KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/அத்தியாயம் - 4 கவலைகள் இன்றி வாழ்தல்Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

அத்தியாயம் - 4 கவலைகள் இன்றி வாழ்தல்

– மணிபூரக சக்கரம் –

  • மணிபூரக சுத்திக்ரியா -

மணி பூரக சக்கரம் தொப்புள் பகுதியில் இருக்கிறது.

சமஸ்கிருதத்தில், மணிபூரகம் என்றால் "ஆபரண நகரம்'' என்று பெயர்.

கவலைகளால் இந்தச் சக்கரம் பூட்டப்படுகிறது (அடைபடுகிறது).

நமது கவலைகளைப் புற்றி கவலைப்படாமல் இருப்பதன் மூலம் இந்தச் சக்கரத்தை மலரச் செய்ய

(மடியும் !

தியான முறை: மணி பூரக சுத்திக்ரியா - கிறிஸ்தவ மதத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இந்தச் சக்கரம் நிரந்தரமான கவலைகளுடன் தொடர் புடையது.

'கவலை' என்றால் என்ன என்று நாம் ஆராய்வோம். கவலை என்றால் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

(ஒரு எங்கள் வியாபாரப் பிரச்சினைகளைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ அல்லது உடல் நலத்தைப் பற்றியோ நினைக்கும் பொழுது கவலையடைகிறோம்...

Living without Worries

நீங்கள் சொல்வது கவலைக்கான காரணங்கள். நான் உங்களிடம் கவலைக்கான காரணங்களைக் கேட்கவில்லை. 'கவலை' என்றால் என்ன என்று கேட்கிறேன் ? காரணங்களைக் கேட்டால் இந்த வகுப்பு ஒரு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய பட்டியலுடன் தயாராக இருப்பீர்கள்... சொல்லுங்கள் ...

ஸ்வாமிஜி, என் வியாபாரம் படுத்துவிட்டது.. ஸ்வாமிஜி, எனக்கு வீட்டில் மனநிம்மதியே இல்லை! ஸ்வாமிஜி, உங்களால் கற்பனை கூடப் பண்ண முடியாத அளவிற்கு எனக்கு நிறைய பிரச்சினைகள் ... ! எனக்குக் குழந்தைகளில்லை, அதுதூன் எனக்குக் கவலை! ஸ்வாமிஜி, என் குழந்தைகளைப் பற்றித்தான் என் கவலையெல்லாம்...!

(மக்களிடமிருந்து பலத்த சிரிப்பு!)

நாம் எப்பொழுதும் நிறைய கவலைகளுடன் இருக்கிறோம். கவலைகளே இல்லையென்றாலும், நமக்குக் கவலைகளே இல்லையே என்று கவலைப்பட ஆரம்பித்து விடுகிறோம்! பாதுகாப்பற்று உணரத் தொடங்கி, கவலைப்படுவதற்கான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து விடுகிறோம் ! நான் சொல்கிறேன் ... இது உண்மை ! சில வயதான ஓய்வு பெற்ற மனிதர்கள் என்னிடம் வந்து, ''ஸ்வாமிஜி, எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்கள் குழந்தைகளுக்குத் திருமணமாகி அவர்களும் சொந்த வீடுகளுடன் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் எதையும் கேட்பதில்லை; என்ன செய்வதென்று தெரியவில்லை; நினைப்பதற்கும் எதுவுமில்லை. இனிமேலும் வாழ்வதில் அர்த்தமேயில்லை ஸ்வாமிஜி. நாங்கள் நிம்மதியாக சாக விரும்புகிறோம்', என்று சொல்கிறார்கள்.

ஆழ்ந்து நோக்கினால், கவலை என்பது ஏதோ ஒரு சம்பவத்திற்கு உங்களது பதில் செயல்தான் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

கவலைகளே இல்லாததனால் அவர்களுக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை! அவர்களும் அவர்களுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் முயற்சி செய்து ஏதாவது மூளைக்கு வேலை கொடுத்து வைக்கலாம் என்றுதான் பார்க்கிறார்கள்; அனால், ஒன்றும் வருவதில்லை! இது அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது; ஏனெனில் இதுவரை அவர்கள் ஏதோ ஒரு கவலையுடனேயோ, எண்ணத் துடனேயோ இருந்திருக்கிறார்கள்.

கவலையென்றால் என்ன என்று வரையறுப்பதற்கு முன்னால், நமது கலாச்சாரம், பொருளாதார நிலைமை, வயது முதலியவை என்னவாக இருந்தாலும், நம் அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் உண்டு - அதுதான் கவலை - என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது நான் உங்களை, நீங்கள் ஏன் கவலைப்படு கிறீர்கள் என்று குகேட்டால், நீங்கள் பல காரணங்களைப் பட்டியலிடுவீர்கள். நீங்கள் எப்பொழுதும் கவலைக்குக் காரணம் வெளிவிஷயங்கள்தான்என்று நினைக்கிறீர்கள். நீங்கள்ளப்பொழுதும் வெளியுலகத்தையும், உங்களைச் சுற்றியுள்ள மக்களையுமே உங்கள் கவலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்.

எண்ணிப் பாருங்கள்.. கவலைக்குக் காரணம் வெளியில் இருந்தால், யாராவது ஒருவராவது அவைகளை வெற்றி கொண்டு கவலைகளிலிருந்து விடுதலையடைந்திருக்க மாட்டாரா ? சரிதானே ? ஆனால் அப்படித்தான் இருக்கிறதா ? நீங்கள் சந்திக்கும் எவருக்கும் ஏதோ ஒரு கவலையிருக்கிறது. அவர்கள் ஏழையோ அல்லது பணக்காரரோ, கல்யாணம் ஆனவரோ அல்லது ஆகாதவரோ, குழந்தைகள் இருக்கிறதோ அல்லது இல்லாமல் இருக்கிறதோ, வேலை செய்பவரோ அல்லது சொந்தமாகத் தொழில் செய்பவரோ

ஒரு சூழ்நிலை உங்களை கவலைப்பட வைக்கிறதா இல்லையா என்பது, அதற்கு உங்கள் எதிரிச் செயல் என்ன என்பதைச் சார்ந்திருக்கிறது.

  • யாராக இருப்பிடை், அனைவருக்கும் கவலைகள் இருப்பதாகவே படுகிறது.

இதற்குக் காரணம் வெளியிலிருப்பதாக நாம் நினைத் தாலும், உண்மையில் நமக்குள்ளேதான் ஆழமாகப் பொதிந்து கிடக்கிறது. இதுதான் உண்மை. அனைவருக்கும் எப்பொழுதும் ஏதோ ஒரு கவலை இருப்பதற்குக் காரணம் இதுவே.

அதனால் மீண்டும் கேள்விக்கு வருவோம்...

கவலை என்றால் என்ன ?

நீங்கள் ஆழ்ந்து உள்ளே நோக்கினால், கவலை என்பது ஏதோ ஒரு சம்பவத்திற்கு உங்களது பதில்செயல்தான்! என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். ஒரு சூழ்நிலை உங்களை கவலைப்பட வைக்கிறதா இல்லையா என்பது, அந்தச் குழ்நிலைக்கு உங்கள் எதிர்ச்செயல்2, என்ன என்பதைச் சார்ந்திருக்கிறது. மேலும் கவலை உங்கள் நிரந்தர உள்பேச்சாகி, உங்களை எப்பொழுதும் நிம்மதியற்றுப் போகச் செய்து விடுகிறது.

உதாரணத்திற்கு, உங்கள் நண்பருக்கு ஒரு புதிய வேலை கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் உங்களிடம் வந்து அவரது புதிய வேலை பற்றியும், அதனால் அவருக்குக் கிடைக்கும் பலன்களையும், சலுகைகளையும் பற்றியும் உங்களிடம் ஆர்வத்துடன் என்னவாக இருக்கும் ? விழிப்பின்றி நீங்களே உங்களுக்குள் பேசி க் கொள்வீர்கள்.

ஒ! அவனுக்குப் புதிய வேலை கிடைத்திருக்கிறது. அதனால் அவன் நிறைய பலன்களை அனுபவிக்கிறான். ஆனால், என் நிலை என்ன? இந்தச் சலுகைகளையும்

Response1 React2

பலன்களையும் பற்றிக் கேள்விப் பட்டால் என் மனைவி என்ன சொல்வாள்? இவன் என் மனைவியைச் சந்திக்காமல் இருப்பதே நல்லது. இல்லையெனில் நான் தொல்லைக்கு ஆளாக நேரிடும். நானும் வேறொரு வேலை தேட வேண்டுமா ? ஒருவேளை கிடைக்காவிடில் ? எனக்கு மட்டும் எதுவும் சரியாகவே அமைவதில்லை ... என்றெல்லாம் எண்ண ஆரம்பித்து வி(டுவீர்கள்.

இதுதான் கவலை !

கவலை என்பது, உங்களை எப்பொழுதும் வெளியில் ஏதாவது ஒன்றுடன் ஒப்பிட்டுக் கொண்டு, உங்களுக் குள்ளேயே அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதனால் நிகழ்வது. காலப் போக்கில் இது உங்கள் மன அமைப்பாகவே மாறி விடுகிறது. நானும் அண்டை வீட்டுக்காரர்களைப் போலவே நன்றாக இருக்கிறேனா ? எவ்வாறு என் மேலதிகாரியைக் கவர்வது? என் குழந்தைகள் என்ன நினைப்பார்கள் ?

எப்பொழுதும், அது குடும்பமோ அல்லது வேலையோ அல்லது சமூகமோ எதுவாக இருப்பினும், இருப்பினும், நமக்கு அடுத்தவர்களின் அங்கீகாரம் தேவைப்படுகிறது. இதுவே நமது பெரிய கவலை. நமது முழு வாழ்க்கையுமே மற்றவர்களிடம் நற்க ான்றி தழைச் சேகரிப்பதைத் தவிர வேறில்லை என்றாகிவிட்டது. மற்றவர்கள் - நல்ல கணவன், நல்ல ஊழியர், நல்ல அண்டை வீட்டுக்காரர் - என்ற நற்சான்றிதழ்களைத் தராதபோது, நமது வாழ்க்கையே வீணாகி விட்டது என்று கவலையடைகிறோம்.

நாம் நமது புறஇயல்பையே மற்றவர்களின் நற்சான்றிதழ்களிலிருந்துதான் அமைத்துக் கொள்கிறோம். நாம் நம் மீது நம்பிக்கையிழந்து விட்டோம்; அதுதான் பிரச்சினையே.

Personality

குழந்தையாக இருந்தபொழுது, நாம் அனைவரும் நமது இருப்புத்தன்மையில் உறுதியாகவே மையம் கொண்டிருந்தோம். நீங்கள் எப்பொழுதாவது ஒரு குழந்தை தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட்டுப் பார்த்திருக்கிறீர்களா ? முடியாது ! குழந்தை கவனிப்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஏனெனில், அவனுக்குக் கவலைகள் கிடையாது. மற்றவர்கள் அவனைப் பற்றி என்ன சொல்வார்கள் என்ற கவலையில்லாததால், அவன் செய்யும் எந்தச் செயலிலும் முழுமையாக ஈடுபடுகிறான்.

நாம் வளர வளர, சமூகம் நம் மீது இந்தக் கருத்தை திணிக்கிறது. சமூகம் மற்றவர்களின் - பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் அறிமுகமற்றவர்களையும் விட்டு வைக்காமல், அவர்களது - கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் கொண்டு நம்மை மதிப்பிட்டுக் கொள்ளக் கற்றுத் தருகிறது. சமூகம் நமது செயல்களுக்கும், வார்த்தைகளுக்கும் வெளியிலிருந்து ஆதரவையும், மற்றவர்களின் சான்றிதழ்களையும் சார்ந்திருக்குமாறு செய்து விடுகிறது. அதனால்தான் நாம் எப்பொழுதும் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்களோ என்று கவலைப்படுகிறோம்.

மேலும், நாம் எதைப் பற்றியேனும் கவலைப்படும் பொழுது, வெளியே ஒன்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதற்கெதிராக நம்மை மதிப்பிட்டுக் கொண்டும், நமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டும் இருக்கிறோம். அதனால் கவலைப்படுதல் நமக்கு வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறது. கவலையில்லாவிடில், நமது இருப்புத் தன்மை நகர்வதற்கு ஒரு அச்சு இல்லாதது போல் உணர்கிறோம். அதனால்தான் நாம் உண்மையிலேயே, இரகசியமாக, நமது கவலைகளின் மீது காதலோடு இருக்கிறோம் !

எப்பொழுதும் நமக்கு அடுத்தவர்களின் அங்கீகாரம் தேவைப்படுகிறது - அதுவே நமது பெரிய கவலை.

ஒரு சின்ன கதை ....

ஒரு ஆளரவமற்ற தீவில் கைவிடப்பட்ட மூன்று பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் எத்தனை வருடங்களாக அங்கே இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. திடீரென்று அவர்கள் ஒரு பாட்டிலைக் கண்டெடுத்தனர். அவர்கள் அதைக் கையால் தேய்த்த பொழுது, திடீரென்று அவர்களுக்கு முன்னால் ஒரு பூதம் தோன்றியது. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பூதம் அவர்களிடம், "எனக்கு இந்த பாட்டிலில் இருந்து விடுதலை கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆசையைக் கேட்கலாம், நான் நிறைவேற்றுகிறேன்' என்று சொன்னது. அவர்கள் பரபரப்படைந்து, சிறிது நேரம் சிந்தித்தனர். முதலாமவன் சொன்னான், "நான் என்னுடைய காதலியை மணந்து சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்''. பூதம் சொன்னது, "சரி, உன் ஆசை நிறைவேறும்''. முதலாமவன் அந்தத் தீவிலிருந்து காணாமல் போய் விட்டான். பூதம் இரண்டாமவனைப் பார்த்தது. இரண்டாமவன் சொன்னான், ''நான் ஒரு பணக்கார தொழிலதிபராக விரும்புகிறேன்''. பூதம் சொன்னது, ''சரி. உன் ஆசை நிறைவேறும்''. இரண்டாமவன் மறைந்தான். பூதம் மூன்றாமவனைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டது. முன்றாமவன் சொன்னான், "என்னுடன் இத்தனை வருடங்களாக இருந்த என் இரு நண்பர்களையும் நான் இழக்கப் போகிறேன். நான் அவர்களுடன் இருக்க ஆசைப்படுகிறேன்''. பூதம் "சரி' என்று சொல்லி விட்டு, அவர்கள் மூவரையும் பழையபடி அந்த ஆளரவமற்ற தீவில் விட்டுவிட்டு, மறைந்து விட்டது.

(சிரிப்பு)

நாம் நமது கவலைகளின் மீது மிகவும் பாசத்துடன் இருக்கிறோம்! அவைகள் நமக்குத் துன்பத்தைத் தருகிறது என்று சொல்கிறோம். ஆனால் அவைகளின் மீது மிகவும் பற்றுடன் இருக்கிறோம். நீங்கள் உங்கள் கவலைகளைக் காதலிக்கிறீர்கள் என்று சொன்னால், நம்பத் தயாராக இருக்க மாட்டீர்கள், ஆனால் அதுதான் உண்மை.

மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், "என் வியாபாரம் மோசமான நிலையிலிருந்து மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது, ஸ்வாமிஜி! சென்ற மாதம் எனக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அடுத்த மாதம் அது இன்னும் மோசமாகி விடும்' என்று. நான் சொல்கிறேன், "அது தெரியுமென்றால், நீங்கள் ஏன் உங்கள் வியாபாரத்தை உடனே இழுத்து மூடிவிடக் கூடாது ? ஏன் கஷ்டப்படுகிறீர்கள் ?''. ஆனால் அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். அவர்கள் நம்பிக்கையின்றிக் கேட்கிறார்கள், ''நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ஸ்வாமிஜி? பிறகு நான் என்ன செய்வது ?''.

(பலத்த சிரிப்பு)

கவலைப்படுவதற்கான அஹங்காரம் அதன் இருப்பிற்கான காரணத்தை இழக்கிறது! அதனால்தான் நீங்கள் துன்பப் பரிமாணத்திலேயே இருக்கத் தீர்மானிக்கிறீர்கள். கவலையில் இருக்கும்பொழுது, நீங்கள் 'யாரோ ஒருவராக' இருப்பதாக உணர்கிறீர்கள். நீங்கள் எப்பொழுதும் கவலைகளைப் பற்றி நினைப்பதாலும், அவற்றைத் தீர்ப்பதாலும், உங்களை திடமான ஒரு வஸ்துவாக உணருகிறீர்கள்.

அதே சமயத்தில், இந்த நிரந்தரமான கவலைகளிலிருந்து நீங்கள் விடுதலை பெறும்பொழுது ஆனந்தத்தில் இருப்பீர்கள்.

Somebody

ஆனால் நீங்கள் இந்தப் பரிமாணத்தில் 'இல்லாதவராக' இருப்பீர்கள்! நீங்கள் செயல்பட்டுக் கொண்டே இருப்பதற்கு விஷயம் எதுவும் இல்லை. தீர்ப்பதற்கு எதுவுமில்லை. நீங்கள் பாதுகாப்பற்று, ஒரு தனி வஸ்துவாக இல்லாதது போல் உணருகிறீர்கள். கவலையற்று இருக்கும் நிலையை அனுபவிப்பதற்கு முதல் படியாக நீங்கள் திடமான வஸ்துவாக இருக்க விரும்பும் உங்கள் அஹங்காரத்தை விட்டொழிக்க வேண்டும்.

முதலில், கவலையைப் பற்றிய ஒரு விஷயம் என்ன வென்றால், கவலைப்படுதல் என்பதே, உங்கள் மனதிற்கு எப்போதும் உணவளித்து அதை எப்போதும் செயல்பட வைத்துக் கொண்டேயிருப்பதற்கான, உங்கள் தீர்மானம். இதற்கெல்லாம் மேலாக, ஒவ்வொரு மனிதனும் அவன் மட்டுமே அதிகக் கவலைகளுடன் இருப்பதாகவும், அவன் மட்டுமே மகிழ்ச்சியற்று இருப்பதாகவும், மற்ற அனைவரும் மிகவும் சந்தோஷமாகவே இருப்பதாகவும் எண்ணுகிறான்! ஆனால், இதில் ஒரு ஆச்சரியம் என்ன வென்றால், இந்தப் பூமியில் ஒவ்வொரு மனிதனுமே, அவன் அல்லது அவள் மட்டுமே மிகவும் துரதிருஷ்டமானவர் என்றும், மிகவும் மகிழ்ச்சியற்றவர் என்றும் நினைப்பதுதான்! இது எவ்வாறு சாத்தியம் ?

ஒரு சின்ன கதை....

ஒரு அரசாட்சியில், மக்கள் அனைவருமே மிகுந்த மனச்சோர்வில் இருப்பதாகவும், ஒவ்வொருவரும் தங்களுக்கே மிக அதிகமான கவலைகள் இருப்பதாகவும், மற்ற யாருமே கவலைகள் எதுவுமே இல்லாமல் இருப்பதாகவும் அரசனுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதனால் மன்னன் ஒரு 'கவலை பரிமாற்றத் திட்டம்' அறிவித்து மக்கள் தங்கள் பெரிய

Nobody Worry Exchange Offer

கவலைகளைக் கொண்டு வந்து அதற்குப் பதிலாக மற்றவர்களின் சின்ன கவலைகளை மாற்றி எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று அறிவித்தான். ஒரு பெரிய இடம் தயார் செய்யப்பட்டு, அதன் நடுவில் ஒரு மிகப் பெரிய கவலைப்பானை வைக்கப்பட்டது. யார் வேண்டுமானாலும் தங்கள் கவலைகளை அதில் கொட்டி விட்டு, அவர் விரும்பும் வேறு கவலைகளை எடுத்துச் செல்லலாம். ஒரே ஒரு நிபந்தனை, கண்டிப்பாக ஏதாவது கவலைகளை எடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சிக்காகக் குழுமினர். மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்கள் கவலைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினர். பிறகு, கவலைப் பரிமாற்றம் ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டது. நெடு நேரமாகியும் ஒருவர் கூட தங்களது கவலைகளைப் பானையில் போட முன் வரவில்லை! அனைவருடனும் பேசியதில், ஒவ்வொருவருமே மற்றவர்களுடைய கவலைகளை விட தங்களுக்குப் பழக்கமான சின்ன கவலைகளே எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்!

நான் சொல்கிறேன் .... பல சமயங்களில் நாம் சரியான உண்மையைப் பார்க்காமல் வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் கவலைகள் என்று அழைக்கப்படுவதை ஆழமாகப் பார்க்கும் பொழுது, ஒன்றுமில்லாத விஷயத்தை வெறுமனே பெரிதுபடுத்திக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்வோம்.

சரி, நீங்கள் கவலைப்படும்பொழுது உங்கள் மனதில் உண்மையிலேயே என்ன நிகழ்கிறது என்பதை இப்பொழுது ஆராய்வோம்.

நீங்கள் எதைப் பற்றியேனும் கவலைப்படும் பொழுது உங்கள் மனதைச் சற்று கவனியுங்கள்.

கவலையில் இருக்கும்பொழுது நீங்கள் யாரோ ஒருவராக, திடமாக இருப்பதாக உணர்கிறீர்கள்.

முற்றிலும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, ஏறேறக்குறைய எதிர்மறையான, ஒரு தொடர் எண்ண ஓட்டம் உங்கள் மனதில் உற்பத்தியாவதைக் காண்பீர்கள். எதிர்மறையான வார்த்தைகள் ஒரு ஓட்டம் போல மீண்டும் மீண்டும் உங்கள் மனதிற்குள் வருவதைக் காண்பீர்கள்.

பாருங்கள் ... உபயோகப்படுத்துகிறோம் - வெளியே பேசுதல் மற்றும் உள்ளுக்குள்ளேயே பேசிக் கொள்ளுதல். வெளியே பேசுதல் என்பது மற்றவர்களுடன் பேசுவது - நாம் சாதாரணமாக பேச்சு அல்லது உரையாடல் என்று அழைப்பது. உள்ளுக்குள்ளேயே பேசிக் கொள்ளுதல் என்பது நாம் நமக்குள்ளேயே பேசிக் கொள்வது. உண்மையில், இந்த உள்ளுக்குள் பேசிக் கொள்ளுதல் நமக்குள் எப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது. இந்த உள்ளுக்குள் பேசிக் கொள்வது 'உள் பேச்சு' என்று அழைக்கப்படுகிறது. இதைத்தான் கவலை என்றும் அழைக்கிறோம்.

மனதிற்குள் நிகழும் இந்தக் கட்டுப்படுத்தப்படாத தொடர் உள்பேச்சே கவலையாகும். இந்த உள்பேச்சு உங்கள் எஜமானனாகி விடுகிறது. அது உங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. அதுவே முழு நேர நிகழ்வாகி விடுகிறது.

நீங்கள் பேசும் வார்த்தை எதுவானாலும், கவனத்துடன் பேசுகிறீர்கள். இல்லாவிடில், சமூகம் உங்களை கவனமாக இருக்குமாறு வற்புறுத்துகிறது, இல்லையா? ஆனால், உங்கள் 'உள்ளுக்குள் பேசுவது' எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. நீங்கள் வெளியே பேசும் ஒலியுள்ள வார்த்தைகளைக் கட்டுப்படுத்த முடியும் பொழுது, ஒலியற்ற வார்த்தைகளை ஏன் கட்டுப்படுத்த முடியாது ?

Inner chatter

உங்களுக்கு சுயமரியாதை இல்லாததனால், நீங்கள் உள்ளே பேசிக் கொள்வதைக் கட்டுப்படுத்துவதில்லை. உங்களுக்குள், நீங்கள் விரும்புவதையெல்லாம் பேசுகிறீர்கள். நாம் ஒரு தட்டிலுள்ள உணவின் மீது குப்பையை எறிவோமா? மாட்டோம். ஆனால், குப்பைத் தொட்டியில் போடுவோம். நீங்கள் மற்றவர்களை ஒரு உணவுத் தட்டு போலவும், உங்களை ஒரு குப்பைத் தொட்டி போலவும் கையாளுகிறீர்கள்; அதனால் உங்களுக்கு அஜீரணம் ஏற்படுகிறது.

வெளி உரையாடல்களில், சில சமயம் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. ஆனால், இந்த உள்பேச்சோ தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அது உங்களைப் பைத்தியமாக்கி விடக்கூடும் ! உண்மையில், பல சமயங்களில் மற்றவர்களுடன் பேசுவதென்பது, உங்களைப் பைத்தியமாக்கி விடக்கூடிய உள் பேச்சிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரு வழியாகி விடுகிறது. அதனால் தான் உலகில் இத்தனைப் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன! மக்கள் அமைதியாக இருப்பதற்கே அச்சப்படுவதற்குக் காரணம் அவர்களுக்குள் இருக்கும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிதான்! அதனால் அவர்கள் சந்தித்து, ஒருவருடன் ஒருவர் பழகி, பேசி தங்களைத் எப்பொழுதும் ஒரு செயல் பாட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த உள் பேச்சு என்பதற்கு நாம் சரியாக என்ன பொருள் கொள்கிறோம் ?

நீங்கள் தனியாக இருக்கும் பொழுது இந்தச் சின்னப் பயிற்சியை முயற்சி செய்யுங்கள்: சில நிமிடங்கள் வெறுமனே கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு பேப்பரையும் பேனாவையும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதை குறிப்பிட்ட எதிலும் குவிக்க வேண்டாம். உங்கள் மனதை வெறும் சாட்சியாக

Mad House

இருந்து கவனிக்கவும். உங்கள் மனதில் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள். ஏறக்குறைய கண்களை மூடிய உடனேயே, உங்கள் மனதில் ஒரு தொடர் எண்ண ஓட்டம் பாய்வதைக் காணலாம். உங்கள் மனம் தொடர்ந்து செயல்படுகிறது. எந்த எண்ணம் வந்தாலும், நேர்மையாக எழுதுங்கள். இதை ஒரு ஐந்து நிமிடங்களுக்குச் செய்யவும்.

இப்பொழுது, அமர்ந்து நீங்கள் எழுதியவற்றை யெல்லாம் படியுங்கள். நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்! நீங்கள் பேப்பரில் பதிவு செய்ததெல்லாம் உங்களது உள் பேச்சுக்கள்; அதை நீங்கள் படித்தால், உங்கள் எண்ணங்கள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகவும், சம்பந்தமற்றதாகவும் இருக்கிறதென்பதைக் காண்பீர்கள்! ஒரு கணம் இங்கேயிருப்பீர்கள்; அடுத்த கணம் அமெரிக்காவில் இருப்பீர்கள்; அடுத்த கணம் உங்கள் அலுவலகத்தில் இருப்பீர்கள்; அடுத்த கணம் உங்கள் குழந்தைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

இந்தக் கட்டுப்படுத்தப்படாத எண்ணங்களின் ஓட்டம் -இதுதான் உங்களுடைய மனதின் நிலை. இந்த மனதின் கையில்தான் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறீர்கள்! இந்த மனம்தான் உங்களுடைய எல்லாக் கவலைகளையும் உற்பத்தி செய்கிறது. இந்த மனம்தான் உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த அளவிற்குப் புரிந்து கொண்டாலே, கவலை மற்றும் உள்பேச்சு இவற்றிலிருந்து விடுதலையை நோக்கி ஒரு பெரிய அடியை எடுத்து வைக்கிறீர்கள்.

ஒரு சின்ன கதை ....

ஒரு நாள், சாலையில் ஒரு விபத்து நடந்திருந்தது. மக்கள் கூடிவிட்டனர். புத்தம் புதிய கார் ஒன்று ஒரு சுவற்றின் மீது மோதியிருந்தது. அவர்கள் ஓட்டுனரிடம் கேட்டனர், "ஐயா,

கவலைகளிலிருந்து விடுதலை பெறும்பொழுது நீங்கள் ஆனந்தத்தில் இருப்பீர்கள், ஆனால் நீங்கள் இல்லாத ஒருவராக இருப்பீர்கள்.

உங்களுக்கு சரியாக ஓட்டத் தெரியவில்லை என்றால், ஏன் காரை ஒட்டுகிறீர்கள் ?'' என்று. அதற்கு அவர் சொன்னார், ''எனக்கு எப்படி ஓட்டுவதென்று தெரியும். எப்படி நிறுத்துவதென்றுதான் தெரியாது''.

(பலத்த சிரிப்பு)

பாருங்கள், நீங்களும் இதுபோன்றுதான் ஒரு வண்டியை ஒட்டிச் செல்கிறீர்கள். உங்களுக்கும் அதை எப்படி நிறுத்துவது என்பது தெரியவில்லை. உங்கள் மனம்தான் உங்களுக்கு நிறுத்தத் தெரியாத வண்டி. சில நொடிகளாவது உங்கள் உள்பேச்சை நிறுத்த முயற்சி செய்யுங்கள் .... முடிகிறதா ?

நீங்கள் அதனைக் கட்டுப்படுத்த முனைந்தால், அதை நிறுத்த வேண்டும் என்கிற இன்னொரு கூடுதலான எண்ணத்தினால், எண்ண ஓட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இன்னும் அதிகமாகும் !

நீங்கள் உங்கள் மனதைச் செலுத்திக் கொண்டிருக்கவில்லை. மனமே உங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறது!

கவலையைப் புரிந்து கொள்ள, நமது மனதின் இயல்பைப் பற்றிய ஆழமான உள்நோக்குப் பார்வை தேவை.

மனதின் வழியாகவே கவலைப்பட முடியும் - எனவே வெளியேறும் வழியும் மனதின் வழியாகத்தான் இருக்க முடியும். ஆனால், நாம் கவலையின் மூலத்தை ஆழ்ந்து நோக்காமல், அதற்கான தீர்வை எப்பொழுதும் தவறான இடங்களிலும் வெளியிலுமே தேடிக் கொண்டிருக்கிறோம். நிறைய பணம் இருந்தால் எல்லாக்

நாம் கவலைகள் என்று அழைக்கப்படுவதை ஆழமாகப் பார்க்கும்போது, ஒன்றுமில்லாத விஷயத்தை வெறுமனே பெரிதுபடுத்திக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்வோம். கவலைகளும் தீர்ந்து விடும் என்று நாம் நினைக்கிறோம். நான் இன்னும் அழகாக இருந்தால் .... நான் இன்னும் நல்ல வேலையில் இருந்தால் .. அது இருந்தால் .. இது இருந்தால் ...

கீர்வை வெளியுலகப் பொருட்களில் கண்டுபிடிக்க முடியாது. அதனை நமக்குள்ளேயேதான் கண்டு பிடிக்க முடியும்.

ஒரு சின்ன கதை ....

புத்தரிடம் பத்தாயிரம் சீடர்கள் இருந்தனர். அவர்களுக்கு தினமும் காலையில் ஒரு உரை நிகழ்த்துவார். ஒரு நாள் நன்கு முடியிடப்பட்ட ஒரு கயிற்றைக் கொண்டு வந்து அவர்களுக்கு முன் வைத்து, ''இதை யாரேனும் அவிழ்க்க முடியுமா?'' என்று கேட்டார். சீடர்கள் முன்வந்து, அந்த முடிச்சை இழுத்தும் தள்ளியும் அவிழ்க்க முயற்சித்தனர். ஆனால், அவிழ்க்க முடியவில்லை. பிறகு அறிவாளியான சீடன் ஒருவன் வந்து, சிறிது நேரம் அந்த முடிச்சை உற்று கவனித்தான்; பின்னர் அதைச் சுலபமாக அவிழ்த்து விட்டான்.

அது எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது, அந்த முடிச்சு எவ்வாறு விழுந்திருக்கிறது என்பதை உற்று நோக்க வேண்டும். பிறகு அந்த முடிச்சு உருவாக்கப்பட்டிருக்கும் முறைக்கு எதிர்ப்புறமாக திருப்பி செய்தால் அது தானே அவிழ்ந்து விடும். அதை விட்டுவிட்டு, வெறுமனே இழுப்பதும் தள்ளுவதுமாக இருந்தால், அதை ஒருபோதும் அவிழ்க்க முடியாது; மேலும் அது இறுகி விடும்.

அதே விஷயம் நமது பிரச்சினைக்கும் பொருந்தும். நமது பிரச்சினைகள், நோய்கள், நாம் போராடிக் கொண்டிருக்கும்

நாம் இரண்டுவிதமான பேச்சுக்களை உபயோகப்படுத்துகிறோம் - ஒன்று வெளியே பேசுதல், மற்றொன்று உள்ளுக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல்.

உணர்ச்சிகள் ஆகிய எல்லாமே நமது அமைப்பில் இருக்கும் முடிச்சுகளே தவிர வேறில்லை. அந்த முடிச்சுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டால், அதை அவிழ்ப்பதற்கான சரியான செயல்பாட்டைச் செய்ய முடியும்.

கவலை, தொப்புள் பகுதியில் இருக்கும் மணிபூரக சக்கரத்துடன் நெருங்கிய எண்ணங்கள் மணிபுரக சக்கரத்தை நேரடியாகத் தாக்குகின்றன.

இந்த ஒரு சிறு சோதனையைச் செய்யவும் ... எதிர்மறையான எண்ணங்கள் வருவதாக நீங்கள் உணரும் பொழுது, அவை எங்கிருந்து எழுகின்றன என்று பாருங்கள். அவை எப்பொழுதுமே தொப்புளிலிருந்து எழுவதைக் காண்பீர்கள்.

நீங்கள் கவலைப்படும்பொழுது, உங்களால் கையாள முடியாத பாதிக்கப்படுவது உங்கள் தொப்புள் பகுதி, உங்கள் வயிறு. மனச் சோர்வை நீங்கள் உடலிலேயே வயிற்றில் ஒரு சுமையாக உணர முடியும். அதனால்தான் நாம் எப்பொழுதும், 'என் வயிற்றில் சுமக்க முடியாது', 'என்னால் ஜீரணிக்க முடியாது' என்று சொல்கிறோம். இது எல்லா மொழியிலும் இருக்கிறது. இது எங்கும் பொதுவான வழக்கு. நிரந்தரக் கவலை மணிபூரக சக்கரத்தைப் பூட்டுகிறது.

இந்தச் சக்கரத்தைத் திறக்கும் வழி என்ன ? இந்தச் சக்கரத்தை எவ்வாறு நல்ல நிலையில் வைத்திருக்க முடியும் ? வாருங்கள் .... சொல்லுங்கள் ...

உள்ளுக்குள் பேசிக்கொள்வதை உள்பேச்சு என்று அழைக்கிறோம். இந்த உள் பேச்சுதான் கவலை.

நாம் எந்தச் சூழ்நிலையிலும் கவலைப்படாமல் இருக்க வேண்டும் ஸ்வாமிஜி ?

நீங்கள் உங்களுக்குள் கவலைப்படக் கூடாது என்று சொல்லிப் பாருங்கள். என்ன நடக்கும் ? நீங்கள் கவலைப்படக் கூடாது என்கிற இன்னொரு கவலையையும் உருவாக்கிக் கொள்வீர்கள். கவலைப்படுவதை நிறுத்து என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்; அது கண்டிப்பாக முடியாது. ஒரே ஒரு விஷயம். கவலைகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தி விடுங்கள்!

கவலையைப் பெற்றிக் கவலைப்படாமல் இருப்பது என்றால் என்ன? கவலைகளை வெறுமனே பாருங்கள். அவற்றால் பாதிக்கப்படாமல் இருங்கள். கவலைகளை மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளேயே ஒரு கவலையான போக்கில் சொல்லிக் கொண்டு சிக்கிக் கொள்வதால்தான், உண்மையிலேயே கவலை உங்களிடம் வேர் விடுகிறது. உங்கள் கவலைகளைப் பற்றிக் கவலைப் படாமல் இருங்கள் என்று இதைத்தான் நான் சொல்கிறேன். அவைகள் அப்படியே இருக்கட்டும். அவைகளுக்கு உயிர் கொடுக்காதீர்கள். அவைகளுக்கு இரத்தத்தையும், சதையையும் உணவாகக் கொடுக்காதீர்கள்.

'மனதைக் கட்டுப்படுத்துங்கள்', 'எதிர்மறையாக எண்ணாதீர்கள்' என்று நீங்கள் சொல்வது கயிற்றில் முடிச்சை அவிழ்ப்பதற்கு எந்த விதத்திலும் உதவாது.

மனதை அடக்கும் பொழுது, அடக்கப்பட்ட நினைவுகள் நேராக மணிபூரக சக்கரத்திற்குச் செல்கிறது. மணிபூரக சக்கரம் விஷமாகும் பொழுது - எதையேனும் பறித்துக் கொள்ளுதல், எதையேனும் அழித்தல், உங்கள் உடலிடமே முறையற்று நடந்து கொள்ளுதல், உங்களுடனேயும் மற்றவர்களுடனும் போராடுதல்

வெளி உரையாடல்களில், சில சமயம் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. ஆனால், இந்த உள்பேச்சோ இடையறாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

போன்ற - உங்கள் செயல்களில் ஒரு விழிப்பற்ற வன்முறை கலைகாக்கி நிற்கும்.

இவையெல்லாம் அடக்கு அடக்கு முறையின் வெளிப்பாடுகள். அதனால்தான் கோபமாக இருக்கும் பொழுது வயிறு எரிவதாகவும், அல்லது வயிறு கனமாக இருப்பதாக உணர்வதாகவும் மக்கள் சொல்கிறார்கள். உங்களிடம் ஏராளமாக அடக்கி வைக்கப்பட்ட கோபம் இருக்கிறது; எதிர்மறையான தன்மை நிறைய இருக்கிறது; அது எதிர்மறைத் தன்மையை இன்னும் மேலும் மேலும் அதிகரிக்கிறது.