பூர்ணத்வம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்!
சில சரிசெய்யப்பட முடியாத சேதங்களை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். 'அவற்றை நான் ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது இரு வருடங்களுக்குப் பிறகு நிறைவுசெய்து கொள்வேன் 'என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், தீவிரவாதிகள் எவ்வாறு சும்மாயிருக்க மாட்டார்களோ, அவ்வாறே உங்களுடைய குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது.
'இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தத் தீவிரவாதிகளோடு நான் போரிடுவேன்', என்று நீங்கள் சொல்ல முடியாது. அதுவரையில் அவர்கள், உங்களை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். உங்களைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.
அதேபோல் குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது. அவை உங்களது வாழ்க்கை லட்சியங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தொடர்ந்து அழித்துக்கொண்டேயிருக்கும். நீங்கள் எதற்காகப் பிறப்பெடுத்தீா்கள், நீங்கள் எதை நிறைவேற்ற இந்த உடலில் இருக்கிறீர்கள், உங்கள் வாழ்வின் இலட்சியம், மற்றும் அதை நிறைவேற்ற உங்களுக்கு தேவையாக இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் குறைவுணர்வுகள் அழித்து விடும்.
குறைவுணர்வுகள், அழித்துவிடும்! விரோதிகளைப்போல உங்களுக்குள்ளேயே தங்கி உங்களையே அழிக்கும் வேலையைச் செய்யவல்லது. அவை உங்களை மிகவும் கொடுமைசெய்து இன்பமடையும்.
உங்களது சிறு மலரினால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களென்றால், அந்தச் சிறு மலர்கூட உங்களுக்குக் கிடைக்க அவை அனுமதிக்காது. அவை சரியாக அந்தக் குறிப்பிட்ட மலரையே வாடிப்போகச் செய்யும்! அதற்குத் தேவையானதெல்லாம் ஒன்றே, நீங்கள் அந்த மலரைப் பெற்றுவிடக்கூடாது, அவ்வளவுதான்!
பல நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனித்திருக்கலாம், மிகச் சாதாரணமான பொருளைக்கூட... எந்தவொரு சாதாரண மனிதனாலும் எளிமையாகப் பெறக்கூடிய ஒரு பொருளைக்கூட, நீங்கள் அடைய மிகவும் கஷ்டப்படுவீர்கள். அது உங்களுக்குத் தேவைப்படும்பொழுது, அதை அடைய நீங்கள் போராடினாலும் அதன் சிறு பகுதிகூட உங்களுக்குக் கிடைக்காது. அதை அடைவதற்கு உங்களுக்குத் தடையாக இருப்பவை உங்களுடைய குறைவுணர்வுகள்தான்! ஏனெனில், நீங்கள் விரும்புவது எவ்வளவு சிறியவையாக இருந்தாலும்கூட, உங்களுடைய குறைவுணர்வுகள் அவை உங்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும்!
மேலும், குறைவுணர்வுகள் இருக்கும்பொழுது நீங்கள் சாதாரண விஷயத்தையும் தவறான முறையிலேயே அணுகுவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள், நீங்கள் அந்த நபருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களின் உணர்வைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். அதனால் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளச் சொல்லி அவருடன் சண்டையிடத் துவங்குவீர்கள். உங்களின் இந்தச் சண்டை அவரை உங்களோடு நெருங்க விடுமா? இல்லை! குறைவுணர்வுகள் உங்களுக்குச் சண்டையிடத் கற்றுக் கொடுக்கும்.
குறைவுணர்வுகளின் திட்டத்தையும் - பொருளாதாரத் திட்டங்களையோ, உறவுகள் சம்பந்தப்பட்ட திட்டங்களையோ - தீட்டாதீர்கள். அதேபோல் என்ன முடிவுகளாக இருந்தாலும் - வாழ்க்கை பற்றிய முடிவுகளையோ, உடல் சார்ந்த முடிவுகளையோ, மனோரீதியான முடிவுகளையோ, ஞானமடைவது அறிவுரைப்படி எடுக்காதீர்கள்.
உங்களுடைய குறைவுணாவுகளைப் பூர்த்திசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். உங்களது குறைவுணர்வுகள் நீங்கள் நினைப்பதுபோல அவ்வளவு அப்பாவி அல்ல. அதனால் இப்போதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் உங்களது உடலும், மனமும் அழிந்துவிடும். உங்களுடைய சிந்தனைத் திறனையே முழுவதுமாக விமுங்கிவிடும்.
உங்களைத் தாக்க, உங்களின் சக்தியையே பயன்படுத்தும். இது எப்படிப்பட்டதென்றால் உங்களுடைய பாதுகாப்புப் படையையே உங்களது நாட்டைத் தாக்க உபயோகிப்பது போன்றது. இதைத்தான் குறைவுணர்வுகள் செய்கின்றன. அது மிகவும் ஆபத்தானது. திரும்பவும் சரிசெய்யப்பட முடியாதது. இப்பொழுதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால்... குறைவுணர்வுகளின் சக்தி அதிகமாக இருப்பதால், உங்களது உடலும், மனமும் அழிக்கப்பட்டுவிடும்.