ஸ்வாமிஜி, எவ்வாறு இச்சையை விட்டுவிட்டு அன்பைப் பேணி வளா்ப்பது ?
சரி .... நீங்கள் இறுதியில் சரியான விஷயத்திற்கு வந்து விட்டீர்கள் ... இச்சையும் கோபத்தைப் போன்றே ஒரு மிகப்பெரும் சக்தி. உண்மையில், 'இச்சை என்பது என்ன, அதை எவ்வாறு உருமாற்றமடையச் செய்வது ?' என்பதைப் புரிந்து கொள்ளும்வரையில், நீங்கள் இச்சையுடையதாகத்தான் இருக்கும். நீங்கள் ஒரு பேனாவை எடுத்தால் கூட அதில் இச்சை இருக்கிறது; நீங்கள் ஒரு சிறு குழந்தையைக் கொஞ்சினால் கூட அதில் இச்சை இருக்கிறது; அதில் கொஞ்சம் மிருக இயல்பும் இருக்கிறது. ஏனெனில் உங்களுடைய சக்தி இன்னும் கீழான நிலையிலேயே இருக்கிறது, உயர்நிலைச் சக்தியாக உருமாற்றமடையவில்லை.
எவ்வாறு கோபத்தைப் பற்றிய அறிவு கோபத்தைக் குறைக்கிறதோ, அதேபோல, இச்சையைப் பற்றிய அறிவும் இச்சை யைக் குறைக்கிறது; ஏனெனில் இரண்டும் ஒரே சக்திதான்! இச்சை மற்றும் காமத்தைப் பற்றிய பிரச்சினை என்னவென்றால், அது பெரிதாக்கப்பட்டு, இருப்பதை விட மிக அதிகமாகக் கற்பனை செய்யப்படுகிறது. அடக்கி வைக்கப்படுவதால், அது இருப்பதை விட மிகப் பெரிதாகச் செய்யப்பட்டு விட்டது. அங்கு தான் முழுப் பிரச்சினையும் ஆரம்பமாகிறது. அது ஊடகங்களால் மிகப் பெரிய அளவில் மாசுபடுத்தப்பட்டு விட்டது.
பிரச்சினை என்னவென்றால் வாழ்க்கைக்குப் பின்னணி இசை கிடையாது!
மேலும் உங்களுடைய இச்சை மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படாத போது, அது அந்த மனிதனுக்கெதிரான கோபமாக மாறி விடுகிறது. அதனால்தான் நீங்கள் செய்தித் தாள்களில், இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் தங்களை ஏற்றுக் கொள்ளாத இளம் பெண்களின் முகத்தில் அமிலத்தை வீசி விட்டதாகச் செய்திகளைப் படிக்கிறீர்கள்.
பாருங்கள் ... புரிந்து கொள்ளுங்கள்... சமூகம் எப்பொழுதுமே கீழான மனிதா்கள், மேலான மனிதர்கள் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடுகிறது. தீவிரமான ஆசைகள் உள்ள எவருமே கீழான மனிதர் எனப் படுகிறார்; தீவிர இச்சை உள்ள எவருமே கீழான மனிதர் எனப் படுகிறார். கீழ், மேல் என்றெல்லாம் எதுவுமில்லை; உருமாற்றம் நிகழ வேண்டும், அவ்வளவுதான்.
இந்த ஒழுக்க நியதிகளை வகுக்கும் மக்கள் அனைவருமே ஒழுக்கவாதிகளாக நடிப்பவர்களே. அவர்கள் ஒவ்வொரு வருக்குப் பின்னாலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இச்சையும், தீவிரமான உணர்ச்சிகளும் ஏராளம். அவர்கள் பயத்தின் காரணமாகவோ அல்லது குற்ற உணர்வின் காரண மாகவோ இந்த உணர்ச்சிகளின் பின்னால் செல்லாமல், ஒழுக்க வாதிகளாகக் கடந்து சென்று விடுகிறார்கள். இது கீழானது, இது மேலானது என்கிற நியதிகளை வகுப்பவர்கள் இவர்களே. சமூகத்தின் எல்லாத் துயரங்களுக்கும் காரணம் இவர்களே.
தாழ்வு, உயர்வு என்று எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தாழ்ந்தவர் என்ற எண்ணம் வந்து விட்டால், அந்த எண்ணத்துடன் போராட ஆரம்பித்து விடுகிறீர் கள். அதை வெல்வது மிகவும் கடினமாகி விடுகிறது; உருமாற்றம் நிகழ்வதும் கடினமாகி விடுகிறது.
உங்கள் கணவனோ அல்லது மனைவியோ கடவுளின் ஒரு படைப்பு. உங்கள் படைப்பு கடவுளின் படைப்புடன் போட்டியிட முடியாது.
நீங்கள் எதிர்க்கும் எதுவும் பிடிவாதமாகத் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும். வெறுமனே உங்கள் உணர்வு உருமாற்றமடைய அனுமதியுங்கள். அது நிகழும். உங்களுக் குள் வெறுமனே விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள். நீங்கள் உருமாற்றமடைந்து விடுவீர்கள். ஒருபோதும் ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள் ; ஆராய்தல் பிரிக்க மட்டுமே செய்யும். அது உங்களை இரண்டு பாதியாகப் பிரித்து விடும்; அவையிரண்டும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு இருக்கும். சமூகம் எப்பொழுதும் உங்களைப் பிரிக்கவே பார்க்கிறது.
ஆராய்தல் விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உரியது; ஆன்மீக வளர்ச்சிக்கல்ல. நீங்கள் ஆராய்வதற்கும், கூறுபோட்டுப் பார்ப்பதற்கும் மிகவும் பழகி விட்டதால், உங்களால் அதை எந்தச் சூழ்நிலையிலும் விட்டு விடுதல் இயலாத காரியம். மக்கள் உங்கள் மீது தாழ்வு மனப்பான்மை அல்லது உயர்வு மனப்பான்மையை சுமத்த முயற்சி செய்யும் போது, இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நாம் ஒவ்வொருவருமே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதிதான்; யாரும் யாருக்கும் உயர்ந்தவர்களோ அல்லது தாழ்ந்தவர்களோ இல்லை. இந்த உண்மையை நீங்கள் மறக்கும் பொழுதுதான், இது போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறீர்கள்.
உங்களுடைய இச்சையைப் பற்றிய கேள்விக்கு வருவோ மாயின், அன்பு மட்டுமே இருக்க முடியும், இச்சை ஒருபோதும் இருக்க முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதுதான் உண்மை. இச்சை, ஆழமான அறியாமையின் விளைவு.
இச்சையை அன்பாக மாற்றும் முறை, ஒரு இரசவாத முறை. கீழான ஒரு உலோகத்தை உயர்வான ஒரு உலோகமாக
சுகந்திரமாகச் சார்ந்திருங்கள்!
மாற்றும் முறைக்கு இரசவாதம் என்று பெயர். அதே போன்று, கீழான உணர்வான இச்சையை, நம்மால் முடிந்த, மிகவும் உயர்வான ஒரு உணர்வான அன்பாக மாற்றுவதும் ஒரு இரசவாத முறைதான். அதுவே இறுதியான இரசவாதமாகும்.
நான் இமயமலையில் அலைந்து திரிந்து கொண்டு இருந்த போது, எனக்கு நடந்த ஒரு உண்மையான நிகம்ச்சியை உங்களுக்கு விளக்குகிறேன்.
இமயமலையில், நான் வெறுமனே மனம் போனபடி நடந்து கொண்டிருப்பேன். என்னுடைய பொருட்கள் என்று சொல்லத் தக்கவை மிகவும் சொற்பமானதுதான். அலைந்து திரிந்து விட்டு இரவு எங்கு வேண்டுமானாலும் தூங்கி விடுவது வழக்கம். அந்தச் சமயத்தில் நிறைய சாதுக்களைச் சந்தித்தேன். அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், மிகவும் குறைவான உடைகளுடன், சடைமுடியுடன், தீவிரமான தோற்றத்துடன் ஒரு சாதுவைச் சந்தித்தேன். அவர் ஒரு நாகா பாபா-சாதுக்களில் நாகா எனப்படும் பிரிவைச் சேர்ந்தவர். நான் எப்படியோ அவரால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் சென்றேன். அப்பொழுது எனக்கு அவ்வளவாக ஹிந்தி பேச வராதாயினும், அவரிடம் உடைந்த ஹிந்தியில் பேசிச் சமாளித்தேன். அவருடன் சில நாட்கள் இருந்தேன். நாள் முழுதும் அவர் அவருடைய வூக்காவைப் புகைக்குத் கொண்டிருப்பார். நான் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் செய்வதைக் கண்டு ஆச்சரிய மடைந்தேன். அவருடைய ஹூக்காவில் இரண்டு தாமிரக் காசுகளை போட்டு, சிறிது நேரம் புகைத்து விட்டு, அந்தக் குழாயில் இருப்பதைக் கீழே கொட்டினால் அதிலிருந்து இரண்டு தங்கக் காசுகள் வெளியே விழும்! அவர் கடைத் தெருவிற்குச் சென்று, அந்த இரண்டு தங்கக் காசுகளை விற்று விட்டு, இன்னும் நிறைய தாமிரக் காசுகளை
கணவன் மனைவிக்கிடையே உள்ள எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு மந்திரத்தை என்னால் கொடுக்க முடியுமானால், நான்தான் இந்த உலகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மனிதனாக இருந்திருப்பேன்!
வாங்கிக் கொண்டு வந்து, இதே முறையைத் திரும்பவும் செய்வார்! நான் அவரிடம் இது எவ்வாறு நிகழ்கிறது என்று கேட்டேன்; அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் வெறுமனே அந்தக் குழாயை என்னிடம் கொடுத்தார். ஆனால் புகையிலையின் மணம், மது ஆகியவை எப்பொழுதும் என் உடலுடன் ஒத்துப் போகாததால், நான் சில அடிகள் பின்னால் நகர்ந்தேன். நான் இமயமலைக்கு வர்கது தியானத்திற்காகவும் ஞானத்திற்காகவும்தானே தவிர, புகை பிடிப்பதிலோ, தங்கக் காசுகளின் மீதோ எனக்கு ஆர்வம் இல்லை என்று நான் அவரிடம் சொன்னேன். அவர் என்னைப் பார்க்கு முதன்முறையாகத் தமிழில் பேசினார், "அங்கம் பழுத்தால் தங்கம் பழுக்கும்'' - உங்கள் இருப்புத் தன்மை பழுக்குமானால் தங்கம் பழுக்கும். நான் வார்த்தையற்றுப் போனேன். அவர் விளையாட்டாக என் முகத்தில் புகை வளையங்களை ஊதி விட்டுச் சென்றார். அதன் பிறகு மூன்று நாட்கள் நான் ஆழமான தியானத்தில் திளைத்திருந்தேன்.
தாமிரத்தைத் தங்கமாக மாற்றுவது ஒரு இரசவாத முறை. அது வெளியுலக இரசவாத முறை. உள் உலகத்தில் இரசவாதம் என்பது நமது கீழ்நிலையிலுள்ள சக்திகளை உயர்நிலை அன்மீக சக்தியாக மாற்றுவது. கீழ்நிலைச் சக்திகளை உயர்நிலை ஆன்மீக சக்தியாக மாற்றும் கலையில் நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டால், உங்களால் தாமிரத்தைத் தங்கமாக மாற்ற முடியும். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. உள் இரசவாத முறையில் தேர்ச்சி பெற்று விட்டால், வெளி இரசவாதமெல்லாம் ஒன்றுமேயில்லை. அவை உங்கள் கைகளில் வெறும் குழந்தையின் விளையாட்டைப் போலாகி விடும்.
இந்த ஒரு சக்கரத்தை திறந்தாலே, உங்களது பாதி பிரச்சினைகள் மறைந்து விடுவதைக் காண்பீர்கள்.
நான் இந்தச் சம்பவத்தை உங்களிடம் சொன்னதன் காரணம், உங்களுக்கு இரசவாதத்தின் தத்துவத்தைப் புரிய வைக்கத்தானே தவிர நீங்கள் வெளியுலக இரசவாதத்தைப் பின் தொடர்வதற்காக அல்ல! அதைப் புரிந்து கொள்ளுங்கள். வெளியுலக இரசவாதங்கள் சாதாரண மானவை. உள்ளுலக இரசவாதமே உங்களை ஒரு உண்மையான குருவாக்குகிறது.
உலோகங்களுடனான இரசவாத முறையில் உண்மையில் என்ன நிகழ்கிறது? முதலில் கீழான உலோகத்தின் இருக்கும் மாசு கள் அகற்றப்படுகின்றன. பிறகு சில பொருட்கள் சேர்க்கப் பட்டு, பக்குவப்படுத்தப்படுகிறது. அதன் இறுதியில் கீழான உலோகம் உயர்ந்த உலோகமாக மாறி விடுகிறது.
நமது மிருக உணர்ச்சிகள் தெய்வீக உணர்ச்சிகளாக மாற்றப்பட வேண்டும். நம்மிடம் மிருக உணர்ச்சியாக இச்சை இருக்கிறது. இன்னொரு விஷயம் ... குறைந்தபட்சம் மிருகங்களிடம் இருப்பதாவது தூய இச்சையாக இருக்கிறது. உறவு கொள்ளும் போது அவை வெறுமனே முழு உலகையும் மறந்து விடுகிறது. ஆனால் நமக்கோ, நமது இச்சை கூட தூய்மையாக இல்லை. அது எப்பொழுதும் குற்ற உணர்வுடனும் ஆசைகளுடனும் இருக்கிறது.
கடந்த கால நெறிப்படுத்தல்கள் நம்மை குற்ற உணர்வடைய வைத்து, விலகிக் கொள்ள வைக்கின்றன அல்லது எதிர்காலத்தினுள் தொடர்ந்து செல்லும் தீவிரமான ஆசை நம்மை அதில் மேலும் ஈடுபட வைத்து, மீண்டும் குற்ற உணர்வையே உண்டாக்குகிறது. இழுபறியான இந்த கொடிய சூழலில் சிக்கிக் கொள்வதன் விளைவாக இச்சை மாசுபட்டு விடுகிறது; அது தூய்மையாக இல்லை.
சொர்க்கமும் நரகமும் புவியியல் ரீதியான இடங்கள் அல்ல. அவை உளவியல் ரீதியானவை.
ரீங்கள் கவனித்தீர்களானால், எப்பொழுதுமே, உங்களுடைய கற்பனையை நிறைவேற்றிக் கொண்ட உடனேயே, உங்களை ஒரு குற்ற உணர்வு சூழ்ந்து கொள்ளும். அதனால்தான் காமம் உங்களை குற்ற உணர்வடைய வைக்கிறது. நீங்கள் குழந்தையாக இருக்கும் பொழுதே, குடும்பம்தான் உங்களுக்குள் முதல் குற்ற உணர்வைப் புகுத்துகிறது. பிறகு, நீங்கள் குற்ற உணர்வை உருவாக்கிக் கொள்வதில் தேர்ச்சி பெற்று விடுகிறீர்கள்!
முதலில் குற்ற உணர்வைப் பரிந்து கொள்ளுங்கள். உங்களைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வர விரும்பும் எவரும், முதலில் உங்களுக்குள் குற்ற உணர்வைப் பகுத்து கின்றனர். ஏதோ ஒரு வகையில் நீங்கள் தாழ்ந்தவர் என்று உங்களை எண்ணச் செய்கின்றனர். பிறகு நீங்கள் தானாகவே அவர்கள் சொல்வதைப் பின்தொடர ஆரம்பித்து விடுவீர்கள்.
மனிதனுக்கு குற்ற உணர்வின் மூலம் மட்டுமே கட்டுப் படுத்தத் தெரியும். நான் சொல்கிறேன், குழந்தைகளுக்கு விதி முறைகள் சரிதான். விதிமுறைகளுடன் ஆரம்பிப்பது நல்லது தான். ஆனால் நீங்கள் வளர்ந்து உங்கள் சொந்த அறிவுக் கூர்மையால் வழிநடத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது. நீங்கள் உங்களுடைய புறத்தன்மையை ஒருங்கிணைத்து விட்டீர்களானால், உங்களுக்குள் குற்ற உணர்வைப் புகுத்த முடியாது. உண்மையில் ஒரு சம்பவமே உங்களுக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்தி விடுவதில்லை. அந்தச் சம்பவத்தின் விளைவுதான் உங்களுக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
மக்கள் விதிமுறைகளை ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு குருட்டுத்தனமாகக் கைமாற்று கிறார்கள். அதனுடன் குற்ற உணர்வும் கைமாற்றப்படுகிறது. ஒரு மகுடத்தைப்
அங்கம் பழுத்தால் தங்கம் பழுக்கும்.
போல குற்ற உணர்வும், தாத்தாவிடமிருந்து தந்தைக்கும், தந்தையிடமிருந்து மகனுக்கும் மகனிடமிருந்து பொனுக்கும், கொடுக்கப்படுகிறது.
எல்லா அமகு சாதனங்களுமே, நீங்கள் போதுமான அளவு நன்றாக இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்கின்றன. அதனால் குறைவுள்ள உங்கள் உடலைக் குறித்து குற்ற உணர்வடைய ஜாம்பிக்கிரீர்கள். பிறகு என்ன செய்கிறீர்கள் ? அவர்களுடைய பொருள்களைவாங்கி உபயோகப்படுத்து கிறீர்கள். நீங்கள்தானாகவே அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் விமுந்து விடுகிறீர்கள். ஒரு முறை அவற்றை உபயோகப் படுத்தினால், 'இதற்காகத்தான் இத்தனை தொல்லைகளையும் படவேண்டியிருந்ததா?' என்கிற இன்னுமோர் குற்ற உணர்வால் குழுப்படுகிறீர்கள். நீங்கள் எதையேனும் சாதித்தவுடன், உங்களைச் சூழ்ந்து கொள்ளும் முதல் உணர்வு குற்ற உணர்வுகான்.
உங்கள் கனவும் கற்பனையும் உங்களை ஒரு பயனற்ற வாழ்க்கைச் சுழலுக்குள் அமிழ்த்தி விடுகிறது. நீங்கள் தொலைக் காட்சி, இணையதளங்கள், புத்தகங்கள் இப்படிப் பலவற்றிலும் பார்த்தவற்றில் இருந்து தொகுத்த கற்பனைகளைக் கொண்டு ஒரு திடமான மூளைப் படிவத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் மனதால் எப்பொழுதும் இந்தப் படிவத்தில் வாழ்கிறீர்கள். உறவுகளில் கூட, நீங்கள் இந்தப் படிவத்துடன்தான் தொடர்பு கொள்கிறீர்களே தவிர, உண்மையான மனைவியுடனோ அல்லது கணவனுடனோ தொடர்பு கொள்வதில்லை. உண்மையான மனைவியோ அல்லது கணவனோ உங்கள் மனதிலுள்ள உருவத்திற்கு ஒரு கீழ்த்தரமான மாற்றாகவே இருக்கிறார்கள். உங்கள் இச்சை இப்பொழுது மாசுபட்டு விடுகிறது.
இரண்டுவிதமான வாழ்க்கைத்தான் இருக்கிறது - புரிந்து கொள்ளுதலுடன் கூடிய வாழ்க்கை மற்றும் பரிந்து கொள்ளுதல் இல்லாத வாழ்க்கை. புத்தா வாழ்க்கை மற்றும் புத்து வாழ்க்கை.
நீங்கள் இந்த வகையில் ஈடுபட்டீர்களானால், ஒரு கொடிய சுமலில் சிக்கிக் கொள்கிறீர்கள். அதனால்தான் உங்களால் அதனுள் ஆமாகச் சென்று விட்டு அதிலிருந்து வெளியே வந்து விட மடியவில்லை. ஆனால் மேலும் மேலும் அதிக ஆசையுடன் திரும்ப வருகிறீர்கள். நீங்கள் அதனுள் ஆழமாகச் சென்றால், அதிலிருந்து மலர்ந்து வெளியே வருவீர்கள்!
அதனால்கான் முந்தைய நாட்களில், மக்களால் அவர்களது இச்சையை 40 வயதில் விட முடிந்தது. அவர்கள் மனதில் ஒருபோதும் இவ்வளவு சிக்கலான உருவங்களை வைத்துக் கொண்டதில்லை. அவர்கள் நேரடியாக அவர்களது கணவடைனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு கொண்டனர். அதனால்தான் அவர்களால் சிறிய வயதிலேயே அதிலிருந்து மலர்ந்து வெளி வர முடிந்தது. அவர்களால் இச்சையினுள் ஆழமாகச் சென்று விட்டு அதிலிருந்து வெளியே வர முடிந்தது. இச்சையே அவர்களிடமிருந்து விழுந்து விட்டது; அவர்கள் அதைவிட வேண்டியிருக்கவில்லை.
ஹிந்துத் திருமணங்களில், புரோகிதர்கள் ஒரு அழகான சுலோகத்தை தம்பதியரைச் சொல்ல வைப்பார்கள். மனைவி கணவனிடம் சொல்லுவாள், 'நீ என்னுடைய II-ஆவது மகனாக இரு'. கணவன் மனைவியிடம் சொல்லுவான், 'நீ என்னுடைய II-ஆவது மகளாக இரு'. அதன் பொருள், திருமணமான பின் 11-ஆவது வருடத்தில், அவர்கள் ஒருவரையொருவா் மகனாகவும் மகளாகவும் பார்ப்பார்கள். உறவு முறை அந்த அளவு உருமாற்ற மடைந்திருக்கும் !
உங்கள் குழந்தைகளைப் பார்க்கும் பொழுது, நீங்கள் மிக்க மகிழ்ச்சியால் சூழப்படுகிறீர்கள், இல்லையா? உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் உங்கள் உறவு அந்த அளவிற்கு
உங்கள் கற்பனையைப் பற்றிய ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதல் இல்லாவிடில் நீங்கள் துன்பப் படுகிறீர்கள். புரிந்து கொள்ளுதலே, இதனை விட்டு வெளியே வரும் திறவுக்கோல்.
உருமாற்றமடைந்திருந்தால், நீங்கள் உங்கள் கணவனை அல்லது மனைவியைப் பார்க்கும் பொழுதும் அதே அதே மகிழ்ச்சியை அபைவிப்பீர்கள். கணவன் அந்தப் பெண்ணுடைய மகனாகவும், மனைவி அந்த ஆணுடைய மகளாகவும் ஆகி விடுவார்கள்.
உங்கள் கற்பனையைப் பற்றிய ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதல் இல்லாவிட்டால் நீங்கள் துன்பப்படுகிறீர்கள். புரிந்து கொள்ளுதலே இதனை விட்டு வெளியே வரும் திறவுகோல். உங்களுக்குத் துன்பப்படாமல் எப்படி வாழ்வது என்பது தெரிந்திருந்தால், நீங்கள் ஒரு ஆன்மீக வாழ்க்கையை நடத்திக் தவிர்க்கத் தெரியவில்லையென்றால், நீங்கள் உலகாயதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இரண்டு விதமான வாழ்க்கைதான் இருக்கிறது - புரிந்து கொள்ளுதலுடன் கூடிய வாழ்க்கை மற்றும் புரிந்து கொள்ளுதல் இல்லாத வாழ்க்கை; 'புத்தா' வாழ்க்கை மற்றும் 'புத்து' (மூட) வாழ்க்கை!
உங்களுடைய ஆசைகளையும் கனவுகளையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். அதனால்தான் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இல்லை. நீங்கள் தரையில் பாய் மீது அமாந் திருக்கும் பொழுது, நாற்காலியை நினைத்துக் கொண்டிருந்ததால் சந்தோஷமாக இல்லை. நாற்காலி கிடைத்தவுடன், சிம்மாசனத்தை நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். சிம்மாசனம் கிடைக்கும் பொழுது அதை அனுபவிக்கும் திறனை இழந்து விடுகிறீர்கள். நான் சொல்ல முயற்சிப்பதைப் பின் தொடர முடிகிறதா ?
உங்களுடைய இச்சை எந்தவிதமான குற்ற உணர்வோ அல்லது ஆசையோ இல்லாமல் பரிசுத்தமாக இருக்குமானால், நீங்கள் எந்தவிதமான குற்ற உணர்வோ அல்லது கற்பனையோ இல்லாமல் அதனுள் ஆழ்ந்து சென்று அதிலிருந்து மலர்ந்து வருவீர்கள்.
ஒரு முறை வெறுமனே உங்கள் தோட்டத்திற்குள் நடந்து சென்று ஒரு மலரையோ அல்லது இலையையோ மிக்க வியப்புடனும் அன்புடனும் நெருக்கமாகப் பாருங்கள்.
உங்களுடைய மூளைப் படிவங்கள் செயல்படத் தொடங்கும் பொழுதுதான். உங்கள் கனவுகளையும் உள்ளே கொண்டு வந்து, இச்சை யிலிருந்து மலர்ந்து வெளிவராமல் தவறுகிறீர்கள்.
உங்களது மூளைப் படிவங்களை விட்டு விட்டு உங்கள் உடலையும் மற்றவரின் உடலையும் நோக்கிய அன்பை உணரத் தொடங்குங்கள். ஆனந்தம் எப்பொழுதும் உங்கள் உடலுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது; நீங்கள் கற்பனையில் சிக்கிக் கொண்டிருப்பதால் அதை வெளியே வருவதற்கு அனுமதிப்பதில்லை. நீங்கள் உங்கள் உடல் மற்றும் மற்றவரின் உடல் பற்றிய கற்பனைகளை விட்டு விட்டால், உங்கள் இச்சையிலுள்ள மாசு அகற்றப்படும். இரசவாத முறையின் முதல் படியான, அசுத்தங்களை அகற்றுதல் நிகழும்.
நீங்கள் உங்கள் உடலுடன் இயல்பாக இருந்தால் உங்களிடம் ஏதோ ஒரு வசீகரம் நிகழும். பெரும்பாலும் உங்கள் உடலை நோக்கிய ஏதோ ஒரு வெறுப்புணர்வின் காரணமாகத் தான் எல்லா தோல் நோய்களும் ஏற்படுகின்றன. இது நிகழக் காரணம், உங்கள் சொந்த உடல் மீதான சுயமரியாதைக் குறைவும் அவமரியாதையும்தான்.
நீங்கள் இதைப் புரிந்து கொள்ளாமல், தோல் நோய்க்குக் குணத்தைத் தேடுகிறீர்கள். அதன் வோ நீங்கள் பல வருடங்களாகக் கட்டிய உங்கள் சொந்த மூளைப் படிவத்தில்தான் இருக்கிறது. நீங்கள் எப்பொழுதும் மற்றவரின் உடலைப் பார்த்து அதைப் போன்ற உடல் வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நீங்கள் உடலை நேசித்தால், அதனுடன் இயல்பாக இருந்தால், அழகாகத் தோன்றுவீர்கள்; அழகாக இருப்பீர்கள்.
உங்களை மாற்றிக் கொள்ளும் ஆசையோ விருப்பமோ இல்லாமல் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை 'ராம் ராம்' என்று ஜெபிப்பது அல்லது ஆயிரம் முறை கோககோலா என்று சொல்வதும் ஒன்றுதான்.
துளசிதாசர் எழுதிய இராமாயணத்தில், சீதை ஜனகரின் சபைக்குள் வசிஷ்டரைப் போன்ற ரிஷிகளும், சீதையின் சொந்தத் தந்தையான ஜனகரும் கூட மற்ற அனைவருடன் சேர்ந்து மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நின்றனராம். அது போன்ற உயர் பண்பும், கம்பீரமும், வசீகரமும் அவளிடமிருந்து பரவிக் கொண்டிருந்தது.
தந்த்ராவில், ஒரு தியான முறையில், தினமும் காலையில் எழுந்து கண்விழித்தவுடன் உடலின் ஒவ்வொரு பகுதியையும் ஆழமான அன்புடன் தொட்டு, சூட்சும உடல் ஸ்தூல உடலில் நிலை பெறுவதற்கு அனுமதிக்கிறோம்.
எது எப்படியோ, வெளியிலிருந்து நீங்கள் அதிகமான உருவங்களைச் சேகரிக்கச் சேகரிக்க, உங்களுடைய மூளைப் படிவம் அந்த அளவு தடிமனுடன் இருக்கும். முந்தைய நாட்களில் மக்கள் இவ்வளவு சிக்கலாகவும், மனநோய் களுடனும் இல்லாமல் எளிமையாக இருந்தனர். அதனால் மூளைப் படிவமே இல்லாமல் இருந்தது அல்லது மிகவும் மெல்லிய ஒரு படிவமாக இருந்தது.
ஒரு முறை, உங்களுடைய உடலையும், மற்றவருடைய உடலையும் பற்றிய கற்பனையை நீங்கள் விட்டு விட்டால், உங்களால் மற்றவருடைய உடலை நோக்கி பரிவையும் நட்புணர்வையும் காட்டத் தொடங்க முடியும். இச்சையை அன்பாக உருமாற்றமடையச் செய்யும் இரசவாத முறையில், நட்புணர்வும் சேர்க்கப்பட வேண்டிய ஒரு பொருளாகும்.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், வன்முறை ஒரு வழியல்ல. நாம் சமூகத்தில், மாநிலத்தில், மற்றும் நாட்டில் நிலவும் வன்முறை பற்றிப் பேசுகிறோம். நம் வீட்டிலும், உடலிலும், மனதிலும்
இச்சையும் அன்பும் ஒரே நிறமாலையின் இரண்டு எல்லைகள்.
இருப்பதைப் பற்றி என்ன சொல்வது? சாமி சொல்கிறேன்... வன்முறை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது.
நீங்கள் சொல்லலாம், ''ஸ்வாமிஜி, ஆனால் நாங்கள் தினசரி வாழ்க்கையில் வன்முறையில் ஈடுபடுவதில்லை''. நான் சொல்கிறேன், நீங்கள் வன்முறையில் ஈடுபடாமல் நட்புணர்வுடன் இருப்பதாக வெறுமனே நினைக்கிறீர்கள். நட்புணர்வு என்ற வார்த்தைக்கு நான் கொள்ளும் பொருள் உங்கள் மனதில் இருப்பதிலிருந்து மாறுபடுகிறது. உங்களை நெருக்கமாக கவனித்துப் பாருங்கள் ... நீங்கள் தெருவிலோ அல்லது தோட்டத்திலோ நடந்து செல்லும் பொழுது விழிப்பின்றி மரங்களிலிருந்து இலைகளையும், மலர்களை யும் பறிக்கிறீர்கள்; கற்களைக் காலால் உதைக்கிறீர்கள்; கொடிகளை இழுக்கிறீர்கள் ; இவ்வாறு இன்னும் பலவும் செய்கிறீர்கள். இவையெல்லாம் வன்முறைச் செயல்களே.
ஒரு முறை வெறுமனே உங்கள் தோட்டத்திற்குள் நடந்து செ ன்று ஒரு மலரையோ அல்லது இலையையோ மிக்க வியப்புடனும் அன்புடனும் நெருக்கமாகப் பாருங்கள். அதை அன்புடன் நோக்கி, அதன் அழகை உங்கள் இதயத்தில் உணருங்கள். அதன் மூலமாகப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அதிசயங்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதை ஒரு புதிதாகப் பிறந்த குழந்தை போலக் கையாளுங்கள். உங்கள் ஆழத்திலிருந்து பொங்கும் உணர்ச்சிகளை அனுபவியுங்கள்.
இப்பொழுது, இது போன்று எத்தனை முறை நடந்து செல்லும் பொழுது விழிப்பின்றி மலரையோ அல்லது இலையையோ பறித்து அலட்சியமாக வேறெங்கோ வீசியிருக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இரண்டுவிதமான உணர்ச்சிகளுக்கும்,
உங்களை ஆழமான விழிப்புணர்வுக்குள் தள்ளும் எதுவுமே தியானம்கான்.
மனோபாவங்களுக்கும் உள்ள பரிந்து கொண்டீர்களா ? ் நீங்கள் உண்மையிலேயே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றுடனும், எல்லாருடனும் நட்புணர்வுடன்தான் இருக்கிறீர்களா ?
எல்லாவற்றையும் இப்பொழுது நீங்கள் விழிப்பற்ற நிலையிலிருந்து செயலாற்று வதால், வன்முறையுடன் இருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியாமல், இவற்றிடம் ஒரு வன்முறையான வகையில் நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் அவற்றை விழிப்புணர்வுடன் பார்ப்பீர் களானால் உங்களால் அவற்றிடம் உள்ள அளவற்ற அழகைக் காண முடியும்; அவற்றிடம் அன்புடன் நடந்துகொள்ள முடியும்.
மேலும், நீங்கள் உங்கள் உடலை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்கிறீர்கள் ? அதிகமாக உண்டு உங்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான ஜீரண அமைப்பிற்கு எத்தனை தொல்லை கொடுக்கிறீர்கள். உங்கள் உடல் ஒய்விற்காகக் கதறும் பொழுது, இரவில் அதிக நேரம் கண்விழித்து, அதைச் சித்திரவதை செய்கிறீர்கள். உங்கள் உடலுக்கு நல்லதல்ல என்று தெரிந்தும் புகை பிடிக்கிறீர்கள், மது அருந்துகிறீர்கள். இவையெல்லாம் உங்கள் உடலுக்கு நட்புணர்வான செயல்களா? சிலா் உடலை வெறுப்பதால் அதை அலட்சியம் செய்கின்றனர்.
அதனால் வெளியிலிருக்கும் வன்முறையைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விட்டு, உங்களுக்குள் நிகழும் வன்முறையை கவனிக்கும் வழியைப் பாருங்கள்! தானாகவே வெளி வன்முறை நின்று விடும். நாம் எப்பொழுதுமே மற்றவர்களின் குறைபாடுகளைச்
உங்கள் இருப்புத்தன்மை, தன்னை உங்கள் தலை மூலம் வெளிப்படுத்திக் கொண்டால், அது அறிவு.
சுட்டிக்காட்டத் தயாராக இருக்கிறோம். நம்மிடம் எத்தனை குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி என்ன சொல்வது ?
ஒரு முறை, ஒருவர் என்னிடம் வந்து அவரது குடும்பத்தைப் பற்றிச் சொன்னார். அவருடைய மனைவி ஒரு வழக்கறிஞர் என்று சொன்னார். நான் கேட்டேன், ''ஓ, அவர் நீதிமன்றத்தில் வாதம் செய்வாரா?'. அவர் சொன்னார், 'இல்லை ஸ்வாமிஜி, அவள் வீட்டில்கான் வாதம் செய்கிறாள்!'.
நாம் மற்றவர்களை நோக்கி விரல்களைச் சுட்டவும் வாதம் செய்யவும் தயாராக இருக்கிறோம். அதற்கு பதில், நம்மிடம் இருக்கும் மாசுகளை அகற்றினோமானால், தானாகவே வெளியில் வாதம் செய்ய வேண்டிய தேவையற்றுப் போய் விடும்.
உங்களுடன், உங்களையும் மற்றவர்களையும் குணப் படுத்தும் வார்த்தைகளை எடுத்துச் செல்லுங்கள். மற்றவர் களுடைய உடல், மனம், இருப்புத் தன்மை ஆகியவற்றிடம் நட்புணர்வைக் காட்டுங்கள். இதுவே 'பயன் பாட்டு ஆன்மீகம்'. ஆன்மீகம் என்பது தினம் தவறாமல் பூஜையறையில் மணியடித்துக் கொண்டு லக்ஷ்மியிடம் செல்வத்தை வேண்டி வழிபாடு செய்வதல்ல; அது லக்ஷ்மியின் குணங்களாகிய கருணையையும் நல்லெண்ணத் தையும் கிரஹித்துக் கொள்வது. பிறகு செல்வம் தானாகவே நிகழும்.
நாம், சடங்குகளைச் செய்தாலே போதும், பலன் கிடைத்து விடும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறோம். அல்ல. மிகவும் தெளிவாக இருங்கள் ... உங்களை மாற்றிக் கொள்ளும் ஆசையோ விருப்பமோ இல்லாமல் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை 'ராம் ராம்' என்று ஜெபிப்பதும் அல்லது ஆயிரம் முறை 'கோககோலா' என்று
சொல்வதும் ஒன்றுதான்! சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் அடிப்படைக் கருத்து என்னவென்றால், உங்களை உருமாற்றிக் கொள்வதற்காகப் புரிந்து கொண்டு கிரஹித்துக் கொள்வது. பிறகு உலகாயதமான விளைவுகள் தானாகவே சகஜமாக நிகழும்.
ஒரு முறை உங்களால் மற்றவரிடம் நட்புணர்வைக் காட்ட முடியுமானால், பொறுமையும் விடாமுயற்சியும் கொண்டு உங்கள் உருமாற்றப்பட்ட உணர்ச்சிகளைப் பக்குவப்படுத்தினால், இறுதியில், மிகவும் உயர்ந்த பாஸ்பரமான உணர்ச்சியான அன்பை அபைவிப்பீர்கள். மற்றவர்களும் உங்கள் உருமாற்ற மடைந்த உணர்ச்சியை திருப்பியளிப்பார்கள்; இப்பொழுது நீங்கள் வந்து சேர்ந்து விட்டீர்கள். உங்கள் இருப்புத் தன்மை ஆனந்தமாகி விடும் ! அப்பொழுது தான் உங்கள் தியானத்தைச் சரியாகச் செய்ததாக அர்த்தம் !
அன்பு உங்கள் இருப்புத் தன்மையின் மையமாகி விடும் பொழுது, காமம் இரண்டு இருப்புத் தன்மைகளின் ஆழ்ந்த சங்கமம் ஆகிவிடும். பிரச்சினை என்னவென்றால், உண்மையான அன்பு மறைக்கப்பட்டு காணாமல் போய் விட்டது; இச்சை ஆக்ரமித்து விட்டது.
அதன் விளைவாக, இருப்புத் தன்மைகள் ஒருபோதும் ஒன்றாக இணைவதில்லை; உடல்கள்தான் ஒன்றாக இணைகின்றன. உறவு மிகவும் மேலோட்டமான நிலையிலேயே இருக் கிறது. மேலோட்டமான எதையுமே எளிதாக அசைத்து விடலாம். எதுவும் அசைக்க முடியாமல் இருக்க வேண்டுமானால், அதற்கு ஆழமான வேர்கள் தேவை. இது ஒரு எளிமையான தர்க்கம்.
மேலும், இச்சை எப்பொழுதும் உங்களைக் குருடாக்கி விடுகிறது. அது உங்களை விழிப்பற்ற போதைக்கு எடுத்துச் செல்கிறது. அன்பும் போதையைத் தருகிறது; ஆனால் அந்த போதை உங்களை ஆழமான விழிப்புணர்வுக்கு எடுத்துச் செல்கிறது. அது ஒரு அற்புதமான நிலை; இச்சையும் அன்பும் ஒரே நிறமாலையின் இரண்டு எல்லைகள். உங்களை ஆழமான விழிப்புணர்வுக்குள் தள்ளும் எதுவுமே தியானம்தான். உங்களை விழிப்பற்ற நிலைக்குத் தள்ளும் எதுவும் பாதகமானதுதான். இதுவே நீங்கள் அனுபவிப்பது எதுவும் உங்களுக்கு நல்லதா இல்லையா என்பதை அறியும் அளவு கோலாகும்.
இன்னொரு விஷயம் நீங்கள் ஆழமாக நேசிப்பீர்களே யானால், பொறாமைக்கு அங்கு இடமேயில்லை. பொறாமை இருப்பதற்குக் காரணம், ஆழமற்ற வேர்கள் வழி விட்டு விடும் என்று நீங்கள் அஞ்சுவதுதான். வேர்கள் ஆழமாய் இருந்தால், ஏன் அஞ்ச வேண்டும்? ஏன் பொறாமைப்பட வேண்டும்? நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறதா ? உங்கள் கணவன் அல்லது மனைவியிடம் வைத்திருக்கும் நம்பிக்கை ஆட்டம் காண்பதற்குக் காரணம், கனவுகளையும் இச்சையையும் அடிப்படையாகக் கொண்ட, மேலோட்டமான உறவுதான்.
ஒரே ஒருவரை மட்டுமே நோக்கிய காதல், உண்மையான காதலே அல்ல. வாழ்க்கையே காதல்தான்! உங்களுடைய இருப்புத் தன்மையே, பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கி, காதலைப் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும். உங்களுடைய இருப்புத் தன்மை, தன்னை உங்கள் தலை மூலம் வெளிப் படுத்திக் கொண்டால், அது அறிவு; அது தன்னை இதயத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டால் அது பரிவு; அது தன்னை உடலின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டால் அது சக்தி; அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வெறும் 'இருப்புத் தன்மை'யாக இருந்தால் அது முக்தி - ஆனந்தம்!
உங்கள் இருப்புத் தன்மை, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வெறும் 'இருப்புத்தன்மை'யாக இருந்தால் அது முக்தி - ஆனந்தம்