மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை
குருக்கூத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத்தீதை.
கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே,'' என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அமிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.
உள்ளுலக விஞ்ஞானத்தின் (ஆன்மிகத்தின்) இறுதி அனுபூதி சாரங்கள் நிறைந்த நூலாக கீதை விளங்குகிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல.
அது, உடல் - மனத்தின் நிலையற்ற தன்மையைப் பற்றியும், ஒவ்வொரு
தனிமனிதனும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் கேவையைப் பற்றியும் விளக்குகிறது.
கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸலஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண் கொண்டு, போர்க்களத்தில் நடப்பவற்றை மன்னருக்குத் தெரிவித்தார்.
ஸ்ஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸலஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசா்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மா, துரோணர், காணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.
அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.
ஸம்ஸ்க்ரூ க்கீதில் அதை 'நா-நாராயண்' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும், நம் ஒவ்வொருவா மனத்திலும் உள்ளவைதான்.
கிருஷ்ணரின் பதில்கள், காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு அளவுக்கு இன்றும் ஆழமான லத்யமாக உள்ளது.
பகவத்தை, ஐவன்முக்திக்கான வரைபடம்!
வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:
மஹாபாரதப் போர் என்பது ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டமே தவிர, வேறு ஏதோ ஒன்று அல்ல!
நேர்மரை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம் : எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவாசர்கள்' என்று சொல்லலாம்.
குருக்கிஷ்ரம் போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஜ்ஞுருகுரு.
தனிமனித விழிப்புணா்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர்.
பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.
அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவா்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மிக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.
கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார்.
இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அறைங்காரத்தின் சின்னமாக இருக்கிறார். '
நடைமுறை மாபுகளை சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் எுானப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள், சமுதாயத்தைவிட்டு ஒதுங்கியிருப்பது வழக்கமாக இருக்கிறது.
பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால், நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்துவிடும். அதையே பீஷ்மரின் 'அம்புப் படுக்கை' உணர்த்துகிறது.
துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும், நம்மை வழிநடத்திச்செல்கின்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச்செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை 'விட்டுவிடுதல்' என்பது மிகவும் சிரமமாக உள்ளது.
இங்குதான் ஜ்ஞாநகுருவாணவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழிநடத்துகிறார்.
கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. காணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும், நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றைவிடுவதற்கு, ஜ்ஞாநகுருவானவர் வழிகாட்டுகிறார். ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே, நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜீஞாரதகுரு தெள்ளத் தெளிவாகக் உணரச் செய்கிறார்.
இறுதியாக நாம், துரியோதனனை அதாவது நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்தடைகிறோம். வெற்றிகொள்வதற்குக் கடினமாக இருக்கும் நம்முடைய அணங்கார மனப்பாங்கைக் கரைக்க இருரை ஸ்த்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞார ஸ்த்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் சில சமயங்களில் நம் அறைவ்காரம், நாம் ஜீஞாந ஸத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.
நூற்றியெண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர். இதில், நூற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனை என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும், எழுபது மில்லியன் பாண்டவர் சேனை என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும், எழுபது மில்லியன் நேர்மறை
வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.
பதினெட்டு என்ற எண் முக்கியத்துவம்வாய்ந்த ஆம்ந்த உட்பொருளைக் கொண்டது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஒட்டங்களையும் குறிக்கிறது.
அவற்றுள் குரணேந்தீரியங்கள் என்பவை சுவைக்கல், பார்க்கல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகிய 'அறியும் புலனுணா்வு'களைக் குறிக்கின்றன.
ஐந்து கர்ஹேந்த்ரியங்கள் என்பவை பேசுதல், கரங்களால் செய்யப்படும் செயல்கள், நடத்தல், உடற்கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் அகிய 'செயல்புரியம் பலணைர்வ'களைக் குறிக்கின்றன.
எட்டுவித எண்ண ஒட்டங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன.
'தன்னை உணர்தல்' எனப்படும் ஆக்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்தப் பகினெட்டும்விடப்பட வேண்டும்.
மஹாபாரதம் ஒரு கிதிரைஸ் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் - மன அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மரை ஸ்ட்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. ஜீவன்முக்திக்கு இது நடைபெற்றாக வேண்டியுள்ளது.
இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை. மஹாபாரதம், வாழும் வரலாறு. பகவத்தீதை, ஞானமடைதலுக்கான கையே(டு!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல், நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக, ஜனூரூ ஸ்த்குருவுடன் உரையாடுகிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. லத்குருநாதரின் ஸ்தீய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.
பொழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத்தீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.
பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ரூராத குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸா், இரமண மஹரிஷி அகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துகளைப் பேசியிருக்கிறார்கள்.
பலர், இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ல்லோகத்தையும் விளக்கும்போதும், நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு ல்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக, முதல் நிலை விளக்கமே ஸ்த்குருநாதா, பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச்செல்கிறார்.
என்றென்றும் வாழும் மஹாபாரதம்
பரமஹம்ஸரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குகள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமானஉள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.
சிறந்த சிறிதளவு படிப்பது, ஒருதுளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், மரணபயத்தைக் கடந்துவிடுவீர்கள்,'' என்று சொல்கிறார்.
பரமஹம்ஸரின் விரிவுரைகளை, வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ரூ ஆ ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிவாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து, அவர்களின் இறுதிநிலையான ஸ்தீயத்தை உணர்வதற்கான பெருமுயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!
முடிவற்ற பேரின்பநிலையாம் தித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!