Part 8: Guaranteed Solutions
நீங்கள் இந்த நிலையை அடைந்து விட்டால், எந்த விதமான மகிழ்ச்சிக்கும் வெளியில் யாரையும் சார்ந்திருக்க மாட்டீர்கள். நீங்கள் எப்பொழுதும் உங்களுக்குள் வெறுமனே மகிழ்ச்சியுடன் ஒத்திசைந்து கொண்டு இருப்பீர்கள். அதே சமயத்தில், அதை வெளியில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களால் பெருக்கவும் முடியும்.
நீங்கள் ஒருவருடன் ஆழமாக இணைக்கப் பட்டிருப்பதாக உணர்ந்தால், அவரது உடல் அருகாமை தேவை இல்லை. வெறுமனே அவருடன் இணைக்கப்பட்டிருக்கும் உணர்விலேயே சந்தோஷமும் திருப்தியும் அடைவீர்கள். நீங்கள் உங்களுக்கு உள்ளேயே முழுமையாக உணர்வீர்கள். முழுமுமை பெறுவதற்கு வெளியில் எதையும் தேடமாட்டீர்கள். இந்த இணைப்பு பிரிவாலோ அல்லது வேறு எதனாலோ பாதிக்கப்படாது.
உறவு என்பது, அனைத்திற்கும் அப்பாற்பட்டு, ஒருவருடன் ஆழமான நிலையில் இணைக்கப்பட்டிருக்கும் உணர்வு. இதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால், பல நிபந்தனைகளுடன் உங்களை நீங்களே மற்றவர் களுடன் கட்டிப்போட்டுக் கொண்டு, அதை உறவு என்று அழைக்கிறீர்கள். அது ஆட்டம் காண்கிறது. அதைப் பராமரிப்பதற்காகக் கடினமாக உழைக்கிறீர்கள். உறவுகள் எல்லாமே சித்திரவதைதான் என்று தீர்மானித்து விடுகிறீர்கள்!
மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், "ஸ்வாமிஜி. நான் ஆசிரமத்தில் வந்து தங்க விரும்புகிறேன். எனக்கு வீட்டில் தங்குவதில் மகிழ்ச்சியில்லை".
நான் எப்பொழுதும் அவர்களிடம் சொல்வது என்ன வென்றால், அவர்களால் வீட்டில் 4 பேருடன் சந்தோஷமாக
உங்களால் வீட்டில் 4 பேருடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லையென்றால், ஆசிரமத்தில் 100 பேரூடன் சந்தோஷமாக இருக்க முடியாது!
இருக்க பேருடன் சந்தோஷமாக இருக்க முடியாது! ஆசிரமம் என்ன தப்பித்துச் செல்பவர்களின் விடுதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா ?
மிகத் தெளிவாக இருங்கள்... வீடு ஏதோ உங்களுக்கு வெளியில் இருக்கும் விஷயம் அல்ல. உங்களைச் சுற்றி நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருப்பதே 'வீட்டில் இருப்பது' என்பதாகும். உங்களால் இவ்வாறு இருக்க முடியவில்லையென்றால், நீங்கள் எங்கு சென்றாலும் உங்களால் 'வீட்டில் இருக்க' முடியாது.
நான் மாதக்கணக்கில் ஒரு 8'x 8' அளவில் அறை போன்ற ஒரு அமைப்பில் இருந்த போதும், இன்று இந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போலவே ஆனந்தமயமாக இருந்தேன். தயவு செய்து இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் சந்தோஷத்திற்கு வெளியுலகப் பொருட் களால் ஆக வேண்டியது எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொள்வதில்தான் உங்கள் திறன் இருக்கிறது.
நாய் எலும்புத் துண்டைக் கடிக்கிறது. அதன் வாயிலிருந்து இரத்தம் வடியத் தொடங்குகிறது. அது இரத்தம் எலும்பிலிருந்து தான் வருகிறது என்று நினைத்துக் கொண்டு இன்னும் நன்றாகக் கடித்து இரத்தத்தை நக்கிச் சுவைக்கிறது. அந்த நாய்க்கு என்ன நிகழும் ? வலி மட்டும்தான் நிகழும். நீங்களும் இதைத்தான் செய்கிறீர்கள். சந்தோஷமோ அல்லது வலியோ, உங்களுக்கு வெளியில் இருந்துதான் கிடைப்பதாக எண்ணிக் கொண்டு, அதில் மேலும் மேலும் ஈடுபட்டு, துயரத்திற்குள்ளாகிறீர்கள். உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?
Being at home
ஒளிவு மறைவின்றி சொல்ல வேண்டும் என்றால், இதை உங்களால் முழுவதும் கட்டுப்படுத்த முடியாது. உங்களால், குழந்தையின் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் சில விஷயங்களை நீங்கள் வீட்டில் பயிற்சி செய்ய முடியும்.
நான் ஏற்கனவே சொன்னது போல், குழந்தையின் மற்றொரு பாதியை அடக்கி வைக்காதீர்கள். அது தன்னைப் பல வழிகளிலும் சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ளவும், அனுபவிக்கவும் விடுங்கள். போதிக்காதீர்கள்.
வெறுமனே குழந்தை தானாகவே இயல்பாக இருக்க அனுமதியுங்கள். தானே ஆராய்ந்து கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ள போதுமான வாய்ப்புக் கொடுங்கள். குழந்தைகள் சமூக நெறிப்படுத்தல்களால் தொடப்படாமல் இருக்கும் பொழுது இயற்கையாகவே அவர்களது சொந்த எல்லைக்குள் மிகவும் இயல்பாகவே இருக்கிறார்கள்.
நீங்கள், விளையாடிக் கொண்டிருப்பதையோ அல்லது கால் கட்டை விரலை வாயில் வைத்துச் சப்பிக் கொண்டோ அல்லது அதுபோன்ற வேறெதாவதைச் செய்து கொண்டோ இருப்பதைக் காணலாம். இவையெல்லாம் அவர்கள் வெறுமனே தங்கள் எல்லைக்குள் மிகவும் இயல்பாகவும், அன்புடனும், ஆராய்ந்து தெரிந்து கொண்டும் மகிழ்ச்சியாக இருப்பதையே காட்டுகின்றன. ஆனால் அவர்கள் இவற்றைச் செய்வதை நாம் அனுமதிப்பதில்லை. அவர்கள் இது
குழந்தைகள் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் அவர்களை அடக்கி வைக்காதீர்கள். போன்ற செயல்களைச் செய்யும் பொழுது நாம் உடனே அதைத் தடுத்து நிறுத்தி விடுகிறோம். அவர்களிடம் அது தவறு என்று சொல்கிறோம். அவர்கள் ஆராய்ந்து தெரிந்து கொள்வதை அனுமதிப்பது நல்லது.
அவர்களது ஆடைகள் என்று வரும் பொழுது, இரண்டு துண்டுகளாக இருக்கும் உடையை விட, எப்பொழுதும் ஒரே துண்டாக இருக்கும் உடையை அணிவிப்பது நல்லது. இரண்டு துண்டு உடைகள் உடலை இரண்டாகப் பிரிக்கும் ஒரு உணர்வைக் கொடுக்கும்; காலப்போக்கில் அவர்கள் உடலின் கீழ்ப்பாதியையே மறந்து உணர்ச்சியற்றும் போய் விடுவார்கள். அது கிட்டத்தட்ட விழிப்புணர்விலேயே ஒரு ஒரு பிரிவை உண்டாக்கி விடுகிறது. அதனால்தான் இன்று உங்களை மனதிற்குள் உருவகப் படுத்திக் கொண்டு பார்க்கச் சொன்னால், ஏறக்குறைய எப்பொழுதுமே உங்களுக்கு மேல் பகுதிதான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் உங்கள் கீழ்ப்பாதியை வெறுமனே அலட்சியப் படுத்தி விடுகிறீர்கள். குழந்தையை வெறுமனே அதன் வழிகளில் சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள் - அதற்காக நீங்கள் சில இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தால் கூட! குழந்தை களிடம் இயல்பாகவே ஒரு நுண்ணறிவும், உள்ளுணர்வும் இருக்கின்றன. அதனால் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அவர்களை ஆராய்ந்து தெரிந்து கொள்ள அனுமதியுங்கள்.
மேலும், குழந்தைகள் தங்களை முழுமையாக வெளிப் படுத்திக் கொள்கிறார்கள். அதனால் அவர்களை அடக்கி வைக்காதீர்கள். குழந்தைகளுக்கு விஷயங்களை மனதிற்கு கொண்டு வந்து அவற்றை மேலோட்டமாக வெளிப்படுத்துவதும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும் தெரியாது. நாம் மனதிலுள்ள பல விஷயங்களைத் தடைசெய்து உள்ளொன்று
குழந்தைகள் இரண்டு கைகளையும் சுதந்திரமாக உபயோகப்படுத்த அனுமதியுங்கள்.
வைத்துப் புறமொன்று பேசும் கலையில் தேர்ச்சி பெற்று விட்டோம். நாம் ஒரு போதும் முழுமையாக வெளிப் படுத்துவதில்லை.
அவர்கள் இரண்டு கைகளையும் சுதந்திரமாக உபயோகப் படுத்த அனுமதியுங்கள். அவர்கள் பல விஷயங்களுக்கு இடது கையை உபயோகப்படுத்துவதை நாம் ஊக்கப்படுத்துவதில்லை. குழந்தை ஏன் இரண்டு கைகளையும் உபயோகப்படுத்தக் கூடாது?! அதில் எந்தத் தவறும் இல்லை. மஹாபாரதத்தில், அர்ஜுனன் இரண்டு கைகளையும் உபயோகப்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவன் என்று சொல்லப்படுகிறது. அது உங்களுக்குத் தெரியுமா? நாம் இதுபோன்ற விஷயங்களைக் கேட்கும் பொழுது, மிகவும் வியப்புடன் கேட்கிறோம்; ஆனால் வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் நம்மாலும் இவையெல்லாம் முடியும் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம்!
இன்னொரு விஷயம் ... எல்லாக் குழந்தைகளும் சுழலுவதில் மகிழ்ச்சியடைவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவ்வாறு சுழல்வதன் முலம் அவர்களுக்குள் சக்தி மையங்கொள்வதை அனுமதிக்கிறார்கள். தொப்புளைச் சுற்றியுள்ள மணிபூரக சக்கரம் தூய்மையாக இருந்தால்தான் உங்களால் தடையில்லாமல் சுழல முடியும். குழந்தைகள் கள்ளங்கபடமற்றும், கவலையற்றும் இருப்பதால்தான் அவர்களால் எந்தவித முயற்சியும் இன்றி சுழல முடிகிறது. ஆனால், அவர்கள் சுழல்வதற்கு நாம் அனுமதிக்கிறோமா? அவர்கள் சுழல்வதைப் பார்த்தாலே நம் தலை சுற்ற ஆரம்பித்து விடுவதால் நாம் அவர்களைத் தடுத்து நிறுத்தி விடுகிறோம்! நாம் அவர்களை ஒரு இடத்தில் உட்காருமாறு சொல்கிறோம்! அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
மஹாபாரதத்தில், அர்ஜூனன் இரண்டு கைகளையும் உபயோகப்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவன் என்று சொல்லப்படுகிறது. அது உங்களுக்குத் தெரியுமா ?
நான் சொல்கிறேன், அவர்கள் சற்று சுழல்வதற்கு அனுமதியுங்கள். அவர்கள் காலடியில் ஒரு கம்பளத்தைப் போட்டு வையுங்கள்; கீழே விழுந்தாலும் அடிபடாமல் இருக்கும்.
இன்னொரு விஷயம் ... ஒருபோதும் உங்கள் குழந்தை களிடம் பயத்தைப் புகுத்தி விடாதீர்கள் அவனைச் சுதந்திர மாக இருக்க விடுங்கள்; அவன் மேலே ஏறிச் சில தடவை கீழே விழட்டும். நீங்கள் தொடர்ந்து குழந்தையை அதைரியப் படுத்திக் கொண்டேயிருந்தால், அது உயரத்தைக் கண்டால் பயம், இருட்டைக் கண்டால் பயம் போன்ற பல பயங்களுக்கு இட்டுச் செல்லும்.
அதுவே பிற்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறு வதற்கும், தெரியாத புதிய முடிவுகளை எடுப்பதற்கும், இன்னும் பலவற்றிற்கும் பயமாக உருவெடுக்கும். வெறுமனே இந்த சில விஷயங்களைப் பின்பற்றுங்கள். அதுவே போதும்.
ஸ்வாமிஜி, நீங்கள் முழுமையான வாழ்க்கைத்துணை என்று எதுவும் கிடையாது என்று சொன்னீர்கள். பிறகு திருமணத்திற்கு முன்பு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதன் நோக்கம் என்ன ?
இப்பொழுது இந்த விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், ஜோதிடத்தின் முழு அமைப்பையும் இழுக்க வேண்டும் ! ஜோதிடத்தை இன்று நாம் பின்பற்றும் விதம்தான் மிகவும் முட்டாள்தனமானதும் அபத்தமானதும் ஆகும்.
புரிந்து கொள்ளுங்கள்… இது உங்கள் வாழ்க்கை, இதை நீங்கள் வாழ்கிறீர்கள், உங்களுக்குத்தான் சாதக பாதகங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு, உங்கள் வாழ்க்கையைப் பற்றி
ஒரு போதும் உங்கள் குழந்தைகளிடம் பயத்தைப் புகுத்தி விடாதீர்கள்.
எதுவும் தெரியாது, நீங்கள் மற்றவர்களிடம் சென்று கேட்கிறீர்கள்! உங்களுடைய அறிவு எங்கே போயிற்று ?
உங்கள் வாழ்க்கையை முன்பின் அறிமுகமற்றவர்களிடம் ஒப்படைப்பதும், அவர்களை உங்கள் வாழ்க்கைக்கான முடிவுகளை எடுக்க விடுவதும், உங்கள் சொந்த வாழ்க்கையை நடத்துவது எப்படி என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. வாழ்க்கைக்கான பொறுப்பை நீங்கள்தான் ஏற்க வேண்டும்.
மக்கள் என்னிடம் அவர்களது எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளுடன் வரும் பொழுது, நான் அவர்களிடம் சொல்லுவேன், உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஆருடம் சொல்வதற்காக என்னிடம் வராதீர்கள். உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வடிவமைத்துக் கொடுக்க என் உதவி வேண்டுமானால் என்னிடம் வாருங்கள். இந்த ஆருடங் களெல்லாம் பலவீனமான மனது உடையவர்களுக்கே என்பதில் மிகவும் தெளிவாக இருங்கள்.
பண்டைய காலத்தில் ஜோதிடம் ஒரு தூய அறிவியலாக இருந்தது. சொல்கிறேன். கடந்த காலத்தில், ஒரு குழந்தை குருகுலத்திற்கு, ஒரு குருவிடம் கல்வி கற்க அனுப்பப்பட்டவுடன் அந்தக் குழந்தையின் இயல்பு எவ்வாறு இருக்கும், அதன் மனோபாவம் எவ்வாறு இருக்கும், அவனிடம் இருக்கும் இயல்பான திறன் என்ன என்பதைக் கணிப்பதற்கு ஜோதிடம் பயன்படுத்தப்பட்டது. அதற்கேற்றாற் போல் அவனுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இதைப் போன்றே, முற்காலத்தில், சாதிப் பாகுபாடுகள் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல; அவை ஒரு மனிதனின்
தெளிவாக இருங்கள் ... உங்கள் சொந்த வாழ்க்கைக்கான பொறுப்பை நீங்கள்தான் ஏற்க வேண்டும்.
குணநலன்களை, ஒரு மனிதனில் இயல்பான திறமைகளை அடிப்படையாகக் கொண்டது.
ஒரு பையன் குருகுலத்தில் சேர்க்கப்பட்டவுடன், குரு அவனது இயல்பான சுபாவம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பார். அவனிடம், அறிவுக் கூர்மை முக்கிய அம்சமான பிராமணத் தன்மை சார்ந்த சுபாவம் இருக்குமானால், அவனுக்கு வேத சம்பந்தமான நூல்களைப் படிப்பதற்கான 'வேத வித்யா' தீட்சை கொடுக்கப்படும். அவனிடம் க்ஷத்ரிய இயல்புகளான வீரமும் மிகவும் மேலோங்கி இருக்குமானால், அவனுக்குப் போர்க்கலையில் பயிற்சி அளிக்கப்படும். அவன் பல திறமைகளைக் கொண்ட வைசிய குணநலன்களைக் காட்டுவானாயின், அவனுக்கு வியாபாரம் கற்றுத் தரப்படும். அவனிடம் ஒரே வேலையை சந்தோஷமாகச் செய்து கொண்டிருக்கும் சூத்திர குணங்கள் இருக்குமானால், அவனுக்குப் பிறருக்குப் பயன்படும் வேலைகளைச் செய்யப் பயிற்சி அளிக்கப்பட்டது. நான்கு நான்கு பிரிவுகளுக்கும் சம மதிப்பும் சம மரியாதையையும் கொடுக்கப்பட்டது.
ஜோதிடம் இதற்காகத்தான் பயன்படுத்தப்பட்டது. அது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதற்காக உபயோகப் படுத்தப்பட்ட ஒரு அறிவியல். இன்று உங்களைச் சுற்றிப் பாருங்கள். ஏறக்குறைய எல்லாருமே தவறான இடங்களிலேயே இருக்கிறார்கள். மருத்துவரின் இயல்பைக் கொண்ட ஒருவர் பொறியாளராகவும், பொறியாளர் இயல்பைக் கொண்ட ஒருவர் உதவியாளராகவும் இருக்கிறார்கள்! அதனால்தான் சமூகத்தில் எல்லாமே குழுப்பமாக இருப்பதாக ஒரு உணர்வு ஏற்படுகிறது. இயல்பாகவே வியாபாரத்தில் நாட்டமுள்ள ஒருவர் ஆன்மீகத்திற்குள் நுழைந்தால் என்ன நடக்கும் ? ஆன்மீகம் வியாபாரமாகி விடும்.
நீங்கள் உயிருள்ள விழிப்பணர்வு -நீங்கள் கடவுளைத் தவிர வேறல்ல.
அப்பொழுது, பண்டைய ஜோதிடம் ஒரு நிரூபிக்கப் பட்ட அறிவியல்தானே, ஸ்வாமிஜி?
அதுதான் எனக்கு பயமாக இருக்கிறது! நான் ஆம் என்று சொன்னால், உடனே நீங்கள் அனைவரும் அதன் பின் ஓட ஆரம்பித்து விடுவீர்கள்! நாளை காலை மக்கள் ஒரு நீண்ட வரிசையில் கையில் ஜாதகங்களுடன் என்னிடம் வந்து, "ஸ்வாமிஜி தயவுசெய்து இதை வெறுமனே பார்த்து எங்கள் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்!''.
நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம்.. ஜோதிடத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்படாதீர்கள்!
விவேகானந்தா் ஒரு முறை, யாரோ அவரிடம் ஜோதிடத்தைப் பற்றிக்கேட்ட கேள்விக்கு மிகவும் பொருத்தமான ஒரு பதிலைக் கூறியிருக்கிறார். அவர் சொல்கிறார், "போ, நன்றாக சாப்பிடு, நன்றாக உடற்பயிற்சி செய், நன்றாகத் தூங்கு. நீ உடலளவிலும், மனதளவிலும் வலிமையானவனாகி விடுவாய். பிறகு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டாய்!''.
மனதளவில் பலவீனமாக இருக்கும் ஒருவனே, இந்த அளவிற்கு ஜோதிடத்தைச் சார்ந்திருப்பான்.
ஸ்வாமிஜி, அப்படியென்றால் ஜோதிடத்தைப் பின் பற்றும் அனைவருமே பலவீனமான மனது உடையவர்களா ?
இல்லை. அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் பெரும் பாலானவர்கள் பலவீனமான மனது உடையவர்கள். சாதாரண மாக அறிவுக் கூர்மையுள்ளவர்கள் கூட சில சமயங்களில் இந்த விஷயங்களில் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் என்னிடம் வந்து கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி, நான் இந்தக் கல்லை
தேவாலயத்தில் பிறப்பது நல்லதுதான், ஆனால் அங்கேயே இறப்பது அல்ல.
அணிந்தால், எனக்கு அதிர்ஷ்டமாக இருக்குமா?''. நீங்கள் எப்படி ஒரு கல்லைச் சார்ந்து இருக்க முடியும்! நீங்கள் உயிருள்ள விழிப்பணர்வு; நீங்கள் கடவுளைத் தவிர வேறல்ல! என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை, நான் உங்களுக்கு இந்த முழு பிரபஞ்ச சக்தியையும் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற அறிவியலைப் போதித்துக் கொண்டிருக்கிறேன்; நீங்கள் கற்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!
நீங்கள், ஸ்வாமி யதீஸ்வரானந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கக் கூடும். அவர் ஒரு சிறந்த மனிதர், ஞானமடைந்தவர். அவர் முதன் முதலாக வெளிநாட்டிற்குச் சென்ற பொழுது, கிரஹங்களின் நிலையைக் கொண்டு கணக்கிடப்படும் ஒரு நாளின் அமங்கலமான நேரம் என்று சொல்லப்படும், ராகு காலத்தில் கிளம்பினார். யாரோ ஒருவர் அவரிடம் கேட்டார், ''ஸ்வாமிஜி, நீங்கள் எப்படி ராகு காலத்தில் கிளம்புகிறீர்கள்''. அவர் சொன்னார், ''முட்டாள்! கிரஹங்களையே வழிநடத்தும் சக்தி நான்! அவை எப்படி என்னைக் கட்டுப்படுத்தும் ? ''.
அந்த மனிதரின் தைரியத்தைப் பாருங்கள்! அந்த தைரியம் ஆழ்ந்து புரிந்து கொள்ளுதலில் இருந்து வருகிறது.
நீங்கள் கிரஹங்களையே கட்டுப்படுத்தக் கூடிய அறிவியலை, நான் உங்களுக்குப் போதித்துக் கொண்டிருக் கிறேன்! நீங்கள் ஏன் கிரஹங்கள் எங்கே இருக்கின்றன, அவை எப்படி உங்களை பாதிக்கும் என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? தியான அறிவியலை எடுத்துக் கொள்ளுங்கள், அதுவே போதுமானது. பிறகு எதுவுமே உங்களைத் தொட முடியாது.
ஆனால் அது எங்களுடைய மதிப்பீடு-அமைப்பில் ஒரு பகுதியாக ஆகிவிட்டதே, ஸ்வாமிஜி...
மிகத் தெளிவாக இருங்கள்... எல்லா மதிப்பீடுகளுமே விழிப்புணர்விற்கு ஒரு மாற்றுதானே தவிர வேறல்ல.
நீங்கள் விழிப்புடன் இருந்தால், என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்து செய்தால், என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்கு மதிப்பீடுகள் தேவையில்லை. நீங்கள் எந்த விதமான விதிகளையும் பின்பற்ற வேண்டியதில்லை; விதிகள் உங்களைப் பின்தொடரும்! எல்லா நற்பண்புகளும், ஒழுக்கமும், ஆன்மீகமும் உங்களிடம் நிகழும்; நீங்கள் இயல்பாகவே ஆன்மீகத்தில் ஒரு உயர்ந்த நிலையில் மலர்வீர்கள்.
எப்படியோ, நாம் விழிப்புணர்வு அல்லது ஆன்மீக உயர்வு போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே, அது நமக்கல்ல என்றே எப்பொழுதும் நினைக்கிறோம்! எந்த விதமான தியான முறையையோ, வழிகளையோ முயற்சி கூடச் செய்யாமல், அது நமக்கல்ல என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். அதனால் அதற்கு மாறாக ஒழுக்கம், மனசாட்சி, மதிப்பீடுகள் என்று அழைக்கப்படும் பொய்யான விழிப்புணர்வை நாடிச் செல்கிறோம்.
ஆரம்ப நிலையில் மதிப்பீடுகள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இறுதி நிலையாக அல்ல!
விவேகானந்தா் அழகாகச் சொல்கிறார், ''தேவாலயத்தில் பிறப்பது நல்லதுதான், ஆனால் அங்கேயே இறப்பது அல்ல!".
நாம் முதலில் ஆன்மீகத்தில் இருப்பது மிகவும் கடினமானது, வித்தியாசமானது என்ற எண்ணத்தை விட வேண்டும்.
பகவான் ரமணரின் பாடல் ஒன்று இருக்கிறது :
"அய்யே, அதி சுலபம், ஆத்ம வித்யை, அய்யே, அதி சுலபம்!''
நீங்கள் நீங்களான இருப்பதற்கு என்ன தேவை ? அது கடினமா அல்லது சுலபமா?
அதன் பொருள், ''ஓ, மிக சுலபம், இந்த ஆன்மீகம் ஓ, மிக சுலபம்''
பின்னர் வரும் இன்னொரு பகுதியில் அவர் சொல்கிறார்.
"நீங்கள் பணத்தை விரும்பினால், கடினமாக உழைக்க வேண்டும். உங்களுக்கும் பெயரும் புகழும் வேண்டு மென்றால், கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் தன்னை உணர வேண்டும் என்று விரும்பினால், செய்ய வேண்டிய தெல்லாம் அமைதியாக இருத்தலே!''.
உங்களால் ஆழமான சோம்பல்தனத்திற்குள் நழுவ முடியுமானால், நீங்கள் தெய்வீகத்திற்குள் விமுந்து விடுவீர்கள். இந்த சோம்பல்தனம், நமக்குத் தெரிந்த வழக்கமான சோம்பல் தனம் அல்ல. இது உடலைச் சார்ந்த சோம்பல்தனம் அல்ல. இது ஒரு வகையான மனம் சார்ந்த சோம்பல்தனம்! உங்களால் முழுமையாக - முழுமையாக என்றால் முழுமையாக - சலனமற்று அமைதியாக இருக்க முடியுமென்றால், உங்களால் நிச்சயமாக ஆன்மீகத்திற்குள் இருக்க முடியும்.
ஆன்மீகத்திற்குள் இருப்பது சுலபமும் அல்ல கடினமும் அல்ல. அது உங்களுடைய வெறும் கருத்து மட்டுமே. அது சுலபம் என்று நீங்கள் நினைத்தால், அது சுலபம். அது கடினம் என்று நீங்கள் நினைத்தால், அது கடினம். நீங்கள் நீங்களாக இருப்பதற்கு என்ன தேவை ? அது கடினமா அல்லது சுலபமா ?
சுலபம் ஸ்வாமிஜி...
நீங்கள் சுலபம் என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்க முடியாது! அது நாம் இருப்பது போலவே இருப்பது! நீங்கள் ஏற்கனவே அதுவாகத்தான் இருக்கிறீர்கள். பிறகு நீங்கள் எவ்வாறு
இச்சையை அன்பாக மாற்றும் முறை ஒரு இரசவாத முறை.
அதுவாக ஆவது சுலபம் என்று சொல்ல முடியும் ? வெறுமனே உள்ளே பாருங்கள். உள்நோக்கித் திரும்புங்கள். ஆன்மீகத்தின் மீது கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் தியானம், அதுவே போதும்! ஆன்மீகத்திற்குள் இருப்பது மிகவும் கடினம் என்ற பயத்தை விட்டாலே, ''அம், என்னால் ஆன்மீகத்திற்குள் இருக்க முடியும். என்னால் விழிப்புடன் இருக்க முடியும்' என்ற நம்பிக்கை ஏற்படும். பிறகு, 'என்னுடைய மதிப்பீடுகளை விட்டு விடுவது சரிதானா' என்ற கேள்வியே எழாது.
பற்றிக் கொள்வதற்கு எதுவுமில்லாததால், இப்பொழுது உங்கள் மதிப்பீடுகளை விட்டுவிட அஞ்சுகிறீர்கள்! ஒரு முறை நமது மதிப்பீடுகளை விட்டு விட்டால், அடக்கப்பட்ட எல்லா ஆசைகளும் வெளியே வந்து விடும், பண்டோராவின் பெட்டி திறந்து கொள்ளும் என்பது நமக்குத் தெரியும்! பண்டோராவின் பெட்டி திறந்து கொண்டால், குழப்பம் மட்டுமே மிஞ்சும் என்பதும் நமக்குத் தெரியும்! அதனால் நாம் நமது உள் மனதைக் கண்டு அஞ்சுகிறோம். உள்மனதைக் கண்டு படும் இந்த அச்சமே, இந்தக் கேள்வியைத் தூண்டுகிறது.
நீங்கள் தொடர்ந்து தியானப் பயிற்சி செய்வீர் களானால், உங்களுடைய உள்மனம் தூய்மையாக்கப்பட்டு விடும். அதன்பிறகு, நீங்கள் பண்டோராவின் பெட்டியைத் திறந்தால் கூட, அதிலிருந்து வெளியே வர எதுவும் இல்லாததைக் காண்பீர்கள். உங்கள் முகம் அதில் பிரதிபலிப்பதைக் காண்பீர்கள்; நீங்கள் ஒரு தெளிவான கண்ணாடியைக் காண்பீர்கள்! நான் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறதா ?
சரி ... நாம் இப்பொழுது துக்கஹரணா என்று அழைக்கப் படும் தியான முறைக்குள் நுழைவோம். அது மூலாதார சக்கரத்தின் மீது செயல்பட்டு அதில் உள்ள சக்தியை எழுப்பும்.
Pandora's Box - எதிர்பாராத பிரச்சினைகளின் மூலம் (கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதை போல)
துக்கஹரணா தியானம்
(நீடிக்கும் நேரம்: 31 நிமிடங்கள்)
இந்த தியான முறைக்கு துக்க ஹரணா என்று பெயர். இது உங்களுக்குள் அடக்கி வைக்கப்பட்டுள்ள எல்லா உணர்ச்சிகளையும் வெளியே கொண்டு வந்து விடும். இதற்கு முன்னும் பல குருமார்கள் இந்த உத்தியை உபயோகப்படுத்தியிருக்கின்றனர். இதைச் செய்வதற்கு ஆகும் நேரம் 31 நிமிடங்கள்.
மூச்சு விடுதலே நமக்கு இந்தப் பிரபஞ்சத்துடனான இணைப்புப் பாலமாக இருக்கிறது. இது நாம் மனம் போல் வாழும் ஒரு அமைப்பு. உங்களுடைய எண்ணம் அமைதியாக இருக்குமானால், மூச்சு தளர்வாக இருக்கும். ஆக்கிரமிப்பான சிந்தனை இருக்குமானால், மூச்சும் ஆக்கிரமிப்பாகவே இருக்கும். அதனால் மனதைக் கட்டுப் படுத்த வேண்டுமானால், முதலில் மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தற்சமயம், அடக்கி வைக்கப்பட்ட நிலையில், நம்மில் பலர் அரை உயிருடனும், அரைப் பிணமாகவுமே இருக்கிறோம். இந்த தியானத்தின் முதல் பகுதியில், உங்களுடைய அடக்கப் பட்ட அமைப்பில் ஒரு கடையும் விளைவை உருவாக்குவதற்காக ஆழமான சுவாசம் மேற்கொள்ளப்படுகிறது. உள் எடுத்துக் கொள்ளப்படும் பிராண வாயு அதிகரிக்கப்படுவதால், உங்களுடைய மன அமைப்பு முழுவதுமாக உயிரூட்டப்படுகிறது; அது மிகவும் இன்றியமையாததாகிறது. உங்கள் உடலிலுள்ள செல்களுக்கு அதிக சக்தி கிடைத்து, அவை அதிக உயிர் மின்சக்தி அல்லது உயிர்-சக்தியை உருவாக்குகிறது. இந்த சக்தியானது எல்லா அடக்கப்பட்ட உணர்ச்சி
களையும் பனி உருகுவது போல் உருக்கிக் கரைத்து விடுகிறது. இது மூலாதார சக்ரத்தை விசிறி விடுவதைப் போலாகும்.
இந்த முறையை வெறும் வயிற்றில் காலை வேளையில் பயிற்சி செய்வது சிறந்தது. 21 நாட்கள் துக்க ஹரணா செய்வது உங்கள் இருப்புத் தன்மையையே மாற்றமடையச் செய்து, உங்கள் முகத்திலும், உடலிலும் ஒரு பொலிவை ஏற்படுத்தி விடும். இது ஒரு உளவியல் ரீதியான குளியலைப் போன்றது. உங்களுக்குள் இருக்கும் அமைதியை உணர முடியும். உங்களுக்குள் இருக்கும் துக்கத்தைக் கொன்று விட்டால் ஆனந்தம் தானே மலர்ந்து, உங்களிடமிருந்து ஒரு அற்புதமான நறுமணம் வீசும்.
கண்களை ஆழத்திலிருந்து, ஆழமாகவும் லயத்துடனும் மூச்சு விடவும்; எப்பொதும் வாய் மூடி நாசி வழியாகவே சுவாசிக்கவும். கைகளை அசைத்து முழங்கால்களை வளைத்து பாதி உட்கார்ந்த நிலைக்குச் சென்று, பிறகு எழும்பவும். பறந்து கொண்டிருக்கும் ஒரு பறவையைப் போல கைகளை மேலும் கீழும் அசைத்து, முழங்கால்களை மேலும் கீழுமாக உட்கார்ந்து எழும்பி, இவையனைத்தையும் சுவாசத்துடன் இணைந்து ஒரே லயத்தில் செய்யவும்.
மென்மையாகவும். அசைவுகளை மேலெழும்பும் பொழுதும் ஒத்திருக்குமாறு இணைந்து செய்யவும். உங்களுக்கு இதய சம்பந்தமான பிரச்சினைகள் ஏதாவது இருக்குமானால், முடிந்த வரையில் செய்யுங்கள். அதே போல், காப்பிணிப் பெண்களும் மற்ற உடற்கோளாறு உள்ளவர்களும் முடிந்த
வரையில் செய்தால் போதுமானது. இதை 10 நிமிடங்களுக்குச் செய்யவும்.
அடுத்த 10 நிமிடங்களுக்கு, கண்களை மூடி, உடலின் ஒவ்வொரு பகுதியையும், பகுதி பகுதியாக, ஒவ்வொரு அவயமாக, இறுக்கம் ஏற்படுத்தி, பிறகு தளர விடவும்; ஒரு அவயத்தை இறுக்கி, பிறகு தளர்த்தி, பின்னர் அடுத்த அவயத்திற்குச் செல்லவும். பாதங்களில் ஆரம்பியுங்கள்; கால்களுக்குச் செல்லுங்கள்; பிறகு தொடைக்குச் செல்லுங்கள்; அடுத்து இடுப்பு; பிறகு வயிறு மற்றும் கீழ் முதுகு; பிறகு மார்பு மற்றும் மேல் முதுகு; பிறகு உங்கள் கைகள், விரல் நுனியில் இருந்து தோள் வரை; பிறகு கழுத்து மற்றும் தோள் பட்டை; அடுத்து முகம்; இறுதியாக உச்சந்தலை. அடுத்த பகுதிக்குச் செல்வதற்கு முன், உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் தளர்த்திக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதிக்குமான ஐஸோமெட்ரிக் பயிற்சி போன்றது.
இந்த 10 நிமிடங்களின் இறுதியில், நீங்கள் உள்ளே காலியாகி விடுவீர்கள்; மேலும் நீங்கள் குளிர்ந்தும், அமைதியாகவும், ஒன்றுபட்டும் விடுவீர்கள்.
அடுத்த 10 நிமிடங்களுக்கு, கண்களை மூடி, அமர்ந்து, வெறுமனே 'ஹு' என்ற வார்த்தையை, 'ஹுு' என்ற சப்தத்தை எழுப்பவும். இதை ஆழமாகவோ, உரக்கவோ உச்சரிக்கத் தேவையில்லை. வெறுமனே சாதாரணமான குரலில் உச்சரிக்கவும். உச்சரிக்கும் பொழுது, உங்கள் இருப்புத்தன்மைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ எது நிகழ்ந்தாலும், அதற்கு வெறுமனே சாட்சியாக இருக்கவும்.
இந்த முறையில், முதல் இரண்டு பகுதிகளுமே, இந்த மூன்றாவது பகுதியான, உண்மையான தியானத்திற்கான, தயார் செய்தல்தான். இந்த மூன்றாவது பகுதிக்கு வரும் பொழுது, மனம் தானாகவே எந்த வித முயற்சியும் இன்றியே அமைதியாகி விடுவதைக் காண்பீர்கள். அமைதியைத் திணிக்க முடியாது; அது தானாகவே நிகழ வேண்டும்.
இந்தத் தளர்வான நிலையிலேயே புன்னகை தவழும் முகத்துடன் ஆனந்தமயமான மனை மனோநிலையில் இருக்கவும். இந்தச் சமயத்தில் நிறைய அனுபவங்கள் ஏற்படலாம்; அவற்றை வெறுமனே ஒரு தொலைக்காட்சியைப் பார்ப்பது போல் பார்க்கவும். உங்கள் மனதில் எழும் ஒவ்வொரு எண்ணத்தையும் கவனிக்கவும்.
இந்த தியானம் செய்யும் பொழுது, எப்பொழுதும் மூலாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டாம்; ஏனெனில் அது நாம் அகற்ற முயற்சி செய்யும் கட்டுப்பாடற்ற கற்பனைகளையே மேலும் உருவாக்க வழிவகுக்கும்.
10 நிமிட 'ஹு' சப்தத்திற்குப் பிறகு, ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்திருக்கவும்; பிறகு உங்கள் கண்களைத் திறக்கவும் .
(பங்கேற்பாளர்கள் இசையுடனான தியானத்தைச் செய்கிறார்கள்)