பூர்ணத்வம் - வாழ்வின் திறவுகோல்!
பூர்ணத்வமே நீங்கள் சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம்! பூர்ணத்வம் - எங்கேயோ வெளியில் தேடியலைந்து அடைய வேண்டிய ஒரு பொருள் அல்ல. உங்களுக்குள்ளேயே புதைந்து இருக்கின்ற ஒரு பொக்கிஷம். அதனால் உடலில் இருக்கும்பொழுதே உணர்வில் பூர்ணத்வத்தைக் கண்டுவிடுங்கள்!
பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு, அவர் அடையவேண்டிய இடத்தை அவர் சென்றடையும்பொழுதுதான், அவரது பயணம் நிறைவுபெறும். அதுபோல - இந்த 'வாழ்க்கை' என்னும் சாலையில் 'உடல்' என்னும் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒவ்வொரு 'ஆன்மா'வுக்கும் அது அடையவேண்டிய இறுதி நிலையான 'பூர்ணத்வத்தை' அடையும்பொழுதுதான், அதனுடைய பயணம் நிறைவுபெறும். இல்லையெனில் எத்துணைமுறையானாலும் அது இன்னொரு உடலெடுத்து தன் பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும்.
பூர்ணத்வம் - மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான திறவுகோலாக செயல்படுகின்றது. அதைக்கொண்டு... உங்கள் பிரச்சினைகள் போன்ற எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம். இந்தப் பூர்ணத்வம்தான் எங்கும், எல்லா இடங்களிலும் உங்களைப் பாதுகாக்கும் உங்களின் உண்மையான சொத்து.
பூர்ணத்வம் - உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையின் எல்லாவிதச் சிறப்பம்சங்களையும் திறந்துவிடக்கூடிய ஒரு திறவுகோலாக செயல்படுகின்றது. குறைவுணர்வுகளை மட்டும் நிறைவுசெய்வதற்காகப் பயன்படவில்லை. மற்றவர்களிடமிருந்து துன்பங்களையும் முழுமைப்படுத்தி, அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகுக்கும்.
பூர்ணத்வம் மட்டுமே நம் வாழ்வில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லாத் துன்பங்களுக்குமான ஒரே தீர்வு!
தனக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் பூர்ணத்வத்தை உணர்வதற்காக அறிவைப் பயன்படுத்துவதே - உண்மையான பகுத்தறிவு.
ஒவ்வொருவரும்- 'நான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறேன்? நான் ஏன் இவ்வாறு செய்கிறேன்?' என்று தன்னைப்பற்றி, தன்னுடைய செயல்களைப்பற்றி, நடவடிக்கைளைப்பற்றி பகுத்தாராய வேண்டும். தன்னுள் குறைவுணர்வை ஏற்படுத்தும் காரணங்களைக் கண்டுபிடித்து, அதை நிரைவசெய்ய வேண்டும்.
உங்களுடைய வாழ்வில் உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்குத் தடையாக இருக்கும் குறைவுணர்வுகளே! இந்தக் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.
ஒவ்வொருவரும் நீங்கள் குறைவுணர்விற்கான உண்மையான காரணத்தை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நிறைவுசெய்து, உங்களின் இயல்பான இறையுணா்வை, புர்ணத்வ உணர்வை உங்களால் உணரமுடியும்.