நாதமில்லா நாதம் (குந்த்ர சாஸ்திரம்)
முன்னுரை :
ஒரு மிகப்பெரிய பண்டிதா், ஆறு நாள் கதையாக அரிச்சந்திர புராணத்தை அழகாகக் கூறி முடித்தார். முடித்தபின் ஒரு பெருமிதத்துடன், தனக்கு முன்பாக அமாந்திருந்தவரைப் பார்த்து, "இந்தக் கதையிலிருந்து நீ என்ன தெரிந்து கொண்டாய்?" என்று கேட்டார். "மரணமே வந்தாலும் கூட நாம் சத்தியத்தைத்தான் பேச வேண்டும் எனத்தெரிந்து கொண்டேன்" என்று அந்த நபா் கூறினார்.
ஆஹா! அனைவருமே சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளனர் என மேலும் பெருமிதப்பட்டு, அருகில் இருந்த மற்றொருவரைப் பார்த்து, "நீ என்ன தெரிந்து கொண்டாய்?" என்று கேட்டார்.
"ஒரு அவசரம், ஆபத்து என்றால் மனைவியை விற்றால் கூடத் தவறில்லை என்று தெரிந்து கொண்டேன்," எனச் சொன்னார் அந்த மற்றொரு நபர்!
ஒரே நீகழ்ச்சி, ஒரே கதை, ஒரே சொற்பொழிவு. ஆனால் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விளக்கத்தில் புரிந்து கொள்கிறார்கள்!
அரிச்சந்திரனின் கதையிலிருந்து சத்தியத்தைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்ற உண்மையையும் கற்றுக்கொள்ளலாம். அவசரத்திற்கு மனைவியை விற்கவும் கூட, செய்யலாம் என்ற உண்மையையும் கற்றுக்கொள்ளலாம்.
எந்த ஒரு செய்தியையும், நீத்யம் என்ற கோணத்திலிருந்தும் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். அநீத்யம் என்ற கோணத்திலிருந்தும் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்
பார்க்கும் கோணம் மாறினால் கோளும் மாறும் என்று 5000 வருடங்களுக்கு முன்பே இதன் சாரத்தை, ஆத்திரமாக சிவபெருமான் அளித்தது இன்றைய மனிதனுக்கு மட்டுமல்ல, இனி வரப்போகும் சந்ததியருக்குமான தீர்வை அளிப்பதாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனுடைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி சிவவருமான் அளித்துள்ள இந்த ஆத்திரம் ஒன்றே பலரைத் துன்பமயமான வாழ்க்கைச் சக்கரத்தீல் தேருந்து விடுவித்துள்ளது.
உங்களையும் இது நீச்சயம் விடுவிக்கும்.
இப்படிக்கு
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
தியானபீட சேரிடபுள் முரஸ்ட்
முகவுறை :
முடிவு புரிந்து கொள்ளப்படுவதற்கல்ல ... உணர்ந்து கொள்ளப்படுவதற்கு.
உண்மையிலேயே நாம் காணும் உலகம் இருக்கின்றதா? இல்லையா? இது கனவா? நீனைவா? என்று உங்களுக்குள் ஆழ்ந்து பயடிமன்றம் ருடக்குங்கள்.
தேன் தீர்ப்பினைத் தெரிந்து கொள்வதற்காக அல்ல. இதன் 'தீர்ப்பினை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது! உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும்!" என்பதைத் தெரிந்து கொள்வதற்காக.
இந்தக் கருத்துக்கள் நமக்குள் மூழ்கும் போது, ஏற்கனவே ஆழமாக வேளுன்றியிருக்கும் அஞ்ஞானக் கருத்துக்களின் ஆணிவேற் அசையத் துவங்கும். அப்போது துன்பத்தைத் தரும் மன அமைப்பு நம் மையத்தைவிட்டே மறைந்து விடும். துன்ப எண்ணங்களின் பிறப்பிடத்தையே காணாமல் செய்துவிடும்.
பாஸ்பரளை ஒரு மரப்பெட்டியில் வைத்தால் அது அந்த மரப்பெட்டியையும் எரித்து விடும். கற்பூரம், பஞ்சு ஆகியவற்றையும் அதன் அருகில் வைத்தால் எரித்து விடும். பாஸ்பரளை எந்த இடத்தில் வைத்தாலும், அதைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் பாஸ்பரஸ் எரித்து விடும்!
அதைப்போன்று தான், இந்த ஞானக்கருத்துக்கள் நமக்குள் வைத்து பூட்டப்படும் போது, நம்மைச்சுற்றி இருக்கும் அஞ்ஞான அழுக்குகளை எல்லாம் எரித்து விடும்! சிரத்தையுடன் படிப்பதோடு நீறுத்தி விடாமல் 18 நீத ரூான க் க ருத் து க் க ளை நடைமுறைப்படுத்துங்கள். வாழ்வே பொன்னாகும்.
நீத்யம், தியானம், ஆனந்தம் என்று முன்று படிகள் இருக்கின்றன.
இப்போது நீங்கள் இருக்கின்ற சாதாரண மன நீலையை விட அப்பாற்பட்ட ஒரு ஆனந்தமான நிலை உண்டு. நீங்கள் அதை அடைய முடியும் என்ற தேடுதலை உருவாக்குவது தான் முதல் படி. அதைத்தான் நீத்யம் செய்கின்றது.
தந்திர சாஸ் திரத்தின் தத்திரங்களை யும், மொழிபெயர்ப்புகளையும் நாம் தெரிந்து கொள்ளத் துவங்குவதற்கு முன், ஒரு சிறிய விஷயம். இவைகள் உபதேசங்கள் அல்ல!
உலகத்திலேயே அனைவரும் செய்ய விரும்புவதும், யாருமே வாங்க விரும்பாதது என்பதும் உபதேசம் ஒன்றுதான். ஆனால், இவைகள் தந்திரங்கள் (Techniques), யுக்தீகள், நுட்ப முறைகள்!
இந்தக் கருத்துக்களை சாதாரணமாகக் கேட்டு அவைகளை உங்களுக்குள் வைத்து வாதப்பிரதீவாதங்கள் செய்தால் அதுவே போதுமானது! வேறு ஒன்றும் தேவையில்லை.
இந்த தத்திரத்தில் நாம் நம் மன அமைப்பு எவ்வாறு இயங்குகின்றது என்று காணப்போகின்றோம்.
நாமே இந்தச் ஆழ்நிலைகளை வாழ்க்கையில் சந்தித்திருப்போம்.
சில நேரங்களில், யாராவது நம்முடைய நெருங்கிய நண்பர்களோ, உறவினா்களோ மரணம் அடைந்து விட்டால் நமக்கும் வாழ்க்கை மீது வெறுப்பு வந்து விடும்! ஐயோ! என்றைக்காவது ஒரு நாள் நமக்கும் இப்படித்தானே ஆகப்போகிறது! வாம்க்கையே இவ்வளவுதானே! என்ற ஒரு வெறுமை தோன்றி விடும். ஆனால் அந்த வெறுமை எவ்வளவு நேரம் நீடிக்கும்
என்றால், அதிகபட்சமாக அவருடைய ஈமக்கிரியைகள் முடிந்து நாம் தலைக்குக் குளிக்கின்ற வரை தான்! அதற்கு மேல் ஒன்றும் கிடையாது.
"ஊரெல்லாம் கூடி உரக்க அமுதிட்டு பேரினை நீக்கிப் பிண்மென்று பெயரிட்டு கூரையாங் காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தனரோ!"
என்று திருமூலா் மிக அழகாகக் கூறியுள்ளார்.
ஊரில் இருப்பவர் அனைவரும் கூடி உரக்க அழுவார்கள். பெயரை நீக்கிப் பிணம் என்று பெயரிடுவார்கள். சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று சுட்டிடுவார்கள். பின் நீரில் தலை மூழ்கி ரினைவை அழித்து விடுவார்கள்.
குளத்தில் மூழ்கிக் குளித்து எழுந்தவுடன் அந்த நினைப்பு ஒழிந்து போய்விடும். அதன் பின் அந்த வெறுமை மறைந்து போகும். மறுபடியும் நாம், நம் வாழ்க்கையில் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம்!
சில நேரங்களில் இந்த மரணத்தினால் ஏற்படுகின்ற வெறுமை நமக்குள் ஒரு தெளிவினை உருவாக்கும் வாய்ப்பு உண்டு, துக்கம் கூட நமக்கு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத்தரும் குருவாக, ஆசிரியனாக மாற முடியும்! தெளிந்த மன அமைப்பு இருந்தால், துக்கம் கூட ஒரு தெளிவான மன அமைப்பாக மாற முடியும்!
சண்டி ஹோம மந்திரத்தில், "அனைய ஸ்வாயாய நமஹ" என்ற மந்தீரம் உள்ளது. "அனைய ஸ்வாயம்" என்றால் ஏழ்மையை வழிபடுகின்றேன் என்று அர்த்தம். ஐஸ்வாயத்தை வழிபட்டால் நல்லது. ஏன் ஏழ்மையை வழிபட வேண்டும்?
சில நேரங்களில், ஏழ்மை கூட மீண்டும், மீண்டும் நம்மை இறைவனை நினைக்கத் தூண்டி, நம்மை ஞானத்தெளிவை நோக்கி அழைத்துச்செல்லும்.
உங்களுக்குத் தெரியுமா?
"உங்களைத் துன்புறுத்துவதற்கு வெளியிலிருந்து ஒருவர் கனியாகத் தேவையே இல்லை. துக்கத்தை உருவாக்கும் மன அமைப்பு உங்களுக்குள் இருக்குமானால் அது ஒன்றே போதும். அந்த மன அமைப்பை மாற்றினால் வெளியிலிருந்து ஒருவர் துன்பத்தைத் தந்தாலும், அதைத் துன்பமாக எடுத்துக்கொள்ளாமல் அதையே இன்பமாகப் பார்க்கும் மனத்தெளிவைப் பெறுவீர்கள்."
உதாரணத்திற்கு ...
நாம் காண்பதெல்லாம் உண்மையா? இல்லையா? என்ற சந்தேகம் ஏற்பட்டாலே போதும்! இந்த உலகம் கனவா? அல்லது நினைவா? என்ற தெளிவான முடிவிற்குக்கூட வராமல் சந்தேகம் தோன்றினாலே போதுமானது! அந்த சந்தேகத்தை ஆதரிக்கின்ற விவாதம் அனைத்தும் நம் மனதில் வர ஆரம்பித்துவிடும்!
ஆசிரமத்தில் நான் இருக்கும் போது ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். "ஆசிரமத்தில் நான்கு நாட்கள் நான் தங்கிக் கொள்ளட்டுமா?" என்று என்னிடம் கேட்டார்.
"சரி, தாங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறினேன்.
அடுத்த வினாடியே, "இல்லை சுவாமி! எனக்கு விட்டில் வேலை இருக்கின்றது. நான் அங்கே போக வேண்டும்! இங்கே போக வேண்டும்! அந்த இடத்தில் நீலைய வேலை உள்ளது!" என்று அவர் கிளம்பிச்செல்வதற்கான விவாதங்களையெல்லாம் கூற ஆரம்பித்தார்.
"அப்படியா ஐயா? சரி. பரவாயில்லை! நீங்கள் கிளம்பலாம்," என்று நான் தெரிவித்தேன்.
"நீங்கள் கிளம்பலாம்," என்று நான் சொன்ன அடுத்த விநாடியிலேயே, "இல்லை. இல்லை சுவாமி! எனக்கு இங்கு தங்கினால்தான் மிகவும் நன்றாய் இருக்கும் போல் தெரிகிறது! உங்களிடம் ஹீலிங் கூட வாங்கிக்கொள்ளலாம். எனவே நான் இங்கு தங்குகின்றேன்" என்று
சொன்னார். அப்போது "நல்லது! உங்கள் விருப்பப்படியே தாராளமாகத் தங்கிக் கொள்ளுங்கள்" என்று நான் கூறியவுடன் மறுபடியும், "இல்லை சுவாமி! எனக்கு விட்டில் வேலை இருக்கின்றது" என்று கூற ஆரம்பித்தார்.
இதைப்போல்தான் நாம் என்ன சொல்கின்றோமோ அதற்கு எதிரான எல்லா விவாதத்தையும் நம் மனம் தயார் செய்துவிடும். ஆசிரமத்தில், அவர் தங்க வேண்டாம் என்று உறுதியான முடிவு எடுத்திருந்தால் என்னிடம் கேட்கவே மாட்டார். "சுவாமி! நான் சென்று வருகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றிருப்பார். ஆனால், அவர் குழப்பத்தில் இருப்பதால்தான் என்னிடம் இது போன்ற கேள்விகளைக் கேட்கின்றார்! நான் எந்த முடிவு கூறினாலும் அதற்கு உரிய எதிர் முடிவிற்கான விவாதங்களை எடுத்து வைக்கின்றார்.
எப்போதுமே ஒரு முடிவு உங்களுக்கு அளிக்கப்பட்டால், அதற்கு எதிரான அனைத்து விவாதங்களையும் எடுத்து வைப்பது தான் நம்முடைய மன அமைப்பு.
"இக்கரைக்கு, அக்கரை பச்சை"
இது நம் இயற்கையான சுபாவம். அதனால்தான் எந்த ஞானக்கருத்துகளுமே ஒரு முடிவாக உங்களுக்கு வழங்கப்பட்டால், அதற்குண்டான எதிர்த்தரப்பு விவாதம் அனைத்தையும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்!
அதனால் தான் அதை ஒரு முடிவாக வழங்காமல் உங்களுக்குள் நீங்களே ஆராயும் ஒரு ஆராய்ச்சிக் கருத்தாகக் கொடுத்தேன்!
இந்தக் கருத்துக்கள் உங்களுக்குள் ஊடுருவுவதற்கு அனுமதியுங்கள். இருதரப்பு வாதாங்களும் உங்களுக்குள் மீண்டும், மீண்டும் நடைபெறட்டும். இந்த இரு தரப்பு வாதங்கள் ஏற்பட்டு, சந்தேகம் கிளம்பும் போதே, நமக்குள் இயற்கையிலேயே ஒரு ஆழ்ந்த தேடுதல் உருவாகும். அந்தத் தேடுதலை உருவாக்குவது தான் இதயத்தின் பணியாகும்!
அதே போல், வியாதி கூட இறைவனை நினைக்கச்செய்து நம்மை ஞானத்தெளிவிற்குக் கொண்டு செல்லும்.
ஒரு பக்தர், அவருக்கிருந்த தோல் வியாதிக்காக (சொரியாஸிஸ்) என்னைப்பார்க்க வந்திருந்தார். நான்கைந்து நாள்கள், நான் அவருக்கு ஹீலிங் செய்தேன். அவருக்கு குணமாகிக்கொண்டே வந்தது. இதற்கிடையில் நம்முடைய தீயான முகாம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் என்னிடம் வந்து, "சுவாமி! எனக்கிருக்கும் இந்த வியாதி சரியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை! எனக்கு இந்த வியாதி வராமலிருந்திருந்தால், ஒரு வேளை நான் உங்களைத் தவறவிட்டுடிருப்பேன்! வியாதி இருந்ததால்தான் உங்களைத் தேடி வந்தேன்! அதனால் ஒரு விதத்தில் இந்த வியாதி எனக்கு நல்லது தான் செய்துள்ளது!" என்று தெரிவித்தார்.
எனவே ஒரு விதத்தில் நம் ஏழ்மையும், வியாதியும், துக்கமும் கூட நமக்கு சரியான விஷயத்தைக் கற்றுத்தரும்!
வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் குருவாகவும், இறைவனின் தூதுவனாகவும் ஏற்றுக் கொண்டு, நம்மை நாமே வளா்த்துக்கொண்டால் அனைத்து நிகழ்ச்சிகளையும் நாம் எதிரியாகவே நினைத்து. அதை எதிர்த்துச் சண்டையிட்டு நம்முடைய சக்தியையெல்லாம் இழக்காமல், நம் வாழ்வை நமக்குள் ஒரு பெரிய அமைதியையும் மாற்றத்தையும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பாகக் கொள்ளலாம். இதற்கு மேல் நம்மை வருத்தி, வாழ்க்கையை அழிக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குத் தேவையான அளவிற்கு உழைப்போம்! உழைத்து வருவதை வைத்து ஆனந்தமாக வாழ்வோம்!!
இதைச் செய்தே ஆக வேண்டும், அதைச் செய்தே ஆக வேண்டும் என்ற அநாவசியமான துக்கச் சுமையை, மன அழுத்தத்தை, மன உளைச்சலை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை என்ற தெளிவும் சில நேரத்தில் நம்மிடையே ஏற்படும். அந்தத் தெளிவு வரும் போதே, அது அப்படியே நமக்குள் இருந்து விட்டால் நல்லது.
ஆனால் மனம் இருப்பதில்லை. உடனே நம் மனம் என்ன செய்யும் என்றால், இப்படியெல்லாம் நினைத்து சும்மா இருந்தால் பக்கத்து வீட்டுக்காரர் போன்று கார் வாங்க முடியாது என்று நினைக்க ஆரம்பித்து விடும்.
எப்போது, இது போல் பக்கத்து வீட்டுக்காரர் போன்று கார் வாங்க முடியாதே! என்ற எண்ணம் வந்ததோ, உடனே அந்தப் பழைய வேகம் நமக்குள் ஆரம்பித்து விடும். இவ்வளவு நேரம் நடந்த வேதாந்த விசாரமும் காணாமல் போய்விடும்!
இன்னும் சில நேரங்களில் நமக்குள்ளே ஒரு அமைதியும், ஆனந்தமும், ஒரு ஆழமும், இனிமையும் வர ஆரம்பிக்கும்! ஆனால் நம் மனம் அந்த அமைதியையும், ஆனந்தத்தையும் நிலைத்திருக்க விடுவதில்லை! ஏதாவது ஒரு எண்ணம் தோன்றி உடனே அதிலிருந்து நம்மை வெளியே எடுத்து விட்டுவிடும்.
இதைத்தான் நாமே நரகமாக்கிக் கொள்வது என்கின்றோம்.
நம் வாழ்வில் நல்ல நிகழ்ச்சி, கெட்ட நீகழ்ச்சி என்பது நம் அனைவருக்குமே நடைபெறக்கூடியதுதான். யாராகயிருந்தாலும் இதில் நடக்காதது என்று எதுவுமே கிடையாது. ஆனால், அந்த நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்டு, நம் வாழ்க்கையை மேம்படுத்தி, ஆனந்த மயமாக்கி ஒரு சொர்க்க நிலையினை.
ஞான நிலையினை அடைவதா? அல்லது அதையே நாம் நரகமாக்கிக் கொள்வதா? அதே நிகழ்ச்சியை நாம் எதிரியாகக் கருதி, வாழ்க்கையின் போக்கினையும் எதிரியாகக் கருதி மீண்டும். மீண்டும் அதை எதிர்த்து. நம் வாழ்க்கையினைத் துக்கமயமாக ஆக்கிக் கொள்வதா?
வாழ்க்கையை எதிர்கொண்டு. ஒவ்வொரு நிகழ்ச்சியில் இருந்தும் கற்றுக்கொண்டு, நம் வாழ்க்கையினை மேம்படுத்தும் மன அமைப்புதான் "நீத்யம்" என்பதாகும்.
எது நிலையானது? எது நிலையற்றது?
சில நேரங்களில் மரணத்தைப்பற்றி நமக்கே ஒரு எண்ணம் வரலாம். இந்த உலகம் நிலையற்றது என்ற ஒரு தெளிவு வரலாம். மொத்தமும் அழியப்போகின்றது. மொத்தமும் உண்மை இல்லை. நமக்கு உள்ளே செல்லும் சுவாசம் வெளியில் வரவில்லையெனில், எதற்காகவெல்லாம் நாம் ஒழயாடி வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டோமோ அது அனைத்துமே இல்லாமல் போய்விடும். வாழ்க்கையே ஒன்றும்
நம் வாழ்வில் நல்ல நீகழ்ச்சி, கைட்ட நீகழ்ச்சி என்பது நம் அனைவருக்குமே நடைபெறக்கூடியது தான். இதில் நடக்காதது என்று எதுவுமே கிடையாது. ஆனால், அந்த நீகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்டு, நம் வாழ்க்கையை மேம்படுத்தி, ஆனந்த மயமாக்கி ஒரு சொர்க்க நிலையினை, ஞான நிலையினை அடைவதா அல்லது அதையே நாம் நரகமாக்கிக் கொள்வதா, அதே நீகழ்ச்சியை நாம் எதிரியாகக் கருதி, வாழ்க்கையின் போக்கினையும் எதிரியாகக் கருதி மீண்டும், மீண்டும் அதை எதிர்த்து நம் வாழ்க்கையினை துக்கமயமாக ஆக்கிக் கொள்வதா?
நிலையில்லாதது தான் என்ற எண்ணாங்களெல்லாம் நம்மில் தோன்றும். இந்த எண்ணம் தோன்றும் போது. நாம் எவ்வாறு அதை அணுகுகின்றோம் என்பது முக்கியப் பங்கு வகுக்கின்றது. அனுபவம் என்ற வார்த்தைக்கு அழகான விளக்கம் உண்டு.
எத்தனை நீகழ்ச்சிகள் நம் வாழ்க்கையில் நடைபெற்றுள்ளது என்பதை வைத்து நீங்கள் அனுபவசாலி என்று கூற முடியாது! அந்த நீகழ்ச்சிகளில் இருந்து நாம் எவ்வளவு கற்றுக்கொண்டோம் என்பதை வைத்துத்தான் "அனுபவ சாலி" என்று கூற மூடியும்!
வாழ்க்கையை, குருவாக ஏற்றவர்கள்தான் அனுபவசாலிகள்,
"சமஸ் சத்ரளச மித்ரேஸ ஸ்மோ மானவ மான யோகவறா ப்ரவற்றன ப்ரிவிரவரி தக்வத் இதி ஞானாத்ப சுகிபவே!"
இது அற்புதமான சூத்திரம்.
வாழ்க்கையை, குருவாக எற்றவர்கள்தான் அனுபவசாலிகள்
நண்பனிடமும், எதிரியிடமும், துக்கத்திலும், சுகத்திலும் சமமாக இருத்தல்! மிகவும் ஆழமான கருத்து. மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது. சமமாக இருத்தல் என்ற கருத்தினை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம்!
மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி எருமை மாடு கூட சமமாகத்தான் இருக்கும். ஆனால் அதை சமத்துவம் என்று சொல்ல முடியாது. அது உணர்வின்மை (Insensitivity), முழு உணர்வினால் ஏற்படக்கூடிய சமத்துவம் தான் மிகவும் சரியானது.
ச த் வம்,ரணஸ்,தமஸ் என்று சமத்துவத்திற்கு மூன்று முக்கிய குணங்கள் தேருக்கின்றது. எதையும் செய்யாமல் மந்தத்தன்மையாக, சோம்பேறித்தனமாக இருப்பதுதான் தமஸ் எனப்படுகிறது.
இதைச் செய்வது, அதைச்செய்வது என்று ஒய்வில்லாமல் பரபரப்பாக, இங்கும் அங்குமாக இயங்கிக் கொண்டிருப்பது ரஜஸ் எனப்படுகிறது.
எல்லாவற்றையும் முழுமையாகச் செய்து அதற்கிடையில் ஒரு சாந்நீத்யத்தையும், அமைதீயினையும் நமக்குள் வைத்திருப்பது சத்வம் எனப்படுகிறது.
எந்தச் செயலானாலும், எந்த வேலையானாலும் பந்தப்படுத்தாமல் இருந்து, சோம்பேறித்தனம் எதுவும் இன்றி அனைத்துச் செயல்களிலும், அனைத்து வேலைகளிலும் முழுமையாக ஆழ்ந்து ஈடுபடுவதுதான் 'சத்வ குணம்' ஆகும்.
சத்வ குணமும், தமோகுணமும் ஒரே மாதிரி இருப்பது போல் தோன்றும். அதாவது மந்தத்தன்மையும், தியானத்தன்மையும் ஒரே மாதிரி தோற்றமளிக்கும்.
ஆனால் தியானத் தன்மையில் மனம் அமைதியாக இருக்கும், உடல் இயாங்கும்.
மந்தத்தன்மையில் உடல் அமைதியாக இருக்கும். மனம் இயங்கிக் கொண்டிருக்கும்.
உணர்வின்மைக்கும் (Insensitivity), முழுஉணர்விற்கும் (Full Sensitivity) முழுமையான வித்தியாசம் இருக்கின்றது.
எந்த இடத்தில் நம் வாழ்க்கையின் அடிப்படையையே நாம் இழக்கின்றோமென்றால், நம் வாழ்க்கையில் எந்த நிகழ்ச்சியைப் பற்றியும் நமக்கென்று ஒரு எதிர்பார்ப்பினையும், ஒரு கருத்தினையும் உருவாக்கி வைத்து விடுகின்றோம்! அதாவது எந்த ஒரு நபரானாலும், சூழ்நிலையானாலும், நிகழ்ச்சியானாலும் நமக்குள் நாமே ஒரு கருத்தினை உருவாக்கிக்கொள்வோம்! அந்தக் கருத்திற்கு ஒத்து வந்தால் மட்டுமே அந்த நபரையும், சூழ்நிலையையும், நிகழ்ச்சியையும் நாம் ஏற்றுக்கொள்வோம். நாம் உருவாக்கி வைத்துள்ள கருத்துடன் ஒத்துவரவில்லை எனில் அந்த நிகழ்ச்சியையும், ஆழ்நிலையையும், நபரையும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை! அவற்றை நம் மனதாலும் மதிப்பதில்லை!
நாம் எப்படி மற்றவர்களால் நடத்தப்படவேண்டும் என்று ஒரு வரையரையினை உருவாக்கிக்கொண்டு, அந்த வரையரையின்படி நாம் நடத்தப்படவேண்டும் என்று நினைக்கின்றோம்! எந்த இடத்திற்குச் சென்றாலும், நம் வரையறைக்கு மாறாக ஏதாவது ஒரு சுணக்கம் அல்லது பிணக்கு ஏற்பட்டால், உடனே நாம் மதிக்கப்படவில்லை, நாம் நினைத்தது போன்று நடக்கவில்லை என்று ஏதாவது ஒரு கருத்தினை நமக்குள் உருவாக்க ஆரம்பித்து விடுகின்றோம்.
"மரியாதை" என்ற அளவுகோலைக்கூட நாம் ஒரே அளவில் வைப்பதில்லை. இடத்திற்கேற்றாற்போல் நம் மரியாதையின் அளவுகோலை பெரிதாக்கிக்கொண்டே இருப்போம். ஒரு சில இடங்களில் ஓர் அளவு மரியாதையை எதிர்பார்ப்போம். நமக்கு அந்த அளவிற்கு மரியாதை கிடைத்து விட்டால் அடுத்த முறை இதைவிட அதிகமாக எதிர்பார்ப்போம். அதற்கடுத்த முறையில் அதைவிட அதிகமாக எதிர்பார்ப்போம்.
அதாவது, நமக்கு யாராவது முதல்முறை மரியாதை கொடுக்கும் போது தான் அதை மரியாதை என நினைப்போம்! இரண்டாவது முறையில் அந்த மரியாதையை நம்முடைய பிறப்புரிமை என்று நினைக்க ஆரம்பித்து விடுவோம். நம்முடைய பிறப்புரிமை என்று நினைக்க ஆரம்பித்தவுடன் அடுத்த முறை அதைவிட அதிகமாக எதிர்பார்ப்போம்!
முதல்மாதம் சம்பளம் வாங்கும் போது, அந்த வேலை கிடைத்த திருப்தி நம்மிடம் இருக்கும். ஆனால் இரண்டாவது மாத சம்பளம் வாங்கும் போதே அதை நம் பிறப்புரிமை என்று நினைத்து, இதை விட அதிகமாக கொடுக்க மாட்டார்களா? என்று எண்ணிக்கொண்டிருப்போம்.
நாம் எப்படி மற்றவர்களால் நடத்தப்படவேண்டும் என்று ஒரு வரையறையினை உருவாக்கிக்கொண்டு, அந்த வரையறையின்படி நாம் நடத்தப்படவேண்டும் என்று நினைக்கின்றோம்! எந்த இடத்திற்குச் சென்றாலும், நம் வரையறைக்கு மாறாக ஏதாவது ஒரு சுணக்கம் அல்லது பிணக்கு ஏற்பட்டால், உடனே நாம் மதிக்கப்படவில்லை, நாம் நினைத்தது போன்று நடக்கவில்லை என்று ஏதாவது ஒரு கருத்தினை நமக்குள் உருவாக்க ஆரம்பித்து விடுகின்றோம்!
மாதம் 2000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்து 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் வேலைக்குச் சென்றாலும் கூட, அந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் ஒரு மாதம் வரைதான் இருக்கும். அடுத்த மாதம் அதை நம் பிறப்புரிமை என்று எண்ண ஆரம்பித்து விடுவோம்!
"ததக்கிம், ததக்கிம், ததக்கிம், ததக்கிம்" என்று ஒரு அழகான ஸ்தோத்திரம்.
இதன் அர்த்தம் என்னவென்றால்,
அடுத்தென்ன, அடுத்தென்ன, அடுத்தென்ன, அடுத்தென்ன என்பதாகும்.
எது வந்தாலும், என்ன நடந்தாலும் நம் மனமானது அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும்.
கையிலிருக்கும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்போம். ஏதோ ஒரு நல்ல நேரம் அமைந்து ஒரு ஃபியட் கார் வாங்கிவிடுவோம்! அந்த பியட் காரில் உடகாரும் போதே, நம் மனம் மாருதி எஸ்டீம் பற்றி நினைக்கும், மாருதி எஸ்டீமில் உடகாரும் போது குவாலினைப் பற்றி நினைக்கும். குவாலிஸ் வந்ததென்றால் பென்ஸ் காரைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விடுவோம்!
அடுத்து என்ன! அடுத்து என்ன! என்று வளர்ந்து செல்வதில் தவறில்லைதான். ஆனால், இந்த வளரும் வேகத்தில், இருப்பதை அனுபவிக்க மறந்துவிடுவதுதான் பெரிய பிரச்சனை. இதனால் அனுபவிக்கும் தன்மை இல்லாது போய்விடுகின்றது. நமக்குள் வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மை அழிந்து போய்விடுகிறது.
முதலில் நாம் என்ன நினைக்கின்றோம்?
படிக்கும் காலத்தில் வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
வேலை கிடைத்தவுடன், திருமணம் ஆகிவிட்டால் வாழ்க்கை ஆனந்தமாகி விடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
திருமணம் ஆனவுடன், ஒரு வீடு கட்டிவிட்டால் வாழ்க்கை ஆனந்தமாகி விடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
வீடு கட்டி முடித்தவுடன் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
குழந்தை பிறந்தவுடன், அவன் படித்து முடித்தும் வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
அவன் படித்து முடித்தவுடன், அவனுக்கு திருமணம் ஆனதும் வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
அவனுக்குத் திருமணமாகியவுடன், அதன் பின் நம் வாழ்க்கையே ஆனந்தமாகிவிடும்! நன்றாக அனுபவிக்கலாம் என்று தான் நம் மனம் நினைத்துக்கொண்டே செல்லும்.
ஆனால், திருமணமாகி முடிக்கும் போது நம் வாழ்க்கையை அனுபவிக்கின்ற தன்மையே நமக்குள் இல்லாமல் போய்விடுகின்றது.
"அடுத்து என்ன! அடுத்து என்ன!" என்று வளர்ந்து செல்வதில் தவறில்லைதான். ஆனால், இந்த வளரும் வேகத்தில், இருப்பதை அனுபவிக்க மறந்துவிடுவதுதான் பெரிய பிரச்சினை. இதனால் அனுபவிக்கும் தன்மை இல்லாது போய்விடுகின்றது. நமக்குள் வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மை அழிந்து போய்விடுகிறது.
நாம் ஒரு மிகப்பெரிய நினைவுகளின் சுமையினை சுமந்து கொண்டு, நாம் வாழ்ந்த மன அமைப்பினை நமக்குள் வைத்துக் கொண்டிருக்கும் போது வெளியுலகில் கிடைக்கும் என்ற ஒன்றைத்தான் நாம் கவனித்திருப்போம்.
வெளி உலகத்தில் நாம் அனுபவிக்க வேண்டிய நம் உடைமைகளையும், பொருட்களையும் உருவாக்குவதில் தவறில்லை. ஆனால், அதை உருவாக்குகின்ற வேகத்தில் அனுபவிக்கும் தன்மையை நாம் இழந்து விடுகின்றோம்.
ஆயிரம் இனிப்பினை நம் முன்பு வைத்தாலும், ருசிக்கும் தன்மை நாக்கில் இல்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது! அதைப் போன்று நம் வாழ்க்கையில் எவ்வளவுதான் சொத்தும், சுகமும், ஆடம்பரமும் வந்தாலும் கூட, அதை அனுபவிக்கும் நிதானமும், அமைதியும், ஆனந்தமும் நம் மன அமைப்பில் இல்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது! ஏனெனில் நம் மனதை வைத்துதான் நம் வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும்.
ஆயிரம் இனிப்பினை நம் முன்பு வைத்தாலும், ருசிக்கும் தன்மை நாக்கில் இல்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது! அதைப் போன்று நம் வாழ்க்கையில் எவ்வளவுதான் சொத்தும், சுகமும், ஆடம்பரமும் வந்தாலும் கூட, அதை அனுபவிக்கும் நிதானமும், அமைதியும், ஆனந்தமும் நம் மன அமைப்பில் இல்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது!. ஏனெனில் நம் மனதை வைத்துதான் நம் வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும்.
நம் மனதின் பக்குவம்தான், நாம் அனுபவிக்கும் அனுபவத்தின் சாரம். பெரும்பாலான நேரங்களில் நாம் நம் கண்களை விற்றுத்தான் ஓவியத்தினை வாங்குகின்றோம். தூக்கத்தினை விற்றுத்தான் படுக்கையை வாங்குகிறோம்! கால்களை விற்றுத்தான் நாட்டியம் கற்றுக்கொள்கின்றோம்.
வெளி உலகிலிருந்து, நம் வாழ்விற்குத் தேவையான வீட்டையோ, வசதிகளையோ, பொருட்களையோ சம்பாதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சம்பாதிக்கும் போது நாம் வாழ்கின்ற எண்ண ஓட்டத்தில், மன அமைப்பில்தான் தவறு இருக்கின்றது. சரியான மன அமைப்பினை நாம் உருவாக்காமல் விடும்போதுதான் இயற்கையிலேயே வாழ்வினை அனுபவிக்கும் தன்மையினை நாம் இழந்துவிடுகின்றோம்!
இவ்வாறு வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை இழக்காமல், வாழ்க்கையை வளமாக்குவதைத்தான் "நீத்யம்" என்று கூற விரும்புகின்றேன்!
ஒரு ஜென் கதை:
ஏதோ ஒரு வதந்தியினால், ஒரு தவறினால் ஜென் ஞானி ஒருவருக்கு, அந்த நாட்டின் அரசன், அந்த ஞானியைத் தூக்கிலிடுமாறு உத்தரவிடுகிறான். ஞானிகளைப் பற்றி வதந்தி பரப்புவது மிகவும் சுலபம். ஏனெனில் ஞானிகள் அதிகம் மறுத்துப் பேசமாட்டார்கள். இதன் காரணமாக ஏதோ ஒரு ஆழ்நிலையில் அரசன் இவ்வாறு உத்தரவிட்டுவிட்டான்.
ஆனாலும், தினசரி வேலைகளை எந்தவித சலனமுமின்றி ஞானி செய்து கொண்டிருந்தார். சீடன் ஒருவன் ஞானியிடம் வந்து, "சுவாமி! அரசா உங்களைத் தூக்கிலிட உத்தரவு போட்டுவிட்டாரே! நாளைக் காலையில் நீங்கள் சாகப்போகிறீர்களே! உங்களுக்குத் துக்கமாக இல்லையா?" என்று கேட்டான்.
அதற்கு ஞானி, "நான் இந்தக் கணத்தில், இந்த விநாடியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அடுத்த விநாடி என்பதே எனக்கு மிகவும் அதிகம். 24 மணிநேரம் என்பது மிக மிக அதிகம். 24 மணி நேரம் தாண்டி யோசிக்கும் அளவு எனக்கு நேரமில்லை" என்று பதில் சொன்னார். ஆழ்ந்து நோக்கினால், இந்தக்கணம், இந்த விநாடி, இதை அனுபவிப்பதற்கே எனக்கு நேரமில்லை எனும் கூற்று மிகவும் அற்புதமானதாகத் தெரியும்.
பொதுவாகவே நாம், நாளை நன்றாகயிருப்போம்! என்றே நம் மனத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்போம். இதைத்தான் ஆனந்தத்தைத் தள்ளிப்போடுதல் என்று சொல்வார்கள்.
ஆனந்தமும், அமைதியும் நம்முடைய கதவைத் தட்டிக் கொண்டேதான் இருக்கின்றது. ஆனால், நாம் கதவைத் திறக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கின்றோம். ஏனெனனில் நம் மன அமைப்பு அப்படி இருக்கிறது.
அமைதியைக் கொடுக்கின்ற, ஆனந்தத்தை கொடுக்கின்ற எந்த விஷயமாவது நடந்தால் நாம் என்ன செய்வோம்? ஓவேறா! இது இப்படித்தான் என்று சாதாரணமாக நினைத்துக்கொள்வோம். ஆனால், துக்கத்தைக் கொடுக்கின்ற விஷயம் நடக்கும் போது மீண்டும், மீண்டும் அதை உருப்போட்டுக்கொண்டே இருப்போம்.
ஆனந்தமும், அமைதியும் நம்முடைய கதவைத் தட்டிக் கொண்டேதான் இருக்கின்றது. ஆனால், நாம் கதவைத் திறக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கின்றோம். ஏனெனனில் நம் மன அமைப்பு அப்படி இருக்கிறது.
யாராவது ஒருவர் நம்மைப் புகழ்ந்தாலோ அல்லது மரியாதை கொடுத்தாலோ மீண்டும், மீண்டும் அதை நாம் நினைப்பதில்லை! ஆனால் யாராவது ஒருவர் நம்மை அவமரியாதை செய்தாலோ, இகழ்ந்தாலோ அந்த வார்த்தைகள் நமக்குள் மூன்று நாட்களுக்குக் கூட ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அதாவது, நம் வீட்டு டி.வி.யை எந்த சேனலுக்கு ட்யூன் செய்கின்றோமோ, அந்தச் சேனலைத்தான் நாம் பார்ப்போம்! அது போல் நம் மன அமைப்பை எந்த உணர்விற்கு ஒத்திசைவு செய்கின்றோமோ, அந்த உணர்வைத்தான் நாம் திரும்பத்திரும்ப போட்டுப் பார்த்துக்கொண்டே இருப்போம்.
நம் வாழ்வில் துக்கமும், ஆனந்தமும், நல்ல நிகழ்ச்சிகளும், துக்க நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.
துக்கத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தால் மீண்டும் மீண்டும் துக்கம் தான் நமக்குள் மலரும்!