உங்களிடமிருந்தே தப்பித்து ஓடாதீர்கள்!
முழுமையாக இருப்பதே உங்களின் உயர்ந்த இயல்பாக இருப்பதால், உங்களுடைய குறைவுணர்வுகளுடன் உங்களால் சௌகரியமாக இருக்கவே முடியாது. உங்கள் குறைவுணர்வுகள் உங்களை ஒரு குறையுடைவராகக் காட்டுகின்றன என்பதற்காகவே அவற்றை நீங்கள் எதிர்கொள்வதில்லை. அதனால்தான் அவற்றை நீங்கள் எதிர்கொள்ள எப்பொழுதும் விரும்புவதில்லை.
உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்களுடைய குறைவுணர்வுகள் என்னும் பேய்களிடமிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நீங்கள் தப்பித்து ஓட ஓட, உங்கள் குறைவுணர்வுகள், உங்களை வாழ்க்கையின் மூலமாகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மூலமாகவும் மேலும் மேலும் துரத்தி வேட்டையாடுகிறது.
குறைவுணர்வுகளை அவற்றிடமிருந்து விடுதலையடைய ஒரே வழி.
நீங்கள் ஐந்து வயது குழந்தையாய் இருந்தபொழுது உங்களுக்கு ஒரு பொம்மைக் காரே போதும். ஆனால் உங்களுக்கு 25 வயதாகும்போது, உண்மையான கார் தேவை. ஆனால் இந்த இருபத்தியைந்து வயதிற்கு பிறகும் அதே பொம்மைக் காரை வைத்துக் கொண்டு, ''ஆ! நான் காரில் போகிறேன்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதைப்போலவேதான் நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறீர்கள்! இப்போது நீங்கள் நிஜமான காரில் செல்ல வேண்டிய நேரம் வந்து
விட்டது. உங்கள் பொம்மைக் கார்களை விட்டுவிடுங்கள்.
சிறுவயது கார்கள், சிறுவயது பரிசுகள், உங்களது பார்பி பொம்மைகள் எல்லாவற்றையும் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். எல்லாமும் கண்டிப்பாகத் தூக்கியெறியப்பட வேண்டியவையே. துரதிருஷ்டவசமாக, சமுதாயம் உங்களுக்கு, பொம்மைகளை மட்டுமே விட்டுவிடக் கற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அந்தச் சிறுவயதில் உருவாக்கிய விளையாட்டு உணர்வுகளையும், தேவையற்ற புரிதல்களையும், குறைவுணர்வுகளையும் விட்டுவிடக் கற்றுத்தரவில்லை. அவை அனைத்தையும் தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழ அனுமதியுங்கள்.
பூர்ணத்வம், உஉங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளையும்... போராட்டங்களையும்... பிரச்சினைகளையும் தவிர்த்துவிடுகிறது. உங்களை ஒருங்கிணைக்கிறது.