செய்யத் தீர்மானித்து விட்டு, பிறகு சமூகத்தின் மீது பழியைப் போடுகிறீர்கள். அது மிகவும் அபத்தமான காரியம். நினைவில் வையுங்கள். தேர்வு எப்பொழுதுமே உங்களுடையதுதான்.

வெறுமனே விழிப்புணர்வுடன் செயலாற்றுங்கள், எல்லையற்றது தானாகவே திறந்து கொள்ளும். அப்பொழுது நீங்கள் அச்சப்படலாம்; ஏனெனில் இதற்கு முன் நீங்கள் இத்தகைய திறந்த வெளியைக் கண்டதில்லை.

நீங்கள் எப்பொழுதும் எல்லைகளையே கண்டு பழக்கப் பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களால் வேலியையே எங்கும் காண முடியாது. இயல்பாக இருக்க முடியாமல் அச்சப்பட ஆரம்பிக்கிறீர்கள்.

உடனே தவறான இடத்திற்கு வந்து விட்டதாக எண்ணுகிறீர்கள். நிஜத்தை ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது. பாதுகாப்பற்று உணர்கிறீர்கள். மீண்டும் பழைய நம்பிக்கைகளும் பொய்களும் கொடுத்த கதகதப்பிற்கே போய்விடலாம் என்று எண்ணுகிறீர்கள். சமூகம் நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்று சொன்னபோதே, அதன் பேச்சைக் கேட்காமல் தவறு செய்து விட்டதாக எண்ணுகிறீர்கள். நீங்கள் சந்தேகப்பட ஆரம்பிக்கிறீர்கள்; பிறகு சந்தேகத்தையும் சந்தேகப்பட ஆரம்பிக்கிறீர்கள்.

கமுத்தளவு நீரில் நின்றாலும், அதனால் தொடப்பட்டால் வாழக் கற்றுக் கொடுப்பதே ஆன்மீகமாகும்.

வாழ்க்கை திடீரென்று ஆட்டம் காண்பதாகத் தோன்றுகிறது. நீங்கள் எதை நோக்கிச் செல்கிறீர்கள் என்றே தெரியவில்லை. ஒரு பாலைவனத்தின் நடுவே தனியாக விடப்பட்ட குழுந்தையைப் போன்று உணர்கிறீர்கள். இது போன்ற சமயங்களில்தான் நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மை எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; உங்களுடைய துணிவு பக்குவம் அடைய வேண்டும்; பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது விசுவாசத்துடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும்; பிறகு எல்லாம் சரியாகி விடும். விசுவாசமே துணிவின் தூண்டு கோலாக இருக்கிறது.

உங்களுக்குள் ஒரு புரட்சி நிகழாத வரையில், ஒருபோதும் வெடித்துக் கொண்டு ஒரு மரமாக வளர முடியாது. நம்மில் பலர் தைரியம் இன்மையினால், விதையாகவே இருந்து இறந்து விடுகிறோம். நாம் எப்பொழுதுமே விதையைக் கூறு போட்டு பழங்களையும் மலர்களையும் காண முயற்சி செய்கிறோம். அது எப்பொழுதாவது உதவுமா? உதவாது! விதை பிளந்தால் தான் வளர முடியும். அதே போன்று, ஒரு அடிப்படையான மாற்றம் நிகழ்ந்தால்தான், ஒரு புரட்சி உருவானால்தான், மனிதனால் வெடித்துக் கொண்டு வளர முடியும். எல்லா தியான முறை களுமே, விதை வெடிப்பதற்கான உத்திகளைத் தவிர வேறல்ல.

நீங்கள் வெடிக்க ஆரம்பிக்கும் பொழுது, உங்களுடைய முன்னுரிமை வரிசையும் மாறத் தொடங்கும். இதற்கு முன் முக்கியமாக இருந்தது இப்பொழுது முக்கியமற்றதாகி விடும். உங்களுடைய இருப்புத் தன்மையைப் பேணும் விஷயங்கள் மட்டுமே இப்பொழுது முக்கியமாகத் தோன்றும். உங்களுடைய முழு மனோபாவமுமே மாறிவிடும். உங்களுடைய முழு இருப்பும் மாறிவிடும்.

உங்களுடைய இருப்பு, அவர்கள் அங்கீகரிக்காமல் போனால் கூட, தானாகவே மக்களைக் கவா்ந்திழுக்கும்! உங்களுடைய உள் மையத்திலிருந்து வீசும் ஒளியானது அவர்களுடைய ஆழமான ஆர்வத்தைத் தூண்டியிழுக்கும். சமூகம் உங்களுடைய மாற்றமடைந்த மனோபாவத்தைப் பற்றி விமர்சனம் செய்த போதிலும், அது உங்களுடைய இருப்பில் இருக்கும் தெளிவான வித்தியாசத்தை உணரத் தொடங்குகிறது.

நிகழும்பொழுது, கடந்த காலம் பற்றிய எதையும் வெறுமனே முற்றிலுமாக அலட்சியம் செய்து விடுங்கள். கடந்த காலம் மீண்டும் மீண்டும் உங்களை பழக்கமான வடிவ அமைப்புகளுக்குள்ளும், இழுக்க வார்த்தைகளைக் கேட்பீர்களானால், அடிமைத் தளைக்குள்ளேயே இருப்பீர்கள். வெறுமனே, பரவச நிலையையும், உங்களுக்குள் உருமாற்றம் நிகழ்வதில் திட நம்பிக்கையையும் தீர்மானத்துடன் உறுதியாகப் பற்றி நில்லுங்கள். இதுவே உங்களுக்கான மிகப் பெரும் சோதனை - முழுமையாக உருமாற்றமடைவதில் உங்களு டைய விடாமுயற்சிக்கான சோதனை. உருமாற்றமடைதல் முழுமை பெற்று பக்குவமடையும் வரையில் உறுதியாகப் பற்றி நில்லுங்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ... இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நிரப்பும் பிரபஞ்ச சக்தியும், உங்களை நிரப்பும் ஒரு சக்தியும் இருக்கிறது. ஆன்மீகம் என்பது இந்தப் பிரபஞ்ச சக்திக்கும் உங்களுடைய சக்திக்கும் ஒரு உயிருள்ள இணைப்பை ஏற்படுத்துவதுதான். உங்களுடைய தனி விழிப்புணர்வு, பிரபஞ்ச விழிப்புணர்வுடன் கலந்து விடும்பொழுது, நீங்கள் ஞானமடைகிறீர்கள்.

வெறும் ஞானமடையும் ஆசை மட்டுமே போதாது. அது விழிப்புடன் எடுத்த தீர்மானமாக இருக்க வேண்டும். பாருங்கள், சாதாரண ஆசைகள், உண்மையிலேயே உங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி உந்தித் தள்ளாத, பேராசையைத் தவிர வேறல்ல. ஒரு விழிப்பான தீர்மானமென்பது, உங்களைச் சாதனையை நோக்கிச் செயல்பட வைக்கும்.

மக்கள் இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாமல், வெறுமனே மேலோட்டமான நிலையில் பேசுகிறார்கள். நீங்கள் பரிந்து கொள்ளாதபோது, தவறாகப் பரிந்து கொள்கிறீர்கள். ஆனால் புரிந்து கொண்டதாக எண்ணுகிறீர்கள்.

ஆன்மீகம் என்பது நமது உடல், மனம் மற்றும் ஆவியைப் பற்றிய ஒரு ஆழமான புரிந்து கொள்ளுதலைத் தரும் ஒரு விஞ்ஞானம். அதில் விழிப்புணா்வுடன் நுழையும் போது, வெளியுலகம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விடுகிறது. மக்கள், வெளியிலிருந்து உங்களைப் பார்க்கும் பொழுது, நீங்கள் துறப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். நீங்கள் எதையும் துறக்கவில்லை; வெளியுலக விஷயங்கள் தான் தானாகவே வெறுமனே கரைந்து விடுகிறது என்பதை, நீங்கள் மட்டுமே புரிந்து கொள்வீர்கள். மாயை மறைந்து நீங்கள் மனோவசியத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.

ஒரு நிகழ்ச்சியில், எத்தனை போர், நான் அவர்களை மனோவசியப்படுத்தி வைத்திருப்பதாக நினைக்கிறார்கள் என்று கேட்டேன். எண்பது பேரில், மூன்று பேர் மட்டுமே கையை உயர்த்தினர். கையை உயர்த்திய ஒரு சிறு பெண்ணைக் கண்டு அவளருகில் இருந்த ஒரு பெண்மணி சிரித்தார். அந்தப் பெண்மணியிடம் ஏன் சிரித்தீர்கள் என்று கேட்டேன்;

இந்த ஆலமரமானது உயிருள்ள சக்தியாகும். அதன் அமைதி அதிர்விலேயே இருக்கும் அமைதியாகும்.

குறைந்தபட்சம் அந்தச் சிறு பெண்ணிடம் கையை உயர்த்தும் நேர்மை இருந்தது.

அவர்களில் பலரும் கையை உயர்த்த விரும்பி யிருப்பார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்; ஆனால் நான் என்ன சொல்வேனோ என்று பயந்து பேசாமல் இருந்து விட்டனர்! எப்படியோ, மூன்று போ் கையை உயர்த்தினர். நான் அவர்களிடம், நான் மனோவசியப்படுத்தவில்லை, ஆனால் உண்மையில் மனோவசியத்திலிருந்து அவர்களை சொன்னேன்.

அவர்கள் மாயை அல்லது பொய்யான தோற்றங்கள் விலகுவதை உணரத் தொடங்கினர். ஆனால் என்ன நிகழ்கிற தென்றால், நீங்கள் பொய்யான நிலையிலேயே இருந்து பழகி விட்டதால், அது விலகத் தொடங்கும்பொழுது, ஏதோ தவறு நடந்து விட்டதாக நினைக்கிறீர்கள்! பிரச்சினை என்னவென்றால், மக்களிடம் மிகுதியான உண்மைகளைச் சொல்லி புரிந்து கொள்ளுதல் நிகழகத் தொடங்கும் பொமுது, ஒரு விதமான பயம் ஆட்கொள்கிறது. அவர்கள் அறியாமையின் மறைப்பில் அனுபவித்த சுகங்கள் ஆட்டம் காணத் தொடங்குகிறது.

பாருங்கள், எந்த அளவிற்கு உங்கள் அறியாமை கரைகிறதோ, அந்த அளவிற்கு நீங்கள் கடவுள் அல்லது பிரபஞ்ச இருப்புத் தன்மையால் ஆட்கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் தினசரி வாழ்க்கையில் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும், உங்களைக் காலி செய்து கொள்ளுதலை நோக்கித் திருப்பி விடப்பட்டால், நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையினால் நிரப்பப்படுவீர்கள். வாழ்க்கையில் முக்கியமற்றதும்தான். இதை நினைவில் கொள்ளுங்கள்.

ரீங்கள் தியானம் செய்யும் பொழுது, உங்கள் விழிப்புணர்வு அதிகமாகிறது.

உங்களுடைய ஒவ்வொரு மூச்சும், உங்களுடைய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதை நோக்கியே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் உண்மையிலேயே பிரபஞ்ச இருப்புத் தன்மையை அல்லது கடவுளை உணர வேண்டும் என்று விழிப்புடன் தீர்மானித்திருக்கிறீர்கள் என்று பொருள். உங்களிடம் இந்த உறுதியான தீர்மானம் நிகழவில்லை என்றால், நீங்கள் தேடுவதாக இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், அவ்வளவே. நீங்கள் வெறுமனே உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கணமும் மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைக்காதீர்கள். உங்களைத்தான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

வெளி நோக்கியிருக்கும் உங்கள் அடிகளை உள்நோக்கித் திருப்புவதுதான் முதல் அடி. U-வளைவெடுக்கும் அந்தக் கணம்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கவனம் கொள்ளுங்கள், நீங்கள் U-வளைவெடுத்து விட்டீர்கள் என்பதை உங்கள் விழிப்புணர்வு சொல்லும். அது வரையில் உங்களை ஒருங்கிணைக்க முடியாமைக்கு மக்களையும், சூழ்நிலைகளை யும், வெளியுலக சந்தர்ப்பங்களையும் காரணம் காட்டி உங்கள் மனம் மேலும் சாக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்.

ஒரு முறை நீங்கள் U-வளைவு எடுத்து விட்டால், இவையெல்லாம் மறைந்து முக்கியமற்றதாகி விடும். அவை சிறிது சிறிதாக தங்கள் முக்கியத்துவத்தை இழந்து விடும். அவை அங்கிருக்கும் என்பதில் சந்தேகமில்லை; அனால் நீங்கள் அவற்றுடனேயே நிலையாக முன்னேறிக் கொண்டிருப்பீர்கள். அவைகள் தங்களுடைய பாத்திரத்தை மிகவும் சரியாகச் செய்து, நீங்கள் மிகவும் சக்தி மிக்க கவனிப்பவராக உதவும். முதலடி எடுத்து

U - turn

வைப்பது அல்லது U-வளைவெடுப்பகே மிகவும் கடினமான காரியும். U-வளைவெடுக்கும் பொழுதே, பாதி வேலை முடிந்து விடுகிறது. பிறகு நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் வழிகளுக்கு மிகவும் வளைந்து கொடுப்பவராக ஆகி விடுகிறீர்கள்.

நீங்கள் தியானமாகி விடுகிறது. அதுநடப்பதோ, பேசுவதோ, பாடுவதோ, நடனமாடுவதோ, அல்லது வெறுமனே உங்கள் உடைகளை உடுத்திக் கொள்வதோ அல்லது களைவதோ, எதுவாக இருப்பினும் அது தியானமாகிவிடுகிறது; அது அதிகரித்துக் கொண்டிருக்கும் விழிப்புணர்வுடன் செய்யப்படுகிறது.

நீங்கள் இவற்றைச் செய்வதை வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பீர்கள்; கொஞ்சம் கொஞ்சமாக இந்த மொத்த உலகமுமே ஒரு மாயைதான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் உள் நோக்கி முதலடி எடுத்து வைக்கும் பொழுதே, உண்மையில் ஒரு பெரிய அடியை எடுத்து வைக்கிறீர்கள்; ஏனெனில் முதலடியே உண்மையில் பெரிய அடிதான். அது வரையில், வெறுமனே தத்துவமாக்கிக் கொண்டும், தேடுவதாக உங்களையும் மற்றவர்களையும் நம்ப வைத்துக் கொண்டும், நாளுக்கு நாள் குழப்பம் அதிகரித்துக் கொண்டும், உறுதி குறைந்து கொண்டும் இருக்கிறீர்கள்.

நீங்கள் முதலடி எடுக்கும் பொழுதே, உங்களை வெற்றி கொள்ளத் தயாராகி விட்டீர்கள். மற்றவர்களை வெல்வது மிகவும் சுலபம். வெறுமனே சில ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது உங்கள் நாவால் அவர்களை நார் நாராகக் கிழித்துவிடுங்கள்,

நரிக்குறவர்களின் பாசிமணி மாலையை அணிவதற்கு தைரியம் தேவையில்லை. ஆனால் ருத்ராக்ஷ மாலையை அணிவதற்கு மிகுந்த தைரியம் தேவை.

அவ்வளவுகான். ஆனால் உங்களை வெல்வதற்கு உண்மையிலேயே தைரியம் வேண்டும். இந்த விஷூத்தி சக்ரமானது, முழுவதும் உங்களை வெல்வது பற்றியதே.

நீங்கள் உள்நோக்கிப் பார்க்கும் பொழுது, உங்களை வெற்றி கொள்ளத் தயாராகிறீர்கள். நீங்கள் உள்நோக்கிய பாதையில் இருக்கும் பொழுது, என்ன செய்கிறீர்கள் என்பது, உங்களைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு உணரத்தக்க வகையில் இல்லாமல் இருக்கக் கூடும். நிகழ்வதெல்லாம் உள்ளேதான், வெளியே அல்ல என்பது உங்களுக்கு மட்டுமே கெரியும்.

உங்களுக்குள் நிகழும் புரட்சியை நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள். உங்களுக்குள் அறிவுக் கூர்மை வளர்வதை உங்களால் மட்டுமே சொல்ல முடியும்.

உங்களைச் சுற்றியிருக்கும் மக்களால், உங்கள் அனுபவங்களைப் புரிந்து கொள்ள முடியாகு. நான் சொல்கிறேன் ... நீங்கள் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை, ஒரு போதும் யாரையும் நம்ப வைக்க முயற்சி செய்யாதீர்கள். உங்களுடைய எண்ண அலை வரிசையுடன் ஒத்துப் போகும், ஆன்மீக நண்பர்களுடன் வேண்டுமானால், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால் உள்பயணங்களைப் பற்றி அறியாத மற்றவர்களுடன், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்தீர்களானால், ஆழ்ந்த துயரத்தைதான் அடைவீர்கள்.

உங்களிடம் வெறுமனே அனுபவங்கள் நிகழ விடுங்கள்; அவற்றைப் பற்றிக் கொண்டோ அல்லது அவற்றின் பின்

ரான் இப்பொழுது சொல்கிறேன்; உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, ரீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் கடவுள்தான்! ஒடிக்கொண்டோ இருக்காதீர்கள். அவை உங்களிடம் நீராவியைப் போல வேலை செய்ய அனுமதியுங்கள்; அதனால் நீங்கள் முழுமையாகப் பக்குவமடையலாம். நீங்கள் அவற்றைப் பற்றிக் கொண்டிருந்தால், ஒரிடத்திலேயே தேங்கி அனைத்தையும் தவற விட்டு விடுவீர்கள்.

இந்த எல்லா அனுபவங்களுமே, உள்நோக்கிய பயணத்தில், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதன் அறிகுறிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை நீங்கள் சாலைகளில் காணும் விளம்பரப் பலகைகளைப் போன்றவைதான். நீங்கள் விளம்பரப் பலகைகளைப் பற்றிப் கொண்டு. இலக்கை அடைந்து விட்டதாகச் சொல்வீர்களா? இல்லை. அவற்றைப் பற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களுடைய இலக்கை நோக்கி மேலே செல்லுங்கள்.

முழுமையான பொறுப்புணர்வும் மன உறுதியும் வேண்டும் ; அது நீங்கள் தயாராகும் பொழுது - சமூகத்தாலாகிய உங்கள் மனதை விட்டு விட்டு உங்கள் இதயத்துடன் வாழத் தயாராகும் பொழுது -எதுவரினும், மற்றவர்களை நோக்கி விரல்களைச் சுட்டுவதை நிறுத்தி விட்டு, உங்களை நோக்கியே சுட்டிக் கொள்ளத் தயாராகும் பொழுது - மனம் என்பது சமூகத் தாலானது, இதயம் இயற்கையானது என்பதை அனுபவபூர்வ மாகப் புரிந்து கொள்ளும்போது - உங்களிடம் தானாகவே வருகிறது.

இன்னொரு விஷயம் ... மக்கள் உங்களிடம், உங்களுடைய அனுபவங்களுக்கான நிரூபணத்தைக் கேட்கும் பொழுது, அதை அவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்பதைப் புரிந்து

வெறுமனே விழிப்புணர்வுடன் செயலாற்றுங்கள். எல்லையற்றது தானாகவே திறந்து கொள்ளும்.

கொள்ளுங்கள். உங்களுடைய அனுபவங்கள் உங்களுக்கு மிகவும் அந்தரங்கமானதும், தனிப்பட்டதுமாகையால், அதை உங்களால் இன்னொருவருடன் அவருக்குப் புரியும் வகையில் பகிர்ந்து கொள்ள இயலாது. உண்மையில், பகிர்ந்து கொண்டீர் களானால், முழு அனுபவத்தின் மதிப்பையும் குறைத்து விடுகிறீர்கள். மேலும், நீங்கள் சொல்வதை மற்றவர் நம்பத் தயாராக இல்லாமல் இருக்கக் கூடும். அவர்கள், உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்வதாக் கூறக் கூடும். அவர்கள், நீங்கள் எல்லாவற்றையும் தர்க்கரீதியாக விளக்க வேண்டும் என்று கூறலாம்.

இந்த அனுபவங்களைத் தாக்கத்தால் விளக்க முடியாது. கடவுள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவர். தர்க்கத்தால் கடவுளை விளக்க முடியுமானால், அது கடவுளை விட மேலானது என்று ஆகிவிடுகிறது; ஆனால் அது அவ்வாறு இல்லை; அதனால் வெறுமனே உங்களை தளர்வாக்கிக் கொண்டு. அபைவங்கள் நிகழ்வதை அறைமதியுங்கள். யாராயிரைம் உங்களிடம் கேள்வி கேட்கும் பொழுது, புன்னகைத்து விட்டு மேலே செல்லும் பக்குவத்தைப் பெறுங்கள். உங்களால் பல வார்த்தைகளில் விளக்க முடியாததை, ஒரு புன்னகையால் மிகவும் அழுத்தமாகச் சொல்லி விட முடியும்.

ஞானமடைந்த சிறந்த குருமார்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமித்து பேரானந்தத்தில் திளைத்திருக்கின்றனர். மக்கள் கேட்கிறார்கள். ஆனால் அவை மிகவும் தனிப்பட்டதாகவும், மறைபொருளாகவும் இருப்பதால், அவற்றை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. ஆனால் நான் வழிகாட்டியாக இருக்க முடியும்,

நீங்கள் எப்பொழுதும் எல்லைகளையே கண்டு பழகப் பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களால் எங்கும் வேலியையே காண முடியாது.

உங்கள் அனுபவத்திற்கான பாதையை, உங்கள் வழியை என்னால் காட்ட முடியும். ஆனால் அதை விளக்க ஆரம்பித்தால், அது லோகாயகமாகி விடும்.

ஆனால் ஒரு விஷயம் ... உங்களுக்குள் தீ இருக்கு மானால், நீங்கள் அரைபவிப்பீர்கள் என்கிற உயர்ந்த உறுதியை என்னால் அளிக்க முடியும். ஒரு குருநாதரால் அளிக்கப்படும் உறுதியே நீங்கள் சாதிப்பதற்குத் தேவையான சக்தியை அளித்து வி(டும்.

நீங்கள் அனுபவிக்கும் ஆனந்தத்திற்குக் காரணம் ஏதுமில்லை என்பதை வெறுமனே புரிந்து கொள்ளுங்கள். காரணம் ஏதுமின்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு மக்கள் உங்களைப் பைத்தியம் என்று எண்ணக் கூடும். மகிழ்ச்சியைப் பொறுத்தமட்டில் கூட அவர்கள் காரண - விளைவு உறவு முறையாகத்தான் அறிகிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை, வெளியே ஏதோ ஒரு காரணமே, உள்ளே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கக் காரணம் என்று கருதுகிறார்கள்.

இவற்றையெல்லாம், தியானத்தையும் ஆன்மீகத்தையும் பற்றிக் கேட்ட கேள்விக்கு, பதிலாகக் கூறுகிறேன். நாம் தலைப்பிலிருந்து விலகிச் செல்வதாக நீங்கள் நினைக்கக் கூடும். அப்படி இல்லை ! இந்த சக்கரம்-விஷூத்தி சக்கரம்-நீங்கள் விரிவடைதலைப் பற்றியது ; முழு விழிப்புணர்வுடன் உங்கள் சொந்த தனித்துவம் வாய்ந்த இருப்பைக் கண்டுபிடிப்பதைப் பற்றியது; மேலும் வாழ்க்கையில் ஒப்பிடுதலுக்கும் பொறாமைக்கும் இடமேயில்லை என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுதலைப் பற்றியது. நான் சொல்வதை அப்படியே வெறுமனே உள்ளே

எடுத்துக் கொண்டு அதன் பின்னாலிருக்கும் சக்தி உங்களை உருமாற்ற அமைதி யளியுங்கள். நான் சொல்கிறேன், உங்களுக்குள் அற்புதங்கள் நிகமும்! அது உங்கள் இருப்புத் தன்மையின் முழுத் கன்மையையே மாற்றி விடும்.

சரி ... இப்பொழுது நாம் பேசியவற்றிலிருந்து, ஒப்பிடுதலும் பொறாமையும் 'இல்லாத வஸ்து' என்பதையும், அவற்றிற்கு உங்களுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்பொழுது சாமி விஷூத்தி சக்கரத்தைப் பற்றியும், அதிலிருக்கும் சக்திப்புலம் பற்றியும் இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன்.

பாருங்கள் ... நம்மிடம் சக்தி மூன்று அடுக்குகளாக இருக்கிறது. முதல் அடுக்கு சக்தியானது நமது மனதிலிருந்து வருகிறது. அதுவே நாம் காலை முதல் இரவு வரை நமது தினசரி செயல்களுக்கு உபயோகப்படுத்துவது. இந்த சக்தி செலவழிந்து விடும் பொழுது, இன்னும் அதிகமாக வேலை கொடுக்கப் பட்டால், நீங்கள் களைப்பும், எரிச்சலும் அடைகிறீர்கள்.

இரண்டாவது அடுக்கு சக்தியானது அவசர கால அடுக்கு. அது உங்கள் உணர்ச்சிகளில் இருந்து எழும் சக்தி. அவசரகாலங்களில் இந்த சக்தி திறக்கப்படுகிறது. நீங்கள் சாலையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களை ஒரு நாய் துரத்துமானால், பய உணர்ச்சி மேலெழுகிறது; பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? சாதாரண மான சூழ்நிலைகளில் எவ்வளவு வேகமாக ஒடுவீர்களோ, அதை விட அதிக வேகமாக ஒடுகிறீர்கள், இல்லையா? நீங்கள் எவ்வளவு களைப்பாக இருந்த

போதிலும், உங்கள் கைகால்களை அசைக்க முடியாமல் இருப்பினும், திடீரென்று ஒரு நாய் உங்களைத் துரத்தும் பொழுது, நீங்கள் வேறு விதமான ஒரு சக்தியுடன் ஒடுகிறீர்கள். இதுதான் அவசர கால சக்தி - உணர்ச்சிகளில் இருந்து எழுவது.

மூன்றாவது அடுக்கு சக்தியானது இருப்புத் தன்மையின் நிலையில் இருக்கும் சக்தி. இது உங்களிடம் இருக்கும் எல்லையற்ற சக்தியின் மூலம்; இதை நீங்கள் உபயோகப் படுத்துவதே இல்லை. இந்தச் சக்தி அடுக்கை ஆழமான தியானத்தின் மூலம் திறந்து உணர முடியும். நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லா விட்டாலும் இந்த முன்றடுக்குச் சக்திகளுடனும் நீங்கள் தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். விஷூத்தி சக்ரமானது இந்த உயர் சக்தி நிலைகளுக்கான திறவு கோலை வைத்திருக்கிறது.

நான் அலைந்து திரிந்து கொண்டிருந்த நாட்களில் நடந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியை விவரிக்கிறேன்...

இமயமலையில் அல்மோரா எனும் அழகு மிளிரும் இடத்தில், தியானம் செய்ய விரும்புபவர்களுக்காக, சில குடிசை களுடன் ஒரு சிறிய ஆசிரமம் இருக்கிறது. அந்த இடத்தைப் பற்றிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இரவில் புலிகளின் நடமாட்டம் இருக்கும்! அங்கு சிறிது காலம் தங்கியிருந்தேன். அங்கு நான் நீண்ட நேரம் தியானத்தில் இருப்பது வழக்கம். அங்கு புலிகள் வருவதை உணர்ந்தால், ஆசிரமத் தலைவர் ஒரு மணியை அடிப்பார்; சாதுக்கள் அவரவரது குடிசைக்குள் சென்று, திரும்ப வெளியே வரச் சொல்லும் வரை, கதவை மூடியே வைத்திருப்பார்கள்.

ஆன்மீகம் என்பது நமது உடல், மனம் மற்றும் ஆவியைப் பற்றிய ஒரு ஆழமான புரிந்து கொள்ளுதலைத் தரும் ஒரு விஞ்ஞானம், அதில் விழிப்புணர்வுடன் நுழையும் போது, வெளியுலகம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விடுகிறது.

ஒரு சமயம், இரவில், நாங்கள் தியானத்தில் இருந்த பொழுது மணியடித்தது; நாங்கள் அனைவரும் குடிசைக்குள் சென்று விட்டோம். அடுத்த நாள் எல்லாரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆசிரமத் தலைவர் சுற்றி வந்தார். ஒரு குடிசை மட்டும் திறக்கப்படாமலேயே இருப்பதைப் பார்த்தார்; உள்ளேயிருந்த சந்யாசி, ஜன்னல் வழியாக, கதவைத் திறந்து விடுமாறு கத்திக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் அந்தக் குடிசைக்கு ஒடி, கதவைத் திறக்க முயன்றோம்; ஆனால் முடியவில்லை. இறுதியாக எங்களில் சிலா், ஜன்னல் வழியாக குடிசைக்குள் நுழைந்தோம். எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக, ஒரு பெரிய அம்மிக்கல் இயந்திரத்தை, புலி தள்ளி கதவு திறந்து கொள்ளாதவாறு, அதற்குப் பின்னால் வைத்திருந்தார். நாங்கள் அனைவருமாகச் சேர்ந்து அந்த அம்மிக் கல்லை நகர்த்தி வைத்துக் கதவைத் திறந்தோம்.

பிறகுதான், 'இந்த அம்மிக்கல்லை இவர் தனியாளாக எவ்வாறு கதவருகே நகர்த்தி இருக்கக் கூடும் ?' என்பது எங்களுக்குத் திடீரென்று உறைத்தது. அதை அவர் எவ்வாறு நகர்த்தினார் என்று அவரிடமே கேட்டோம். அவர் பதிலளித்தார், ''நகர்த்தினேனா? நான் அதை அப்படியே தூக்கியல்லவா வைத்தேன்!". புலி வருவதற்கான சமிக்ஞையைக் கேட்டவுடன், அவர் அந்த அம்மிக் கல்லை அப்படியே தூக்கி கதவுக்குப் பின்னால் வைத்துவிட்டார், அவ்வளவுதான்!

நான் இதைத்தான் அவசரகால அடுக்கு சக்தி என்கிறேன். சாதாரணமான குழ்நிலைகளில், அதே மனிதரால், அந்தக் கல்லைத் தூக்கியிருக்க சம்பவத்திற்குப் பிறகு, அவசரகாலம் முடிந்துவிட்ட பின்னர்,

அவராலேயே அந்தக் கல்லைக் கதவிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை !

இரண்டாவது நிலைச் சக்தி, பயத்தினாலும் பேராசை யினாலும் திறந்து கொள்கிறது. உதாரணத்திற்கு, ஒரு முக்கியமான கூட்டமிருப்பின், நீங்கள் களைப்படைவீர்களா? மாட்டீர்கள்! நீங்கள் துடிப்புடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசை அல்லது பேராசை உங்களைச் சக்தியூட்டப்பட்ட நிலையில் வைத்திருக்கும்.

விஷூத்தி சக்கரம், இந்த மூன்று அடுக்குச் சக்திகளையும் திறப்பதற்கு ஒரு வாயிலாக இருக்கிறது. ஆனால் அதை நீங்கள் அறியவில்லை. ஏனெனில் நீங்கள் இந்த அடுக்குகளை வெகுகாலமாகப் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தியதே இல்லை.

அது இவ்வாறு இருக்கிறது ... எல்லாத் துறைமுகங் களிலும், படகுகளை நிறுத்தி வைப்பதற்கென்றே, படகுத்துறை என்று அழைக்கப்படும் ஒரு இடம் இருக்கும். கடலில் செல்லாமல் வெகு காலம் படகுத் துறையிலேயே நிறுத்தி வைக்கப்படும் படகுகள், அவை தண்ணீரைச் சார்ந்தவை என்பதையே மறந்து விடும் என்று ஒரு பொதுவான வழக்கு இருக்கிறது!

அதே போன்று, நீங்கள் வெகு காலமாக மூன்றாவது அடுக்குச் சக்தியையே உபயோகப் படுத்தாததனால், நீங்கள் அதைச் சேர்ந்தவர் அல்லது அது உங்களைச் சேர்ந்தது என்பதையே மறந்து விடுகிறீர்கள். தியானத்தால் இந்த மூன்றாவது அடுக்குச் சக்தியைத் திறக்க முடியும்.

உங்களுடைய ஒவ்வொரு மூச்சும், உங்களுடைய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதை நோக்கியே இருக்க வேண்டும்.

இந்தச் சக்கரத்தை நீங்கள் தூய்மையான நிலையில் வைத்திருந்தால், வெளியுலகில் மிக உயரத்திற்கும், உள்ளுலகில் மிக ஆழத்திற்கும் செல்ல முடியும். தாழ்வான சுயமதிப்பீடு அல்லது பொறாமையினால் இந்தச் சக்கரம் அடைபடுகிறது. தாழ்வான சுயமதிப்பீடு என்பது பொறாமையின் ஒரு சாத்வீகமான வெளிப்பாடு, அவ்வளவே! செயல்படும் தன்மையில் பொறாமை யாகவும், செயலற்ற தன்மையில் தாழ்வான சுயமதிப்பீடாகவும் வெளிப்படுகிறது. இரண்டுமே ஒப்பிடுதலின் விளைவுதான். தாழ்வான சுய மதிப்பீட்டில், நீங்கள் சரியல்ல என்ற உணர்வில் விலகிக் கொள்கிறீர்கள். பொறாமையில், அதைத் தாங்கிக் கொள்ள இயலாமல், எதிர்ச் செயல் புரிய ஆரம்பித்து விடுகிறீர்கள்; அதுதான் வித்தியாசம்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ... உங்களைப் பற்றிய சுய மதிப்பீடு எதுவாக இருப்பினும், அது உங்களைக் கடவுளை விட குறைவானதாகக் காட்டினால், அது தாழ்வான சுய மதிப்பீடு. ஏனெனில் நீங்களே கடவுள்தான். அதனால்தான் வேறு யாருடனும் ஒப்பிடுவதற்கு இடமேயில்லை என்று நான் சொல்கிறேன்.

உங்களுக்குள் மறைந்திருக்கும் எல்லையற்ற ஆற்றலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் இந்தச் சக்கரத்தில் மறைந்துள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்குச் சக்திகளை உணர வேண்டும். உண்மையில் இந்தச் சக்கரமே நமது சக்தியின் இருப்பிடம். அதில் கவனத்தைச் செலுத்தும்பொழுது, அதிலிருந்து சக்தி பரவுவதை உணர முடியும்.

உங்களுக்குள் நிகழும் புரட்சியை நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் மக்களால், உங்கள் அனுபவங்களைப் புரிந்து கொள்ள முடியாது.

இமயமலையில், நான் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலத்தில், நடந்து சென்றே பல மைல்களைக் கடந்து விடுவேன். விஷூத்தி சக்கரத்தில் கவனத்தை வைத்து, மெதுவாக நடக்க ஆரம்பிப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டி, கவனத்தைச் சக்ரத்திலேயே வைத்து, முயற்சியின்றியே நடந்து கொண்டிருப்பேன். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, என் உடல் தானாகவே முன்னும் பின்னும் அசைந்து கொண்டு ஒரே சீரான வேகத்தில் செல்லத் தொடங்கும்; நான் வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பேன்! இவ்வாறாக ஒரேயடியாக பல மைல்களைக் கடந்து விடுவேன்.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் எல்லா உணவும், அல்லது செய்யும் எல்லா உடற்பயிற்சிகளும் முதலடுக்கு சக்திக்கு மட்டுமே உதவுகிறது. உணவு மட்டுமே உங்களுக்குச் சக்தியைத் தருவதில்லை. உணவு மட்டுமே சக்தியை அளிக்கிறது என்பது ஒரு பொதுவான தவறான கருத்து. உணவில் இருந்தும் சக்தி கிடைக்கிறது, அவ்வளவே.

திபெத்தில் இருக்கும் யோகிகள் உண்பதேயில்லை. அவர்கள் வெறுமனே வில்வப் பழத்தின் மேலோட்டிலிருக்கும் நீரைக் குடிக்கிறார்கள். நானும் அது போன்றே இமயமலையில் ஆறு மாதங்கள் வாழ்ந்தேன். குரிய ஒளியில் இருந்தும், குளிக்கும் நீரில் இருந்தும், சுவாசிக்கும் காற்றில் இருந்தும் சக்தியை எடுத்துக் கொண்டேன். இவையெல்லாம் யோக வழிமுறைகள். தபஸ்யா என்பது ஞானமடைதலுக்காக உங்கள் வாழ்வு முழுவதும் செய்யும் தவம். அது மட்டுமே உங்கள் இருப்புத் தன்மையில் அதிர்வில் இருந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் மற்றவர்களுடன் போட்டியிடும் பொழுது, உங்கள் சொந்த இருப்பை மறந்து விடுகிறீர்கள். உங்களுடைய உண்மையான, உபயோகப் படுத்தப்படாத, ஆற்றல் மூலமான இருப்புத் தன்மையை பலப்படுத்த மறந்து விடுகிறீர்கள். ஆன்ம பலம் இல்லாத, வெறும் உடல் பலமும், புத்தி பலமும் பயனற்றது. உங்கள் ஆன்ம பலத்தைக் கண்டுபிடிக்கும் போதுதான் நீங்கள் வாழ்வின் மூலத்தைத் தொடுகிறீர்கள்.

சொல்லுங்கள் ...

ஸ்வாமிஜி, எங்களால் பொறாமையின்றி இருக்க முடியுமானால், எங்களுடைய குறைபாடுகளில் குறைந்தபட்சம் ஒரு அம்சத்திலாவது, முழுமுமையான விடுதலை கிடைத்து விட்டதாகக் கருதலாமா ?

நிச்சயமாக ... உங்களால் தீவிரமான உணர்ச்சிகள் அல்லது பொறாமையற்ற அன்பு இருக்கக் கூடிய ஒரு வெளியைப் பார்க்க முடியுமானால், நீங்கள் நிச்சயமாக முன்னேறியிருக்கிறீர்கள்; ஆனால் முழு விழிப்புணர்வுடன் தொடர்ந்து செல்லுங்கள்; ஏனெனில் நீங்கள் மிகவும் சுலபமாக உங்களுடைய பழைய விழிப்பற்ற வழிகளில் நழுவி, மீண்டும் பழைய உணர்ச்சிகளில் சிக்கி விடக் கூடும்.

புதிதாகக் கண்டுபிடித்த விழிப்புணர்வைப் பற்றிக் கொண்டு அதனுடன் செல்லுங்கள். அது, நீங்கள் ஆராய்வதற்கான, இன்னும் நிறைய அழகான பாதைகளைத் திறக்கும். தேங்கி நின்று விடாதீர்கள். அவையே உறுதியானது என்ற எண்ணத்தில், சில அனுபவங்களை இறுகப் பற்றிக் கொண்டு விடுவதே மிகப் பெரிய அபாயமாகும்.

உங்களுக்குள் தீ இருக்குமானால் நீங்கள் அர்ப்பணிப்பீர்கள் என்கிற உயர்ந்த உறுதியை என்னால் அளிக்க முடியும்.

குருமார்கள், தங்களது சீடர்களை, எந்த ஒரு அனுபவத்திலும் தேங்கி நின்று விட ஒருபோதும் அனுமதிப்பதில்லை. சீடர்கள் தங்கள் தேடலில் மேலும் மேலும் ஆழமாகப் பார்க்க ஏதுவாக, அவர்களை மேலும் மேலும் தூண்டி விட்டுக் கொண்டே இருப்பார்கள். தங்கள் ஆன்மீகப் பயணத்தில் இறைக் காட்சிகளைக் காண்பவர்களே பெரும்பாலும் தேங்கி நிற்கத் தலைப்படுகிறார்கள். அவர்கள் காண்பதற்கு இனி எதுவுமில்லை என்று எண்ணி விடுவதால், தங்களது அனுபவத்தைப் பற்றிக் கொண்டு அங்கேயே தங்கி விடுகிறார்கள். இது நிகழ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

பாருங்கள், நீங்கள் நிரந்தரமான ஆனந்த நிலையை அடையும் வரை, எப்பொழுது வேண்டுமானாலும் கீழ் நிலைக்குச் சென்றுவிட முடியும். அதை மனதில் கொண்டு, மேலும் மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ளுதலை நோக்கி உங்களை எடுத்துச் செல்லும் விழிப்புணர்வைத் தொடர்ந்து போஷித்து வாருங்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ... ஒரு குருநாதரின் வேலை மிகவும் நுட்பமானது. அவர் உங்கள் ஒவ்வொருவரையும் உச்சபட்ச அக்கறையுடனும் நுட்பமாகவும் கையாள வேண்டும். அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் வளர்வதற்கு ஏற்ற வழி எதுவென்று பார்த்து, உங்களை அவ்வழியில் மலர வைக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் பல பிறவிகளைக் கடந்து வந்திருக்கிறீர்கள்; அந்த அளவிற்கு அறியாமையையும் சேகரித்து வைத்திருக்கிறீர்கள். அவர் இவற்றின் மீதெல்லாம் செயல்பட்டு உங்களை உறக்கத்திலிருந்து எழுப்ப வேண்டும். மேலும் ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள் ... வாழ்க்கை ஏராளமான தீர்வுகளை வழங்கத் தயாராக இருக்கிறது; ஆனால் எப்பொழுதுமே ஏதோ ஒன்று உங்களுக்குப்

ரீங்களே கடவுள்தான். அதனால்தான் வேறு யாருடனும் ஒப்பிடுவதற்கு இடமேயில்லை என்று நான் சொல்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு பாதை; அது ஒரு இலக்கல்ல.

பொருத்தமாக இருக்கிறது. அதைக் கண்டு பிடிப்பதில்தான் உங்கள் அறிவுக் கூர்மை அடங்கியிருக்கிறது. நீங்கள் உங்கள் சொந்த அறிவுக் கூர்மையால் அதைக் கண்டு பிடித்தீர்களானால், அதன் பயன்களை அனுபவிப்பீர்கள். ஆனால், மற்றவர்களைப் பார்த்து, அவர்களுடைய தீர்வுகளை உங்களுக்கு உபயோகப்படுத்தத் தொடங்கினீர்களானால், நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதே தெரியாமல் பாதையைத் தவறவிட்டு விடுவீர்கள்.

ஒரு சின்ன கதை ...

ஒரு வயதான பெண்மணி, தொலைதூர கிராமத்தில் உள்ள அவளுடைய பழைய வீட்டை தூசி தட்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது திடீரென்று கதவு திறந்து கொள்ள, ஒரு இளம் விற்பனையாளன் உள்ளே வந்தான். அவள் தூசி துட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவன் பரபரப்புடன் பேசினான். அவனிடம் பல கருவிகள் இருப்பதாகவும், அவை அவளுக்கு வீட்டைச் சுத்தம் செய்ய உதவியாக இருக்கும் என்றும் சொன்னான். அந்த வயதான பெண்மணி சொன்னாள், "ஆனால் ... " அவன் அவளை இடைமறித்து, ஒரு பையிலிருந்து நிறைய குப்பை கூளங்களை எடுத்து தரையில் கொட்டினான். வயதான பெண்மணி மீண்டும் முயற்சித்தாள், ''ஆனால் ...'' அவன் அவளிடம் அருகே நின்று கவனிக்கச் சொன்னான். ஒரு கருவியை வெளியே எடுத்து விளக்கினான், ''இந்தக் கருவியைப் பார்க்கிறீர்களா? இது எவ்வளவு தூசியிருந்தாலும் ஒரு நொடியில் சுத்தம் செய்து விடும். இது மிகவும் எடை குறைவாக இருப்பதால் உங்களுக்கு இந்த வயதில் கையாள்வதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும். நான்

இருளிற்கு நேர்மறையான இருப்பு கிடையாது. அது எதிர்மறையான இருப்பை உடையது.

செய்முறையைக் காட்டுகிறேன்'' வயதான பெண்மணி முயற்சித்தாள், ''ஆனால்…'' அவன் இடைமறித்தான், ''சற்று ப்ளக் பாயின்டைக் காட்டுங்கள்'' இறுதியாக அந்தப் பெண்மணி சொன்னாள். ''ஆனால்… இன்னும் எங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வரவில்லை!''.

(பலத்த சிரிப்பு ! )

வாழ்க்கையில் நமக்கு எது சரியாகப் பொருந்துகிறது என்பதை நம்மால் கணிக்க இயல வேண்டும்! இதில் நாம் தெளிவாக இருந்தால், கவலையின்றி வளரலாம். ஆனால் பல சமயங்களில், நாம் மற்றவர்களுடைய தீர்வுக்கு ஆசைப்பட்டு, அதை நமக்கு உபயோகித்து விட்டு, பின்னர் வருத்தப்படுகிறோம்.

நாம் எங்கு நிற்கிறோம், நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்தால், நம்மால் நிலையாக முன்னேற முடியும். இது போன்ற வாழ்க்கை முறையில், பின்னடைவுகள் கூட, எவ்வாறு இன்னும் அறிவுக் கூர்மையுடன் செயலாற்ற முடியும் என்பதைக் கற்றுக் கொடுப்பதாக அமையும். இம்முறையில், நீங்கள் உங்கள் சொந்த அறிவுக் கூர்மையுடன் செயலாற்றுவதால், அது உங்களுக்கு அனுபவபூர்வமான புரிந்து கொள்ளுதல் ஆகிறது.

நீங்கள் வெறுமனே இன்னொருவருடைய தீர்வைப் பின்பற்றும் பொழுது, உங்களுக்குள் எதுவும் நிகழ்வதில்லை; நீங்கள் வெறுமனே உங்கள் வெளி விளிம்பில் இருந்து செயல்படுகிறீர்கள். உங்களுக்குள் எதுவும் நிகழாத போது, உங்களால் வளர முடியாது; அதை நினைவில் கொள்ளுங்கள். நான், நீங்கள் வளர முடியாது என்று சொல்லும் பொழுது, உள்ளே வளர்வதில்லை என்று

விஷூத்தி சக்கரம் சுத்த அசுத்தங்களைக் கடந்ததால், ஒருபோதும் அசுத்தமடைவதில்லை. அதனால் அதை ஒருபோதும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவையில்லை.

சொல்கிறேன். உலகாயதமான நன்மைகளைப் பெறலாம்; ஆனால் நீங்கள் உள்ளே உயிரற்று இருப்பீர்கள்.

ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ... நீங்கள் உள்ளேயிருந்து வளரும் பொழுது மட்டுமே, உண்மையில் வளர்கிறீர்கள் என்று அர்த்தம். வெளியுலக ஒட்டப் பந்தயங்களில் அபாயகரமாகச் சிக்கிக் கொண்டு விடாதீர்கள். அவற்றை வெறும் விளையாட்டாகவே பாருங்கள்; நன்றாக விளையாடுங்கள். உயிர் வாழ்தலுக்கு பொருள் சார்ந்த பயன்களும் தேவைதான். அனால் இவையெல்லாம் வெளி விளிம்பிலேயே இருக்க வேண்டும். உங்கள் உள் மையமானது நிலையாக வளர வேண்டும். இதுவே உங்களுடைய வெளி விளையாட்டுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

உங்களுடைய சொந்த அறிவுக் கூர்மையை உபயோகப் படுத்தக் கற்றுக் கொண்டு விட்டீர்களானால், இன்னொருவருடைய முன்னேற்றத்தையோ அல்லது செயல்களையோ போ பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு பொருத்தமற்றது என்பதைக் காண்பீர்கள். உங்களுடைய அறிவு வளர வளர, ஒவ்வொருவரும் ஓட வேண்டியது தங்களுடைய சொந்த ஓட்டப் பந்தயத்தில்தானே தவிர, ஒருவருக்கொருவர் எதிராக அல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள்! உண்மையான பந்தயம் உங்களுடைய எல்லையற்ற அறிவைக் கண்டுபிடிப்பதை நோக்கித்தான். இதில் ஒப்பிடுவதற்கு எங்கே இடமிருக்கிறது ?

வாழ்க்கை என்பதே, முழுவதும் உங்களுடைய எல்லையற்ற அறிவைக் கண்டுபிடிக்கும் செயல்முறையைப் பற்றியது தான். அதனால்தான் நான், "வாழ்க்கை என்பது ஒரு பாதை;

மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் நமது தனித்தன்மைகளையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதன் மூலம் விஷூத்தி சக்கரத்தை மலரச் செய்ய முடியும்.

அது ஒரு இலக்கல்ல''¹ என்று எப்பொழுதும் சொல்வது வழக்கம். உங்களுடைய அறிவு வளர வளர, நீங்கள் மேலும் மேலும் மகிழ்ச்சியடைவீர்கள்; வாழ்க்கை விளையாட்டை உங்களால் மேலும் பயனுள்ள வகையில் விளையாட முடியும். அதனால் ஒப்பிடுதலை நிறுத்தி, உங்களுடைய உண்மையான வளர்ச்சிக்கு மூலத்தைக் கண்டுபிடிக்க ஆரம்பியுங்கள்.

விஷூத்திசக்கரமே, உயர்ந்த படைப்பாற்றலின் இருப்பிடம். இந்தச் சக்கரத்தின் சக்தி திறக்கப்படும்பொழுது, உங்களுக்கு மிகப் பெரும் படைப்பாற்றல் கிடைக்கப் பெறுவதை காண்பீர்கள்.

உங்களுடைய இருத்தலின் தன்மையை நீங்கள் மாற்றும் பொழுது, இயற்கையாகவே உங்களுடைய செய்தலின் தன்மையும் மாறுகிறது. நீங்கள் செய்வது எதுவாயினும், மிக்க திறமையுடனும், மிக்க படைப்பாற்றலுடனும் செய்கிறீர்கள். அதன் விளைவாக, உங்களுடைய பெறுதலின் தன்மையும் மாறுகிறது. உங்களுடைய வழியில் எதுவரினும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள்; உலகாயதமான செல்வமும், வெற்றியும் இயல்பாகவே உங்களை நோக்கி வருவதைக் காண்கிறீர்கள். அதனால் ஒப்பிடுதலை விடுத்து, உங்களுடைய இருப்புத் தன்மைக்குத் திரும்பி, முடிவற்ற ஆனந்தம் அல்லது நித்யானந்தத்தைக் கண்டுபிடியுங்கள்.

சரி ... நாம் இப்பொழுது சக்தி சாகர தியானம் என்னும் ஒரு தியான முறையைக் காண்போம். அது உங்களுக்கு விஷூத்தி சக்கரத்தின் மூலமாகக் கிடைக்கும் மிகப்பெரும் சக்தி மூலத்தை எவ்வாறு உபயோகத்திற்குக் கொண்டு வருவது என்பதை அனுபவபூர்வமாகப் புரிய வைக்கும்.

Life is the path and not any goal1 Being2 Doing3 Having4