எப்பொழுதும் தெரிந்த, பழக்கமான வடிவ அமைப்புகளிலேயே உங்களை ஒட்டிக் கொண்டு இருக்குமாறு செய்து விடுகிறது.
ஒரு ஜென் மடாலயத்தில், சீடர்களுக்கிடையே, யாரிடத்தில் இருப்பது சிறந்த தோட்டம் என்று ஒரு போட்டி வந்தது. அதில் ஒரு சீடன் மிகவும் கடுமையான வகையைச் சேர்ந்தவன். அவன் இந்தப் போட்டியையும் மிகவும் கடுமையாக எடுத்துக் கொண்டு விட்டான். எப்பொழுதும் அவன் தோட்டத்தை நன்றாகப் பெருக்கி, நேர்த்தியாகவும், கத்தமாகவும் வைத்திருந்தான். புற்கள் எல்லாம் ஒரே உயரத்தில் இருந்தன. எல்லாப் புதா்களும் நேர்த்தியாக வெட்டி விடப்பட்டு இருந்தன. அவன் நிச்சயமாக முதற் பரிசைப் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தான். போட்டி நாளன்று, குரு எல்லாத் தோட்டங்களையும் சுற்றி வந்தார். பிறகு திரும்பி வந்து எல்லாத் தோட்டங்களையும் வரிசைப்படுத்தினார். அந்தச் சீடனுடைய தோட்டம் கடைசி இடத்தையே பெற்றிருந்தது; எல்லாருக்குமே அதிர்ச்சி. சீடன் குருவிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டான். "குருவே, என் தோட்டத்தில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ஏன் கடைசி இடத்தையே கொடுத்திருக்கிறீர்கள் ?''. குரு அவனைப் பார்த்துக் கேட்டார், ''எங்கே அந்த இறந்த இலைகள்?''. இது போன்று பராமரிக்கப்படும் கோட்டம் உயிரோட்டத்துடன் இருப்பதில்லை! அது உயிரற்றதாக இருக்கிறது.
கடுமைத்தன்மை தன்னிச்சையான - இயல்பைக் கொன்று விடுகிறது. படைப்பாற்றலை அழித்து விடுகிறது.
நீங்கள் ஒரு வேலையைத் தளர்வாகவும், எளிதாகவும் எடுத்துக் கொண்டு செய்யும் பொழுது, உங்களுடைய சிந்திக்கும் மற்றும் முடிவெடுக்கும் திறன் தானாகவே அதிகரிக்கிறது என்று அறிவியல் நிரூபித்திருக்கிறது. அதே வேலையைக் கடுமையான முறையில் எடுத்துக் கொண்டு செய்யும் பொழுது, அது உங்கள் மனதை மந்தப்படுக்கி விடுகிறது.
நான் சொல்கிறேன் ... நமது எல்லா கடுமைத் தன்மையும் வெறும் வியாதிதான். நான் 'எல்லா' என்று சொல்லும் பொழுது, எல்லாவற்றையும்தான் சொல்கிறேன். நமது எல்லா வியாதியுமே கடுமைத் தன்மையிலிருந்துதான் ஆரம்பமாகின்றன. கடுமைத் தன்மை வியாதியை விளை விக்கிறது; வியாதி கடுமைத் தன்மையை விளைவிக்கிறது.
ஒரு இரவு, ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, அழ ஆரம்பித்து விட்டார். அவர் சொன்னார், "நான் உங்கள் காலில் விழுகிறேன் ஸ்வாமிஜி! தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள். நான் மிகவும் மனச்சோர்வில் இருக்கிறேன்! என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகிறேன்!'' என்று பலவும் சொன்னார். நான் அவரை அமைதிப்படுத்த முயன்றேன். இறுதியாகச் சொன்னேன், "நீங்கள் ஏன் நாளை காலை ஆசி ரமத்திற்கு வந்து என்னோடு சில நாட்கள் தங்கியிருக்கக் கூடாது ?. நாம் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்". அவர் சொன்னார், '' நாளைக்கா ஸ்வாமிஜி! ஒ... நாளைக்கு நான் வேலைக்குப் போக வேண்டுமே ... வேண்டுமானால் அடுத்த வாரக் கடைசியில் வரட்டுமா ? ' ' .
நம்மில் ஒன்றுமில்லாத பிரச்சினைகளைக் குறித்து தேவையில்லாமல் மன இறுக்கம் அடைகிறோம். நம்முடைய கடுமைத்தனம் விழுவதற்கு வெறும் ஒரு குலுக்கலே போதுமானது. நாம் உண்மையை நோக்கி விழித்துக் கொள்ளும்பொழுது, உண்மையிலேயே நம்முடைய பிரச்சினையெல்லாம் எவ்வளவு அற்பமானது என்பதைக் காண முடியும்.
ஆக்ஞா விழிப்படைந்ததன் குறியீடே மூன்றாவது கண். இதுவே எல்லா கீழை நாடுகளின் கடவுள்களின் நெற்றியிலும் மூன்றாவது கண்ணாகக் குறிப்பிடப்படுகிறது.
நீங்கள் எதையேனும் மிகவும் கடுமையுடன் செய்யும் பொழுது, அதன் விளைவைப் பற்றி மிகவும் கவலைப்படும் பொழுது, உண்மையில் உங்களைச் சாதகமான நிலையில் செயலாற்ற அனுமதிப்பதில்லை.
நிச்சயமாக, நீங்கள் திட்டமிட வேண்டியதுதான், முன் கூட்டியே யோசனை செய்ய வேண்டியதுதான். ஆனால் அதைச் சிரத்தையுடன்- செய்யுங்கள்; கடுமையுடன் அல்ல. கடுமையும் சிரத்தையும் ஒன்றல்ல. சிரத்தை என்பது உற்சாகத்துடனும், இளமைத் துடிப்புடனும் வேலையில் கவனம் செலுத்துவது. சிரத்தையென்பது, விளைவைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், வேலையில் உங்களுடைய சிறந்த முயற்சியை அளிப்பது.
ரீங்கள் கடுமையுடன் இருக்கும் பொழுது, மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டீர்கள், சிரிக்க மாட்டீர்கள். கடுமையாக இருக்கும் பொழுது எப்படி சிரிக்க முடியும் ? அவை இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் இருக்க முடியும். நீங்கள் கடுமையாக இருக்கலாம் அல்லது சிரித்துக் கொண்டு இருக்கலாம்; ஒரே சமயத்தில் இரண்டும் இருக்க முடியாது; ஏனெனில் கடுமைத்தனம் அவ்வாறுதான் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள் சிரத்தையுடன் இருப்பீர்களானால், உங்களால் சிரிப்புடனும், விளையாட்டுத்தன்மையுடனும் இருக்க முடியும்; உங்களால் கையிலிருக்கும் வேலையை விளையாட்டாகவும், படைப்பாற்றலுடனும் செய்ய முடியும். வேலையும் மகிழ்ச்சியுடன் முடிந்து விடும். வேலையை முடித்து விட்டதால், நீங்கள் சிரத்தையுடன்தான் இருந்திருக்கிறீர்கள். சிரத்தையில் கவலையில்லை; உற்சாகம் மட்டுமே இருக்கிறது.
நீங்கள் கடுமையாக இருக்கும் பொழுது, அஹங்காரத்துடன் இருக்கிறீர்கள்; ஏனெனில் இது எல்லாமே ஒரு பிரபஞ்ச நாடகம்தான் என்பதைப் பார்க்கத் தவறி விடுகிறீர்கள். நீங்கள் வெகுவாக உங்களை ஒரு தனி வஸ்துவாக உணர்கிறீர்கள்; 'நான்' எண்ற எண்ணம் மிகவும் அதிகமாக இருப்பதால் கடுமையாக இருக்கிறீர்கள். எல்லாமே ஒரு நாடகம்தான் என்பதைப் புரிந்து கொண்டீர்களானால், உங்களால் ஒரு போதும் கடுமையாக இருக்க முடியாது. இந்தப் புரிந்து கொள்ளுதல் ஒரு ஆழமான நிலையில் நிகழ்ந்தால், பிரபஞ்ச நாடகத்துடன் அல்லது பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்லும் சந்தோஷத் திலேயே, செயல்களை வெறுமனே செய்து கொண்டிருப்பீர்கள். மேலும் இவ்வாறு செய்யும் பொழுது, நீங்கள் கடுமையாக இல்லாமல், உங்களுடைய பாத்திரத்தை வெறுமனே சிரக்கையுடன் செய்வீர்கள், அவ்வளவே.
பாருங்கள், இரண்டு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன ... காலவரிசையிலான திட்டமிடுதல் மற்றும் உளவியல் ரீதியிலான திட்டமிடுதல்.
காலவரிசையிலான அளவுகோலைக் கொண்டு திட்டமிடுவது; எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, காலை வேலைகளை எத்தனை மணிக்கு முடிப்பது, அலுவலகத்தில் என்னென்ன வேலைகளைச் செய்து முடிப்பது என்பதையெல்லாம் தீர்மானிக்கிறீர்கள். இது சரி தான். இவ்வாறு உங்கள் வேலைகளை சாத்தியமான வகையில் அமைத்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும். இது போன்று திட்டமிடுதலும், சி ரத்தையுடனான செயலும் உங்களை சந்தோஷத்தில் இருந்து அதிக சந்தோஷத்திற்கு எடுத்துச் செல்லும்.
இன்னொரு பக்கம், உளவியல் ரீதியான திட்டமிடுதல் என்பது, கால அல்லது இட சம்பந்தமின்றி, மூளையில் திட்டமிடுவது. இது காலவரிசையிலான திட்டமிடுதலுக்கும் மேலாக, மூளையில்
வாரணாசி நாம் அறிவது போல் வெறும் நகரம் மட்டும் அல்ல. 'வாரணா' என்கிற புருவங்கள், 'நாசி'யாகிய மூக்கைச் சந்திக்கும் இடமே, ஆக்ஞா சக்கரத்தின் சரியான இருப்பிடமாகும்.
எப்பொழுதும் வெறுமனே கடுமையாக திட்டமிட்டுக் கொண்டே இருப்பது. அது உங்களை கடுமையாகவும், கடமையுணர்வோடும் இருப்பதாக எண்ண வைக்கிறது. அது உண்மையிலேயே, ஏற்கனவே தீர்மானித்த கால வரிசையிலான திட்டத்தின் மேல் செலுத்தப்படும் சிக்கலான எதிர்மறைத் தன்மையைத் தவிர வேறல்ல. நீங்கள் உங்கள் திட்டத்தை ஆராய்ந்து ஆராய்ந்து ஒரு மந்தமான நிலைக்குச் சென்று விடுகிறீர்கள்; ஏனெனில் உங்களுடைய எல்லாச் சக்தியும் திட்டத்தை மீண்டும் மீண்டும் ஆராய்வதிலேயே போய் விடுகிறது.
உளவியல் ரீகியான திட்டமிடுதல் உங்கள் அவரங்காரத்தை ஊக்கப்படுத்துகிறது. ஏதோ பெரிதாகவும், தகுதி வாய்ந்ததாகவும் சாதித்து விட்டதைப் போன்ற உணர்வைத் தருகிறது. கடுமையாக இருக்கவும் கையாளுவதைப் போன்ற உணர்வைத் தருகிறது. அதைப் பற்றிக் கவலைப்படுவதும், நடத்தி முடிப்பதும் எல்லாம் உங்கள் கையில்தான் இருப்பதாக ஒரு எண்ணத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொரு சின்ன விஷயத்தின் பின்னாலும் சென்று, அதை முடிப்பதில்தான் உங்கள் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணுகிரீா்கள். இதுதான் உளவியல் ரீதியான கிட்டமிடுகல்.
நான் சொல்கிறேன்... உண்மையில் இது ஒரு வகையில் சந்தோஷத்தைத் தள்ளிப் போடுதல்; வாழ்க்கையைத் தள்ளிப் போடுதல்; வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பிப்பதற்குக் கூட, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்காகக் காத்திருத்தல்.
நாம் எப்பொழுதும், 'எனக்குக் கல்யாணமாகி விட்டால் வாழ்க்கையில் நிலைபெற்று விடுவேன். அதனால் நான் அதற்கான வேலைகளில் இறங்குகிறேன் ... எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்தால் என் வாழ்க்கை நிறைவு பெற்று
வாழ்க்கை என்பது ஒரு நாடகம்தான், அது ஒவ்வொரு கணமும் விரிந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
விடும்... நான் ஒய்வு பெற்றுவிட்டால் அமைதியாக இருப்பேன்', என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
அது, 'நான் இப்பொழுது கடுமையாக இருந்து விடுகிறேன். பிறகு மகிழ்ச்சியாக இருந்து கொள்வேன்!' என்பதான மனோபாவ மாகும், இறுதியில், நீங்கள் இப்பொழுதோ அல்லது பிறகோ எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். நீங்கள் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்கும் திறனை இழந்து விடுவீர்கள்.
வெறுமனே எளிமையாகவும் தன்னிச்சையாகவும் , கள்ளங்கபடமற்றும் வாழுங்கள். எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்பதில் சொல்கிறேன் ... எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்பது உங்களை மன நோயாளியாக்கி விடக் கூடும். நீங்கள் எதைச் செய்தாலும் முழுவதுமாக, முழுமுமையாகச் செய்யுங்கள். பிறகு நீங்கள் செய்வதெல்லாம் தானாகவே முழுமையாக இருக்கும் ; நீங்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டியதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டியதில்லை.
எல்லாம் சரியாக இருக்க வேண்டும் 'என்பது எப்பொழுதும் மனதில் இருந்து வரும் ஒரு விஷயம். அது உங்களுக்கு ஒரு இலக்காகி விடுகிறது. நீங்கள் அதையே இலக்காக வைத்துக் கொண்டு உழைக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். மேலும் அதை இலக்காக வைத்துக் கொண்டு வேலை செய்யும் பொழுது, அது உயிரற்றும், சலிப்பானதாகவும் ஆகி விடுகிறது. ஆனால் நீங்கள் முழுமையாக இருக்கும்பொழுது, இதயத்தில் நிலைபெறுவதால், அது ஒரு ஆழமான அனுபவமாகி விடுகிறது. அதனால் விளையும் பயனும் அற்புதமாகவும் இருக்கும், ஆனந்தத்தையும் அளிக்கும். பிறகு
நீங்கள் எதைச் செய்யினும், அது பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவுடனேயே இருக்கும்.
எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பது, ஒருபோதும் ஆனந்தத்தை அளிக்காது; அது உங்கள் அஹங்காரத்தையே நிறைவு செய்கிறது. அதனால் இறுதியில் ஒருவேளை நீங்கள் நிறைவடைந்தால் கூட, அது உங்களுடைய அஹங்காரத்தின் நிறைவாகத்தான் இருக்குமே தவிர, ஒருபோதும் உங்கள் இருப்புத் தன்மையின் நிறைவாக இருக்காது. மிகவும் தெளிவாக இருங்கள் ... எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்பவர்கள் பெரும் அஹங்காரம் உள்ளவர்கள். அவர்கள் முழுமையாக இருத்தல் என்னும் பரிமாணத்தையே தவறவிட்டு விடுகிறார்கள். இன்னொரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் ... ஒரு விஷயத்தில் ஆழ்ந்து சென்றால்தான் முழுமை சாத்தியமாகும். எல்லாம் சியாக இருத்தல் என்பது ஒருபோதும் சாத்தியமில்லை; ஏனெனில், அது உங்கள் மனதில் இருக்கிறது; மேலும் உங்கள் மனம் எல்லாம் சரியாக இருத்தலைப் பற்றிய வரையறையை மாற்றிக் கொண்டே இருக்கிறது.
இன்னும் ஒரு விஷயம் ... தவறு செய்யும் தைரியத்தைப் பெறுங்கள். கடுமையான மக்கள் எப்பொழுதும் தவறு செய்ய பயப்படுவார்கள். அவர்கள் தங்களை எப்பொழுதும் மிகவும் கடுமையாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றி பெரிதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஏதேனும் தவறு செய்து, மற்றவர்களால் சுட்டிக் காட்டப்படுவது, அவர்களால் மிகவும் தாங்க முடியாதது. உண்மையில் நான் சொல்கிறேன், சிறிய தவறுகளைச் செய்ய பயப்படும் இவர்கள், முடிவில் பெரிய தவறுகளைச் செய்துவிடப் போகிறார்கள்.
தவறுகளைச் செய்வதில் தவறென்ன இருக்கிறது? "ஸ்வாமிஜி, தவறு நிகழ வாய்ப்பே அளிக்க முடியாத ஒரு
வேலையில் நான் இருக்கிறேன்' என்று நீங்கள் சொல்லாம். நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்; உங்களுடைய வேலை தவறுகள் நிகழ்வதை அனுமதிக்க முடியாததாக இருக்கலாம்; ஆனால், நான் சொல்ல வருவது அதுவல்ல. நீங்கள் தவறு செய்யும் பொழுது, மக்களால் சுட்டிக் காட்டப்படுவதை உங்களால் தாங்க முடியாது. உங்கள் அஹங்காரம் புண்பட்டு விடும்; நீங்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவீர்கள்; இது நீங்கள் அறிந்ததுதான். அதனால் உங்கள் அஹங்காரம் புண்பட்டு விடாமல் தவிர்ப்பதற்காக, தவறு செய்து விடாமல் இருக்க முயற்சி செய்கிறீர்கள்.
உங்கள் அஹங்காரத்தைப் பாதுகாப்பதற்கு, விழிப் பின்றியே தொடர்ந்து திட்டமிட்டபடியே இருக்கிறீர்கள். ஆனால் அதற்கு நீங்கள் சொல்லும் காரணங்கள்தான் வெவ்வேறானவை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்பதல்ல. அப்படி அல்ல ! உங்கள் அமைப்பும் உங்கள் அஹங்காரமும் செயல்படும் நுட்பமான வழிமுறைகளை நீங்கள் அறியவில்லை. ஆனால் இதை ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தீர்களானால், நான் சொல்வதைப் புரிந்து கொள்வீர்கள்.
தவறுகளைச் உண்மையில், சில தவறுகளைச் செய்வதன் மூலம், அனுபவ பூர்வமாகப் புரிந்து கொள்வதால், தவறுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்கிறீர்கள். தவறுகளில் இருந்து அதிகமாகத் தெரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, தவறுகளைச் செய்யாமல் இருப்பது எவ்வாறு என்பதையும் வெகுவாகத் தெரிந்து கொள்கிறீர்கள்.
தவறுகளைச் செய்யாமல் இருப்பது எவ்வாறு என்பதைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அப்பொழுதுதான்
நமது எல்லா கடுமைத் தனமுமே வெறும் மணற்கோட்டைகளுக்காகத்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பக்கங்களையும் ஆராய்ந்தவர்களாகிறீர்கள். இல்லாவிடில் ஏதேனும் ஒரு ஆபத்தான, உண்மையிலேயே வாய்ப்பளிக்கக் கூடாத ஒரு சமயத்தில், தெரியாத பக்கத்தில் விழுந்து விடக்கூடிய அபாயம் எப்பொழுதும் இருக்கிறது.
ஒரே ஒரு விஷயம்... அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்! உங்கள் மனம் எப்பொழுதும் ஒரே வடிவ அமைப்பிலேயே திரும்பத் திரும்பச் சென்று கொண்டிருக்கிறது. அதைத் தவற்றிலும் செய்து விடாதீர்கள். புதிய தவறுகளைச் செய்யுங்கள்! நன்றாகப் புரிந்து கொள்ளுதலை நோக்கி மேலும் மேலும் செல்லுங்கள்!
நான் வேண்டுமென்றே தவறுகளைச் செய்யச் சொல்லவில்லை. மீண்டும் அது ஒரு முட்டாள்தனமான செயலாகும். தவறாகி விடுமே என்ற கவலையின்றி, உங்கள் அறிவுக் கூர்மையினாலும், உற்சாகத்தினாலும் செயல்களை நன்றாகச் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன். அது தவறாகி விடுமோ என்று கவலைப்படும் கணத்திலேயே, உங்கள் அஹங்காரம் புண்பட்டுவிடும்என்றுதான்கவலைப்படுகிறீர்கள்.
உங்களது அஹங்காரம் புண்பட்டு விடும் என்பதைப் பற்றி கவலைப்படாத பொழுது, எதிலும் தைரியமாகக் குதித்து விடுவீர்கள். உங்களுடைய பெயரளவிலான எல்லாக் கவலையுமே, உண்மையில் உங்கள் அஹங்காரம் புண்பட்டு விடுவதைப் பற்றித்தான். நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறும்பொழுது, அதிக சுதந்திரத்துடனும், தைரியத்துடனும் செயல்படுவீர்கள். ஆராய்வதில் அதிக விருப்பமுடையவராக இருப்பீர்கள்.
ஒரு சின்ன கதை ...
ஒரு சூதாட்ட விடுதியில், ஒருவன் சீட்டாடி முடித்து விட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் மேலங்கி மாட்டி அருகே
சென்று அவனது மேலங்கியை அணிந்து கொள்ளும் பொழுது, திடீரென்று பின்னாலிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது, ''ஐயா, ஆனால் நீங்கள்தான் திரு.. ஃபிலிப் என்பவரா?''. அவன் திரும்பி, "இல்லை, நான் இல்லை" என்றான். அந்தக்குரல் சொன்னது, "நன்றி கடவுளே! நான்தான் ஃபிலிப், அந்த மேலங்கி என்னுடையது''.
(சிரிப்பு!)
நாம் ஏதேனும் தவறு செய்து நம்மை, நமது அஹங்காரத்தைக் காயப்படுத்திக் அஞ்சுகிறோம். அதனால் அடக்கம் என்று எண்ணிக் கொண்டு, மிகவும் வினயத்துடனும் கடுமைத்தனத்துடனும் செயலாற்றுகிறோம். இவை அஹங்காரத்தின் சாத்வீகமான வடிவங்களைத் தவிர வேறல்ல. உங்களுடைய அஹங்காரம் காயப்பட்டு விடுவதைப் பற்றிய மிகுதியான அச்சத்தில் இருப்பதால், நீங்கள் இவ்வாறான வழிகளில் நடந்து கொள்கிறீர்கள். உங்களுடைய எல்லா அஹங்காரப் பாதுகாப்புகளையும் விட்டு விட்டு சுதந்திரமாகச் செல்லுங்கள்.
கடுமைத்தனத்திலிருந்து விலகிச் சென்று விடுங்கள். எவ்வாறோ, நாம் எப்பொழுதும் ஆன்மீகத்தைக் கடுமைத் தனத்துடன் சம்பந்தப்படுத்தி விடுகிறோம். அது ஒரு தவறான கருத்தாகும். கடுமைத்தனம் ஒருபோதும் மதமாகவோ, ஆன்மீகமாகவோ முடியாது.
நான் ஏன் நிறைய நகைச்சுவைகளும், சின்னச் சின்னக் கதைகளும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள் ? இவற்றையெல்லாம் சொல்லவில்லையென்றால், நீங்கள் மிகவும் கடுமையாகி விட ஆரம்பித்து விடுவீர்கள்; கடுமையாகும் பொழுது, உயிரற்றும், கனத்தும் போய் விடுகிறீர்கள். நீங்கள் உயிர்ப்படையை இலேசாகவும் இருப்பதில்லை. நான் உங்களை கனமாக்குவதற்காக இங்கு வரவில்லை.
கடுமைத்தனம் வாழ்க்கையின் திறந்த தன்மைக்கும் சுதந்திரத்திற்கும் உங்கள் மனதை மூடி விடுகிறது.
உங்கள் வந்திருக்கிறேன். கடுமைத்தனம், உங்கள் அஹங்காரத்தின் ஒரு வடிவத்தைத் தவிர வேறல்ல என்பதைக் காட்டவே, வந்திருக்கிறேன். நீங்கள் எது இல்லையோ, அதைக் காட்டவே நான் வந்திருக்கிறேன். நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதை பலப் படுத்துவதற்காக, நான் இங்கு வரவில்லை.
இறந்தகாலத்தாலும், எதிர்காலத்தாலும் சுமையேற்றப் பட்டிருப்பவர்களே எப்பொழுதும் கடுமையாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தன்னிச்சையாக சிரிப்பது எவ்வாறு என்பது கூடத்து தெரியாது. அவர்கள் இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் தோளில் சுமப்பது தங்கள் கடமை என்றெண்ணி, அதிலேயே கடுமைத் தனத்தடன் ஆழ்ந்து விடுகிறார்கள். இது மிகவும் அஹங்காரம் நிறைந்த ஒரு மனோபாவம். அவர்கள் அதைச் செய்யவில்லையென்றால், அவர்களுக்காக அதைச் செய்வதற்கு யாருமில்லை என்று எண்ணுகிறார்கள்.
முதலில், இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் தோளில் சுமந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. வெறுமனே நிகழ்காலத்தில் இருப்பதே போதுமானது. அவா்கள் நிகழ்காலத்தை முழுவதுமாகத் தவறவிட்டு விடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் சிரிப்பையும் முழுவதுமாகத் தவறவிட்டு விடுகிறார்கள்.
சிரிப்பு என்பது உங்கள் இருப்புத்தன்மையில் இருந்து உடலுக்கு சக்திக்கதிரைக் கொண்டு வருவது. இது உங்கள் முழு இருப்பையும் முழுவதுமாக புத்துயிர் பெறச் செய்கிறது. அதனால், வேறு எதனாலும் முடியாத அளவிற்குக் குணப்படுத்தமுடியும். அதனால், நீங்கள் மற்ற கடினமான தியான முறைகளின் மூலம் அடைய முயற்சி செய்யும் அற்புதமான நிகழ்கால தரிசனத்தை அளிக்க முடியும். சிரிப்பு ஒரு மிகவும் சக்திவாய்ந்த தியான முறையாகும்.
கடுமைத்தனம் தன்னிச்சையான இயல்பைக் கொன்றுவிடுகிறது. படைப்பாற்றலை அழித்துவிடுகிறது.
சிரிப்பு என்பது ஒருமிகஉயர்ந்த ஆன்மீகத்தன்மையாகும். எப்பொழுதும் சிரத்தையும், சிரிப்பும் ஒன்றாகவே இணைந்து செல்லும். நான் முன்பே சொன்னது போல், கடுமைத்தனத்தால் ஒரு போதும் சிரிப்புடன் ஒன்றாக இணைந்து இருக்க முடியாது. நீங்கள் கடுமையாக இருக்கலாம் அல்லது சிரிப்புடன் இருக்கலாம். நீங்கள் சிரத்தையுடன் இருக்கும் பொழுது, சிரித்துக் கொண்டே உங்கள் கடமையைச் சிரத்தையுடன் செய்ய முடியும்.
நம்மில் எத்தனை பேரால் முழுமையாக, இதயம் திறந்து சிரிக்க முடியும்? சிரிப்பதற்குக் கூட நாம் கட்டுப் பாடுகளை வைத்துக் கொண்டிருக்கிறோம்! பண்பான முறையில் சிரிப்பதற்குக் கூட, பெயரளவிலான சமூக ஒழுக்க விதிமுறைகள் உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. குழந்தைகள் சிரிக்கும் பொழுது கூட, அவர்களை நெறிப் படுத்துகிறோம். அவர்களுடைய இயல்பான வழிகளில், நாம் குளிர்ந்த தண்ணீரைத் தெளிப்பதைப் போலச் செயல்படுகிறோம். உடனே, நாம் அவர்கள் போதுமான அளவு சிரித்து விட்டதாகச் சொல்லி விடுகிறோம்! அவர்களது சிரிப்பைக் கூட நெறிப்படுத்த முயற்சி செய்கிறோம்.
தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம், ''ஆம்பள மாதிரி சிரிக்காதே; பொம்பள மாதிரி சிரி'' என்று சொல்வதைக் கேட்டிருக் கிறேன். சிரிப்பை எவ்வாறு பண்படுத்த முடியும் ? சிரிப்பு உங்கள் இருப்புத் தன்மையில் இருந்து வரும் ஒரு விஷயம். நான் சொல்கிறேன், நீங்கள் உங்கள் குழந்தைகளை நெறிப்படுத்துவதெல்லாம், அவர்களையும் உங்களைப் போல் வெறுமனே மந்தமாகவும் நடைப் பிணமாகவும் ஆக்குவதற்குத்தான். நீங்கள் உங்களை முழுமையாகப் பிரதியெடுக்கும் வரை ஒய மாட்டீர்கள்.
கடுமைத்தனம் உங்கள் சிந்தனையைத் தடை செய்து, உங்களை மந்தமாகவும், உயிரற்றதாகவும் ஆக்கிவிடுகிறது.
இந்த வருடம் அமெரிக்கா சென்றிருந்த பொழுது சில குழந்தைகளுடன்கொஞ்சநேரத்தைக்கழித்தேன். அவர்களுடன்சுமார் ஒருமணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களை எவ்வளவு சிரிக்க வைக்க முயன்றும், அவர்கள் சிரிக்காதது கண்டு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இன்றைய நாட்களில் குழந்தைகள் ஒரு போலியான பக்குவத்தைப் பெற்று, சிரிக்காமலேயே சமாளித்து விடுகிறார்கள். குழந்தையிலேயே சிரிக்கவில்லை யென்றால், அவர்கள் வளர்ந்த பிறகு என்ன செய்யப் போகிறார்கள்? என்னால் அதைத் தாங்க முடியவில்லை.
மக்கள், என்னுடைய சிரிப்பு தொற்றும் தன்மை யுடையதாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், முதன்முறையாக, அந்தச் சிறுவர்களுடன், என்னுடைய சிரிப்பு தொற்றும் தன்மையை இழந்தது போல் தோன்றியது! அவர்கள் அதே பக்குவமான முகத்துடன் என்னை வெறுமனே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னையும் கடுமையாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில், அங்கிருந்து வந்து விட்டேன்!
(பலக்க சிரிப்பு)
பாருங்கள், பக்குவத்திற்கும் சிரிப்பைத் தவிர்ப்பதற்கும் சம்பந்தமில்லை. ஆனால், எவ்வாறோ, நாம் பக்குவமடைந்து விட்டால் தானாகவே கொஞ்சமாகத்தான் சிரிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். சிரிப்பு மிகவும் பலம் வாய்ந்தது; ஏனெனில் அது சக்தியை உங்கள் மையத்தில் இருந்து வெளி விளிம்பிற்குக் கொண்டு வருகிறது.
நீங்கள் பெரும்பாலான சமயங்களில் சிரிப்பு மட்டுமே இருக்கும். ஏதோ ஒரு நகைச்சுவையோ அல்லது ஒரு கதையோ சொல்லப்பட்டு, எல்லோரும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். நான் ஒருபோதும்
நமது எல்லாக் கடுமைத்தன்மையும் வெறும் வியாதிதான். கடுமைத்தனம் வியாதியை விளைவிக்கிறது. வியாதி கடுமைத்தன்மையை விளைவிக்கிறது.
கடுமைத்தனம் உள்ளே புக அனுமதிப்பதே இல்லை. ஆசிரமத்தில் என்னுடைய வேலையைச் செய்பவர்களிடம் கூட, கடுமைத்தனம் புக நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
ஒரு சின்ன கதை ...
ஒரு சிறு நகரத்தில் பேசுவதற்காக ஒரு நகைச்சுவை பேச்சாளர் அழைக்கப்பட்டார். அவர் நிகழ்ச்சிக்கு ஒரு பெருங் கூட்டத்துடன் வந்தார். பேச்சாளருடன் வந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கு அமைப்பாளர்களுக்கு ஒரே ஆச்சரியம். பேச்சாளர் அவர்களுடைய வியப்பான பார்வையைச் பார்த்து விட்டுச் சொன்னார், ''இந்நாட்களில் சிரிப்பவர்கள் கிடைப்பதே அபூர்வமாக இருக்கிறது. அதனால் நான் என்னுடைய பார்வையாளர்களையும் அழைத்து வந்து விட்டேன்''.
(சிரிப்பு!)
பெயரளவிலான உயர் வட்டங்களில், மக்கள் சிரிப்பார்கள்; ஆனால் மிகவும் நாகரிகமாக, மிகவும் பண்பட்ட வகையில்! இது உண்மையான சிரிப்பல்ல; உயிரற்ற சிரிப்பு. சிரிப்பை ஒருபோதும் நெறிப்படுத்த முடியாது. நெறிப்படுத்தப்பட்டால், அது சிரிப்பல்ல ; அது நாம் பேசும் தியான மயமான சிரிப்பாக இருக்காது. அது உள்ளிருக்கும் அஹங்காரத்தின் வெறும் வெளிப்பாடாக இருக்கும், அவ்வளவே.
ஒரு நகைச்சுவை சொல்லப்படும் பொழுது, நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்தால், அதைப் பரிந்து கொள்வீர்கள். முதலில் தர்க்கரீதியாகத் தொடர்புடைய சில வாக்கியங்கள் சொல்லப்படுகிறது. நீங்கள் உருவாக்கப்பட்ட தர்க்கத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது, உங்கள் தர்க்கம் ஆட்டம் காணும் வகையிலான, முத்தாய்ப்பான ஒரு வாக்கியம்
நிச்சயமாக நீங்கள் திட்டமிட வேண்டியதுதான். ஆனால், அதை சிரத்தையுடன் செய்யுங்கள்; கடுமையுடன் அல்ல. உதிர்க்கப்படுகிறது! உங்களுடைய தர்க்கம் ஆட்டம் காணும் அந்தக் கணக்கில், உங்களுடைய சிந்தனையும், மனமும் கூட ஆட்டம் கண்டு, நீங்கள் ஒரு மனமற்ற நிலை அல்லது ஸ்த்தோரியில் இருக்கிறீர்கள். நீங்கள் புத்தராக இருக்கிறீர்கள்!
மனமற்ற நிலையில் இருக்கும் பொழுது, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் சிரிக்கும் பொழுது நிகழ்காலத்தில் இருக்கிறீாகள்; ஏனெனில் சிரிக்கும் பொழுது எண்ணங்கள் இருக்க முடியாது. எண்ணமற்று இருக்கும் பொழுது, நீங்கள் நிகழ் காலத்தில் இருக்கிறீர்கள். எண்ணங் களுடன் இருக்கும் பொழுது, நீங்கள் கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோதான் இருப்பீர்கள்.
சிரிப்பு முழுமையானது; அதனால் உங்களை வெறுமனே குணப்படுத்தவும் உருமாற்றவும் முடியும். அதுவே மனித இனத்திற்குச் சிறந்த மற்றும் சுலபமாகக் கிடைக்கும் மருந்தாகும்.
நான் சொல்கிறேன்... மந்தமான மற்றும் உற்சாக மற்ற கணங்களில் மதிப்பற்றது. சிரியுங்கள்; உங்கள் வாழ்க்கையில் சக்தியையும், ஆனந்தத்தையும் உட்புகுத்துங்கள். நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருப்பது என்று தீர்மானியுங்கள். சிரத்தையுடன் இருங்கள்; கடுமையுடன் அல்ல.
நீங்கள் சிரிக்கும் பொழுது, உங்களைச் சுற்றி சக்தியைப் பரப்புகிறீர்கள்; அது தொற்றிக் கொள்ளும் இயல்புடையது; நீங்கள் உங்களைச் சுற்றி குணப்படுத்தக் கூடிய ஆனந்தத்தைப் பரப்புகிறீர்கள். அதனால்தான், நல்ல மனநிலையில் இல்லாத ஒருவர் உள்ளே வரும் பொழுது, அவரைச் சுற்றி அதே மனநிலையைப் பரப்புவதால், அவரைச் சுற்றியுள்ளவர்கள் அதனால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். நான் எப்பொழுதும் மருத்துவர்களிடம்
நீங்கள் கடுமையுடன் இருக்கும் பொழுது மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டீர்கள். சிரிக்க மாட்டீர்கள்.
ஏதாவது தூய்மைப்படுத்தும் தியானத்தைச் செய்யச் சொல்வது வழக்கம்; ஏனெனில் அவர்கள் தொடர்ந்து அதிக எதிர்மறையான எண்ணங்களுடனும், வியாதிகளுடனும் வரும் நோயாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.
சொல்லுங்கள் ...
ஸ்வாமிஜி, அனால் சிரிப்பதற்கு ஏதேனும் காரணம் வேண்டுமே! ஒன்றுமே நகைச்சுவையாக இல்லாத பொழுது, எவ்வாறு வெறுமனே நகைச்சுவை மனப்பான்மையுடன் இருப்பதாகத் தீர்மானிக்க முடியும் ?
நாம் எப்பொழுதும் நம்மைச் சிரிக்க வைப்பதற்கு ஒரு கோமாளியோ அல்லது நகைச்சுவையோ வேண்டும் என்று நினைக்கிறோம். நான் சொல்கிறேன்... நீங்கள் நிகழ்காலத்தில் வாழ ஆரம்பித்தாலே, உங்கள் இருப்புத்தன்மை அழகாகவும், இலேசாகவும் ஆகிவிடும். உங்களுடைய உள் சுவாசம், வெளி சுவாசம், உங்கள் உடலில் உணவு செரித்து குருதியாவது, பிரபஞ்ச இருப்புத்தன்மையில் எல்லா நிகழ்வுகளும் ஒருமித்து நடைபெறுவது, எல்லாமே மிகவும் அற்புதமாக இருக்கும். நீங்கள் மிகவும் ஆனந்தமயமாக உணர்வீர்கள்; எப்பொழுதும் புன்னகைத்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருப்பீர்கள். உங்கள் முழு இருப்புத் தன்மையுமே சிரிப்பையும், ஆனந்தத்தையும் பரப்பிக் கொண்டிருக்கும்.
நகைச்சுவையினால் சிரிப்பது சரிதான்; ஆனால் நீங்கள் பிரபஞ்சஇருப்புத்தன்மையுடன்இசைந்து செல்லும்பொழுது, நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்ச நாடகத்தை வெறுமனே ரசிக்கவும், எல்லாவற்றையுமே கண்டு சிரிக்கவும் செய்வீர்கள். பிறகு கடுமைத்தனத்திற்கோ, அஹங்காரத்திற்கோ இடமே இருக்காது. நீங்கள் திடமாக இருக்க மாட்டீர்கள்.
நீங்கள் சிரத்தையுடன் இருப்பீர்களானால், உங்களால் சிரிப்புடனும், விளையாட்டுத் தன்மையுடனும் இருக்க முடியும்.
மென்மையாகவும், எளிதில் சிரிப்பவராகவும் ஆகிவிடுவீர்கள். பிரபஞ்ச இருப்புத்தன்மையின் விளையாட்டைப் பற்றிய ஆழமான புரிந்து கொள்ளுதலை வளர்த்துக் கொண்டு, எல்லாவற்றையும் பார்த்து சிரிப்பீர்கள்.
ஒவ்வொருவருமே இந்த இந்த விளையாட்டில் பெறுபவர்கள்தான் என்பதையும், ஆனால் அவர்கள் பாத்திரத்துடன் மிகவும் கடுமையாகி விட்டதையும், உங்களால் காண முடிவதால், நீங்கள் அதைக் கண்டு சிரிப்பீர்கள். இந்த விளையாட்டில் எவ்வாறு ஒவ்வொருவரும் கண்டு சிரிப்பீர்கள். நீங்கள் ஒரு விளையாட்டில் இருக்கிறீர்கள் என்ற எண்ணமே உங்களைச் சிரிக்க வைக்கும்! உங்களால் சிரிக்க முடியுமானால், கவனிப்பவராகி விட முடியும்; நீங்கள் கவனிப்பவராகி விட்டால், அஹங்காரமான 'நான்' மற்றும் 'எனது' ஆகியவற்றில் இருந்து பிரிந்து விடுவீர்கள். ஒரு சின்ன கதை ...
ஒருசமயம் புத்தத் துறவிகளிடையே, உண்மையான ஆன்மீகத்தன்மை என்பது என்ன என்பது பற்றிய மாநாடு நடந்தது. ஒவ்வொரு துறவியும் மேடைக்குச் சென்று நீண்ட பிரசங்கங்களை நிகழ்த்தினர். இறுதியில், ஒரு ஜென் துறவியின் முறை வந்தது. அவர் மேடைக்குச் சென்று, வெறுமனே சிரிக்க ஆரம்பித்தார்! சிரித்தார், சிரித்தார், சிரித்துக் கொண்டே இருந்தார்... அவருடைய இருப்புத்தன்மையில் இருந்து! சிரிப்பு அவருடைய அடிவயிற்றில் இருந்து எழுந்தது. அவர் கட்டுப்படுத்த முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். அவரது சிரிப்பு மிகவும் தொற்றிக் கொள்ளும் இயல்புடையதாக இருந்ததால், காரணத்தைக் கூட அறியாமல், வெகு சீக்கிரத்திலேயே அறையில் இருந்த அனைவருமே சிரிக்க ஆரம்பித்து விட்டனர்! துறவிகளுடைய சிரிப்பால், அவர்களை அறியாமல், அந்த அறையில் ஒரு பெரும் நேர்மறை சக்தி அலை
நீங்கள் சிரத்தையுடன் இருப்பீர்களானால், உங்களால் கையிலிருக்கும் வேலையை விளையாட்டாகவும், படைப்பாற்றலுடனும், மகிழ்ச்சியுடனும் செய்ய முடியும். எழும்பியது. துறவிகள் ஒரு உயர்ந்த நிலைக்குச் சென்றனர். அவர்களது எண்ணங்கள் ஆட்டம் கண்டு, இருப்புத்தன்மை ஆனந்தத்தால் நிரம்பியது. இறுதியாக அந்த ஜென் துறவி பேசினார், ''இதுதான் உண்மையான ஆன்மீகத்தன்மை''.
சிரிப்பே உயர்ந்த ஆன்மீகத்தன்மை! அதனால் உங்களை ஞானமடைதலை நோக்கி இட்டுச் செல்ல முடியும். சிரிப்பு ஒரு பெரிய குணப் படுத்தும் சக்தி. உங்கள் நோயைக் கண்டு சிரித்தால், ஆரோக்யம் பெற்று விடுவீர்கள். தூய குணப்படுத்தும் சக்தியான, பிரபஞ்ச இருப்புச் சக்தியுடன் தொடர்பு கொள்வதற்கு அற்புதமான ஒரு வழி சிரிப்பு.
நமது தியான நிகழ்ச்சிகளில், நாம் எப்பொழுதுமே சிரிப்பையும், நடனத்தையும் சேர்த்துக் கொள்வோம். அவை புத்தராவதற்கான சுலபமான வழிகளாகும்! நடனம் உங்களை எளிமையாகவும், இலேசாகவும் ஆக்கி விடும். நடனமும் சிரிப்பைப் போலவே, இன்னொரு சுலபமான மற்றும் மகிழ்ச்சியுடன் செய்யக் கூடிய ஒரு தியானமாகும். உங்களால் கவலையின்றி நடனமாட முடியுமானால், நீங்கள் நடனமாகவே ஆகி விடுவீர்கள். அப்பொழுது உங்களிடமிருந்து சக்தி பீறிட்டுக் கொண்டு வரும்.
உங்களுடைய எல்லா போலி அடையாளங்களிலிருந்தும் விடுதலை பெற்றிருந்தால் மட்டுமே, உங்களால் எதைப் பற்றிய கவலையும் இன்றி நடனமாட முடியும். நீங்கள் 'யாரோ ஒருவராக' இருக்கும் வரை உங்களால் மகிழ்ச்சியுடன் நடனமாட முடியாது. நடனம் உட்புற மகிழ்ச்சியின் வெளிப்புற வெளிப்பாடு. நான், அடுத்த அடி என்ன என்பது தெரிந்து நடனமாடும் முறையான நடனத்தைப் பற்றிப் பேசவில்லை. உங்களுடைய பெயரளவிலான அடையாளங்களை விட்டுவிட்டு, பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஒன்றாக உணர்ந்து, மகிழ்ச்சியுடன் ஆடும் நடனத்தைப் பற்றியே பேசுகிறேன்.
நீங்கள் கடுமையாக இருக்கும்பொழுது, அஹங்காரத்துடன் இருக்கிறீர்கள்.
தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்கள், அஹங்காரமுடையவர்கள். நடனமாடுவதைப் பார்த்து என்ன சொல்வார்களோ என்ற கவலையில் அமைதியாக அமர்ந்து விடுவார்கள். மீண்டும் அவர்கள் தங்கள் அஹங்காரத்தைப் பாதுகாப்பதில், வாழ்க்கையின் மகிழ்ச்சியைத் தவறவிட்டு விடுகிறார்கள்.
குறைந்தபட்சம் எப்பொழுதாவது, உங்கள் வீட்டிலேயே, ஏதேணும் ஒரு இசையைப் போட்டு விட்டு, நடனமாடுங்கள். வெறுமனே விட்டுவிடக் கீர்மானியுங்கள். அது ஒரு தீவிரமான கியானமாகி, உங்களை மனம் கடந்த நிலைக்கு எடுத்துச் சென்று, வார்த்தைகளால் விவரிக்க முடியாத வகையில், உருமாற்றமடையச் செய்து விடக் கூடும். இயல்பாக இருங்கள். அசலாக இருங்கள். உங்கள் நடனத்தை விமரிசிப்பவர்கள், வெறுமனே நடனமாடுவதன் மகிழ்ச்சியைத் தவற விடுபவர்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். வெறுமனே கரைந்து, நீங்களே நடனமாகி விடுங்கள். சிரிப்பும், நடனமும் உங்கள் அஹங்காரத்தை விடுத்து பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலந்து விடும் சுலபமான உத்திகளாகும்.
சொல்லுங்கள்...
ஸ்வாமிஜி, எங்களது அஹங்காரம் போய்விட்டது என்பதை எப்படி அறிந்து கொள்வது?
எளிமையாகச் எப்பொழுது உங்களைத் தனி வஸ்துவாக உணரவில்லையோ, அப்பொழுது உங்கள் அஹங்காரம் கரைந்து விட்டதென்று பொருள். நீங்கள் ஞானமடையும் பொழுது, உங்களுடைய அஹங்காரம் பழுத்து, வெடித்து விடுகிறது. அஹங்காரம் அற்று விடும் பொழுது, நீங்களே இதற்கு முன் அமைத்துக் கொண்ட தடைகள் மறைந்து,
'நான்' என்ற எண்ணம் மிகவும் அதிகமாக இருப்பதால்கான் கடுமையாக இருக்கிறீர்கள்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை வெறுமனே உங்கள் வழியாகப் பாய்கிறது.
உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஏற்றுக் கொள்வீர்களோ இல்லையோ, விரும்புகிறீர்களோ இல்லையோ, பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வழியாகப் பாய்ந்து செல்ல முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நீங்கள்தான் முழுவதுமாக அஹங்காரத்தால் நிறைந்திருப்பதால், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய அஹங்காரத்தினால், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அற்புதங்களைத் தவறவிட்டு விடுகிறீர்கள். நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் தொடர்பு கொள்ள முடியாததால், தொடர்ந்து அஹங்காரத்திலும், அறியாமையிலும், துயரத்திலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் அஹங்காரத்தால் நிறைந்திருப்பதால், உங்கள் சொந்த இருப்புத் தன்மையில் இருந்து, வெகுதூரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்தப் பிறவியில் மட்டுமின்றி, பல பிறவிகளாக சேர்த்து வைத்த, விட்டுவிட வேண்டிய வஸ்து, உங்களுக்குள் உங்களுக்கே இடமில்லை! இதனால், நீங்கள் எப்பொழுதுமே, உங்கள் இருப்புத்தன்மையிலிருந்து செயல்படுவதற்கு பதிலாக, வெளி விளிம்பில் இருந்தே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
உங்களுடைய அஹங்காரம் கரைந்து விடும் பொழுது, நீங்களே இல்லாமல் போய் விடுவதால் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலந்து விடுகிறீர்கள்! ஞானமடைந்த குருமார்கள் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். "எது நீங்கள் இல்லையோ, அதை அழித்துவிடுங்கள்'' என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். மக்கள் என்னை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.
எல்லாமே ஒரு நாடகம்தான் என்பதைப் புரிந்து கொண்டீர்களானால் உங்களால் ஒருபோதும் கடுமையாக இருக்க முடியாது. கடுமையாக இருந்து விடுகிறேன், பிறகு மகிழ்ச்சியாக இருந்து கொள்வேன் என்ற மனோபாவத்தால், நீங்கள் இப்பொழுதோ அல்லது பிறகோ எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள்.
நான் என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் என்பது உங்கள் உள் இருப்புத்தன்மை. அந்த இருப்புத் தன்மையானது இப்பொழுது, எது இல்லையோ அந்த பல்வேறுபட்ட செயல்படும் மற்றும் செயல்படா நிலையில் உள்ள அஹங்காரத்தினால், மாசு அடைந்திருக்கிறது. நீங்கள் அழிக்க வேண்டியதும், ''எது நீங்கள் இல்லையோ, அதை அழித்து விடுங்கள்; விட்டீர்கள்!'' என்று நான் சொல்வதும் இதைத்தான்.
நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான்; உங்களை மற்றவாறு எண்ண வைக்கும் எதுவுமே உங்கள் அஹங்காரம்தான். அவ்வளவுதான். அது எவ்வாறு இருக்கிறதென்றால் ... ஒரு மீன், விருப்பம் இருந்தாலும் இல்லாவிடினும், ஏற்றுக் கொள்ளினும் இல்லாவிடினும், நம்பினாலும் இல்லாவிடினும், கடலின் ஒரு பகுதிதான். அதற்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, கடலில் மகிழ்ச்சியாக வாழ்வது; அல்லது கடலுடன் சண்டையிட்டுக் கொண்டும், வாழ்க்கையைத் துயரமாக்கிக் கொண்டும், அதிலேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்து சென்றால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்க முடியும். நீங்கள் உள்வாங்கும் தன்மையுடனும் உணர்வுபூர்வமாக வும், படைப்பாற்றலுடனும், திரவத் தன்மையுடனும் இருப்பீர்கள். ஒரு சின்ன கதை ...
ஒரு ஆசிரியை தனது மாணவர்களை சுற்றுலாவிற்காக வெளியே அழைத்துச் சென்றாள். அவர்கள் விளையாடினார்கள்; நொறுக்குத் தீனிகளைத் தின்று மகிழ்ந்தார்கள். திடீரென்று, ஆசிரியை அவர்களது கவனத்தை வானத்தில் தோன்றிய ஒரு அழகான வானவில்லை நோக்கித் திருப்பினாள். குழந்தைகள்
வெறுமனே எளிமையாகவும், தன்னிச்சையாகவும் கள்ளங்கபடமற்றும் வாழுங்கள்.
அதை வியப்புடன் பார்த்தனர். அவர்களை கவனித்த ஆசிரியை அறிவித்தாள், ''சரி, இப்பொழுது நாம் இதற்குப் பின்னால் இருக்கும் ஓவியனுக்காகக் கை தட்டுவோம்!''. ஒரு கணம் குழம்பிய மாணவர்கள், உடனே புரிந்து கொண்டு, கரகோஷம் செய்தனர்!
குழந்தைகளுக்கு, அவர்களைச் சுற்றியுள்ள பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அழகைப் பாராட்ட கற்றுத் தரப்பட வேண்டும். இல்லாவிடில், அவர்கள் பிரபஞ்ச இருப்புத் தமையுடனான தொடர்பை வெகு சீக்கிரத்திலேயே இழந்து விட்டு, அஹங்காரம் மிக்கவர்களாகி விடுவார்கள். அவர்கள் அஹங்காரம் மிக்கவர்களாகவும், இயந்திரம் போலாகி விடவும் அனுமதித்து விடக்கூடாது. அவர்கள் மென்மையானவர்களாகவும், உணர்ச்சிமிக்கவர்களாகவும் வளர்க்கப்பட வேண்டும்.
உங்களால் பிரபஞ்ச இருப்புத்தன்மையை உணர்ந்து பாராட்ட முடியுமானால், நீங்கள் அதற்கு அருகாமையில் வந்து விட்டீர்கள் என்று அர்த்தம். முழு இருப்புத் தன்மையுமே படைப்பாற்றல்தான். ஒரு படைப்பாளி, அவனுடைய மூளையை விட, இதயத்திற்கு அருகில் இருக்கிறான். நீங்கள் படைக்கும் பொழுது, கடவுளுக்கு அருகில் இருக்கிறீர்கள். கடவுளே படைப்பவன், படைக்கப் பட்டது மற்றும் படைத்தல். நீங்கள் படைக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்பின்தன்மையான, உங்களுடைய இருப்புத்தன்மையை வெளிப் படுத்துகிறீர்கள். நீங்கள் படைக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் கன்மையை நோக்கியு, உங்கள் அன்பையும், பாராட்டுதலையும் காண்பிக்கிறீர்கள்; பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அழகை இன்னும் கொஞ்சம் கூட்டுகிறீர்கள்.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தமையைப் பற்றிய ஆச்சரியத்தால் நிரம்பியிருப்பீர்களானால், உங்களால் படைக்க முடியும். இன்னொரு பக்கம், நீங்கள் அஹங்காரத்தால்
எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பது ஒரு போதும் ஆனந்தத்தை அளிக்காது; அது உங்கள் அஹங்காரத்தையே நிறைவு செய்கிறது.
நிறைந்திருப்பீர்களானால், உங்களால் படைக்க இயலாது; அவ்வாறு படைத்தாலும், உங்கள் படைப்பு ஒரு உயிரற்ற படைப்பாகவே இருக்கும். அது ஒரு பிளாஸ்டிக் ரோஜாவைப் போல இருக்கும்; எல்லாம் சரியாகக் காணப்பட்டாலும், அதில் மணமோ, உயிரோ இருக்காது. ஒரு படைப்பாளி அன்பினால் படைக்கும் பொழுது, அவனால் படைப்புக்கு ஏதோ ஒரு சிறப்பான தன்மையைத் தர முடியும். ஆனால் அஹங்காரத்தினால் படைக்கும் பொழுது, படைப்பில் உயிர் இருக்காது.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக இல்லாத பொழுது, அதன் நறுமணத்தைத் தவறவிட்டு விடுவீர்கள். அது, நீங்கள் ஒரு அற்புதமான நறுமணத்தால் சூழப்பட்டிருக்கும் பொழுது, உங்கள் நாசியை நாற்ற மெடுக்கும் விரல்களால் மூடிக் கொண்டு இருப்பதைப் போல இருக்கிறது. இதுதான் அஹங்காரம். நீங்கள் பிரபஞ்சத்தின் நறுமணத்தை உணரும் பொழுது, அதன் ஒருமித்த நிகழ்வையும் உணர ஆரம்பிப்பீர்கள்.
நீங்கள் முழு பிரபஞ்ச இருப்புத் தமையுடனும் ஒத்திசை வாக இருப்பீர்கள். ஒவ்வொரு இலையும், சிறு கிளையும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அல்லது கடவுளின் வெளிப்பாடே என்பதை உங்களால் காண முடியும். இந்த நிலையில் இருக்கும் பொழுது, நீங்கள் தேடுவது அனைத்தும் கிடைக்கும் ; ஏனெனில் நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்து கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது வாழ்க்கையே ஒரு அற்புதமாகி விடும்! இதைத்தான் நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒருமித்த நிகழ்வு என்கிறோம்.
மேலும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ... நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஒத்திசைவுடன் இருக்கும் பொழுது, பேராசையுடன் எதையும் தேடிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
தவறு செய்வதில் தவறென்ன இருக்கிறது? ஒரே ஒரு விஷயம் ... அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்.
வெறுமனே, பிரபஞ்ச இருப்புத் தமையே, நீங்கள் தேடுவதற்கும் முன்பே, உங்களுக்கு அந்தக் கணத்திற்கு என்ன தேவையோ, அதைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். 'நீங்கள் தேடுவது கிடைக்கும்' என்று நான் சொன்னது இதைத்தான்.
பிரச்சினை என்னவென்றால், நமது மூலமும், நமக்குள் வெகு ஆழத்தில் பொதிந்து கிடப்பதுமான பிரபஞ்ச இருப்புத்தன்மையில் இருந்து நம்மை தூரப்படுத்திக் கொண்டு விட்டோம். அதனால் அதைத் தொடர்ந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. முதலில் நம்மைச் சுற்றியிருக்கும் அழகை ஆராதிப்பதன் மூலமும் பாராட்டுவதன் மூலமும் நமது அணங்காரத்தை விட ஆரம்பிக்க முடியும். அதுவே உருமாற்றத்திற்கான விதையை உங்களுக்குள் விதைக்கத் தொடங்கி விடும். அதுவே உங்களுக்கு, உங்களுடைய அஹங்காரத்தை விட பலம் பொருந்திய உயிர்ச்சக்தி ஒன்று இந்தப் பிரபஞ்சத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிய வைத்து விடும்.
நீங்கள்உங்களை எவ்வளவுக்கெவ்வளவு இந்தப்பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் இழக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவரங்காரமற்று விடுவீர்கள். எந்த அளவிற்கு அவறங்காரமற்று இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களை இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு இழந்து விடுவீர்கள்.
சொல்லுங்கள் ...
ஸ்வாமிஜி, அஹங்காரத்தைச் சரணாகதி செய்து விட வேண்டும் என்பதை புத்திபூர்வமாக அறிந்திருந்தாலும், எங்களால் செய்ய முடியவில்லையே, ஏன்?
பாருங்கள், மனிதன் ஒருபோதும் முழுமையாக விட்டுவிட விரும்புவதில்லை. அவன் எப்பொழுதும் எதையாவது பற்றிக்
உங்களது அஹங்காரம் புண்பட்டு விடும் என்பதைப்பற்றிக் கவலைப்படாத பொழுது, எதிலும் தைரியமாகக் குதித்து விடுவீர்கள்.
கொண்டிருக்கவே விரும்புகிறான் ; அந்த எதையாவது என்பது அவன் அஹங்காரம்தான். உங்கள் அஹங்காரம்தான் உங்கள் பலம். இதைப் பன்னெடுங்காலமாக நன்றாகவே பாதுகாத்து வந்திருக்கிறீர்கள். அதுவே உங்கள் இருப்பின் அடிப்படையாகவும் இருக்கிறது.
உங்களுடைய அஹங்காரத்தைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதையும், அது இப்பொழுது நீங்கள் இருப்பதை விட மிக ஆனந்தமயமாக இருக்கிறது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. அஹங்காரமே உங்கள் உயிர் ஆதார வஸ்துவாக இருக்கிறது. ஆனால் என்னவெனில்-நீங்கள் அதை விட்டுவிட வேண்டியது தான்!
அது எவ்வாறு இருக்கிறதென்றால் ... ஒரு விதை விதைக்கப்படுகிறது; அது பிளந்து கொண்டால்தானே மரமாக வளர் முடியும், இல்லையா? அது மரம் வளர்வதற்காகக் காத்திருந்து பிறகு பிளந்து கொள்ளலாம் என்று எண்ணினால், அது சாத்தியமாகுமா? அவ்வாறு இல்லை. அதே போல், மனிதனுடைய அஹங்காரமும் பிளந்து கொண்டால்தான் அவனால் மலர முடியும். அவன் எவ்வளவு தூரம் தன் அஹங்காரத்தைப் பாதுகாக்கிறானோ, அவ்வளவு தூரம் தன் மலர்தலைத் தள்ளிப் போடுகிறான், அவ்வளவே.
மனிதன் தன் குருவைச் சந்திக்கும் வரை, அவனுடைய தடைகள் எங்கிருக்கிறது, அஹங்காரம் எங்கு அவனுக்குத் தடையாக நிற்கிறது என்பதைக் கூட அவன் அறியாமல் இருக்கக் கூடும். ஆனால் அவன் ஒரு முறை தன் குருவைச் சந்தித்து விட்டாலே, திறவுகோலைக் கண்டுபிடித்து விடுகிறான்! அதை உபயோகிப்பது அவன் கையில்தான் இருக்கிறது. குருவின் ஒரே நோக்கம், தனது சீடர்களின் அஹங்காரத்தைக் கிழித்து எறிவதே.
சிரிப்பு ஒரு மிகவும் சக்தி வாய்ந்த தியான முறையாகும். அது ஒரு மிக உயர்ந்த ஆன்மீகத் தன்மை.
ஒரு குருவின் சொற்களும், செயல்களும் வெளியில் இருந்து பார்க்கும்பொழுது சம்பந்தமற்றதாகவும், பொருத்த மற்றதாகவும் தோன்றலாம். ஆனால் அது உண்மையைச் சுமந்து கொண்டிருக்கிறது; உங்கள் அஹங்காரத்தை அழித்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தைத்தான் சுமந்து கொண்டிருக்கிறது. மனித இனத்தின் மீதான வெறும் பரிவினால் மட்டுமே குருவானவர் கீழிறங்கி வருகிறார். அவர் எதன் மீதும் அல்லது எவர் மீதும் எந்த விதமான சுயநலமும் இல்லாமல் இருக்கிறார். அவர் ஆபத்தான ஆசைப் பெருங்கடலைக் கடந்தவர். அவர் இங்கிருப்பதன் காரணம், வெறுமனே உங்களையும் அவர் நிலைக்கு - 'நான்' என்ற உணர்வற்று வெறும் விழிப்புணர்வு மட்டுமே இருக்கும் எல்லையற்ற ஆனந்த நிலைக்கு - உயர்த்துவதற்காகவே!
பெண் சக்தியான, தேவியின் மீதான 700 சுலோகங்கள் அடங்கிய, சமஸ்கிருதத்தில் அமைந்த சண்டி ஸ்தோத்திரத்தில், சண்டி தேவி எவ்வாறு பல்வேறு தீய ராக்ஷஸர்களை அழிக்கிறாள் என்பது சொல்லப்படுகிறது. அது, அவள் உண்மையிலேயே மனிதர்களை அழித்தாள் என்பதல்ல. அவள் நிஜ மனிதர்களை கொன்றிருந்தால், ஜெயிலுக்குச் சென்றிருப்பாள்; நாமும் அவளை ஸ்தோத்திரங்களின் வாயிலாக வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டோம் ! அவள் குற்றவியல் சட்டத்தின் கீழ் வந்திருப்பாள்!
அசுரர்கள் என்பது மனிதனுக்குள் இருக்கும் பல விதமான தீய குணங்கள் அல்லது அஹங்காரத்தைக் குறிக்கிறது; இந்த அஹங்காரத்தைத்தான் தேவி அழித்து அவனுக்கு அவற்றிடமிருந்து விடுதலை கொடுக்கிறாள். அதைப் புரிந்து கொள்ள வேண்டும். மகிஷத் தலையுடன் ஒரு அசுரன்! இது சிலரது எருமைத் தோலை நமக்குப் புரிய வைக்கத்தான்! குரு நம்மை எத்தனை முறை எழுப்பி அவரது பாதையில் திருப்பி விட்டாலும், நாம் நமது
சிரிப்பதற்குக் கூட நாம் கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டிருக்கிறோம்.
பாகையைவிடாமல் பற்றிக் கொண்டு இருக்கிறோம்! நாம் குருவின் அழைப்பிற்கு உள்வாங்கும் தன்மையற்றும், உணர்ச்சியற்றும் இருக்கிறோம்.
பாருங்கள், குருவுடன் வாதம் செய்வது, நீங்களே உங்களுக்குக் கொடுத்துக் கொள்ளும் மிகப்பெரிய தண்டனை. நான் நேர்மையுடன் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் குருவுடன் வாதம் செய்வதில் சிக்கிக் கொண்டு விட்டால், உங்களுக்கு இதை விடப் பெரிய தீங்கை யாராலும் செய்து விட முடியாது. நீங்கள் குருவுடன் வாதம் செய்யும் பொழுது, உங்களுக்கே போதுமான அளவிற்கு தீங்கு செய்து கொள்கிறீர்கள். ஒவ்வொருவரையும் அவரவர்க்கேற்ற வகையில் எவ்வாறு மலர வைக்க வேண்டும் என்பது குருவிற்குத் தெரியும்; நாம் செய்ய வேண்டியதெல்லாம்; விசுவாசத்துடனும், தைரியத்துடனும் அவருக்குத் திறந்து இருப்பதே.
சொல்லுங்கள் ...