அத்தியாயம் - 10 ஆனந்த தரிசனம்
(இந்தப் பகுதி ஆனந்த தரிசனத்தைப் பற்றியது. தரிசன நேரத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தெய்வீக சக்தி அவர் வழியாகப் பாய்வதற்குத் தூய ஊடகமாகி விடுகிறார்; அதை அவர் அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் தெய்வீகப் பரிசாக அளிக்கிறார். )
ஆனந்த தரிசன தேரத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிரபஞ்ச விழிப்புணர்வில் விரிவடைகிறார். அவர் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் ஒன்றாகி விடுகிறார். அந்த நிலையில், அவர், தெய்வீக சக்தி அவர் வழியாகப் பாய்வதற்கு, பிரபஞ்ச சக்தி அவர் வழியாகப் பாய்வதற்கு, வெறுமனே ஒரு ஊடகமாகி விடுகிறார்.
தரிசன நேரத்தில் சாதாரண நேரங்களை விட இன்னும் கொஞ்சம் அதிகமான வோல்ட்டுகள் - நம்மால் தாங்க முடிந்த அளவு பிரபஞ்ச சக்தியை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தனக்குள் கொண்டு வருகிறார்! THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வார்த்தைகளில், "தரிசன நேரத்தில், இந்த உடலைக் கையாளுவதற்காக நான் கொண்டு வரும் மெல்லிய இழையான அஹங்காரமும் கரையத் தொடங்குகிறது. நான் வெறுமனே விரிவடைந்து பிரபஞ்ச சக்தியைப் பரப்புகிறேன்''.
அப்பொழுது குருவிடமிருந்து மிகப்பெரும் சக்தி பரவுகிறது. நாம் அந்த சக்தியை ஏற்றுக் கொள்ளும் தன்மையில் இருந்தால், அது நம்மை ஊடுருவிச் சென்று, இருப்புத் தன்மை நிலையில் நம்மை உருமாற்றமடையச் செய்யும். நம்மால் வெறுமனே உள்பேச்சின்றி இருக்க முடியுமானால், சலிப்படைய வைக்கும் தர்க்கத்தின் பிடியிலிருந்தும், எண்ணங்களிலிருந்தும், வார்த்தைகளிலிருந்தும்
விடுதலை பெற்று இருக்க முடியுமானால், தரிசன நேரத்தில் உருவாக்கப்படும் ஆனந்த ஸாகரத்தில், நம்மாலும் வெறுமனே ஒரு துளியாக இருக்க முடியும்.
குருவின் அன்பு பரவிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், நமது தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்படும் ஒரே ஒரு விஷயம் மனப்பூர்வமான நம்பிக்கையும், ஏற்றுக் கொள்ளும் அணுகு முறையும் மட்டுமே. அந்த சில மணி நேரங்களுக்கு நம்மால் நமது மனதை விட்டுவிட்டு அங்கு உருவாக்கப்படும் மனநிலையுடன் இசைந்திருக்க முடியுமானால், அதுவே குருவின் கருணைக்கு, பதிலுக்கு நாம் செலுத்தும், நமது ஆழமான நன்றியுணர்வாகும்.
தரிசன நேரத்தில் கீர்த்தனையும் நடனமும் இருக்கும். குருவின் பரவச நிலையிலான இருப்பும், அப்பொழுது வெளியிடப்படும் சக்தியும், அந்த சுற்றுப்புற சூழ்நிலையையே உன்னதமான தெய்வீகம் நிறைந்ததாக உருமாற்றி விடும். அது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் முழுமையான கொண்டாட்டமாகும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசுவது அனைத்தும், நமக்கு புத்தகங்களில் இருந்தும், குறுந்தகடுகளில் இருந்தும், எப்பொழுது வேண்டு மானாலும் கிடைக்கும். அவர் பேசுவது எதையேனும் தவற விட்டிருந்தால் கூட, நாம் அவற்றை மீண்டும் குறுந்தகடுகளின் மூலமாக கேட்க முடியும். ஆனால் தரிசன நேரத்தில் அவர் பேசுவதில்லை; அவர் வெறுமனே சக்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். அதுவே குருவிடமிருந்து நம் ஒவ்வொரு வருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய மற்றும் நேரடியான பரிசாகும்.
ஆனந்ததரிசனத்தின்போது ஒவ்வொருவரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அருகில் சென்று முழந்தாளிட்டு கண்களை மூடிக் கொள்வர். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நமது புருவ மத்தியில் ஆக்ஞா சக்ரத்தில்தொட்டு,
அவர் வழியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் தெய்வீக சக்தியை நமக்குள் புகுத்துவார்.
சாதாரணமாக நம்மிடம் சக்தி மேலாக, மூலாதார சக்கரத்திலிருந்து ஸ்ஹஸ்ரார சக்கரத்திற்கு, புவியீர்ப்பு விசைக்கு எதிராக இருக்க வேண்டும். ஆனால் நமது நெறிப்படுத்தல்களாலும், அழிவு பூர்வமான வழிமுறைகளாலும், இந்த சக்தி ஓட்டம் மேலிருந்து கீழாக, மூலாதார சக்கரத்தை நோக்கி பாயத் தொடங்குகிறது. அதனால்தான் மூலாதார சக்கரத்தில் எப்பொழுதும் ஒரு விதமான சுமை இருந்து கொண்டேயிருக்கிறது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, அவர் விரலை, நமது ஆக்ஞா சக்கரத்தில் வைத்து, சக்தியை மீண்டும் மேல் நோக்கிப் பாயுமாறு தூண்டி விடுகிறார். ஆக்ஞா சக்கரம் இருக்கும் இடத்திலுள்ள, சாட்சியாக இருக்கும் மூன்றாவது கண்ணானது, நமது எல்லா சக்தியும் மேல் நோக்கிப் பாய ஆரம்பித்து, அதை அடையும் பொழுது திறக்கிறது.
உலகம் முழுவதிலும், பலர் தங்களது அற்புதமான ஆனந்த தரிசன அனுபவங்களை நினைவுகூர்கிறார்கள். மக்கள், பல அற்புதமான அனுபவங்களையும், பல தெய்வீகக் காட்சிகளையும், தரிசன நேரத்தில் பலரது வியாதிகள் வெளியே இழுக்கப்பட்டு விடுவதையும், பல குணப்படுத்தும் சம்பவங்களையும், பல ஆன்மீக அனுபவங்களையும் பெறுகிறார்கள்.
வெளியே எந்தவிதமான அனுபவங்களும் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒன்றுமில்லை. சக்தி பலராலும் பவவிதமாகப் பார்க்கப்படுகிறது, அவ்வளவே. அதனால் தரிசன நேரத்தில் எந்தவிதமான அனுபவத்திற்காகவும் ஏங்க வேண்டிய தேவையில்லை. எது நிகழ்ந்தாலும், வெறுமனே அது நிகழ அனுமதித்தாலே போதும். அப்பொழுது, தரிசனத்தைப் பெறுவதற்கு,
நமக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிக் கொள்கிறோம். சக்தியே அறிவு; என்ன செய்ய வேண்டும் என்பது அதற்குத் தெரியும்.
எந்த விதமான எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. ஜோதியைப் பார்த்தல், சூன்யத்தைப் பார்த்தல், சக்தியை உணர்தல், அல்லது இது போன்ற எந்த ஒரு குறிப்பிட்ட அனுபவத்தையும் எதிர் பார்க்க வேண்டிய தேவையில்லை. குறைந்தபட்சம் அந்த சில வினாடிகள் தரிசனத்தின் பொழுதாவது பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் வெறுமனே ஒன்றாக இருந்தால் நல்லது.
இந்த சமயத்தில், வெறுமனே பிரார்த்தனைபூர்வமான மனநிலையில் இருப்பது, நமக்கு வார்த்தைகளால் முடிந்தை விட, அதிக உருமாற்றத்தைத் தர முடியும். பிரார்த்தனைபூர்வமாக இருப்பது என்பதற்கு எதையேனும் கேட்பது என்று அர்த்தமல்ல. ஆயினும், தரிசனம் முடிந்த பிறகு, நாம் எழுந்து செல்வதற்கு முன்னால், நாம் என்ன கேட்க விரும்பினாலும் கேட்கலாம் என்றே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எப்பொழுதும் சொல்கிறார். நமது மனதிலிருக்கும் எந்தக் கேள்வியையும், நாம் விடை தேடிக் கொண்டிருக்கும் எந்தப் பிரச்சினையையும் அவரிடம் கேட்கலாம் என்றே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்கிறார்.
ஆனால் அந்த கூஷணம் மிகவும் திக்குமுக்காட வைப்பதாலும், லோகாயதமான விஷயங்களுக்கு அப்பாற்பட்டிருப்பதாலும், எதையேனும் கேட்பதற்குக் கடினமாகி விடுகிறது. நாம் கேட்கும் மனநிலையில் இருக்கும் கண்மே அனைத்தையும் தவற விட்டு விடுகிறோம். ஏனெனில் கேட்பதற்கு மனம் உள்ளே வர வேண்டும். மனம் உள்ளே வரும் கண்மே நாம் மொத்த அனுபவத்தையும் தவற விட்டு விடுகிறோம்.
குரு மிகவும் விரிவடைந்த நிலையிலும், நுட்பமான உணர்வுடனும் இருப்பதால், நாம் அவரிடம் எதுவும் கேட்க வேண்டிய தேவையில்லை. தரிசனத்திற்காக அருகில் செல்லும் பொழுது, தங்களது உடலில் வலி அல்லது பிரச்சினை இருக்கும் பகுதியில், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சரியாக கையை வைத்ததாக நினைவு கூறும் நிகழ்ச்சிகள் பல இருக்கின்றன. அவர்கள் வெறுமனே அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அது கட்டியாகவோ வீக்க மாகவோ அல்லது வேறு ஏதாவதாகவோ இருக்கலாம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, அவர்கள் எதுவும் சொல்லாமலேயே, கவனிக்கப்பட வேண்டிய அந்தப் பகுதியில் சரியாக கையை வைக்கிறார். விரிவடைந்த நிலையில், குரு நம் மீது கொண்ட அன்பினால், நமது சொல்லப்படாத பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறார்.
அந்தச் சில கணங்களிலாவது, நமது பிரார்த்தனைகளை மறந்து பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைக்க முடியுமானால், நாம் அளப்பரிய அனுகூலம் அடையலாம். நமக்கு எது நல்லது என்று பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குத் தெரியும் என்கிற விசுவாசம் கொஞ்சம் இருந்தாலே போதுமானது. நாம் இந்த மனப்பான்மையுடன் செல்வோமாயின், குருவால் நமக்கு கொடுக்க முடிந்ததை அதிகபட்சம் பெற முடியும். அது ஒவ்வொருவருக்கும் ஒரு அரிய கணம்.
தரிசன அற்புதமான வாய்ப்பு. எல்லா பிரசங்கங்களிலும், நாம் மேலும் மேலும் புத்திபூர்வமான தெளிவிற்காக கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் மனதுடன் தொடர்பு கொள்ளவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அமாவிலும், மேலும் மேலும் வார்த்தைகளைச் சேகரித்துக் கொண்டு திரும்பிச் செல்கிறோம். இன்னும் கேள்விகளுடனும் திரும்பி வருகிறோம்!
அதனால் குறைந்தபட்சம் தரிசன நேரத்திலாவது, நமக்குள் சில அனுபவங்கள் நிகழ அனுமதிக்க முடியும். குறைந்தபட்சம் அந்த நேரத்திலாவது, மனதை விட்டுவிட்டு, இதயத்துடன் இருக்க முயற்சி செய்வது நல்லது. நமது மனதை வைத்துக் கொண்டு, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்றாக முடியாது. அது நமது இதயத்துடன் அல்லது இருப்புத் தன்மையுடன் மட்டுமே நிகழமுடியும். எந்தக் கலத்தலுமே நமது இதயத்துடன் அல்லது இருப்புத் தன்மையுடன் மட்டுமே நிகழ முடியும். ஒவ்வொரு ஆனந்த தரிசனத்திலும் இன்னும் கொஞ்சம் வளர்ச்சி அடைந்த வேறு மனிதனாகத் திரும்பிச் செல்கிரோம்.
ஆனந்த தரிசன சமயத்தில், குருவின் சக்கியானது நேரடியாக நம்மை ஆசையற்ற நிலைக்குக் கொண்டு சென்று விட முடியும். நாம் அன்புடனும், திறந்தும் இருப்போமாயின், அது நம்மைப் பல வழிகளில் உருமாற்றி விட முடியும். உறுதியான, புத்திபூர்வமான புரிந்து கொள்ளுதலின் மூலமும், தியானத்தின் மூலமும் ஆசையற்ற நிலையை அடைய முடியும். ஆனால், ஆனந்த தரிசன நேரத்தில், குருவின் கருணையினால் ஒருவரை நேரடியாக ஆசையற்ற நிலைக்குத் தள்ளிவிட முடியும்.
நம்மால் முழுவதுமாக மகிழ்ச்சியும், நன்றியுணாவும் நிறைந்து, நிகழ்காலத்தில் முழுமுமையாக இருக்க முடியுமானால், சக்தி நம்மை ஊடுருவிச் சென்று நமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வைத்து, அதற்கப்பால் ஆசையற்ற நிலைக்கும் எடுத்துச் செல்லும்.
இதற்கு நாம் எந்தவிதமான முயற்சியும் செய்ய வேண்டிய தில்லை. வெறுமனே நமது எல்லா முயற்சிகளையும் விட்டுவிட வேண்டும், அவ்வளவுதான்! பிறகு சக்தியே கவனித்துக் கொள்ளும். அதுவே மற்ற அனைத்தையும் செய்து விடும். சக்தியே அறிவு. நாம்
வெறுமனே அனுமதித்தால், பிரபஞ்ச இருப்பு சக்தி நம் வழியாகப் பாய்ந்து தேவையானதைச் செய்து விடும்.
தரிசனம் என்பது தெளிவான காட்சியைப் பெறுதல்; பளிச்சென்ற பார்த்தல். பரவும் சக்தியால், வெறுமனே இருப்புத்தன்மை நிலையில் அற்புதங்களைச் செய்ய முடியும். ஒவ்வொரு தரிசனத் திற்குப் பிறகும் - நமது அறிவுக் கூர்மை படிப்படியாக அதிகரிப் பதையும், ஆசைகள் மேலும் தெளிவைப் பெறுவதையும், ஒன்று அவைகள் நிறைவேறுவதையும் அல்லது அவைகள் வெறுமனே போய் விடுவதையும் - நம்மால் தெளிவாக கவனிக்க முடியும்.
குரு விரிவடைந்த நிலையில் இருப்பினும் இல்லா விடிணும், நாம் அவர் முன்பு முழுமையாக திறந்தே இருக்கிறோம். அவர் எப்பொழுதும் நம்மை இருப்புத்தன்மை நிலையில் பார்க்கிறார். எதையேனும் கேட்க முயற்சிப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் அறியாமையால் நாம் நமது ஆழமான குழப்பங்களையே வெளிப்படுத்துவோம். நமக்கு என்ன தேவை என்பதே சரியாக நமக்குத் தெரிவதில்லை. நம்மை மேலே எடுத்துச் செல்ல நமக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
இசை நமக்குள் நுழைந்து, தன்னைநடனமாகவெளிப்படுத்திக் கொள்ள, நம்மால் வெறுமனே அமைதிக்க முடியுமானால், தரிசன நேரத்தில் நம்மால் முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க மடியுமானால், நம்மை முழுமையாக மறந்து சக்தியுடன் ஒத்திசைந்து இருக்க முடியுமானால், தானாகவே இதுவரை நாம் சேர்த்து வைக்க வார்த்தைகளும் எண்ணங்களும் மறைந்து, நாம் வெறுமையாகி விடுவோம்; எண்ணங்கள் அற்றுப்போய் விடுவோம். பிறகு நாம்
தரிசனத்திற்காக அருகில் செல்லும் பொழுது, நம்மிடம் வெறும் சூன்யமும் மகிழ்ச்சியும் மட்டுமே இருக்கும்.
அந்த மன நிலையில் நாம் தானாகவே உள்ளே அமைதியாகத்தான் இருப்போம்; நாம் தானாகவே ஏற்றுக் கொள்ளும் தன்மையுடனும் அன்பாகவும் இருப்போம்; வெறுமனே உள் அமைதியினால் ததும்பிக் கொண்டிருப்போம், அவ்வளவே. பிறகு சக்தியால் நமக்குள் ஒரு ஒளிக்கதிர் போல், மின்னல் போல் நுழைய முடியும்; அது நமக்குள் ஆழமாகச் சென்று விதை நிலையில் தொட்டு, நமக்குத் தெரியாத பல வழிகளிலும் நம்மை உருமாற்றி விடும்.
தரிசன நேரத்தில் வெறுமனே அங்கே இருப்பதும், குருவைப் பார்த்துக் கொண்டிருப்பதுமே ஒரு பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய தியானமாகும். அது ஒரு வாழ்நாள் வாய்ப்பாகும். ஏனைய விவரங்களில் சிக்கி இதைத் தவற விட்டு விடுதல் உசிதமல்ல. பேராசையின்றி, முழுமையான அன்புடனும் நன்றியுணர்வுடனும், அங்கு வெறுமனே முழுமையாக இருப்பதே போதுமானது.
குரு எப்பொழுதுமே பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் இருக்கிறார்; தரிசன நேரத்தில் அது இன்னும் பன்மடங்கு கூடுகிறது. தரிசன நேரத்தில் அவர் உச்ச நிலையில் இருக்கிறார். பிரபஞ்ச இருப்பு சக்தி, குரு உருவின் ஒவ்வொரு அணு வழியாகவும் பாய்ந்து கொண்டும், தன்னை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறது. அந்த சமயத்தில் அவரை வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பதே, அவரது பரவச நிலைக்குப் பின்னால் இருக்கும் அனுபவத்தின் அடிச்சுவடுகளை நமக்குக் காட்டும்.
தரிசன நேரத்தில், குருவானவர், பிரபஞ்ச இருப்புத் தன்மை பிரவகித்துக் கொண்டும், ஒத்திசைந்து கொண்டும் இருக்கும், ஒரு உள்ளீடற்ற மூங்கிலைப் போல இருக்கிறார். அதனால்தான், வெறுமனே அவரைக் கவனித்துக் கொண்டிருப்பது கூட, மிகவும் அற்புதமாகவும் பரவசத்தைக் தருவதாகவும் இருக்கிறது. இது அனைத்திலும், நாம் கரைந்து விட, நம்மை எவ்வளவு அனுமதிக் கிறோமோ, அதனுடன் அவ்வளவு ஒத்திசைவுடனும், பிரபஞ்ச இருப்பு சக்தியின் தொடுதலுக்கும் பிரவாகத்திற்கும் அந்த அளவிற்கு விழிப்படையவும் முடியும்.
ஆனந்த தரிசனம் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கொண்டாட்டமாகும்; நாமும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான். அதனால் எல்லாவற்றையும் வெறுமனே விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் அனுபவிக்க இது உகந்த நேரமாகும் ! இது வெறுமனே உட்கார்ந்து ஹூக்கா புகைப்பதற்கான நேரமல்ல.
இது நமது போலி அடையாளங்களையும், சமூக நெறிப் படுத்தல்களையும், சமூக அஹங்காரத்தையும் உடைத்து விட்டுக் கொண்டாடுவதற்கான நேரம். நமது இருக்கை பெல்ட்டுகளை இறுக்கிக் கொண்டு பின்னால் சாய்ந்து உட்காருவதற்கான நேரமல்ல. சக்தி நம்மைத் தொடும் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் அதை ஏற்றுக் கொள்ள நாம் திறந்த நிலையில் இருக்க மாட்டோம் ! அதனால் என்ன பயன் ?
தரிசன நேரத்தில், நாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அருகில் இருக்கும் பொழுது, நமது எல்லா விழிப்புணா்வற்ற பயங்களும், குற்றவுணர்வுகளும், ஆசைகளும், வருத்தங்களும் மேலே வரும். நாம் அழ நேரலாம் அல்லது அமைதியாக உணரலாம் அல்லது ஆனந்தக் கண்ணீர் பெருகலாம் அல்லது இது போன்ற வேறு ஏதாவது உணர்ச்சிகளுக்காளாகலாம். இவற்றின் பின் இருக்கும்
காரணங்களை நாம் அறியோம்; ஏனெனில் இவையெல்லாம் நமது ஆழமான விழிப்பற்ற அடுக்குகளிலிருந்து குருவின் வெறும் இருப்பினாலேயே மேலே வந்து விடுகிறது.
இந்த உணர்ச்சிகளைத் தடை செய்யவோ அல்லது அடக்கவோ தேவையில்லை. குருவின் முன்னிலையில் அவை சுதந்திரமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வெறுமனே நாம் அனுமதிக்கலாம். அவை முழுமையாக வெளியே வந்து விடும். நம்மால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத, நாம் அறியாத, ஆனால் நம்மைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும், ஆழமாகப் பதிந்த விழிப்பற்ற நினைவுகள் அனைத்தும், உணர்ச்சிகளாக வெளி வந்து விடும். இது, இது போன்ற ஆழமாகப் பதிந்த நினைவுகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு அரிய வாய்ப்பு. இந்த உணர்ச்சிகள் அனைத்தும் வேருடன் களையப்பட்டு விடுகிறது. குருவின் பொங்கும் கருணை யானது அவற்றை வெறுமனே அழித்துவிடுகிறது.
ஒவ்வொரு தரிசனத்திலும், குரு, நமது இருப்புத் தன்மையை ஒளியேற்றுகிறார். அவரிடமிருந்து உண்மையான தருதல் ஆனந்த தரிசனத்தின் பொழுதுதான் நிகழ்கிறது. அதுவே அவரால் நமக்குக் கொடுக்க முடிந்ததும், இறுதியானதும், உயர்வானதும் ஆகும். அவர் நமக்கு அவரது சொந்த ஒளியைக் கொடுக்கிறார். ஒரு முறை அவர் நம்மில் ஒளியேற்றிவிட்டால், நாம் அனுமதிக்கும்பட்சத்தில் நாம் எங்கிருப்பிடைம், எங்கு சென்றாலும், என்ன செய்யியை, அதை நமது தீபமாக நம்முடன் எடுத்துச் செல்ல முடியும். வெறும் ஒரு தொடுதலே போதுமானது.
மேலும் அந்த சக்தியானது, நம்மை ஆழமாகத் தொட்டிருப்பின், அது நமது வாழ்க்கையை என்றென்றைக்கும் உருமாற்றி விடும். நமக்குள் ஒரு வெற்றிடம் உருவாக்கப்பட்டு,
விழிப்புணர்வால் நிரப்பப்பட்டு, அது நமது எல்லாக் கேள்வி களையும் கரைத்து விடும்.
மேலும், இந்தச் சமயத்தில் கிடைக்கும் சக்தியானது, நுண்ணறிவின் மூலம் வழிகாட்டுதலை நோக்கி, நமது எண்ணங் களை வலுப்படுத்தும். அது நமது அறிவைத் தூண்டி, நம்மை புத்தியிலிருந்து நுண்ணறிவை நோக்கி எடுத்துச் செல்லும். நாம் பெரும்பாலும், நமது மனதின் ஆழமான விழிப்பற்ற எண்ண வடிவ அமைப்புகளில் சிக்கிக் கொள்கிறோம்; அது நம்மை மீண்டும் மீண்டும் பழக்கமான துயர வடிவ அமைப்புக்களை நோக்கியும், விழிப்பற்ற நிலையில் தீர்மானம் எடுத்தலை நோக்கியுமே இழுக்கிறது. நுண்ணறிவின் ஆற்றலினால், நமது இருப்புத் தன்மையில் இருந்து சக்தியை எடுக்கும் திறமை பெற்று, அதை நமது வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் தீர்மானம் எடுக்க உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். தரிசன நேரத்தில் கிடைக்கும் சக்தியானது, இந்த நுண்ணறிவு ஆற்றலை நமக்குள் திறக்கும் வல்லமை பெற்றது.
ஆனந்த தரிசனத்தில் நமக்கு நிகழ்ந்ததன் ஆழத்தை, நமக்குக் கொடுக்கப்பட்ட மிகப் பெரும் பரிசை, நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்; ஆனால் குறைந்த பட்சம் நாம் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும், திறந்த தன்மையுடன் ஏற்றுக் கொள்ளவும் முயற்சி செய்யலாம்; மற்றது தானாகவே நிகழும்.
ஆனந்த தரிசனமானது, செல்வதற்கும், அவரது அன்பை உணர்வதற்கும் அவரிடமிருந்து நேரடியாக சக்தியைத் தருவதை உணர்வதற்குமான விரு நேரமாகும். தரிசனமானது, எவையெல்லாம் நாம் இல்லையோ அவையனைத்தையும், எவையெல்லாம் நம்மிடம் ஒரு மாயையான
பொய்த் தோற்றத்தைத் காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறதோ அவையனைத்தையும், நமது துயரத்திற்குக் காரணமான எல்லா கடன் வாங்கப்பட்ட ஆசைகளையும் அழித்து விடும். தரிசன நேரத்தில், குருவின் இருப்பானது, தூய பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறது. நிரந்தர ஆனந்தமான நித்யானந்தத்துடன் ஒன்றாகவும் ஒளிவீசவும் இது ஒரு மிகப்பெரும் வாய்ப்பாகும்!