KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/எதிர்மறைத் தன்மை என்றால் என்ன ?Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

எதிர்மறைத் தன்மை என்றால் என்ன ?

ஏதோ சில காரணங்களால் உங்கள் தொழிலில் தோல்வி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு உங்கள் எதிர்ச் செயல் எவ்வாறு இருக்கும் ? நீங்கள் தோல்வியைச் சந்தித்ததனால் கொஞ்சம் வருத்தமாக இருப்பீர்கள்; அது பரவாயில்லை. ஆனால், அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், நீங்கள் மிகவும் விரக்தியுடன் கோபமும் அடைந்து எல்லாவிதமான விஷயங்களையும் உங்கள் தலைக்குள் போட்டுக் கொள்வீர்கள் ...

ஒ ... எனக்கு நேரம் சரியில்லை! நான் தொடுவதெல்லாம் தோல்வியில்தான் முடியும்! நான் எதற்கும் லாயக்கில்லை! நான் ஏன் எப்பொழுதும் துரதிருஷ்டசாலியாகவே இருக்கிறேன்? நான் என்ன செய்யப் போகிறேன்? இவ்வாறாக பல விஷயங்களையும் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்வீர்கள்.

இதுதான் எதிர்மறைத்தன்மை என்பது ; இதுதான் கவலையின் மூலம். கவலையைப் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால், நமது

மனதிற்குள் நிகழும் இந்த கட்டுப்படுத்தப்படாத தொடர் உள்பேச்சே கவலையாகும். இதுவே உங்கள் எஜமானனாகி உங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.

கவலைகளில் 99% ஒரு போதும் உண்மையாயிருப்பதில்லை! நமது கவலைகளில் 99% முழுவதும் காரணமற்றவை.

கொஞ்சம் கொஞ்சமாக, இந்த எதிர்மறையான போக்கு, இந்த எதிர்மறையான பேச்சு உங்கள் இருப்புத் தன்மையில் நிரந்தரமாக உறுதிப்பட்டு, பின்னர் நீங்கள் செய்யும் எல்லாச் செயல்களிலும் ஒருவிதமான எதிர்மறைச் செல்வாக்காகவே வெளிப்படுகிறது. உங்களிடம் திடமாகி விட்ட இதைப் பற்றி நீங்கள் வெகுவாக விழிப்பின்றி இருப்பது மிகவும் அபாயகரமானது. அதுவே உங்கள் இயல்பாகி விட்டதால், உங்களிடம் உங்கள் அமைப்பில் இருக்கும் இந்த ஓட்டத்தைப் பற்றிய ஒரு கூரிய விழிப்பை ஏற்படுத்துவதே ஒரு பெரும் வேலையாகிறது. அதை உங்களால் உங்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அது உங்களின் ஒரு பகுதியாகி விட்டது.

இந்த எதிர்மரையான- மனோபாவத்தின்- மருத்துவப் பெயர்தான் மனச்சோர்வு . சிலரிடம் மனச்சோர்வு கொஞ்சமாக இருக்கிறது. சிலரிடம் அதிகமாக இருக்கிறது. அவ்வளவே. இந்தப் பேச்சு உங்களை அதிகமாக விழுங்க நீங்கள் அனுமதித்தால் நீங்கள் அதிக மனச்சோர்வுக்கு உள்ளாகிறீர்கள். குறைந்த மனச்சோர்வுக்கு உள்ளாகும் மக்கள் சில சமயங்களில் மட்டுமே, அதுவும் குறைந்த அளவில் உணருகிறார்கள். ஆனால் அதிக மனச் சோர்வுக்கு உள்ளாகும் மக்களோ பல சமயங்களில், அதுவும் அதிக அளவில் உணருகிறார்கள். ஆனால், இருவருக்குமே எப்பொழுதும் இந்த ஓட்டம் இருக்கிறது.

அதனால், மனச்சோர்வு அல்லது எதிர்மறைத் தன்மை என்பது, நீங்கள் உங்களுடனேயே பேசிக் கொள்ளும், எதிர்மறையான எண்ணக் குவியல்களைத் தவிர வேறில்லை. ஒருமுறை இது போன்ற எண்ணங்களை நீங்கள் உங்கள் மனதுக்குள் அனுமதித்துவிட்டால்,

ஒவ்வொரு முறை நீங்கள் சின்னத் தோல்வியடையும் பொழுதும் மீண்டும் மீண்டும் உங்களுக்குள் ஓடிக் கொண்டிருக்கும். அது இந்த மனோபாவத்தை மேலும் மேலும் வலுப்படுத்தும். கவலைப்படுதல் என்பது அதிகமாக வலுப்படுத்தப்பட்ட ஒரு பழக்கம்தான்.

ஆனால் அது ஒரு வெறும் பழக்கம்தான்; அதனால் மற்ற எந்தப் பழக்கத்தையும் போல எளிதில் உதைத்துத் தள்ளிவிட முடியும்! ஆனால், அதை ஒரு பழக்கமாக நீங்கள் நினைப்பதில்லை; அது ஏதோ ஒரு திடமான மிகப் பெரிய உண்மை என்று நினைக்கிறீர்கள். அதுதான் பிரச்சினையே. அதனால்தான் உங்களால் அதை உதைத்துத் தள்ள முடியவில்லை.

மனம் ஒரு அற்புதமான பதிவு செய்யும் அமைப்பு. அது உங்கள் எதிர்மறை எண்ண வடிவ அமைப்புகளையும், உங்கள் மனக் குழப்பங்களையும், உங்கள் கவலைகளையும் சேமித்து வைக்கிறது. நீங்கள் கற்றுக் கொடுக்கும் எதையும், மனமானது விசுவாசத்துடன் கற்றுக் கொண்டு திரும்பச் செய்கிறது. இவ்வாறுதான் உங்களுடைய எல்லா வித எதிர்மறைத் தன்மைகளுடனும் ஒரு திடமான மன அமைப்பை உருவாக்கிக் கொள்கிறீர்கள். எனவே உங்கள் மனத்திடம் என்ன சொல்கிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருங்கள்.

நாம் எப்பொழுதுமே மற்றவர்களுடன் எவ்வாறு பேசுகிறோம் என்பதில் மிகுந்த கவனமெடுத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் நம்முடனேயே எவ்வாறு பேசிக் கொள்கிறோம் என்பதில் ஒரு போதும் போதுமான கவனம் எடுத்துக் கொள்வதேயில்லை.

எவ்வாறு சரியான சாப்பாட்டுப் பழக்கமின்மையால் நமது இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்ந்து விடுகிறதோ, அதே

மக்கள் அமைதியாக இருப்பதற்கே அச்சப்படுவதற்கு காரணம், அவர்களுக்குள் இருக்கும் இந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரிதான்.

போன்று, நிரந்தரக் கவலையானது நமது இருப்புத் தன்மையில் திடப்பட்டு விடுகிறது. கொழுப்பானது நமது இரத்த நாளங்களில் தடைகளை ஏற்படுத்துவது போல், கவலையானது நமது இருப்புத்தன்மையில் சக்தித் தடைகளை ஏற்படுத்துகிறது.

காலப்போக்கில், கவலை உங்கள் இயல்பின் ஒரு பகுதியாகி விடுகிறது. அது ஒரு விழிப்பற்ற செயலாகி விடுகிறது. என்னதான் நீங்கள் அதன் காரணத்தைக் கண்டு பிடித்தாலும், தாழ்வான மனோநிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன் ? காலங்காலமாக நீங்கள் அடக்கி வைத்த கவலைகளும், கோபங் களும் உங்கள் இருப்புத் தன்மையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு படலமாக இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கவலை ஒரு அலை போல அவ்வப்பொழுது எழுகிறது; ஆனால், மனச்சோர்வானது தண்ணீரைப் போல எப்பொழுதும் இருக்கிறது.

எவ்வாறு மனச்சோர்வு அல்லது எதிர்மறைத் தன்மைகளைக் கடந்து செல்வது ?

வெறுமனே விழிப்பாகவும் கவனமாகவும் இருங்கள். எப்பொழுதாவது ஒரு எதிர்மறையான எண்ணம் மேலே வருவது உங்கள் கவனத்திற்கு வந்தால், எதிர்மறையான வார்த்தைகள் சிதறி மறைவதாக உங்கள் மனக்கண்ணால் பாருங்கள். இதை நீங்கள் செய்து வந்தாலே, எதிர்மறையான வடிவ அமைப்புகள் உங்களுக்குள் படிய நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். காலம் செல்லச் செல்ல, உங்கள் மன அமைப்பும் அதை உருவாக்கும் செயல் திட்டமும் மாறியிருக்கும்; அது இனியும் எதிர்மறையாக இருக்காது.

நீங்கள் ஒரு சில கணங்களாவது உள்பேச்சைக் கடந்து சென்றால், உங்கள் விழிப்பும், உயிர்ப்பும் அதிகரிக்கும்.

நீங்கள் உங்கள் மனதைச் செலுத்திக் கொண்டிருக்கவில்லை - உங்கள் மனமே உங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.

கவலையென்பது உண்மையற்றது, தேவையற்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு மணிபூரக சக்கரத்தின் பொக்கிஷங்கள் இயல்பாகவே திறக்கப்பட்டு விடும்.

சொல்லுங்கள் ...

ஸ்வாமிஜி, எண்ணங்கள் மனதின் ஒரு பகுதியா, அல்லது அவை மனதின் வெளிப்பாடா ?

உங்கள் மனமும் எண்ணங்களும் ஒன்றே. மனத்திற்கும் எண்ணங்களுக்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. மனமே எண்ணம், எண்ணமே மனம். மனம் என்பது எண்ணக் குவியல்களைத் தவிர வேறில்லை; அது தொடர் எண்ண ஓட்டமே. எண்ணங்கள் என்பது நீங்களே உங்களிடம் தொடர்ந்து பேசிக் கொள்ளும் வார்த்தைகளைத் தவிர வேறல்ல.

பாருங்கள்.. நீங்கள் கவலைப்படும் பொழுது, ஏற்றுக் கொள்ளும் தன்மையுடனும் தெளிவுடனும் அதனுள் ஆழ்ந்து செல்லுங்கள். அதனுள் செல்வதற்கு அஞ்சாதீர்கள். கவனத்தில் கொள்ளுங்கள் .... ஏற்றுக் கொள்ளுதல் என்பது ஒரு மிகச் சிறந்த தியான முறை. ஏற்றுக் கொள்ளுதல் மிகப் பெரும் சக்தியை வெளியிடுகிறது. உங்களுக்கு நல்ல தெளிவையும் விடுதலையையும் கொடுக்கிறது.

நீங்கள் உங்கள் கவலைகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது, அதனுள் ஆழ்ந்து செல்லும் பொழுது, அவையெல்லாம் வெறும் உங்கள் படைப்புகளே என்கிற அற்புதமான புரிந்து கொள்ளுதல் ஏற்படும். உங்கள் மனம் எவ்வாறு விளையாடுகிறது, எவ்வாறு உங்களிடம் ஒரு மனஇறுக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காணமுடியும்.

இந்த மனதின் கையில்தான் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறீர்கள்.

நான் இதைச் சொல்லும் பொழுது, உங்களால் புத்தி பூர்வமாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அது உங்கள் அனுபவமாகி விடும் பொழுது, உங்களிடம் அந்தத் தெளிவு இருக்குமானால், நீங்கள் கவலைகளைக் கடந்து செல்லலாம். பிறகு, மனச்சோர்வு உங்களைத் தொட முடியாது; நீங்கள் துயரங்களைக் கடந்து செல்வீர்கள்.

ஒரு சின்ன கதை....

ஒருசமயம் நான் கல்கத்தாவில் தங்கி, ஈஷாவாஸ்ய உபநிஷத வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்த போது, ஒருவர் என்னைக் காண வந்தார்.

அவர் சொன்னார், ''ஸ்வாமிஜி, எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. நான் இருக்கும் பகுதியில் நிறைய தெரு நாய்கள் இருப்பதால், என்னால் இரவில் நன்றாகத் தூங்க முடிவதில்லை. ஒவ்வொரு இரவும் அவை குரைக்க ஆரம்பித்து விடுகின்றன; விடியும் வரையில் குரைத்துக் கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே நான் ஆழ்ந்து தூங்குபவனல்ல; எனவே இந்த இரைச்சலால் என்னால் சிறிதும் ஓய்வெடுக்க முடியவில்லை''.

நான் சொன்னேன், "வீட்டிற்குச் சென்று இன்று இரவு இதை முயற்சி செய்யுங்கள். குரைப்பை கேட்கும் பொழுது, கோபத்தையும் உங்களிடம் எழும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டு விடுங்கள். எதிர்ப்பில்லாமல் வெறுமனே குரைப்பின் சப்தத்தைக் கேளுங்கள். உங்களிடம் சொல்லிக் கொள்ளுங்கள், நாய்கள் குரைக்கின்றன, அவ்வளவுதான். அதற்கு எதிர்செயல் புரிய உங்களை அனுமதிக்காதீர்கள். குரைப்பு பிரச்சினை அல்ல; அதற்கு உங்களுடைய எதிர்ப்புதான் பிரச்சினை''.

சரியான உணவுப் பழக்கமின்மையால் நமது இரத்த நாளங்களில் கொமுப்புச் சேர்ந்து விடுவது போல. நிரந்தரக் கவலையானது நமது இருப்புத் தன்மையில் திடப்பட்டு வருகிறது.

அவர் திரும்பிச் சென்று நான் சொன்னதை முயற்சி செய்தார். சில நாட்கள் கழித்து திரும்பிவந்து சொன்னார், "ஸ்வாமிஜி, நீங்கள் சொன்னது போலவே நான் என் எதிர்ப்பை விட முயற்சி செய்தேன். 'என் தூக்கத்தைக் கெடுக்க அந்த முட்டாள் நாய்களுக்கு எத்தனை தைரியம் இருக்க வேண்டும்' என்று நினைப்பதற்கு பதிலாக, நான் என் எண்ணங்களை, கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ள முடிவு செய்தேன். 'நாய்கள் குரைக்கின்றன. அது என் தூக்கத்தைக் கெடுக்கிறது ... ', 'நாய்கள் குரைக்கின்றன ... ', 'ஏதோ சில பிராணிகள் ஏதோ சில ஒலியை எழுப்புகின்றன'. இந்த வாக்கியத்திற்கு வரும் பொழுது, நான் தூங்கி விட்டேன் என்று நினைக்கிறேன். எது எப்படியாயினும், இந்த சில நாட்களாக நான் நன்றாக உறங்குகிறேன். மிக்க நன்றி ஸ்வாமிஜி''.

இது உங்களிடமும் நடக்கலாம். உங்களுடைய எதிர்மறைத் தன்மையை எவ்வாறு விடுவது என்பது தெரியுமானால், உங்களுடைய எதிர்ப்பை எவ்வாறு விடுவது என்பது தெரியுமானால், எந்த சூழ்நிலையையுமே உங்களால் சமாளித்து விட முடியும். இதுவே மணி பூரக சக்கரத்தைத் திறக்கும் திறவுகோல் ஆகும்.

ஆனால் மனமோ தனக்கு மிகவும் பழக்கமான உள் பேச்சு வடிவ அமைப்புகளிலேயே தங்கி விடவும், நிலை பெறவும் விரும்புகிறது. இதுதான் கவலை செயல்படும் அடிப்படை. மனம் எப்பொழுதுமே விஷயங்களை வகைப்படுத்த விரும்புகிறது. அதற்கு எப்பொழுதுமே கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றிற்கிடையே ஒப்பீடு தேவைப்படுகிறது. இந்த ஒப்பீடே, இந்த ஆதாரமே, இந்தத் தீர்ப்பே, கவலை பிறக்கக் காரணமாகிறது.

கொழுப்பானது நமது இரத்த நாளங்களில் தடைகளை ஏற்படுத்துவது போல, கவலையானது நமது இருப்புத்தன்மையில் சக்தித் தடைகளை ஏற்படுத்துகிறது.

கவலைகள் என்பது நமது மனதிற்குப் பழக்கமான வடிவ அமைப்புகளைத் தவிர வேறல்ல. மனித உளவியல் துறையில் இந்தப் பழக்கமான அமைப்புகளுக்கு என்கிராம்கள் (ஸம்ஸ்காரங்கள் / எண்ணப் பதிவுகள்) என்று பெயர். ஸம்ஸ்காரங்கள் என்பது செதுக்கப்பட்ட இறந்தகால நினைவுகள். இவையே நமது நிகழ்கால மற்றும் எதிர்காலச் செயல்களுக்கு நமக்குள் இருந்து விரும்பத்தகாத மூலங்களாகச் செயல்படுகின்றன. இந்த சேமித்து வைக்கப்பட்ட ஸ்ம்ஸ்காரங்களால், நாம் நிகழ்காலத்தில் தர்க்க ரீதியற்று எதிர்ச்செயல் புரிகிறோம்.

நம்மால் ஏன் ஒவ்வொரு கணத்தையும் அப்படியே எடுத்துக் கொள்ள முடியவில்லை ? ஒவ்வொரு கணத்தையும் இறந்த காலத்துடனும், எதிர்காலத்துடனும் தொடர்புபடுத்தி முடிவெடுக்க வேண்டிய தேவை என்ன? மனம் தான் காணும் எல்லாவற்றிலும் ஏன் ஒரு முரண்படாத தன்மையை விரும்புகிறது? அவ்வாறு இல்லாத பொழுது, அதை ஜீரணிக்கக் கஷ்டப்படுவது ஏன்? ஏனெனில், நீங்கள் உங்கள் மன அமைப்புப்படி, சேமிக்கப்பட்டுள்ள பதிவுகளின் உதவியுடன், விஷயங்களை வடிவமைக்க விரும்புகிறீர்கள்; அது முடியாத போது, கவலைப்படுகிறீர்கள்.

எப்பொழுதாவது நான் கவலைப்படுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் எப்படி எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் எதனாலும் தீண்டப்படாமலும் இருக்கிறேன் என்று உங்களில் எத்தனை போர் என்னிடம் கேட்டிருக்கிறீர்கள்? நான் சொல்கிறேன்… அதற்குக் காரணம், நான் வெறுமனே இந்தக் கணத்தில் வாழ்கிறேன், அவ்வளவே. நான் இறந்த காலத்தை ஒரு ஆதாரமாக மனதில் எடுத்துச் செல்வதில்லை. இதுபோன்ற ஆதாரங்களால்

என் மனதை சுமையேற்றுவதில்லை. நான் தன்னிச்சையாக செயல்புரிகிறேன்; எந்தவித வடிவ அமைப்பிலிருந்தும் அல்ல.

நான் ஒரு பாயும் நதி போல இருக்கிறேன். என்னுடன் வந்த பலர் இமயமலையில் கங்கை நதி பாய்ந்து செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அது மிகவும் அழகானது. அது சில இடங்களில் மிகவும் அமைதியாகவும், சில இடங்களில் சீற்றம் மிகுந்தும், சில சமயங்களில் மிகத் தெளிவாகவும் மற்ற சமயங்களில் ஒன்றும் தெரியாமல் மிகவும் கலங்கலாகவும் இருக்கிறது. அதை ஒருவன் எங்கு எதிர் கொள்கிறானோ, அதிலிருந்து அவன் அந்த விதமான அனுபவத்தைப் பெறுகிறான்.

அதை எதிர் கொண்ட இருவர் எப்பொழுதாவது தங்களது குறிப்புகளை ஒப்பிட்டுக் கொண்டு புகார் கூற முடியுமா? அது எவ்வளவு முட்டாள்தனமானது! நதியானது வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் இசைக் கேற்றவாறு ஒடிக் கொண்டிருக்கிறது, அவ்வளவே! அதற்கு எந்தவிதமான திட்டமிடுதலும் இல்லை. நானும் கங்கையைப் போலத்தான் ... எந்தவிதமான திட்டமிடுதலும் இன்றி, தன்னிச்சையாக, எந்தக் கவலையுமின்றி பாய்ந்து சென்று கொண்டிருக்கிறேன். பிரதான திட்டமிடுதல் எல்லாம் பிரபஞ்ச இருப்புத் தன்மைதான்.

நான் தன்னிச்சையாகச் செயல்படுவதன் காரணமாக, முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறேன் என்று, மக்கள் என்னைப்பற்றிக் கருத்துக் கூறுகிறார்கள். உங்களில் எத்தனை பேர் என்னுடைய முன்னுக்குப்பின் முரணான வார்த்தைகள் மற்றும் நடத்தை பற்றி புகார் கூறியிருக்கிறீர்கள் ? சொல்லுங்கள் ... உங்கள் கைகளைத் தூக்குங்கள்!

(ஒரு பெரிய பெரிய இடைவெளிக்குப் பிறகு, சிலர் துணிகின்றனர்... )

பாருங்கள்! இந்த எண்ணம் உங்கள் எல்லாருக்குமே ஒரு சில சமயங்களிலாவது வந்திருக்கும். ஆனால் இவர்கள் மட்டுமே கையை உயர்த்தும் துணிச்சல் பெற்றிருக்கிறார்கள்.

கங்கை முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா? உங்களால் 'கங்கை இன்னும் கொஞ்சம் சீராக ஒழுங்கான முறையில் ஓட வேண்டும்' என்று சொல்ல முடியுமா? முடியாது! ஆறு அப்படித்தான் ஓடுகிறது, அவ்வளவுதான்; உங்களால் அதை எடைபோட முடியாது. அதே போல், நானும் ஒரு நதியைப் போல் பாய்ந்து செல்கிறேன்; என்னை முன்னுக்குப்பின் முரணானவன் என்று சொல்ல முடியாது. நான் கணத்திற்கு கணம் வாழ்கிறேன். ஆனால் நீங்களோ ஒன்றுக்கொன்று தொடர்பு உடையு, மிகவும் சிக்கலான கணங்களை ஒன்று சேர்த்து அதில் வாழ்கிறீர்கள். அதன் விளைவு என்ன? நீங்கள் சுமையேற்றப் பட்டதாக உணர்கிறீர்கள்; கவலைப்படுகிறீர்கள்.

இத்தனை கணங்கள் உங்கள் மீது தங்கள் சுமையை ஏற்றியிருக்கும் பொழுது, நீங்கள் நிச்சயமாக சுமையாக உணர மாட்டீர்களா? அதே போல, ஒரே ஒரு கணம் மட்டுமே உங்கள் மீது இருக்கும் போது, நீங்கள் இலேசாக உணர மாட்டீர்களா ? உங்களுடைய கவலைகளுக்கெல்லாம் காரணம் நீங்கள் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை இறந்தகால வடிவ அமைப்பு களுடன் தொடர்பு படுத்துவது தான். இந்த முழுச் செயல்பாட்டில், உண்மையிலேயே உங்களுக்குப் பரிசாகக் கிடைக்கும், நிகழ் காலத்தைத் தவறவிட்டு விடுகிறீர்கள். நீங்கள் இறந்த காலத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும், தொடர்ந்து நிகழ் காலத்தைத் தவறவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இறுதியில், எதிர்காலமும் இறந்த காலமுமே இருக்கிறது; நிகழ்காலம் ஒரு போதும் இல்லை.

எண்ணங்கள் என்பது நீங்களே உங்களிடம் தொடர்ந்து பேசிக்கொள்ளும் வார்த்தைகளைத் தவிர வேறல்ல.

கவலையின் ஓட்டத்திற்குக் காரணமாகும் இந்த வடிவ அமைப்புகள் மனதின் இருப்பைத் தாங்கிப் பிடிக்கும் அடிப்படைக் கூறாகும்.

ஒரு சின்ன கதை ....

இரண்டு நண்பர்கள் புதிதாக வெளிவந்த ஒரு படத்தைப் பார்ப்பதற்காக தியேட்டருக்குச் சென்றனர். ஒருவன், மற்றவன் தன் கைக் கடிகாரத்தை அடிக்கடி பார்ப்பதைக் கவனித்தான். அவன் காதில் கிசுகிசுத்தான், 'நீ படத்தை ரசிக்கவில்லையா ?''. அவன் சொன்னான், ''ரசிக்கிறேன். நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இன்னும் எவ்வளவு நேரம் பாக்கி இருக்கிறது என்று பார்க்கிறேன்''.

(சிரிப்பு!)

உண்மையில், நம்மில் பலா் இப்படித்தான் இருக்கிறோம். நாம் கவலைப்படுவதுடன் மிகவும் இசைந்து போய் விட்டோம்; அதனால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லாவிடில் கூட, இந்தக் கவலையற்ற நிலை எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று கவலைப் படுகிறோம்! நாம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது கூட, மகிழ்ச்சியாக இருக்க இன்னும் எவ்வளவு நேரம் பாக்கி இருக்கிறது என்ற எண்ணத்திலேயே இருக்கிறோம். பிறகு நாம் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும் ? நீங்கள் தொடர்ந்து இது போன்ற எண்ணத்திலேயே இருந்தால், உங்களை எப்பொழுதும் எதிர்காலத்திலேயே வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் எதிர்கால மகிழ்ச்சியான கணத்தைப் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யும் சமயத்தில், அந்த க்ஷணத்தின் மகிழ்ச்சியைத் தவறவிட்டு விடுகிறீர்கள்!

நான் சொல்ல முயற்சிப்பதைப் பின்தொடர முடிகிறதா ?

மனம் எப்பொழுதும் விஷயங்களை வகைப்படுத்தி ஒப்பிட விரும்புகிறது. இந்த ஒப்பீடே கவலை பிறக்கக் காரணமாகிறது.

நீங்கள் உங்கள் குடும்பத்தில் உங்களையும். மற்றவர் களையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தீர்களானால், நான் சொல்வகைக் கவனிக்க முடியும்.

ஒவ்வொருவருமே, கவலைகளுடன் இருக்கும் பொழுது, தங்களை முக்கியமானவராகவும், தங்களால் பயனிருப்பதாகவும் கருதுகிறார்கள்.

உண்மையில், நிறைய கவலைகளுடன் இருக்கும் பொழுது, ஒரு மனிதன் தன்னைப் பற்றி மிகவும் சந்தோஷமடைகிறான்; ஏனெனில் அவனது அஹங்காரம் நிறைய கவலைகளை நிர்வகிக்கும் திறமை பற்றிச் சந்தோஷமடைகிறது. அதனால்தான் பல சமயங்களில், நீங்கள் உங்கள் கவலைகளைப் பற்றி யாரிடமாவது பேசினால், உடனே அவர்கள், ''ஆ! இது ஒன்று மில்லை; என்னுடைய பிாச்சி னைகளைக் கேளுங்கள்; அப்பொழுது தான் உங்களுக்குத் தெரியும்'' என்று சொல்வதைக் கண்டிருப்பீர்கள். ஏனெனில், மக்கள் பெரிய கவலைகளை சுமப்பதை உயர்வாகக் கருதுகிறார்கள்.

எப்பொழுதும் கவலைகளைப் பற்றியே என்ணிக் கொண்டிருப்பதால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது? ஒன்று மில்லை. உங்களுடைய பத்து கவலைகளுடன், பதினோராவது கவலையாக மனச்சோர்வும் சேர்ந்து கொள்ளும், அவ்வளவுதான்.

நாம் வேலை செய்யும் பொழுது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தெளிவாக இருங்கள் ... கவலையிருக்கும் பொழுது உங்களால் வேலை செய்ய முடியாது. உண்மையிலேயே நீங்கள் வேலை செய்யும் பொழுது கவலைப்பட முடியாது. கவலையிருக்கும் இடத்தில் படைத்தல் நிகழ முடியாது. படைத்தல்

கவலைகள் என்பது நமது மனதிற்குப் பழக்கமான வடிவ அமைப்புகளைத் தவிர வேறல்ல. இதற்கு மனித உளவியல் துறையில் என்கிராம்கள் என்று பெயர். இதைத்தான் நாம் ஸம்ஸ்காரங்கள் அல்லது எண்ணப்பதிவுகள் என்கிறோம்.

நிகழுமிடத்தில் கவலை இருக்க முடியாது. ஒரு சமயத்தில் படைப்போ அல்லது கவலையோ மட்டும்தான் இருக்க முடியும்; ஒருபோதும் இரண்டும் சேர்ந்திருக்க முடியாது. படைப்பே உண்மையான வழிபாடு. படைக்கும் பொழுது நீங்கள் கடவுளுக்கு மிக அருகாமையில் இருக்கிறீர்கள். படைப்பு இதயத்திலிருந்து வருகிறது. கவலை மனதிலிருந்து வருகிறது.

இறந்தகாலத்தின் பின்னால் செல்லும் பொழுது, அல்லது எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும் பொழுது, நீங்கள் நிகழ்காலத்தைத் தவற விட்டு விடுகிறீர்கள். ஆன்மீகம் என்பது இறந்தகாலத்தை விட்டு விட்டு நிகழ்காலத்தில் வாழ்வது. தற்சமயம், நீங்கள் இறந்த காலத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சுமை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் நீங்கள் சதுப்பு நிலத்தில் மாட்டிக் கொண்டு விட்டதைப் போல் உணர்கிறீர்கள்.

உங்களுக்கு, எவ்வாறு இறக்கி வைப்பது என்று தெரியவில்லை; உங்களுக்கு அதை எவ்வாறு சுமந்து செல்வது என்று மட்டுமே தெரியும். நீங்கள் அதனை உங்களுடனேயே சுமந்து செல்ல வேண்டும் என்று கருதுகிறீர்கள். சமூகம் அதை உங்களுடன் சுமந்து செல்லவே கற்றுக் கொடுத் திருக்கிறது. நீங்கள் அதை விட்டுவிட முயற்சி செய்தால், குற்ற உணர்வுடன் இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

நீங்கள் இறந்தகாலத்தை விட்டுவிட்டால், நன்றியுணர் வற்றவர்கள் என்று சமூகம் உங்களைச் சொல்கிறது. நான் சொல்கிறேன் ... அது வெறும் அபத்தமானது. நீங்கள் உங்களுடைய இறந்த காலத்தை உங்களுடன் சுமந்து செல்ல வேண்டிய தேவை

நீங்கள் இறந்த காலத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும், தொடர்ந்து நிகழ்காலத்தைத் தவற விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

கண்டிப்பாக இல்லை. நன்றியுணர்வு என்பது உங்களுக்குள் தொடர்ந்து இருக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மையையும் மற்றும் மொத்தத்தில் அனைவரையும் நோக்கிய ஒரு உணர்வு : வாழ்க்கையில் நிகழும் தனித்தனி சம்பவங்களை நோக்கிய உங்கள் உணர்வு அல்ல என்பது இவற்றையெல்லாம் உங்களுக்குச் சொல்லும் மக்களுக்குத் கெரியாகு.

நீங்கள் இறந்தகாலத்தை விடும்பொழுது, நிகழ்காலம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சமூகம் எப்பொழுதுமே நிகழ்காலத்தை இறந்த காலமாகவே அனுபவிக்கக் கற்றுக் கொடுக்கிறது; ஒருபோதும் எல்லாவற்றையுமே இறந்தகாலமாகச் செய்த பிறகே அனுபவிக்கக் கற்றுக் கொடுக்கிறது.

நான் விடுமுறை நாட்களில் வெளியே செல்லும் மக்களைக் கண்டிருக்கிறேன் - எப்பொழுதும் கையில் ஸ்டில் கேமரா மற்றும் வீடியோ கேமராக்களுடன். அற்புதமான இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடத்தில், அவர்களைச் சுற்றியுள்ள இயற்கையை ரசிக்காமல், எல்லாக் காட்சிகளையும் அவர்களது கேமராவின் லென்ஸ் வழியாகப் பிடித்து விட கஷ்டப்பட்டு முயன்று கொண்டிருப்பார்கள்.

பிறகு அவர்கள் வீட்டிற்குச் சென்று, படச்சுருளைக் கழுவி, நான்கு சுவர்களுக்குள் ஸோஃபாவில் அமர்ந்து, அதே இயற்கைக் காட்சிகளைப் அனுபவிப்பார்கள். அவர்கள் வெறுமனே தவறவிட்டு விட்டார்கள், அவ்வளவுதான். எடுக்கப்பட்ட எல்லா புகைப்படங்களும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் காண்பிக்கப்படுவதெல்லாம், அதில் காணப்படும் இடங்களுக்கெல்லாம் சென்று விட்டு வந்ததைச் சொல்வதற்குத்தான். ஆனால் அவா்கள் அந்த இடங்களில் இருந்த

எப்பொழுதும் கவலைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது ? பத்துக் கவலைகளுடன் பதினொராவதாக மனச்சோர்வு சேர்ந்து கொள்ளும்! போது அதை ஒருபோதும் அபைவிக்கவில்லை! அதை வெறுமனே கவறவிட்டு விட்டார்கள்!

நீங்கள் எப்பொழுதும் நிகழ்காலத்தை இறந்த காலமாகச் செய்த பிறகே அனுபவிக்கிறீா்கள். அதனால் தான் மக்கள், ''அவை பொன்னான நாட்கள்'', என்று சொல்கிறார்கள். அந்த நாட்கள் உண்மையிலேயே இருந்த பொழுது, நீங்கள் அவற்றை நிச்சயமாகப் பொன்னான நாட்களாக எண்ணவில்லை. அந்த சமயத்தில் நீங்கள் அதற்கு முந்தைய நாட்களைப் பொன்னான நாட்கள் என்று சொல்லிக் கொண்டிருந்திருப்பீர்கள், அவ்வளவுதான்! இவ்வாறுதான் நீங்கள், உங்கள் கவலைகளால், உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.

நீங்கள் நிகழ்காலத்தின் அழகை முழுவதுமாகத் தவறவிட்டு விடுகிறீர்கள். நீங்கள் நிகழ்காலத்துடன் இசைந் திருக்கும் பொழுது, ஒவ்வொரு கணமுமே கொண்டாட்டமாக இருக்கும். நீங்கள் கொண்டாடுவதற்கு பழைய சம்பவங்களைத் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். ஒவ்வொரு கணமுமே கொண்டாட்டமாக இருக்கும் பொழுது, நீங்கள் தொடர்ந்து நிகழ்காலத்திலேயே இருந்து கொண்டிருப்பீர்கள்; ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு கணத்தையுமே கொண்டாடிக் கொண்டிருக் கிறீர்கள். நீங்கள் கொண்டாடுவதற்கு ஒரு போதும் இறந்த காலத்திற்குச் செல்ல மாட்டீர்கள்.

கவலைகளைக் கண்டறிய இறந்தகாலத்தைக் கூறு போட்டு ஆராய்ந்து கொண்டிருப்பது ஒரு வீண் வேலை ; ஏனெனில் ஒவ்வொரு கணமும் நீங்கள் ஒரு புதிய மனிதராக இருக்கிறீர்கள்! ஒவ்வொரு கணமும், நீங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு கணமும் நீங்கள் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒரு பகுதி ; பிரபஞ்ச இருப்புத் தன்மை

நீங்கள் எப்பொழுதும் நிகழ்காலத்தை இறந்த காலமாகச் செய்த பிறகே அரைபவிக்கிறீர்கள்.

ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கிறது. பிறகு நீங்கள் எவ்வாறு பழைய சம்பவங்களைக் கூறுபோட்டு மேம்படுத்தப்பட்ட அறிவுடன் ஆராய முடியும் ? அது முற்றிலும் பொருளற்றது.

மேம்படுத்தப்பட்ட அறிவுடன் ஒருபோதும் இறந்த காலத்தை ஆராயாதீர்கள். அது முற்றிலும் முட்டாள் தனமான செயலாகும். அது மேலும் மேலும் கவலை மற்றும் குற்ற உணர்வை நோக்கியே இட்டுச் செல்லும். ஒவ்வொரு கணமும் நீங்கள் இறந்து மீண்டும் புதிய மனிதனாகிறீர்கள். இதுதான் உண்மை. இதை வெறுமனே புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஏதாவது எருமை அல்லது பசு கவலைப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? ஏதாவது செடி கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அவைகளெல்லாம் வாழ்க்கையை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கவில்லையா ? நீங்கள் மட்டும் ஏன் கவலைப்படுகிறீர்கள்? நான் சொல்கிறேன்… கவலைப்படுதல் மிகவும் பயனற்ற ஒரு செயலாகும். உங்களுக்குள் கவலைகள் நிரந்தாமான உள் பேச்சாக உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அது உங்களை அதில் பயனற்ற வகையில் முழுவதுமாக ஈடுபடுத்தி விடுகிறது.

உங்கள் கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த மொழியின் வார்த்தைக் குவியல்களைத் தவிர வேறல்ல. மேலும் அவை உங்களுக்குள் அதிகக் குழப்பத்திற்கும் தவறான விளக்கங்களுக்கும் காரணமாகிறது. வார்த்தைகளே எல்லா தவறான புரிந்து கொள்ளுதலுக்கும் மூல காரணம். ஆனால், என்ன செய்வது

நீங்கள் ஏதாவது எருமை அல்லது பசு கவலைப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? ஏதாவது செடி கவலைப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

தொடர்பு கொள்வதற்கு நமக்கு பரிச்சயமான ஒரே முறை - வார்த்தைகள் மட்டுமே.

நான் எப்பொழுதும் மக்களிடம் சொல்வதுண்டு... நான் ஏதாவது ஒன்று சொன்னால், நீங்கள் அதை வேறொன்றாகப் புரிந்து கொள்கிறீர்கள். அங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான அகராதியைக் கையில் வைத்துக் கொண்டு. வார்க்கைகளுக்கு தங்களுக்குத் தெரிந்த வழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு சின்ன கதை....

ஒருவன் தன் மனைவியிடம் சொன்னான், "உனக்குத் தெரியுமா, பெயிண்ட் பிரஷ்கள் செய்வதற்கு வருடத்திற்கு சுமார் 5000 ஒட்டகங்களை உபயோகப்படுத்துகிறார்கள் என்று செ ால்லப்படுகிறது". அதற்கு மனைவி சொன்னாள், "ஒ கடவுளே! மிருகங்களை என்னவெல்லாம் செய்ய வைக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது வியப்பாக இல்லை!''.

(சிரிப்பு)

இப்படித்தான் நம்மில் பலர் புரிந்து கொள்கிறோம். அதனால்தான் நான் வார்த்தைகள் குழப்பத்தை விளை விக்கின்றன என்று சொல்லுகிறேன். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மனிதனுக்குத் தெரிந்த ஒரே தொடர்பு முறை வார்த்தைகள்தான். அவன் மேலும் மேலும் வார்த்தைகளில் சிக்கிக் கொள்கிறான்.

பாருங்கள், வார்க்கைகள் மேலும் வார்க்கைகளுக்கு வழி வகுக்கும். ஆனால் ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைத்தும் இடையில் ஒரு அமைதி அல்லது ஒரு இடைவெளி - நம்மால்

உங்கள் கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த மொழியின் வார்த்தைக் குவியல்களைத் தவிர வேறல்ல.

உணர்ந்து கொள்ள முடியாத ஒரு மிகச்சிறிய இடைவெளி இருக்கிறது; இந்த இடைவெளி கவனிக்கத் தக்கது. நாம் உண்மையிலேயே தேடுவது இந்த இடைவெளியில்தான் இருக்கிறது.

இந்த இடைவெளி நாம் நாள் முழுதும் பார்த்தாலும் அக்கறை கொள்ளமுடியாத அளவு அணுவளவானது. நான் பேசும் பொழுது நீங்கள் அதிக உள்பேச்சின்றி என் பேச்சில் தீவிரமாக மூழ்கி விடுகிறீர்கள். நீங்கள் என் வார்த்தைகளில் ஆழ்ந்து மூழ்கியிருக்கும் பொழுது, நான் சில இடை வெளிகளைக் கொடுக்கிறேன்; இந்த இடைவெளிகளில் இருக்கும் அமைதியே நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் உண்மையான தீர்வு!

நான் இடைவெளிகளைக் கொடுப்பேன். அந்த இடைவெளிகளைக் கொடுப்பது நீங்கள் அமைதியை கிரஹித்துக் கொள்ளவும், அதற்கு சாட்சியாக இருப்பதற்காகவுமே. அது உங்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கும். ஆனால் வழக்கமாக என்ன நடக்கிறது? நான் இடைவெளிகளைக் கொடுக்கும் கணத்தில், மக்கள் அமைதியற்று இருக்கத் தொடங்குகிறார்கள். ஏதாவது அவர்களது பொருள்களை குடையத் தொடங்குவது அல்லது சுற்றும் முற்றும் பார்த்து பேசத் தொடங்குவது - இவ்வாறு மீண்டும் வார்த்தைகளைச் சேகரிக்கிறார்கள்!

உண்மையான அமைதி என்பது விமிப்பணர்வால் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதைத் தவிர வேறில்லை. அது உங்கள் வாயை மட்டும் மூடிக் கொண்டிருப்பதல்ல. உங்களுக்கு இந்த அமைதியின், இந்த விழிப்புணர்வின் கண்நேரக் காட்சி

நான் ஏதாவது ஒன்று சொன்னால், நீங்கள் அதை வேறொன்றாகப் புரிந்து கொள்கிறீர்கள்.

கிடைத்தாலும், எப்பொழுதும் சாமி பேசுவது என்ன என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

இப்பொழுது உங்கள் மனம் கேட்கத் தொடங்கும்.. இந்த, உள் பேச்சையும் எண்ணங்களையும் எவ்வாறு நிறுத்துவது? எவ்வாறு உண்மையான அமைதியை அனுபவிப்பது? இந்த எண்ணம் உங்களைச் சுற்றி வந்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். பிறகு அதுவே இன்னொரு கவலையாகி விடும்!

பாருங்கள் ... இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ... உங்களால் சிந்திப்பதை ஒரு போதும் நிறுத்த முடியாது. சிந்திப்பதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே இன்னொரு எண்ணம்தான்! நீங்கள் வலுக்கட்டாயமாக ஒரு வினாடி அமைதியாக இருக்க முயற்சி செய்தால், அது நாம் அடைய விரும்பும் அமைதி அல்ல; அது வெறுமனே திணிக்கப்பட்ட, இறந்து போன அமைதியாகும். நாம் சாதிக்க விரும்பும் அமைதி, அதிர்விலேயே இருக்கும், ஆனந்தமான அமைதி - பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அமைதி.

அதனால், வெறுமனே மனதை கவனியுங்கள், அவ்வளவுதான். வெறும் கவனிப்பவராக இருங்கள். எந்தக் கருத்தும் சொல்லாதீர்கள்; எந்த எண்ணத்தையும் எதிர்க்காதீர்கள். அது உங்களுக்குக் கடவுளின் பரிசு என்ற ஆழ்ந்த நன்றியுணர்வுடன் கவனியுங்கள். உள் அமைதிக்கு இதுவே முதல் படியாகும்.

உங்கள் விழிப்புணர்வு மெதுவாக வளர்ந்து, உங்களை உங்களுக்குள் மையங்கொள்ள வைத்து, உங்கள் அமைதியை அதிகமாக்கும். அமைதி அதிகமாகும் என்று நான் சொல்லும் பொழுது, உங்கள் உள் பேச்சு குறையும், நீங்கள் அதிகம் கவனிப்பவராக மாறுவீர்கள் என்று பொருள் கொள்கிறேன். அமைதி

ஒவ்வொருவரும் தமது சொந்த அகராதியைக் கையில் வைத்துக்கொண்டு, வார்த்தைகளுக்கு தங்களுக்குத் தெரிந்த வழியில் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.