KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/ஸ்வாமிஜி, நீங்கள் என்னுடைய சிலந்திகள் பற்றிய பயத்தை வெல்லுமாறு செய்ததை நினைவு கூர்கிறேன்!Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

ஸ்வாமிஜி, நீங்கள் என்னுடைய சிலந்திகள் பற்றிய பயத்தை வெல்லுமாறு செய்ததை நினைவு கூர்கிறேன்!

(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கிறார்!) ஆமாம் ஆமாம், எப்படி யென்று அவர்களுக்கு சொல்லும்மா!

(ஒரு சிறுமி சொல்கிறாள்) ஒரு நாள் நாம் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒரு சிலந்தியைப் பார்த்து நான் துள்ளிக் குதித்தேன். அதற்காக நீங்கள் என்னைப் பார்த்து சிரித்தீர்கள். நான் ஒவ்வொரு முறை சிலந்தியைப் பார்க்கும் பொழுதும், அதன் மீது என்னைத் தியானம் செய்யச் சொன்னீர்கள். நான் அதை கவனத்துடன் பின்பற்றினேன். ஒவ்வொரு முறை அதைப் பார்க்கும் பொழுதும், விழிப்புணர்வுடன், மனதை ஒருமுகப்படுத்தி அதைப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக, அதைக் கண்டு நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற ஆச்சரியம் எனக்கு வர ஆரம்பித்தது!

சரி, நீங்கள் எல்லாரும் அதைக் கேட்டீர்களா ? நமது பயங்களுக்குள் ஊடுருவிப் பாருங்கள்; பிறகு, உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது எது என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

பயம் என்று அழைப்பது, ஏதோ ஒரு நிகழ்விற்கோ அல்லது ஒரு எண்ணத்திற்கோ, உங்களுடைய பதில் அல்லது எதிர்ச்செயல் என்பதைத் தவிர வேறல்ல என்பதை, நீங்கள் விழிப்புடன் செயல்படும் போது புரிந்து கொள்வீர்கள்.

(இன்னொரு சிறுமி) ஸ்வாமிஜி, இமயமலையில், கங்கையில் நாங்கள் அனைவரும் உங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்த பொழுது, ஒரு தண்ணீர்ப் பாம்பு நாம் நின்றிருந்த இடத்திற்கருகில் வந்தது ஞாபகத்திற்கு வருகிறது. நான் கூச்சலிட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த பொழுது, அது அவளை உரசிக் கொண்டு சென்ற போதும் அனுபமா அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் கணக்தில், அதுவும் உங்கள் முன்னிலையிலேயே - விழிப்புணர்வை கொண்டு வராததற்காக நீங்கள் கூட பிறகு என்னைக் கடிந்து கொண்டீர்கள்.

ஆமாம் ! இப்பொழுது, நான் விழிப்புணர்வு என்று சொல்லும் பொழுது என்ன பொருளில் சொல்கிறேன் என்பதை உங்களால் இணைத்துப் பார்க்க முடிகிறது. இந்த பயங்களிலிருந்து வெளியே வருவதற்கு ஒரே வழி, உங்களுடைய கற்பனா சக்தியின் மூலம், இவற்றை மனதில் கற்பனை செய்து, நிஜத்தைப் போலவே அவற்றை அனுபவிப்பதுதான்!

நீங்கள் தனியாக அமர்ந்து கூட, உங்களுடைய பயங்கள் உங்களுக்கு நிகழ்வதாகக் கற்பனை செய்யலாம். உங்களுடைய கற்பனையில், அவற்றை ஆழமான விழிப்புணர்வுடனும் அமைதியுடனும் எதிர்த்து நில்லுங்கள். இந்தக் கற்பனையான செயல் முறையில் நீங்கள் துன்பப்படுவீர்களானால், பரவாயில்லை. அதை அடக்கி வைக்கவோ அல்லது தண்டிக்கவோ செய்யாதீர்கள். உங்கள் உடல் பயத்தில் நடுங்கினால், நடுங்கட்டும். வெறுமனே உங்களுடைய அறிவுடன் ஒத்துழைத்து, நீங்கள் அதனுடன் செல்ல அனுமதியுங்கள். எதுவுமே, முழுமையாக வாழ்ந்து விடும் போது, உங்கள் மீது எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. உங்களுடைய எல்லா பயங்களுமே, வெறுமனே உங்களுடைய பயங்களைப் பற்றிய பயம்கான், அவ்வளவே!

மேலும் மேலும் விழிப்புணர்வுடன் செயல்படும்பொழுது, உங்களால் பயத்திற்கு பயமில்லாமல் பதில் கொடுக்க முடியும். ஒரு சின்ன கதை ...

ஒரு நாள் ஒரு சீடன் ஆற்றில் சிக்கிக் கொண்டு விட்டான். அவன் உயிரை இழந்து விடுவது பற்றி பயந்து, மூழ்குவதிலிருந்து காப்பாற்றுமாறு, அவனது குருவை நோக்கிக் கத்தினான். குரு சொன்னார், "எழுந்து நில்!". சீடன் அலறினான், "எவ்வாறு என்னால் முடியும் ? நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்''. குரு சொன்னார், ''நீயே உனக்கு உதவியாயிருப்பது பற்றி நான் உனக்குக் கற்றுத் தரவில்லை ? இப்பொழுது எழுந்து நில்!'. சீடன் சொன்னான், "குருவே, நான் சாகும் தறுவாயில் இருக்கும் பொழுது நீங்கள் போதனை செய்து கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் ஏன் என்னைக் காப்பாற்றக் கூடாது!''. குரு விடாப்பிடியாகச் சொன்னார், ''நான் சொல்கிறேன். எழுந்து நில்!''. குருவின் விடாப் பிடியான உறுதியினால் சீடன் நிலைகுலைந்து போனான். அவன் வெறுமனே எழுந்து நின்றான். தண்ணீர் அவன் முழங்கால் வரை மட்டுமே இருந்தது.

(சிரிப்பு!)

நான் சொல்கிறேன் ... உங்களுடைய எல்லா பயங்களுமே, உங்களுடைய பயங்களைப் பற்றிய பயத்தைத் தவிர வேறல்ல. உங்களுடைய பயங்களை எல்லாம் உதறித் தள்ளி விட்டு, அறிவு மேலே வர அனுமதித்தீர்களானால், உங்களுடைய பயங்களெல்லாம் வெறும் இல்லாத பொருள்களின் நிழல்களே என்பதைக் கண்டு கொள்வீர்கள்.

மரணத்தைப் பற்றிய பயத்தை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து பார்த்தீர்களானால், மக்கள் இறப்பதற்கு அச்சப்படுவதற்குக் காரணம், அவர்கள் விழிப்பற்ற நிலையில், தாங்கள் இப்பொழுது இருப்பதை விட வேறெங்கோ ஒரு உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது தெரியவரும். அவர்கள்

உங்கள் உடல் இருக்கும் இடத்தில், உங்கள் மனம் இல்லையென்று நிச்சயமாகச் சொல்ல முடியும். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட ஒருபோதும் முழுமையாக வாழ்ந்ததில்லை.

வாழ்க்கையில் அடைய வேண்டிய உண்மையான இடத்தை இன்னும் அடையவில்லை என்று எண்ணுவதால், இறப்பதற்குத் தயாராக இல்லை.

சிலர் தங்கள் மீது மற்றவர்களின் கண் பட்டுவிட்டதால் அவர்களால் முன்னேற முடியவில்லை என்று கருதுகிறார்கள்! உண்மை என்னவென்றால் ... உங்கள் கண்ணே இன்னும் சரியாக உங்கள் மீது படவில்லை. அதனால்தான், உங்களுடைய கடைசி நாட்களில் கூட, உங்கள் மரணத்தைத் தாமதப் படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்.

நீங்கள் சரியான முறையில் உங்கள் ஆசைகளையும், பயங்களையும், மற்ற உணர்ச்சிகளையும் ஆராய்ந்து புரிந்து கொண்டீர்களானால், எதற்காகவும், யார் மீதும் பழி போட மாட்டீர்கள்.

இது போன்ற சுருண்டு கொண்டிருக்கும் பயங்களற்று, தங்கள் வாழ்க்கையை வாழும் மக்களால், தங்கள் இறப்பையும் வாழ முடியும். நான் முன்பே சொன்னது போல், சரியாக எத்தனை மணிக்கு, தாங்கள் இறப்போம் என்று தங்கள் சீடர்களிடம் சொல்லி அதே போல இறந்த, வாழும் குருமார்களைப் பற்றிய கதைகள் நிறைய இருக்கின்றன.

குருமார்கள் உயிருடன் இருந்த பொழுது, அவர்களது போதனைகளில் இருந்து கற்றுக் கொள்ளாததை, பல சீடர்கள் தங்கள் குருமார்களின் இறப்பிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இறப்பை வாழ்ந்தார்கள் என்று சொல்லும் பொழுது, நாம் சொல்வது என்னவென்றால் அவர்களால் இறப்பை அறிவிக்க முடிந்தது என்பதையும் அவர்கள் விழிப்புணர்வுடன் இறந்தார்கள் என்பதையும்தான். அவர்கள் விஷயத்தில், அவர்களது இறப்பு என்பது உண்மையில் 'உடலை விடுவது', அவ்வளவுதான்.

நாமனைவரும் மிகுந்த துன்பத்துடன், விழிப்பற்ற நிலையில் உடலை விடுகிறோம். நிறைவேறாத ஆசைகளின் இழுபறி நம்மை ஒரு பக்கம் சித்திரவதை செய்கின்றன; உடம்பு போதுமான அளவு கஷ்டத்தை அனுபவித்து விட்டது என்று இன்னொரு பக்கம் சித்திரவதை செய்கிறது. மனமும் உடலும் பொருந்தாத தன்மை, நாம் இருக்கும் பொழுதும், இறக்கும் பொழுதும் நம்மைத் தொந்தரவு செய்கிறது. உயிருடன் இருக்கும் பொழுது, நாம் நமது உடலுக்குள், நமது எல்லைக்குள் இருப்போமானால், உடலை விடும் பொழுதும் அமைதியான முறையிலேயே விடுவோம். பிரச்சினை என்னவென்றால், நாம் இருக்கும்பொழுது, எப்பொழுதும் உடலுக்கு வெளியிலேயே இருக்கிறோம்; ஒருபோதும் இருப்பதில்லை.

இதை உங்களுக்கு விளக்குகிறேன் ...

உங்கள் வாழ்க்கை முறையை வெறுமனே ஆழமாகப் பாருங்கள். காலையில் பல் தேய்க்கும் பொழுது என்ன செய்கிறீர்கள் ? வேலைக்குச் செல்வதைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். வேலையில் இருக்கும் பொழுது, வீட்டிற்குச் செல்வதற்கு பேருந்தைப் பிடிப்பதைப் பற்றி நினைக்கிறீர்கள். வீட்டிலிருக்கும் பொழுது, அடுத்த நாள் வேலையைப் பற்றி நினைக்கிறீர்கள்! விடுமுறையில் இருக்கும் பொழுது, அலுவலகத்தைப் பற்றி நினைக்கிறீர்கள், அலுவலகத்தில் இருக்கும் பொழுது விடுமுறையில் செல்வதைப் பற்றி நினைக்கிறீர்கள்.

உங்கள் உடல் இருக்கும் இடத்தில், உங்கள் மனம் இல்லையென்று நிச்சயமாகச் சொல்ல முடியும்! நீங்கள் உங்கள்

'நாளை' என்பது 'இன்று' என்ற ரூபத்திலேயே வரும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது 'இன்றாக' வரும்பொழுது, நீங்கள் மீண்டும் நாளைக்கு என்று சொல்லி விடுகிறீர்கள்.

வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட ஒரு போதும் முழுமையாக வாழ்ந்ததில்லை.

நீங்கள் எப்பொழுதுமே கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோதான் இருக்கிறீர்கள். இதைத்தான் 'எல்லைக்குள் வாழ்வதில்லை' என்கிறோம். அதனால்தான் இறக்கும் தருவாயில், நீங்கள் வேறெதிலோ ஆழ்ந்து, நிறைவு பெறாமலும், செல்வதற்கு விருப்பமில்லாமலும் இருக்கிறீர்கள். அதனால்தான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீர்கள்.

நீங்கள் விழிப்புணர்வுடன் இறப்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தேவை என்ன என்று கேட்கக் கூடும். நான் சொல்கிறேன் .... மரணத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டுமே, உங்களால் வாழ்க்கையைப் பற்றி சரியான புரிந்து கொள்ளுதலுடன் வாழ முடியும். இல்லாவிடில், நீங்கள் வாழ்க்கையை சரியான முறையில் வாழ மாட்டீர்கள்.

வாழ்க்கையில் நீங்கள் எல்லாவற்றையும் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் சந்தோஷத்தை தள்ளிப் போடுகிறீர்கள், உங்கள் வேலையைத் தள்ளிப் போடுகிறீர்கள்; எல்லாவற்றையுமே நாளைக்குத் தள்ளிப் போட்டு விடுகிறீர்கள். 'நாளை' என்பதும் 'இன்று' என்ற ரூபத்திலேயே வரும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! அது 'இன்றாக' வரும் பொழுது, நீங்கள் மீண்டும் 'நாளைக்கு' என்று சொல்லி விடுகிறீர்கள்! அது நீங்களே உங்களுடன் விளையாடிக் கொள்ளும் ஒரு விளையாட்டு.

இறுதியில், மரணம் வரும் பொழுது, நீங்கள் தயாராக இல்லை! நீங்கள் நிறைய செய்ய வேண்டியது இருப்பதாக நினைக்கிறீர்கள். வாழ்க்கையே உங்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், இவ்வளவு காலமாக, பெரும்பாலும், தள்ளிப்போடுவதை உங்களை வறுமைக்கு எடுத்துச் செல்கிறது. வறுமை என்பது உங்களின் சொந்தத் தேர்வு.

நீங்கள்தான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். இறுதியில் எல்லாவற்றிற்கும் பழியை வாழ்க்கையின் மீது போடுகிறீர்கள். அதனால்தான் நீங்கள் வாழ்வதற்கு மரணத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதல் வேண்டும். பிறகு எந்தவிதமான ஏமாற்றிக் கொள்ளுதலும் இல்லாமல், காலம் வரும் பொழுது நீங்கள் இறப்பதற்குத் தயாராகவே இருப்பீர்கள்.

இந்த தள்ளிப் போடும் மனப்பான்மையால் நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்திருக்கிறோம். மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, உங்களால் எப்படி இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இவ்வளவு விஷயங்களைச் செய்ய முடிகிறது?". என்னுடைய வருடாந்திர காலண்டரைப் பார்த்து அவர்கள் வியப்பில் ஆழ்கிறார்கள்! வருடம் முழுவதும், உலகம் முழுவதும், பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நான் சொல்கிறேன். ''அது மிகவும் எளிமையானது. நான் நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்கிறேன். உங்களைப் போலத்தள்ளிப் போடுவதில்லை''.

உங்களுடைய, இந்த எதையும் தள்ளிப் போடும் போக்கு, உங்களை வெறுமனே ஒரு இழப்பவரைப் போல எண்ண வைக்கிறது. ஆனால் இழப்பவரைப் போல உணர்ந்தாலும், நீங்கள் தள்ளிப் போடாமல் இருக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

நமது தியானநிகழ்ச்சிகளில், நாம் மக்களை வழிகாட்டுதலுடன் கூடிய தியானத்திற்குள் எடுத்துச் சென்று அதில் அவர்கள் இன்னும் 24 மணி நேரத்தில் இறந்து விடுவார்கள் என்றும், அதற்குள் அவர்கள் முடிக்க விரும்பும் எல்லா விஷயங்களையும் முடித்து விட வேண்டும் என்பதையும் கற்பனைக் காட்சியாக மனதில் உருவகப்படுத்திப் பார்க்குமாறு சொல்லப்படுகிறது. அது ஒரு

இந்தத் தள்ளிப்போடும் மனப்பான்மையால் நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்திருக்கிறோம்.

அற்புதமான தியானமுறை. அவர்கள், அவர்களுடைய இறப்பையும், இறுதிச் சடங்கையும் கூட கற்பனைக் காட்சியாக உருவகப்படுத்திப் பார்க்குமாறு செய்யப்படுகிறார்கள்.

ஒரு முறை இந்த தியானத்திற்குப் பிறகு, ஒரு சிறுமி அவளது எண்ணத்தைப்பகிர்ந்து கொண்டாள். அவள் சொன்னாள், ''ஸ்வாமிஜி, நான் ஒரு கடையில் ஒரு சுவரொட்டியைப் பார்த்தேன். அதில் 'ரீங்கள் திட்டமிடும் பொழுது, வருங்காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு உறுதியாகத் திட்டமிடுங்கள். அதைச் செயல்படுத்தும் பொழுது, அடுத்த நிமிடம் நீங்கள் இறந்து போய்விடப் போவதைப் போல் செயல்படுத்துங்கள்' - என்று எழுதியிருந்தது. அதன் உண்மையான பொருளை, இந்தத் தியானம் செய்த பிறகே புரிந்து கொண்டேன்''. நான் ''அற்புதம்'' என்று சொன்னேன்!

பாருங்கள் ... திட்டமிடும் பொழுது, வெருங்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டால், பின்னர் சில வருடங் களுக்காவது நிறைய மாற்றியமைத்துக் கொண்டிருக்காமல் இருக்கலாம். ஆனால் செயல்படுத்தும் பொழுது, பிரதான திட்டத்திலிருந்து எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உபவேலையை யும், ஒரு சின்ன குறைபாடு கூட இல்லாமல் வெற்றிகரமாக முடிக்கப்பட வேண்டும்.

பிறகு, ஒருவேளை நீங்கள் இறக்க நேர்ந்தால் கூட, முடிந்த வரையில், எல்லாமே முழுமையாக இருக்கும்; மக்களுக்கு சூழ்நிலைக்கேற்வாறு, பின் தொடரவோ அல்லது மாற்றவோ, பிரதான திட்டம் அப்படியே இன்னமும் ஒரு குறிப்பாக இருக்கும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு உப வேலையையும் தாமதமின்றி செய்தால்தான் இதைச் சாதிக்க முடியும்.

நீங்கள் தினமும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து இன்றுதான் உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்வீர்களானால், தள்ளிப் போடுவதை நிறுத்தி விடுவீர்கள்.

பெரும்பாலும், தள்ளிப் போடுவதே உங்களை வறுமைக்கு எடுத்துச் செல்கிறது. வறுமை என்பது உங்களின் சொந்தத் தேர்வு. நீங்கள் முடிவுகளை தள்ளிப் போடும் பொழுது, வறுமையை நோக்கி அடியெடுத்து வைக்கிறீர்கள். ஆனால் இதை நீங்கள் அறியவில்லை. நீங்கள் கடவுளால் சரியாக நடத்தப்படவில்லையென்றும், கனவுகளை நிஜமாக்க முடியாமைக்குக் காரணம், உங்கள் வாழ்க்கை மிகவும் குறுகியதாக இருப்பதே என்றும் நினைக்கிறீர்கள். உங்களுடைய எல்லாச் சக்தியையும் நீங்கள் தெளிவுடன் சரியான வழியில் உபயோகப் படுத்தியிருந்தால், இதுபோன்று எண்ண மாட்டீர்கள்; எப்பொழுதும் இறக்கத் தயாராக இருப்பீர்கள்.

நீங்கள் தினமும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து இன்றுதான் உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்வீர்களானால், தள்ளிப் போடுவதை நிறுத்தி விடுவீர்கள். இதை உங்கள் வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்; ஒரே ஒரு மாதம் போதுமானது, பிறகு தானாகவே. உங்கள் வாழ்க்கையை தள்ளிப் போடாமல் வாழ ஆரம்பித்து விடுவீர்கள். அது மட்டுமல்ல. உங்களுடைய கௌரவத்தை இழந்து விடும் பயம், தா்ம சங்கடம், பெருமை, எதிர்பார்ப்புகள் ஆகியவையும் கரைந்து போய்விடும். ஏனெனில் இழப்பதற்கு எதுவுமில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு விடுவீர்கள்.

ஒரு விபத்தில் மயிரிழையில் உயிர் கப்பியோ அல்லது புற்று நோயிலிருந்து குணமடைந்தோ அல்லது இது போன்ற வேறு ஏதாவது வகையில் மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டுத் திரும்பியவர்களால் அதிக அச்சமின்றி வாழ முடிகிறது; ஏனெனில் இழப்பதற்கு எதுவுமில்லை என்று அவர்கள்

ஒழுக்கம் உங்களை முழுவதும் மந்தமாகவும், நடைப்பிணமாகவும் ஆக்கிவிடும்.

தெரிந்துகொள்கிறார்கள்! அவர்கள் வாழ்க்கையை அதிகத் தெளிவுடனும், அதிக அறிவுக் கூர்மையுடனும் வாழ்கிறார்கள்.

நீங்கள் உங்கள் எல்லாக் கல்வியிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம், நீங்கள் சரியான விஷயக்கை சரியான நேரத்தில் செய்து விட்டுச் சென்று கொண்டேயிருக்க வேண்டியதுதான் என்பதே. ஆனால் எப்படியோ, இதுவே நாம் கடைசியாகக் கற்றுக் கொள்ளும் முழுமையான பாடமாக இருக்கிறது! மற்ற பாடங்களையெல்லாம் படித்து முடித்த பிறகே இந்தப் பாடத்தைக் கற்கிறோம்.

தாமதப்படுத்துதல் என்பது நீங்களே கொண்டு வருவது. ஆனால் மற்ற பயங்கள் சமூகத்தினால் உங்களுக்குள் புகுத்தப்படுவது. சமூகம் உங்களை, உங்களையே பார்த்தும், மற்றவர்களைப் பார்த்தும், கடவுளைப் பார்த்தும் அச்சப்பட வைக்கிறது. ஒழுக்கம், நாமரூபங்கள், கௌரவம் போன்ற எளிய விஷயங்களைக் கொண்டு நீங்களே உங்களைக் கண்டு அச்சப்படுமாறு செய்கிறது.

ஒழுக்கம் என்ற பெயரில், உங்களைத் தன்னம்பிக்கை இழக்கச் செய்து விடுகிறது; அதனால்தான் ஒழுக்கம் என்று வரும் பொழுது உங்களையே உங்களால் நம்ப முடியவில்லை. நீங்கள் பயத்தின் காரணமாக ஒழுக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தால், உங்கள் உள்-அறிவுக்கூர்மை உங்களை வழி நடத்தும் வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது. மக்கள் என்னிடம், நான் பெண்களுடன் பயணம் செய்யும் பொழுது கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி, ஒரு ஆன்மீகத் தலைவராய் இருந்து கொண்டு, எவ்வாறு உங்களால் பெண்களுடன் பயணம் செய்ய முடிகிறது? பிறகு மக்கள் உங்களைப் பற்றிப் பேச மாட்டார்களா ?''.

வெறுமனே உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும், அனைத்திடமும் அளவற்ற அன்புடன் வாழுங்கள்.

முதலில் அவர்கள் ஒருஞானமடைந்தகுருவிடம் பேசுகிறோம் என்பதையே மறந்து விடுகிறார்கள். அவர்கள் யாரிடம் பேசுகிறோம் என்பதை முழுவதுமாக அறிந்து கொண்டார்களானால், இந்தக் கேள்வியே எழாது. எப்படியோ, அவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலளிக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன், "எனக்கு என்னிடம் நம்பிக்கை இருக்கிறது, அந்தப் பெண்களுக்கும் என்னிடம் நம்பிக்கை இருக்கிறது, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ?!''. நான் இதைச் சொல்லும்பொழுது அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

நமது வாழ்வில், ஒழுக்கம் என்பது அறிவுக் குறைவிற்கு ஒரு கீழான மாற்று என்பதைத் தவிர வேறல்ல. உங்கள் சொந்த அறிவிலிருந்து செயல்படும் பொழுது, உங்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இருக்கும். ஆனால் விதிமுறைகளில் இருந்தும் கட்டுப்பாடுகளில் இருந்தும் செயல்படும் போது, உங்களால் ஒருபோதும் உங்களை நம்ப முடியாது. ஏனெனில், முதலில் நீங்கள் நீங்களாக இல்லை! நீங்கள் உங்களுக்குள் மையம் கொள்ளவில்லை ; விதிமுறைகளில் மையம் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் அறிவுபூர்வமாக வாழ்ந்தீர்களானால், இது போன்ற பயங்கள் ஒருபோதும் உங்களைப் பற்றாது. ஒழுக்கத்தைப் போதிக்கும் மக்கள் ஆழ்ந்த பயத்திலிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அதைப் போதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் மீதே நம்பிக்கையின்மையாலோ அல்லது அவர்கள் ஒழுக்கவாதிகளாக அறியப்படுவது பயத்தினாலோ இருப்பதால் அச்சப்படுகிறார்கள். ஒழுக்கவாதிகள் அவர்களது ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு பற்றிய கருத்துக்களினால் மன நோயாளிகளாகி விடக் கூடும்.

தன்னம்பிக்கையற்றவர்கள்தான் ஒழுக்க நியதிகளை வகுத்து, அவற்றைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சின்ன கதை ....

சாதாரணமாக தெருக்களில் நடக்கும் பொழுதே கவனமாக அடிகளை அளந்து வைக்கும் ஒழுக்கவாதி ஒருவர் இருந்தார். ஒரு நாள் திடீரென்று கனமழை பெய்ய ஆரம்பித்து விட்டது. ஒழுக்கவாதியும் கூட்டத்துடன் சேர்ந்து ஓடத் தொடங்கினார். சிறிது தூரம் ஓடிய பிறகே, அவர் அவரது கவனமற்ற போக்கை உணர்ந்தார். அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார், "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்! ஓடுவது ஒரு கௌரவமற்ற செயல். ஒரு மேன்மையான மனிதன், ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதை வருத்தத்துடன் திருத்திக் கொள்ள வேண்டும்'. அதனால் அவர் மழையில் திரும்பவும் ஓட ஆரம்பித்த இடத்திற்கே சென்று அங்கிருந்து மீண்டும் அடிகளை அளந்து நடக்க ஆரம்பித்தார்.

(சிரிப்பு!)

ஒழுக்கம் உங்களை முழுழுவதும் முழுவுதும் மருத்தமாகவும், நடைப்பிணமாகவும் ஆக்கிவிடும் !

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ... நான் இதைச் சொல்லும் பொழுது, இது ஒரு சுதர்திரமான உலகம், நீங்கள் விரும்பிய எதையும் செய்யலாம் என்று சொல்லவில்லை. நீங்கள் உங்கள் சொந்த அறிவுக் கூடாமையை வளர்த்துக் கொண்டு வாழுங்கள்; அதனால் விதிமுறைகள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றையும், உணர்ந்தவற்றையும் உறுதிப்படுத்துவதாக மட்டுமே இருக்கும். அதனால் உங்கள் பயங்களை விட்டு விட்டு, உங்கள் உள் அறிவையும், உள் குரலையும், உள் குருவையும் தேட முயற்சி செய்யுங்கள்.

ஒரு சின்ன கதை....

ஒரு இளம் சந்யாசி ஒரு தெருவில் ஒரு அழகான விலைமாதுவின் வீட்டிற்கு எதிரே வசித்து வந்தார். சந்யாசி

அறிவுக்கூடா்மையுடையவர்கள், வெறுமனே தன்னிச்சையாகச் செயல்பட்டு, சரியான விஷயங்களைச் செய்கிறார்கள்.

எப்பொழுதும் தியானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார். இன்னொரு புறம், விலைமாதுவோ அவளது வழியில் பணம் சம்பாதிப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். அவளது வீட்டிற்கு பல ஆண்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். சந்நியாசியும் அவரால் முடிந்த அளவிற்கு தியானத்தில் மனதை ஒருமுகப்படுத்த முனைந்து கொண்டிருந்தார். ஆனால் அவரது கவனமோ அந்த இளம் பெண் மீதே அதிகமாக இருந்தது. அவள் நடத்தி வந்த ஒழுக்கக் கேடான வாழ்க்கைக்காக அவளை எப்பொழுதும் சபித்துக் கொண்டிருந்தார். இன்னொரு புறம் அந்த விலை மாதுவோ, தெருவின் எதிர்ப்புறத்தில் இந்த சந்யாசி வசிப்பதைக் கூட அறியவில்லை. அவளது வாழ்க்கை முறை ஆண்களுக்கு சந்தோஷத்தை அளிப்பதாக இருந்த போதிலும், அந்த விலை மாதுவோ, கிருஷ்ணன் மீது அன்பிலாழ்ந்து, அவளால் முடிந்த அளவு நேரத்தை அவனை வழிபடுவதிலும், அவன் உருவ விக்ரகத்துடன் விளையாடுவதிலும் கழித்து வந்தாள்.

அந்த சந்யாசியும், விலைமாதுவும் ஒரே நாளில் இறந்து, மரணத்தின் தேவனான, எமனின் வாயிலை வந்து அடைந்தனர். அவர்களுடைய பதிவேடுகள் சொர்க்கத்திற்கும், சந்யாசி நரகத்திற்கும் அனுப்பப்பட்டனர். சந்யாசியோ, எமனின் முழு நீதியிலும் இருந்த நியாயமற்ற தன்மையைப் பற்றிய தனது ஆழமான மன உணர்வுகளை வெளிப்படுத்தினார். எமன் அமைதியாக சந்யாசியிடம் விளக்கினார். "உன் வாழ்க்கை முழுவதும், தியானம் செய்வதாக பாசாங்கு செய்து கொண்டு உன்னிடம் அந்த விலைமாதுவின் மீது இச்சைக்கு இடம் கொடுத்திருந்தாய். இன்னொரு புறக்தில் அவளோ, என்ன செய்து கொண்டிருந்தாலும், கடவுளின் உண்மையான தன்மையில் முழுமையாக மன ஒருமைப்பட்டிருந்தாள்''.

ஒழுக்கத்தை போலவே, கௌரவமும் பயத்தைக் கொடுக்கிறது. கௌரவம், புகழ், சமூக அந்தஸ்து இவையணைத்தும் பயத்தைக் கொடுக்கிறது.

ஒழுக்கவாதிகள் முமேலோட்டமான, பயத்துடன் கூடிய, ஆழமற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்கள் முழுமை யாக வாழ்வதில்லை. அவர்கள் எப்பொழுதும் ஒழுக்கம் தவறி விடும் அச்ச த்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய உண்மையான எண்ணங்கள் ஒழுக்கம் என்ற போர்வையில் நன்றாக மூடி வைக்கப்பட்டிருக்கிறது. உள் அறிவுக் கூர்மையில் இருந்து செயல்படுவதற்குப் பதிலாக வெறுமனே ஒழுக்க நியதிகளின்படி செயல்படுவதால் வரும் பிரச்சினை இது.

உங்கள் அறிவுக்கூர்மையில் இருந்து செயல்படும் பொழுது, உங்களிடம் ஒரு விதமான தூய்மை இருக்கும். வெறுமனே வெளி விளிம்பில் இருந்தும், ஒழுக்கவிதிகளின் படியும் செயல்படும் பொழுது, அதில் அழகோ அல்லது தூய்மையோ இருக்காது.

அச்சப்படுபவர்களும், தங்களைப் பற்றியே நம்பிக்கை இல்லாதவர்களும்தான் ஒழுக்க நியதிகளை வகுத்து, அவற்றைப் பின்பற்றுகிறார்கள். அறிவுக் கூர்மையுடைய வர்கள், வெறுமனே தன்னிச்சையாக செயல்பட்டு, ஆழமாக மையம் கொண்டும், அச்சமின்றியும், சரியான விஷயங்களைச் செய்கிறார்கள்.

ஒழுக்கத்தைப் போலவே, கௌரவமும் பய பயத்தைக் கொடுக்கிறது; கௌரவம், பெயர் மற்றும் புகழ், சமூக அந்தஸ்து - இவையனைத்தும் பயத்தைக் கொடுக்கிறது. இந்த அச்சங்கள் அனைத்தும் உங்கள் அஹங்காரத்தின் அச்சத்தைத் தவிர வேறல்ல. எந்த கௌரவத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறீர்கள் ? வெறுமனே உள் நிறைவுடனும், கண்ணியத்துடனும் வாழுங்கள்; அதுவே போதுமானது. இந்த பூமியில் தங்கள் கௌரவத்தைக் கட்டிக் காப்பவர்களே மிகப் பெரிய கபட வேஷதாரிகள்.

வெறுமனே பயத்தைப் பார்த்து, நீங்கள் பயத்தில் இருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். பயம் தானாகவே கரைந்து போய்விடும்.

அவர்கள் அவர்களுடைய பெயரளவிலான கௌரவம் அவர்களை ரொம்பவே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

ஒரு மனிதன் ஒரு நாள் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். ஒரு மீனைக் கூடப் பிடிக்க முடியாமல் அவன் வெகு நேரமாக உட்கார்ந்து கொண்டிருந்தான். கையிலிருந்த தூண்டிலுடன் அவன் தூங்கி விழுந்து கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பெரிய மீன், தூண்டிலில் இருந்த இரையைப் பிடித்து பலமாக இழுத்தது. அவன் விழித்துக் கொள்வதற்குள் தண்ணீருக்குள் தலைகுப்புற விழுந்தான். இதை தூரத்திலிருந்து ஒரு சிறுவன் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் தந்தையிடம் கேட்டான். ''அப்பா, அவன் மீனைப் பிடிக்கிறானா, இல்லை, மீன் அவனைப் பிடிக்கிறதா ? ' .

பாருங்கள், உங்களுக்கு கௌரவம் வாழ்க்கையை விடப் பெரிதாகி விட்டால், அது உங்களை விழுங்கத் தொடங்குகிறது. இனிமேல் நீங்கள் அதைத் தேட வேண்டியதில்லை; அது வெறுமனே உங்களை விழுங்கி விடுகிறது, அவ்வளவே.

மேலும், உங்கள் கௌரவத்தை இழப்பதற்கு ஏன் பயப்படுகிறீர்கள் ?. ஏனெனில் உங்கள் கௌரவம் உங்களுக்கு நீங்கள் ஏதோ அசாதாரணமானவர் என்ற எண்ணத்தைக் கொடுக்கிறது. உங்கள் ஒரு திடமான அடையாளத்தைக் கொடுக்கிறது. பணத்தையும் கௌரவத்தையும் உடையவர்கள் எல்லாவிதமான அபத்தமான மற்றும் ஒழுக்கக்கேடான விஷயங்களைச் செய்து விட்டு தப்பி விடுகிறார்கள். அவர்களுக்கிருக்கும் அதிகாரத்தினாலும் கௌரவத்தினாலும் மக்கள் அவர்கள் முகத்திற்கெதிரே வாழ்த்துக் கூறி விட்டுப் பின்னால் அவர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.

உண்மையில் இருள் மிகவும் அழகாகவே இருக்கிறது. அது உங்கள் தாயின் கருவறை போல் இருக்கிறது.

இது போன்ற கௌரவத்தைத்தான் அவர்கள் மிகவும் கவனமாக பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். நான் ஒரு விஷயம் சொல்கிறேன் ... நீங்கள் இது போன்றிருந்தால் பிரபஞ்ச இருப்புத் தன்மை ஒருபோதும் உங்களைத் தேர்ந்தெடுக்காது. இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில், நீங்கள் விரும்புவது கிடைக்கலாம்; நீங்கள் வெற்றிகரமான மனிதராகக் காட்சியளிக்கலாம்; ஆனால் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கண்களில். நீங்கள் வறியவராகவே இருப்பீர்கள். பிரபஞ்ச இருப்புத்தன்மை, தேர்ந்தெடுப்பதற்குத் தன் சொந்த வழிமுறைகளை வைத்திருக்கிறது.

கௌரவம், பெயர், புகழ் மற்றும் அதிகாரம் எல்லாம் உங்களுடைய சொந்தக் கற்பனை என்பதைக் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள்கான் அவற்றிற்கு உயிர் கொடுக்கிறீர்கள்; நீங்களே உருவாக்கி விட்டு, பிறகு அவற்றை இழந்து விடுவோமோ என்ற பயத்தையும் வளர்க்குக் கொள்கிறீர்கள்.

வெறுமனே உங்களைச் சுற்றியுள்ள அணைவரிடமும், அனைத்திடமும் அளவற்ற அன்புடன் வாழுங்கள். உங்கள் வழியில் வரும் எவா்க்கும், எதற்கும் உங்கள் ஆழமான அன்பை உணருங்கள். நீங்கள் இவ்வாறு வாழ்ந்தால், கௌரவம் தானாகவே உங்களைத் தேடிவரும். மக்கள் உங்களை, உங்கள் பண்பிற்காக மதிப்பார்கள்; பணக்திற்காக அல்ல. இது போன்ற கௌரவத்தைப் பொறுத்த வரை, இழந்து விடும் அச்சமில்லை; இதை எப்பொழுதும் பாதுகாக்கும் அவசியமும் இல்லை; நீங்கள் வெறுமனே இதுபோன்ற அச்சங்களில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள்.

மேலும் பொது மேடைகளில் பேசுவதற்கு பயம் போன்ற பயங்களும், ஒரு விதத்தில் கௌரவத்தை இழந்து விடும்

கடவுள் என்பது, பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு, இந்தப் பேரண்டத்திற்கு, நாம் கொடுத்திருக்கும் பெயரைத் தவிர வேறல்ல.

பயம்தான். ஒரு கூட்டத்திற்கு முன்னால் பேச பயப்படுவது, உண்மையில் அவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்வார்களோ என்ற பயத்தினால்கான். அவர்கள் உங்களைப் பற்றி ஏதேமை சொன்னால் உங்கள் அஹங் காரத்திற்கு அவதியாகிவிடும் என்று அச்சப்படுகிறீர்கள். இது உங்கள் அஹங்காரத்தைப் பாதுகாக்கும் சாத்வீகமான ஒரு வழி. பயம் என்பதே அஹங்காரத்தின் ஒரு வெளிப்பாடுகான். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மக்கள் உங்கள் பேச்சை அங்கீகரிக்காவிட்டால் என்ன ? நீங்கள் ஒரு முழுமையான உணர்வுடன் பேசுங்கள்; அதுவே போதுமானது. வெறுமனே மகிழ்ச்சியுடன் இதைச் செய்யுங்கள்; மக்கள் அதைப் பற்றி என்ன சொல்வார்களோ என்று கவலைப் படாதீர்கள். மக்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சம் வந்து விட்டால், உங்கள் அஹங்காரத்திற்கு அடைக்கலம் கொடுக் கிறீர்கள் என்று பொருள்.

அஹங்காரம் அவதிப்படும் அச்சமும் மக்கள் தியானத் திற்குள் செல்ல அஞ்சுவதற்குக் காரணமாகும். தியானத்திற்குள் செல்லும் பொழுது, எப்பொழுதுமே, உங்களை - பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும், உங்களைச் சூழ்ந்திருக்கும் பிரபஞ்ச இருப்பு சக்திக்கும் - இழந்து விடும் அச்சம் இருக்கும். அதனால் நீங்கள் இறுக்கிப் பிடித்துக் தடுக்கிறீர்கள். அதற்கு பதில், நான் உங்களை வேறு எதையேனும் ஜபித்துக் கொண்டிருக்கச் சொன்னால், நீங்கள் சந்தோஷமாக ஜபித்துக் கொண்டிருப்பீர்கள்; அச்சம் இருக்காது.

உங்கள் அஹங்காரம் கரைந்து விடும் அச்சத்தில் இருக்கிறது. அது கரையும் பொழுது, நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் முத்திரை குத்தப்பட்ட சீட்டுக்களும் கரைந்து போய் விடும். இது உங்கள்

இந்த பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு, இந்த பிரபஞ்ச சக்திக்கு நேசிக்க மட்டும்தான் தெரியும். முதலில் சொர்க்கமும், நரகமும் புவியியல் ரீதியான இடங்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அஹங்காரத்திற்கு மிக அதிகம். நீங்கள் 'இல்லாதவர்' ஆகிவிடுவீர்கள்! அதனால் நீங்கள் எதிர்க்கிறீர்கள்; இப்பொழுது குறைந்த பட்சம் உங்களைப் பொறுத்த மட்டிலாவது 'யாரோ'வாக இருக்கிறீர்கள். இந்த எதிர்ப்பு அஹங்காரத்தின் அச்சத்தில் இருந்துதான் வருகிறது. நீங்கள் மென்மையாகவும் எளிதில் ஊடுருவக் கூடிய தன்மையுடையவராகவும் மாற பயப்படுகிறீர்கள்.

மக்கள் சமூக வட்டங்களில் அதிகம் பேசுவதற்கு பயமும் ஒரு காரணம். நீங்கள் மக்களை வெறுமனே கவனித்தால், அவர்கள் தரப்பிலிருந்து எதையேனும் சொல்வதற்கு அவர்கள் மிகவும் நிர்பந்திக்கப்படுவதாக உணர்வதைக் காணலாம். மற்றவர்கள் இவர்களை ஏதுமறியாதவர்களாகக் கருதி விடக் கூடும் என்பதால், இவர்கள் ஏதேனும் பேச வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் அவர்கள் - அது பொருளற்றதாக இருந்தால் கூட -ஏதேனும் சொல்கிறார்கள். இவையனைத்தும், நீங்கள் உணர்வதற்குக் கடினமான, பயத்தின் நுட்பமான வெளிப்பாடுகள்.

ஸ்வாமிஜி, நீங்கள் தெரியாதவற்றைப் பற்றிய பயத்தைப் பற்றி பேசினீர்கள். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா?

ஆம். நான் அங்குதான் வருகிறேன்.

பாருங்கள் ..... நம்முடைய தெரியாதவற்றைப் பற்றிய பயம் என்பது, இருளைப் பற்றிய, பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய, கடவுள் பற்றிய, இறுதியில் நமது சொந்த மரணம் பற்றிய பயத்தைத் தவிர வேறல்ல.

உண்மையில், நாம் நமது அச்சங்களைப் பற்றி மிகவும் அச்சப்படுகிறோம்! அதுதான் உண்மை. நாம் நமது அச்சங்களை

எதிர்கொள்ள அச்சப்படுவதால், அச்சங்கள் நம்மில் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொள்ள அனுமதித்து, மேலும் மேலும் அதிகமாக அச்சமடைய ஆரம்பிக்கிறோம்.

ஒரு சின்ன கதை ....

ஒரு மனிதன் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தான். பயணச் சீட்டு பரிசோதகா் அவனிடம் வந்து அவனது பயணச் சீட்டைக் கேட்டார். அவன் பைத்தியம் பிடித்தது போல், அவனது பணப்பையிலும், மூட்டை முடிச்சுகளிலும், அவனது கால்சட்டைப் பையிலும் இன்னும் எங்கெங்கோ அவனது பயணச் சீட்டைத் தேடினான். அவனைக் கவனித்துக் கொண்டிருந்த பரிசோதகர் அவனிடம் சொன்னார், ''ஐயா, ஏன் உங்கள் மேல் சட்டைப் பையினுள் தேடக் கூடாது?''. அவன் பதிலளித்தான். ''தயவு செய்து என்னை இப்பொழுது அங்கே பார்க்கச் சொல்லாதீர்கள். அது அங்கே இருக்கும் என்பதுதான் என்னுடைய ஒரே நம்பிக்கை''.

(சிரிப்பு)

நாம் பார்ப்பதற்கு மிகவும் பயப்படுகிறோம்! நமது பயங்களைப் பார்ப்பதற்கே மிகவும் பயப்படுகிறோம்; அதுதான் முழுப் பிரச்சினையும்; அதனால் ஆறுதல் பிரதேசங்களில் நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம்.

பார்ப்பதற்கு ஒருபோதும் அஞ்சாதீர்கள். பயப்படுவதால், இன்னும் அதிக பயத்தையே உருவாக்குகிறீர்கள். ஏனெனில், அது உங்களுக்கு மேலும் தெரியாததாகி விடுகிறது.

வெறுமனே பயத்தைப் பார்த்து, நீங்கள் பயத்தில் இருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். பயம் தானாகவே

கரைந்து போய்விடும். ஒவ்வொன்றாக, உங்கள் பயங்களை விழிப்புணா்வுடன் எதிர்கொள்ள ஆரம்பித்தீர்களானால், ஒரு காலகட்டத்தில், அறிவால் உங்கள் பயம் அகற்றப்பட்டு, உங்கள் பய உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும்.

எப்படியாயினும், தெரியாதவற்றைப் பற்றிய பயத்தைப் பற்றிப் பேசும் பொழுது, ஆவிகள் மற்றும் பேய்களைப் பற்றிய பயம் மிகவும் பொதுவானது. அவைகளைப் பற்றி பயப்பட வேண்டிய தேவையில்லை. பேய்களும், ஆவிகளும் நம்மை விட மிகவும் சக்தி குறைந்தவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நாமே அவைகளுக்கு அவற்றிடம் இருப்பதை விட மிக அதிகமான சக்தியைக்கொடுத்து, அவைகள் நமது பயங்களைக்கட்டுப்படுத்துமாறு செய்து விடுகிறோம். அங்குதான் பிரச்சினை ஆரம்ப மாகிறது.

ஆவிகள், பேய்கள் ஆகியவை பற்றிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டாம். அதனால், எந்தப் பயனும் இல்லை. நீங்கள் உங்களுக்குள் நன்றாக மையம் கொண்டிருந்தாலே, உங்களைப் பற்றித் தெளிவுடன் இருந்தாலே போதுமானது. தானாகவே, எதுவும் உங்களைத் தொட முடியாது; உங்களிடமும் அவற்றைப் பற்றிய அச்சம் இருக்காது.

இருளைப் பற்றிய பயமும் தெரியாதவற்றைப் பற்றிய பயம்தான். இருளைப் பற்றிய பயம் இறப்பைப் பற்றிய பயத்தைத் தவிர வேறல்ல. எண்ணிப் பாருங்கள் ... உங்கள் வீட்டிலுள்ள, பகல் நேரத்தில் நடந்து செல்லும் அதே தோட்டத்தில், நீங்கள் இரவில் நடந்து செல்வீர்களா? மாட்டீர்கள்! நீங்கள் பயப்படுகிறீர்கள்! ஏன் ? உங்களுக்கு அதன் எல்லைகள் நன்றாகவே தெரியும், இல்லையா?

பிறகு ஏன் பயப்படுகிறீர்கள்? நீங்கள் தோட்டத்தைக் கண்டு பயப்படவில்லை; இருளைக் கண்டு பயப்படுகிறீர்கள்.

இருளில் உங்களுக்கு ஏதேனும் நேரிட்டு விடக் கூடும் என்று பயப்படுகிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பற்றியே அச்சப்படுகிறீர்கள். நான் இதைத்தான் உங்களுடைய எல்லாப் பயங்களுமே ஏதோ ஒரு வகையில் இறுதியான இறப்பைப் பற்றிய பயத்துடனே தொடர்பு கொண்டிருக்கிறது என்று சொல்கிறேன். இருள் பற்றிய விஷயத்தில் அது தெளிவாகத் தெரிகிறது. மற்ற பயங்களின் விஷயத்தில் அது மிகவும் நுட்பமாக இருக்கிறது, அவ்வளவே.

உண்மையில், இருள் மிகவும் அழகாகவே இருக்கிறது! அது உங்கள் தாயின் கருவறை போல இருக்கிறது. உங்கள் தாயின் கருவறையில் இருந்த பொழுது, நீங்கள் முழு இருளில் இருந்தீர்கள். ஆனால், உலகத்திற்கு வந்து விட்ட பிறகு, இருளுடனான தொடர்பை இழந்து விட்டீர்கள்; அதை ஏதோ தெரியாத ஒன்றாக நினைத்து அச்சப்படுகிறீர்கள். தந்த்ராவைப் பின்பற்றுபவர்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் தீவிரமான சக்தியை உணர்வதற்கு, இருளின் மீது தியானம் செய்கிறார்கள்.

இருளைப் பற்றி அச்சப்பட வேண்டிய தேவை யில்லை. ஒரே ஒரு முறை, உங்களால் இருளை ஆழமான அன்புடன், அது உங்களுடைய தாயின் கருவறை என்ற ஆறுதலான உணர்வுடன், பார்க்க முடியுமானால், அதற்குப் பிறகு அதனிடம் நீங்கள் அச்சப்பட மாட்டீர்கள்.

ஒரு குழந்தை இருளைக் கண்டு பயந்தால், அதனிடம் 'தைரியமாக இரு' என்று சொல்லாதீர்கள்! அப்படிச் சொன்னால், அது அவனை இறுக்கமாக மட்டுமே ஆக்கும்; ஏனெனில் பயப்படக்கூடாது என்பதால் இருளைப் பற்றிய அவனது பயத்தை

விட்டுவிட மாட்டான். அவன் இருளைக் கண்டு அச்சப்படுவதை அனுமதியுங்கள். அவன் கொஞ்சம் நடுங்கட்டும். குறைந்த பட்சம், அவன் பயத்தைப் பற்றி ஆராய்வதற்காவது அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. அவன் இதைச் சில முறைகள் செய்யும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக இருளைப் பற்றிய அவனது பயம் விலசுகிறது.

கடவுளைப் பற்றிய பயத்திற்கு வந்தால், கடவுளும் நமக்குத் தெரியாததுதான்; எனவே கடவுளைக் கண்டு அஞ்சுகிறோம். புரிந்து கொள்ளுங்கள் .... கடவுள் என்பது பிரபஞ்ச இருப்பத்தன்மைக்கு, இந்தப் பிரபஞ்சத்திற்கு, பிரபஞ்ச சக்திக்கு, இந்தப் பிரபஞ்சமெங்கும் பரவிக் கிடக்கும் உயிராற்றலுக்கு நாம் கொடுத்திருக்கும் பெயரைத் தவிர வேறல்ல. இந்த பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு, இந்த பிரபஞ்ச சக்திக்கு நேசிக்க மட்டும் தான் தெரியும். இந்த அளவிற்கு நீங்கள் புரிந்து கொண்டாலே, தானாகவே உங்கள் பயங்கள் அனைத்தும் விலகிவிடும்.

மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, நாம் கெட்ட செயல்கள் அல்லது பாவம் செய்யாமல், நல்ல செயல்கள் அல்லது புண்ணியம் செய்தால், நரகத்திற்குச் செல்லாமல் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்று மக்கள் சொல்கிறார்களே, அது உண்மையா?'' என்று.

முதலில் சொர்க்கமும், நரகமும் புவியியல் ரீதியான இடங்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தலைக்கு மேலாக எங்கும் சொர்க்க - நரகங்கள் இல்லை. அவைகள் மனிதனுக்குள் பயத்தையும், போர்ட்சையையும் புகுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள், அவ்வளவே. நரகம் அல்லது சொர்க்கம் என்பதை கடும் போராட்டமான மரணம்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தியானத்தில் செலவமித்த கணங்கள் புண்ணியம் அல்லது நற்செயல். நான் தியானம் என்று சொல்லும் பொழுது, உங்கள் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பதைச் சொல்லவில்லை. நான் சொல்வது, நீங்கள் விழிப்புடன் நிகழ்காலத்தில் இருக்கும் கணங்களை; உங்கள் விழிப்புணர்வு உங்களிடம் இருக்கும் தருணத்தை; நீங்கள் சாதாரணமாக இருக்கும் கீழ்நிலை விழிப்பு நிலையிலிருந்து வெளியே வந்து நிகழ்காலத்தில் இருக்கும் கணங்களை; நீங்கள் பிரபஞ்ச இருப்பு சக்தியுடன் உணர்ந்து ஒத்திசைந்து இருக்கும் தருணங்களை.

இது போன்ற நிலையில் இல்லாத கணங்களே பாவம். நீங்கள் விழிப்பான நிலையில் இருக்கும் கணங்கள் எல்லாம் உங்கள் வங்கி இருப்புப் போன்றது. நீங்கள் இறக்கும் தருணத்தில், இந்த நிலைகளே மேலே வந்து உங்களுக்கு விடுதலை அளிக்கும்.

மக்கள், கோயில்களில் உள்ள தெய்வங்களுக்குப் பானை பானையாகப் பாலை ஊற்றினால் அவர்கள் கணக்கில் புண்ணியம் அதிகமாகி சொர்க்கத்தை அடையலாம் என்று நினைக்கின்றனர்! சொல்கிறேன் .... வெறுமனே பரம்பொருளுக்கு பாலைப் படைப்பதனால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. ஆனால் பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கி நன்றியுணர்வு பொங்கிப் பெருகும் பொழுது, நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையாக நினைத்து வழிபடும் தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்து அதனை வெளிப்படுத்தலாம். அது மிகவும் சரியானதுதான். ஆனால், தயவு

புரிந்து கொள்ளுங்கள் ... உங்களுடைய இந்தக் கணம், உங்களுடைய எல்லா கடந்த காலத் தீர்மானங்களின் மொத்த தொகுப்பு.

செய்து அதை புண்ணியம் அது இது என்று எதனுடனும் தொடர்பு படுத்தாதீர்கள்.

தூய மகிழ்ச்சியுடனும், நன்றியுணர்வுடனும், ஒரே ஒரு சொட்டுப் பாலைப் படைத்தாலும், உண்மையான தியானமாகிய அந்தக் கணம், நீங்கள் இறக்கும் தருணத்தில் உங்களுடன் வரும்.

இன்னொரு பக்கம், புண்ணியத்தை எங்கே தவற விட்டு விடுவோமோ என்ற வெறும் பயக்தில் படைக்கும் பானை பானையான பாலினால் எந்தப் பயனும் இல்லை. அதனால் தயவு செய்து உங்கள் விழிப்புணர்வை அதிகப் படுத்திக் கொண்டு விழிப்புடன் வாழுங்கள். ஒவ்வொரு கணத்தையும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், தியானமாக்கி விடுங்கள். அதுவே போதுமானது. நீங்கள் பாவங்களைப் பற்றிய பயமின்றி வாழலாம்.

நான் ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன் ...

பரதத்தில் தொலைதூரத்திலுள்ள ஒருசிவன்கோயிலுக்குப் போயிருந்தேன். மூலவர் சந்நிதியின் வாயிலில் ஒரு குழல் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அதன்மேல் விஷ்ணுநாதன் B.Sc., என்று கறுப்பு வண்ணத்தில் பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்ததில் வெளிச்சமே தெரியவில்லை. சிவனுக்கு எப்படி விஷ்ணுநாதன் என்று பெயர் வந்தது என்று நான் ஆச்சரியத்திலிருந்தேன். பிறகுதான் அதனடியில் சின்ன எழுத்துக்களில், கைலாஸாராதா் என்ற சிவனின் சரியான பெயரை, எழுதியிருந்ததைப் பார்த்தேன். விஷ்ணுநாதன் என்பது அந்தக் குழல் விளக்கை நன்கொடையாக அளித்தவரின் பெயர்!

(சிரிப்பு)

நமது விழிப்புணர்வற்ற செயல்களின் விளைவுகளை நாம் எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்க்காத அல்லது சாதகமற்ற விளைவுகள் நிகழும்பொழுது அவற்றை நாம் விதி என்கிறோம்.

நாம், நமது வாழ்வில் நற்செயல்களை சேகரிக்காமல் தவறவிட்டு விடுவோமோ என்று மிகவும் அஞ்சுகிறோம். அதனால் உலகாயுகமாகி நமது நற்செயல்களுக்கான வங்கிக் கணக்கை உருவாக்க ஆரம்பிக்கிறோம். மேலும் அத்துடன் நிற்பதில்லை. மறந்து விடாமல் இருப்பதற்காக, நாம் செய்த எல்லா நற்செயல்களைப் பற்றியும் தொடர்ந்து கடவுளிடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்! கடவுளின் விஷயத்தில் கூட நாம் மிகவும் உலகாயதமாக நடந்து கொள்கிறோம் !

புரிந்து கொள்ளுங்கள் ... நீங்கள் உண்மையில் கடவுள் ஒன்றும் சொர்க்கத்தில் விடுமுறை வாசஸ்தலம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் வாழும் பொழுது, அவற்றின் பின்னாலுள்ள உண்மையைப் பற்றிய எந்தவிதக் கருத்தோ அல்லது உணர்வோ இன்றி, எப்பொழுதும் இது போன்ற உலகாயுகமான செயல்களைச் செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். இவற்றைக் கொண்டு, நீங்கள் புண்ணியம் என்கிற பெரிய கோட்டையைக் கட்டுகிறீர்கள். பிறகு அந்தக் கோட்டை நீங்கள் இறக்கும் பொழுது, உங்களுடன் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

அது எப்படியிருக்கிறதென்றால்...நீங்கள் கனவில் ஒரு வீட்டைக் கட்டி, வண்ணம் பூசி, அலங்கரித்து மகிழ்ச்சியடை கிறீர்கள். உங்கள் கனவிலிருந்து கண்விழித்து எழும் பொழுது என்ன நிகழ்கிறது? வீடு எங்கே போயிற்று? நீங்கள் கண்விழித்த பிறகு அதனால் ஏதேனும் பயன் உண்டா? கிடையாது! அதே போல்தான் நீங்கள், இந்த புண்ணியம் என்கிற கருத்தை வைத்துக் கொண்டு, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். நாம் எல்லாவற்றையும்

கடவுள் மிகவும் கருணையுள்ளவர். இந்த உலகம் முழுவதும் அவருடையதாகவே இருக்கிறது, அவர் நம்மை, நம் விருப்பப்படி இருக்க அனுமதிக்கிறார்.

  • தெய்வீகத்தையும் சேர்த்து - ஒரு 'எளிமையான வியாபாரமாக' குறைத்து விட்டோம். அவ்வளவுதான்.

நான் பலரைப் பார்த்திருக்கிறேன்... அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு குறிப்பிட்ட கோயிலில் உள்ள ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை ஒரு நிவேதனத்துடன் தரிசனம் செய்வதாக வேண்டிக் கொள்கிறார்கள். ஒரு சனிக்கிழமை போக முடியவில்லை என்றால் அந்தக் கடவுளுக்கான நிவேதனத்தை அவர்களுடைய ஒட்டுனரிடம் கொடுத்து அனுப்புகிறார்கள்! மிகவும் தெளிவாக இருங்கள் ... நீங்கள் இறக்கும் பொழுது இந்தப் பொருள் சார்ந்த உலகம் உங்களுடன் வராது. விழிப்புணர்வுடனும் தியானத்திலும் இருந்த கணங்கள் மட்டுமே உங்களுடன் வரும்.

இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ... கடவுளுக்கு உங்களைப் பற்றி உங்களை விட நன்றாகவே தெரியும். அவருக்குத் தெரியுமாதலால், உங்களால் அவரிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. அதனால் அவரிடம் அஞ்சவோ அல்லது அவரைத் திருப்திப்படுத்தவோ வேண்டிய காரணம் எதுவும் இல்லை. கடவுளால் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், பிறகு இந்த உலகம் முழுவதும் எந்தப் புரிந்து கொள்ளுதலும் இருக்க முடியாது.

உங்களுடைய தாய் தந்தையரை விட கடவுள் உங்களை நன்றாக அறிவார். அவர் உங்களை இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல், இதற்கு முன் பிறவிகளிலும் அறிவார். அதனால் அஞ்சுவதற்கு எதுவுமில்லை. அவா் முன் நீங்கள் ஒரு திறந்த புத்தகமாக இருக்கிறீர்கள். அவரால் எப்பொழுது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்தையும் பார்க்க முடியும் !

விழிப்புணர்வை உங்கள் சுவாசத்திலேயே பகுத்துவதுகுறன் சரியான தீர்மானங்களை எடுப்பகற்கான ஒரே வழி. அதனால்தான் உங்கள் எல்லாச் செயலுமே விழிப்புணர்வுடனேயே நிகழும்.

அதனால் கடவுளைப் பற்றிய பயத்தைக் கை விட்டு விட்டு அவரை ஒரு பிரபஞ்ச இருப்புத் தன்மையின் முழுமையாகப் பாருங்கள். அவரை ஒரு நண்பனைப் போல் பாருங்கள்.

சமூகம், உங்களிடம் கடவுளைப் பற்றிய பயத்தை ஏற்படுத்த எவ்வளவு கடினமாக முயன்றாலும், அதற்கு செவி சாய்க்காதீர்கள். கடவுளிடம் உங்களுக்கான தனிப்பட்ட உறவை, ஒரு உறுதியான விசுவாசமிக்க உறவை-ஒருவரது வாழ்க்கையில் தேவையான ஒரே ஒரு உறவை - வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் அல்லது கடவுளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்தீர்களானால், நீங்கள் உங்களுடனேயே முன்பு இருந்ததை விட இன்னும் நன்றாக தொடர்பு கொள்ள ஆரம்பிப்பீர்கள். உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்வீர்கள். தெளிவு பிறக்கும். உங்கள் உள் அறிவுக்கூர்மை வளரும். பயங்கள் விலகி விடும். எதையும் கண்டு பயப்படுவதற்கு முன் அதைச் சரியாகப் பார்க்கக் கற்றுக் கொள்வீர்கள். அறிவு, பயத்தை அகற்றி விடுவதால், நீங்கள் எதையும் செய்ய வேண்டிய எவ்வித நிர்ப்பந்தத்தையும் உணர மாட்டீர்கள். மிகவும் தளர்வாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். விடுதலை பெற்றதாக உணர்வீர்கள்.

நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மை பற்றிய இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், மதத்தின் பெயரால் நடக்கும் எல்லாச் சண்டைகளும் இனி இருக்காது. தங்கள் மதம் பற்றிய பயத்தில் இருப்பவர்களும், தங்கள் மதத்திற்காகச் சண்டையிடுப வர்களும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அன்பைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளாதவர்கள். அவர்கள் தொடர்ந்து முழு விஷயத்தையும் தவற விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவா்கள்

நமது பயங்களால், நாமே நம்மைச் சுற்றி நிறைய சுவா்களை எழுப்பிக் கொண்டு விடுகிறோம். இறுதியில் நாமே எழுப்பிய சிறையில் நாம் சிக்கிக்கொண்டு விடுகிறோம்.

ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் குருடர்களைப் போன்றவர்கள்.

மிகவும் முக்கியமானது ... தயவு செய்து கடவுளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை உங்கள் குழுந்தைகளிடம் திணித்து, அவர்களிடம் கடவுளைப் பற்றிய பயத்தைப் புகுத்தி விடாதீர்கள். அவர்களுக்குக் கடவுளைத் தழுவிக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள். கடவுள் என்பது அனைத்தையும் உள்ளடக்கிய, எங்கும் பரவியுள்ள, பிரபஞ்ச இருப்புத் தன்மைதான் என்பதைக் கற்றுக் கொடுங்கள். கடவுள் என்பது தூய அன்பைத் தவிர வேறல்ல என்பதைக் கற்றுக் கொடுங்கள். அவர்கள் கடவுள் மற்றும் பிரபஞ்ச இருப்புத் தன்மை நோக்கிய ஒரு அன்பான மனோபாவத்துடன் வளர உதவுங்கள். இந்த விதத்தில், சாதாரணமாக வளர்வதைப் போல் அதிக பயத்துடன் வளர மாட்டார்கள்.

ஸ்வாமிஜி, நாங்கள் அவ்வப்பொழுது ஆச்சரியப் படுகிறோம் - எங்களுக்கு நிகழும் எதுவும், விதியா அல்லது எங்களுடைய தேர்வா ?

(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கேட்கப்படும் ஒரு கேள்வி!

புரிந்து கொள்ளுங்கள் ... உங்களுடைய இந்தக் கணம், உங்களுடைய எல்லா கடந்த காலத் தீர்மானங்களின் மொத்தத் தொகுப்பு. நீங்கள் இப்பொழுது இந்த இடத்தில் இருக்கிறீர்கள். அதிகாலையில் எழுந்து, சரியான பாதையில் இங்கு வந்து, அமர்ந்து, மேலும் தொடர்ந்து அமர்வதாகத் தீர்மானித்தீர்கள்.. ? சரிதானே!

இதேபோல், உங்களுடைய கடந்த காலத் தீர்மானங்கள் அனைத்தும், உங்களுடைய நிகழ்காலத்தை உருவாக்குகின்றன.

மற்றவர்களை மனப்பூர்வமாக நம்புங்கள். நீங்கள் சுரண்டப் பட்டால் கூட - உங்கள் இருப்புத் தன்மையில் இருக்கும் இந்த மனப்பூர்வமான ரம்பிக்கையானது, உங்களை இந்த பூமியில் கடவுளைப் போல வாழ வைக்கும்.

இப்பொழுது இங்கு இருப்பது போல. அதே போல், உங்களுடைய எதிர்காலம், உங்களுடைய எல்லா நிகழ்கால தீர்மானங்களின் விளைவாக இருக்கும். இப்பொழுது, அதை நாம் ஏன் விதி என்று நினைக்கிறோம்? ஏனெனில், நாம் நமது தீர்மானங்களை விழிப்பின்றி செய்கிறோம்; விளைவுகள் நமது வழியில் வருவதை நாம எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்க்காத அல்லது சாதகமற்ற விளைவுகள் நிகழும் பொழுது, அதை நாம் விதி என்று அழைக்கிறோம்.

விழிப்புடன் தீர்மானங்களை எடுக்கும் பொழுது, நாம் அதன் பக்க விளைவுகளையும், பின் விளைவுகளையும் அறிவோம், நாம் பக்க விளைவுகளையும், பின் விளைவு களையும் அறியாக போது, அதை விதி என்று சொல்கிறோம். உண்மையில், வாழ்க்கையே உங்களுடைய தேர்வுதான். நாம்தான் தீர்மானங்களை எடுக்கிறோம் ; ஒருபோதும் நமக்காக வேறு யாரும் எடுப்பதில்லை.

கடவுள் மிகவும் கருணையுள்ளவர். இந்த உலகம் அவருடையதாக இருப்பினும், அவர் நம்மை நம் விருப்பப்படி இருப்பதற்கு அனுமதிக்கிறார்! சுவாசத்திலேயே புகுத்துவதுதான், சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான ஒரே வழி. அதனால் உங்களுடைய எல்லாச் செயலுமே, எல்லாத் தீர்மானங்களுமே விழிப்புணர்வுடனேயே நிகழும்; நீங்கள் விழிப்பற்ற அல்லது ஆழ்மன நிலையில் தீர்மானம் எடுக்கும் நிலைக்கு ஒருபோதும் நமுவி விழுந்து விட மாட்டீர்கள், அவ்வளவே. பிறகு நீங்கள் உங்கள் ஊழ்வினை பற்றியும் விதி பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

மேலும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுளுங்கள் ... யாரும் உங்களுடைய செல்வத்தில் கை வைத்து உங்களுக்குப்

உங்கள் புத்தி கூர்மையடையும்போது, உங்களால் ஒரு விஞ்ஞானியைப் போலப் புரிந்து கொள்ள முடியும்.

பெயரளவிலான விதி கெட்டுப் போக காரணமாகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. எப்படியோ, மக்கள் நம் செல்வத்தைத் திருடிக் கொண்டு போக காத்துக் கொண்டிருப்பதாக ஒரு நிரந்தரமான பயத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நமது செல்வத்தை இழந்து விடும் பயம்.

இந்த பயத்தில், நாம் நம்மைச் சுற்றி நிரைய சுவர்களை எழுப்பிக் கொள்கிறோம். இறுதியில் நாமே எழுப்பிய சிறையில் ராம் சிக்கிக் கொண்டு இருப்பதைக் காண்கிறோம். அதனால்தான் நான் 'கதவைத் திற, காற்று வரட்டும்' என்று சொல்கிறேன். உயிர்ச்சக்தி உங்களைப் பாதுகாக்கும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். மிகவும் தெளிவாக இருங்கள் ... 'உங்கள் வீடுகளைப் பூட்டி வைக்க வேண்டாம்' என்று நான் சொல்லவில்லை! உடல் சார்ந்த நிலையில் உங்கள் வீடுகளைப் பூட்டி வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. மனம் சார்ந்த நிலையில் உங்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கும் பூட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள் என்று சொல்கிறேன், அவ்வளவுதான்.

ஒரு உதாரணத்திற்கு, நீங்கள் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் பெட்டியில் ஒருவாறு நிலைபெற்றவுடன் என்ன செய்கிறீா்கள் ? உங்களுக்கு அருகில் இருப்பவரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்கிறீர்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்கிறீர்கள். அவர்கள் என்ன மதமாக இருப்பார்கள் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறீர்கள். அவர்களுடைய பின்னணியைப் பற்றி கேள்விகளைக் கேட்கிறீர்கள். இப்படிப் பல, ஏன் ? உங்களுக்கு அவர்களைப் பற்றிய விவரங்களில் உண்மை யிலேயே ஆர்வம் இருப்பதாலா? இல்லை! ஏனெனில் நீங்கள்

உங்கள் உணர்ச்சி கூர்மையடையும் போது, நம்பிக்கை மலர்கிறது.

அவர்களை தெரியாகவையாகப் பார்க்கிறீர்கள். அவர்களைப் பற்றிய இந்த விஷயங்கள் தெரிந்தால், உளவியல்பூர்வமாக உங்களுடைய தெரியாகவற்றைப் பற்றிய பயம் குறைகிறது; நீங்கள் இயல்பாக இருக்கலாம், அவ்வளவுதான்.

நீங்கள் ஒரு ஹிந்துவாக இருந்து, அவர்களும் ஹிந்துவாக இருந்தால் நீங்கள் நிம்மதியடைகிறீர்கள். நீங்கள் ஹிந்துவாக இருந்து, அவர்கள் முஸ்லிமாக இருந்தால், நீங்கள் மன நிம்மதியற்றும் அச்சமாகவும் உணர்கிறீர்கள்; அவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறீர்கள். உங்கள் இருக்கையை மாற்றிக் கொள்ளலாமா என்று கூட சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். இவ்வாறு தான் உங்கள் பயம் வேலை செய்கிறது. நீங்கள் எப்பொழுதும் விழிப்பின்றி உங்கள் சொத்துக்களை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கிறீர்கள்.

சாரதா தேவி சொல்கிறார், ''மற்றவர்கள் மீது மனப் பூர்வமான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் சுரண்டப்பட்டால் கூட. உங்கள் இருப்புத்தன்மையில் இருக்கும் இந்தப் பிரபஞ்ச த்தை மனப்பூர்வமாக நம்பும் தன்மையானது உங்களை இந்த பூமியில் கடவுளைப் போல வாழ வைக்கும்'.

உங்கள் புத்தி கூர்மையடையும் பொழுது, உங்களால் ஒரு விஞ்ஞானியைப் போல பரிந்து கொள்ள முடியும்; உணர்ச்சி கூர்மையடையும் பொழுது நம்பிக்கை மலர்கிறது; உணர்வுகள் கூர்மையடையும் பொழுது ஞானம் மலர்கிறது. அதனால், உங்கள் அச்சங்களை விட்டு விட்டு, உங்களிடம் புரிந்து கொள்ளுதலும் நம்பிக்கையும் நிகழ அனுமதியுங்கள்.

அதனால் உங்கள் ஆஸ்திகளைப் பற்றிய அச்சங்களை விட்டு விடுங்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... அனைத்தும் பிரபஞ்ச இருப்புத் தன்மையைச் சேர்ந்தது. நீங்கள்

உங்கள் உணர்வுகள் கூர்மையடையும் போது, ஞானம் மலர்கிறது.

வெறும் தற்காலிகமான சொந்தக்காரர் மட்டுமே, அவ்வளவுகான். இதை உங்களால் ஆழமான நிலையில் புரிந்து கொள்ள முடிந்தால், நீங்கள் உங்கள் ஆஸ்திகளைப் பற்றிய அச்சம் உங்களை விழுங்க அனுமதிக்க மாட்டீர்கள்.

நாம் அந்நியர்களைப் பற்றிய அச்சத்தைப் பற்றிப் பேசினோம். ஆனால் கௌரவத்தைப் பொறுத்தவரையில் பயம் எவ்வாறு வேலை செய்கிறது என்று பாருங்கள். திருமணம் தாண்டிய உறவுகள் போன்ற சில சமூகம் அங்கீகரிக்காத சில விஷயங்களை, யாராவது செய்ய விரும்பினால், என்ன செய்கிறார்கள்? சமூகத்தின் கண்களில் தங்களுடன் எந்த வழியிலும் எந்த விதமாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளாத, முகம் தெரியாத அந்நியா் களுடனேயே அவர்களுடைய விளையாட்டுக்களை வைத்துக் கொள்கிறார்கள்.

இந்த விஷயத்தில், தெரியாதவை அச்சத்தின் நண்பனாகி விடுகிறது, இங்கு பொறுப்பும் ஈடுபாடும் பயத்திற்குக் காரணமாகி விடுகிறது. அதனால், முற்றிலும் தவிர்க்க முடியாவிடினும், பொறுப்பும் ஈடுபாடும் குறைவாக உள்ள அதிகம் பழக்கமற்ற மனிதர்களைத் தேடுகிறீர்கள். பயம் எப்படியெல்லாம் செயல் படுகிறது என்பதைப் பாருங்கள்! எப்படி நீங்கள் எப்பொழுதும் பயத்தின் பிடியிலேயே இருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்.

ஸ்வாமிஜி ... எங்களுக்குப் பயம் வரும் பொழுது, அதை அதிக விழிப்புடன் பாருங்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் சில சமயங்களில், அது திடீரென்று வந்து விடுகிறது. வர்து விட்டுப் போய் விடுகிறது - ஒரு திடீர் அதிர்ச்சியைப் போல, அப்பொழுது எங்களுக்கு அதைப் பார்க்கக் கூட நேரமில்லை ...

பயத்தாக்குதல்கள், நம் உடலில் நோய் ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுத்தி விடுகிறது.

ஆம்... நீங்கள் பயக்காக்குதலைப் பற்றிச் சொல்கிறீர்கள்.

பயத்தாக்குதல்கள் குறைவான காலமே இருக்கும் கூரிய பயத்துணுக்குகள்². அவை வெறுமனே சில நொடிகளில் வந்து விட்டுப் போய் விடும். உதாரணத்திற்கு, நீங்கள் தெருவில் நடத்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பென்று எண்ணி விடுகிறீர்கள். பயம் திடீரென்று எழுந்து, சில வினாடிகளில் அடங்கி விடுவதை உணர்கிறீர்கள். ஏனெனில் அதற்குள் அது கயிறுதான் என்பதை உணர்ந்து விடுகிறீர்கள். இதுதான் பயத்தாக்குதல்.

பாருங்கள் ... அது இப்படி இருக்கிறது ... எப்பொழுதும் நமக்குள் ஒரு பய ஒட்டம் இருந்து கொண்டிருக்கிறது. சில சமயங்களில் அது உச்சத்திற்குச் செல்கிறது, அவ்வளவுதான். இந்த பயத்தாக்குதல்கள் மிகக்குறைவான நேரமே இருந்தாலும், மிகுந்த தீவிரத்துடன் நிழ்கிறது. பயத்தாக்குதல்கள் நம் உடலில் நோய் ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுத்தி விடுகிறது. இவை மனச் சோர்வைத் தூண்டும் இரசாயனங்களை வெளியிடுகிறது. மேலும் முதுமையடையும் செயல்பாடுகளை வேகப்படுத்தி விடுகிறது. நமது முடி நரைப்பதற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் கூட காரணமாகிறது.

சராசரியாக, ஒவ்வொருவரும், விழிப்புடனோ அல்லது விழிப்பின்றியோ, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6 பயத்தாக்குதல் களுக்கு உள்ளாகின்றனர். நடு இரவில் தொலைபேசி மணியடிப்பது, காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது இன்னொரு வாகன ஒட்டி திடீரென்று பாதையில் இருந்து விலகி உங்கள் பக்கமாக வருவது, நீங்கள் ஒரு திகில் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் உங்கள் தோளில் தட்டுவது, முதலிய இது போன்ற பலவும் விழிப்புடனான பயத்தாக்குதல்களாகும்.

நீங்கள் உங்கள் கனவுகளிலும் பயத்தாக்குதல்களுக்கு உள்ளாகிறீர்கள்; ஆனால் கண்விழிக்கும் பொழுது மறந்து விடுகிறீர்கள். பயத்தாக்குதல்கள் ஒரு ரோஜாச் செடியின் வேர்களை அசைப்பது போன்றது; அது உடல் அமைப்பிற்கு மிகவும் அபாயகரமானது.

நீங்கள் சொன்னது போல், பயத்தாக்குதல் நிகழும் பொழுது, நீங்கள் விழிப்புணர்வுக்குள் செல்வதற்கு நேரமே இருக்காது; கடவுளின் பெயரைச் சொல்வதற்குக் கூட நேரமிருக்காது; ஏனெனில் அது ஒரு பயத்துணுக்கு மட்டுமே. ஆனால், பயத்தாக்குதலுக்குப் பிறகு, அதை நீங்கள் ஆராய்ந்து, உங்கள் பயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளுதலை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளலாம். இது பயத்தைப் பற்றிய உங்களது மொத்தக் கருத்தையும் கரைத்து விடுவதற்கு உதவும்.

நம்மிடம் இருக்கும் வழக்கமான பயத்தின் தீவிரத்தையும் ஆழத்தையும் குறைப்பதன் மூலம் பயத் தாக்குதல்களின் தீவிரத்தையும் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைக்கலாம். இந்த வழக்கமான பயத்திலிருந்துதான், பயத் தாக்குதல்கள் எழுகின்றன. ஆழமான புரிந்து கொள்ளுதலாலும் தெளிவாலும் வழக்கமான பயத்தைக் குறைக்க முடியுமானால், பயத்தாக்குதல் களும் குறைந்து விடும்.

பொதுவாக பயம் மிகவும் சக்தியுடன் இருப்பதால், அது உங்களைக் கட்டுப்பாடு இழக்கச் செய்து விடுகிறது.

ஒரு சின்ன ககை...

ஒரு சூஃபி குருவிடம் அவரது சீடன் ஒருவன் தீட்சை கொடுக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தான். இறுதியில்

ரீங்கள் தொடர்ந்து உங்கள் பயங்களை விமிப்பணர்வடன் பார்க்கும்பொழுது, மரணம் வந்தாலும் அதையும் விழிப்புணா்வுடன் நோக்கி, அது நிகழ அனுமதிப்பீர்கள்.

குரு ஒரு நிபந்தனையுடன் அவனுக்குத் தீட்சை கொடுக்கச் சம்மதித்தார். நிபந்தனை என்னவென்றால், அவன் அருகிலிருக்கும் பட்டணக்கிற்குச் சென்று அங்கு பர்தா அணிந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை முக்குமிட்டு விட்டு, அங்கிருந்து அதற்கப்பாலுள்ள காட்டிற்குச் சென்று அவன் கையிலுள்ள கம்பால் ஒரு புலியை அடித்து விட்டு வர வேண்டும். இது மிகவும் எளிதானது என்று மற்ற சீடர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குரு ஒரு புன்சிரிப்புடன் அவர்களைக் காத்திருக்கச் சொன்னார். ஒரு வாரம் கழித்து அந்த சீடன் திரும்பினான். அவன் மிகவும் மோசமாகக் காயமடைந்து இரத்தம் வடிய நின்று கொண்டிருந்தான். குரு அவனிடம் என்ன நடந்ததென்று கேட்டார். சீடன் சொன்னான், "எனக்கு எனென்று தெரியவில்லை, ஆனால் நான் பெண்ணை அடித்து புலியை முத்தமிட்டு விட்டேன்''.

(பலத்த சிரிப்பு ! )

பயம் உங்களை வெறுமனே குருடாக்கி விடும்! அது சில கணங்களுக்கு உங்கள் சிந்தனையையும் அறிவுக் கூர்மையையும் ஒருங்கே எடுத்துச் சென்று விடும். அதனால் பயத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு அதனை வெல்ல வேண்டும்.

பல சம்பவங்களிலும் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம் ... எங்கேனும் ஏதாவது தீவிபத்தோ அல்லது பேரழிவோ ஏற்படும் பொழுது, மக்கள் பயத்தில் எல்லாத் திசைகளிலும் ஓடிக் கொண்டு இருப்பார்கள்; கதவுகளைத் தவறான பக்கம் திறப்பார்கள்; சாதாரண காலங்களில் சரியான வாயில் தெரிந்திருந்தும் இப்பொழுது தவறான வாயிலை நோக்கி ஒடிக் கொண்டிருப்பார்கள். அவசர காலங்களில் இது போன்ற செய்கைகள் சில சமயங்களில் அவர்களது

நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். 'நான் யார்?'

வாம்க்கையையே இழக்கவும் காரணமாகி விடும். பயம் மிகவும் குருடாக்கி விடும் தன்மையுடையது.

நீங்கள் எப்பொழுதும் உங்கள் பயத்தை அறிந்திருக்க வேண்டும் என்று நான் சொல்வதன் காரணம், விழிப்புணர்வால் மட்டுமே கீழ்நிலைச் சக்திகளை உயர்நிலைச் சக்திகளாக உருமாற்றமடையச் செய்ய முடியும். விழிப்புணர்வால் இச்சையை அன்பாக மாற்றி விடுவது போல, தூய விழிப்புணர்வால் அச்சத்தை மாற்றமடையச் செய்து விட முடியும்.

அடக்கி வைக்கப்படும் எதுவும் வேறொரு வடிவத்தை எடுத்துக் கொண்டு விடும். அது முழுவதுமாக வேருடன் களையப்படுவதில்லை; அதனால் அடக்கி வைத்தல் பயத்தை வெல்லும் வழியல்ல. விழிப்புணர்வே வழியாகும். உண்மையில், பயத்தை அடக்கி வைக்கும் பொழுது, அதை வெல்லும் ஒரு வாய்ப்பை இழந்து விடுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் பயங்களை விழிப்புணர்வுடன் பார்க்கும் பொழுது, மரணம் வந்தாலும், அதையும் விழிப்புணர்வுடன் நோக்கி, அது நிகழ அமைதிப்பீர்கள். இதைச் செய்ய முடிவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் உங்களுடைய எல்லா பயங்களுமே இறுதியில் இறப்பைக் குறித்த பயத்தைத் தவிர வேறல்ல. நீங்கள் உங்கள் தினசரி பயங்களின் மீது செயல்படுவீர்களானால், விழிப்பின்றியே உங்கள் மரணத்தைப் பற்றிய பயமும் குறைந்து விடும் : மரணத்தைப் பற்றிய பயம் குறையுமாயின், உங்கள் தினசரி பயங்களும் குறைந்து விடும்.

சரி ... நாம் இப்பொழுது, ஸ்வாதிஷ்டான சக்கரத்தின் மீது நேரடியாகச் செயல்படும், இருள் தியானம் எனும் அற்புதமான ஒரு தியானத்தைச் செய்வோம்.

ஆனந்தமாக இருங்கள்