பூர்ணத்வ நுட்பம் -கடவுள் உங்களுக்கு அருளிய பிரசாகம்
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ... நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம் என்பதைவிட யாரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்பதை ஆம்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் வார்த்தையில் இருந்து நாம் கற்பதைவிட அவருடைய வாழ்வைப் பார்த்து நாம் கற்பது மிகவும் அதிகம்.
நீங்கள் கற்கும் இந்தப் பூர்ணத்வ நுட்பம், பூர்ணத்தின் வடிவமாம்... எம்பெருமான் ஈசனால் அன்னை பார்வதி தேவிக்கு அருளப்பட்ட மிக சக்திவாய்ந்த நுட்பம். ஈசன் அருளிய இந்தப் பூர்ணத்வ நுட்பத்தை தங்கள் வாழ்வில் உண்மையாகக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் அவர் வாழும் 'பூர்ண நிலையை' அடைவது சாத்தியம். இதுதான் கடவுள் உங்களுக்கு அருளிய உண்மையான பிரசாதம் !
ாசன் அருளிய ஞானசூத்திரமாம் விஞ்ஞான பைரவ தந்திரத்தில் 22வது சூத்திரம் சொல்வது :
'கடந்தகால நிகழ்வுகளைப் பார்க்கும் 'அந்த இடத்தில்' உங்கள் கவனத்தைக் குவியுங்கள். கடகடந்தகாலத்தோடு உங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், அதனை உற்றுக் கவனியுங்கள். அங்கு உங்கள் வடிவம், இன்றைய குணநலன்களை இழந்து, உணர்வுமாற்றம் அடைந்துவிடும். '
பூர்ணத்வ க்ரியை
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பது உங்கள் உணர்வில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு விடுகிறது.
உங்கள் வாழ்க்கையில் குறைவணர்வுகள் ஏற்படுவதற்கு - காலம், உணர்வு, உங்கள் குறைபுரிந்துணர்வுகள் இவை இவை தேவைப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வு உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன் உங்கள் உணர்வில் பதியப்படுகிறது.
உங்கள் உணர்வில் பதியப்படும் ஒரு குறிப்பிட்ட காலமானது, ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன்கூடியதாக இருந்தால், அந்தக் குறைவுணர்வு அனுபவம் அடுத்தடுத்த கணங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள்.
உதாரணத்திற்கு, உங்களுடைய ஆறாவது வயதில், உங்கள் மூத்த சகோதரர் உங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக அடித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தச் சமயத்தில், உங்களைச் சக்தியற்றவராக உணர்ந்திருந்தீர்களானால், அது ஒரு ஒரு ஆழமான குறைவுணர்வாக உங்களுள் பதிந்துவிடும்.
இப்போதும், எப்பொழுதெல்லாம் அந்தக் குறைவுணர்வின் தாக்கம் ஏற்படுகின்றதோ, எப்பொழுதெல்லாம் அந்த பலஹீனவுணர்வால் பாதிக்கப்படுகின்றீர்களா, புரிந்துணர்வைக் அந்தக் குறைவுணர்வு உருவாக்கப்பட்ட அந்த சிறுவயது வடிவம், உங்களுடைய நினைவுக்கு ஒரு மைக்ரோ நொடிக்காவது உங்கள் மனக்காட்சியில் வந்தே தீரும். நீங்கள் மறுபடியும் அந்த வடிவை நினைவுகூர்வீர்கள்.
அந்த வடிவிலிருந்து அக்குறைவுணாவு, தன் வலையைத் துவங்கிவிடும். ஒரு வன்குறுந்தகட்டில் (DVD) நிழற்காட்சியாகக் குறுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட ஒரு காட்சி, திரும்பவும் போட்டுக் காண்பிக்கப்படுவது போன்றதுதான் இது.
உங்கள் ஆறு வயதில் உருவாக்கப்பட்ட ஒரு குறைவுணர்வினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அந்த நேரத்தில் எப்படி இருந்தீர்களோ, அந்த வடிவைத் திரும்பவும் நினைவு கூர்வீர்கள். அது அப்படியே உங்கள் நினைவிலிருக்கும். ஒரு வினாடிக்கும் மிகமிகக் குறைந்த நேரத்திலிருந்தாலும் கூட உங்களால் அதை நினைவுகூர முடியும். அந்தப் பழைய நினைவை அடித்தளமாக அமைத்து, அதன்மேல் அந்தக் குறைவுணர்வு வளருகிறது. அதுவே இப்போதைய உங்களுடைய நிகழ்காலத்தையும் பாதிக்கிறது.
மஹாதேவர் உங்கள் உள்தளத்திலிருந்து, அந்த ஆறு வயது வடிவையும், அந்த நினைவையும், கரைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த நுட்பத்தைத் கருகின்றார்.
இதைத்தான் அவர், 'உங்கள் கடந்தகாலத்தை நினைவு கூர்ந்து. அதைக் கரைத்துவிடுங்கள்' என்று சொல்கிறார். நீங்கள் இந்த ஒரு வரியைத் தவற விட்டுவிட்டீர்களென்றால், நீங்கள் முழுவதையும் தவறவிட்டுவிடுவீர்கள்.
உங்கள் ஆறு வயதில் ஏற்பட்ட குறைவுணா்வுகளை இன்னும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள், அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடந்தகாலக் குறைவுணாவு உங்கள் நிகழ்கால் முடிவுகளை, நிகழ்கால விழிப்புணர்வை இன்னமும் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நொடிக்கும் மிகக் குறைந்த நேரத்தில் உங்களுக்குள் உருவான குறைவுணர்வை, அந்த ஆறு வயது சிறுவனின் பயந்த, குறுகிய, வெளிறிய முகத்தின் காட்சியை நினைவுகூர்வீர்கள். அந்த நினைவிலிருந்து உங்கள் குறைவுணர்வு வளர்ந்து பெருகத் துவங்கும்.
ஆகவே, ஒவ்வொரு கணமும் உங்கள் தோற்றம் எப்படியிருந்தது என்பது உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. உணர்வுதான் படச்சுருள்.
மகாதேவர் சொல்கிறார்: இப்போது, அதே காலத்திற்குச் சென்று, அதே வடிவைப்பார்த்து, அதையே திரும்ப வாழுங்கள்.
ஆனால், அதைக் கரையச்செய்துவிட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இப்போது என்ன நடக்கும் ? நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவயது வடிவம், கடந்தகாலத்திலிருந்து ஒரு பொக்கிஷம்போல் பாதுகாக்கப்பட்டு, காக்கப்பட்டு வந்த அந்த
நினைவுமலர் வடிவம் 'சட்'டெனக் கரைந்துபோகும்.
கடந்தகாலத்தை நீங்கள் மீண்டும் வாழும்போது, சரியாக இதுதான் நடக்கிறது. அந்த ஆறு வயது சிறுவனிடம் நீங்களே சென்றோ அல்லது அந்த ஆறு வயது சிறுவனையே நீங்கள் இங்குக் கொண்டு வந்தோ, அந்தக் குறைவுணர்வை மீண்டும் நிகழ்காலத்துக்கு எடுத்து வந்து, அதை விழிப்புணர்வோடு வாழுத் துவங்குங்கள்.
உங்கள் சகோதரர் உங்களை விரட்டிக்கொண்டு வருகிறார். அவர் உங்களை அடிக்கிறார். நீங்கள் திகிலடைந்து, பயந்து ஓடி, ஒளிந்து கொள்கிறீர்கள்: உங்களால் கத்தக்கூட முடியவில்லை. பயத்தில் மூச்சுவிடுவதே கடினமாக இருக்கும். அந்தக் குழந்தை பருவக் காட்சியை அப்படியே வாழுங்கள் அப்படி வாழும்போது குறைவுணர்வு கொண்ட சிறுவன், பதறிப்போன சிறுவன் இப்போது அப்படியே கரைந்துபோவான்! அந்த நினைவுகள் கரைந்துபோகும். அந்தக் காட்சி கரைந்துபோகும். இவை எல்லாம் கரைந்தவுடன் உங்கள் உணர்வில் இருக்கும், அந்தக் குறைவுணா்வின் தாக்கமும் கரைந்துபோகும் !
இதுதான், மஹாதேவர் சொன்னது, 'உங்கள் கடந்தகாலத்தை, அதனோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் உற்றுக் கவனியுங்கள். உங்கள் கடந்தகாலம் நிகழும் இடத்தில் உங்கள் கவனம் இருக்கட்டும் அப்பொழுது உங்கள் வடிவம்கூட, தன்னுடைய இப்போதைய பண்புகளை இழந்து, உணர்வுமாற்றம் அடையும்! அந்த வடிவம், தனது பண்புகளை இழந்து விடுகிறது! அப்போது நீங்கள் பூர்ணமாகிவிட்டீர்கள்! இதுதான் பூர்ணத்வத்தின் விளக்கம்.
நீங்கள் இந்த விளக்கத்தைப் பின்பற்றினீர்களென்றால், நீங்கள் அப்போது வைத்திருந்த அந்தக் குறைவுணா்வினையும் அந்த வடிவத்தையும் உங்களால் மீண்டும் நினைவுபடுத்த முடியாது. நீங்கள் பூர்ணத்வம் செய்து விட்டீர்களா, இல்லையா என்னும் உங்கள் சந்தேகம் தெளிந்து விடும்.
குறைவுணர்வு என்பது மிகவும் சிக்கலான உணர்வுப்பதிவு. குழந்தைப் பருவ குறைவுணர்வை, இப்போதுள்ள உடலுக்குள்ளும் கொண்டுவந்து, அதன் அடிப்படையிலேயே இப்போதும் வாழ்வது என்பது, சிறுவயதில் குடித்த 200மில்லி பால் அளவே இப்போது வளர்ந்தபிறகும் போதும் என்று நீங்களாகவே முடிவுசெய்துகொண்டு, ஒரு லிட்டா் பாலைக் குடிக்கவேண்டிய வயதில்கூட அதே 200 மில்லி பாலைக் குடிக்க
முயற்சிப்பது போன்றதுதான். நீங்கள் குழந்தையாய் இருந்தபோது குடித்த அளவே இப்போதும்கூட குடித்து வந்தீர்களென்றால், உங்களுக்கு சத்துக் குறைவுதான் ஏற்படும் !
அந்த வடிவத்தின் அதே போதாத உணர்வை இந்த வடிவத்திற்குள் கொண்டுவந்து வாழ்வதற்கு முயற்சி செய்தீர்களானால், நீங்கள் தொடர்ந்து போதாமையால் சிரமப்படுவீர்கள். வாழ்க்கையில் 'போதாமை' என்பது ஒரு சாபம்!
அதனால், 'போதாமை' என்னும் சாபத்திலிருந்து விடுபட, உங்களுடைய குறைவுணர்வுகளை நிறைவுசெய்வதைத் துள்ளிப் போடாதீர்கள். சிறிதும் தாமதம் செய்யாதீா்கள். ஏனெனில், அவை உங்களிடம் இருப்பனவற்றையெல்லாம் அழித்துவிடும். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தையே அழித்துவிடும் !
உங்கள் நிகழ்காலத்தின் மேல் பாரமாக அமா்ந்துகொண்டு, உங்களை பலமில்லாதவராக உணரச்செய்யும் இறந்துபோன கடந்தகாலத்தை எரிக்கு, நீங்கள் நிகழ்காலத்தில் வாழவும், விரிவடையவும், உயிர்ப்போடு இருப்பதற்குமான ஒரு உணர்வை உருவாக்குவதே பூர்ணத்வம்.
பூர்ணத்வத்தைத் தவிர உடனடி சக்தியுள்ள நுட்பம் கிடையாது. பூர்ணத்வத்தைப்போல வேறெந்த செயல்முறையும் நீடித்த, நிலைத்த விளைவுகளையும், விழிப்புணர்வையும் கராது.
அதனால்தான் மஹாதேவர் இதில் மிகத் தெளிவாக சொல்கின்றார் -உங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் எல்லா வடிவங்களும், கருத்துக்களின் வடிவங்களும்... அந்தக் கருத்துக்களை உருவாக்கிய நினைவுப்பதிவுகளையும் நீங்கள் கரைத்தே ஆக வேண்டும்.
அவற்றையெல்லாம் சொல்கிறேன், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்! உங்களுக்கு ஞானம் கிடைத்துவிடும்! அவற்றையெல்லாம் கரைத்தவுடனே, நீங்கள் இந்த வாழ்க்கையை வாழத்துவங்குவீர்கள். அவை கரைக்கப்பட்டவுடன், நீங்கள் உணர்வுமாற்றம் பெறுவீர்கள். நீங்கள் ஜீவன்முக்த வாழ்வை வாழ்வீர்கள் !
பூர்ணத்வம் செய்தல், நிறைவுசெய்தல் என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுவே! நிறைவுசெய்தல் என்பதற்கு மகாதேவரின் மிகச் சரியான விளக்கமும் இதுவே!