KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/கவனத்தேவையை விட்டுவிடுதல்Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

கவனத்தேவையை விட்டுவிடுதல்

- மஹா மந்திர தியானம் -

- அனாஹத சக்கரம் -

இந்தச் சக்கரம் இதயப்பகுதியில் இருக்கிறது.

சமஸ்கிருதத்தில், அனாஹதா என்றால் 'உருவாக்க முடியாதது' என்று பொருள்.

மற்றவர்களின் கவனத்திற்காகவும், அன்பிற்காகவும் ஏங்கும் பொழுது, இந்தச் சக்கரமானது பூட்டப்படுகிறது. (அடைபடுகிறது).

சுயாலமற்ற அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் இந்தச் சக்கரத்தை மலரச் செய்யலாம்!

தியான முறை: மஹா மந்திர தியானம் - திபெத்திய புத்த மதத்திலிருந்து எடுக்கப்பட்டது.

அனாஹத சக்கரமானது அன்பு, தனி மனித நம்பிக்கைகள் மற்றும் அதைப் போன்ற உணர்ச்சிகள் தொடர்புடையது. நமது அன்பை வெளிப்படுத்தாமல், தொடர்ந்து மற்றவர்களின் கவனத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பதனால், இந்தச் சக்கரமானது பூட்டப்படுகிறது. அதன் பொருள் 'உருவாக்க முடியாதது' என்பதாகும். அது குறிப்பது, உண்மையான அன்பு வெளியில் இருந்து உருவாக்கப்பட முடியாதது; அது உங்களுக்குள் நிகழ வேண்டும்; உங்களுக்குள் ஒரு ஆழமான விழிப்புணர்வு ஏற்படும் பொழுதுதான் அது நிகழ்கிறது.

Dropping Attention - need

உண்மையான அன்பு நிகழும் பொழுது, நாம் மற்றவர் களின் கவனத்திற்காக ஏங்குவதை விட்டு விட்டு, நாமே ஒரு சக்தி மூலமாகி விடுகிறோம்.

கவனத்திற்காக ஏங்குதல்- என்றால் என்ன ?

பாருங்கள், நாம் எதைச் செய்தாலிம், எதை எண்ணினாலும், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும், நமது உள்மனதிலிருந்து சில நட்பமான வழிகளில் நற்பெயரைச் சம்பாதிப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறோம். இதை வெளிப்படையாகச் செய்யாமல் இருக்கலாம். ஆனால், ஆழ்ந்து ஆராய்வோமாயின், நாம் நம்மைச் சகுழ்ந்துள்ள மக்களின் பாராட்டுதல்களும் அங்கீகாரமும் இல்லாமல் அமைதி அடைவதில்லை. இந்த அங்கீகாரத்தையும், அனுமதியையுமே நாம் 'கவனத்தேவை' என்கிறோம்.

80% அல்லது அங்கீகாரத்தைக் கோருதலே. சாதாரணமாக அமர்ந்து குறிப்பெடுத்துப் பார்த்தால், நாம் ஒரு நல்ல பெயரை வாங்கவும், நமது புகழை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒரு நாளில் எத்தனை விஷயங்களைச் செய்கிரோம் என்பது தெரியும்.

ரீங்கள் 24 மணிநேரமும், வாழ்நாள் முழுவதும், மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு கண்டு கொள்வீர்கள். வாழ்நாள் முழுவதும், குடும்பத்தினரிடமிருந்தும், சமூகத்திலிருந் தும் அங்கீகாரக் கையெழுத்தைப் பெறுவதற்கு, ஒரு கையெழுத்து வேட்டையே நடத்திக் கொண்டிருக்கிறோம்.

உங்களது எல்லாச் செயல்களும், எல்லா முயற்சி களும், உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களின் கையெழுத்தைப்

பெறுவதற்காகவே அமைகிறது. ஒரு பெரிய பெரிய பெதிவேட்டில் 'நல்ல தந்தை' என்பதன் கீழ், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குச் செய்ததையெல்லாம் கையெழுத்தைப் போட வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்! பிறகு உங்கள் மனைவியிடமும், மேலதிகாரியிடமும், நண்பர் களிடமும் செல்கிறீர்கள். நீங்கள் நல்ல கணவன், நல்ல ஊழியர், நல்ல நண்பன் என்றெல்லாம் பொருத்தமான தலைப்புகளிட்டு அதனடியில் அவர்களது கையெழுத்திற்காகக் காத்திருக்கிறீர்கள். நீங்கள் எப்பொழுதும் அங்கீகாரக் கையெழுத்திற்காகவே வேண்டி நிற்கிறீர்கள், அவ்வளவே!

அதேபோல, மற்ற அனைவரும் உங்கள் கையெழுத் திற்காக பதிவேட்டில் உரிய இடத்தில் கையெழுத்திட வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் தொடர்ந்து கையெழுத்து வேட்டையில் இருந்து கொண்டிருக்கிறோம். நாம் சமூகத்திலிருந்து எத்தனை முடியுமோ அத்தனை நல்-அபிப்பிராயத்தைச் சேகரித்து, நமது மதிப்பை நமக்கும் சமூகத்திற்கும் நிரூபிக்க வேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

நாம் ஏன் நம்மைப் பற்றிய மற்றவர்களின் அபிப் பிராயத்திற்காக இத்தனை கஷ்டப்பட வேண்டும் ? நமது சொந்த சக்தியால், நாமே ஏன் நம்மை மதிப்பிட்டுக் கொண்டு வேலையைத் தொடரக்கூடாது? நாம் ஏன் மற்றவர்களிடமிருந்து ஆற்றலைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் ? இவற்றிற்கெல்லாம் காரணம் இரண்டு விஷயங்கட்கான்: ஒன்று, நமக்கு நம்மைப் பற்றி எதுவுமே தெரியாது. நமக்கு நம்மைப் பற்றி தெரிந்ததெல்லாம் மற்றவர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் சான்றிதழ்கள் மூலம்தான். இரண்டாவது: மற்றவர்களெல்லாம் நமக்கு அங்கீகாரத்தையும்

நாம் அனைவரிடமும் நற்பெயரைச் சம்பாதிப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறோம்.

கவனத்தையும் தரும் பொழுது, உண்மையில் அவர்கள் தருவது மேலே செல்வதற்கான சக்தியைத்தான். கவனமே சக்தி! அதனால்தான் மற்றவர்கள் கவனத்தைத் தரும் பொழுது மேலும் ஊக்கமடைவதாக உணர்கிறோம்.

நமக்கு கவனம் எந்த வடிவத்தில் இருந்தாலும் சரிதான். பல வீடுகளில் மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டேயிருக்கின்றனர். அந்தப் பாவப்பட்ட மனிதனான மகன் அல்லது கணவனிடம் ஒருவரைப் பற்றி மற்றொருவர் தொடர்ந்து புகார் கூறிக் கொண்டே யிருக்கின்றனர். ஆனால் அந்த இருவரில் ஒருவர் சில நாட்களுக்கு ஊரை விட்டு வெளியே சென்று விட்டால், என்ன நிகழ்கிறது? மற்றவர் அவரை இழந்ததாக உணரத் தொடங்கு கிறார்! அவர்கள் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டாலும், இருவரும் சேர்ந்திராத பொழுது ஒருவரை மற்றவர் இழந்ததாக உணர்கிறார்கள்.

ஏன் இது நிகழ்கிறது? அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது, உண்மையில் அந்த அளவிற்கு தன் மீது மற்றவரின் கவனத்தைப் பெறுகின்றனர்! நேர்மறையான கவனம்தான் சக்தியூட்டக்கூடியது என்று எண்ணாதீர்கள்! கவனம் எந்த வடிவத்திலும் சக்தியூட்டக் கூடியது.

இருவருமே சண்டையிடும்பொழுது கிடைக்கும் மற்றவரின் கவனத்தினால் உள்மனதளவில் மகிழ்ச்சியடைகின்றனர். அதனால் தான் மற்றவரை இழந்ததாக உணர்கிறார்கள். உண்மையில் அவர்கள் இழந்தது கவனத்தைதான்! ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் இழந்ததாக உணரத் தொடங்கும் பொழுது, அதை அன்பென்று அழைக்கின்றனர்! அவர்கள் ஒருவரையொருவர் இழந்ததாக உணர்வதற்குக் காரணம் அன்புதான் என்று சொல்கின்றனர்.

ரீங்கள் 24 மணி நேரமும் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

அது நிச்சயமாக சாக்தியம்தான்: ஆனால் நம்மை நல்ல மனநிலையில் வைக்கிருக்கும் அந்தக் கவனம் சக்கியைத் தவிர வேறில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது நட்பமான வடிவில் நமக்கு சக்தியூட்டுகிறது. ஆனால் இது நமக்குத் தெரிவதில்லை. பரிந்து கொள்ளுங்கள்: நமக்கு ஏதோ ஒன்று தேவையாக இருக்கும்பொழுது, அந்த ஏதோ ஒன்று அன்பல்ல; அது கவனம். உங்களுக்கு அன்பு தேவையல்ல; நீங்களே அன்புதான். அதனால் நீங்கள் அன்பு தேவை என்று சொல்லும் பொழுது, உங்கள் மீது அன்பு செலுத்தப்பட வேண்டும் என்று நீங்கள் சொல்லும் பொழுது, உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படுவது கவனம்தான். அன்பல்ல.

மக்கள் என்னிடம் வந்து, அவர்களது வயதான காலத்தில், அவர்களது மகன்களும் மகள்களும் போதுமான அன்பு செலுத்துவதில்லை என்று கூறுகின்றனர். அதன் பொருள் என்னவென்றால், அவர்களது மகன்களும் மகள்களும் அவர்களது வயதான காலத்திற்குத் தேவையான சக்தியைத் தரும் கவனம் செலுத்தவில்லை என்பதே.

உண்மையில் நமக்குள்ளிருக்கும் பிரபஞ்ச இருப்புச்சக்தியை உணரும், வளர்ந்து கொண்டிருக்கும் நுட்பமான உணர்வினால், நாம் நமக்குள் அதிகமாக மையங்கொண்டிருக்க வேண்டும். ஆனால் என்ன நிகழ்கிறதென்றால், நம் வாழ்க்கை முழுவதும் கவனத்திற்கும், சக்திக்கும் மற்றவர்களைச் சார்ந்திருந்ததால், நமக்குத் தெரிந்த அன்பு உறவுகளில் மட்டுமே இருந்ததால், நமக்குள் இருப்பதைப் பற்றிய விழிப்புணர்வும் நுட்பமான உணர்வும் இல்லாமல் வாழ்ந்து விட்டதால், வயதான காலத்தில், வெளியிலிருந்து வந்த அன்பையும், வெளியிலிருந்து வந்த கவனத்தையும் இழக்கத் தொடங்குகிறோம்.

நாம் ஏன் நம்மைப் பற்றிய மற்றவர்களின் அபிப்பிராயத்திற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் ?

உங்கள் குடும்பம் மற்ற விஷயங்களில் சுறுசுறுப்பாகிவிடுவதால், உங்களுடன் முன்பு போல கலந்தாலோசிப்பதில்லை. அதனால் வயதாக ஆக புகார் கூறத் தொடங்குகிறோம்.

உங்களது சக்தியின் மையம் வெளியே எங்கும் இல்லை, உள்ளேதான் இருக்கிறது என்ற புரிந்து கொள்ளுதலும் விழிப்புணர்வும், பெயரளவிலான உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் இல்லாததுதான், உண்மையில் நீங்கள் புகார் கூறுவதற்கான காரணம். அதனால்தான் வயதாக ஆக, வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியுடனும், மிகுந்த சக்தியுடனும் வாழாமல், குறைந்த சக்தியுடன் வாழ்கிறீர்கள். உங்கள் சக்தியின் மூலமான உங்களைச் சூழ்ந்துள்ள மக்கள், முன்பு போல, சக்தியைத் தருவதில்லை.

நீங்கள் வெளியிலிருந்து கிடைக்கும் சக்தியைச் சார்ந்திருந்தீர்களானால், உளவியல் ரீதியான குறைபாட்டுடன் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களுக்கு உடல் ரீதியான உதவி தேவை என்றால் நீங்கள் உடல் குறைபாடுள்ளவர் ; உங்களுக்கு உளவியல் ரீதியான உதவி தேவை என்றால், நீங்கள் மனக் குறைபாடுள்ளவர், அவ்வளவுதான்.

உடல் குறைபாடுள்ள பட்சத்தில், உங்களுக்கு நீங்கள் குறைபாடுள்ளவர் என்பது தெரியும். ஏனெனில் நீங்கள் அதை தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால் மனக் குறைபாடுள்ள பட்சத்தில், நீங்கள் குறைபாடுள்ளவர் என்பது கூட உங்களுக்குத் தெரியாது. அதை நீங்கள் அறிவது கூட இல்லை. அதை அறியாத பட்சத்தில், அதனால் வரும் பின்விளைவுகளையும் அறியமாட்டீர்கள்.

பின் விளைவுகள் அல்லது நோய்கள் வரும் பொழுது, நீங்கள், இது எதனால் என்று ஆச்சரியப்படுகிறீர்கள்.

நீங்கள், குழந்தைகள் விளையாடும் பொழுது, சீட்டுக் கட்டுகளை வைத்து, கோட்டைகள் கட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் சீட்டுகளை ஒரு மாதிரியான கோணத்தில் வைத்து ஒருவிதமான அமைப்பில் பல அடுக்குகளை ஒரு பிரமிடு வடிவத்தில் கட்டுவார்கள். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அதில் எங்கிருந்தாவது ஒரே ஒரு சீட்டை உருவினால் கூட, அந்தக் கோட்டை மொத்தமும் தகர்ந்து விடும்! கோட்டை பெரிதாக ஆக, தகர்ந்து விடும் வாய்ப்பும் அதிகமாகும்.

அது போன்றே, நம்மைப் பற்றிய மற்றவர்களின் அபிப்பிராயத்திலிருந்து, அந்தக் கோட்டையைப் போல ஒரு சுயதோற்றத்தை உருவாக்கி வைத்து உள்ளோம். நமது தந்தை, தாய், காதலன், காதலி, ஆசிரியர் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடம் கையெழுத்து அல்லது நற்சான்றிதழ்களைச் சேகரித்து அவற்றால் நமது சுய-தோற்றம் எனும் கோட்டையைக் கட்டியிருக்கிறோம். அந்தத் தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

அனால் அதில் ஏதோ ஒருவர் தனது கையெழுத்தை அழித்து விட்டாலோ அல்லது சான்றிதழை திரும்பப் பெற்று விட்டாலோ, என்ன ஆகிறது? கோட்டை தகர்கிறது! நீங்கள் மிகவும் துன்பமடைகிறீர்கள், மனச்சோர்வு அடைகிறீர்கள்; உலகம் முழுவதுமே ஒரு முடிவுக்கு வந்து விட்டது போல உணர்கிறீர்கள்.

பாருங்கள், குழந்தைகள் விஷயத்திலாவது, கோட்டையை அவர்கள் கட்டுவார்கள். நாமோ, நமது கோட்டையை மற்றவர்களின் சீட்டுகளையும், சான்றிதழ்களையும் வைத்தல்லவா கட்டுகிறோம்! கோட்டை நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஏனெனில் அது மற்றவர்களின் சான்றுகளைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.

உங்களுக்குள் அன்பு தேவையில்லை - நீங்களே அன்புதான்

அதனால் நாம் என்ன செய்கிறோம் ? கோட்டையைப் பராமரிக்கவும், நன்றாகப் பாதுகாக்கவும், கடினமாக உழைக்கத் தொடங்குகிறோம். மக்கள் தங்கள் கையெழுத்தையும், சான்றிதழ்களையும் திரும்ப எடுத்துக் கொள்ளாத வகையில் நடந்து கொள்ளத் தொடங்குகிறோம். அவர்களது அங்கீகாரம் தொடர்ந்து கிடைக்கும் வகையில் செயலாற்றத் தொடங்குகிறோம். ஏனெனில் அவர்களது அங்கீகாரமே நமக்கு ரொட்டியும் வெண்ணையும் (சக்தி) ஆகிறது.

ஒரு சின்ன கதை ...

ஒரு பெண்மணி அவளது கணவனுடன் கடைக்குச் சென்றாள். அவளுக்கு ஒரு மேலங்கி வாங்க விரும்பினாள். அவர்கள் பல கடைகளுக்குச் சென்ற போதிலும் அவளுக்கு விருப்பமானது கிடைக்கவில்லை. கணவன் சோர்வடைந்தான். அவன், 'அன்பே, உனக்கு நீ என்ன மாதிரியான மேலங்கியை வாங்க விரும்புகிறாய் என்று தெரியுமா?' என்று கேட்டான். மனைவி சொன்னாள், '' ஆம் அன்பே! செத்து விழும் மேலங்கி ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறேன்''. அவள் என்ன சொன்னாள் என்பது கணவனுக்குப் புரியவில்லை. அவன் கேட்டான், ''செத்து விழும் மேலங்கி என்பது என்ன, அன்பே ?''. மனைவி சொன்னாள், ''மக்கள் அதைப் பார்த்தால் செத்து விழுந்து விடுவார்கள்!''.

(பலத்த சிரிப்பு !)

நாம் எப்பொழுதும் எவ்வாறு மக்களிடமிருந்து சான்றிதழ்களைச் சேகரிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்! நமது ஒவ்வொரு செயலும், விழிப்பற்ற நிலையில், மக்கள் அதைப் பற்றி என்ன சொல்வார்கள், அதற்கு அவர்களின் எதிர்ச்செயல் எவ்வாறு இருக்கும் என்பது பற்றியே அமைகிறது.

உதாரணத்திற்கு, ஒரு பை உங்களுடைய பட்ஜெட்டிற்குள் வரலாம். அது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கலாம். ஆனால் விழிப்பற்ற நிலையில், நீங்கள் அந்தப் பையை வைத்திருப்ப தாகவும், மக்கள் அதைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றும் உங்கள் மனம் கற்பனை செய்து பார்க்கிறது. பிறகு நீங்கள் அந்தப் பையை வைத்திருப்பதை மக்கள் பார்ப்பது ஒரு நல்ல அபிப்பிராயத்தைத் தராது என்று தீர்மானிக்கிறீர்கள். மீண்டும் வேறொன்றை தேர்ந்தெடுக்கத் தொடங்குகிறீர்கள்! ஆனால் நீங்கள் சான்றிதழ்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் அது உங்களுக்குள் விழிப்பற்ற நிலையில் நடைபெறும் செயலாகும்!

நாம் கிட்டத்தட்ட ஒரு பூரானைப்போல ஆகி விட்டோம். பூரான் நடப்பதற்கு 100 கால்கள் தேவை. அதே போல், நாமும் வாழ்வில் நடப்பதற்கு ஒரே சமயத்தில் அனைவரின் அங்கீகாரமும் தேவைப்படுகிறது. பூரானின் ஒரே ஒருகால் சரியில்லையென்றால் கூட என்னவாகும் ? அது திக்கற்று அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும்.

நமக்கும் ஒரே ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் கூட என்ன நடக்கிறது? நாம் மனச் சோர்வில் விழுந்து விடுகிறோம்.

நாம் அதிகமாக மற்றவர்களைச் சார்ந்து இருப்போமானால், மனச்சோர்வில் விழும் வாய்ப்புகளும் மிக அதிகம். மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், உண்மையில் கவனத்தேவையால்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காலப்போக்கில், ஏதோ நிகழ்ந்து, அவர்களுக்குப் போதுமான கவனம் கிடைக்கவில்லை. இதை அவர்களால் கையாள முடியவில்லை. நம்மை மனச்சோர்வில் தள்ள ஒரே ஒரு வார்த்தை போதுமானது, ஆனால் நமது மனச் சோர்வுக்கான உண்மையான காரணம் நமக்குத் தெரிவதில்லை. ஆனால், நாம் என்ன செய்கிறோம் ? அதைக் குணப்படுத்து வதற்காக மருந்துகளைச் சாப்பிடத் தொடங்கி விடுகிறோம்.

உங்களுக்கு உடல்ரீதியான உதவி தேவையென்றால் நீங்கள் உடற்குறைபாடுள்ளவர் - உளவியல் ரீதியான உதவி தேவையென்றால் நீங்கள் மனக்குறைபாடுள்ளவர்!

அது எவ்வாறு குணப்படுத்தும் ? மனச் சோர்வின் காரணம் உங்களுக்குள் இருக்கிறது, ஆனால் நீங்கள் உதவிக்கு மருந்துகளைத் தேருகிறீர்கள். என்னிடம் மக்கள் மனச் சோர்வுடன் வரும் பொழுது, நான் அவர்களிடம் எளிய மஹா மந்திர தியானத்தைச் செய்யச் சொல்கிறேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மருந்துகளை நிறுத்தி விடலாம்.

பாருங்கள், இவர்களுக்கு இவர்களது சக்தியின் மூலம் இவர்களுக்குள்ளேதான் இருக்கிறது என்பதைக் காண்பிக்க வேண்டியதிருக்கிறது. அதை தியானத்தால் காட்ட முடியும். அவர்கள் தியானத்தை எவ்வளவு மனப்பூர்வமாக செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து, உள்ளிருக்கும் சக்தியைப் பயன்படுத்தி, மனச் சோர்விலிருந்து வெளிவர முடியும். மருந்துகள் அவர்களை மேலும் மந்தமாக்கி விடும்; இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் சக்தியை வெளியிலிருந்து பெறும்பொழுது, அது உங்களிடம் பெரும் சேதத்தை விளைவிக்கலாம், நீங்கள் ஒரு வெறும் பொம்மையைப் போல ஆகிவிடுவீர்கள் என்று சாமி சொல்கிறேன்.

சாமி உங்களுக்கு ஒரு சின்ன கதை சொல்கிறேன். அது உண்மையில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியாகும். ஆரோக்கியமான, அறிவுள்ள இளைஞன் ஒருவன் மனைவி அவனைப் பார்த்துச் சொல்கிறாள், "நீங்கள் சோர்வாக காணப்படுகிறீர்கள்; நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?'. அவளது விமரிசனத்தால் எரிச்சலடைந்த அவன், அவளது கற்பனைகளை நிறுத்திக் கொள்ளச் சொல்லி விட்டுச் செல்கிறான். அவன் காரை காரேஜிலிருந்து வெளியே எடுக்கும் சமயம், அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது பக்கத்து வீட்டுக்காரர், அவனிடம் ''நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா ? சரியாக இல்லை போல் தெரிகிறதே ?'' என்று கேட்கிறார். இந்தமுறை ஆச்சரியமடைந்த அவன், அவரிடம் தான் நன்றாக இருப்பதாகச் சொல்லி விட்டுச் சென்ற விடுகிறான். அவன் அலுவலகத்தை அடைந்து உள்ளே நடந்து கொண்டிருக்கும் சமயம், வரவேற்பாளர் அவனைக் கரிசனத்துடன் பார்த்துச் சொல்கிறார், 'ஐயா, உங்கள் உடல்நிலை சரியில்லை போல் தெரிகிறது. நீங்கள் ஏன் வேலைக்கு வந்தீர்கள்?'. அவன் சொன்னான், "நான் சரியாக இருப்பதாகத்தான் நினைக்கிறேன் ... பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு, அவன் அறைக்குள் சென்று விடுகிறான். அவன் வேலை செய்யத் தொடங்குகிறான். ஒரு நண்பன் உள்ளே நுழைந்து, ''ஹேய்! நீ மிகவும் மோசமாகக் காணப்படுகிறாய். என்ன விஷயம் ? உனக்கு ஏதாவது ஜூரம் கிரம் ஏதாவதா?'' என்று வினவுகிறான். இப்பொழுது, அவனுக்கு இது மிகவும் அதிகம். அவன் நிம்மதியற்று பலவீனமாக உணரத் தொடங்குகிறான். அப்பொழுது மேலதிகாரி அவனைக் கூப்பிட, அவன் உள்ளே செல்கிறான். அவனை ஒரு பார்வை பார்த்த அவனது மேலதிகாரி சொல்கிறார், 'நீ உண்மையிலேயே சுகவீனமாகத் தெரிகிறாய். உன்னால் இன்று வேலை செய்ய முடியுமா? நீ ஏன் மருத்துவரைச் சென்று பார்க்கக் கூடாது ?''. அந்த இளைஞன் போதுமான அளவு பட்டு விட்டான். அவன் இப்பொழுது உண்மையிலேயே பலவீனமாக உணர்ந்தான். வீட்டிற்குச் செல்வதாகச் சொல்லி விட்டுக் கிளம்பினான். காரில் வீட்டை நோக்கிக் சென்று கொண்டிருக்கும் பொழுது அவனது உடல் வெப்பம் அதிகமாகிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான். அவன் வீட்டையடைந்த பொழுது, அவன் மனைவி, அவன் திரும்பி வந்ததில், ஆச்சரியமடைந்தாள். அவனது நெற்றிப் பொட்டில் கையை வைத்துப் பார்த்த பொழுது அவனுக்கு ஜுரம் இருப்பதைக் கண்டாள்!

உடற்குறைபாட்டை உங்களால் தெளிவாகக் காண முடியும் - ஆனால் மனக்குறைப்பாட்டை நீங்கள் அறிவதில்லை!

காலையில் ஆரோக்கிமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த ஒரு மனிதன், பிற்பகலில் நோய்வாய்ப்பட்டு விட்டான்! அவன் எப்படி நோய்வாய்ப்பட்டான்? வெறுமனே அவனிடம் நோய்வாய்ப் பட்டிருப்பதாக சொன்னதிலேயே! இது ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தைச் சொல்வதற்குத் தயார்படுத்தப்பட்டிருந்தார்கள். உண்மையிலேயே பரிசோதனை 11 பேரிடம் செய்து பார்க்கப்பட்டது. இறுதியில் 11 பேருமே நோய்வாய்ப்பட்டு விட்டனர்.

நீங்கள் உங்களுக்கு உள்ளேயுள்ள உங்களது சொந்த சக்தியில் மையம் கொள்ளாத பொழுது இவ்வாறு நிகழ்கிறது. வெளியிலிருந்து வரும் செல்வாக்கால் நீங்கள் உயரமான நிலையிலிருந்து தாழ்வான நிலைக்கு இறங்கி வந்து விடுகிறீர்கள். நாம் நமக்குள் மையம் கொண்டு விட்டால், வெளியிலிருந்து வரும் எதுவும் நம்மை அசைக்க முடியாது.

நாம் புகழையும், அங்கீகாரத்தையும் பெறுவதற்காகவே செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்; ஆனால் அன்பு மற்றும் கடமை என்ற பெயரில் செய்கிறோம். மக்கள் என்னிடம் சொல்கிறார்கள் "ஸ்வாமிஜி, நாங்கள் புகழுக்காகவோ செய்கிறோம்"

மனச்சோர்வின் காரணம் உங்களுக்குள் இருக்கிறது-ஆனால் நீங்கள் உதவிக்கு மருந்துகளை வெளியே தேடுகிறீர்கள்!

தெளிவாக இருங்கள்: கடமைக்காகவே செய்கிறேன் என்று உரிமை கோரும் கணத்தில், நீங்கள் செய்யாவிடில், மக்கள் உங்களை அங்கீகரிப்பதை நிறுத்தி விடுவார்கள். உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நீங்கள் நிறைவேற்றும் வரைதான் மக்கள் உங்களை அங்கீகரிப்பார்கள். நீங்கள் செய்வதில் ஒரே ஒரு முறை தவறினாலும் உங்களுடனான அவர்களது உறவு முறையில் ஒரு மாற்றம் ஏற்படுவதைக் காணலாம். உங்களுக்கு இது தெரியுமாதலால் உங்கள் கடமையைச் செய்கிறீர்கள்.

"ஸ்வாமிஜி, நான் அவர்களின் தந்தை. அவர்களுக்கு நான் செய்யவில்லையென்றால் வேறு யார்செய்வார்கள்?'' என்று நீங்கள் சொல்லலாம். புரிந்து கொள்ளுங்கள்; அவர்களுக்குச் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. நீங்கள்தான் அவர்களைப் பெற்றீர்கள். அவர்கள் வளர்ந்து சுதந்திரமாகத் தங்களுக்கு தேவையானவற்றை தாங்களாகவே செய்து கொள்ளும் வரை நீங்கள்தான் செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் என்ன செய்தாலும், எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யுங்கள். அந்தச் செயல், உங்களுள் இருக்கும் அன்பான சக்தியின் வெளிப்பாடாக இருக்கும்.

இப்பொழுது, நீங்கள் எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை என்று உரிமை கோரலாம். ஆனால் எதிர்தரப்பில் இருந்து வரும் பதில் மரியாதை கொஞ்சம் குறைந்தாலும் உங்களுக்குள் ஏற்படும் மன இறுக்கம், போராட்டம், ஏமாற்றம் உங்களுக்குத் தெரியும். இந்த மன இறுக்கம், இந்தப் போராட்டம், இந்த ஏமாற்றம் ஆகியவை உங்கள் கடமையைச் செய்தபோது உங்களுக்குள் இருந்த எதிர்பார்ப்பின் விளைவு. இவற்றின் அளவு மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்; ஆனால், கொஞ்சமாவது இருக்கும்.

உங்கள் மகிழ்ச்சிக்கு மற்றவர்களை சார்ந்து இருப்பீர்களேயானால், உங்களின் வாழ்க்கை அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அது இருக்கும் பொழுது, உங்கள் செயல்கள் உங்களுக்குள் இருக்கும் உயிருள்ள சக்தியின் வெளிப்பாடாக இருக்காது; அளவிலும் தன்மையிலும் குறைந்த கடமை அல்லது பெயரளவிலான அன்பினால் செய்கிறீர்கள். அது உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்ச இருப்பு சக்தியின் வெளிப்பாடாக இருக்காது; சாதாரண வெளியுலக வர்த்தகப் பரிமாற்றமாகவே இருக்கும், அவ்வளவே.

பகவத் கீதை அழகாகச் சொல்கிறது:

''கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசனா'' இதன் பொருள், உங்கள் வேலை, கடமையைச் செய்வது மட்டுமே, அதன் பலனைப் பற்றி கவலைப்படுவதல்ல.

உங்களுள் உள்ள அளவற்ற அன்பின் சக்தியால், நீங்கள் செயலாற்றிக் கொண்டேயிருக்க வேண்டிய தேவையிருக்கிறது. எந்த விதமான காரணமும், எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி நீங்கள் சக்தியை வெளியிட்டுக் கொண்டேயிருக்க முடியும். நீங்கள் இது போன்று இருந்தால், விளைவைப் பற்றி கவலைப் படுவதில்லை.

நீங்கள் விளைவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று நான் சொல்லும் பொழுது, விரக்தியினால் அல்லது அவநம்பிக்கையினால் என்று நான் பொருள் கொள்ளவில்லை. நான் சொல்வது என்னவென்றால், உங்களுக்கு விளைவை எதிர்பார்க்கக்கூடத் தெரியாது; ஏனெனில் நீங்கள் தொடர்ந்து உங்கள் ஆனந்தமயமான உள் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டு சென்று கொண்டே இருக்கிறீர்கள், அவ்வளவே. அதனால் நீங்கள் விளைவை எதிர்பார்ப்பதில்லை என்று கூடச் சொல்ல முடியாது. நீங்கள் வெறுமனே ஆனந்தமாக பிரவகித்துக் கொண்டிருக்கிறீர்கள், அவ்வளவே. இந்தப் பிரவகிக்கும் சக்தியே உண்மையான அன்பு.

சரியான முகவரியில்லாத பார்சல் பந்தாடுவது போல, நாமும் சமூகத்தில் சரியான புகலிடமின்றி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிருக்கிறோம்.

நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்க ஆரம்பிக்கும் பொழுது, அதற்கு ஒரு முடிவில்லாமல் போய் விடும். நான் சொல்கிறேன்... நம்மைச் சுற்றியிருக்கும் அனைவரையும் திருப்திப்படுத்துவது மிகவும் கடினமான காரியம். எல்லாரையும், எப்பொழுதும் திருப்திப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒரு போதும் இல்லை, அது இந்த பூமியில் மிகவும் முடியாத காரியம்.

ஒரு சின்ன கதை....

ஒரு கணவனும் மனைவியும் அவர்களது ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். மனைவி, கணவனுக்கு இரண்டு சட்டைகளைப் பரிசளித்தாள். அதனால் மனம் நெகிழ்ந்த கணவன் இரவு உணவிற்கு வீட்டில் சமைப்பதற்கு பதிலாக வெளியில் செல்லலாம் என்று அறிவித்தான். அந்தக் கணம் அவர்களுக்கு மிகவும் சந்தோஷ மானதாக இருந்தது. மனைவியை மேலும் சந்தோஷப்படுத்த, அவள் கொடுத்த சட்டைகளில் ஒன்றை அணிந்து அவன் அறையை விட்டு வெளியே வந்தான். அவன் கீழே வரவும், அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். ஆனால் உடனே அவளது முகபாவம் மாறியது, அவள் சொன்னாள், "அப்படியென்றால் அந்த இன்னொரு சட்டை நன்றாக இல்லை, இல்லையா ? ' ' .

(சிரிப்பு!)

இன்னொருவரை முழுவதுமாகச் சந்தோஷப்படுத்த முடியாது, முதலில், உங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ளுங்கள்;

நாம் கேட்பதை நிறுத்தி விட்டுக் கொடுக்கத் தொடங்க வேண்டும்.

உங்களில் நீங்கள் நிறைவைக் காணுங்கள், அதுவே போதுமானது. இந்த நிறைவிற்கும், உங்களைச் சுற்றியிருக்கும் மக்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இது வெளியே இருக்கும் குழ்நிலைகளையோ மக்களையோ பொருட்படுத்தாத, ஒரு உயிர்த் துடிப்புள்ள சக்தியாக உங்களுக்குள் இருக்கட்டும். அதுவே போதுமானது.

மற்றவர்களுக்கு ஏதாவது செய்வது நல்லதுதான்; கவனமும் மரியாதையும் கொடுப்பது நல்லதுதான். அனால் அது சக்தியூட்டக் கூடிய ஆழ்ந்த அன்பினால் இருக்க வேண்டும், பயத்தினால் அல்ல ; அவர்கள் சான்றிதழ்களை திரும்ப எடுத்துக் கொண்டு விடுவார்கள் என்ற பயத்தினால் அல்ல. அவர்கள் வாழ்க்கையின் மையமாகி விடும் அளவிற்கு, மற்றவர் களின் அபிப்பிராயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். மற்றவர்களை உங்கள் சக்தியின் மூலமாக்கிக் பாதுகாப்பிற்கு மற்றவர்களைச் சார்ந்து இருக்காதீர்கள்.

உங்கள் மகிழ்ச்சிக்கு மற்றவர்களைச் சார்ந்து இருப்பீர் களானால், உங்கள் வாழ்க்கை அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீங்களே உங்கள் சக்தியின் மூலமாகவும், உந்து சக்தியாகவும் இருங்கள்! வேறொருவரிடம் உங்கள் மையத்தை வைத்திருக்கும் வரையில் உண்மையான மகிழ்ச்சி சாத்தியமில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இதை நீங்கள் புரிந்து கொண்டால் பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

நான் முன்பே சொன்னது போல், உங்களுக்கே உங்களைப் பற்றி எதுவும் தெரியாததனால், நீங்கள் பதிலுக்கு சமூகத்தை நோக்கியிருக்கிறீர்கள். சமூகமும் சந்தோஷமாக உங்கள் மீது முத்திரை குத்துகிறது; 'நீங்கள் ஒரு நல்ல தந்தை', 'நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்', 'நீங்கள் தோல்வியடைந்தவர்' என்றெல்லாம்.

சரியான முகவரி இல்லாத ஒரு பார்சல் எவ்வாறு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பந்தாடப்படுகிறதோ, அவ்வாறே நாமும், முத்திரைகளைச் சேகரித்துக் கொண்டு, சமூகத்தில் சரியான புகலிடமின்றி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறோம்.

நாம் உள்ளே நிலைபெற்றிருக்கவில்லை. நாம் பார்சலுக்கு மேல் ஒட்டப்பட்டிருக்கும் முத்திரை குத்தப்பட்டச் சீட்டுகள் அல்ல, அதனுள் இருக்கும் பொருள் என்பது நமக்குத் தெரியவில்லை. அது நமக்குத் தெரியாததால், நமக்கு வழிகாட்ட சமூகத்தின் முத்திரை களைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. போகப் போக, நாம் மேலிருக்கும் முத்திரை குத்தப்பட்ட சீட்டல்ல, உள்ளிருக்கும் பொருள் என்பதையே முழுமையாக மறந்து விடுகிறோம். நமக்கு உள்ளிருக்கும் பிரபஞ்ச இருப்பு சக்தியுடனான தொடர்பையும் முழுவதுமாக துண்டித்துக் கொண்டு விடுகிறோம்.

அனாஹத சக்கரம் திறக்கும் பொழுது, உங்களுக்குள்ளிருக் கும் முடிவற்ற சக்தியின் மூலமான பிரபஞ்ச இருப்பு சக்தியைத் தூண்டி விட்டு ஒளி வீசச் செய்கிறது. உங்களை, எல்லோரையும், எல்லாவற்றையும், பிரபஞ்சம் முழுவதையுமே நோக்கி எந்தவித எதிர்பார்ப்புமின்றி, சுயநலமற்ற அன்புடனும். ஆனந்தத்துடனும் பிரவகிக்கச் செய்கிறது.

ஒரு சின்ன கதை ...

பிரம்ம சூத்திரம் என்று ஒரு புத்தகம். மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய, மிகச் சிறந்த புத்தகம். அதை உலகத் தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய சுருக்கப்படாத பதிப்பு எனலாம். அதிலிருந்தே முற்ற அனைத்து தத்துவங்களும் தொன்றின எனலாம். அதைப் புக்குகங்களுக்கெல்லாம் பக்தகம் எனலாம். அது வேதவியாசர் என்னும் ஒரு எக்காலத்திலும் சிறந்த ஒரு Hindu மேதையால் எழுதப்பட்டது.

ஞானமடைந்த குரு ஒருவர், வாசஸ்பதி மிஸ்ரர் என்னும் தனது சீடரிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து, அதற்கு ஒரு விளக்கவுரை எழுதச் சொன்னார். குருவான அவர், பாமதி என்கிற தனது பெண்ணையும், அவருக்கு மணம் செய்து கொடுத்து விட்டு மறைந்தார். வாசஸ்பதி மிஸ்ரா் இதயபூர்வமாகத் தனது வேலை யைத் தொடங்கினார். அவர் தொடர்ந்து எழுதுவதில் மும்முரமாக ஈடுபட்டார். அது அவரிடம் தீவிரமான, உருமாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, தியானமாயிற்று. பல மாதங்கள் உருண்டோடின. மாதங்கள் வருடங்களாயின. வருடங்கள் மஹாமகங்களா யின. அவர் வேறெகையும் பார்க்கவில்லை, வேறெதையும் கேட்கவில்லை, வேறெதையும் நினைக்கவில்லை. இறுதியாக அந்தப் பெரும் வேலையை முடித்தார். புத்தகத்திற்குப் பெயரிடுவது மட்டுமே பாக்கியிருந்தது. அவர் தலையை நிமிர்த்தினார். ஒரு வயதான பெண்மணி அவரருகே விளக்கைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். வாசஸ்பதி மிஸ்ரா் ஆச்சரியமடைந்தார். அவர் அவளிடம் கேட்டார், ''தாங்கள் யார்?'. அந்தப் பெண்மணி, ''என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். உங்கள் வேலையைத் தொடருங்கள்'' என்றாள். அவர் சொன்னார், ''புத்தகம் முடிந்து விட்டது. தாங்கள் யாரென்று சொல்லுங்கள்?'. அந்தப் பெண்மணி சொன்னாள், "நான் உங்கள் மனைவி". வாசஸ்பதி மிஸ்ரா் அதிர்ச்சியடைந்தார். அவர் நிகழ்ந்த வற்றிற்காக மிகவும் வருத்தமடைந்தார். முப்பது வருடங்களாக அவர் மனைவியைப் பற்றி ஒரு சிந்தனை கூட இன்றி புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்! அவரால் அவரையே நம்ப முடியவில்லை. ''இத்தனை வருடங்களாக இதை நீயேன் எனக்கு ஞாபகப் படுத்தவில்லை ?' என்று நீங்கள் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தீர்கள். உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை", என்று அவள் அமைதி யாகப் பதிலளித்தாள். வாசஸ்திபதி மிஸ்ரா தொடர்ந்தார். ''நீ மனிதகுலத்திற்காக உன் முழுழு வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்திருக்கிறாய்! இதற்கு, நான் உனக்கு என்ன கைமாறு செய்ய முடியும் ?''.

பாமதி சொன்னாள், ''உங்களுக்கு சேவை செய்வதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இந்த சிறந்த புத்தகத்தை எழுதுகையில் உங்களுக்குச் சேவை செய்வதை எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். இதற்கு மேல் எதுவும் தேவையில்லை''. வாசஸ்பதி மிஸ்ரா ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அவர், அவரது மனைவிக்கு மிகச் சிறந்த பரிசையளித்தார். அவர் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பணிக்கு - எழுதிய நூலிற்கு - அவரது மனைவியின் பெயரை வைத்தார் : பாமதி.

இன்றைக்கும், மனித குலத்தின் அரிய பொக்கிஷ மான புத்தகத்தின், மிகப் பிரபலமான விளக்கவுரை, அவளது பெயரைத் தாங்கி நிற்கிறது : பாமதி.

பாமதி, அவளது சுயநலமற்ற பக்தியாலும் அன்பாலும் என்றும் இறவா நிலை பெற்று விட்டாள். அவளுக்கு அவளே போதுமானதாக இருந்தாள். அவள் கணவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்பதல்ல. அவளுக்கு அந்தத் தேவையேயில்லை! இந்த இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பல சமயங்களில் நமக்கு மற்றவர்களின் கவனம் தேவைப்படுகிறது. ஆனால் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதாலோ அல்லது நாம் அவர்களுக்கு ஒரு தொல்லையாகி விடக் கூடாது என்பதாலோ பேசாமல் இருந்து விடுகிறோம்.

ஆனால் நாம் இங்கு மற்றவர்களின் கவனம் தேவைப் படாத ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம். அதுதான் வித்தியாசம். அவளது இளமை வீணாகிப் போனதாக அவள் நினைக்கவில்லை; அவள் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளவில்லை. அவள் தன் இயல்பாக இருந்தாள், அவ்வளவே. கணவரைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது அவளுக்கு ஒரு பெரிய கடினமான காரியமாக இருக்கவில்லை. அவள் தனது உள் சக்தியிலேயே அதிகமாக மையம் கொண்டிருந்ததால், அவளுக்கு அது ஒரு பெரிய விஷயமாகவே இருக்கவில்லை.

பாமதி மறைந்த பிறகும் வாழ்கிறாள். நாம் இருக்கும் பொழுதே ஒவ்வொரு நிமிடமும் இறந்து கொண்டிருக்கிறோம். இதுதான் வித்தியாசம்.

இன்று, நமது வீடுகளில், உங்களால் ஒரு அரை மணி நேரம் நிம்மதியாகச் செய்தித்தாள் படிக்க முடியுமா?. உங்கள் மனைவி யால் ஒரு அரைமணி நேரம் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்க முடியுமா ?

( மக்களிடமிருந்து சிரிப்பு ... ! )

நீங்கள் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, உங்கள் மனைவி முந்தைய தினம் வீட்டில் நடந்த எல்லா முக்கியமான விஷயங்களையும் சொல்லலாமென்று நினைப்பாள். பிறகு, நீங்கள் அவளுக்குப் போதுமான கவனம் கொடுக்கவில்லை என்று குறை கூறுவாள். நீங்கள் எப்பொழுதும் செய்தித்தாளும் கையுமாக இருப்பதாகச் சொல்லுவாள்.

சரியாக உங்கள் மனைவி அவளுக்குப் பிடித்தமான ஒரு கொலைக்காட்சிக் கொடரைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, உங்களுக்குப் பசியெடுக்கும். அவள் உங்களுக்கு உணவு பரிமாற வேண்டும் என்று நீங்கள் விரும்பவீர்கள். நேரம் காலம் தெரியாமல் தொடர்களைக் காண்பிப்பதற்காக தொலைக் காட்சியை சபிப்பீர்கள்! பின் எல்லா வீடுகளிலும் நடக்கும் வழக்கமான வாக்கு வாதங்கள் மீண்டும் ஒரு முறை நிகழும்.

ஒரு சின்ன ககை...

ஒருவர் தன் மனைவியுடன் ஒரு உணவு விடுதியில் அமர்ந்திருந்தார். அவர்கள் உணவிற்கு ஆர்டா் கொடுத்து விட்டு காத்திருந்தனர். மனைவி குறை கூறினாள், ''அன்பே, நாம் இந்த உணவு விடுதியில் நுழைந்ததிலிருந்து நீங்கள் செய்தித்தாளையே படித்துக் கொண்டு இருக்கிறீர்கள்''. "நான் வருந்துதிறேன் அன்பே'', என்று மன்னிப்புக் கேட்ட கணவர் வெயிட்டரிடம் சைகை காட்டி, "தயவு செய்து இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா'' என்று கேட்டார்.

(சிரிப்பு!)

பாருங்கள், நாம் அனைவரும் எப்பொழுதும் கவனத்திற் காக ஏங்குகிறோம். நமக்கு அது கிடைக்காத பொழுது துயரம் அடைகிறோம். நம் வாழ்க்கையில் எல்லா கோபங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும், தோல்வி மனப்பான்மைக்கும் மூல காரணம் இதுவே.

நாம் கேட்பதை நிறுத்தி விட்டு கொடுக்கத் தொடங்க வேண்டும். நாம் சக்தியைக் கேட்பதற்கு பதிலாக சக்தியைப் பரப்ப வேண்டும். ஆனால் நமக்கு கவனத்தை எவ்வாறு நம்மிடமிருந்து மற்றவரை நோக்கித் திருப்பவது என்பது தெரியாது. நாம் நம்மையே கவன மையமாகப் பார்க்கப் பழகி விட்டோம். வெளியுலகத்தைக் கவன மையமாகப் பார்க்கத் தொடங்க வேண்டும். இதை எவ்வாறு செய்வது ?

அடுத்த சில நாட்களுக்கு, நீங்கள் அனைவரும் இந்த சின்னப் பயிற்சியைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களிடமிருந்து, அதே பாலினத்தில், ஒரு கூட்டாளி'யைத் தேர்ந்தெடுத்துக் முழுவதுமாகப் பார்க்குக் கொள்ளுங்கள். எப்பொழுதும், உங்கள் முதல் எண்ணம் அவருடைய வசதியைப் பற்றித்தான் இருக்க வேண்டும். எப்பொழுதும் நீங்கள், உங்கள் கூட்டாளி மகிழ்ச்சி யாகவும் வசதியாகவும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு வேறு ஏதேனும் தேவையா என்று தெரிந்து கொள்ளுங்கள். முதலில் உங்களுக்கான உணவுத் தட்டை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாகத் தட்டை அவரிடம் கொடுத்து விட்டு, பிறகு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அறையில் சூடான தண்ணீர் வாவில்லை என்றால், அவர்கள் அரையில் அவர்களுக்கு சூடான தண்ணீர் இருக்கிறதா என்று பாருங்கள்.

நீங்கள் உங்கள் நண்பர்களையோ அல்லது உறவினர் களையோ கூட்டாளியாக சேர்த்துக் கொள்வதை நான் விரும்ப வில்லை! பின்னர் நண்பர்களாகி, முகவரிகளை பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு நீங்கள் மக்களைத் தேர்ந்தெடுப்பதையும் நான் விரும்பவில்லை! வெறுமனே முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை, உங்களுக்கு மிக அருகில் நிற்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். வெறுமனே மனம்போன போக்கில் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள்.

பெரும்பாலும் நம் வாழ்க்கை முழுவதும், நாம் நம்மைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம். மிஞ்சிப் போனால், நமது நெருங்கிய குடும்பத்தினரைப் பற்றிக் கவலைப்படுகிறோம்; அது கூட நம் கடமையென்று நினைப்பதால்: அதை நாம் அன்பு என்று நினைக்கிறோம்.

இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் பொழுது, சுயநலமற்ற அன்பு என்பது எப்படி இருக்கும் என்பதைக் காண உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும்! நீங்கள் மற்றவரிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதனால் அது சுயநலமற்றதாகிறது.

(பங்கேற்பாளர்கள்- கூட்டாளிகளைத் தேர்ந்தெடுத் ததும் அனைவரும் அமர்கிறார்கள்)

பாருங்கள், உண்மையான அன்பு மிகவும் ஆழமான ஒன்று, மிகவும் சக்தியைத் தரவல்லது; அதை உங்களால் அனுபவிக்காமல் தெரிந்து கொள்ள முடியாது. அன்பு, சக்தியின் ஒரு வெளிப்பாடு, அது ஒரு வர்த்தகப் பரிவா்த்தனை அல்ல. ஒன்று சொல்லுங்கள் -முதன் முறையாகப் பார்க்கும் ஒருவரின் மீது உங்களால் அன்பு செலுத்த முடியுமா ?

முடியாது, ஸ்வாமிஜி!

ஏன் முடியாது ?

எங்களுக்கு அவர்கள் யாரென்று கூடத் தெரியாது ஸ்வாமிஜி, பின்னர் எப்படி அவர்கள் மீது அன்பு செலுத்த முடியும் ?

சரியாகச் சொன்னீர்கள்! நீங்கள் நினைப்பது இதுதான். நான் சொல்கிறேன், கொஞ்சம் புத்திசாலித்தனமானப் புரிந்து கொள்ளுதலுடன் தியானமும் இருந்தால், எந்த விதமான காரணமும் இன்றி உங்களால் அன்பு செலுத்த முடியும் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்! உங்களால் சாலையிலுள்ள மரங்களின் மீது அன்பு செலுத்த முடியும், அவற்றை அன்படன் தடவிக் கொடுக்கும்பொழுது உங்களிடமிருந்து ஒரு சக்தி பாய்வதை உணர முடியும். சாலையில் நீங்கள் செல்லும் பொழுது உங்களைக் கடந்து செல்பவர்கள் மீது அவர்கள் யாரென்று தெரியாமலேயே, உங்களால் அன்பு செலுத்த முடியும். உண்மையில் அன்பு என்பதே உங்கள் இருப்புத் தன்மைதான். அது உங்களிடமுள்ள வடிகட்டப்பட்ட ஒரு குணம் அல்ல.

இன்று அன்பைப் போல தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டது எதுவும் இல்லை. இன்று அன்பு அதிகமாக ஒரு வா்த்தகப் பரிவர்த்தனையாகவே இருக்கிறது. உங்களிடம் யாராவது ஒருவர் இனிமையாக ஏதாவது சொன்னால், நீங்கள் அவர்கள் மீது அன்பு கொள்கிறீர்கள்; நாளைக்கு அவரிடம் கொஞ்சம் குறைந்தாலும், நீங்கள் அதே அளவு அன்பு கொள்வதில்லை அல்லது அநேகமாக அவர்களை வெறுக்கிறீர்கள்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தினமும் கணினியின் முன் அமர்ந்து அரட்டையடிக்கும் வாழ்நாள் நண்பனாக இருந்தாலும், அவர் சொல்லும் ஏதோ ஒன்று நமது அங்கீகாரத்திற்கு எதிராகச் செல்லுமானால், திடீரென்று அவர் அவ்வளவாக - நெருக்கம் -இல்லாதவராக - ஆகி விடுகிறார். மீண்டும் அவரை முன்போல் பழைய நெருக்கமான நிலைக்கு எடுத்துச் செல்ல, உங்களுக்குச் சிறிது காலம் ஆகும். அந்தச் சமயத்தில் உங்கள் அன்பு எங்கே போயிற்று? அதற்கு சிறிது காலம் உடல் நலம் சரியில்லாமல் போயிற்று போலிருக்கிறது !

அது நீங்கள் விளையாடும் விளையாட்டுதான்; அன்பும் வெறுப்பும் மாறி மாறி மேலே வரும், ஒன்றுக்கொன்று இடம் மாறி வரும் ஒரு விளையாட்டுதான். இந்த அன்பு- வெறுப்பு விளையாட்டு அன்பே அல்ல. தெளிவாக இருங்கள். அது ஒரு மனிதனுக்கோ அல்லது ஒரு குழ்நிலைக்கோ உங்களுடைய வெறும் எதிர்ச் செயல், அவ்வளவுதான். இதைத்தான் நாம் அன்பு என்கிறோம். இது உண்மையான அன்பு அல்ல. கலப்பற்ற கற்பனையான அன்பு, அவ்வளவே.

உண்மையான அன்பு இலக்கற்றது. ஒரு இலக்கு இருந்தாலும் இல்லாவிடிலும் அது வெறுமனே இருக்கிறது. உண்மையான அன்பு தானாக இருக்கிறது . அது இலக்கு எதையும் அறியாகு. இங்கு தான் என்பது நீங்கள் தான். நீங்களே அன்பாகி விடுகிறீர்கள், அவ்வளவுதான். அதனுடன் தொடர்பு கொள்ளும் எந்தப் பொருளும் அதை உணர்கிறது. அவ்வளவு தான். இயல்பாக ஒரு நதி ஒடுகிறது. வெவ்வேறு இடங்களில் அதை எதிர் கொள்ளும் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அதே போல, உண்மையான அன்பு ஒரு மனிதனிடமிருந்து வெளிப் பட்டுக் கொண்டேயிருக்கிறது. அவனைச் சுற்றியுள்ளவர்களால் அதை உணர முடிகிறது.

உண்மையான அன்பில் நிபந்தனைகளுக்கு இடம் கிடையாது. உங்களுள் இருக்கும் சக்தி பொங்கிப் பிரவகித்துத் தன்னை அன்பாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உங்களால் சிக்கல் மிகுந்த உறவுகளின் எல்லைகளை உடைத்துக் கொண்டு, அழகாக, அன்பான இருப்புத் தன்மையாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும்! புரிந்து கொண்டீர்களா ? சரி...

அன்பேயான, உங்கள் இருப்புத்தன்மையின் தன்மையைக் கண்டுபிடிக்க இரண்டு விஷயங்கள் செய்யலாம். முதலாவது: திரும்பத் திரும்ப இது போன்ற வார்த்தைகளைக் கேட்பதன் மூலம் அவை உங்களுக்குள், சொல்லப்படும் விஷயத்தைப் பற்றிய, திட நம்பிக்கையை ஏற்படுத்துகிறது; அவை உங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உருமாற்றத்திற்கான செயல்முறையை துவக்குகிறது. இரண்டாவது: தியானம் செய்வகன் மூலம் உண்மை யிலேயே உருமாற்றம் நிகழ முடியும்.

அனுபவபூர்வமான வாழ்வில், நீங்கள் உறவுகளில் மேலும் மேலும் ஆழமாகச் செல்லும் பொழுது, நீங்கள் உணர்வதெல்லாம் உண்மையான அன்பல்; ஏதோ வடிவத்தில் ஒரு வெறும் கொடுக்கல் - வாங்கல்தான் என்பதைப் பரிந்து கொள்வீர்கள். அவையெல்லாம் வெறும் சில இணக்கங்கள், சில சமரசங்கள் சில கடமையுணர்வுகள், சில பயங்கள், சில குற்ற உணர்வுகள், அவ்வளவுகான்; உண்மையான அன்பு அல்ல. அவையெல்லாம் தான் அன்பென்ற பெயரில் இருக்கின்றன.

தியானம் உங்களை உங்களின் ஆழமான பகுதி களுக்கு அழைத்துச் சென்று, இது போன்ற அன்பைப் பற்றிய தவறான கருத்துக்களில் இருந்து மேலே வர உதவி செய்யும். அதனால், இது ஒரு சுருக்கு வழியாகும்! நீங்களே வாழ்க்கையின் மூலமாகக் கற்றுக் கொள்வதாயிருந்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் தேவைப்படும். ஆனால் தியானத்தில், உங்களுக்குள் ஒரு வெற்றிடம் திறக்கப்பட்டு, விஷயங்களை நீங்களே தெளிவாகவும் அனுபவபூர்வமாகவும் தெரிந்து கொள்ள முடியும். இதற்கு வயது ஒரு பொருட்டல்ல.

இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்; எந்த விதமான காரணமும் இல்லாமல் உங்களால் அன்பு செலுத்த முடியுமானால், நீங்கள் விரிவடைந்து கொண்டே போவீர்கள். உங்கள் உலகம் திடீரென்று வாழ்க்கையை விடப் பெரிதாகவும் பேரானந்தமாகவும் ஆகிவிடும். உங்கள் சக்தியின் மூலம் வெளியில் இல்லை; உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்பதை உணருவீர்கள். முதலில் உங்களுக்கும், பிறகு மற்றவர்களுக்கும் நீங்களே ஒரு சக்தி மூலமாகி விடுவீர்கள். உங்களுள் இருக்கும் சக்தி மற்றவர்களைத் தொட்டுத்தான் ஆகவேண்டும்; வேறு வழி யில்லை : ஏனெனில் நீங்கள் பொங்கிப் பிரவகித்து ஒடிக் கொண்டிருக்கிறீர்கள். மற்றவர்கள் இயல்பாகவே உங்களிடம் ஈர்க்கப்படுவார்கள்; நீங்கள் முழுமையாகவும் அன்பாகவும் மாறி விடுவீர்கள்!

சரி ... யாருக்காவது ஏதாவது தெளிவாக்கப்பட வேண்டுமா ?

ஸ்வாமிஜி, தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள அன்பைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அது தன்னலமற்ற அன்பில்லையா?

தாயன்பு கூட எதிர்பார்ப்புகளுடன்தான் இருக்கிறதம்மா. பல சமயங்களில், நான் இதைச் சொல்லும் போது மக்கள் என்னை வாதங்களுடன் எதிர்ப்பது உண்டு. நான் சொல்கிறேன், ஒரு தாய் தன் மகனை நேசிக்கிறாள்; சரி. ஆனால் இறுதியில், உணர முடியாத, எழுதப்படாத எதிர்பார்ப்புகள் அந்த அன்பின் மீதும் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். மகனிடம் இருந்து ஒரு சின்ன உரசல் ஏற்பட்டுவிட்டாலும், உடனே அவளிடம் இருந்து வரும் முதல் வார்த்தை, குழந்தைப் பருவத்திலிருந்து அவனுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறாள் என்பதே. உறவில் ஒரு சின்ன விரிசலே எல்லா விஷயத்தையும் வெளியே கொண்டு வந்து விடப் போதுமானது.

உண்மையான அன்பு, உங்களிடமிருக்கும் பிரபஞ்ச இருப்புச் சக்தியின் வெளிப்பாடு. அது இது போன்ற வாக்கு வாதங்களை நினைத்துக் கூடப் பார்க்காது. அதற்குத் தெரிந்த தெல்லாம் காரணமின்றி பிரவகித்துக் கொண்டிருப்பதே. அதற்கு தான் செய்ததையெல்லாம் பதிவு செய்து பராமரிக்கத்

குழந்தைகளுக்குக் கற்றுத்தரப்பட வேண்டிய முதல் விஷயம் கடவுள் என்பது அன்பு என்று.

தெரியாது. அதற்கு பதிவு செய்து வைத்துக் கொள்ளவும், இறந்த காலத்துடன் தொடர்பு கொண்டு வாதம் செய்யவும் தெரியாது. அது பொங்கிக் கொண்டிருப்பதால் பிரவகிக்கிறது, அவ்வளவே! அது ஒருபோதும் கேள்வி கேட்பதில்லை, ஏனெனில் அதற்கு கேள்வி கேட்கத் தெரியாது!

நீங்கள் இறந்த காலத்திலிருந்து சம்பவங்களைச் சொல்லும் கணத்திலேயே, உங்கள் அன்பிற்குப் பின்னால் எதிர்பார்ப்புகள் மறைந்திருப்பது புலனாகிறது. இது உண்மையான அன்பு அல்ல, அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மகனுக்கும் இது பொருந்தும். மகன் தாயின் மீது அன்பு செலுத்துகிறான் -ஒருநாள்கூடத்தவறாமல் அவள் அவனைப் பார்த்துக் கொள்வாள் என்ற எதிர்பார்ப்புடன்; அவளை ஐந்து மணிக்கு எழுப்பி மதிய உணவைக் கட்டித் தருவாள் என்ற எதிர்பார்ப்புடன்; அவனது உடைகளைப் பராமரிப்பாள் என்ற எதிர்பார்ப்புடன். அவன் தன் தாயை வழிபடுகிறான்; ஏனெனில் அவளது கவலையும் அக்கறையும் அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஒரு சின்ன கதை....

ஒரு சிறுவன் பள்ளியில் பின்னங்களைப் பற்றி கற்றுக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஆசிரியை அவனிடம் கேட்டாள், ''ஒரு கேக் இருப்பதாக வைத்துக் கொண்டால், அதை 5 பங்குகளாகப் பிரித்து உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் கொடுத்தால், உனக்கு அதில் எவ்வளவு பகுதி கிடைக்கும் ?''. சிறுவன் சொன்னான், "2/5 மேடம்". ஆசிரியை கேட்டாள், "எப்படி? நீ பின்னங்களைச் சரியாகச் சொன்னான், ''மேடம், எனக்கு கேக் பிடிக்குமென்றால் என் அம்மா அவளது பங்கையும் எனக்குத் தந்து விடுவாள்''.

உங்களால் கடவுளை தழுவ முடியவில்லையென்றால், நீங்கள் தழுவுவதற்கு வேறெதுவுமில்லை -ஏனெனில் எல்லாமே கடவுள்தான்.

பாருங்கள், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காகத் தியாகம் செய்ய விரும்புகிறார்கள், சரி. ஆனால், என்ன மனப் பான்மையுடன் தியாகம் செய்கிறார்கள் என்பது பற்றித்தான் நாம் இப்போது பேசுகிறோம். அவர்களிடமிருந்து வெறுமனே பொங்கும் பிரவாகத்தினால் அதைச் செய்ய வேண்டும்; மறைந் திருக்கும் எதிர்பார்ப்புகளினால் அல்ல. பொங்கும் பிரவாகத்தினால் செய்யும் பொழுது இந்தச் சம்பவங்கள் ஒரு போதும் அவர்களிடம் பதிவு செய்யப்படுவதில்லை. ஒரு வேளை பதிவு செய்யப்பட்டால் கூட, இதுபோன்று ஏதேனும் நிகழ்ந்தால், அவை பழி வாங்கும் விதமாக வெளியே வருவதில்லை. கடமைக்காக அன்பு செய்யும் பொழுதுதான், சம்பவங்களைப் பதிவு செய்து, பின்னர் நினைவு கூறவும் செய்கிறார்கள்.

பொதுவான அன்பு எப்பொழுதும் எதிர்பார்ப்பிலேயே வளர்கிறது. ஒவ்வொருவரும் தீவிரமாக முயற்சிப்பினும் கூட, இதை யாரும் மறுக்க முடியாது; அன்பில் எதிர்பார்ப்பு நன்றாகப் பின்னிப் பிணைக்கப் பட்டிருப்பதால், அதை உணர்வது கடினமானது. யாரேனும் அதைப் பற்றிப் பேசும் பொழுது நம்புவது மிகக் கடினமானது.

உண்மையில், எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வரையில், இதை நம்புவது சிரமம். ஆனால் பல வழக்குகளில், அல்ப காரணங்களுக்காக, மகன்களும் மகள்களும் குடும்பத் திலிருந்தே தள்ளி வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி கேள்விப் படுகிறோம்! ஏதேனும் குடும்பத்தகராறு அல்லது தன் இனத்தை விட்டு வெளியில் கல்யாணம் செய்து கொண்டது போன்ற ஒன்றுமில்லாத விஷயங்களுக்காக! எல்லா அன்பும் திடீரென்று எங்கே காணாமல் போய் விட்டது ?

உங்களிடம் உண்மையான அன்பு இருந்தால், நீங்கள் இயற்கையைப் புண்படுத்த மாட்டீர்கள்.

இது போன்ற சம்பவங்கள் நிகழும் வரையில், மகனோ அல்லது மகளோ குடும்பத்தில் மிகவும் நேசிக்கப்பட்டிருப்பார்கள். பெயரளவிலான அன்பின் ஆட்சி கொடிகட்டிப்பறக்கும். திடீரென்று என்னவாயிற்று? அது ஏன் திடீரென்று மறைந்து போனது? அது உண்மையான அன்பாக இருக்கும் பட்சத்தில் அது எப்படி திடீரென்று மறையும் ? உண்மையான அன்பு இதுபோன்ற எதிர்ச்செயல்களைப் புரியாது. உண்மையான அன்பு தன்னை எதனுடனும் குழப்பிக் கொள்ளாது. ஏனெனில் அதன் பிரவாகத்தை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது! அது காரண-விளைவுச் சுழற்சியினால் கட்டுப்படுத்தப் படவில்லை.

நுட்பமான குடும்பப் பிரச்சினைகளில் கூட, நீங்கள் ஆழ்ந்த விழிப்புடன் இருந்தால், உங்கள் அன்பு எவ்வளவு கட்டுப் பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை வெறுமனே மாற்றி வைத்துப் பாருங்கள், உங்கள் சொந்தக் குடும்பம் அதற்கு எவ்வாறு எதிர்ச்செயல் புரிகிறது என்று.

உங்கள் குழந்தைகளைப் பொறுத்த வரையில் நீங்கள் அன்பின் பெயரால் அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை, அவர்களும் உங்கள் கருணையாலும், அன்பின் பெயராலும் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் உரசி க் கொள்ளாத வரை, எல்லாம் சரிதான். உங்களில் யாரேனும் ஒருவர் எதிர்பாராத வகையில் நடந்து கொண்டால், அன்பான மனோபாவம் மாறிவிடுகிறது; மொத்தச் சுவையுமே மாறி விடுகிறது. அவை மாறுவதற்கு அதிக நேரமோ முயற்சியோகூட தேவைப் படுவதில்லை. ஏனெனில் அது இயற்கையான சுவையல்ல ; செயற்கையான சுவையும், செயற்கையான வண்ணமும் ஊட்டப்பட்டது !

நம்மிடம் ஏன் இத்தனைக் குற்றவுணர்வு இருக்கிறது?

எப்பொழுதும் அச்சுறுத்தலிலேயே இருக்கும் அன்பு உண்மையான அன்பல்ல. அது வெறுமனே ஏற்பாடு செய்யப் பட்ட அன்பு. ஏற்பாடு செய்யப்பட்ட எதுவுமே முழுமையாக இருக்க முடியாது. முழுமையாக இல்லாத எதற்குமே, எப்பொழுதும் அச்சுறுத்தல் இருந்து கொண்டுதான் இருக்கும். அன்பு ஒரு கொண்டாட்டமாக இருக்க வேண்டும், கடமையாக அல்ல.

இன்னொரு விஷயம்: நாமனைவரும், அன்பை மரியாதை யுடன் குழப்பிக் கொள்கிறோம். தெளிவாக இருங்கள். நீங்கள் முழுமையாக அன்பு செலுத்தும் பொழுது, நீங்கள் செய்யும் எதுவுமே மரியாதைக் குறைவாகத் தோன்றாது. பாருங்கள், சிலா் சில விஷயங்களைச் செய்யும் பொழுது அது சாதாரணமாகவும், அதே விஷயங்களை வேறு சிலர் செய்யும்பொழுது அது அவமரியாதையாகவும் தோன்றுகிறது. அந்த செயலைச் செய்யும் மனிதருக்குப் பின்னாலுள்ள சக்தியே, அதனை மரியாதைக்குறிய செயலாகவோ அல்லது அவமரியாதையாகவோ ஆக்குவதற்குக் காரணமாகிறது.

உங்களுக்குப் பின்னாலிருக்கும் சக்தி முழுமையாக இருக்கும் பொழுது, நீங்கள் எதிலிருந்தும் வெளியே வந்து விடலாம். உங்களாலேயே உறுதியாகச் சொல்ல முடியாத போது, நீங்கள் மரியாதைப் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வீர்கள். நான் உங்களை அவமரியாதையாக நடந்து கொள்ளும் படிச் சொல்லவில்லை. நான் சொல்வது என்ன வென்றால், உங்களது இருப்புத்தன்மை அன்புடன் ஒத்திசைந்து இருக்கும் பொழுது, உங்கள் உடல் மொழி யானது, உங்களது செயல்கள் ஒருபோதும் அவமரியாதையாகத் தோன்றாதவாறு இருக்கும்.

உண்மையான அன்பிற்கு உறவுகள் தெரியாது. சாதாரண அன்பு மட்டுமே உறவுகள் அறியும்.

ஆனால் நீங்கள் அன்பிற்குப் பதிலாக மரியாதையில் சிக்கிக் கொண்டு விட்டால், முழுவதையும் தவற விட்டு விடுகிறீர்கள். அப்பொழுது அன்பாக இருப்பதற்கு பதிலாக, நீங்கள் நடிக்கத் தொடங்குகிறீர்கள். எப்பொழுது நடிக்கிறீர்களோ, அப்பொழுது நீங்கள் முழுமையாக இல்லை.

நீங்கள் மரியாதையில் மையங்கொண்டிருக்கும் பொழுது, நடிக்கிறீர்கள். ஏனெனில் மரியாதையானது சமூகம் சார்ந்தது -அதன் பொருள் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் நீங்கள் அன்பில் மையங்கொண்டிருந்தால், அப்பொழுது மரியாதை ஒரு மகிழ்ச்சியான உப-விளைவாக இருக்கும். அதனால் அன்பில் மையம் கொள்ளுங்கள்; மரியாதை தானாகவே நிகழும்.

நினைவில் வையுங்கள்: மரியாதை இறந்தது; அன்பு உயிருடன் உள்ளது. மரியாதை ஒரு தூரத்தை உருவாக்குகிறது ; அன்பிற்கோ தூரம் என்பது தெரியாது.

மக்கள், கடவுளைப் பற்றி ஒரு பயத்துடனும் மரியாதை யுடனும் இருக்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடவுளிடம் அன்புடன் இருக்கப் போதிக்கப்படவில்லை. அவர்கள், கோயில்களில் விக்கிரகங்களைத் தொட அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் ஒரு தொலைவில் நின்று பக்தியுடன் தலை தாழ்த்தி வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் கடவுளைப் பற்றி ஒரு எச்சரிக்கையுடன் இருக்குமாறு போதிக்கப்படுகிறார்கள். புரிந்து கொள்ளுங்கள் ... குழந்தைகளுக்குக் கற்றுத் தரப்பட வேண்டிய முதல் விஷயம் கடவுள் என்பது அன்பு என்று.

உங்களால் கடவுளைத் தழுவ முடியவில்லை என்றால், நீங்கள் தழுவுவதற்கு வேறெதுவும் இல்லை; ஏனெனில் எல்லாமே கடவுள்தான்! நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கடவுளைத் தழுவ முடியாது என்று சொல்லிக் கொடுக்கும் பொழுது, நீங்கள் உண்மையிலேயே கடவுள் மற்றவற்றிலிருந்து வேறானவர் என்று சொல்லித் தருகிறீர்கள். கடவுளை ஒரு பீடத்தில் வைப்பதன் மூலம், உண்மையிலேயே நீங்கள் உங்களை முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையிலிருந்தே வேறுபடுத்திக் கொண்டு விடுகிறீர்கள். நீங்கள் எல்லா வற்றையுமே தவற விட்டு விடுகிறீர்கள்!

தேவையான சமயத்தில், கொஞ்சம் சமூக அறிவுடன், மரியாதை என்னும் விளையாட்டை விவேகத்துடன் விளையாடுங் கள், அவ்வளவே. இது போன்ற மரியாதை, ஆழமான விழிப் புணர்வுடனும் அறிவுடனும்தான் வரும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஆனால் அது மையத்திலிருந்து உங்கள் கவனத்தைத் திருப்பாது. அது உங்கள் அன்பில் குறைவேற்படக் காரணமாகாது. அது ஒரு வெறும் அறிவின் செயலாக மட்டுமே இருக்கும், அவ்வளவுதான்.

ஒரு சின்ன கதை ...

ஒரு தாய் தன் குழந்தையுடன் ஒரு பொது நிகழ்ச்சிக்குச் சென்றாள். எப்படியோ அந்தக் குழந்தை தொலைந்து விட்டது. கூட்டத்தில் அவர்கள் பிரிந்து விட்டனர். மிகவும் பீதியடைந்த தாய், குழந்தையை எல்லா இடங்களிலும் தேடினாள். திடீரென்று அவளுக்குப் பின்னாலிருந்து, ''மரியா! மரியா!' என்றழைக்கும் ஒரு குரலைக் கேட்டாள்; திரும்பினாள்; தன் மகளைக் கண்டாள். குழந்தையிடம் ஓடிச்சென்று அணைத்துக் கொண்ட அவள் கேட்டாள், ''அனால் நீ ஏன் என்னை அம்மா என்று கூப்பிடாமல் மரியா என்று கூப்பிட்டாய்?'. குழந்தை சொன்னது, "அதனால் எந்தப் பயனும் இருந்திருக்காது. இங்கு நிறைய அம்மாக்கள் இருக்கிறார்கள்!''.

குழந்தைகள் இன்னும் தங்களுக்குள்தான் மையம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்மை விட அதிக உயிர்ப்புடனும் அதிக விழிப்புடனும் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் சுலபமாக வெளியே வந்து விடுகிறார்கள். அவர்களது கள்ளம் கபடமற்ற தன்மை, அவர்களது அன்பு, அவர்களது உடல் மொழி ஆகியவை அவர்களுக்காகப் பேசுகின்றன; அவர்களது வார்த்தைகள் அல்ல. மனம் சமூக நெறிப்படுத்தல்களுடன் கால் பதிக்கும் போது, கள்ளம் கபடமற்ற தன்மை மறைந்து விடுகிறது; பிறகு அதனை வார்த்தைகளாலும் நடிப்பாலும் ஈடுகட்ட வேண்டும். ஏனெனில் எப்படி முழுமையாகவும், கள்ளம் கபடமற்றும் இருப்பது என்பதை மறந்து விட்டோம்.

அன்பு கடமையாகும் பொழுது, அது ஒரு சுமையாகி விடுகிறது. அது சுமையாகும் பொழுது, உங்களால் கொண்டாட முடியாது. நீங்கள் நிர்ப்பந்தத்தில் இருப்பீர்கள். பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவதற்கு காரணங்கள் சொல்லித் தருகிறார்கள். சிறு வயது முதலே, அன்பு காரணங்களுடன் கற்பிக்கப்படுகிறது.

நாம் எப்பொழுதாவது அவர்களுக்குப் பூமியை நேசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறோமா? நாம் எப்பொழுதாவது அவர்களுக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறோமா ? ஆனால் நாம் அவர்களுக்கு நமது உறவினர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறோம். நாம் அவர்களுக்கு நம்மை நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறோம். யாராலெல்லாம் ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்குக் கொஞ்சமாவது பயன் இருக்குமோ அவர்களை மட்டும் நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறோம்.

சந்நியாசம் என்பது இறுதியான திருமணம் -தெய்வீகத்துடனான திருமணம் !

இயற்கையை அரவணைத்துக் கொள்ள கற்றுக் கொடுத்தால், உண்மையான அன்பின் விதையை அவர்களிடம் விதைக் கிறீர்கள். நான் நிறைய பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன்: பொது இடங்களில் குப்பையை எறிந்து இயற்கை அழகைக் கெடுக்க, அவர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். குடும்பத்தை நேசிக்கக் கற்றுத் தரும் அதே பெற்றோர்கள், இயற்கையை புண்படுத்தக் கற்றுத் தருகிறார்கள். உங்களிடம் உண்மையான அன்பு இருந்தால், நீங்கள் இயற்கையைப் புண்படுத்த மாட்டீர்கள். உங்களிடம் உண்மையான அன்பு இருந்தால், நீங்கள் இயற்கையையும் மக்களையும் ஒரே விதத்தில் அரவணைத்துக்

பாருங்கள், நீங்கள் சரியான விதையை விதைக்க வேண்டும். அப்பொழுதுதான் விரும்பிய செடி வளரும். குழந்தை யினுள் அன்பு மலர, நீங்கள் சரியான விதையை விதைத்து, சரியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இங்குதான் தியானம் உதவுகிறது. தியானம் விதையை விதைக்கவும், உள்ளே வளர்ச்சி நிகழ்வதற்கான வெற்றிடத்தை உருவாக்கவும் உதவியாக இருக்கிறது. வெளியேயிருந்து எதையும் திணிக்க முடியாது. அவ்வாறு திணிக்கப்பட்ட கணக்கிலேயே எதிர்ப்பைச் சந்திக்கும் அல்லது அது ஒரு கடமையாக, சுமையாகச் செய்து முடிக்கப் படும்.

கொள்வீர்கள்.

நாம் பேசும் இந்த அன்பு வெறும் உளவியல் ரீதியான அடிமைத்தனம். நீங்கள் அன்பு என்ற பெயரால் மனிதனை அடிமைப்படுத்தி விடுகிறீர்கள். அவன் ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதாக உணர்கிறான். உடல் ரீதியான அடிமைத்தனத்தில், குறைந்தபட்சம் நீங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்றாவது தெரிந்து

எவனொருவன் உண்மையான சந்நியாசியோ, அவனுக்கு அன்பு என்பது பிரார்த்தனை என்பதும், பிராாத்தனை என்பது அன்பு என்பதும் தெரியும்.

கொள்வீர்கள். ஆனால் உளவியல் ரீதியான அடிமைத் தனத்தில், அது யாருக்கிருக்கோ அவருக்குக் கூட, நீங்கள் அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியாது. நீங்கள் அதை உணர்வதற்கான பக்குவம் பெறும் சூழ்நிலை வரும் வரையில் தெரியாது.

நம் அனைவரிடமும் ஏன் இத்தனைக் குற்ற உணர்வு இருக்கிறது ? ஏனெனில், நமக்குத் தெரிந்த அன்பு எப்பொழுதும் குற்ற உணர்வுடனேயே வருகிறது. அன்பு முழுமையாக இருக்கும் பொழுது, அன்பு உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து வரும் தூய சக்தியாக இருக்கும் பொழுது, ஒரு போதும் குற்ற உணர்வைக் கொண்டு வராது. உங்கள் அன்பு போதுமானதாக இல்லை, உங்கள் அன்பில் எங்கோ குறை இருக்கிறது என்ற எண்ணமே உங்கள் குற்ற உணர்வுக்குக் காரணம். உங்கள் அன்பு ஏன் போதுமானதாக இல்லை? ஏனெனில் உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டது சாதாரண அன்புதான்; ஒருபோதும் முழுமையான அன்பு அல்ல.

உங்கள் அன்பு முழுமையாக இருந்தால், யாராவது இறந்தால், உங்களிடம் குற்ற உணர்வோ அல்லது துக்கமோ இருக்காது. உடல் ரீதியான பிரிவால் நீங்கள் வருத்தப்படலாம்; ஆனால் அவர்கள் இருந்த பொழுது நீங்கள் எதையும் தவறவிட்டு விட்டதாக உணரமாட்டீர்கள். முழுமையான அன்பு என்று சொல்லும் பொழுது, நீங்கள் அவர்களது எல்லா கவன எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் உங்களுக்குள் நன்றாக மையம் கொண்டு, அவர்களை இருப்புத் தன்மையின் ஒரு பகுதியாகப் பார்த்து, மரியாதை செலுத்தி, அவர்களை நோக்கிச் சக்தியூட்டக் கூடிய அன்பை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

நீங்கள் உண்மையான அன்பை கண்டுபிடித்து விட்டால், உங்கள் பிரார்த்தனை என்பது அதன் வெளிப்பாடாக இருக்கும்.

நீங்கள் இது போன்று இருந்திருந்தால், அவர்களை மகிழ்ச்சியுடன் அனுபவித்திருப்பீர்கள். அவர்கள் இறந்த பிறகு உங்களிடம் எந்த விதமான குற்ற உணர்வும் இருக்காது. குடும்பம் உங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக, உங்களுக்குள் எப்பொழுதும் குற்ற உணர்வைப் புகட்டுகிறது. குற்ற உணர்வு பல வகையான உணர்வுகளின் எச்சம். ஏனெனில் நாம் எந்த உணர்வையும் முழுமையாக ஆராய்ந்தறிவதில்லை. குற்ற உணர்வு உங்களைப் பீடிக்க ஒரு போதும் அனுமதி அளிக்காதீர்கள்.

நீங்கள் விரும்புவதையெல்லாம் செய்து விட்டு அதைப் பற்றி குற்ற உணர்வில்லாமல் இருங்கள் என்று நான் சொல்லவில்லை. புரிந்து கொள்ளுங்கள் : நீங்கள் உங்கள் மையத்திலிருந்து, ஆழமான விழிப்புணர்வுடனும் புரிந்து கொள்ளுதலுடனும் முழுமையாக வாழ்ந்தால், குற்ற உணர்வுக்கு இடமிருக்காது, அவ்வளவுதான்.

உண்மையான அன்பு எப்பொழுதும் கவலையின்றி கொடுத்துக் கொண்டேயிருக்கும்; அதற்கு கேட்கத் தெரியாது. அதற்கு எந்தவிதமான வியாபாரமும் தெரியாது. அதற்குக் கொடுக்க மட்டுமே தெரியும். அதை ஒருபோதும் உருவாக்க முடியாது. அது இதைப் போன்றது ... நீங்கள் ஒரு பிளாஸ்டிக் ரோஜாவை உருவாக்க முடியும்; ஆனால் அதில் உண்மையான ரோஜாவின் நறுமணம் இருக்குமா? இருக்காது! அதே போன்று உண்மையான அன்பும் உருவாக்க முடியாதது. நீங்கள் தினசரி வாழ்க்கையில் காணும் அன்பு, நறுமணம் அற்ற பிளாஸ்டிக் ரோஜாவைப் போன்றது. உண்மைபோலத் தோன்றினாலும், அதில் நறுமணம் இல்லை.

உங்களுடைய பிரார்த்தனையில், நீங்கள் கேட்பதை நிறுத்தி விட்டால், உங்கள் உண்மையான அன்பை கண்டுபிடித்து விட்டீர்கள்.

உண்மையான ரோஜா வர வர வேண்டுமானால், நீங்கள் சரியான சூழ்நிலை, சரியான மண்வளம், சரியான அளவு தண்ணீர் ஆகியவற்றை உருவாக்கினால், அது தானாக வரும். அதே போல், உண்மையான அன்பு நிகழ, நீங்கள் உங்களிடம் விழிப்புணர்வு, தெளிவு, ஒரு ஆழ்ந்து புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை உருவாக்கினால், அது உங்களுள் மலரும்.

ஒரு கல்லூரிக் கூட்டத்தில் ஒரு மாணவி என்னிடம் கேட்டாள், ''ஸ்வாமிஜி, நீங்கள் சந்நியாசி ஆவதற்கு காதல் தோல்வி தான் காரணமா ? ' ' .

நான் சொன்னேன், "காதலில் வெற்றிதான் நான் ஸ்ந்யாசி ஆனதற்குக் காரணம்!'' என்று. காதல் தோல்வி ஒரு தேவதாஸைத்தான் உருவாக்கும், ஸ்ந்யாசியை அல்ல! நீங்கள் இந்த உலகம் முழுவதையும் நேசிக்கும்பொழுதுதான் ஒரு ஸந்யாசி ஆக முடியும்! இந்த உலகம் முழுவதையும் உங்களால் நேசிக்க முடியுமானால் மட்டுமே, அது உண்மையான அன்பாகிறது.

உண்மையான அன்பிற்கு உறவுகள் தெரியாது. சாதாரண அன்பு மட்டுமே உறவுகளை அறியும். சாதாரண அன்பில், உங்கள் தந்தை உங்களுக்குத் தேவையான வற்றைக் கொடுப்பதால் நீங்கள் அவரிடம் அன்பு செலுத்துகிறீர்கள். உங்கள் அன்னை உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வதால் அவளிடம் அன்பு செலுத்துகிறீர்கள். புலனின்பத்தைத் தருவதால் நீங்கள் உங்கள் காதலனிடம் அன்பு செலுத்துகிறீர்கள். இவை சாதாரண அன்பிற்கான வெவ்வேறு காரணங்கள்.

உண்மையான அன்பு அது போன்றது அல்ல. அது, "ஓ! இது என் தந்தை. நான் அவரை நேசிக்க வேண்டும் ... '' என்று சொல்வதில்லை. இல்லை! அதற்கு எல்லோர் மீதும், எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்திக் கொண்டே இருக்கத் தெரியும், அவ்வளவுதான். சாதாரண அன்பில் வெற்றி தோல்வி கள் இருக்கும். உண்மையான அன்பில் வெற்றியோ, தோல்வியோ இல்லை. அது வெறுமனே இருக்கிறது, அவ்வளவுதான். அதைக் கண்டுபிடிப்பதில்தான் வெற்றி இருக்கிறது !

வேறு எதுவும் சரிப்படவில்லையென்றால், காதல் என்பது வாழ்க்கையில் இல்லாமல் போய் விட்டால், நீங்கள் ஸ்ர்யாசியாகி விடுகிறீர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஸ்ர்யாசிகள் விரக்தியால் வாழ்க்கையைத் துறந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறார்கள். இவ்வாறு சொல்லும் மக்களை நினைக்கும் பொழுது நான் வருத்த மடைகிறேன். அவர்கள் ஆழமான அறியாமையில் இருக்கிறார்கள். இதுபோன்ற அறியாமையில் இருந்து கொண்டு அவர்கள் மற்றவர்களை எடைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள் . ஸ்ர்யாஸம் என்பது இறுதியான திருமணம்- தெய்விகத் துடனான திருமணம் !

ஒரு உண்மையான ஸ்ந்யாசியானவன் மிகவும் அன்பானவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கிறான். அவன் நடக்குமிடங்களில் புற்கள் வாடிப் போவதில்லை என்று சொல்லப்படுகிறது. இது கதையல்ல; உண்மை. ஒரு உண்மையான ஸ்ந்யாசி இயற்கையை நோக்கி அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துகிறான். எவனொருவன் உண்மையான ஸ்ர்யாசியோ அவனுக்கு அன்பு என்பது பிரார்த்தனை என்பதும், பிரார்த்தனை என்பது அன்பு என்பதும் தெரியும்.

நீங்கள் உண்மையான அன்பைக் கண்டுபிடித்து விட்டால், உங்கள் பிரார்த்தனை என்பது அதன் வெளிப்பாடாக இருக்கும்.

மீராவின் பஜனைகள் என்ன? அவை ஞானமடைந்த ஒரு இந்துப் பெண்மணியான மீராவின் அன்பின் வெளிப்பாடுகள்தான். அவள் வெறுமனே இருப்புத்தன்மையிலிருந்து அதனால்தான் மீராவின் பஜனைகள் இன்றும் பிரபலமாக இருக்கிறது. அவற்றின் பின்னாலிருக்கும் சக்தி ஒருபோதும் மறையாது. ஏனெனில் அது பிரபஞ்ச இருப்பு சக்தி. சாதாரண அன்பானது இத்தனை காலமாக இத்தனை மக்களால் உணரப்பட முடியாது. தூய அன்பு மட்டுமே இதுபோன்ற ஒரு சக்தியைப் பரப்ப முடியும்.

மீராவிற்கு, அவளது பஜனைகள்தான் அவளது பிரார்த்தனை. உண்மையான அன்பைக்கண்டுபிடித்துவிட்டால், வேறு வழி இல்லை. பிரார்த்தனை அன்பாகி விடுகிறது. உண்மையான அன்பிற்குக் கேட்கத் தெரியாது. அதற்கு முழுமையாக பிரவகித்துக் கொண்டிருக்க மட்டும்தான் தெரியும். உங்களுடைய பிரார்த்தனையில், நீங்கள் கேட்பதை நிறுத்தி விட்டால், நீங்கள் உண்மையான அன்பைக் கண்டுபிடித்து விட்டீர்கள்.

உங்களுக்குத் தெரிந்த சாதாரண அன்பானது வெறும் இனக்கவர்ச்சி; வெறும் ஹார்மோன்களின் தொல்லையால் நிகழ்வது. உங்கள் ஹார்மோன்கள் உங்கள் மூளையை வேலை செய்யாமல் செய்து விடுகிறது. அவ்வளவே. உங்கள் உளவியல் ரீதியான தோற்றத்தைத் திருப்திப்படுத்த உங்களுக்கு வெளியில் ஒருவர், உளவியல் ரீதியான ஆதரவை அளிப்பவர் தேவை. இரண்டு நிமிடங்கள் உங்களைத் தாங்குவதற்கு ஒரு தோள் தேவை.

உங்கள் தேவைகளை கவனித்துக் கொள்ள உங்களுக்கு ஒருவர் தேவை. நீங்கள் சோர்ந்திருக்கும் பொழுது, உங்களை ஊக்கப்படுத்த ஒருவர் தேவை. உங்களுக்காக இரக்கப்பட, உங்கள் கவலைகளை உறுதிப்படுத்த ஒருவர் தேவை. இதைத்தான் நீங்கள் அன்பு என்று அழைக்கிறீர்கள். உண்மையான அன்பு வடிவங்களுக்கும், பெயர்களுக்கும் அப்பாற்பட்டது. உடலிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்டது. எவனொருவன் இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு, உலகம் முழுவதையும் நேசிக்கிறானோ, அவனே ஸ்ந்யாசியாக முடியும், விவேகானந்தராக முடியும்!

விவேகானந்தரின் நிகழ்ச்சி ......

ஒருநாள் இரவு 2 மணிக்கு விவேகானந்தா் எழுந்து அவரது சீடர்களையும் எழுப்பிவிட்டார். அவரது சீடர்களுக்கோ என்ன நிகழ்கிறது என்று அறிய ஆவல். விவேகானந்தா், அவரது உடலில் மிகுந்த வலி ஏற்படுவதாயும், உலகின் எங்கோ ஒரு பகுதியில் ஏதோ இயற்கைப் பேரழிவு நடப்பதாயும், அதுதான் அவரது வலிக்குக் காரணம் என்றும் சொன்னார். அடுத்த நாள் காலை செய்தித்தாள்களில், கியூபாவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதற்குப் பல உயிர்கள் பலியானதாகவும் செய்திகள் வெளியாயின.

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் பேரழிவை உணரும் அளவிற்கு அவரது உணர்வுகள் நுட்பமாக இருந்தன! சாதாரண மனிதர்கள் இந்த அளவிற்கு நுட்பமான உணர்வுகளுடன் இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பக்கத்து வீட்டுக்காரருக்கு உடல்நலம் சரியில்லை என்றால் கூட, அது நம்மைப் பாதிப்பதில்லை!

ஒரு சின்ன கதை ....

ஒருவன் தனது குடும்ப மருத்துவரிடம் சென்று, ''டாக்டர், ஒருமுறை நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து என் மனைவியைப் பரிசோதிக்க வேண்டும்' என்றான். மருத்துவர் கேட்டார், ''ஏன்? உடல் நலம் சரியில்லையா?''. அதற்கு அவன் சொன்னான், ''நான் அப்படித்தான் நினைக்கிறேன் டாக்டர். அவள் வழக்கமான நேரத்தில் எழுந்தாள், குளித்தாள், சமையல் செய்தாள், குழந்தை களைப் பள்ளிக்கு அரைப்பினாள், வேலைக்காரி வராததால் வீட்டைச் சுத்தம் செய்தாள், எங்கள் துணிகளைத் துவைத்தாள், குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்தாள், அவர்களுக்கு வீட்டுப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தாள். பின்னர் படுக்கைக்குச் சென்று விட்டாள். ஏறக்குறைய நடு இரவில், தான் மிகவும் சோர்வாக இருப்பதாகச் சொன்னாள். அநேகமாக அவளுக்கு உங்கள் பரிசோதனை தேவைப்படு கிறது என்று நினைக்கிறேன்''.

(சிரிப்பு)

இன்று நாம் மிகவும் உணர்வற்றவர்களாகி விட்டோம்! ரம்முடன் 24 மணிநேரமும் 365 நாட்களும் வாழும் இன்னொரு மனிதருடன் நம்மால் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. நாம் இன்னமும் அதிக உணர்வுடனும் உயிர்ப்புடனும் இருக்க வேண்டிய தேவையிருக்கிறது. உங்களுடைய இருப்புத் தன்மை அன்பாகி விடும் பொழுது இது தானாகவே நடக்கிறது. யாரும் உங்களிடம் எதுவும் சொல்ல வேண்டிய தேவை இல்லை; நீங்களே சுலபமாக அவர்களை உணர்ந்து கொண்டு உதவ முடியும். அது உங்களுக்கு மிகவும் இயல்பான விஷயமாக ஆகி விடும்.

ஆனால், கவனத்திற்காக ஏங்கும் சில மனிதர்கள் தாங்கள் உடல் நலமற்றிருப்பதாக நடிக்கலாம். அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை. நான் சொல்லும் இந்த நுட்ப உணர்வுத்திறன் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆழமான தொடர்பாகும். அதனால் நீங்கள் கூட்டு விழிப்புணர்வை உணரமுடியும்.

விவேகானந்தரிடம் நிகழ்ந்தது மற்றவர்களின் உணர்வு களில் ஒன்றுதல். கவனியுங்கள், அது இரக்கம் அல்ல; மற்றவர் களின் உணர்வுகளில் ஒன்றுதல். இரக்கம் என்பது மிகவும் மேலோட்டமான வார்த்தை. நம்மால் இரக்கப்பட முடியும். யாராவது தங்கள் கஷ்டங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டால், நீங்களும் அவர்கள் கஷ்டப்படுவதாக உறுதி செய்கிறீா்கள்; இது இரக்கம்! யாராவது தங்களின் கணவன் உடல் நிலை சரியில்லை என்று உங்களிடம் செ ான்னால், நீங்கள் அவர்களிடம் சொல்கிறீர்கள். "ஆ! எவ்வளவு கஷ்டம், நீங்கள் மிகவும் வருத்தத்தில் இருக்க வேண்டும். கவலைப் படாதீர்கள். எல்லாம் சரியாகிவிடும்". இரக்கத்தின் பெயரால், நாம் அவர்களது கஷ்டங்களை உறுதி செய்கிறோம். அவர்களும் நாம் அவர்கள் மீது அக்கறை காட்டுவதாகக் கூறி அதற்காக நம் மீது அன்பு செலுத்துகிறார்கள்.

உண்மையில் அவர்கள் நம் மீது அன்பு செலுத்துவதற்குக் காரணம், நாம் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவதாகக் கூறியது அவர்களைத் திருப்திப்படுத்துவதால்தான். அது அவர்களது அஹங்காரத்திற்குக் கிடைத்த நுட்பமான ஊக்கமாகும். அவர்கள் பெரிய கவலைகளை சமாளிக்கிறார்கள் என்பதை நாம் ஆமோதிப்பதால் அவர்கள் சந்தோஷமடைகிறார்கள். இதைத்தான் சமூகம் இரக்கம் என்கிறது.

ஆனால் குருமார்களின் உணர்வு ஒருபோதும் இரக்கம் அல்ல. அது மற்றவர்களின் உணர்வுடன் ஒன்றுதல். மற்றவர் களின் உணர்வுடன் ஒன்றுதல் என்பது, இன்னொருவரின் துன்பத்தை நமது இருப்புத் தன்மையில் உணர்வது. அப்பொழுது ஒருவன் தன் துயரத்தை உங்களிடம் சொல்ல வேண்டாம். அது உங்களுக்கே தெரியும். ஏனெனில் உங்களுள் உள்ள பிரபஞ்ச இருப்புச் சக்தி அதை உணருகிறது.

குருவின் ஒரே ஒரு இயற்கையான உணர்ச்சி அன்பு மாத்திரமே - அவருடைய மற்ற உணர்ச்சிகள், உங்களுக்குத் தெரிந்த மொழியில் புரிய வைப்பதற்கான நடிப்பு மாத்திரமே.

குருமார்கள் உங்களுடன் ஒன்றாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்றாக இருக்கிறார்கள்; பகுதிதான்; நீங்கள்தான் அவரைப் பிரித்துப் பார்க்கிறீர்கள். அவர்கள் உங்களுடன் ஒன்றாக இருப்பதால், உங்கள் வலியை அவர்களது இதயத்தில் உணருகிறார்கள்; வேறு எந்த வழியிலும் தெரிந்து கொள்வதில்லை. அதனுடன் சேர்ந்து வரும் துன்பங் களை ஏற்றுக் கொள்ளும் சக்தியும் அவர்களிடம் இருக்கிறது.

சாதாரண அன்பினால் குழந்தைகள் பிறக்கிறார்கள். உண்மையான அன்பினால் உங்களுடைய உண்மையான சுயம் பிறக்கிறது. நீங்களே உங்களுக்கு ஒரு புதிய பிறப்பை - ஒரு உருமாற்றத்தைக் கொடுக்கிறீா்கள். எப்படி ஒரு கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறதோ, அதே போல மனிதனும், தன்னை உணர்ந்த ஆத்மாவாகிறான். இத்தனைக் காலமும் உறங்கிக் கிடந்த சக்தியூட்டும் அன்பிற்கு நீங்கள் விழித்துக் கொள்கிறீர்கள்.

விவேகானந்தர் ''எழுமின்! விழிமின்!' என்று சொல்லும் பொழுது, நாம் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்றா பொருள்? அப்படித்தான்! நாம் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கிறோம். உறக்கத்திலேயே மற்றவர்களை எடை எடை போட்டுக் கொண்டிருக்கிறோம். உறக்கத் திலேயே நாம் விமரிசனம் செய்து கொண்டிருக்கிறோம். உறக்கத் திலேயே குற்றம் கூறிக் கொண்டிருக்கிறோம். நாம் விழித்துக் கொண்டிருப்பதாக நினைத்து விமரிசனம் செய்கிறோம். நமக்கு எல்லாவற்றைப் பற்றியும் எல்லாமும் தெரியும் - அன்பையும் சே ர்க்கு, என்று நினைத்துக் கொண்டிருக்கிரோம். நமக்குத் தெரிந்தது உண்மையான அன்பதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சின்ன கதை ...

ஒருவனுக்கு ஒரு பணக்கார அத்தை இருந்தாள். அவன் அவளை அடிக்கடி பார்க்கச் செல்வான். அவனுக்கு அவளது செ ாத்தின்மீது ஒரு கண் இருந்ததால், அவளைச் சந்தோஷப் படுத்த எதையும் செய்யத் தயாராக இருந்தான். அவளிடம் இரண்டு பூனைகள் இருந்தன. அவற்றிடம் அவள் மிகவும் அன்புடன் இருந்தாள். அவனுக்கு அது தெரியும். அதனால் அவனும், அவளிடம் எப்படியாவது நல்ல பெயரை எடுப்பதற் காக, அவற்றை நன்றாகப் பார்த்துக் கொண்டான். அவள் உயில் எழுதும் போது அவனுக்கும் ஏதாவது கொஞ்சம் கொடுப்பாள் என்பது அவனது இரகசியமான ஆசை. தினமும் அவன் வந்து, பூனைகளுக்குத் பால் கொடுத்து விட்டு, அவற்றுடன் விளையாடி விட்டு, அங்கு வெகு நேரம் இருந்து விட்டே, திரும்பிச் செல்வான். அவன் பூனைகளைப் பார்த்துக் கொண்ட விதம் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. எல்லாவற்றையும் பார்த்து அவள் மிகவும் சந்தோஷமடைந்தாள். கொஞ்ச காலத்தில் அவள் இறந்து விட்டாள். அவள் அவனுக்கு இரண்டு பூனைகளை விட்டு விட்டுச் சென்றாள்.

(சிரிப்பு)

அவன் அந்த இரண்டு பூனைகளிடம் மிகவும் அன்பாக இருந்ததைக் கண்டு, அவள் அந்தப் பூனைகளை அவனிடமே விட்டுவிட்டு இறந்து விட்டாள்! அவனுடைய ஏமாற்றத்தைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்! அவன் இத்தனை மாதங்களாக அன்பினால் பாதிக்கப்பட்டு செய்தவற்றிற்காக எவ்வளவு நொந்து போயிருப்பான்! அவன் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்திருப் பான்! அவன் கோபத்திலும் ஏமாற்றத்திலும் எரிந்து இருப்பான்!

கனக்குள்ளாக சிரித்துக் கொண்டு, குரு எப்பொழுதும் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்.

சாதாரண அன்பில், நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்வதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. மக்கள் சொத்துக்காகவும், சலுகைகளுக்காகவும், ஏதாவது பிரச்சனை களில் இருக்கும் பொழுது கிடைக்கும் ஆலோசனை வார்த்தை களுக்காகவும், சுரண்டுவதற்கு ஏதுவாக உள்ள மக்களின் மறதிக்காகவும் அன்பு செலுத்துகிறார்கள். அன்பு எப்பொழுதும் ஒரு காரணத்துடனேயே வருகிறது. அன்பு எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்புடனேயே வருகிறது.

நான் கருணையுடன் இருந்தால் உங்களை ஏமாற்றுகிறேன், கோபமாக இருந்தால் உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன்

ஆனால், மக்கள் இந்த உண்மையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த சாதாரண அன்பினால் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அன்பு இவ்வாறு தான் நிகழும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் அன்பானவர்களாக இருப்பதாகவும், நான் அதைத் தாழ்மைப் படுத்தி விட்டதாகவும் கருதுகிறார்கள்.

நீங்கள் சற்று நேர்மையுடன் அமர்ந்து சிந்திப்பீர்களானால், நான் சொல்வது உண்மையைத் தவிர வேறில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்களிடமே ஒரு நேர்மையான விசாரணை நடத்திப் பாருங்கள், தெரிந்து கொள்வீர்கள். சற்று அமர்ந்து, உங்கள் தந்தையோ, தாயோ அல்லது சகோதரியோ உங்களிடம் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டால் நீங்கள் எப்படி எதிர்ச்செயல் புரிவீர்கள் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள், அதுவே போதுமானது.

ரீங்கள் பார்க்காத ஒன்றை நேசிப்பதென்பது கடினமான காரியமாகும் - ஆனால் நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் நேசிக்க முடியும் இல்லையா ?

நமக்கு எப்பொழுதும் யாரிடமிருந்தாவது தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாமும் அதை மென்மையான முறையில் பெறுவதற்காகத் தொடர்ந்து பாதை அமைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த மென்மையான முறையைத்தான் நாம் அன்பு என்று அழைக்கிறோம். லோகாயதமான பொருளைப் பெறுவதற்கு மட்டும்தான் இது உபயோகப்படுகிறது என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதரிடம் ஒரு குறிப்பிட்ட நடத்தையை எதிர்பார்ப்பது போன்ற சாதாரண விஷயங்களுக்கும் இது உபயோகப்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவரது நடத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நீங்களும் அவர்களிடம் அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறீர்கள். உங்கள் இருவரது நடத்தையும் இதே வகையில் சென்று கொண்டிருக்கும் வரை, நீங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துகிறீர்கள். இதில் யாராவது ஒருவர் எங்காவது தவறி விட்டால், உங்கள் அன்பில் சற்று தொய்வு ஏற்படுகிறது.

உதாரணக்கிற்கு, நீங்கள் அனைவரும் என் மீது அதிக அன்ப செலுத்துவதாக உரிமை கோருகிறீர்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட கருத்து இருக்கிறது. நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் வெறுமனே நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் நடந்து கொள்கிறேன். இப்பொழுது உண்மையிலேயே அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். என்ன நடக்கிறது? நான் ஒருமுறை உங்களைப் பார்க்கு சிரிக்கவில்லை என்றால் கூட அல்லது ஏதேனும் ஒரு வார்த்தை சொல்லவில்லை என்றால் கூட அது உங்கள் எதிர்பார்ப்புடன் பொருந்தாததால், நான் உங்களை நேசிக்கவில்லை என்று எண்ணத் தொடங்கி விடுகிறீர்கள். அதனால் சற்று நேரம் உங்களுக்கு என் மீது அன்பில்லாமல் போய் விடுகிறது.

உங்களால் காவரங்களை, விலங்குகளை, மனிதர்களையெல்லாம் நேசிக்க முடியும் - எந்தவித காரணமுமின்றி, வெறும் ரேசிக்கும் சந்தோஷத்திற்காகவே எல்லாவற்றையும் நேசியுங்கள்.

நான் அந்த அளவிற்கு அன்பானவன் இல்லையோ என்ற எண்ணத் தொடங்கி விடுகிறீர்கள். நீங்கள் அன்பு என்றழைக்கும் வர்த்தகப் பரிவர்த்தனை உடனே பாதிக்கப்படுகிறது. நான் ஏன் உங்களைப் பார்த்து சிரிக்கவில்லை, அல்லது நான் ஏன் உங்களிடம் குறிப்பிட்ட விஷயத்தைச் சொன்னேன் என்று நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்யத் தொடங்கி விடுகிறீர்கள்.

நான் ஒருவேளை கொண்டிருந்திருக்கலாம், அல்லது உங்கள் அஹங்காரத்தைச் சற்று அமைதிப்படுத்துவதற்காக ஒரு வேளை உங்களைப் பார்த்து சிரிக்காமல் இருந்திருக்கலாம், அவ்வளவுதான்! ஆனால், நீங்கள் என் செயல்களுக்கு, உங்கள் அன்பைப் பற்றிய அகராதிப்படி விளக்கங்கள் கொடுத்து, மொத்த விளையாட்டையுமே தவற விட்டு விடுகிறீாகள். இதனால் என்ன நிகழும் ? நீங்கள் ஆழ்ந்த துன்பத்திற்கு ஆளாவீர்கள்.

இவ்வாறுதான் நீங்கள் அன்பை வெறுமனே சிக்கலாக்கி விடுகிறீா்கள். நான் சாதாரண அன்பிற்கு அப்பாற்பட்டிருப்பதால், குறைந்தபட்சம் என்னிடம் வரும் சமயத்திலாவது, என்பக்கத்திலிருந்து எந்தவிதச் சிக்கல்களும் சோ்க்கப்படாமல் இருக்கிறது! உங்களில் இருவர், ஒருவருடன் ஒருவர் இந்த வகையில் உறவு கொண்டால் என்ன நிகழும் என்று கற்பனை செய்து பாருங்கள் ? மொத்தமும் குழப்பமாகிவிடும். நீங்கள் வெறுமனே அன்பில் மேலும் கீழும், மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருப்பீர்கள், அவ்வளவே.

உங்கள் உணர்ச்சிகளைப் பொறுத்தவரை, முக்கியமாக அன்பைப் பொறுத் வரை, நீங்கள் ஒருவரை ஒருவா மிகவும் சார்ந்திருக்கிறீர்கள். ஒருவரை ஒருவார் காரணங்கள் மிகவும் நுட்பமாகவும் ஏமாற்றும் தன்மையிலும் இருப்பதால், உங்கள் அன்பு அவற்றை மீறும் வரை, உங்களால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது. உங்களால் எந்த விதமான காரணமும் இல்லாமல் அன்பு செலுத்த முடியுமானால், அது தூய அன்பாகும். அவ்வளவே. தூய அன்பு எதையும் சார்ந்திருக்க வில்லை. அது உங்களை மட்டுமே சார்ந்திருக்கிறது. இதில் மிகத் தெளிவாக இருங்கள்.

நன்றியுணர்வும் அன்பும் நெருங்கிய தொடர்புடையது -இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செல்லும்.

மக்கள் சொல்கிறார்கள், 'ஸ்வாமிஜி, நாங்கள் எங்கள் குழந்தைகளை நேசிக்கிறோம்…'' என்று.

அவர்களது குறும்புத்தனங்களைத் தாங்க முடியாமல் எத்தனை முறை நாம் அவர்களைத் திட்டியிருக்கிறோம் ? ஆஸ்ரமத்தில் ஒரு பெண் என்னிடம் சொன்னாள். ''ஸ்வாமிஜி, என் அன்னை என் குழந்தைகளை, அவர்கள் சரியாக நடந்து கொண்டால்தான் நேசிக்கிறாள். அவள் தன் பேரக் குழந்தைகளைத் தன் சிநேகிதிகளுக்குக் காண்பிப்பதற்காக மட்டுமே நான் அழைத்து வரவேண்டும் என்று விரும்புகிறாள். இறுதியில் அவர்கள் பண்ணும் அமளி தாங்க முடியாமல் என்னைத் திட்டுகிறாள்! ''.

நீங்கள் குழந்தைகளைக் காணும் பொழுது, அவர்களின் கள்ளம் கபடமற்ற தன்மையால் கவரப்படுகிறீர்கள், என்பது ஒரு விஷயம். இரண்டாவது விஷயம், அவர்கள் உங்களது படைப்புகள் என்று பார்க்கும் பொழுது, அது உங்களுக்கு ஒரு பெருமை உணர்வையும், ஒரு அஹங்கார ஊக்கத்தையும் கொடுக்கிறது. நீங்கள் அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறீர்கள் என்பதும் உண்மை தான். அனால் நான் சொல்வது என்னவென்றால், அதுவும் கட்டுப்பாடுகளுடனும் பாரபட்சங்களுடம்தான் வருகிறது. அது குழந்தைகளின் போக்கைப் பொறுத்தது.

உங்கள் தலை, உங்கள் ஞாபகத்தில் இருக்கும் வரையில்தான், உங்கள் தலைவலி இருக்கும்.

ஒரு சின்ன கதை...

ஒருவன் கான்கிரீட் சாலை அமைத்துக் கொண்டு இருந்தான். அவன் முடித்துக் கொண்டிருந்த சமயத்தில், அருகாமையிலிருந்து சில சிறுவர்கள் சாலையில் ஓடி வந்து அவர்களது காலடித் தடத்தைப் பதித்து விட்டுச் சென்றனர். அவன் மிகவும் கோபமடைந்து அவர்களைத் திட்டினான். அவனது நண்பன் கேட்டான், ''ஹேய், என்ன விஷயம் ? நான் உனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும் என்றல்லவா நினைத்தேன்?''. அவன் பதில் சொன்னான், ''ஆம். எனக்குப் பிடிக்கும். ஆனால் கான்கிரீட் மீது அல்ல''.

(சிரிப்பு!)

சாதாரண அன்பு எப்பொழுதும் எங்காவது சில நிபந்தனை களுடன் வரும்; எங்காவது சில சுய ஆதாயங்களுடன் வரும்; எங்காவது சில என்னவென்றே தெரியாத பொடி எழுத்துக்களுடன் வரும். இதைத்தான் நான் சொல்ல முயற்சிக்கிறேன். நாம் மக்களை பெயர், இடம், மனோபாவம், சூழ்நிலைகள் முதலிய நிபந்தனை களுக்குட்பட்டு நேசிக்கிறோம். அது அந்த அளவு நிபந்தனைகளுடன் கூடியது .

ஆனால் ஒரு குருவின் அன்போ தூய்மையானது, உண்மையானது. அது எந்த ஒரு கேள்வியும் கேட்காமலேயே பொழிகிறது. அதற்கு பெயர், இடம், மனோபாவம், சூழ்நிலை ஆகிய எதுவும் தெரியாது. குருவிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும், தூய அன்பிலிருந்து, உங்களுடைய சொந்த வளர்ச்சிக்காகவே வருகிறது. குருவின் ஒவ்வொரு செயலும் அன்பினால் நிரப்பப்பட்டிருக்கிறது. குருவின் ஒரே ஒரு இயற்கையான உணர்ச்சி அன்பு மாத்திரமே. அவருடைய மற்ற உணர்ச்சிகள், உங்களுக்குத் தெரிந்த மொழியில் புரிய வைப்பதற்கான, நடிப்பு மாத்திரமே.

"நான் கருணையுடன் இருந்தால் உங்களை ஏமாற்றுகிறேன், கோபமாக இருந்தால் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன்'' என்று எப்பொமுதும் சீடர்களிடம் சொல்வதுண்டு. எவ்வாறா யினும் நீங்கள் வளர்கிறீர்கள்! சில சமயங்களில் நான் கருணையை மிகவும் அன்பான வழியில் காட்டுகிறேன். அதனால் நீங்கள் என் உருமாற்றத்தை விளைவிக்கக் கூடிய விரல்களுக்கு வளைந்து கொடுக்கிறீர்கள். உருமாற்றத்திற்கு ஏதுவாகி விடுகிறீர்கள். சில சமயங்களில் நான் கருணையை உங்கள் மீது வெறுமனே கோபப்படுதல் மூலம் காட்டுகிறேன். அதனால் நீங்கள் பலமாக குலுக்கப்பட்டு ஆழமான விழிப்புணர்வுக்குள் தள்ளப்படுகிறீர்கள். இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரே காரணம் உங்களுக்கான தூய அன்புதான்.

ஒரு குருவானவர் அன்புப் பெருங்கடலாக இருக்கிறார். அவருக்குக் கொடுக்க மட்டுமே தெரியும். அவரே பிரபஞ்ச இருப்புத் தன்மையாகத்தான் இருக்கிறார். நீங்கள் ஒரு குவளையுடன் அவரை அணுகினால், ஒரு குவளையளவு அவரை எடுத்துச் செல்ல முடியும். ஒரு குடத்துடன் அவரை அணுகினால், ஒரு குடத்தளவு அவரை எடுத்துச் செல்ல முடியும். அது நீங்கள் எந்த அளவு தாகத்துடன் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது, அவ்வளவுதான். நீங்கள் மிகுந்த தாகத்துடன் இருந்தால், பெரிய பாத்திரத்துடன் அவரை அணுகுவீர்கள்.

ஆனால், நீங்கள் வெவ்வேறு அளவு பாத்திரங்களை அவரிடம் எடுத்துச் செல்வதையும், உங்களுடைய நிச்சயமற்ற தன்மையையும், மெனதின் விளையாட்டுக்களையும், தர்க்கங் களையும், நீங்கள் அவர் மீது பிரதிபலிக்கும் உங்களது ஒழுக்க நியதிகளையும் கண்டு தனக்குள்ளாக சிரித்துக் கொண்டு, குரு எப்பொழுதும் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்!

When I'm Compassionate I Cheat You, When I Fire I Teach You.

தெளிவாக இருங்கள்: நான் உங்களை கடவுளையோ அல்லது வேறு யாராவது ஒரு குருவையோ நேசிக்கச் சொல்லவில்லை. உங்களுக்குக் கடவுளையே தெரியாதபோது, எப்படி அவரை நேசிக்க முடியும்? உங்களுக்குப் பார்க்காத ஒன்றை நேசிப்பதென்பது மிகவும் கடினமான ஒரு காரிய மாகும். ஆனால், நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் நேசிக்க முடியும், அல்லவா? உங்களால் விலங்குகளை, தாவரங்களை, மக்களை எல்லாம் நேசிக்க முடியும். நேசிக்கும் சந்தோஷத்திற்காகவே, எந்தவிதக் காரணமும் இன்றி, அவற்றை வெறுமனே நேசியுங்கள்.

வெறுமனேஅவற்றுடன்ஒரு ஆழமான தொடர்பை உணர்ந்து, அவற்றை நேசியுங்கள். இதைச் செய்ய ஆரம்பித்த வுடன், பிரபஞ்ச இருப்புத்தன்மை மீது உங்களுக்கு ஒரு விசுவாசம் வளர ஆரம்பிக்கும். ஏனெனில் பிரபஞ்ச இருப்புத் தன்மைதான் இவை எல்லாவற்றினூடும் ஒடிக் கொண்டிருக்கும் பொதுவான இழை. விசுவாசம் என்பது உங்கள் மீது சுமத்த முடியாக ஒரு விஷயம். அப்படி அது உங்கள் மீது சுமத்தப் பட்டால், நீங்கள் அதை எதிர்ப்பீர்கள். அது தொந்தரவு கொடுப்பதாக உணர்வீர்கள். அதனால் விசுவாக்கப்படும் பொருள் மீது ஒரு வெறுப்பை வளர்த்துக் கொள்வீர்கள். தகாத முறையில் இன்னொரு விஷயத்தின் மீது சார்ந்திருக்குமாறு செய்யப்பட்டு விட்டதாக நீங்கள் உணர்வீர்கள். ஆனால் அது உங்கள் அனுபவமாக ஆகிவிட்டால், அது முழுவதுமே வேறு மாதிரி ஆகிவிடும்.

இந்த விசுவாசம் நிகழும் பொழுது, மெதுவாக, உங்கள் அன்பானது பிரபஞ்ச இருப்புக் கன்மையை நோக்கிய அன்பாக, இவை எல்லாவற்றிலும் இருக்கும் கடவுள் அல்லது உயிர் ஆற்றலை நோக்கிய அன்பாக ஆகிவிடும். பிறகு நீங்கள் பிரபஞ்ச இருப்புத்

தீவிரமான தலைவலி இருக்கும்பொழுது உங்களுக்குப் பிடித்தமான ஏதாவதொன்றில் ஆழ்ந்து ஈடுபடுங்கள். உங்கள் தலைவலி பறந்து விடும்.

தன்மையை நோக்கி அன்பைப் பரப்ப ஆரம்பித்துவிடுவீர்கள். பிறகு இறுதியான மதம் உங்களிடம் வேர் விடத் தொடங்கும். அது நன்றியுணர்வு மற்றும் அன்பின் மதமாகும்.

நன்றியுணர்வும் அன்பும் நெருங்கிய தொடர்புடையது. நீங்கள் நன்றியுணர்வை உங்கள் இருப்புத் தன்மையின் அடிப்பகுதியில் அனுபவபூர்வமாக உணரும் பொழுது, உங்களிடம் அன்பைத் தவிர வேறெதுவும் இருக்காது. உண்மையான அன்பை உணர்வதற்கான முதல் படி, நன்றி யுணர்வை உணர்வது. உங்கள் அமைப்பில் மனநிறைவின்மை இருக்கும்வரை, உண்மையான அன்பு இருக்க முடியாது. நன்றியுணர்வும் அன்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செல்லும். கடைசி சக்கரமான, ஸ்ஹஸ்ரார சக்கரத்தைப் பற்றிப் பேசும்பொழுது நாம் நன்றியுணர்வைப் பற்றி நிறைய பேசுவோம்.

நான் இவற்றையெல்லாம் பொழுது, அவர்கள் சொல்கிறார்கள், ''ஸ்வாமிஜி, நான் உலகம் முழுவதையும் நேசிக்கிறேன் ஸ்வாமிஜி. நான் ஒரு சின்ன எறும்புக்குக் கூட தீங்கு செய்வதில்லை ... '' என்று

இவற்றையெல்லாம் சொல்லி உங்களை நீங்களே ஏன் ஏமாற்றிக் கொள்ள விரும்புகிறீர்கள்? உங்களால் உங்கள் அண்டை வீட்டாரை முழு மனதுடன் நேசிக்க முடியுமா? நான் சொல்கிறேன் ... முழு உலகையும் நேசிக்கிறேன் என்பது போன்ற விஷயங்களைச் சொல்வது மக்களுக்கு வெகு சுலபம். ஏனெனில் அதை நிரூபிப்பதற்கு, உணர முடிந்த வகையில் அவர்கள் எதையும் செய்யத் தேவையில்லை !

உலகை நேசிப்பதாகச் சொல்லிக் கொண்டு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கலாம்! அதைக் காண்பிப்பதற்காக அவர்கள் எதையும் தனிப்பட்ட விதத்தில் செய்ய வேண்டியதில்லை! எனெனில் உலகம் என்பது உணர முடியாக பொருள்; அது உருவமற்றது; அதற்கு ஒரு தெளிவான அடையாளம் இல்லை.

ஆனால் நீங்கள், உங்கள் அண்டை வீட்டுக்காரரை நேசி க்கிறேன் என்று சொல்லும் பொழுது பிரச்சினை ஆரம்பமாகி விடுகிறது! நீங்கள் தினமும் அவரது முகத்தைக் காண வேண்டும். நீங்கள் அவரை நேசிப்பதை, ஏதேனும் உணரக் கூடிய வகையில் செய்து நிரூபிக்க வேண்டும்! அப்பொழுது அது ஒரு பிரச்சினையாகி விடுகிறது !

ஒரு எறும்புக்கு எதுவும் தீங்கு விளைவிக்காததனால், நீங்கள் எவ்வாறு சிறப்பாக உணர முடியும் ? எறும்பால் உங்களுக்கோ அல்லது உங்கள் உடமைக்கோ ஏதேனும் ஊறு விளைவிக்க முடியுமா ? அதனால் நீங்கள் அதனை நேசிப்பதை சோதிக்கத்தான் முடியுமா? அது கண்ணுக்குத் தெரிவது கூட இல்லை. அதைப் பற்றி நீங்கள் என்னிடம் பேசுகிறீர்கள். அது நகைப்புக்குரியதாக இல்லை? ஒரு எறும்புக்குக் கூட கெடுதல் செய்வது பற்றி நினைப்பது கூட இல்லை என்று உரிமை கோருகிறீர்கள்! இவையெல்லாம் உண்மையிலிருந்து தப்பிச் செல்வதற்கான வழிகள்!

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங் கள்: உங்கள் உள்ளார்ந்த இயல்பே அன்புதான். அன்பு சாஸ்வதமானது. மற்ற எல்லா உணர்ச்சிகளும் வெறுமனே வரும், போகும், அவ்வளவுதான். நீங்கள் மற்ற எல்லா உணர்ச்சிகளும் உண்மைதான் என்ற எண்ணத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அவைகள் தான் அன்பை அழிக்கின்றன. அன்பை ஒருபோதும் அழிக்க முடியாது. அன்பை அழிக்க முடியுமானால், அது வெகு காலத்திற்கு முன்பே அழிந்து போயிருக்கும்.

நீங்கள் ஏதாவதொரு உணர்ச்சியில் ஆம்ந்து செல்லும்போது, அந்த உணர்ச்சி மட்டுமே இருக்கும். நீங்கள் இருக்க மாட்டீர்கள். இதைத்தான் நாம் முழுமை என்கிறோம்.

நீங்கள் உண்மையிலேயே நேசிப்பீர்களானால், எதிர் உணர்ச்சிகள் உங்களுக்குள் நுழைய முடியாது. அவைகள் வெறுமனே ஒதுக்கப்பட்டு விடும்; ஒரு அறையில் பிரகாசமான ஒளி இருக்கும் பொழுது. இருளை உள்ளே கொண்டு வா முடியுமா? முடியாது! ஒளியின் பிரகாசத்தை மங்கச் செய்யும் பொழுதுதான், இருள் நுழைய முடியும். அதே வகையில், உண்மையான அன்பு உங்களிடம் நிகழும் வரைதான், மற்ற உணர்ச்சிகள் ஆக்கிரமிக்கும்! நீங்கள் அன்பால் தளும்பிக் கொண்டிருக்கும் பொழுது, வேறு உணர்ச்சிகள் நுழைய வழியே இல்லை. இந்த சக்கரம் - அனாஹத சக்கரம் -உங்களை அன்பால் தளும்பச் செய்ய வேண்டும். ஏனெனில், அது பொங்கிப் பிரவகிக்கும், சக்தி யூட்டும் அன்பான சக்தியாகும்.

நீங்கள் அனுபவித்திருக்கலாம்; நீங்கள் தீவிரமாக எதையாவது செய்தால், உங்களை மறந்து விடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் இதை நீங்கள் பலமுறை அனுபவித்திருப்பீர்கள். நீங்கள் செய்வது எதுவாயினும் இருக்கலாம். அது வண்ணம் தீட்டுதல், ஒவியம் வரைதல், படித்தல் அல்லது இது போன்று ஏதாவது எளிமையான ஒன்றாகக் கூட இருக்கலாம். அதனுள் ஆழமாகச் செல்லும் பொழுது நீங்கள் உங்களை மறந்து விடுவீர்கள். தீவிரமான தலைவலி இருக்கும் பொழுது, உங்களுக்குப் பிடித்தமான ஏதாவதொன்றை ஆழ்ந்து செய்யுங்கள்; உங்கள் தலைவலி பறந்து விடும்.

பாருங்கள், கவனத்தில் வைத்துக் கொண்டேயிருப்பதால்தான், உங்கள் தலைவலியும் தொடர்ந்து உங்களைத் தொந்தரவு செய்கிறது. நீங்கள் ஏதாவதொன்றில் ஆழ்ந்து உங்கள் தலையை மறக்கும் கணத்தில்,

நீங்கள் அன்பால் தளும்பிக் கொண்டிருக்கும் பொழுது, உங்களை உணர மாட்டீர்கள். அன்பை மட்டுமே உணர்வீர்கள். நீங்கள் அன்பாகி விடுவீர்கள்.

உங்கள் தலைவலியும் மறைந்து விடுகிறது. உங்கள் தலை உங்கள் ஞாபகத்தில் இருக்கும் வரைதான், உங்கள் தலைவலி இருக்கும். நீங்கள் ஏதாவதொரு உணர்ச்சியில் ஆழ்ந்து செல்லும் பொழுது, அந்த உணர்ச்சி மட்டுமே இருக்கும், நீங்கள் இருக்க மாட்டீர்கள். இதைத்தான் நாம் 'முழுமை' என்று சொல்கிறோம்.

'நீங்கள்' மறையும் அந்தக் கணத்தை, நீங்கள் வெறுமனே சில வினாடிகள் அனுபவித்திருக்கலாம். ஆனால் உங்களால் எல்லாவற்றிலுமே தீவிரமாகவும், முழுமையாகவும் இருக்க முடியுமானால், இந்த 'நீங்கள்' மறையும் அனுபவம் உங்களுக்கு அடிக்கடி ஏற்படும். வெகுநேரம் நீடிக்கும். விரைவில், நீங்கள் இல்லாமலே இருந்து கொண்டு, வேலையை தீவிரமாக செய்யும் கலையில் தேர்ச்சி பெற்று விடுவீர்கள்! பிறகு நீங்கள் விரும்பும் பொழுது (ஒரு மின் விளக்கைப் போல) போடவோ அல்லது அணைக்கவோ செய்து கொள்ள முடியும். நீங்கள் வெளியே நடக்கும் வேலையைச் சார்ந்து இருக்க மாட்டீர்கள்.

அதே போன்று, நீங்கள் அன்பால் தளும்பிக் கொண்டிருக்கும் போது, உங்களை உணர மாட்டீர்கள், அன்பை மட்டுமே உணர்வீர்கள்; நீங்களே அன்பாகி விடுவீர்கள். நீங்களே அன்பாகி விடும்போது, உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரையும், கருணையைப் பரப்ப ஆரம்பித்து விடுவீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் அதிகப் பொறுப் பெடுத்துக் கொள்வீர்கள். இந்தப் பொறுப்பணர்வு மக்களுக்குச் சேவை செய்யும் அறங்காரத்தினால் வருவதல்ல : மாறாக உங்களிடமிருந்து பொங்கிப் பிரவகிக்கும் சக்கியிலிருந்து வருவது.

அன்பும் பொறுப்புணர்வும் எப்பொழுதும் இணைந்தே செல்லும். நீங்கள் உண்மையிலேயே அன்பாக இருப்பீர்களானால், நீங்கள் சந்நியாசிகள் மக்கள் நினைக்கிறார்கள். நான் சொல்கிறேன்: உங்கள் சொந்த குடும்பத்திற்கான பொறுப்பைத் துறக்கும்பொழுது, நீங்கள் ஒரு மிகப் பெரிய குடும்பத்திற்கான-மனித குலம் முழுவதற்குமான, உங்கள் குடும்பத்தை விட இலட்சக்கணக்கான மடங்கு பெரிதான குடும்பத்திற்கான - பொறுப்பை ஏற்கிறீர்கள். இதனைப் புரிந்து கொள்ளாத மக்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

நீங்கள் எந்த கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு விரிவடைகிறீர்கள். பொறுப்பு என்பது சுலபமாகத் தட்டிக் கழித்து விடக் கூடியது. ஆனால் தட்டிக் கழிக்காமல் உங்கள் தோள்களில் ஏற்றிக் கொண்டால், நீங்கள் விரிவடைவீர்கள். தெய்வீக சக்தி தானாகவே உங்களுக்குள் பாயும். உங்களுக்குள் பொங்கிப் பிரவகிக்கும் சக்கியை நீங்கள் உணர்ந்தால்கான் உங்களால் மேலும் மேலும் அதிகப் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள முடியும். ஆனந்த தியான சிகிச்சையாளர்களின் கூட்டத்தில், அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொறுப்பெடுத்துக் கொண்டு, அவர்களைச் சுற்றியுள்ள மக்களின் துயரங்களையும் வலியையும் குணப்படுத்த வேண்டும் என்று நான் எப்பொழுதும் சொல்வதுண்டு.

உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வலிக்கு நீங்கள் பொறுப்பு என்பதை உணர்ந்து கொண்டால், அதை ஏதாவது ஒரு வழியில் குறைப்பதற்கு நீங்கள் தானாகவே எழுந்து நிற்பீர்கள். மக்கள் அவர்களின் சொந்தக் குடும்பத்திற்கு ஏதாவது செய்தாலே போதுமானது என்று நினைக்கிறார்கள். இது விரிவடை வகற்கான வழியல்ல. கருங்கிக் கொள்வதற்கான வழியாகும். நீங்கள் வளர வேண்டுமானால் விரிவடைய விரிவடைய வேண்டும். நீங்கள் பொறுப்புணர்வுடன் எழுந்து நிற்கும் பொழுது சக்தியைப் பரப்புகிறீர்கள். நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையானது தானாகவே உங்களுக்குள் பாயும்.

மக்கள் சொல்வார்கள், ''ஸ்வாமிஜி, நான் என் குடும்பத்தை ஒழுங்காக போஷித்து வர முடிந்தாலே போதுமானது' என்று. நான் சொல்கிறேன், ''இது உங்களைச் சுற்றி நீங்களே இறுக்கமான ஒரு எல்லைக் கோட்டை வரைந்து கொள்வதற்கான சாக்கு; உங்களைச் சுருக்கிக் கொள்வதற்கான ஒரு வழி''.

நீங்கள் போதி தா்மரின் இந்தப் பிரபல வரிகளைக் கேட்டிருப்பீர்கள்:

புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சாணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி

அதன் பொருள் :

நான் புத்தரிடம் சரணடைகிறேன்;

நான் தம்மத்திடம் (தா்மம் - புத்தரின் போதனை) சரணடைகிறேன் :

நான் சங்கத்திடம் (புத்தரால் உருவாக்கப்பட்ட அமைப்பு) சரணடைகிறேன்.

புத்தரிடமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு குருவிடமோ சரணடைவது மிகவும் எளிது. அதற்காக நீங்கள் நிறையச் செய்ய வேண்டியதில்லை. குருமார்கள் அவர்களது தெய்வீகப் பண்பால் மிகவும் கவர்ந்திழுப்பவர்களாக இருக்கிறார்கள். உங்கள் தரப்பிலி ருந்து நீங்கள் அதற்காக எதுவும் செய்ய வேண்டியதில்லை. என்னை பார்த்த கணத்திலேயே என் மீது ஒரு நம்பிக்கையும் விசு வாசமும் ஏற்படுவதாக மக்கள் சொல்கிறார்கள். நான் சொல்கிறேன், இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! என்னுள் இருக்கும் பிரபஞ்ச இருப்புச் சக்தி உங்களை இழுக்கிறது, அவ்வளவுதான்!

இரண்டாவது அடி : நான் புத்தரின் போதனைகளிடம் சரணடைகிறேன். இது முதலடியை விடக் கொஞ்சம் கடினமானது, ஏனெனில் இதைச் சொல்லும் கணத்தில், நீங்கள் பின்பற்றுவதை காண்பிக்க வேண்டும்! உதாரணத்திற்கு, நான் உங்களிடம் " ஆனந்தமாக இருங்கள்" என்று சொல்கிறேன். அதுதான் என் போதனை. அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ''இல்லை, இல்லை, ஸ்வாமிஜி, அது சாத்தியமில்லை...''. தெளிவாக இருங்கள்; நான் சாத்தியமான விஷயங்களை மட்டும்தான் சொல்கிறேன். நீங்கள் நினைக்கத் உடனே ஞானமடைந்தவர், ஸ்வாமிஜிக்கு நடைமுறை வாழ்க்கை பற்றியெல்லாம் எதுவும் தெரியாது ... ' என்று இல்லை, அது தவறு.

நீங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையில் என்னவாக முடியுமோ, அவைகளைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். நான் "ஆனந்தமாக இருங்கள்" என்று சொல்லும் போது என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் வெறும் வார்த்தைகளை போதனை செய்யவில்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். "ஆனந்தமாக இருங்கள்" என்று சொல்லும்போது, நான் இருக்கும் அந்த ஆனந்த நிலையை அனுபவிக்க உங்களை இழுக்கிறேன். அது நிச்சயமாக சாத்தியம் தான். எனெனில் நான் உயிருடன் உங்கள் முன்னால் இருக்கிறேன்.

எப்படியாயினும் ... மூன்றாவது அடி சொல்கிறது; நான் புத்தர் நிறுவிய சங்கத்திடம் சரணடைகிறேன் என்று. இங்கேதான் உண்மையான பிரச்சினை ஆரம்பிக்கிறது. இதற்கு அபரிமிதமான பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

புரிந்து கொள்ளுங்கள் : குருமார்கள், அவர்களது உடலை விட அவர்களுடைய நோக்கத்தில்தான் அதிகமாக வாழ்கிறார்கள். 33% சக்தி மட்டுமே அவர்களது உடலில் இருக்கிறது. மீதமுள்ள 66% சக்தி அவர்களது நோக்கத்திலும் போதனைகளிலும்தான் இருக்கிறது. அவர்கள் அது போன்ற பொறுப்புணர்வுடன் வாழ்கிறார்கள். நான் எப்பொழுதும் மக்களிடம் சொல்வதுண்டு: 'எனக்கு வேண்டிய சக்தியை என்னுடைய இயக்கத்தில் இருந்து பெறுகிறேன், நான் உண்ணும் உணவில் இருந்து அல்ல'.

குருமார்கள் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவோ ஒருபோதும் பிறவி எடுப்பதில்லை; ஏனெனில் அவர்கள் பூர்த்தி செய்து கொள்வதற்கான காமா எதுவும் இல்லை. அவர்கள் பிறவியெடுப்பது வெறும் கருணையினாலும் அன்பினாலும் மட்டுமே; மக்களின் ஆன்மாவை தூண்டி விடுவதற்காகவே. ஒரு குரு எதற்காகப் பிறவியெடுத்தாரோ அந்த நோக்கத்தின் தீவிரத் தன்மையையும் வேகத்தையும் பொறுத்தே அவரது ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது.

குருமார்கள் அவர்களது உடலை விட, அவர்களது வார்த்தைகளிலும் இயக்கத்திலுமே அதிகம் வாழ்கிறார்கள்.

Mission1

அதனால்தான் நான் எப்பொழுதும் சொல்கிறேன், 'என் வடிவத்தை விட்டுவிட்டு அதற்கு பதிலாக சக்தியை உணரத் தொடங்குங்கள்' என்று.

ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எப்பொழுதும் என் கையை பிடித்துக் கொண்டிருக்க முயற்சி செய்கிறீர்கள்! என்னுடைய பணியை உண்மையிலேயே அது உங்கள் பணி செய்வதற்கு பதிலாக, என் பின்னால் தொங்கிக் கொண்டு, எப்பொழுதும் இந்த உடலுடன் இருக்க விரும்புகிறீர்கள். இதை நான் சொல்லும் பொழுது, ஒருபோதும் நீங்கள் பரிந்து கொள்வதில்லை.

ஒரு தெய்வீக நோக்கத்திற்கான வேலையைச் செய்யும் பொழுது, நீங்கள் இரண்டு விஷயங்களைச் செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒன்று: உங்கள் சொந்த ஆன்மீக வளர்ச்சி க்கான தியானம். இரண்டாவது : பொறுப் புணர்வுடன் கூடிய சமூக சேவை.

இரண்டாவது ஒரு உப-விளைவு மட்டுமே. நீங்கள் இந்த வேலையைச் செய்யும் பொழுது உங்களிடம் நிகழும் உருமாற்றமே என்னுடைய உண்மையான உங்களை உருமாற்றும் வேலையாகும் !

என் வேலை தொடர்ந்து உங்களிடம் உருமாற்றம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதே. அது பல வழிகளில் நிகழ்கிறது. அதில் ஒன்றுதான் என் நோக்கத்திற்காக உங்களை வேலை செய்ய வைப்பது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள்கிறீர்களா ?

அதனால் பொறுப்பை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்! பெரிய பொறுப்புகள் உங்களை எதிர்த்து நிற்கும் பொழுது வெறுமனே தலையாட்டுங்கள். எதிர்ப்பில்லாமல்

உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வலிக்கு நீங்கள் பொறுப்பு என்பதை உணர்ந்து கொண்டால், அதை ஏதாவதொரு வழியில் குறைப்பதற்கு தானாகவே நீங்கள் எழுந்து நிற்பீர்கள். வெறும் தலையாட்டுதலே போதுமானது. மற்றதை பிரபஞ்ச இருப்புத் தன்மையே பார்த்துக் கொள்ளும்.

நீங்கள் பாரதத்தின் புகழ்பெற்ற இனிப்பான மைசூர்பாக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், வாயில் போட்டவுடன் கரைந்து, ஒரு புதிய சக்தியைத் தரும். அதே போல், நீங்கள் வெறுமனே பொறுப்பெடுக்க தலையாட்டும் பொழுது, அதைச் செய்து முடிக்கத் தேவையான சக்தியையும் உடனே பெறுவீர்கள். பொறுப்பை எடுத்துக் கொள்ளும் அதே செயலே, அதற்குத் தேவையான சக்தியையும் உங்களுக்குள் கொண்டு வரும். இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அன்பான சக்தியை நீங்கள் உங்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டுமானால், நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை முழுவதையும் எந்தவிதப் பாகுபாடுமின்றி நேசிக்க வேண்டும். எந்தவிதப் பாகுபாடுமின்றி நேசிக்கும் பொழுது, எந்தவிதப் பாகுபாடுமின்றி பொறுப் பெடுத்துக் கொள்ளவும் முடியும். பொறுப்புணர்வு என்பது (எந்த ஒரு நிகழ்விற்கும்) தன்னிச்சையாகத் தக்க பதில் கொடுக்கும் திறமை. உங்களால் ஒரு எண்ணம் இன்றி, திட்டம் இன்றி, பதில் கொடுக்க முடிந்தால், எதையும் தன்னிச்சையாக எடுத்துக் கொள்ள முடியுமானால், நீங்கள் வந்து சேர்ந்து விட்டீர்கள் என்று அர்த்தம்!

சரி... ஏதேனும் கேள்விகள், இதுவரையில் ?

ஸ்வாமிஜி, நான் அன்பாக இருக்க விரும்புகிறேன், ஆனால் என்னால் (எது நடந்தாலும் சரி என்று) விட்டுவிட முடிய வில்லையே ... ?

ஆம்...

Let Go1

முழுமையாக அன்பாக இருப்பது என்பது அஹங்காரத்திற்கு ஒரு பெரிய சவால். முழுமையாக அன்பாக இருப்பது என்பது தன்னையே முழுமையுடன் கலந்து விடுவது. இது அஹங்காரத்திற்கு ரொம்ப சிரமமான காரியம். இப்பொழுது நீங்கள் பல துண்டுகளாக இருக்கிறீர்கள்; நீங்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை. நீங்கள் பிளவுபட்டு இருக்கும் பொழுது, உங்களுடைய வெவ்வேறு துண்டுகளுடனேயே விளையாடித் தப்பித்து விடுகிறீர்கள், அவ்வளவே. அன்பாக இருப்பது என்றால், நீங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் ஒருங்கிணைக்கப்படுவதற்குப் பயப்படுகிறீர்கள். ஒருங்கிணைக்கப்பட்டு விட்டால், நீங்கள் ஒரே முழுமையாக வளர்கிறீர்கள்.

ஆனால் ஒருங்கிணைக்கப்படுவதற்கு, நீங்கள் இறந்து மீண்டும் பிறக்க வேண்டும். துண்டுகளாக இருப்பதற்கு மிகவும் பழக்கப்பட்டு விட்டதால், நீங்கள் ஒருங்கிணைக்கப் பட வேண்டியதை, அச்சுறுத்தப்படுவதாக எடுத்துக் கொள்கிறீர்கள். உங்கள் அனுங்காரம் அது நிகழ்வதற்கு அனுமதி மறுக்கிறது. நீங்கள் அன்பானவராக ஆகும் பொழுது, உங்கள் அஹங்காரத்தை உருக்கி விடுகிறீர்கள். முன்பு அஹங்காரம் கடினமாகவும் திடமாகவும் இருந்தது; உங்களுக்கும் நன்றாக இருந்தது. உங்கள் அஹங்காரம் உருகும் பொழுது என்ன நிகழ்கிறது ? உங்கள் முழு அடையாளத்தையுமே இழப்பது போன்று உணர்கிறீர்கள்.

நீங்கள் ஒரே ஒருமுறை (எது நடந்தாலும் சரி என்று) விட்டுவிடத் தீர்மானித்து விட்டீர்களானால், ஒரு அற்புதமான சுதந்திரத்தை, விடுதலையை உங்களுக்குள் உணர்வீர்கள், அன்பாக இருக்கவும், (எது நடந்தாலும் சரி என்று) விட்டுவிடவும்

என்றுடைய வேலை தொடர்ந்து உங்களிடம் உருமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதே.

தைரியம் வேண்டும். முதற் படியாக, இதைப் பற்றி உங்களின் உள் ஆழத்தில் குறைந்தபட்சம் விழிப்புடன் இருங்கள்; பிறகு அது தானாகவே நிகழும். விழிப்புணர்வே எந்தப் பூட்டையும்

திறக்கும் திறவுகோலாகும்.

புரிந்து கொள்ளுங்கள், நாம-ரூபங்களுக்கு அப்பாற்பட்டு நீங்கள் அன்பு செலுத்தும் போது, நீங்கள் எதையும் இழக்கவில்லை. நீங்கள் எது இல்லையோ-உங்களைப் பற்றிய தவறான கற்பனைகள் - அதைத்தான் இழக்கிறீர்கள். அது இழக்க வேண்டியதுதான். ஆனால், நீங்கள் சம்பாதித்தது உண்மைத் தன்மையை. அதனால் விசுவாசமாயிருங்கள்; முழுமுமையில் கலக்க நேரும் பொழுது பயப்படாதீர்கள்.

முழுமையுடன் கலக்கும் சந்தர்ப்பத்தை ஒரு போதும் தவிர்த்து விடாதீர்கள். வெறுமனே (எது நடந்தாலும் சரி என்று) விட்டு விடுங்கள்; உள்ளே நிகழும் மாற்றத்தைக் கவனியுங் கள், பிறகு எவ்வளவு முட்டாள்தனமாக அவறங்காரத்தின் வழிகளைப் பிடித்துக் கொண்டிருந்தோம் என்று உணர்வீர்கள்; அஹங்காரத்தின் முகத் திரைக்குப் பின்னால் இருந்ததால் எவ்வளவு விஷயங்களைத் தவற விட்டிருக்கிறோம் என்பதை உணர்வீர்கள்.

உண்மையான அன்பு கணக்குப் பார்க்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மூளை கணக்குப் பார்க்கும், இதயம் பார்க்காது. நீங்கள் மூளையிலிருந்து இதயத்திற்குச் செல்லும் காலம் வந்து விட்டது. நீங்கள் இதுவரை மூளை சொல்வதை நிறையக் கேட்டு விட்டீர்கள். இனிமேலாவது இதயம் சொல்வதைக் கேளுங்கள். அதனால் பின்னர் வருத்தப்பட நேராது. இதயத்துடன் வாழும்

Awareness1

பொழுது, எதற்காகவும் வாழ்க்கையில் வருத்தப்பட நேராது. ஏனெனில் நீங்கள் பரிபூரணமாகவும் முழுமையாகவும் வாழ்வீர்கள்.

முளையுடன், உங்களால் உண்மையான அன்பை ஒருபோதும் அனுபவிக்க முடியாது. அதை இதயத்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். அன்பை உங்கள் இருப்புத் தன்மையின் மையத்திலிருந்தே அனுபவிக்க முடியும். உங்கள் இருப்புத் தன்மையின் மையமானது முழுமையான அமைதியில் இருக்கிறது; அதற்கு எந்தவிதமான வார்த்தைகளோ அல்லது எண்ணங்களோ தெரியாது. எண்ணத்தால் அதை ஒருபோதும் ஊடுருவிச் செல்ல முடியாது. அதற்கு அன்பைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.

அதனால்தான் காலங்காலமாக, குருமார்கள் உங்களை நீங்களே கண்டுபிடிக்க, உங்களுக்குள் ஆழமாகச் செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். இந்த மையம்தான் உங்களுடைய உண்மையான இயல்பு; உண்மையில் இதுதான் நீங்கள். ஆனால் நீங்கள் உங்களை எல்லா விதமான இடங்களிலும், உறவுகளிலும், மனிதர் களிலும் தேடிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து தவற விட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் உள்ளே பார்க்கும் காலம் வந்துவிட்டது; வெளியே தேடுவதை நிறுத்தும் காலமும் வந்துவிட்டது. நீங்கள் உங்களை போதுமான அளவு ஏமாற்றிக் கொண்டு விட்டீர்கள். முன்னேறிச் செல்லுங்கள்.

நாம் தொடர்ந்து அன்பைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம்; ஏனெனில் நாம் அதைத் தவற விட்டுக் கொண்டேயிருக்கிறோம்; ஏனெனில் நமக்கு இதுவரை அதன் சுவை தெரியாது. அது இதைப் போல இருக்கிறது ... ஒருவன் தாகமாக இருக்கும்போது எப்பொழுதும் தண்ணீரைப் பற்றியே பேசிக்

முழுமையாக அன்பாக இருப்பது என்பது தன்னையே முழுமையுடன் கலந்து விடுவது -இது அஹங்காரத்திற்கு மிகவும் சிரமமான காரியம்.

கொண்டும் கனவு கண்டு கொண்டும் இருப்பான். அவன் தாகம் தணிந்த உடனே, அதைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விடுவான். நாம் (எது நடந்தாலும் சரி என்று) விட்டு விடவேண்டும். உண்மையான அன்பை, முழுமையுடன் உங்களைக் கலந்து விடும் அன்பை, அனுபவிக்க வேண்டும். அப்பொழுது நாம் அதைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விடுவோம்.

பிரபஞ்ச இருப்புக்கன்மை உங்களைச் சூழ்ந்து கொள்ள, உங்களை அதனுள் கரைத்துக் கொள்ளக் கைகளை விரித்துக் காத்திருக்கிறது. ஆனால் நீங்கள் விட்டுவிடத் தயாராக இருந்தால் மட்டுமே. திறந்த இதயத்துடன், விட்டு விடும் தைரியத்தைப் பெறுங்கள். நீங்கள் சந்திப்பீர்கள்; அதனுடன் கலந்து விடுவீர்கள்.

நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் தழுவலை உணர்வதற்குத் தயாரென்றால், உயர் நிலைத் தளங்களுக்கு. உயர்நிலை விழிப்புணர்வு தளங்களுக்கு, உயர்வீர்கள். உங்களுக்கு இதற்கு முன் ஒருபோதும் தெரிந்திராத வெளியில் நுழைவீர்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பொறுத்தவரை எப்பொழுதுமே நீங்கள் கீழே விழுந்தால் மேலே செல்வீர்கள்.

அன்பு உண்மையிலேயே சரணாகதியாகும். ஆனால் நம்மில் பலருக்கு அது ஒரு போராட்டமாக இருக்கிறது. நாம் நம்மடன் மட்டுமல்ல, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனும் போராடிக் கொண்டிருக்கிறோம். நான் சரணாகதி என்று சொல்லும் போது, ஏற்றுக் கொள்வதனால் வரும் சரணாகதியைச் சொல்லவில்லை; சரணாகதியைச்

ரீதங்கள் ஒரே ஒரு முறை, எது நடப்பினும் சரி என்று விட்டு விட்டீர்களானால், ஒரு அற்புதமான சுதந்திரத்தை, விடுதலையை உங்களுக்குள் உணர்வீர்கள்.

அடைந்தால், நீங்கள் சமாசம் செய்து கொள்கிறீர்கள். சமரசத்தால் அன்பு ஒருபோதும் வராது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். சமரசம் செய்து கொண்ட உடனேயே அன்பு இல்லாமல் போய் விடுகிறது. புரிந்து கொண்டு கரைவதால் மட்டுமே நீங்கள் அன்பாக மாறுகிறீர்கள்.

நீங்கள் ஒரு குருவுடன் இருக்கும் பொழுது அன்பைக் கண்டுபிடிப்பதற்கு, ஒரு வாழ்நாள் வாய்ப்பைப் பெறுகிறீர்கள்; ரீங்கள் இறந்து, மீண்டும் உண்மையான அன்பில் உயிர்த் தெழும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள். ஒரு குருவின் இருப்பில் நிகழும் இரசவாதம், நீங்கள் இறந்து மீண்டும் உண்மையான அன்பில் பிறப்பதைத் தவிர வேறு எந்த வாய்ப்பையும் தருவதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இறப்பதற்கோ அல்லது கரைவதற்கோ விருப்பத்துடன் இருக்க வேண்டியதுதான். நீங்கள் இதற்குத் தயார் என்றால், இதைச் செய்வதற்கான தைரியம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் உயர் விழிப்புணர்வு நிலைகளுக்குத் தாவத் தயார் என்று பொருள்.

அன்பு ஒரு பொருள் அல்ல; அது தன்மை, அது நீங்கள்தான். நீங்களே அன்பாகி விடுகிறீர்கள், அவ்வளவே. பிறகு நீங்கள் ஒரு காரணமே இல்லாமல் அன்பாக இருக்கத் தொடங்கி விடுவீர்கள். மரங்களையும், மலர்களையும், பூமியையும், எல்லாவற்றையுமே ரேசிக்கத் தொடங்கி விடுவீர்கள். நீங்கள் வெறுமனே அன்பைப் பரப்பிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் இந்த முழுப் பிரபஞ்சத்துடனும் ஒன்றாகி விடுவீர்கள். எல்லா எல்லைக் கோடுகளும் மறைந்து, நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்றாகக் கலந்து விடுவீர்கள்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை, உங்களுக்குள் சூழ்ந்து கொள்ள, உங்களை அதனுள் கரைத்துக் கொள்ள, கைகளை விரித்துக் காத்திருக்கிறது.

பாருங்கள் : எல்லாரையும், கொள்ளக் கற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு குருவைப் பார்க்கும் பொழுது, எவ்வாறு அவர் அனைத்தையும் அவருக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அவர் எதையும், யாரையும் ஒருபோதும் விலக்கி வைப்பதில்லை. அவர் யாரிடமும் குறைபாடுகளைக் காண்பதில்லை. அவர் ஒரு வெறும் தூய அன்பு, அவ்வளவுதான். தூய அன்பு எப்பொழுதும் குறைபாடு களைக் காண்பதில்லை.

பிரபஞ்ச இருப்புத்தன்மை தூய அன்பாக இருக்கிறது. சமூகம் எப்பொழுதும் தூய அன்பிற்கு எதிராகவே இருக்கிறது. ஆழ்ந்து உள்ளே நோக்கினால், உண்மையிலேயே சமூகம் பிரபஞ்ச இருப்புத்தன்மை அல்லது கடவுளுக்கு எதிராகவே இருக்கிறது. அதன் வழிபாடுகளெல்லாம் வெறும் வேஷம்தான். அது வழிபாட்டிற்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறது. எதையும் ஆழ்ந்து பின்பற்றாமலிருக்க ஒரு சிறந்த வழி, அதை வழிபடத் தொடங்கி விடுவதுதான்! சமூகம் வழிபாடு என்ற பெயரில் தப்பித்து விடுகிறது. நீங்கள் வழிபடும்போது வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை!

மேலும் நீங்கள் வழிபட்டுக் கொண்டிருப்பதால் மக்கள் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்! ஆனால் உங்கள் உள்வெளி என்னவாகிறது? வளர்ச்சி எதுவும் நிகழாமல் அது இருந்த இடத்திலேயே இருக்கிறது.

நீங்கள் விட்டு விடுவதாயிருந்தாலோ, எல்லா பிராணி களையும் தாவரங்களையும் முடிவற்ற அன்பினால் நேசித்துக்

பிரபஞ்ச இருப்புத் தன்மையை பொறுத்தவரை, எப்பொழுதுமே நீங்கள் கீழே விழுந்தால் மேலே செல்வீர்கள்.

கொண்டிருந்தாலோ, உங்களை சமூகம் ஒருபோதும் அங்கீகரிக்காது. அது உங்களைப் பைத்தியம் என்று சொல்லும். அது கொடுக்கல், வாங்கலால் ஆளப்படுகிற, ஒரு காரணத்துடன் வருகிற, சமூக அன்பை மட்டுமே அங்கீகரிக்கும்.

ஆனால் சாமி சொல்கிறேன்: மனதைத் தளர விட்டு விடாதீர்கள். உங்கள் முழு இதயத்துடன் அன்பாக இருந்து கொண்டிருங்கள். எல்லாவற்றிலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பாருங்கள். தாவரங்களை உங்கள் மென்மையான இதயத்துடன் உணருங்கள். பிராணிகளை உங்களுடையதாகப் பாருங்கள். ஒவ்வொரு மனிதனையும் கடவுளின் ஒரு அங்கமாகப் பாருங்கள். அதுதான் உண்மையான வழிபாடு. கடவுளைக் கோயிலில் வழிபடுவது மிகச் சுலபம். உண்மையான வழிபாடுடன்பது எல்லாவற்றையும் கடவுளாகக் காண்பது; உங்கள் அண்டை வீட்டுக்காரரைக் கடவுளாகக் காண்பது.

மக்கள் எதையும் அதன் மூலம் வரை சென்று பார்ப்பதில்லை ; அதுதான் பிரச்சினையே! அன்பே கடவுளின் மூலமாகும். கடவுளின் மூலம், எல்லாவற்றிலும் அவரைக் காண்பதில்தான் இருக்கிறது. மக்கள் மூலம் வரை செல்வதற்குப் பயப்படு கிறார்கள்; அதனால் அவர்கள் மேலோட்டமான அடுக்கு களிலேயே, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அவர்களிடம், வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாண்டிச் சென்று ஆராய்ந்தறிவதற்கான தைரியம் இல்லை. அதனால்தான் அவர்கள் உங்களையும் ஆராய்ந்தறிய அனுமதிப்பதில்லை. அவர்கள் கண்டுபிடிப்பதே உண்மை என்று உங்களிடம் சொல்கிறார்கள்.

அன்பு உண்மையிலேயே சரணாகதியாகும் - ஆனால் நம்மில் பலருக்கு அது ஒரு போராட்டமாக இருக்கிறது.

அவர்கள் சொல்கிறார்கள்.

உள்ளே ஆழ்ந்து செல்லவும் அன்பு செலுத்தவும் தைரியம் பெறுங்கள். நீங்கள் காணும் எல்லாவற்றிலும் இருக்கும் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் பொதுவான இழையை உணரத் தொடங்கு வீர்கள். நீங்கள் காண்பது எல்லாமே, பிரபஞ்ச இருப்புத்தன்மை என்னும் உண்மையான இழையால் ஒன்றாகக் கோர்க்கப்பட்ட, மாய நிகழ்வுகள்தான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். தானாகவே நீங்கள் எந்தவிதக் கஷ்டமும் இன்றி எல்லாவற்றை யும் ஒரே விதமாக நேசிக்கத் தொடங்கிவிடுவீர்கள். ஏனெனில், நீங்கள் எல்லாரிடத்திலும், எல்லாவற்றிலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையை மட்டுமே காண்கிறீர்கள்.

ஆனால், உங்களிடம் இந்த உருமாற்றம் நிகழ நீங்கள் அனுமதித்தால் மட்டுமே, இது நிகழும். உங்களிடம் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது விழிப்புணர்வில் ஏற்படும் மாற்றமே; வேறு எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான் என்பதை உணரச் செய்யும் ஒரே விஷயம் அன்பு மட்டுமே.

நீங்கள் வருடக்கணக்காக பிரபஞ்ச இருப்புத் தன்மை அல்லது கடவுளைப் பற்றி எந்தவிதமான அனுபவமும் இல்லா மலே, பேசிக் கொண்டு இருக்கலாம். உங்களுக்குக் கடவுளைப் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருப்பதாக நீங்கள் நினைப்பதால், உங்கள் அஹங்காரமானது இனிமையாகவும் திடமாகவும் இருக்கும் ! ஆனால் நீங்கள் உள்ளே நோக்கினால் உறுதியான அனுபவம்

உண்மையான வழிபாடென்பது எல்லாவற்றையும் கடவுளாகக் காண்பது.

எதுவும் இருக்காது. உறுதியான அனுபவம் இல்லாததனால், நீங்கள் வார்த்தைகளில் சிக்கிக் கொண்டு விடுகிறீர்கள். ஏனெனில், பேசுவதை நிறுத்தினால், அங்கே எதுவும் மிச்சமில்லை ; மகிழ்வதற்கு அங்கே எந்த அனுபவமும் இல்லை!

பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கி அன்பு செலுத்தத் தொடங்குங்கள். உங்களுக்கு நிகழும் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் நீங்கள் கடவுளை உணருவீர்கள். நீங்கள் அனைவரும் இங்கிருப்பதால், நான் உங்களிடம் இவ்வளவு பேசுகிறேன். நீங்கள் இங்கு இல்லாமலிருந்தால், நான் இந்த ஆலமரத்திடமும், எல்லாச் செடி கொடிகளுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பேன்! இங்கிருக்கும் ஒவ்வொரு இலையும் என்னுடன் பேசுகிறது. அதுதான் உண்மையான அன்பின் மொழி !

பல வருடங்களாக, நீங்கள் விலங்கினங்களில் முன்னேறிய ஒரு இனம், என்று மக்கள் உங்களிடம் சொல்லி வந்திருக் கிறார்கள். தெளிவாக இருங்கள்: விலங்குள் கூட விலங்குகள் அல்ல. இந்த பூமியில் ஒவ்வொரு அணுவும் தெய்வீகமானது; பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதி. இதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டால், உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் மீதும் கரிசனம் கொள்ளக் தொடங்குவீர்கள்.

உங்கள் உடம்பிற்கு அன்பு தேவையில்லை; ஆனால் உங்கள் இருப்புத் தன்மைக்கு அது தேவை. அன்பு என்பது, நீங்கள் கரைந்து விடும் ஒரு வீர விளையாட்டு. நீங்கள் இல்லாத பொழுது, அன்பு இருக்கிறது. நாம் 'இல்லாமல் இருக்கும்'

தெளிவாக இருங்கள் ... விலங்குகள் கூட விலங்குகள் அல்ல. இந்த பூமியில் ஒவ்வொரு அணுவும் தெய்வீகமானது.

தைரியம் இல்லாததனால் பிடித்துக் கொண்டிருக்கிறோம்; நிபந்தனையற்ற அன்பிலிருந்து பின்வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

முழுமையை உணரும், கரைந்து விடும் வீர விளை யாட்டை எடுத்துக் கொள்ளத் தயாரானவர்கள் வீரர்கள். உங்களுக்குத் தெரிந்த சாதாரண அன்பானது நான்கு சுவர் களுக்குள் சண்டையிடுவதைப் போன்றது. நீங்கள் முழுழுப் பாதுகாப்புடன் போரிடுகிறீர்கள். உண்மையான அன்பு திறந்த வெளியில் தெருக்களில், குளிரில் போரிடுவதைப் போன்றது; தைரியசாலிகள் தெருக்களில் சண்டை போட்டு வெல்கிறார்கள். நான்கு சுவா்களுக்குள் சண்டையிடும் பொழுது, நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்வோ இறப்பிற்கு ஒப்பானது. நீங்கள் உயிருள்ள பிணம் போல இருக்கிறீர்கள். நீங்கள் தெருக்களில் சண்டையிடத் தயாரானால், முழு உயிர்ப்புடனும் விழிப்புடனும் இருக்கிறீர்கள்.

மீண்டும் பரிந்து கொள்ளுங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கருணைமிக்க பார்வையின் கீழ்தான் போரிடுகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு போரிட்டால், நீங்கள் திறந்த வெளியில் போரிடுவதற்காக அஞ்ச வேண்டியதில்லை; ரீங்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை. ஏனெனில், ரீங்கள் வீழ்ந்தாலும், அதன் மடியிலேதான் விழுவீர்கள்! ஆனால் உங்களுக்கு எழுந்து நின்று போரிடும் தைரியம் வேண்டும். அது உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் எடுத்து வைக்கும் அடி. மற்றதை பிரபஞ்ச இருப்புத் தன்மை பார்த்துக் கொள்ளும்.

உங்களுக்கு உண்மையை அறிந்து கொள்ள, அர்வத்தை விட... கொஞ்சம் அதிகமாக இருந்தால் இது நிகழும். வெறும் ஆர்வம்

பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கி அன்பு செலுத்தத் தொடங்குங்கள். உங்களுக்கு நிகழும் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் நீங்கள் கடவுளை உணர்வீர்கள்.

மட்டுமே போதுமானகல்ல. உங்களுக்கு வெறும் ஆர்வம் மட்டுமே இருந்தால், நீங்கள் வருவீர்கள், நடிப்பீர்கள், சென்று விடுவீர்கள். உங்களுக்கு ஆர்வத்தைவிடக் கொஞ்சம் அதிகமாக இருக்குமானால், உங்கள் கொழுந்து விட்டு எரியும் ஆசை எப்பொழுதாவது ஒரு முறை மேலே வருமானால். நீங்கள் உண்மையைத் தெரிந்து கொள்ளவும், உணரவும் தொடங்கலாம். உங்களுக்கு வெறும் ஆர்வம் மட்டுமே இருந்தால், அங்கு பக்தியோ அர்ப்பணிப்போ இருக்காது. அங்கே நெருப்பு இருந் தால், பக்தியும் அர்ப்பணிப்பும் இருக்கும். மீண்டும் மீண்டும் அர்ப்பணிப்பே உங்களை இங்கு கொண்டு வருகிறது.

என்னிடமிருந்து முடியுமோ அவ்வளவு முயன்று பாருங்கள்; உங்களால் முடியாது! வேண்டுமானால் கொஞ்ச நாட்கள் விலகியிருக்கலாம். ஆனால் உங்களுக்குள் எரியும் ஆசையானது, மீண்டும் மீண்டும் உங்களை என்னிடம் இழுத்துக்கொண்டு வந்துவிடும். உண்மையைக் கண்டுபிடிக்க உங்களுக்குள் இந்த தீவிரத்தன்மை வேண்டும்.

பதிலுக்கு எதையும் கேட்காமல், உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பாக இருங்கள். ஒரு காரணத்திற்காக அன்பு செலுத்துவது அன்பல்ல; அது ஒரு வெறும் வியாபாரம். ஒரு காரணமுமின்றி அன்பு செலுத்த முடியுமானால், உங்கள் வழியில் வரும் எதையும், யாரையும் நேசிக்க முடியுமானால், நீங்கள் அற்புதமான உள் சக்தியையும், அழகையும் வெளியிடுவீர்கள். நீங்கள் உடல் அளவில் அழகாக இருந்தாலும் இல்லா விட்டாலும், வெறுமனே அழகாகத் தோன்றுவீர்கள்.

இன்னொரு விஷயம்: நிபந்தனையற்ற அன்பு உங்களுக்கு எதையும் திரும்பத் தராது என்று நினைக்காதீர்கள். அது

அன்பு என்பது நீங்களே கரைந்துவிடும் ஒரு வீர விளையாட்டு. நீங்கள் இல்லாதபொழுது அன்பு இருக்கிறது.

உங்களுக்குப் பல வழிகளில் விஷயங்களைக் திரும்பக் கொண்டு வந்து தரும். ஆகவே நீங்கள் உங்களிடம் வரும் விஷயங்களைப் பார்த்து அவற்றால் பாதிக்கப்படாமல் இருக்கவும், அன்பிற் காகவே தொடர்ந்து அன்பாக இருக்கும் அளவிற்கு வளர்ச்சி அடையவும் வேண்டும். உங்களுக்குப் பதிலுக்குக் கிடைக்கும் விஷயங்களை உங்கள் அறிவு உங்களைப் பார்க்க வைக்கும். அதே அறிவு உங்களை, ஆனந்தமயமாக அவற்றால் தொடப் படாமலும் காக்கும்.

உங்கள் இதயத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்படும். மேலும் நீங்கள் புது மனிதனாகி விடுவீர்கள். உங்களுக்குள் நிகழ்ந்த மாற்றத்தை நீங்களும் மற்றவர்களும் உணர்வீர்கள். மக்கள் உங்களிடம் ஒரு புது விதமான மரியாதையை வளர்த்துக் கொள்வார்கள். அவர்கள், ஒரு வழியில் அவர்களால் புரிந்து கொள்ள முடியாத வகையில் நீங்கள் மலர்ந்து கொண்டிருப்பதைக் காண்பார்கள். நீங்கள் பரப்பும் சக்தியை அவர்களால் உணர முடியும்.

நிபந்தனையற்ற அன்பைப் பொழிவதற்கு, நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். நீங்கள் சுதந்திரமாகவும் விடுதலை பெற்றதாகவும் உணர்ந்தால்தான் உங்களால் ஒரு கவலையும் காரணமும் இன்றி அன்பாக இருக்க முடியும். விடுதலை என்றால் நான் என்ன பொருள் கொள்கிறேன்? ஜாதி, மதம், இனம், மதக் கோட்பாடுகள், சமயப் பிரிவுகள், குடும்பம், உறவினர்கள் முதலியவற்றால் கட்டுப்படாமல் இருத்தல்; ஏனெனில் இவற்றால் நீங்கள் கட்டுப்பட்டு விட்டால், உங்கள் அன்பும் கட்டுப்பட்டதாகிறது ; கட்டுப்பட்ட அன்பு உண்மையான அன்பு அல்ல. எவ்வாறு உங்களால் எல்லைகளுடன் அன்பு செலுத்த முடியும் ? அது அன்பின் வரையறைக்கே எதிராக உள்ளது !

மீண்டும் மீண்டும் அர்ப்பணிப்பே உங்களை இங்கு கொண்டு வருகிறது.

நான் உங்கள் குடும்பம், மதம் முதலியவற்றை மறந்து விடும்படிச் சொல்லவில்லை. அன்பை இவற்றின் பின்னணி யில் பார்க்காதீர்கள் என்ற சொல்கிறேன். அவ்வளவே. நீங்கள் அன்பாக இருந்தால், விடுதலை பெற்றது போல அன்பைப் பொழியுங்கள், எப்பொழுது நீங்கள் விடுதலை பெற்றதாக உணர்கிறீர்கள் ? இது போன்ற எல்லா அடிமைத் தளையிலிருந்தும் சுதந்திரம் பெறும் பொழுது; நீங்கள் உங்களை ஒரு குறிப்பிட்ட விஷயத்துடன் அடையாளம் காணாத போது. நீங்கள் இந்த முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான் என்பதை உணரும் பொழுது மட்டுமே உங்களால் எல்லையற்ற அன்பைப் பொழிய முடியும்.

நான் எப்பொழுதும் மக்களிடம் சொல்வதுண்டு: உங்களிடையே ஒருவருக்கொருவர் என்னுடைய அன்பை உணர முடியுமானால், நீங்கள் உண்மையில் அன்பை தரிசித்திருக்கிறீர்கள் என்று பொருள். ஏனெனில் நான் முன்பே சொன்னது போல், என்னை நேசிப்பது வெகு சுலபம்! ஆனால் நீங்கள் என்னிடம் காட்டும் அதே அன்பை மற்ற பக்தர்களிடமும் காட்ட முடிந்தால், அப்பொழுது நீங்கள் உண்மையான அன்பின் இழையைப் பிடித்து விட்டீர்கள்; அப்பொழுது நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையை எல்லாவற்றிலும் உணர ஆரம்பித்து விட்டீர்கள். அப்பொருது நீங்கள், மெதுவாக எல்லாவற்றையும், எல்லோரையும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதியாகவே அரவணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள்.

சரி ... நாம் இப்பொழுது அனாஹத சக்கரத்திற்கான, மிகவும் சுலபமான, ஆனால், அதிக பலன் தரக் கூடிய, மஹா மந்திர தியானத்தைச் செய்வோம்.

ஆனந்தமாக இருங்கள்!