KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/அத்தியாயம் - 8 அஹங்காரத்தை விடுதல் - ஆக்ஞா சக்கரம் -- திவ்ய நேத்ரா தியானம் -Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

அத்தியாயம் - 8 அஹங்காரத்தை விடுதல் - ஆக்ஞா சக்கரம் -- திவ்ய நேத்ரா தியானம் -

ஆக்ஞா சக்கரமானது புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது.

சமஸ்கிருதத்தில் ஆக்ஞா என்றால், 'ஆணை' அல்லது 'உத்தரவு' என்று பொருள். ஆக்ஞா சக்கரம் தலைமைச் சக்கரமாக அறியப்படுகிறது.

அது கடுமைத்தனத்தாலும் அஹங்காரத்தினாலும் பூட்டப்படுகிறது (அடைபடுகிறது).

அதை கள்ளங்கபடமற்ற தன்மையினாலும், எளிமையினாலும், அறிவுக் கூர்மையினாலும், அஹங்காரத்தை அதன் எல்லா வடிவங்களிலும் விடுவதன் மூலமும் மலரச்செய்ய முடியும்.

தியான முறை: திவ்ய நேத்ரா தியானம் - ஒரு ஜொராஸ்ட்ரிய தியான முறையில் இருந்து எடுக்கப்பட்டது.

ஆக்ஞா சக்கரம் 'சக்ரராஜ்' என்று அழைக்கப்படுகிறது-இதுவே எல்லா சக்கரங்களுக்கும் தலைமைச் சக்கரமாகும்.

இதைத் தூண்டி விடுவதற்காகச் செயல்படாத மதங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த சக்கரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக்ஞா திறக்கும் பொழுது, முழு

Shedding the Ego

இருப்புத் தன்மையுமே ஒரு மாறுபட்ட பிரதேசத்தில் பிரவேசிக்கிறது; ஒரு முழு அடுக்கு புலன்கள் திறக்கின்றன. இதுதான் எல்லா கீழை நாடுகளின் கடவுள்களின் நெற்றியிலும் மூன்றாவது கண்ணாகக் குறிப்பிடப்படுகிறது. ஆக்ஞா விழிப்படைந்ததன் குறியீடே மூன்றாவது கண்.

நீங்கள் பாரதத்தின் ஒரு புனிதம் வாய்ந்த நகரமான வாரணாசியில் இறந்தால், தானாகவே விடுதலை பெற்று விடுவீர்கள் என்று ஒரு பழங்கூற்று இருக்கிறது. வாரணாசி என்பது நாம் அறிவது போல் ஒரு வெறும் நகரமல்ல. அது 'வாரணா' என்கிற புருவங்கள், 'நாசி'யாகிய மூக்கைச் சந்திக்கும் இடமும் கூட; அதுவே ஆக்ஞா சக்கரத்தின் சரியான இருப்பிடமுமாகும். விடுதலை பெற்ற அல்லது ஞானமடைந்த நிலையில் அஹங்காரம் அழிந்து விடுவதன் அடையாளக் குறியீடே அது.

ஆக்ஞா சக்ரம் அஹங்காரம், கடுமைத்தனம், நம்மைப் பற்றியே அதிகம் சிந்தித்தல் (அதனால் தான் வாழ்க்கையையும் மிகவும் கடுமையாக எடுத்துக் கொள்கிறோம்) ஆகியவற்றுடன் சம்பந்தப் பட்டது.

கடுமைத்தனம் என்றால் என்ன ?

கடுமைத்தனம் ஒதுக்கி விட்டு, ஏதோ ஒன்றுக்கு மட்டுமே, தேவையற்ற, அதிக முக்கியத்துவம் கொடுப்பது, வாழ்க்கை முழுவதுமே ஒரு நாடகம்தான், அது ஒவ்வொரு நிமிடமும் விரிந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது' என்பதைப் புரிந்து கொள்ள இயலாமையிலிருந்தே அது முளை விடுகிறது. வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதன் விளைவே கடுமைத்தனம்.

Ego1 Seriousness2

ஒரு சின்ன கதை...

இரண்டு சிறுவர்கள் கடற்கரையில் மணற் கோட்டை கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் சண்டை வந்து, அதில் ஒரு சிறுவன் கோபத்தில் மணற்கோட்டையை உதைத்து விட்டான். மற்ற சிறுவனோ மன்னனிடம் சென்று தனது முக்கியமான பிரச்சினையைப் பற்றி முறையிட்டான். இந்த ஒன்றுமில்லாத வெறும் மணற் கோட்டைக்காக இவ்வளவு செய்கிறானே என்று அவனைக் கண்டு மன்னன் சிரிக்க ஆரம்பித்தான். ஆனால் அரசனின் அலோகான ஜென் துறவியோ மன்னனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார். அவர் கேட்டார். ''நீ உன்னுடைய கற்கோட்டைகளுக்காக போர்க்களங்களில் சண்டையிட்டு, உன் காக்கத்தைத் தொலைக்கும்பொழுது, இந்தச் சிறுவர்கள் மணற்கோட்டைக்காக சண்டையிடுவதைக் கண்டு ஏன் சிரிக்கிறாய் ? ' .

நமது எல்லா கடுமைத்தனமுமே வெறும் மணற்கோட்டைகளுக்காகத்தான்! அதைப் புரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு, அந்தச் சிறு வயதில், மணற்கோட்டைகள் விலைமதிப்பற்றதாகத் தோன்றுகிறது; நமக்கோ, இந்த வயதில், கற்கோட்டைகள் விலைமதிப்பற்றதாகத் தோன்றுகிறது, அவ்வளவு தான். அது மணற்கோட்டையோ அல்லது கற்கோட்டையோ, அதன் பின்னால் இருக்கும் கடுமைத்தனம் ஒன்றுதான்; அதற்குக் காரணமான பொருள் தான் வேறு. அதனால் குழந்தைகள் மணற்கோட்டைகளுக்காகச் சண்டையிட்டால் சிரிக்காதீர்கள்.

கடுமைத்தனம், வாழ்க்கையின் திறந்த தன்மைக்கும் சுதந்திரத்திற்கும் உங்கள் மனதை மூடி விடுகிறது. அது உங்களை மந்தமாகவும், உயிரற்றதாகவும் ஆக்கி விடுகிறது, அது உங்கள் சிந்தனையைத் தடை செய்து, உங்களுக்கு

ஆக்ஞா திறக்கும் பொழுது, முழு இருப்புத் தன்மையுமே ஒரு மாறுபட்ட பிரதேசத்தில் பிரவேசிக்கிறது.