KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/ஸ்வறஸ்ரார தியானம்Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

ஸ்வறஸ்ரார தியானம்

(நீடிக்கும் காலம் : 30 நிமிடங்கள்)

(ஒலிநாடாவில் மென்மையான இசை போடப்படுகிறது)

நிமிர்ந்து அமர்ந்து, கண்களை மூடிக் கொள்ளுங்கள்; உங்கள் ஸ்ஹஸ்ரார சக்கரத்தில் மனதை ஒருமுகப்படுத்துங்கள். உங்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களையும் மறந்து விடுங்கள். உங்கள் உச்சியில் இருக்கும் மையத்தில் மனதை ஒருமுகப்படுத்தி, அங்கேயே தளர்வாக இருங்கள். புன்னகையுடனும், தளர்வாகவும் இருங்கள்.

உங்கள் முழு இருப்புத் தன்மையிலிருந்தும், இந்த உடலைக் கொடுத்ததற்காக, உங்கள் அன்னைக்கு உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள். உங்கள் அன்னையை நினைவில் வைத்து, உங்கள் முழு இருப்புத் தன்மையில் இருந்தும், நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களுக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்ததற்காகவும் மற்றும் தேவையானவற்றையெல்லாம் கொடுத்ததற்காகவும் உங்கள் தந்தைக்கு உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

நீங்கள் இந்த பூமிக்கு வந்த பொழுது, உங்களை வரவேற்று பெற்றுக்கொண்ட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

நீங்கள் பிறந்த மருத்துவமனை அல்லது வீட்டைக் கட்டிய அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

நீங்கள் குழந்தையாக இருந்தபொழுது, உங்களை கவனித்துக் கொண்ட அனைவருக்கும், உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களுடைய சிறுவயதில், உங்களது உணவிற்காகவும், உடைகளுக்காகவும், வாழ்க்கைக்காகவும் உழைத்த அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களுக்கு ஆரம்பக் கல்வியை அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் உங்களுடைய நன்றி யணர்வைக் கொடுங்கள்.

தங்களுடைய கள்ளங்கபடமற்ற தன்மையையும், மகிழ்ச்சி யையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், ஆனந்தமயமாகவும் ஆக்கிய, உங்களுடைய சிறுவயது நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களைப் போஷித்து வளர்த்ததற்காகவும், உங்கள் மீது அக்கறையுடன் கவனித்துக் கொண்டதற்காகவும், உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும், மற்ற உறவினர்களுக்கும், உங்களுடைய நன்றியுணா்வைக் கொடுங்கள். நீஙகள் தெரிந்தோ தெரியாமலோ அல்லது அறிந்தோ அறியாமலோ அவர்களை ஏதேனும் புண்படுத்தியிருக்கக் கூடும்; அதற்காக அவர்களிடம் மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தொழிற் கல்வியை அளித்தவர்களுக்கும், உங்கள் தொழிலில் நிலைத்து நிற்க உதவியவா்களுக்கும், உங்கள் சொந்தக் காலில் நிற்கும் தைரியத்தை அளித்தவர்களுக்கும், அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களுக்குத் தேவையானபொழுது பணத்தைக் கொடுத்து உதவிய அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களுக்குத் தேவையானபொழுது மருத்துவ உதவி யளித்து, உங்கள் ஆரோக்யத்தைக் கவனித்துக் கொண்ட, எல்லா மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் அன்பையும் பாதுகாப்பையும் அளிக்கும் உங்கள் மனைவி அல்லது கணவனுக்கு உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்கள் ஊக்கத்தையும் தரும் அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

நமது வாழ்க்கை முழுழுவதும் நமக்கு ஏதோ ஒரு வகையில் சேவை செய்யும் பாலைக் கொடுக்கும் பால்காரர், மளிகைக் கடைக்காரர், சலவைக்காரர், குப்பைகளை அள்ளுபவர், உங்களுடைய வாகன ஓட்டுனர் முதலிய நீங்கள் எப்பொழுதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ, அல்லது அறிந்தோ அறியாமலோ இவர்கள் யாரையேறைம் புண்படுத்தி யிருக்கக் கூடும் : அதற்காக அவர்கள் ஒவ்வொரு வரிடமும் மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்களை வலுவாகவும், மன்னிக்கும் தன்மையுடனும் ஆக்கியதற்காக, புண்படுத்தியவர்களுக்கும், உங்கள் நன்றியுணா்வைக் கொடுங்கள். அவர்களை நீங்கள் புண்படுத்தியிருக்கக்கூடும் ; அதற்காக அவர்களது மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு உடல் ரீதியாக, மனரீதியாக, சுமுக ரீதியாக, பொருளாதார ரீதியாக உதவிய அனைவருக்கும், உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் மனதில் இருத்தி, ஒவ்வொரு வருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள். இதற்கு உங்களுக்குத் தேவையான நேரக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உடலுக்கும், அதன் எல்லா உறுப்புகளுக்கும், ஒவ்வொன்றாக, உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள். உங்கள் மனதிற்கு, அதன் அற்புதமான செயல்பாட்டிற்காக, உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

இந்த அனைத்தையும், உங்கள் வாழ்க்கையில் சாத்திய மாக்கியதற்காக, கடவுளுக்கும், உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

இறுதியாக, பிரபஞ்ச சக்தியின் உருவமான, பிரபஞ்ச இருப்புத் தன்மையே ஸ்தூல வடிவில் இருக்கும் குரு நாதருக்கு உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

என்மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைத்ததற்காகவும், இந்த சில நாட்களில் என் வார்த்தைகளைக் கவனத்துடன் கேட்டதற்காகவும், உங்கள் அனைவருக்கும் என் நன்றி யுணர்வைச் சமர்ப்பிக்கிறேன்.

இப்பொழுது நீங்கள் கண்களைத் திறக்கலாம்; பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு, நன்றியுணர்வுடன் மலர்களை இந்த வெள்ளைத் துணியில் சமர்ப்பிக்கலாம்.

(கூடியிருக்கும் ஒவ்வொருவரும் வந்து நன்றியுணர்வுடன் மலர்களைச் சமாப்பிக்கிறார்கள்)

இப்பொழுது, ஆனர்த்த தரிசனம்.

ஆனந்தமாக இருங்கள்!