பயத்தை எதிர்கொள்ளல்
- ஸ்வாதிஷ்டான சக்கரம் -
- இருள் தியானம் -
ஸ்வாதிஷ்டான சக்கரம் தொப்புளுக்கு 2 அங்குலம் கீழே இருக்கிறது.
ஸ்வாதிஷ்டானா என்றால், 'இருப்புத்தன்மை நிலை கொண்டிருக்கும் இடம்' என்று பொருள். ஸ்வ என்றால் 'தான்', அதிஷ்டானா என்றால் 'நிலை பெற்றிருத்தல்'.
அது பயத்தால், முக்கியமாக மரணம் பற்றிய பயத்தால் பூட்டப்படுகிறது.
பயத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம், மரணத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம், அதைத் திறக்க முடியும்.
தியான முறை: இருள் தியானம் தியானம் - - தாந்த்ரீக முறையிலிருந்து எடுக்கப்பட்டது.
இந்தச் சக்கரம் பயத்தால் பூட்டப்படுகிறது. நமது எல்லா பயங்களும் உண்மையில் மரணத்தைப் பற்றிய பயமே; ஆனால் பல்வேறு மாறுவேடங்களில் இருக்கிறது, அவ்வளவு தான். நமது ஒவ்வொரு பயமும், மரணத்தைப் பற்றிய பயத்துடன் தொடர்பு உடையதுதான், ஆனால் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
சுருட்டி வைக்கப்பட்டிருப்பதால், அதை நம்மால் மரணம் பற்றிய பயமாகக் காண முடிவதில்லை. பயம் என்பது
Facing Fear
இல்லையென்றால், மாணம் என்ற வார்க்கையே, நாம் அதனுடன் தொடர்புபடுத்தி வைத்திருக்கும் பொருளை இழந்து விடுகிறது.
அதனால் மரணம் என்பது என்ன?
நான் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டால், நீங்கள், "ஸ்வாமிஜி, மரணம் என்பது நமது வாழ்வின் இறுதியில் நிகழ்வது" என்று சொல்வீர்கள், மரணம் என்பது அவ்வளவுதான் என்றால், அது மிகவும் சுலபமாக இருந்திருக்கும்!
ஆனால் மரணம் என்பது நமது வாழ்வின் இறுதியில் நடக்கும் ஒரு விஷயம் அல்ல. அது நமது வாழ்வின் ஒவ்வொரு கணக்கிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம். நமது ஒவ்வொரு செயலுமே விழிப்பற்ற நிலையில் நமது மரணத்துடன், மரணம் பற்றிய பயத்துடன் தொடர்பு உடையது. மரணம் நமது வாழ்க்கையின் தன்மையையே மாற்றி விடுகிறது. அது முடிவல்ல; அது நமது வாழ்வின் உச்சகட்டம் - நமது வாழ்வு முழுவதும் அதை நோக்கியே இருக்கிறது!
நான் ஏன் இதைச் சொல்கிறேன்?
ஏனெனில் நமது வாழ்வு முழுவதுமே, மரணம் பற்றிய நமது கருத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமது சமூக அமைப்பு கூட, மரணம் பற்றிய நமது கருத்தினாலேயே வழிநடத்தப் படுகிறது.
எல்லா சிறந்த மதங்களும், உலக தத்துவங்களும் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முயற்சியிலேயே எழுந்துள்ளன: ''மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கிறது ?''. இந்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முயற்சியிலேயே, பல்வேறு வாழ்க்கைத் தீர்வுகள் எழுந்துள்ளன.
நமது எல்லா பயங்களும் இறுதியில் மரணத்தைப் பற்றிய பயமே; பல்வேறு மாறுவேடங்களிலும் இருப்பது மரணத்தைப் பற்றிய பயமே.
ஒரே ஒரு வாழ்க்கை என்பதில் நம்பிக்கை உள்ள, மறுபிறப்பைப் பற்றிய கருத்துக்களே இல்லாத கலாச்சாரங்கள், அவர்களுடைய சக்தி முழுவதையும் வாழ்க்கையை வளப் படுத்துவதிலேயே கொட்டிவிட்டனர். அவர்கள், அவர்கள், செய்திகளை உட்கிரஹித்தல், அறிவைச் சம்பாதித்தல், உலகாயதமான சுகங்கள் என்ற வகையில் ஒரு உச்சத்தைத் தொட்டுவிட்டனர்.
இந்தக் கலாச்சாரங்களே அறிவியலைக் கொடுத்திருக் கிறது. அறிவியல், வாழ்க்கையை அதன் அதிக பட்சத்தில் வாழ உதவுகிறது. அறிவியல், நாம் இந்த வாழ்க்கையிலிருந்து அதிக பட்சத்தைப் பெற உதவுகிறது.
மறுபிறப்பை நம்பும் கலாச்சாரங்கள், அவர்களது வாழ்வின் மையத்தை உள்நோக்கித் திருப்பியுள்ளன. அவர்களது தேடல் வேறுவிதமானது. அவர்கள் வாழ்க்கையை ஒரு அவசரகதியில் வாழ தூண்டப்படுவதில்லை; ஏனெனில் அவர்களுக்கு அழிவற்ற தன்மை கொடுக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் இந்தக் கருத்தின் செயல்பாட்டை, தெளிவாக மக்களின் நடத்தையில் காணலாம். பாரதத்தில், ஒரு நிகழ்ச்சி 6 மணிக்குத் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தால், அது 7.30-க்கு முன்னால் தொடங்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஏனெனில் அவர்களுக்கு முன் அழிவற்ற தன்மை இருக்கிறது!
நமது முழு மன அமைப்பு, நமது வாழ்வின் போக்கு, நமது சமூகம், நமது கலாச்சாரம், நமது மதம் அனைத்துமே மரணம் பற்றிய நமது கருத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. நாம் மரணத்தைப் பற்றி நினைக்காமல் இருக்க முயற்சி செய்கிறோம்-ஆனால் மரணம் நமது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வியாபித்திருக்கிறது !
மரணம் என்பது நமது வாழ்வில் இறுதியில் நடக்கும் ஒரு விஷயம் அல்ல. அது ஒவ்வொரு கணத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம்.
நாம் மரணத்தின் ஆழங்களையும், இரகசியங்களையும், புதிரையும் புரிந்து கொண்டால், வாழ்வின் இரகசியங்களைப் புரிந்து கொள்வோம். நாம் மரணத்தின் புதிரை விடுவித்து, அது வேறு ஒரு வடிவத்தில் ஒரு வெறும் தொடர்ச்சியே என்பதைக் காண வேண்டும். இல்லையெனில் நாம் வாழ்வையே தவறவிட்டு விடுவோம்!
நாம், மரணம் என்பது வேறொரு வடிவத்தில் ஒரு தொடர்ச்சியைத் தவிர வேறில்லை என்பதைப் புரிந்து கொண்டால், மரணத்தைக் கண்டு அஞ்சமாட்டோம். மரணத்தைக் கண்டு அஞ்சுவதை நிறுத்தும் பொழுது, எவ்வளவு தூரம் வாழ்க்கையைத் தவற விட்டுக் கொண்டு இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
நாம் வாழ்க்கையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம் ; மிகவும் மேலோட்டமாக வாழ்கிறோம்; வாழ்க்கையில் பல அம்சங்களைத் தவற விட்டு விடுகிறோம். இறப்பு, வாழ்க்கையை மிகுந்த விழிப்புணர்வுடன் பார்க்கக் கற்றுக் கொடுக்கும். மரணம் எப்பொழுதும் ஒரு மிகச் சிறந்த குருவாக இருக்கிறது.
நமக்கு ஏதேனும் ஒரு ஒரு விஷயத்தில் நம்பிக்கை வர வேண்டுமென்றால், அதை இரண்டு விதங்களில் செய்யலாம். ஒன்று உண்மை என்னவென்று நாமே பரிசோதனை செய்து பார்த்து விடுவது. இரண்டு, அதை ஏற்கனவே அனுபவித்தவர்களின் குறிப்பை எடுத்துக் கொள்வது. நான் இப்பொழுது உங்களுக்கு உபநிஷத்துக்களில் இருந்து ஒரு குறிப்பைக் கொடுக்கிறேன்.
கடோபநிஷத் என்று ஒரு உபநிஷதம் இருக்கிறது. அது மரணத்தின் கடவுளான எமனுடன் ஒரு குழந்தையின் நேரடி
மரணம் என்பது முடிவல்ல -அது நமது வாழ்வின் உச்சகட்டம். நமது வாழ்வு முழுவதும் அதை நோக்கியே இருக்கிறது.
உரையாடல்; ஒரு அற்புதமான தனிப்பட்ட பேட்டியின் வெளிப்பாடு. ஹிந்து புராணங்களில், எமனே இறப்பின் பிரதானத் கடவுள் என்று சொல்லப்படுகிறது. அவன் மாணக் கைக் குறிக்கிறான்.
உச்சைசிரவஸ் என்றொரு பெரிய மன்னன் இருந்தான். அவனுக்கு திடீரென்று இந்த உலகம் முழுவதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அதனால், வாஜபேய யாகம் (உலகம் முழுவதும் ஆள விருப்பம் உள்ளவன் செய்ய வேண்டிய ஒரு அக்னி வழிபாடு) செய்தான்.
இந்த வழிபாட்டின் விதிமுறைகளின்படி, ஒருவா் தனக்குப் பிடித்தமான, மிக விலையுயா்ந்த பொருட்களை யெல்லாம் தானமாகக் கொடுத்து விட வேண்டும். அப்பொழுதுதான் அவரால் உலகத்திற்கே கடவுள் என்கிற பதவியை அடைய முடியும்.
மன்னர்கள் எல்லாம் எப்பொழுதுமே சிறந்த வியாபாரிகள்; அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும்; இல்லாவிடில் அவர்களால் மன்னர்களாக இருக்க முடியாது. மிகப் பெரிய சொத்துக்களை அடக்கி ஆளவும் முடியாது. அவர்கள் குறைந்தபட்சம் கொடுத்து விட்டு, அதிகபட்சம் அடைய முடியுமா என்று பார்ப்பவர்கள்.
இந்த மன்னன், தானம் கொடுக்க ஆரம்பித்தான். வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் பசுக்களையும், அவற்றின் வாழ்நாளில் எல்லாப் பாலையும் கறந்து விட்ட பசுக்களையும், அவற்றின் வாழ்நாளில் எத்தனை முடியுமோ அத்தனை கன்றுகள் போட்டு விட்ட பசுக்களையும், சாகத் தயாராக இருக்கும் பசுக்களையும் தானமாகக் கொடுத்தான். அவன் செய்த தானம் அனைத்துமே
எல்லா சிறந்த மதங்களும், உலக தத்துவங்களும் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முயற்சியிலேயே எழுந்துள்ளன. மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கிறது?
இவ்வாறு மதிப்பற்றவையாகவே இருந்தது. 7 வயதான அவனது மகன் நசிகேதன் நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான். ரசிகேகன்தான் இந்தக் கதையின் கதாநாயகன். அவனுக்கு அவன் தந்தை செய்தது சரியல்ல என்று தெரிந்திருந்தாலும் அதை எவ்வாறு சொல்வது என்று தெரியவில்லை.
பாருங்கள் ... குழந்தைகள் மிகவும் கூர்மையானவர்கள், அறிவு நிறைந்தவர்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. சமூகம் அவர்களை இன்னும் கெடுத்து நெறிப்படுத்தவில்லை. தந்தையையே கவனித்துக் கொண்டிருந்த அவன், இறுதியில் அவரிடம் சென்று, "தந்தையே, நீங்கள் உங்களுடைய மிகவும் விலையுயர்ந்த உடைமைகளை யெல்லாம் தானமாகக் கொடுக்க வேண்டும். நானும் உங்களுடைய ஒரு விலை உயர்ந்த உடமைதான். என்னை யாருக்குத் தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள் ?'' என்று கேட்டான்.
மன்னனுக்குத் தான் செய்வதைத் தன் மகன் குத்திக் காட்டுகிறான் என்று புரிந்து விட்டது; ஆனால் அவனது அஹங்காரம் அதற்கு இடம் கொடுக்க அனுமதிக்கவில்லை. அவன் மதிப்பற்ற தானத்தைத் தொடர்ந்தான். மீண்டும் ஒரு முறை அந்தச் சிறுவன் மன்னனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான். மன்னன் மௌனமாக இருந்தான்.
மூன்றாவது முறை, சிறுவன் அவனை உலுக்கி தன்னை யாருக்குத் தானமாகக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று கேட்டான். மன்னன் கோபமடைந்து உளறினான்: "நான் உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன். எமனிடம் போ" என்றான். ஒரு சாதாரணமான பையனாயிருந்தால், ''நான் ஏன் போகவேண்டும் ? நீ வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து விட்டாய்; நீ போ!' என்று
நாம் மரணத்தைப் பற்றி நினைக்காமல் இருக்க டியற்சி செய்கிறோம். ஆனால் மரணம் நமது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வியாபித்திருக்கிறது.
சொல்லியிருப்பான். ஆனால், நசிகேதன் மிகவும் சிரத்தையான, பொறுப்பான சிறுவன். பொறுப்பும் நேர்மையும் அவனைப் பேய் போலப் பிடிக்கிருந்தன. அவனுடைய தந்தையின் வார்த்தை களுக்கு மரியாகை கொடுப்பதற்காக, அவன் எமனைச் சந்திக்க முடிவு செய்கான்.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ... ரசிகேதனே பூமியிலிருந்து எமனைச் செந்திக்கச் சென்ற முதலும் கடைசியுமான மனிதன். சாதாரணமாக, எமன்தான் மக்களைச் சந்திக்க வருவான். முதன் முறையாக, நசிகேகன் எமனைச் சந்திக்கச் சென்றான்.
அவன் எமனின் வசிப்பிடத்தை அடைந்து விடுகிறான்; ஆனால் எமன் அங்கு இல்லை! அவன் வெளியில் சென்றிருந்தான். நசிகேதன் மூன்று நாட்கள் காத்திருந்தான். இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். கதையின் இந்த இடத்தில் ஒரு பெரிய உண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. நாம் மரணக்கைத் தேடிச் செல்வோமானால், அல்லதுநம்மிடம் மரணத்தை எதிர்கொள்ளும் தைரியம் இருக்குமானால், மரணம், நமக்குத் தெரிந்த விதத்தில், அங்கு இருக்காது!
எப்படியோ, மூன்று நாட்களுக்குப் பிறகு எமன் திரும்பு கிறான். அவனது வேலையாட்கள் அவனுக்காக காத்திருக்கும் சிறுவனைப் பற்றிச் சொல்கிறார்கள். எமன் நசிகேதனைப் பார்க்க விரைந்தான். அவன் சிறுவனை வரவேற்க அங்கு இல்லாததற்காக மன்னிப்புக் கேட்டான். அவன் மேலும் சொன்னான், "உன்னை மூன்று நாட்களாக காத்திருக்க வைத்ததற்காக, நான் உனக்கு மூன்று வரங்களைத் தருகிறேன். உனக்கு எந்த மூன்று வரங்கள் வேண்டுமானாலும் கேட்கலாம். நான் உனக்குத் தருகிறேன்''.
மரணம் என்பது வேறொரு வடிவத்தில் ஒரு தொடர்ச்சியைத் தவிர வேறல்ல என்பதை புரிந்து கொண்டால், மரணத்தைக் கண்டு அஞ்ச மாட்டோம்.
நசிகேதனுக்கு மரணம் வரங்களைக் கொடுக்கும் கடவுளாகி விட்டது! அவன் மூன்று வரங்களைக் கேட்டான். முதல் வரம்: "என் தந்தையின் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட வேண்டும்'. எமன் அந்த வரத்தை அளித்தான். இரண்டாவது வரம்: "நான் உங்களைச் சந்தித்த பிறகு திரும்பச் செல்லும் போது, என் தந்தை என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்". அந்த வரமும் அளிக்கப்பட்டது.
மண்டாவகு வாம்: "மரணத்திற்குப் பிறகு என்ன ரடக்கிறது என்று எனக்குச் சொல்லுாங்கள்? சிலா இறப்பிற்குப் பிறகும் மனிதன் வாழ்கிறான் என்று சொல்கிறார்கள்; சிலா இறப்பிற்குப் பிறகு மனிதன் உயிருடன் இருப்பதில்லை என்று சொல்கிறார்கள். உண்மை என்ன ?''. நசிகேதனின் இந்தக் கேள்வியால் எமன் அதிர்ச்சியடைந்தான். அவன் சொன்னான், "தயவு செய்து என்னிடம் இந்தக் கேள்வியை மட்டும் கேட்காதே. நீ இறப்பைப் பற்றிய இரகசியத்தைக் கேட்கிறாய்; அதை என்னால் உனக்குச் சொல்ல விட்டேனானால், நீ ஞானம் அடைந்து விடுவாய். நீ விரும்பினால், நான் உனக்கு அளவற்ற செல்வங்களை அளிக்கிறேன். அனால் தயவுசெய்து அந்தக் கேள்வியை மட்டும் கேட்காகே''.
ஆனால் நசிகேதன் பிடிவாதமாக இருந்தான். அவன் சொன்னான், ''நான் உங்களிடமிருந்து எல்லாச் செல்வங்களையும் எடுக்குச் சாறு வருடங்களுக்கோ, ஆயிரம் வருடங்களுக்கோ நான் ஒரு வெறும் காப்பாளராகத்தான் இருக்க முடியும், அவ்வளவுதான். அந்தக் காலம் முடிந்தவுடன் மீண்டும் உங்களுடைய இருப்பிடத்திற்குத்தான் வர வேண்டும்! அதனால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை.
மரணம், வாழ்க்கையை மிகுந்த விழிப்புணர்வுடன் பார்க்கக் கற்றுக் கொடுக்கிறது. மரணம், ஒரு மிகச்சிறந்த குருவாகும்.
அதனால் அதற்குப் பதிலாக எனக்கு மரணத்தின் இரகசியத்தைப் பற்றிச் சொல்லுங்கள்'.
எமன், சிறுவனுடைய பக்குவத்தையும், உண்மையை அறிந்து கொள்வதில் அவனுக்கிருக்கும் உறுதியையும் பொறுப்புணர்வையும் கண்டான். அவன் சிறுவனுக்கு, விழிப்புணர்வுடனான மரண அனுபவத்தைத் தரத் தீர்மானித்தான். அவன் சிறுவனுக்கு அளித்த அனுபவம், அந்தச் சிறுவனின் ஆத்மானுபவமாய் அமைந்தது; நசிகேதன் மலர்ந்து ஞானமடைந்தான்.
இது உபநிஷதத்திலிருந்து கிடைக்கும் ஒரு அற்புத மான கதையாகும். இந்தக் கதை உண்மையா இல்லையா என்று ஆராயாதீர்கள். வரலாற்றையும் தேதிகளையும் பார்க்கத் தொடங்காதீர்கள். அது உண்மையைக் கொண்டு வருகிறது. அதுவே போதும். எணியைப் பற்றித் தொங்கிக் கொண்டு உண்மையைத் தவற விட்டு விடுவதற்குப் பதிலாக, அதை உண்மையை அடைய உதவும் ஒரு ஏணியாக உபயோகப்படுக்கிக் கொள்ளுங்கள்.
மாணம் ஞானத்தையே கொடுக்கக்கூடிய குருவாகும். சாதாரணமாக, நம் எல்லாருடைய வாழ்விலும் சரியான காலத்தில் வருவது மரணம் மட்டுமே! நாம் ஒரு நிமிடம் கூட அதிகம் கேட்க முடியாது. மேலும் நமது வாழ்வில், மரணம் நம்மிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிடுகிறது. நமது உறவினர்கள், நமது செல்வம், எல்லாவற்றையுமே. ஆனால், நசிகேதனுக்கோ, மரணம் எல்லாவற்றையும் கொடுக்கிறது. நுரனத்தையும் கூட! ஏன் இந்தப் பாரபட்சம் ? நமக்கும் நசிகேதனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒரே ஒரு காரணம் தான். நாமெல்லாம் மரணத்திடம் இருந்து ஒடி விடுகிறோம்; ஆனால், ரசிகேதன் மரணத்தை எதிர்கொள்கிறான்.
ரசிகேசதனே பூமியிலிருந்து எமனைச் சந்திக்கச் சென்ற முதலும் கடைசியுமான மனிதன்.
இந்த அற்புதமான கதையிலிருந்து நான்கு விஷயங் களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முதல் விஷயம்: நாம் மரணத்தைத் தேடிச் செல்லும் பொழுது, மரணத்தை எதிர்கொள்ளும் பொழுது, அது அங்கு இருக்காது.
இரண்டாவது விஷயம்: அப்படியே மரணம் அங்கு இருந்தாலும், நாம் நினைப்பதுபோல் பயங்கரமான ஒன்றல்ல; அது அன்பாகவும், கொடுப்பதாகவும் இருக் கிறது.
மூன்றாவது விஷயம்: மரணம் எப்பொழுதும் நமக்கு ஒரு சிறந்த ஆசானாக இருக்கிறது.
நான்காவது விஷயம்: மரணம் நமக்கு இறுதியான பரிச ான ஞானத்தைக் கொடுக்கக் கூடியது!
எப்படியோ, பெரும்பாலான மக்களுக்கு, வாழ்க்கை ஸ்வாதிஷ்டான சக்கரத்தைத் தாண்டிச் செல்வதேயில்லை. வாழ்க்கை ஒருபோதும் மரணத்தைப் பற்றிய பயத்தைத் தாண்டிச் செல்வதேயில்லை. நாம் மூலாதார மற்றும் ஸ்வாதிஷ்டான சக்கரங் களுக்கிடையே, ஆசைகளுக்கும் பயத்திற்கும் இடையே, வாழ்ந்து மடிந்து விடுகிறோம். நமக்கு வாழ்வில் வேறெந்த வழியையும் எடுத்துக் கொள்வதற்கான தைரியம் இல்லை.
முந்தைய காலங்களில் மக்கள், நமக்கு இன்றிருக்கும் வாழ்க்கைப் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் வாழ்ந்தனர். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கு எந்தத் தடுப்பூசியும் கிடையாது. இயற்கைப் துணையுடன் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கும் அமைப்புகள் கிடையாது. பஞ்சத்திற்கோ அல்லது வெள்ளத்திற்கோ எதிரான பாதுகாப்பு எதுவும் கிடையாது; அதனால் மக்கள் எப்பொழுதும்
நாம் மரணத்தைத் தேடி செல்வோமாயின், அல்லது நம்மிடம் மரணத்தை எதிர்கொள்ளும் தைரியம் இருக்குமாயின், மரணம் நமக்குத் தெரிந்த விதத்தில், அங்கு இருக்காது!
மனதளவில் இறப்பிற்கும் கூட. முக்கியமாக, போர்வீரர்கள் எப்பொழுதும் இறக்கத் தயாராகவே இருக்க வேண்டும். பழங்கால ஜப்பானிய சாமராய் வீரர்கள் மாணத்தை அமைதியுடன் எதிர்கொள்ளும் வழியை அறிந்திருந்தனர். அவர்கள் போரில் தோற்கடிக்கப்பட்டால், வெறுமனே ஒரு நீளமான ஊசியை ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் சொருகிக் கொண்டு விடுவார்கள். இது ஒரு மிகவும் உயர்ந்த தொழில் ரீதியான உத்தியாகும்; இதில் ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் இருக்கும் உயிர் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டு, அதன் விளைவாக உடனடியான, வலியற்ற மரணம் நேரிடுகிறது. இந்த முறை ஹரா-கிரி என்று அறியப்படுகிறது.
நாம் அனைவரும் எப்பொழுதும் மரணத்தைப் பற்றிய பயத்துடனேயே வாழ்கிறோம். எவ்வாறாயினும் அதிலிருந்து தப்பி விடத் தயாராக இருக்கிறோம். மரணம் ஒரு மிகப் பெரும் எதிரியாகவே பார்க்கப்படுகிறது.
சாக்ரடீஸைப் பற்றிய ஒரு சின்ன கதை ...
சாக்ரடீஸ் ஹெம்லாக் என்று அழைக்கப்படும் ஒரு விஷச் செடியின் சாற்றை அருந்த வைத்துக் கொல்லப் பட்டார். விஷத்தை அருந்துவதற்குச் சற்று முன்னர், அவருடைய சீடர் ஒருவர் கேட்டார். "குருவே தங்களுக்கு இறப்பதைப் பற்றி அச்சமில்லையா? தாங்கள் மிகவும் அமைதியாகக் காணப்படுகிறீாகள் ?''. சாக்ரடீஸ் சொன்னார், ''நான்ஏன்பயப்பட வேண்டும். இறப்பிற்குப் பின்னால் இரண்டு விஷயங்கள்தான் நடக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். இறப்பிற்குப் பிறகு வேறு ஏதாவது ஒரு வடிவத்திலோ, பெயரிலோ நான் தொடர்ந்து இருப்பேன்; அல்லது இல்லாமல் போய்
மரணம் நமக்கு இறுதியான பரிசான ஞானத்தைக் கொடுக்கக் கூடியது.
விடுவேன். முதலாவதைப் பற்றிக் கவலைப்பட ஏதுமில்லை; இரண்டாவதில் கவலைப்பட யார் இருக்கப் போகிறார்கள்? அதனால் எந்த வழியிலுமே அச்சப்பட ஏதுமில்லை!''.
சாக்ரடீஸ் இறப்பைப் பற்றிய அச்சம் ஏதுமின்றி இருந்தார்; ஏனெனில் அவரிடம் இறப்பைப் பற்றியும், அதன் பின்விளைவு களைப் பற்றியும் ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதல் இருந்தது. மரணம் எப்பொழுதுமே ஒரு முடிவாகவே பார்க்கப்பட்டதால், மக்கள் அதனைப் பார்க்கும் பொழுது துயரப்படுகின்றனர். மரணத்தைப் பற்றிய அடிப்படையான புரிந்து கொள்ளுதல் இல்லை.
மரணம் எப்பொழுதுமே ஒரு முடிவாக இருந்ததில்லை. அது வேறு ஏதோ ஒரு வடிவத்தில் தொடர்ச்சியாகவோ அல்லது வெறுமனே விடுதலையாகவோ இருக்கிறது. அவ்வளவே. இதை மனிதன் புரிந்து கொள்ளும் பொழுது, இதற்காக துயரப்படுவது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை உணர்கிறான். மனிதன் தன் ஸ்தூல வடிவத்தின் மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறான்; அதனால்தான் மிகுந்த துயரம் அடைகிறான். உடல் ஆத்மாவின் ஒரு வெறும் வாகனம் மட்டுமே. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பூமியில் மனிதனுக்கு ஒரே ஒரு நிச்சயமான விஷயம் மரணமாக இருந்தும், அது உண்மையில் நிகழும் பொழுது அவன் வியப்படைகிறான். இதுவே மனிதனைப் பற்றிய ஒரு வியப்பிற்குரிய விஷயம்.
ஒரு சின்ன கதை ...
ஒரு பெண்மணி அவளது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிக்
மரணத்திற்குப் பிறகு என்ன நிகழ்கிறது ?
அனைவரும் அதில் பங்கேற்றனர். அவர்கள் உறவினர்களிட மிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வந்த பரிசுகளை பிரித்துக் கொண்டும், வாழ்த்துக்களைப் படித்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் அவளிடம், அவளுடைய 94 வயதான ஒரு சினேகிதி அனுப்பியிருந்த ஒரு ஒரு வாழ்த்தைக் காண்பித்தனர். அவள் ஆச்சரியத்தில் கூச்சலிட்டாள், ''கடவுளே! அவள் இன்னும் உயிருடன் இருக்கிறாளா!''.
(சிரிப்பு!)
நாம், மரணத்தை, நம்மைத் தவிர மற்ற அனை வருக்கும் பிரயோகித்துப் பார்க்கிறோம்! நாம் எல்லாருமே இப்படிதான் இருக்கிறோம். வாழ்க்கையில் மரணத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறோம். ஆனால் ஒரு வினோதம் என்னவென்றால், வாழ்க்கையில் மரணத்தைத் தவிர மற்ற எதுவுமே முன் கூட்டியே கணிக்க முடியாதவை; வாழ்க்கையில் மரணம் ஒன்று மட்டுமே உறுதியானது. ஆனால் என்றாவது ஒரு நாள் நாம் இறந்து விடுவோம் என்பதைக் கூட நாம் கேட்க விரும்புவதில்லை !
பகவான் ரமண மஹரிஷி விழிப்புணா்வுடனான மரண அனுபவத்திலிருந்தே ஞானமடைந்தார். ரமணர் சிறுவனாக இருந்த பொழுது, ஒரு நாள் ஹிந்து மதத்திலுள்ள மதுரையில் அவரது மாமாவின் வீட்டில், அவரது படுக்கையில் வெறுமனே படுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு தான் இறந்து விடப் போவதாக ஒரு எண்ணம் வந்தது! மரணம் அவர் மீது வந்ததாக உணர்ந்தார். அவருக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருந்தன - அந்த உணர்வை எதிர்ப்பது, அல்லது அதை ஏற்றுக்கொண்டு கடந்து செல்வது.
நம்மிடம் மரணத்தைப் பற்றிய அடிப்படையான புரிந்து கொள்ளுதல் இல்லை.
பொதுவாக மக்கள் எதிர்ப்பார்கள் - அதனால் ஆம்ந்த மயக்க நிலைக்குச் சென்று, விழிப்புணாவற்ற நிலையில் உடலை விட்டு விடுவார்கள். நம்மில் 99 சதவீதம் போ உடலை விழிப்புணர்வற்ற நிலையில்தான் விடுகிறோம். மரணத்தில்தான் நமது வாழ்வு ஒரு உச்சநிலைக்குப் போகிறது என்பது பிறப்பிலிருந்தே நமக்குத் தெரிந்தாலும், அதை நாம் ஒரு போதும் மனதில் கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்வதில்லை; அந்த சாத்தியக் கூற்றை உண்மையாக்க முயற்சி செய்வதில்லை; அதை வரவேற்கவும் முயற்சி செய்வதில்லை! ஒரே ஒருமுறை நீங்கள் அதற்குள் விழிப்பணர்வுடன் சென்று விட்டால், தானாகவே உங்கள் பயம் போய் விடும்.
ரமணர் இரண்டாவது தைரியத்தைப் பெற்றிருந்தார். அவர் அந்த எண்ணத்துடன் ஒத்துழைத்தார்.
மரணம் நிகழ்வதற்கு அனுமதித்தார். இறக்கும் பொழுது என்ன நிகழ்கிறது என்று பார்க்கத் தீர்மானித்தார். அவரது உடலின் பாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறப்பதைத் தெளிவாகப் பார்க்கார். மெதுவாக, அவரது உடல் முழுவதுமே இறந்துவிட்டது. அவர் உடல் சாம்பலாவதைப் பார்த்தார். திடீரென்று, அதற்குப் பிறகும் ஏதோ ஒன்று, அழிக்க முடியாத ஏதோ ஒன்று, இருப்பதை உணர்ந்தார். அந்தச் சமயத்தில், 'தான்' மனதிற்கு அப்பாற்பட்ட, அப்பாலுக்கும் அப்பாற்பட்ட, தூய விழிப்பணர்வு என்பது அவருக்கு புரிந்தது! நடந்த அனைத்திற்கும் அவர் ஒரு வெறும் சாட்சியாகவே இருந்தார்! பிரம்மாண்டமான அந்த அறிவு பிறகு அவரை விட்டுச் செல்ல வில்லை. அவர் உடலிற்குள் திரும்ப வந்தபொழுது, பகவான் ரமண மஹரிஷியாக, ஒரு ஞானமடைந்த குருவாக ஆகிவிட்டார்.
நாம், மரணத்தை, நம்மைத் தவிர மற்ற அனைவருக்கும் பிரயோகித்துப் பார்க்கிறோம்.
மரணத்தைப்பற்றியபயத்தை வென்றுவிட்டீர்களானால், ரீங்கள் மரணத்தையே வென்று விடுவீர்கள்; ஏனெனில் மரணம் என்பது வெறும் இன்னொரு கற்பனையே! எவ்வாறு மூலாதாரச் சக்கரத்தில், நமது பேராசை, உலகம் நிஜத்தில் இருப்பதை விட இன்னும் அழகாக இருப்பதாகக் கற்பனை செய்ய வைக்கிறதோ, அவ்வாறே நமது பயமானது, இறப்பானது நிஜத்தில் இருப்பதை விட இன்னும் அச்சம் தருவதாகக் கற்பனை செய்ய வைக்கிறது.
நாம் போாசை மற்றும் பயம் என்னும் கண்ணாடிகளை அணிந்து கொண்டு, நிஜத்தைப் பார்க்க அனுமதிப்பதேயில்லை. உளவியல்பூர்வமாக நீங்கள் மரணத்தை அனுபவித்து விட்டால், மரண பயம் காரணமாக ஸ்வாதிஷ்டான சக்கரத்தில், பூட்டி வைத்திருக்கும் சக்தியை வெளியிடுவீர்கள்; ஸ்வாதிஷ்டான சக்கரம் திறக்குமானால், வாழ்க்கையின் தன்மையே முழுமையாக மாறி விடும்.
மரணம் என்பது இன்னொரு வடிவத்தில் தொடர்ச்சியே என்கிற உங்களுடைய ஏற்றுக் கொள்ளும் திறனால், உங்கள் வாழ்க்கையை உருமாற்றமடைகிறது. உங்கள் முழு உடலுமே தளர்வாக இருக்கிறது; விழிப்புணர்வு அதிகரிக்கிறது; வாழும் திறன் விரிவடைகிறது. நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும், மரணத்தைப் பற்றிய பயம் உங்கள் உள் மனதில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. மரணத்தையும், மாணத்தைப் பற்றிய பயத்தையும் புரிந்து கொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை வளம் பெறும்; செல்வம் இல்லாமல் இருக்கக் கூடும், ஆனால் வாழ்க்கை வளமாக இருக்கும். வளமான தன்மையே உண்மையில் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும்.
வாழ்க்கையில் மரணம் ஒன்று மட்டுமே உறுதியானது. ஆயினும், என்றேனும் ஒரு நாள் நாம் இறந்து விடுவோம் என்பதை நாம் கேட்கக் கூட விரும்புவதில்லை.
ஒரு சின்ன கதை ....
பிறவியிலேயே பார்வையற்ற ஒருவனுக்கு, ஒரு மருத்துவர் குணப்படுத்துவதாக உறுதி கூறினார். மருத்துவர் அவனிடம், ''இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு உன்னால் பார்க்க முடியும்! உன்னுடைய ஊன்று கோலை இனி நீ உபயோகப்படுத்த வேண்டிய தேவையே இருக்காது' என்று உறுதி கூறினார். அதற்கு அவன் சொன்னான், ''டாக்டர், என்னால் பார்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்கிறேன், ஆனால் ஊன்று கோல் இல்லாமல் நான் நடப்பது எவ்வாறு சாத்தியமாகும் ?''.
ஊன்றுகோல் அவனுடைய ஒரு பகுதியாகி விட்டதால், பார்வை கிடைத்த பிறகு அவனால் ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியும் எனபதைக் கூட தொடர்புபடுத்திப் பார்க்க முடியவில்லை! ஒரு பார்வையற்ற மனிதனுக்கு, அவன் பார்வை கிடைத்து விட்டால், ஊன்றுகோல் தேவையில்லை என்பதை எவ்வாறு விளக்குவீர்கள் ? இப்பொழுது அவன் மிகவும் அஞ்சுகிறான். அதனால், நீங்கள் செய்ய முடிந்ததெல்லாம், அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவனையே பார்க்க வைக்க வேண்டியதுதான், அவ்வளவு தான். பிறகு அவனாகவே ஊன்று கோலைத் தூக்கி எறிந்து விடுவான்!
அதே போல, 'உங்கள் பயமனைத்தும் இறுதியாக மரணத்தைப் பற்றிய பயம்தான், உங்கள் ஆத்மா அழிவற்றது, உங்கள் உடம்புதான் அழிகிறது' என்றெல்லாம் நான் சொன்னாலும், நீங்கள் உங்கள் பயத்தைப் பற்றிய கருத்துக்களை பயத்தினாலேயே விடாமல் பிடித்துக் கொண்டிருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் அதை அனுபவிக்கவில்லை!
மரணம் உங்கள் விழிப்புணர்வான அனுபவம் ஆகும் வரையில், பயம் உங்களை விட்டுச் செல்லாது. ஆனால் உங்களால்
பகவான் ரமண மஹரிஷி விழிப்புணா்வுடனான மரண அனுபவத்திலிருந்தே ஞானமடைந்தார்.
ஒன்று செய்ய முடியும்: இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கேளுங்கள்; அவற்றைப் பற்றி ஒரு உறுதியான நம்பிக்கையை வளர்க்குக் கொள்ளுங்கள்: உங்களுடைய சிறியு, பெரிய பயங்கள் எவ்வாறு உண்மையில் உங்கள் மரண பயத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்: உங்களுடைய பயங்களெல்லாம் எவ்வாறு எவ்வாறு என்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதைப் பாருங்கள்; உங்களுடைய பயங்களிலெல்லாம் ஒரு விழிப்பணர்வைக் கொண்டு வாருங்கள்; பிறகு உங்களால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து உண்மைக்கு அருகாமையில் வர முடியும்.
நமது பயங்களையெல்லாம் ஐந்து பெரிய பிரிவுகளாக வகைப்படுத்தலாம்: முதலாவது - செல்வம், வசதிகள், பெயர், புகழ், பெருமை மற்றும் மற்ற வெளியுலக விஷயங்களை இழந்து விடும் பயம். இரண்டாவது - ஆரோக்கியத்தை இழக்கும் பயம்; ஏதேனும் விபத்து அல்லது நோயின் காரணமாக உடல் உறுப்புக் களை இழந்து விடும் பயம் - நமது உடல் ஆரோக்யத்தைக் குறித்த பயம். மூன்றாவது - நமது மன நலம், மற்றும் மனதின் ஸ்திரத் தன்மையை இழந்து விடும் பயம். நான்காவது - நாம் நேசிப்பவர்களையும், அவர்களது அன்பையும் இழந்து விடும் பயம். ஐந்தாவது - தெரியாதவர்களைப் பற்றிய பயம்-கடவுளைப் பற்றிய பயம், பேய்களை, ஆவிகளைப் பற்றிய பயம் மற்றும் இறப்பைப் பற்றிய பயம்.
உண்மையில், நமது பயங்களை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், இந்த ஐந்து வகை பயங்கள் அனைத்துமே, மரணம் பற்றிய பயம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அதுவே பல்வேறு விதங்களிலும் வெளிப்படுகிறது. அவ்வளவுதான்.
இறப்பிற்குப் பிறகு வேறு ஏதாவது ஒரு வடிவத்திலோ பெயரிலோ தொடர்ந்து இருப்பேன்; அல்லது இருக்க மாட்டேன். முதலாவதைப் பற்றி கவலைப்பட ஏதுமில்லை; இரண்டாவதில் கவலைப்பட யார் இருக்கப் போகிறார்கள்?
மக்கள் மரணத்தைக் கண்டு பயப்படுவதன் முக்கியக் காரணம், அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுழுமையாக வாழாததே. அவர்கள் இன்னும் வாழ்க்கையை போதுமான அளவு வாழாதது குறித்த அவநம்பிக்கையில் இருப்பதால் அஞ்சு கிறார்கள். அவர்கள் இதுபோன்று உணர்வதற்குக் காரணம், வாழ்க்கை முழுவதும் கடந்த கால நினைவுகளிலும், எதிர்காலக் கவலைகளிலும், மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து விட்டதும், ஒரு போதும் நிகழ்காலத்தில் வாழாததும் போன்றவையே.
நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் காரணம், ஒருவருக் கொருவர் அஹங்காரத்தினாலும், ஆசைகளினாலும், உணர்ச்சி களினாலும் இன்னும் பலவற்றாலும் இழுபறி செய்து கொண்டிருப்பதே ஆகும். நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தாலே, நான் சொல்ல முயற்சிப்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையை உங்கள் பெற்றோர்கள் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்படும் ஆசைகள், குற்ற உணர்வு, பயம் ஆகியவற்றாலான மகுடத்தை வெறுமனே எடுத்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கையை வாழ்ந்த பின்னர், இறப்பதற்கு முன், அதை அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விட்டுச் சென்று விடுகிறீர்கள், அவ்வளவே, நீங்கள் ஒரு போதும் முழுமையாக வாழ்ந்ததேயில்லை.
முழுமையாக வாழ்தல் என்றால் என்ன? வாழ்க்கையை இன்னும் தெளிவுடன் வாழ முயற்சி செய்யுங்கள், அவ்வளவே. மற்றவர்கள் அர்த்தமற்ற எதையும் உங்கள் மீது திணிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தெளிவாக இருப்பீர்களானால், உங்களுடைய சொந்த ஆசைகளையும், மற்றவர்கள் உங்கள் மீது திணித்த ஆசைகளையும், மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட
ஒரே ஒரு முறை நீங்கள் விழிப்புணர்வுடன் மரண அனுபவத்தைப் பெற்று விட்டால், தானாகவே உங்கள் பயமனைத்தும் மறைந்து விடும்.
ஆசைகளையும் உங்களால் தெளிவாகப் பிரித்து அடையாளம் காண முடியும். மற்றவர்களுக்கோ அல்லது அவர்களது உடைமைகளுக்கோ எந்தவிதமான ஊறும் விளை விக்காமல், முதல் வகையான ஆசைகள் மட்டுமே நிரைவேற்றிக் கொள்ளப்படலாம். மற்ற இரண்டும் மனத்தெளிவின் உதவியுடன் விட்டு விட வேண்டியதாகும்.
நீங்கள் இவ்வாறு வாழ்ந்தீர்களானால், ஒருபோதும் மற்றவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்க மாட்டீட்டிர்கள்; ஒருபோதும் மற்றவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க மாட்டீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கையை வாழ்ந்து, மன நிறைவை அனுபவித்து, காலம் வரும் பொமுது இறக்கத் தயாராக இருப்பீர்கள். உங்களிடம் பதுங்கிக் கொண்டிருக்கும் குழப்பமும், மரணத்தைப் பற்றிய அச்சமும் இருக்காது. நான் உங்களை சுயநலத்துடன் இருக்கச் சொல்ல வில்லை. எல்லா விஷயத்திலும் தெளிவைக் கொண்டு வாருங்கள் என்றுதான் சொல்கிறேன்.
ஒரு சின்ன கதை ....
ஒரு முறை ஒரு ஜென் துறவிக்கு மன்னரால் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் அந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. அந்தத் துறவியோ மௌனமாகவும் அமைதியாகவும் இருந்தார். அவருடைய சீடர்களில் ஒருவர், துறவியின் அமைதியால் அதிர்ச்சியடைந்து, அவரிடம் கேட்டார், "தாங்கள் வாழ்வதற்கு இன்னும் 24 மணி நேரம்தான் இருக்கிறது என்பதை உணர்கிறீர்களா? தங்களுக்கு பயமாக இல்லையா?''. துறவி அமைதியாக பதிலளித்தார், "நான் வாழ்ந்து விட்டேன், அதனால் எனக்கு மரணமடைவதைப் பற்றி அச்சமில்லை''.
மரணத்தைப் பற்றிய பயத்தை வென்று விட்டீர்களானால், நீங்கள் மரணக்கை வென்று விடுவீர்கள். ஏனெனில் மரணம் என்பது வெறும் இன்னொரு கற்பனையே.
அவர் சொன்னதன் பொருள், ''நான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும், கணத்திற்கு கணம், வாழ்ந்து விட்டேன். ஒவ்வொரு கணமும் எனக்கு மிகவும் நிறைவாக இருந்தது! நான் ஏன் அச்சப்படவேண்டும்?''.
நீங்கள் உள்ளே ஆழமாகப் பார்த்தீர்களானால், நம்மில் பெரும்பாலானோர் மரணமடைவதைக் கண்டு அஞ்சவில்லை; நாம் வாழ்க்கையைப் போதுமான அளவு வாழவில்லையே என்றுதான் அஞ்சுகிறோம், என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நாம் ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்றே அஞ்சுகிறோம். நாம் இந்த அனைத்தையும் பற்றி, ஒரு வகையான ஆழமான விளக்க முடியாத துக்கத்தை உணர்கிறோம். நாம் விரும்பியவண்ணம் வாழவில்லை என்று உணர்கிறோம்; நாம் நிறைவடைந்ததாக எண்ணவில்லை - மரணத்தைப் பற்றிய பயம் அங்குதான் ஆரம்பிக்கிறது!
தொடர்ந்து மற்றவர்களுக்காக சமரசம் செய்து கொள்வதும், நமக்கு இயல்பற்ற ஒரு வாழ்க்கையை வாழ முயற்சிப்பதும், சமூகம் நமக்காக உருவாக்கிய அச்சுக்குள் பொருந்தியிருக்க முயற்சிப்பதும் ... இவையனைத்தும் ஒரு நிறைவின்மையை நோக்கி இட்டுச் செல்லும்! மரணத்தைப் பற்றிய அச்சத்தில் பிரதிபலிப்பது வாழ்க்கையைப் பற்றிய அச்சமே.
நீங்கள் முழு திருப்தியுடன், முடிந்த அளவு ஆழமாக வாழ்ந்து விட்டீர்களானால், உங்களுக்கு மரணத்தைப் பற்றிய அச்சம் இருக்காது. அச்சமின்றி வாழுங்கள்.
உங்களால் முடிந்த அளவிற்கு ஆழமான தனித் தன்மை யுடன் வாழுங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி வருமளவிற்கு வாழுங்கள். மரணத்தைப் பற்றிய உங்கள் அச்சம் போய் விடும்.
மக்கள் மரணத்தைக் கண்டு பயப்படுவதன் முக்கியக் காரணம், அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமுமையாக வாழாததே.
இன்னொரு விஷயம்... நீங்கள் எந்த ஒரு உணர்வையும் மனதில் தங்க விடாமல், முழுமையாக, உங்கள் உணர்ச்சிகளை மிகத் தெளிவுடன், முழுமையாக வாழ்ந்து விட்டீர்களானால், உங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களையும் இழப்பதைப் பற்றி அஞ்ச மாட்டீர்கள்.
பாருங்கள் ... ஒருவருடைய இழுப்பைப் பற்றி நீங்கள் அஞ்சுவதற்குக் காரணம், நீங்கள் உங்கள் வாழ்க்கையில், ஏதோ ஒரு வழியில், அந்த உறவிற்கு சரியான நியாயத்தை வழங்கவில்லை என்று எண்ணுகிறீர்கள்; நீங்கள் முழுமையாக இல்லாததாக உணர்கிறீர்கள்; நீங்கள் அந்த உறவை விட்டுவிட இன்னும் தயாராகவில்லை. உடல் அளவிலான பிரிவு, அச்சத்தின் ஒரே ஒரு அம்சம்தான்; உண்மையான காரணம் உறவில் நிறைவின்மைதான்.
உறவுகளில் 'நியாயமாக நடந்து கொள்ளுதல்' என்ற வார்த்தை வருவதற்குக் காரணம், நீங்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்காக வாழ வேண்டும், அவர்களது தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும், என்றே எப்பொழுதும் உங்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படுவதுதான்.
நீங்கள் எப்பொழுதும், இது போன்ற விஷயங்களைச் செய்து, உறவுகளிடம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டிய தேவையை உணருகிறீர்கள். மேலும் இவைகளைச் செய்யவில்லையென்றால், நீங்கள் ஒரு குற்றவுணாவு மற்றும் பயச்சுழலில் சிக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் சமூகத்தின் முழுச் செயல்பாடு பற்றிய ஆழமான தெளிவுடன், வெறுமனே முழுமையாக வாழ்ந்தால், இது போன்ற நிர்ப்பந்தங்களின் பிடியில் ஒருபோதும் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள்.
நீங்கள் உறவுகளில் அன்பை இழக்காமல் முழு நிறைவுடன் வாழமுடியும். இதைப் பற்றி நாம் அனாஹத சக்கரத்தைப் பற்றிப் பேசும்பொழுது பேசினோம். எப்பொழுதும் உடலளவிலான பிரிவைப் பற்றிய பயத்திற்குக் காரணம் அந்த உறவைப் பொறுத்த வரையிலான குற்ற உணர்வே. நீங்கள் உறவில், ஒரு வாத்தக முறையைப் போல் அல்லாமல், மற்றவரை நோக்கிய தூய அன்பின் ஆற்றலுடன், முழுமையாக வாழ்வீர்களானால், குற்றவுணர்விற்கோ அல்லது பயத்திற்கோ இடமிருக்காது. அந்த மனிதர் மறைந்து விட்டால் கூட, உங்களிடம் அவரை நோக்கிய அன்பு தொடர்ந்து இருக்கும், அவ்வளவுதான். ஒரு போதும் பிரிவைப் பற்றிய பயம் இருக்காது.
நீங்கள் அந்த மனிதருடன் வாழும் பொழுதும், மிகுந்த தெளிவுடனும், விழிப்புணா்வுடனும் வாழ முயற்சி செய்யுங்கள். பல சமயங்களில், உறவுகளில் துன்பத்திற்குக் காரணம் பாதுகாப்பற்ற உணர்வும், எப்பொழுதும் இழையோடிக் கொண்டிருக்கும் ஒருவரையொருவர் இழந்து விடுவோமோ என்ற அச்சமும்தான். எந்த உறவிலும் உள்ள பயத்தை ஆழமாக ஆராய்ந்தீர்களானால், நமது உறவுகள் ஏதோ ஒரு வகையில் வாத்தகப் பரிவர்த்தனையைப் போல் ஆகி விட்டதுதான், இந்த பயத்திற்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில், மற்றவர் திருமணத்திற்கு வெளியே வேறு யாரையாவது தேடிக் கொண்டு விடுவாரோ என்ற பயம். தாய்க்கும் மகனுக்கும் இடையில், மகன் தாயை விட மனைவிக்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவானோ என்ற பயம். தந்தைக்கும் மகளுக்கும் இடையில், தந்தை சொத்துக்களை மகனுக்குக் கொடுக்காமல் போய் விடுவாரோ என்ற பயம் அல்லது மகன் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றாமல் போய் விடுவானோ என்ற பயம்.
இதுபோன்று, எந்த உறவிலும், திருப்திப்படுத்தப்பட வேண்டிய மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய, ஒரு அடிப்படையான
நாம் உண்மையில் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை - நாம் இன்னும் வாழ்க்கையை போதுமான அளவு வாழவில்லையே என்றுதான் அஞ்சுகிறோம்.
எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவே பயத்திற்குக் காரணம். நான் செ ால்கிறேன் ... உங்களால் எந்த உறவையும் ஒருபோதும் முழுமையாகத் திருப்திப்படுத்த முடியாது. குடும்பத்தினர் அணைவரையும் திருப்திப்படுத்த முயலும் எவருமே இறுதியில் அதை விட்டு விட்டு ஓடி விடுவர்!
அனாவரத சக்கரத்தைப் பற்றிப் பார்த்தபொழுது நாம் பேசிய அன்பைப் போன்று, தூய அன்பின் அடிப்படையில் ஒரு உறவு இருக்குமானால், அதில் பயத்திற்கான எந்தவிதமான வஸ்துவும் இருக்காது.
உங்களால் அச்சத்திலிருந்து அன்பை நோக்கி நகர முடியுமானால், அது எவ்வளவு பெரிய சுதந்திரம் என்பது உங்களுக்குத் தெரியாது. அச்சம் எப்பொழுதும் சிறைப்படுத்தும்; அன்பு எப்பொழுதும் சுதந்திரம் அளிக்கும். அனால் சமூகம் உங்களுக்குள் பயத்தைப் புகுத்தா விட்டால், நீங்கள் அது செ ால்வதைக் கேட்க மாட்டீர்கள்.
அதனால் அது உங்களுக்குள் எல்லா வித சாத்தியமான வழிகளின் மூலமாகவும் - பாதுகாப்பின்மை, விதிமுறைகள், கட்டுப்பாடுகள், வழிபாடு போன்ற இன்னும் பல வழிகளிலும் -பயத்தைப் புகுத்துகிறது.
சமூகம் உங்களை புனிதர்களாக்க - எப்பொழுதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையைக் கண்டும் மற்றும் எல்லாவற்றையுமே கண்டும் அச்சப்படும் புனிதர்களாக்க - முயற்சி செய்கிறது. நான் உங்களைப் புனிதர்களாக்க இங்கு வரவில்லை. உங்களை ஆனந்தமயமாக்கவே வந்திருக்கிறேன். நீங்கள் ஆனந்தமயமாக இருக்கும் பொழுது, முழுவதும் உயிர்ப்புடனும், உணர்வுடனும், விழிப்புடனும் இருப்பீர்கள்.
உங்களால் எந்த ஒரு உறவையும் ஒருபோதும் முழுமையாகத் திருப்திப்படுத்த முடியாது.
எப்படியோ, நமது உறவில், பயம் பொறாமையாக உருவெடுத்து விடுகிறது. நமது பல செயல்களுக்கும் உணர்ச்சி களுக்கும் அடியில் இருக்கும் உணர்ச்சி பயம். பொறாமை, கோபம், பேராசை ஆகிய உணர்ச்சிகளின் மூலமும் பயமே. ஆனால் நாம் இதை அறிவதில்லை. இவையனைத்திற்கும் காரணம் பயம்தான் என்பது நமக்குத் தெரியாது. அதுதான் பிரச்சனை. அதனால்தான் நாம் நமது நடத்தை வடிவ அமைப்பு களைப் பொறுத்த வரையில் தொடர்ந்து இருளிலேயே இருந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் உறவு முறைகள் வலியும் வேதனையுமாக மாறி விடுகின்றன.
புரிந்து கொள்ளுங்கள்... அச்சமும் அன்பும் ஒரு போதும் ஒன்றாக இருக்க முடியாது. ஒரு உறவில் தூய அன்பு இருக்குமானால், அங்கு ஒருபோதும் அச்சம் இருக்க முடியாது. அச்சம் இருக்குமாயின், அங்கு ஒரு போதும் தூய அன்பு இருக்க முடியாது. மிகத் தெளிவாக இருங்கள் ... உறவில் சில சுயலாபங்கள் இருக்கின்றன; பாதுகாப்பு அல்லது பேராசை அல்லது பதிலுக்கு எதையேனும் பொருதல் ஆகிய சில நோக்கங்கள், சில குறிக்கோள்கள், சில எதிர்பார்ப்புகள் முதலியவை உறவில் இருக்கின்றன. அதனால்தான் பயம் வருகிறது.
நாம் எல்லா உறவுகளிலும் பாதுகாப்பை எதிர் பார்க்கிறோம். நாம் வசதியாக நிலைபெறுவதற்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. இது உண்மையிலேயே நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்கும் ஒருவிதமான சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்; அனால் நான் சொல்கிறேன், அவர்கள் அதைக் கண்டு மிகவும் அஞ்சுகிறார்கள்; அவர்கள் சிறைப்படுதலையே மிகவும் விரும்புகிறா்கள்.
அச்சம் எப்பொழுதும் சிறைப்படுத்தும், அன்பு எப்பொழுதும் சுதந்திரம் அளிக்கும்.
சிறையில் இருக்கும் வசதியான பாதுகாப்பு அமைப்பால் அவா்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறா்கள்.
ஒரு சின்ன கதை ....
ஒரு சிறுமி ஒருநாள் அவள் தந்தையிடம் கேட்டாள், "அப்பா, உத்தரவாதம் என்ற சொல்லின் பொருள் என்ன?''. தந்தை பதில் சொன்னார், "அதன் பொருள், ஏதோ ஒன்றை நன்றாகச் செய்திருக்கிறா்கள், அது வெகுகாலம் நீடித்து இருக்கும்'. அன்று இரவு தூங்கச் செல்லும் முன், சிறுமி தந்தையை அழைத்து, ''நல்ல இரவு, உத்தரவாதமான அப்பா!'' என்றாள்.
நாம் அனைவரும் நமது வாழ்வில் தொடர்ந்து பாதுகாப்பைத் தேடுகிறோம். ஆனால் நாம் நாம் சுதந்திரத்தைத் தேடுவதாகச் சொல்கிறோம். தேடுவோமாயின், ஏன் பாதுகாப்பைத் தேடுகிறோம்? ஏன் அச்சம்? உங்களிடம் பயம் இருக்கும் வரை, நீங்கள் பாதுகாப்பைத் தேடுவீர்கள். அதுவரை, சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லிக் கொண்டு, நீங்களே உங்களை ஏமாற்றிக் கொண்டு திருப்தியடைந்து கொண்டிருக்கலாம்.
உங்களை வாழ்வின் முழுமையான பாதுகாப்பின்மை மீது வீசி எறிபவர் எவரோ, அவரே குரு ஆவார். அவரால் மட்டுமே உங்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிக்க முடியும். அதனால்தான் அவருடன் நீங்கள் பாதுகாப்பற்று, அச்சத்தை உணர்கிறீர்கள். சுதந்திரம் அச்சத்தை உருவாக்குகிறது.
உங்களுடைய மற்ற உறவுகளில் நீங்கள் ஒருபோதும் முழுமையான எப்பொழுதுமே அங்கு கொஞ்சம் பேராசை, பயம் மற்றும் கோபம் ஆகியவற்றின் இழுபறி இருப்பதால், உறவுகளின் பழக்க மான வடிவமைப்பில் நீங்கள் நன்றாக நிலை பெற்று விடுகிறீர்கள். அனால் ஒரு குருவுடன், நீங்கள் முழுவதும் சுதந்திரமாக இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு பயமேற்படுகிறது.
ஒரு சின்ன கதை ....
ஒரு மனிதன் 20 வருடங்கள் சிறையில் இருந்தான். அவன் விடுதலை பெறும் நாளில், மிகவும் கவலையாகவும், இறுக்க மாகவும் காட்சியளித்தான். சிறையில் இருக்கும் அவனது நண்பன் கேட்டான், ''உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் இவ்வளவு கவலையுடன் இருக்கிறாய்?''. அவன் பதிலளித்தான், ''எனக்கு பயமாக இருக்கிறது. வெளியில் சென்று நான் என்ன செய்வேன்?''.
சிறை அவனிடம் அவ்வளவு திடமான ஒரு பாதுகாப்பு வடிவ அமைப்பை உருவாக்கி விட்டது. அதனால் அவன் வெளியில் சென்ற பிறகு அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! இதுவே ஒரே விதமான வடிவ அமைப்புகளிலும், பாதுகாப்பிலும் சிக்கிக் கொள்வதன் ஆபத்து.
ஒரு குருவானவர் நீங்கள் தேடும் பாதுகாப்பை ஒருபோதும் கொடுக்க மாட்டார். அவர் நீங்கள் தேடும் வடிவ அமைப்பை ஒருபோதும் கொடுக்கமாட்டார். நீங்கள் தேடும் பாதுகாப்பு கிடைக்காத போது, நீங்கள் உங்களுக்கு உள்ளேயே ஆழமாக மையம் கொண்டு வளர்வீர்கள்; இழப்பதற்கு எதுவுமில்லை என்று தெரியுமாதலால் அச்சமின்றி வளர்வீர்கள்; மேலும் இழப்பதற்கு எதுமில்லை என்பது தெரியும் பொழுது, உங்களிடம் அச்சம் இருக்காது.
இழப்பதற்கு எதுவுமில்லை என்பதை காண்பிப்பதற்கு, குரு உங்களை முழுமையான பாதுகாப்பின்மைக்குள் எறிகிறார்.
அச்சமும் அன்பும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது.
உங்கள் மீது அவருடைய ஆழ்ந்த பரிவினால், உங்கள் வளர்ச்சியின் மீது அவருடைய ஆழ்ந்த அக்கறையினால், அவர் உங்களுக்குப் பாதுகாப்புக் இல்லாததனால், நீங்கள் கடவுளை அடைகிறீர்கள்; நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் புரிந்து கொள்கிறீர்கள்.
உங்களுடைய எல்லா அச்சங்களுக்கும் காரணம், இழப்பதற்கு எதுவுமில்லை என்பது உங்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியாததுதான். ஒரே ஒருமுறை மரணத்தின் அருகாமையை நேருக்கு நேர் எதிர்கொண்டு விட்டீர்களானால், அதுவே இழப்பதற்கு எதுவுமில்லை என்பதையும், உங்களுடைய எல்லா அச்சங்களும் அதாரமற்றவை என்பதையும் காட்டி விடும். குரு அவரது வழியில் இதை உங்களுக்குப் புரியவைத்து விடுவார்.
அதனால் குருவிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்யாதீர்கள். உண்மையிலேயே நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுவதற்காகவே அவர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களின் உள்ளார்ந்த இயல்பு அச்சமின்மை. பல காலமாக நீங்கள், உங்களுக்குள் பயத்தைப் பகுத்தப்பட்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் பல காலமாக உங்களுக்குள் எடுத்துக் கொண்டு விட்ட நெறிப்படுத்தல்களின் படிமங்களை குரு உடைக்க முயற்சி செய்கிறார்; அவ்வளவுதான். அவர் உங்களிடம் செயலாற்ற விசுவாசத்துடனும் அன்புடனும் அவரை அனுமதித்தீர்களானால், நீங்கள் உங்கள் கண் முன்னாலேயே உருமாற்றமடைவதைக் காணலாம்.
எனக்குப் பழக்கமான ஸ்வாமி ஒருவரைப் பற்றிய ஒரு சின்ன கதையைக் கூறுகிறேன்...
அந்த ஸ்வாமியின் அறையில் நிறைய கடிகாரங்கள் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தைக் காட்டும். நான் அது பற்றி ஒருநாள் அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார், "நேரம் என்னுடைய எஜமான் அல்ல. நான்தான் எஜமான்! எனக்கு எந்த நேரம் வேண்டுமோ, அந்த நேரத்தை அந்த கடிகாரத்திலிருந்து எடுத்துக் கொள்வேன்". அந்த ஸ்வாமி தான் உடலை விடப்போகும் நாளையும், நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டார்.
இறப்பதற்கு முதல் நாள் இரவு, அவரது சீடர்களை எல்லாம் அவரைச் சுற்றி இருக்கச் செய்து, கீர்த்தனைகளைப் பாடச் சொன்னார். அதில் ஒரு பாடகர் தனது இசைத் திறமையில் கொஞ்சம் கர்வம் உள்ளவர். அவர் அப்பொழுது பாடவில்லை. வழக்கமாகச் செய்வதைப் போல், ஸ்வாமி ஒரு துண்டுச் சீட்டில் ஏதோ எழுதி அதை அவரிடம் அனுப்பினார். அது ஏதோ ஒரு குறிப்பிட்ட பாடலைப் பாடுவதற்கான வேண்டுகோள் என்று அந்த சீடர் மகிழ்ந்தார். ஆனால் அவர் அந்த துண்டுச் சீட்டைத் திறந்து பார்த்தபொழுது, அதில் ஸ்வாமி, ''தயவு செய்து நான் இறந்த பிறகு பாட வேண்டாம்'' என்று எழுதி இருந்ததைக் கண்டார்! இறக்கும் தறுவாயிலும் அவர் ஒரு நகைச்சுவையான மனநிலையில் இருந்தார்!
அந்த இரவின் பிற்பகுதியில், ஆசிரமத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளுமாறு, தனது சீடர்களிடம் கூறினார். அவர் சொன்னார், "முக்கியமாக நாளை, நீங்கள் அனைவரும் எனது தகன ஏற்பாடுகளில் மும்முரமாகி விடுவீர்கள். அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்ய மறந்து விடாதீர்கள்!". இறுதி நிமிடம் வரை, அவர் பின்னால் விட்டுச் செல்லும் மக்களுக்கான அக்கறையுடன் தான் இருந்தார்! அடுத்த நாள் காலையில், அவர் சொன்ன சரியான நேரத்தில், இரு கைகளையும் அனைவரையும் நமஸ்கரிக்கும் பாவனையில் கூப்பினார் - பிறகு ஒரு வெறும் நாடகத்தைப் போல, அவரது கைகள் விழுந்தன.
மரணத்தை எதிர்கொள்ள எவ்வளவு அழகான, அமைதியான, தைரியமான வழி! நாமும் இப்படித்தான் இறக்க வேண்டும். நமது குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ நம்மை விட்டுச் செல்லும் பொழுதும் மரணத்தை இவ்வாறே பார்க்க வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் பயத்தைப் பற்றிய அனைத்துக் கருத்துக்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போய் விடும். ஏனெனில், நான் சொன்னது போல், பயத்திற்குக் கீழே இருக்கும் அடிப்படையான விஷயம் மரணம்தான்.
சரி ... ஏதேனும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா ?
ஆனால் ஸ்வாமிஜி, சாதாரணமாக பயம் அதிகமாகப் பெண்களுடன் தொடர்பு படுத்தப்படுகிறதே?
பாருங்கள் ... ஆண்கள் முக்கியமாக மூலாதார சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்; பெண்கள் ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்; அதனால்தான் ஆண்கள் மிகவும் இச்சையுடையவர்களாகவும், பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், இருவருக்குமே இது தெரியும்; ஒருவருக்கொருவர் இதை சரியான முறையில் உபயோகப் படுத்திக் கொள்கின்றனர் !
பெண்ணின் பலவீனமான நாணை சரியாக எங்கு தொட வேண்டும் என்று ஆணுக்குத் தெரியும். அவன் அவளுடைய பாதுகாப்பின்மை மற்றும் பயத்துடன் விளையாடி, அவளைச் சுரண்டுகிறான். அதே போல், பெண்ணுக்கும் ஆணின் திறவுகோல் எங்கிருக்கிறதென்பது தெரியும்! அவளும் விளையாடி, அவனைச் சுரண்டுவாள்! காலங்காலமாக திருமணங்களில் இதுதான் நடந்து வருகிறது.
உண்மையில், ஹிந்துக்களின் திருமணங்களில், ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் (எந்தவிதமான செயல்களும் ஆசைகளும்) மென்மையான முறையில் தீர்க்கும் வகையிலும், இந்த வாழ்க்கையில் மேலும் கர்மக்களைச் சேர்த்துக் கொள்ளாத வகையிலும் செயல்படுவதாக உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.
ஆனால், இந்நாட்களில், மக்களுக்கு அது போன்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டது கூடத் தெரியாது. ஏனெனில், திருமணம் செய்து கொள்வது அவர்களல்ல; புரோகிதர்கள் தான் எல்லா மந்திரங்களையும் சொல்லி திருமணம் செய்து கொள்கின்றனர்!
அவர்கள் எடுத்துக் கொள்வது மிகவும் அற்புதமான ஒரு உறுதிமொழி. பாருங்கள் ... நாம் போதுமான அளவுக்கு மேலும் கமாக்களை நமது வாழ்வில் சேர்த்து விட்டோம். குறைந்த பட்சம் அவற்றை இந்தப் பிறவியிலாவது தீர்த்து விட்டு, விடுதலை அடைவதே, நமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
வெளியிலிருந்து கவனித்தால்தான், எவ்வளவு முட்டாள் தனமான விளையாட்டு விளையாடப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நான் எப்பொழுதும் மக்களிடம் சொல்வதுண்டு... நடிகர்களுக்கும், விளையாட்டாகப் பார்ப்பது மிகவும் சுலபம்; ஏனெனில், அவர்கள் எப்பொழுதும் ஏதோ பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையை ஒரு பெரும் நாடகமாகப் பார்ப்பதில் அவர்களே மிகவும் நெருங்கி வருகிறார்கள். மற்ற அனைவரும் தமது பாத்திரங்களில் மிகவும் சிக்கிக் கொண்டிருப்பதால் அதுவே நமக்கு திடமான நிஜமாகி விடுகிறது.
பெண்கள் மிகவும் பயந்தவர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் உளவியல் ரீதியாக அப்படி உருவாக்கப்பட்டிருப்பது தான். ஆணும் பெண்ணும் உடலளவில் மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் வேறுபட்டே இருக்கிறார்கள்.
ஸ்வாமிஜி, சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பயப் படுவதிலிருந்து வெளியே வருவது எப்படி?
முதலில், எல்லாச் சின்னச் சின்ன பயங்களுமே, இறுதியான மரணத்தைப் பற்றிய பயத்தின், வெறும் பிரதிபலிப்புகள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது, உங்கள் பயத்தை எதிர்க்காதீர்கள்; வெறுமனே உங்களுக்கு பயமாக இருக்கிறது என்பதை மட்டும் திரும்பத் திரும்ப உங்களுக்குள் சொல்லிக் கொண்டு, அதை அனுபவியுங்கள், அவ்வளவுதான்! பயம் உங்களிடம் இருந்து போய் விட்டது என்பதை நீங்கள் வெகு சீக்கிரத்தில் கண்டு கொள்வீர்கள். ஏனெனில், நீங்கள் அதைப் பார்த்து, அனுபவித்து விட்டீர்கள். நீங்கள் ஒவ்வொரு முறை பயத்தை உணரும் பொழுதும் இதைச் செய்ய ஆரம்பியுங்கள்.
இதில் நீங்கள் விழிப்புடன் செயல்படும் பொழுது, பயம் என்று நீங்கள் அழைப்பது, ஏதோ ஒரு நிகழ்விற்கோ அல்லது ஒரு எண்ணத்திற்கோ உங்களுடைய பதில் அல்லது எதிர்ச் செயலைத் தவிர வேறல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு பயம் இருந்ததா இல்லையா என்பது உங்களுடைய பதிலைப் பொறுத்தது. மேலும் மேலும் விழிப்புணர்வுடன், உங்களால் பயத்திற்கு பயமில்லாமல் பதில் கொடுக்க முடியும்!
மரணத்தை எதிர்கொள்ள எவ்வளவு அழகான, அமைதியான, தைரியமான வழி! நாமும் இப்படித்தான் இறக்க வேண்டும்!
ஒரு விஷயத்தை நினைவு கொள்ளுங்கள் ... யாருமே பயமற்றவர் என்று உரிமை கோர முடியாது. பயத்தை பயமில்லாமல் கையாளுவதைக் கற்றுக் கொள்ள முடியும், அவ்வளவே. யாராவது பயமற்றவர் என்று பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தால், அவர்கள் பயத்தையும் அதற்கு மனிதனின் பதிலையும் பற்றி ஆழமாக ஆராய்ந்து பார்க்கவில்லை என்பதில் தெளிவாக இருங்கள். அவர்கள் மனித ஆற்றலை மீறிய சக்தி படைத்தவர்கள் என்றும், நீங்கள் தகுதி குறைவானவர்கள் என்றும் எண்ண ஆரம்பித்து விடாதீர்கள்.