மஹா மந்திர தியானம்
(நீடிக்கும் நேரம் : 30 நிமிடங்கள்)
இந்த தியானம் உங்களுக்குள் ஒரு நல்ல சக்தி ஓட்டத்தை உருவாக்கும். இந்த தியான முறை உங்கள் விளிம்பு வரை சக்தியால் நிரப்புகிறது. உங்களுக்குள் தளும்பிக் கொண்டிருக்கும் சக்தியின் விளைவாக, மற்றவர்களின் கவனத்திற்காக ஏங்கிக் கொண்டு இருக்காமல் நீங்களே சக்தியையும் அன்பையும் அளிக்க ஆரம்பித்து விடுவீர்கள். இந்த தியானம் செய்யும் பொழுது உங்கள் மாலையை கழுத்தைச் சுற்றி அணிந்து கொள்ளலாம். அது நீங்கள் இந்த தியானம் செய்யும் பொழுது உருவாகும் சக்தியைச் சேமித்து வைத்துக் கொள்ளும்.
இந்த தியானம் உங்கள் மனதை உறுதியாகவும் நிலை யாகவும் ஆக்கும். உங்கள் மனம் எப்பொழுதும் எண்ணங்களால் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த தியானம் உங்கள் மனதை மனமற்ற நிலைக்கு எடுத்துச் செல்வதன் மூலம் அமைதி யாகவும் அசைவற்றும் ஆக்கி விடுகிறது. இது எல்லையற்ற தன் மைக்குள் நுழைவதற்கான ஒரு குதிபலகை போல இருக்கிறது. இது ஒரு பழமையான திபெத்திய புத்தமத உத்தியாகும்.
இதை வெறும் வயிற்றில் அதிகாலையிலோ, அல்லது உணவிற்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்தோ செய்ய வேண்டும். இதைத் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ செய்யலாம். ஒரு குழுவாகச் செய்யும் பொழுது, செய்யுமிடத்தை நன்றாகச் சக்தியூட்டி விடுகிறது.
இப்பொழுது அதை எவ்வாறு செய்வது என்பதை விளக்குகிறேன்.
கால்களைச் சப்பணமிட்டு, தரையில், ஒரு வசதியான நிலையில், அமருங்கள். உங்கள் தலை, கழுத்து மற்றும் முதுகுத் தண்டு
மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமரலாம். கண்களை மூடி தளர்வுடன் இருங்கள். நாம் கண்களை மூடிய பிறகும், இமைகளுக்குப் பின்னால் வடிவங்களையும் உருவங்களையும் காண்கிறோம். இதைக் கையாள்வதற்கு கருவிழிகள் கற்களைப் போலாகி விட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மனதினால் அழுத்தத்தை ஏற்படுத்தி அவற்றைக் கடினமாக்கி விடுங்கள்; பிறகு உருவங்கள் மறைந்து விடும். நமது கண்களின் அசைவிற்கும், மனதிலுள்ள எண்ணங்களின் அசைவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால்தான் கண் விழிகளின் அசைவை நிறுத்துமாறு சொல்லப்படுகிறது. அவற்றை நிறுத்தி வைத்ததைப் பற்றி மிகவும் கவலைப் படாதீர்கள். தியானத்தைத் தொடர்ந்து செய்யுங்கள்.
உதடுகளைப் பிரிக்காமல் ஒன்றாக வைத்துக்கொண்டு 'ம்ம்ம்ம்…' என்ற ஒலியை உள்ளிருந்து எழுப்புங்கள். உங்கள் முகத்தை ஒரு காலி அலுமினியப் பாத்திரத்திற்குள் வைத்துக் கொண்டு ஒரு ரீங்கார ஒலியை எழுப்பினால் அதிலிருந்து எழும் ஒலி இவ்வாறுதான் இருக்கும். அது 'ஹம்…' அல்லது 'ஒம்…' அல்ல என்பதைக் கவனியுங்கள்; அது வெறுமனே உங்கள் உதடுகளைச் சேர்த்து வைத்துக் கொண்டு 'ம்ம்ம்ம்ம் ...' என்ற ஒலியை எழுப்புவதாகும். இந்த ரீங்காரம், அடுத்து மூச்சை எடுப்பதற்கு முன்னால் எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக இருக்க வேண்டும். அது தொப்புள் மையத்தில் இருந்து முடிந்த அளவு ஆழமாகவும், முடிந்த அளவு உரக்கவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு 'ம்ம்ம்ம்...' மிற்குப் பிறகும், ஆழமாக முச்சை எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். தேவையான பொழுது உடலே மூச்சை எடுத்துக் கொள்ளும். இறுக்கமாகி விடாதீர்கள். இந்த அதிர்வை உருவாக்க உங்கள் முழு இருப்புத்தன்மையையும் சக்தியையும் உபயோகப்படுத்துங்கள். நீங்களே ரீங்காரமாகி
விடுங்கள். உங்கள் உஉடல் முழுவதும், ரீங்காரத்தினால் உருவாகும் அதிர்வினால் நிரம்பட்டும். சிறிது நேரத்தில் உங்கள் முயற்சியின்றியே ரீங்காரம் தொடர்வதை உணர்வீர்கள்; நீங்கள் வெறுமனே கேட்பவராகி விடுவீர்கள்!
20 நிமிடங்களுக்குப் பிறகு ரீங்காரம் செய்வதை நிறுத்துங் கள். நீங்கள் ஒலி நாடாவைப் போட்டிருந்தால், 'ஸ்டாப்!' என்பதைக் கேட்டவுடன், அப்படியே நிறுத்தி விடுங்கள்.
ரீங்காரம் செய்வதை நிறுத்திய பிறகு கண்களை மூடிய நிலையிலேயே 10 நிமிடங்கள் அமைதியாகவும், செயலற்றும், புன்னகை தவழும் முகத்துடனும், ஆனந்த மயமான மனோ நிலையிலும் இருங்கள். ஏதேனும் எண்ணம் வந்தால் வரட்டும். உங்கள் மனதை ஒரு தொலைக் காட்சியைப் பார்ப்பது போல், எண்ணங்களை எதிர்க்காமலும் அல்லது அவற்றை எடை போடாமலும் வெறுமனே கவனியுங்கள். அமைதியாகவும் ஆனந்த மயமாகவும் இருங்கள். இப்பொழுது 20 நிமிட ரீங்காரத்தினால் உருவான சக்தி உங்கள் இருப்புத்தன்மையின் எல்லா மூலை முடுக்குகளிலும் நுழைந்து, அதை ஆழமாகச் சுத்தம் செய்து விடும்.
(பங்கேற்பாளர்கள் மென்மையான இசையுடன் மஹா மந்திர தியானம் செய்கிறார்கள்)